In பயணம்

காஷ்மீர் பயணம் - இன்னொரு முறை ஜம்முவிலிருந்து

ஒரு வழியாக நான் காஷ்மீர் பயணத்தை முடித்துவிட்டு திரும்பவும் ஜம்முவிற்கே வந்தாகிவிட்டது. மனம் நிறைந்த அனுபவத்தைத் தந்தது காஷ்மீர் பயணம்.

காஷ்மீரின் லோக்கல் கார்டன்கள், கோவில்கள் ஒருநாள் சுற்றிவிட்டு, இன்னொரு நாள் குல்பர்க் சென்றுவிட்டு கடைசியாக காஷ்மீர் நினைவாக பர்சேஸ் முடித்துவிட்டு திரும்பவும் ஜம்முவிற்கு இன்று காலை வந்து சேர்ந்தேன். முடிவு செய்திருந்ததை விடவும் அதிக நாட்கள் காஷ்மீரில் தங்கியிருந்தேன் என்றே சொல்லலாம். ஆனால் நிச்சயமாக வாழ்நாளில் அனைவரும் ஒரு முறை வின்டரில் காஷ்மீர் வந்து செல்லவேண்டும் என்று நினைக்கிறேன்.

அம்மா சொல்லிக்கொண்டிருந்தார்கள், வாழ்க்கையில் ஒரு தடவை செய்யப்போற சந்தோஷமா செய்துட்டு வா என்று, ம்ஹூம் இனி வருஷத்தில் ஒரு தடவை கூட வந்து போகலாம் என்று நினைக்கிறேன்.ஆனால் சீசனில் ஒரு முறை வரவேண்டும் என்ற ஆசையும் ஆவலும் இப்பொழுதே வருகிறது. :)

பிற்பாடு விரிவாக எழுத நினைத்திருக்கிறேன். பார்க்கலாம்.

அடுத்த இரண்டு நாட்கள் 30,31 டெல்லியில் தங்குவேனாயிருக்கும். இடையில் ஜெய்பூர் சென்றுவரும் ஒரு ப்ளானும் இருக்கிறது.

காலம் ரொம்ப வேகமாய் ஓடுகிறதாயிருக்கும்.

Related Articles

4 comments:

  1. மோஹன் தாஸ்,

    நினைத்தப்படி கஷ்மீர் போய் பார்த்துட்டிங்க, வாழ்த்துகள். எங்கே ஒன்னும் படம் போடவில்லை. ஊருக்கு வந்த பிறகு தான் படம் காட்டுவிங்களா?

    தனியாவே குளிரை சமாளித்துட்டிங்களா? :-))

    //அம்மா சொல்லிக்கொண்டிருந்தார்கள், வாழ்க்கையில் ஒரு தடவை செய்யப்போற சந்தோஷமா செய்துட்டு வா என்று,//

    டிபிக்கல் அம்மாவாக வாழ்த்தி இருக்காங்க! ஏன் எனில் அவர்கள் கூட இதெல்லாம் செய்து பார்க்க வேண்டும் என்று எண்ணி இருக்க மாட்டார்கள். கணவன், குழந்தை என்று வாழ்க்கையை ஓட்டி இருப்பவர்கள். மகன் செய்யும் போது சந்தோஷம் அடைவார்கள் தானே!

    ReplyDelete
  2. வவ்வால் எங்க தாத்தா ரயில்வே OS.

    அம்மா அந்தக் காலத்திலேயே இந்தியா முழுவதும் சுற்றியவர்கள். இதில் காஷ்மீரும் உண்டு.

    ஆனால் அம்மா ஸ்கேட்டிங் செய்றேன் அது இதெல்லாம் செய்யாதே தனியா போகும் பொழுது என்றார்கள் காரணம் குல்லு மணாலிக்கு சென்றிருந்த பொழுது பாராக்ளைடிங்கிலில் இருந்து கங்கைக் கரை ரோப் க்ளைம்பிங் வரை ஒன்றுவிடாமல் செய்திருந்தேன். அடுத்த தடவை நான் வர்றேன் உன் கூட அப்ப செய்யலாம் என்று சொல்லியிருக்கிறார்கள்.

    ReplyDelete
  3. வவ்வால், குளிர் அத்தனை கடியாகயில்லை, முன் ஜாக்கிரதையா நிறைய செய்திருந்ததால் சமாளித்துவிட்டேன்.

    ஆனால் நீங்கள் கேட்க வருவது புரிகிறது, அந்த சோகக்கதையை தனியாக எழுதுகிறேன். புகைப்படங்களோடு.

    ReplyDelete
  4. குலு மானாலிக்கு கல்லூரியில் படிக்கும் பொழுது நண்பர்களோடு சென்றது, மிக அருமையான அனுபவம், காஷ்மீர் சென்றது இல்லை போகனும் ஒரு முறை.


    அப்புறம் வவ்வால் கேள்விக்கு ஒரு ரிப்பிட்டே!!!!
    ///தனியாவே குளிரை சமாளித்துட்டிங்களா? :-))///

    புகைபடங்களை சீக்கிரம் போடுங்கள்.

    ReplyDelete

Popular Posts