"என் வயசு என்னயிருக்கும் சொல்லுங்க பார்ப்போம்!"
எனக்கு சாமியார்களின் மீது நம்பிக்கையே கிடையாது, பொய் சொல்கிறவர்கள், மக்களை ஏமாற்றுபவர்கள் என்பதைத் தவிர அவர்களின் மேல் அவ்வளவு பெரிய அபிப்ராயம் ஒன்றும் கிடையாது. ஒருநாள் மாலை நேர வழக்கமான நடைப்பயிற்சியின் பொழுது உங்கள் கையைக் காண்பியுங்கள் உங்களைப் பற்றிச் சொல்கிறேன் என்று கேட்ட சாமியாரின் மூக்கை உடைப்பதற்காகவாவது கையை நீட்டுவது என்று தீர்மானித்தேன். அந்த ஆளை அப்பொழுது முதன் முதலாக அந்தப் பகுதியில் பார்க்கிறேன். முதல் கேள்வியிலேயே ஆளைக் காலி செய்வதற்காக நான் உபயோகித்த ஆயுதம் தான் என் முதல் கேள்வி. என்னைப் பார்த்து என் வயதை ஊகிப்பதென்பது சாத்தியமேயில்லை என்று எனக்குத் தெரியும்.
மர்மமாகச் சிரித்தவர், "சரி..." என்றபடி மேலும் கீழும் என்னைப் ஒருமுறை பார்த்துவிட்டு, "உங்க வயசு 24 தானே!" உண்மையில் நான் அசந்தே போய்விட்டேன். சாத்தியமேயில்லை என்னைப் பார்த்து வயதைச் சரியாகச் சொன்னவர் இதுவரை யாருமேயில்லை. என் ஆச்சர்யம் அவரது முகத்தில் பிரதிபலித்தது.
தொடர்ந்து என் கைகளை ஊன்றிக்கவனித்தவர்,
"உனக்கு ஒரே ஒரு சகோதரி மட்டும் இருக்காங்க இல்ல, உங்க அம்மா அப்பா இரண்டு பேரும் ஆசிரியர்கள் இல்லையா?"
கிழிஞ்சது அடச்சே நான் காண்பது கனவு மாதிரியிருக்கே ஒருவேளை மாஜிக்கல் ரியலிஸம் பத்தி யோசிச்சு யோசிச்சு இப்ப கனவிலேயே வந்துவிட்டதோ என்று நினைக்கும் பொழுது உணர்வின் வழியில் இல்லை இது கனவில்லை கண்முன்னே இருக்கும் நபர் உண்மை நான் அவருடன் பேசிக்கொண்டிருப்பது உண்மை என்றும் உணர்ந்தேன்.
"கனவில்லை நண்பனே நீ காண்பதும் கனவில்லை நான் சொல்வதும் மாயமில்லை!" தாடியை நீவிவிட்டுக்கொண்டே அந்த நபர் சிரிக்க எனக்கு உள்ளே பகபகவென்று எரிந்தது. இது சாத்தியமாயிருக்க நியாயமில்லை அந்த நபர் இதையும் ஏதோ அதிர்ஷ்டத்தில் சொல்லியதாகத்தான் நான் நினைத்தேன். அவ்வளவு எளிதாய் என் தத்துவ நம்பிக்கைகளின் மீது கட்டப்பட்ட கோட்டையை தகர்த்துவிட முடியவில்லை. ஜோசியம் ஜாதகம் கைரேகை பார்ப்பது எல்லாம் மூடநம்பிக்கை தான் அது உண்மையாகயிருக்க வாய்ப்பேயில்லை என்று எனக்கு நானே ஆறுதல் சொல்லிக்கொண்டேன்.
"உன் கைரேகை படி இருபது வருஷம் ரொம்ப கஷ்டப்பட்டிருப்ப, உன் இருபத்தொன்னாவது பிறந்தநாளின் பொழுது நீ வாழ்க்கையில் எதையெதையெல்லாம் அடையணும்னு நினைச்சிருந்தாயோ அதெல்லாம் உனக்கு கிடைத்திருக்கும். அதற்கு அடுத்த மூன்று ஆண்டுகளிலும் உனக்கு இறக்கமேயில்லாமல் ஏற்றம் மட்டுமே இருந்திருக்கும். நீ இன்வெஸ்ட் செய்த இடங்களில் எல்லாம் உனக்கு லாபமே கிடைத்திருக்கும், ஆகமொத்தத்தில் கடைசி பத்துவருடங்களில் நீ அனுபவித்த கஷ்டங்களுக்கு எல்லாம் தீர்வு கிடைத்திருக்கும்."
