In Only ஜல்லிஸ்

புத்தாண்டு வாழ்த்துக்களும் அதைப் பற்றிய சில குறிப்புக்களும்

புத்தாண்டு வாழ்த்துக்கள் ஏன் சொல்ல வேண்டும் என்று என்னுள் நிறைய கேள்விகள் தோன்றியிருக்கின்றன. நாளை மற்றொரு நாளே என்பது போன்ற எண்ணங்கள் உண்டென்றாலும், கொண்டாட்டங்களுக்கான நாட்கள் என்று எனக்கும் சில இருந்திருக்கின்றன. இன்றும் இருக்கின்றன.

புதிய ஆண்டு உங்களுக்கு சந்தோஷத்தையும் மகிழ்ச்சியையும் கொண்டு வருவதாக இருக்கட்டும் என்கிற போக்கில் வாழ்த்துச் சொல்கிறோம். ஆனால் இன்றில்லாத நாளையோ அல்லது அடுத்த 365 நாட்களில் எப்பொழுதோ ஒரு முறை/பல முறை வரக்கூடிய சந்தோஷத்திற்கு ஒரு குறிப்பிட்ட நாளில் ஏன் வாழ்த்து சொல்ல வேண்டும். எல்லா நாளும் நல்ல நாட்களே, எல்லா பொழுதுகளும் மற்றவர்களுக்கும் நமக்கும் நன்மையை அளிப்பதாக அமையட்டும் என்று சொல்லலாம் என்றால், ப்ராபபிலிட்டு படி அதன் சாத்தியக்கூறுகள் மிகவும் குறைந்ததாக இருக்கும்.
 

எனக்கும் சில வருடப் பிறப்பு நினைவுகள் உண்டு, கிரிக்கெட் பித்து பிடித்து அழைந்த நேரத்தில் 12 மணிக்கு தேசியக் கொடியேற்றி தெருவிற்கே இனிப்பு வழங்கி கலாய்த்திருக்கிறேன் என் கிரிக்கெட் அணியுடன். ரோடு முழுக்க பெரிதாய் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் எழுதியிருக்கிறேன், என் கையெழுத்து காரணமாய். பைக்கில் வேகமாய் சுற்றியிருக்கிறேன் பிஎச் இஎல் ரோடுகளில். நான்கைந்து முறை சர்சிற்குச் என்று என் பாவங்களைக் கழுவியிருக்கிறேன், அப்படியே கோவில்களுக்கும். ராத்திரி 12.00 மணிக்கு சர்ச், 6.00 மணிக்கு கோவில்.

இப்பொழுதெல்லாம் அத்தனை பெரிதாய் மனம் தத்தளிப்பதில்லை, புது வருடப் பிறப்பென்று ஆனாலும் மற்றவர்களுக்காக நானும் புத்தாண்டைக் கொண்டாட தயாராகி வாழ்த்துக்கள் பெற்று அனுப்பி வருகிறேன் இந்த வருடமும்.

வலைபதிவு நண்பர்களுக்கு இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். :)

புதிய வருடம் உங்களுக்கு மேன்மைகளைக் கொண்டு வரட்டும். :)

 

Related Articles

8 comments:

  1. புத்தாண்டு என்பதே, இது வரைக்கும் சரக்கு போடாதவங்க ஆரம்பிக்கவும், ஏற்கனவே போடுபவர்கள் நாளை முதல் ...என்று ஒரு தீர்மானம் போடுவதால் இன்று அதிகமாக அடிப்போம் என்று அடிக்கவும், ஒரு வாய்ப்பு வழங்கும் நாள்!

    மற்றபடி இதில் எல்லாம் பெரிதாக சுவாரசியம் ஊட்ட எதுவும் இல்லை என்பதே எனது கணிப்பு.எனக்கு ஆரம்பத்திலே இருந்தே இப்படி தோன்றுவது , உங்களுக்கு தற்போது தான் தோன்றுகிறது , எனில் வெற்று கூச்சல் மீது உங்களுக்கும் ஆர்வம் போய்விட்டது என நினைக்கிறேன். ரொம்ப சம்பிரதாயமாக வாழ்த்து சொன்னால் பதிலுக்கு சொல்வதோடு சரி.

