காஷ்மீர் போவதென்று முடிவு செய்து டிக்கெட்கள் அனைத்தும் புக் செய்தபிறகு மனம் தடுமாறிக்கொண்டிருக்கிறது. டெல்லியில் இருந்து பேசாமல் குல்லு மணாலி போய்விட்டு நல்லபிள்ளையாய் திரும்ப வந்துவிடலாமா என்று. சிறுவயது ஆசை, காஷ்மீர் போகவேண்டும் என்பது; கையில் காசிருக்கிறது, 45,000 செலவு செய்து வாங்கிய காமெரா இருக்கிறது, கேட்பதற்கு ஆளில்லை வேறென்ன வேண்டும். மனம் ஒரு விசித்திர விலங்கு என்று அடிக்கடி தோன்றும் இந்த விஷயத்தில் உண்மைதானா என்று படுகிறது. இன்று வரை ப்ளானில் மாறுதல் இல்லை, காஷ்மீர் என் வருகைக்காக காத்திருக்கிறது.
கடவுள் நம்பிக்கை இல்லாமல் போன சமயம் நினைவில் இல்லை, ஆனால் குழப்பமாய் இருந்து கடவுள் இருக்கமுடியுமா என்று நிறைய யோசித்த சமயம் தெரியும், எல்லாம் கல்லூரி படிக்கும் பொழுதுதான். எந்த ஒரு குறிப்பிட்ட சந்தர்ப்பத்திலோ இல்லை குறிப்பிட விஷயத்தின் காரணமாகவோ நான் நாத்தீகனாகவில்லை. என்னைப் பொறுத்தவரை இன்றுவரை நம்புவது தொடர்ச்சியான புத்தக அறிவும், ப்ராக்டிக்கலான அணுகுமுறையும் தான் என்னை நாத்தீகனாக்கியது என்பேன். எனது குடும்பத்தில் இன்றுவரை நாத்தீகர்கள் கிடையாது, கடைசி வரைக்கும் பார்த்தால் கூட ஏதோ ஒரு சக்தி இயக்குதுன்னு சொல்வார்களாயிருக்கும். சொல்லப்போனால் தீவிர ஆஸ்தீகர்கள் இருந்தது வேண்டுமானால் அவர்களுடன் என்னை ஆர்க்யுமென்ட் செய்வதற்காக தேடிப்படித்தது காரணமாயிருக்கும்.
ஆனால் ரொம்பக் காலம் நிறைய superstition இருந்திருக்கிறது, எக்ஸாம் எழுதப் போகும் பொழுது உணவு சாப்பிட மாட்டேன், காலை பரிட்சையாக இருந்தால் பரவாயில்லை சில சமயம் மதிய பரிட்சைக்கு கூட சாப்பிடாமல் இருந்திருக்கிறேன். இது ஒரு உதாரணத்திற்கு இன்னும் நிறைய உண்டு, எனக்கு சிவபெருமான் பிடிக்கும் இன்றைக்கு நினைத்துப் பார்க்கும் பொழுது நிச்சயம் சொல்வேன் அழிவிற்கான கடவுள் என்பதால் தான் அவரை எனக்குப் பிடித்திருந்தது. ஆக்கப்பூர்வமானதை விடவும் அழிவுப்பூர்வமானதில் ஆர்வம் அதிகமமிருந்திருக்கிறது. வீட்டில் எனக்காக சாமியறையில் லிங்கம் வைத்திருந்திருக்கிறார்கள். வீட்டில் லிங்கம் வைக்கமாட்டார்கள், ரொம்ப சுத்தமாயிருக்கணும் என்பது ஒன்றென்றாலும் சிவனுக்கு ஆலயம் தனியாகத்தான் இருக்கணும் என்று சொல்வார்கள் என்று நினைக்கிறேன். என்னுடன் கோயிலுக்கு வருபவர்கள் சிரித்துவிடாமல் இருக்க பெரும்பாடு படுவார்களாயிருக்கும், எதையாவது சொல்லி நக்கல் அடித்துக் கொண்டிருப்பேன். ஆனால் அவை வேடிக்கைக்காக சொல்வது மற்றவர்கள் உணர்வுகளைப் புரிந்து கொள்ள முடிந்த பிறகு பெரும்பாலும் இது போன்ற கிண்டல்களைக் கூட தவிர்த்திருக்கிறேன். ஆனால் என் ஈகோவை டச் செய்துவிட்டால், எப்பாடுபட்டாவது திரும்பவும் எதிர்பக்கத்து நபரை கோபப்படுத்திவிட்டு தான் மறுவேலை பார்ப்பேன்.