சொல்லிவிட்டு என் கண்களையே பார்த்துக்கொண்டிருந்தார், என்னவோ என் கண்களில் இருந்து அடுத்த உண்மைகளைக் கொண்டுவரப்போகிறவராய். என் காதுகளை என்னால் நம்ப முடியவில்லை, நான் நினைத்தேன் என் நண்பர்கள் தான் என்னுடன் விளையாடிக்கொண்டிருக்கிறார்கள் என்று. என் நாத்தீக வாதத்தை எதிர்க்கமுடியாமல் என் நண்பர்கள் பர்ஸனல் இன்ஃபர்மேஷன்களைக் கொடுத்து இந்த சாமியார்களைச் செட்டப் செய்திருப்பார்கள் என்று. இதுவரை அந்த சாமியார் சொன்ன விஷயங்கள் முழுவதுமே என்னைப் பற்றி கொஞ்சம் நன்றாய்த் தெரிந்த நபர்கள் கொடுத்திருக்கக்கூடியவை தான். என் சந்தேகம் வழுக்க நான் கேள்வியை கொஞ்சம் கடினமாக்கினேன்.
"சரி இந்தக் கேள்விக்கு பதில் சொல்லுங்கள், என் வாழ்க்கையிலேயே ஒருதடவை தான் நான் காதலித்திருக்கிறேன். அது எப்ப? என் காதல் என்னாச்சு? யார் அந்த பொண்ணு?"
பதின்மைத்தின் தொடக்கத்தில் நான் செய்த காதலைப் பற்றி தெரிந்தவர்கள் ரொம்பவும் குறைவே, என் குடும்பத்தினர் தவிர்த்து ஒன்றிரண்டு பள்ளி நண்பர்களுக்கு மட்டுமே தெரியும். பார்ப்போம் இந்த போலிச் சாமியார் இதற்கு என்ன பதில் சொல்கிறார் என்று நினைத்தேன்.
"தம்பி உன் கண்களைக் கூட என்னால் படிக்கமுடியும் நீ உன் நண்பர்களைச் சந்தேகிக்கிறாய் அப்படியே என் திறமையையும் சரி ஒரு நிமிடம் பொறு!" என் கைகளை ஊன்றிக் கவனித்தவர், ஒரு நோட்டுப் புத்தகத்தை எடுத்து கணக்குப் போடத்துவங்கினார்.
ஐந்து நிமிடங்கள் கழித்து அந்த நோட்டில் கடைசியாய் இரண்டு புள்ளிகள் வைப்பது மட்டும் எனக்குப் புரிந்தது. சட்டென்று நிமிர்ந்தவர்,
"நீ சொல்ற காதல் நடந்தப்ப உனக்கு 18 வயது நீ பன்னிரெண்டாவது படித்துக் கொண்டிருந்தாய், அந்தப் பெண் எட்டாவது படித்துக் கொண்டிருந்தாள். உன் காதல் நிறைவேறாத ஒன்றாகயிருந்திருக்க வேண்டும், அதைக் காதல் என்று கூட நீதான் சொல்கிறாய் நான் அல்ல. என் கணக்கின் படி பார்த்தால் அவளது பெயர் Mல் தொடங்க வேண்டும். பெரியதாக இல்லாமல் சுருக்கமான ஒன்றாகத்தான் இருக்கவேண்டும். என்னுடைய ஊகத்தின் படி அவள் பெயர் மீனாவோ இல்லை மீனாக்ஷியோ! சரியா?"