    வலைப்பதிவுகள் இருக்கும் காலத்தில் அனைவருக்கும் ஒரு பதிவு போட வாய்ப்பு என்று எல்லாம் வாழ்த்து பதிவு போட்டு காலம் தள்ளிக்கொள்கிறார்கள். இன்று இரவு பலரும் குறுஞ்செய்தி அனுப்பி செல் போன் நிறுவனத்திற்கு லாபம் சம்பாதித்து தருவார்கள்.

    என்னைப்பொறுத்த வரை யார் நல்லா காலண்டராக ஓசியில் தருவார்கள் என்ற எதிர்ப்பார்ப்பு மட்டும் தான் மிச்சம் இருக்கு! :-))

    இவ்வளவு பேசுறதுக்கு ஒரு வாழ்த்து சொல்லிட்டு இடத்தை காலி பண்ணி இருக்கலாமேனு தோன்றுமே, வாழ்த்துகள்!

    ReplyDelete
  2. வவ்வால்,

    //இவ்வளவு பேசுறதுக்கு ஒரு வாழ்த்து சொல்லிட்டு இடத்தை காலி பண்ணி இருக்கலாமேனு தோன்றுமே//

    why blood? same blood!!! :)

    wish you a very happy new year dude.

    ReplyDelete
  3. சோவிடம் ஒருமுறை ஒவ்வொரு நாள் நாள்காட்டி தாளை கிழிக்கும்போது என்ன நினைப்பீர்கள் என்று ஒரு கேள்வி கேட்கப்பட்டது.

    என்ன நினைப்பேன். அடுத்த நாளையும் சேர்த்துக்கிழிக்காமல் பிசிறுகள் விடாமல் கவனமாக கிழிக்க வேண்டும் என்று நினைப்பேன் என்றார். எனக்கு இதைப் படிக்கும்போது அதுதான் நினைவுக்கு வந்தது.

    ReplyDelete
  4. உமையணன் உங்களைத் தான் தேடிக்கிட்டிருந்தேன்.

    முன்னம் நான் ஒரு கவிதை எழுதியிருந்தேன் நீங்கள் வந்து ஒரு ஆச்சர்யக்குறியை மட்டும் போட்டு விட்டுச் சென்றிருந்தீர்கள். உங்களுக்கு நினைவில் இருக்கிறதா தெரியவில்லை. ஏன் ஆச்சர்யக்குறி போட்டீர்கள் சொல்ல முடியுமா? ஏனென்றால் அதைப் பற்றிய கேள்வி பிறகொரு முறை எழுந்தது அதனால் தான்.

    ReplyDelete
  5. //ஏன் ஆச்சர்யக்குறி போட்டீர்கள் சொல்ல முடியுமா? ஏனென்றால் அதைப் பற்றிய கேள்வி பிறகொரு முறை எழுந்தது அதனால் தான்.//

    அது ச்சும்மா டமாசு. விவேக் பார்த்திபன் காமெடி நியாபகம் இருக்கிறதா?

    ஒரு

    ஸ்வீட் ஸ்டாலே

    ஸ்வீட் சாப்பிடுகிறது

    ஆச்சர்யக்குறி...........

    ReplyDelete
  6. //மற்றவர்களுக்காக நானும் புத்தாண்டைக் கொண்டாட தயாராகி வாழ்த்துக்கள் பெற்று அனுப்பி வருகிறேன் இந்த வருடமும்.//


    சரி. சரி. :)

    புத்தாண்டு வாழ்த்துக்கள் :))

    ReplyDelete
  7. உமையணன் நன்றி.

    அரை பிளேடு - என்ன சொல்றது உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  8. நண்பரே! இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

    ReplyDelete

Popular Posts