இன்றைக்கும் கூட பெரிய பிரச்சனை ஒன்றில் மாட்டிக் கொள்ளும் பொழுது நாமாய் எதுவும் செய்து பிரச்சனையில் இருந்து வெளியேற முடியாத பொழுது அன்னிய சக்தி எதுவும் காப்பாற்றுமா என்று, ஆஸ்தீகர்கள் ஒரு நிமிடம் சட்டென்று நாத்தீகனாகித் திரும்புவதைப் போல். ஆனால் நாத்தீகம் என்பதை ஒருவரை, ஒரு குறிப்பிட்ட மக்களை வம்பிழுப்பதற்காகவோ இல்லை பழிதீர்த்துக் கொள்வதற்காகவோ இல்லாமல் உணர்ந்து ஏற்றுக்கொண்டதாக நினைப்பதால் புன்னகையுடன் அத்தருணங்களை ஒதுக்கிவிடமுடிகிறது. இன்றைக்கு என்னால் இதைப் பற்றி எழுத முடிவதைக் கூட வெற்றி என்று தான் நினைப்பேன்.
உரையாடல்/ஆர்க்கியூ செய்யும் பொழுது வெற்றி என்பதை எதிர்பக்கத்து நபரை கோபப்படுத்துவது என்று நான் வைத்திருந்தேன். இதை நிறையவே செய்தும் இருக்கிறேன், ஆனால் அந்தச் சமயம் முடிந்ததும் நாம் செய்தது தவறோ என்ற எண்ணம் வருவதுண்டு. இதன் காரணமாகவே பெரும்பாலும் உரையாடல் செய்யும் பொழுதோ இல்லை ஆர்க்கியூ செய்யும் பொழுதோ என்னை எளிதில் கோபப்படுத்திவிட முடியாது. இன்றைக்கும் என் கம்பெனியில் சொல்வதுண்டு 'என்னுடன் ஆர்க்கியூ செய்வது கஷ்டம்' என்று; ஏனென்றால் எதிர்முனை ஆளைக் கோபப்படுத்திவிடும் பொழுது, அவர் ஆர்க்கியூமென்டில் இருந்து விலகிவிடுவார். நாம் ஆர்க்கியூமென்டில் நிற்கும் பொழுது அவரால் பேசமுடியாது. இந்த கோபப்படுத்தும் அளவுகோல் என்வரையில் மாறிக்கொண்டே வந்திருக்கிறது, பெரும்பாலும் கடைசியில் உபயோகிக்கும் ஆயுதமாக 'கடவுளை' வைத்திருப்பேன் இப்பொழுதெல்லாம் 'தேசியம்' ஒரு கருப்பொருளாக மாறிவிட்டது. இதன் காரணமாக தமிழர் தவிர்த்த மற்ற இந்திய மாநிலத்தவருடன் வெகுசுலபமாக அவர்களுடைய ஈகோவை தொட்டு உசுப்பேத்தி விட முடிந்திருக்கிறது.
சாரு நிவேதிதாவின் ஜீரோ டிகிரியில் வரும், 'தமிழ்' எத்தனை எத்தனை ஆதியின மொழிகளை வழக்கொழித்து வந்திருக்கிறது என்பதை தமிழ் எழுத்தாளர்கள் ஒப்புக்கொள்ளமாட்டார்கள் என்று வரும் இதை நான் ஏற்றுக் கொள்கிறேனோ இல்லையோ என்னை விவாதத்திற்காக இந்தத் தலைப்பை எடுத்துக் கொண்டு என்னுடன் பேசிக்கொள்ள முடிந்திருக்கிறது. எனக்குள் இருக்கும் புனித பிம்பங்கள் ஒன்றொன்றாக அவிழ்த்து நிர்வாணப்படுத்தி கிழித்து தொங்கவிட முடிந்திருக்கிறது. ஆனால் எல்லாரையும் செய்துவிட்டேன் என்றில்லை, இன்னமும் சிலர் அந்த லிஸ்டில் உண்டு குறிப்பாய் ஒன்றிரண்டு பேரைச் சொல்லவேண்டுமென்றால் 'விவேகானந்தரை' சொல்லலாம். ஆனால் முற்றிலுமாக யாரையும் ஏற்றுக்கொண்டதில்லை அது விவேகானந்தராகயிருக்கட்டும், ஹிட்லர், காந்தியாக இருக்கட்டும். அவரவர்களிடம் எனக்குப் பிடித்த நல்ல குணங்களை எடுத்துக் கொள்வதில் பிரச்சனையிருந்ததில்லை.