ஏறக்குறைய நான் மயக்கம் போட்டுவிடும் நிலைமைக்கு வந்துவிட்டேன். அவள் பெயர் மீனாதான் பெயர் அளவிற்குத் தெரிந்தவர்கள் என் குடும்பத்தினரைத் தவிர வேறு யாரும் இல்லை. என் குடும்பத்தினரை விசாரித்திருந்தால் நிச்சயம் என்னிடம் சொல்லியிருப்பார்கள் அப்படியென்றால் இந்தச் சாமியார் போலியல்ல என்று உணர்ந்தேன்.
"என் கைரேகையை வைத்து இவ்வளவு விஷயம் சொல்லமுடியுமா?"
"உன்னுடைய ஏழு பிறவிகளையும் சொல்லமுடியும் உன் கைரேகையை வைத்து! அந்த அளவிற்கு இந்த வித்தையை அறிந்தவர்கள் தற்சமயம் மிகமிகக் குறைவு. அதன் காரணமாகவே இருக்கும் சிலரையும் மக்கள் போலியானவர்கள் என்று நம்பும்படியாகிவிடுகிறது."
"சரி இத்தனை திறமையுள்ள நீங்கள் என்னிடம் இதைச் சொல்ல நிரூபிக்க வேண்டிய அவசியம் என்ன? என்னை நாத்தீகனிலிருந்து ஆத்தீகனாக்குவது தான் ஒரே காரணமா?"
"இல்லை யாரையும் ஒன்றிலிருந்து மற்றொன்றாக்குவது என் வேலையல்ல, முடியக்கூடியதுமல்ல அது. சொல்லப்போனால் எதையும் சந்தேகிக்காமல் ஏற்றுக்கொள்வது சரியான முறையல்ல. அதனால் தான் நாத்தீகனாயிருந்து எல்லாவற்றையும் கேள்விகேட்டு கடைசியில் பதில் கிடைத்து ஆத்தீகனானவர்களுக்கு உலகின் ரகசியங்கள் ஆரம்பத்தில் இருந்தே ஆத்தீகனாயிருப்பவர்களை விடவும் எளிதில் தெரியும்! நீ கேட்டாயே எதற்காக என்னைத் தேர்ந்தெடுத்தீர்கள் என்று, நீ தேர்ந்தெடுக்கப்பட்டவன் என்னால் இல்லை, நமக்கு எல்லாம் மேலிருந்து ஒரு சக்தி இயக்குகிறதே அதனால். இந்தத் தந்திரங்களைப் பயன்படுத்தி உன்னை பரம்பொருளை நம்பவைப்பது என்பதே கூட எனக்கு ஒவ்வாத ஒரு காரியம் தான். ஆனால் இது இப்படி இப்பொழுது நடந்தே ஆகவேண்டும் நடக்கிறது!"
கண்களை மூடி கடவுளிடம் பேசுவதைப்போல் தலைநிமிர்ந்து ஆகாயத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார் அந்தச் சாமியார். நான் எனக்கு நடக்கும் எதையும் புரிந்துகொள்ள முடியாதவனாய் அவரையே பார்த்தபடி நான் இருந்தேன்.
"உன் வாழ்க்கையில் எத்தனை முறை எத்தனை பேரைக் கேட்டிருப்பார் நீங்கள் கடவுளைப் பார்த்திருக்கிறீர்களா என்று? இன்று உனக்கு நான் காண்பிக்கிறேன் கண்களை மூடு! உன் மூளையை மட்டும் திறந்து வைத்துக் கொள்!"
சொன்னவர் மெதுவாக என் கண்களை மூடி வரப்போவது அனுபவிக்கத் தயாரானேன். அவருடைய கைகள் என் தலையில் ஆசிர்வாதம் அளிப்பதைப் போல் தொட, எனக்குள் ஒரு உள்ளொளி பரவியது, உடம்பெல்லாம் ஒரு அதிர்வு, யாரோ என்னை ஆட்கொள்வதைப் போன்ற உணர்வு தூரத்தில் ஒரு ஒளி அதுவரை இருண்மையாக இருந்த என் மனதின் வெளிச்சமாய் இறைவன் பரவுவதை உணர முடிந்தது. ஆஹா எவ்வளவு முட்டாள்த்தனமாயிருந்துவிட்டோம்! கடவுளே! சரி இதுவும் கூட நமக்கான ஒரு பயிற்சிதான். என் கைகள் நானாகவே உணராமல் அந்த உள்ளொளியை நோக்கி கரம் குவித்தது. மெதுவாய் அந்த அதிர்வு குறைந்து மனம் நிறைந்ததைப் போலிருந்தது. நான் மெதுவாகக் கண்களைத் திறந்தேன்.
ஷிட் ஐம்பது அறுபது நபர்கள் என்னைச் சுற்றி நின்றுகொண்டிருந்தார்கள், நான்கைந்து காமெராக்கள் என்னைச் சுற்றி படமெடுத்துக் கொண்டிருந்தன. அந்தச் சாமியார் என்னை நெருங்கி வந்து, "சார் நாங்க Q TVல் இருந்து வருகிறோம், Just for laughs gags நிகழ்ச்சிக்காக. உங்களைப் பற்றிய விவரங்களையெல்லாம் ஒரு டிடெக்டிவ் நிறுவனம் வைத்து சேகரித்தோம், கடைசியா நீங்க ஃபீல் பண்ணினது ஒரு மைல்ட் ஷாக் அவ்வளவே!" என்று சொல்ல நான் முகம் முழுவதும் வழிவதைத் துடைக்கமுடியாமல் அப்படியே நின்றேன்.
கடவுள் என்னிடம் கரைச்சல் செய்த பொழுதொன்றில்
Mohandoss
Monday, December 03, 2007
Mohandoss
Primarily a java programmer, an athiest and a film geek, who loves reading, writing and photography.
Related Articles
Subscribe to:
Post Comments
(
Atom
)
Popular Posts
-
இன்னும் படித்துக்கொண்டிருக்கும் என் அக்காவிற்கு நேற்றிரவு நாய்கள் என்னைப்பார்த்தது நக்கலடிப்பதாய்ப்பட்டது தெரியப்போவதில்லை உள்ளிருப்பது த...
-
"கருவினிலே என்னை உருவாக்கினாயே தாயே, ஆயிரம் பேர் அமர்ந்திருக்கும் சபை நடுவே நின்று பேசும் அளவிற்கு என்னை ஆளாக்கினாயே உன்னை வணங்கி என் உ...
-
"முரளீதரனைப்பற்றி என்ன நினைக்கிற சொரூபா?" "கள்ளனண்னா அவன், தமிழனே கிடையாது அவனும் சிங்களவன்தான்." சில காலமாகவே எனக...
:)
ReplyDeleteஇறைவா.. :)
ReplyDeleteசிறு கதையின்னு அடைப்புக்குறிக்குள்ள போட்டதை மறந்துவிட்டீர்களே மோகன் தாஸ்..கதை அருமை...
ReplyDeleteநாகை சிவா, கொங்கு ராசா, TBCD நன்றிகள்.
ReplyDeleteமற்றவங்க ரெண்டு பேரும் சிரிக்கிறாங்க அதை ஏன்னு சொல்லிட்டா நல்லாயிருக்கும்.
TBCD, சிறுகதையின் வடிவம் அது இதுன்னு உங்கக்கிட்ட ஜல்லியடிக்க விரும்பலை ;)
ராசேந்திரகொமாரு கதயாட்டம் சூப்பரா கீது.
ReplyDeleteதூள் மாமே. பட்டய கெளப்பிருக்கே
நல்லா இருக்கு, கதையின் முடிவு டூப் என்று வரும் என்று நினைத்தாலும், எப்படி என்று கண்டுப்பிடிக்க முடியவில்லை.
ReplyDeleteசர்வேசன் நடத்தும் "நச்" போட்டிக்கா?
ஜெயாகந்தன் - உள்குத்து ரொம்ப அதிகமாய்டுச்சு, நான் எஸ்கேப்
ReplyDeleteஉஷாக்கா,
ReplyDeleteபெரும்பாலும் இது போல் தலைப்பு கொடுத்து எழுதும் கதைகளில் முடிவு நீங்கள் ஓரளவுக்கு ஊகிக்கக் கூடியதாய்த்தான் இருக்கும். நான் மறுக்கலை.