ஜெயமோகனுடைய நினைவில் நதியில் எழுதியிருப்பார் சுராவுடனான பல உரையாடல்களில் தன்னுடைய நிலையை எடுத்து வைக்க முடியாமல் கோபப்பட்டதாக, உரையாடல் மீதான இயல்பான ஆர்வம் என்னை நினைவின் நதியில் படித்தப் பின்னர் சுராவை நோக்கி இழுக்கிறது என்றுதான் சொல்வேன். கடவுளை நம்பாமல் எல்லாவற்றையும் தத்துவ ரீதியிலாக அணுகியதாகவும், எதைப்பற்றிய உரையாடலுக்கும் ஆர்வமாகயிருந்த சுராவை நேரில் சந்திக்க முடியாமல் போனதை நினைத்துக் கொள்கிறேன். ஆனால் சுராவைப் போல் ஆயிரம் நபர்கள் இருப்பார்கள் இன்னமும் என்ற நம்பிக்கை இருக்கிறது. தேடல் தான் தேவையே தவிர தத்துவ ரீதியான மனிதர்கள் முற்றிலும் இல்லாமல் இல்லை. கடவுள் என்பவர் உரையாடல் மூலம் உணரமுடியாதவராக, தத்துவ ரீதியில் விளக்க முடியாதவராக இருந்து உணர்வுப் பூர்வமாயும் லாஜிக்களுக்கு அந்தப் பக்கம் இருந்து கொண்டு, என்னுடைய இயலாமையின் தவிப்பின் பொழுதுகளில் தன்னைக் காட்டிக் கொள்வார் என்றால், நான் என் இயலாமையின் வாழ்வின் கடைசிப் பொருளைத் தேடும் வரை கடவுளை விலக்கிவைக்கிறேன். இந்த வயது இப்படித்தான் இருக்கும் அனுபவம் உனக்கு கடவுளைக் காட்டுமென்றால் அந்த அனுபவம் தான் கடவுள் என்றால் ஒரு பெரிய கும்பிடு அது வரும்பொழுது வாக்குவாதத்துடன் சந்தித்துக் கொள்கிறேன்.
Too much of rambling and presence of 'self'. Try to disassociate/filter 'self' from your thoughts and writings, this piece could become better. Else, it sounds more like proclamation.
ReplyDelete--'தமிழ்' எத்தனை எத்தனை ஆதியின மொழிகளை வழக்கொழித்து வந்திருக்கிறது என்பதை தமிழ் எழுத்தாளர்கள் ஒப்புக்கொள்ளமாட்டார்கள் என்று வரும--
ReplyDeleteகிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்ய
அனுபவம் தான் கடவுள் என்பதை என் அனுபவம் எனக்கு உணர்த்தி இருக்கிறது. நான் என்ற அந்த நான் ஒரு சமயத்தில் காணாமல் போகும் எப்போது என்றால் தனது கட்டுப்பாட்டில் இல்லாத ஒன்றுக்காகத் தவிக்கும் போது. எனது அனுபவத்தின் ஒரு பகுதியை நானும் கடவுளும் என்றே தலைப்பில் எழுதியிருக்கிறேன். நேரமிருந்தால் படிக்கவும்.
ReplyDeleteகஷ்மீர் செல்ல இது சீசன் அல்ல என்று நினைக்கிறேன், ஒரு முறை சிம்லா வரைக்கும் சென்று இருக்கிறேன் அப்போதே அது சீசன் இல்லை, அதான் இப்படி இருக்குனு சொன்னாங்க(ரொம்ப குளிரும்)
ReplyDelete//கையில் காசிருக்கிறது, 45,000 செலவு செய்து வாங்கிய காமெரா இருக்கிறது, கேட்பதற்கு ஆளில்லை வேறென்ன வேண்டும்.//
இதையும் அவ்வப்போது சாரு நிவேதாவை துணைக்கழைப்பதையும் தவிர்த்து பார்த்தால் யதார்த்தமான... உள்ளுணர்வுகளின் மொழியாக இருக்கிறது உங்கள் பதிவு!
யேய் இன்னாப்பா ஆச்சு உனக்கு, எல்லாம் கொஞ்சம் வயசானா சரியாபூடும்
ReplyDeleteதாஸ்...என்ன ஆச்சு?
ReplyDeleteபிகேஎஸ் அங்க சொன்னததுதான் இங்கையும், நானை நானா எழுதினால் வரும் நெருக்கம் நானை இழக்கும் பொழுது வருவதில்லை. முயற்சிக்கிறேன்.