ரொம்ப காலமாகவே சுஜாதாவின் ஒரு கதையால் ஏற்பட்ட பாதிப்பால், இப்படி ஒரு உள்குத்து கதை எழுதணும் என்று நினைத்திருந்தேன். மற்றவர்களுக்காக இல்லாவிட்டாலும் என் பொறுத்தவரையில் சுஜாதாவைப் பழிவாங்கிவிட்டேன் ;)
இந்த வகைக் கதையெல்லாம் கடைசியில் கனவு என்றுதானே முடிய வேண்டும்? ;-)
ReplyDeleteவாழ்த்துகள்!!!
ம்ம்ம்ம் - அருமையாகச் சென்றது கதை. கதையின் முடிவு எதிர்பாராதது தான். நம்பவும் முடியவில்லை - நம்பாமல் இருக்கவும் முடிய வில்லை. கதை படிக்கப் படிக்க, முடிவைப் படித்து விடலாமாஎன்ற ஆவலைத்ப தூண்டியது
ReplyDelete:)
ReplyDeleteகனவா நட்பான்னு யோசிச்சுட்டிருந்தேன்...நம்ம Gagsஐ கொண்டு வந்துட்டீங்க :)
கதை மிகவும் நன்றாக இருந்தது...கடைசி வரை சஸ்பென்ஸ் கொண்டு போய் இருக்கிறீர்கள்..
ReplyDeleteபாராட்டுகள்
:)
ReplyDeleteநல்லாயிருக்கு...நல்ல நடை ;)
"கரைச்சல்"
ReplyDeleteஇது கடன்பெற்ற சொல்லோ?
அருட்பெருங்கோ கனவுக்கதைகள் முடிவு நன்றாகயிருக்குமென்றாலும் வாசகனை ஏமாற்றி விட்டதான ஒரு உணர்வு வந்துவிடும். அதனால் தான் இடையிலேயே கனவு இல்லை என்று சொல்லி வைத்திருந்தேன்!
ReplyDeletecheena, இந்த வகை கதை எழுதுவதில் எனக்கு ஒவ்வாமை உண்டு. ஆனால் அவ்வப்பொழுது எழுதுவண்டு. ஹிஹி.ப்
ReplyDeleteகப்பி அய்யா,
ReplyDeleteஹாஹா, அருட்பெருங்கோவிற்கு சொன்னதுதான் கனவென்று முடிக்கவிருப்பமில்லை.
ஜஸ்ட் ஃபார் லாப்ஃஸை இழுத்து இன்னும் நல்ல சஸ்பென்ஸ் கொடுத்திருக்கலாம் தான். ஆனால் எனக்கு கடவுளையும் கொள்கையையும் இழுக்கவேண்டிய கட்டாயம்.
பாசமலர் அக்கா(அக்காதானே?)
ReplyDeleteரொம்ப நன்றி. நீங்களும் எழுதப்போறதா படிச்சேன் எழுதுங்க! எழுதுங்க!!
கோபிநாத்,
ReplyDeleteஎனக்கு என்ன சொல்வதென்றே தெரியலை! நன்றிகள்.
அனானிமஸ் அண்ணாச்சி,
ReplyDeleteபிரியலை.
கதையில் பாலகுமாரன் நடை!
ReplyDeleteஅட்ரா சக்கை! இதேதான் எதிர்பார்த்தேன் ;)
ReplyDeleteகதையில் வரும் நாத்திகர் என் நிகழ்கால வடிவத்தை ஒத்திருப்பதால் நானே சிறிது வியப்படைய நேரிட்டுவிட்டது. அருமையான கதை
ReplyDeleteஅனானிமஸ், பாலகுமாரன் கோச்சுக்கப்போறார் பார்த்துக்கோங்க. ஹிஹி.
ReplyDeleteசர்வேசன், எதை எதிர்பார்த்தீங்க, Just for laughs gags! ஐயா. இல்லை இது போன்ற கதையையா! ;)
சிவா,
ReplyDeleteஅந்த நாத்தீகன் சற்றேறக்குறைய நான் தான்.
நன்றிகள்.
சே.. நானும் நச்சுனு ஒரு கதை எழுதி போட்டியில கலந்துக்கலாம்னு பார்த்தா இப்படி சூப்பரா எழுதி பயமுறுத்திரீங்களே.
ReplyDeleteமோகன் தாஸ்
ReplyDeleteஎழுத்து நடையும், பாய்ச்சலும் (flow) சிறப்பு !
அதை விட சூப்பர், அந்த எதிர்பார்க்கவே முடியாத முடிவு :)
பாராட்டுக்கள் !
அப்படியே என் வலைப்பதிவுப் பக்கம் வந்தீங்கன்னா, பதிவுகள் கொட்டிக் கிடக்கு :)
எ.அ.பாலா
தலைப்புக்கும் கதைக்கும் என்ன சம்பந்தம்????
ReplyDeleteஹி ஹி......
ReplyDelete//"உங்க வயசு 24 தானே!" உண்மையில் நான் அசந்தே போய்விட்டேன். சாத்தியமேயில்லை என்னைப் பார்த்து வயதைச் சரியாகச் சொன்னவர் இதுவரை யாருமேயில்லை. என் ஆச்சர்யம் அவரது முகத்தில் பிரதிபலித்தது.
//
இப்போவரைக்கும் வயசு 24தான்'ன்னு நம்பமுடியல ராசா... :)
நற்கீரன், பாலா, சிவா, இராம் நன்றிகள்.
ReplyDeleteநற்கீரன் - நீங்களும் எழுதுங்க, இது போன்ற போட்டிகளில் எழுதும் பொழுதும் வெற்றி பெறுவது என்பதை இரண்டாவதாக்கிவிட்டு ரீச்சைப் பற்றி யோசித்து அதற்காகவே எழுதலாம்.
பாலா - ம்ம்ம் பார்த்தேன் இந்த வார நட்சத்திரம் இல்லையா! வருகிறேன்
இராம் - நான் லைசென்ஸ் எல்லாம் காண்பித்தேனே! வேறெதுவும் சொல்லத்தெரியலை ;)
சிவா - கடவுள் என்பதை இங்கே ஒரு குழூஉக்குறியாகக் கொள்ளலாம்.
ReplyDeleteகரைச்சல் செய்வது என்றால் எங்கப்பக்கத்தில் பிலிம் காண்பிப்பது, சீன் போடுவது என்பது போன்ற ஒரு பொருள் வரும்.
கதையின் தலைப்பின் பொருள் கேட்டால், கடவுள் என்கிற கான்செப்ட் என்னிடம் பிலிம் காட்டிய பொழுதொன்றில் என்றும் வைத்துக் கொள்ளலாம்.
இன்னமும் தெளிவா விளக்கணும்னா எப்பவும் நான் சொல்ற பழைய விளக்கத்துக்கே வர்றேன், ஃபெட்ரிக் நியீட்ஷே சொன்ன, கடவுள் இறந்துவிட்டான், நீங்களும் நானும் அவனைக் கொன்றுவிட்டோம் என்கிற டெர்மில் இருக்கிற கடவுள், கடவுள் என்றால் என் தலைப்பில் இருக்கிற கடவுளும் அதே கடவுள் தான் ;)
//அவ்வளவு எளிதாய் என் தத்துவ நம்பிக்கைகளின் மீது கட்டப்பட்ட கோட்டையை தகர்த்துவிட முடியவில்லை. //
ReplyDeleteநல்ல கதை. அதை விட நல்ல நடை.
எல்லாம் சரி முதல் எழுத்து M என்று சொல்லி இருக்கிறீர்களே??? இதில் தவறு இருக்கிறதே???
வேற் ஒரு எழுத்துதான வரணும். சரிதானே மோகன்தாஸ்....
http://blog.nandhaonline.com
நந்தா - அகிலா விஷயமெல்லாம் நடக்கும் பொழுது நான் பதின்மத்தின் கடைசியிலும் - யோசிக்கத் தெரிந்தவனாயும் ஆகிவிட்டேன் ஹிஹி.
ReplyDeleteலாப நட்ட கணக்குகள் இல்லாமல் அகிலா பற்றிய நினைவுகள் வந்ததில்லை அன்றும் சரி இன்றும் சரி, நாமதான் இதைப்பத்தி பேசியிருக்கோமே!
அகிலாவையுமே கூட பதின்மத்தின் கடைசியில் சேர்க்கலாம் என்றாலும் அங்கே பைத்தியக்காரத்தனங்கள் குறைவு - அதனால் அது உண்மையான காதல் இல்லை. எங்கே அறிவு புகுந்துவிடுகிறதோ அது காதலாக இருக்க முடியாது.