ReplyDeleteஅனானி, அது சாரு நிவேதிதா சொன்னது. விசாரித்துப் பார்க்கிறேன் அப்படி எதுவும் உண்மையான தகவல் உண்டா என்று.
ReplyDeleteமங்கை, நான் கேட்பதெல்லாம் எனக்காய் அந்த எண்ணம்/பாக்யம் ;) தோன்றாதவரை விட்டுடுங்களேன் என்பதுதான். படித்துப் பார்க்கிறேன் உங்கள் பதிவை.
வவ்வால், காஷ்மீர் செல்ல இது நல்ல நேரமில்லை என்று தெரியும் ஒரு வருடம் டெல்லியில் வேலை பார்த்திருக்கிறேன் டெல்லி செல்வதற்கே கூட இது நல்ல நேரமில்லை. ஆனால் இது இப்படி நடக்க வேண்டியிருக்கிறது. ஆண்டவனை வேண்டிக்கிட்டு போய்க்கிட்டேயிருக்க வேண்டியது தான்.
உங்களுக்கு சாருவைப் பிடிக்காதது போல் இங்கே பலருக்கு ஜெமோ, சுராவைப் பிடிக்காது. அவர்களை இழுக்காமல் எழுதுங்கள் என்று என்னிடம் சொல்லியிருக்கிறார்கள். ஆனால் நான் ஃபீலிங்கைப் பற்றி எழுதுவதால் நினைத்ததை எழுதினேன்.
காஷ்மீர் போவதற்கு என்வரையில் ஒரே காரணம் Canon 400D தான். வேண்டும் என்றால் அப்படி பச்சையாய்ச் சொல்லாமல் இப்படி சுத்திச் சொல்லச் சொல்கிறீர்களாயிருக்கும். ;)
அனானிமஸ், கோபிநாத் - ஒன்றும் ஆகவில்லை நான் தற்கொலை செய்து கொள்வதற்காக காஷ்மீர் போகவில்லை - உலகின் இன்னொரு பகுதியை அனுபவிக்கும் ஆசை ஊர் சுற்றவேண்டும் என்ற வெறி அஷ்டே.
ReplyDeleteநண்பரின் காஸ்மீர் பயணம் வெற்றி அடைய கடவுளைப் பிறார்த்திக்கிறேன்.
ReplyDelete//உங்களுக்கு சாருவைப் பிடிக்காதது போல் இங்கே பலருக்கு ஜெமோ, சுராவைப் பிடிக்காது. அவர்களை இழுக்காமல் எழுதுங்கள் என்று என்னிடம் சொல்லியிருக்கிறார்கள். ஆனால் நான் ஃபீலிங்கைப் பற்றி எழுதுவதால் நினைத்ததை எழுதினேன்.//
ReplyDeleteஹெ... ஹே இங்கே தான் என்னை சரியா புரிஞ்சுக்கலை, நான் ஜெமோ, சுரா,சாரு என யாரையும் புடிக்காதுனே சொல்லவில்லை!
உண்மைல ஒரு நாகர் கோவில் சேர்ந்த ஒருவரை நீ ஏன் சுரா இறுதி யாத்திரைக்கு போகலைனு ரொம்ப நாள் சண்டை போட்டுக்கிட்டே இருந்தேன்!
எனக்கு புடிக்குது புடிக்காதுனு எதுவும் இல்லை, எழுதுபவர்கள்னு ஒரு நல்லெண்ணம் உண்டு! ஆனால் அவர்களின் ஒளிவட்ட பேச்சு தான் எரிச்சலை தருவது!
காஷ்மீர் எப்படி இருக்கும்னு பார்க்க வேண்டும் என்பதில் எனக்கும் ஆசை உண்டு, அதுவும் கன்னியா குமரியிலி்ருந்து ஒரு ட்ரெயின் போகிறது அதில் செல்ல வேண்டும், அது தான் இந்தியாவிலே நீளமான இருப்பு பாதை பயணமாம்!
இப்போதைக்கு உங்க படங்களில் பார்த்துக்கொள்கிறேன்!
தாமோதர் சந்துரு - பாருங்க உங்க மாதிரி நல்ல நண்பர்கள் எனக்காக இறைவனிடம் ப்ரார்த்தனை செய்யும் பொழுது என்னை யாரால் என்ன செய்துவிட முடியும்.
ReplyDeleteவவ்வால் - //ஆனால் அவர்களின் ஒளிவட்ட பேச்சு தான் எரிச்சலை தருவது!// இதைப்பற்றி தனியாக ஒரு பதிவெழுத உத்தேசம் இருக்கிறது. முயற்சிக்கிறேன்.