ஆக அறிவு இல்லாதவர்களோ அல்லது அறிவுடையவர்கள் பைத்தியக்காரத்தனமாய் செய்யும் செய்கையோ காதல் என்று சொல்கிறீர்களா???
ReplyDeleteExactly!
ReplyDeleteநந்தா தனியா ஒரு பதிவெழுதுறேன் இதைப்பத்தி மட்டும். அங்க பேசுவோம்..
அதானே பார்த்தேன்... என்னோட பிளாக்குக்கே ஆப்பு வைக்கலாம்னு பார்தீரே...முடிவை படித்துதான் நிம்மதியானேன்... நல்ல கதை, எதிர்பாராத திருப்பம்
ReplyDeleteபிரதாப் குமார்,
ReplyDeleteநன்றிகள்.
ஏதோ பின்னால சொல்லபோரிங்கனு தெறியும் ஆன இது உன்மையில்லைனும் தெறியும் நான் மூன்று முடிவு யோசிச்சேன் ஜஸ்ட் மிஸ் மூனுமே நாலாவதா ஒரு முடிவ கொடுத்திருக்கீங்க வாழ்த்துக்கள்
ReplyDeleteபுரட்ச்சி தமிழன்,
ReplyDeleteநன்றிகள். ஒரு சந்தேகம் புரட்சி தமிழன் என்றுதான் வரும்னு நினைக்கிறேன். நீங்க இப்படி பேர் வைச்சதுக்கு எதுவும் காரணம் இருக்கா!
மோகன்தாஸ் கதை சொல்லப்பட்ட நடை அருமை. கண்டிப்பாக முடிவு யூகிக்கக்கூடியதாக இல்லை. கதை நீளமென்பதை ஒத்துக்கொள்ள மாட்டேன். ஒரு நல்ல யூகிக்க முடியாத முடிவுக்கு ஒரு பக்க கதை போல எழுதினால் நன்றாக இருக்காது.
ReplyDeleteஆனால் என்ன பண்ண, பதிவை பாக்கும் போதே வரிகள் ஜாஸ்தியாகத் தெரிந்தால் அப்படியே அப்பீட்டு தான் ஆகிவிடுகிறோம்.
பரிசு பெற வாழ்த்துக்கள்
கண்கள மூடச்சொல்லி உங்க வாட்ச், பணமெல்லாம் அபேஸ் பண்ணப்போறார்னு நெனச்சேன்..டிவி-ய கொண்டு வந்திட்டீங்க..
ReplyDeleteஉரையாடல்கள் நன்று.
ReplyDeleteகரைச்சல் செய்தது கடவுளல்ல. டிவிக்காரர்கள்.
இதனால் தெரியவரும் நீதி.
டி.வி. தான் கடவுள் :)
:-)
ReplyDeleteநல்லா இருக்கு.. ;-)
அருமையா இருக்கு. :) :)
ReplyDeleteகதையின் முடிவு அழகா இருக்கு.
ReplyDeleteநல்லா இருக்கு, கதையின் முடிவு எதிர்பாராதது தான்,பாராட்டுகள்
ReplyDeletenalla thiruppam!
ReplyDeletefantastic!
ReplyDelete"நாத்தீகனாயிருந்து எல்லாவற்றையும் கேள்விகேட்டு கடைசியில் பதில் கிடைத்து ஆத்தீகனானவர்களுக்கு உலகின் ரகசியங்கள் ஆரம்பத்தில் இருந்தே ஆத்தீகனாயிருப்பவர்களை விடவும் எளிதில் தெரியும்!" இந்த மேட்டர் சூப்பர். கதை ஆரம்பத்திலிருந்தே இதுல ஏதோ ஏமாத்து வேலை இருக்குன்னு தெரியுது, ஆனா இந்த just of laughs gags'a கொஞ்சமும் யூகிக்கவில்லை. வெற்றி பெற வாழ்த்துக்கள்!
ReplyDeleteடாப்-8க்கு வாழ்த்துக்கள்!
ReplyDeleteClick here to view results