தமிழ்மணத்தில் அவ்வப்பொழுது ஒரு ட்ரென்ட் பிடித்து கொண்டு ஆட்டும் தமிழ் சினிமா போல், இப்ப விருது கொடுக்கும் ட்ரென்ட் போலிருக்கு. வர்றவன் போறவன் நின்னவன் நடந்தவன் எல்லாம் நானும் விருது கொடுக்குறேன் பிடிச்சிக்கோ என்று கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
கொம்மாஞ்சக்க, எவனுக்கு எவன்டா விருது கொடுக்குறது. தகுதியை நிரூபிக்கணுமாம். எவனோட தகுதியை எவன்கிட்ட நிரூபிக்கணும். தன்னைத்தானே பீடத்தில் அமர்த்திக்கிட்டு கூட இன்னும் கொஞ்சம் பேரையும் நீயும் உக்காந்துக்க நீயும் உக்காந்துக்க என்று பீடத்தை பகிர்ந்து கொடுத்துட்டா போச்சுதா பீடத்தில உட்கார்ந்தவனுங்க எல்லாம் கிழிச்சிட்டதா அர்த்தமா? இந்த கிழிச்ச பிரகஸ்பதிகள் தான் 2007ல் நீதான் பெஸ்டா கிழிச்சன்னு சொல்வாங்களா?
நல்லா இருக்கே உங்க கதை! இப்படியே போனா எல்லாரும் கடைசியில் பீடத்தில் உட்கார்ந்துக்குக்கிட்டு வேடிக்கதான் பார்க்கணும் என்கிட்ட வாங்க விருதுவாங்க என்கிட்ட வாங்கன்னு. கொடுக்கத்தான் ஆளிருக்கும் வாங்க இல்ல. கடைசியில் பெரிய அடிதடி நடக்கப்போகுது இவர நான் தான் முதல்ல நடுவரா நியமனம் செய்தேன் அவரை நீ எப்படி கூப்பிடலாம்னு.
முதல்ல விருது கொடுக்குறதுக்குள்ள தகுதியை வளர்த்துக்கோங்க அப்புறம் கொடுக்கலாம் விருது. இன்னிக்கு வெப்சைட் தொடங்கி நாளைக்கு அறிவிப்பு செய்து அடுத்த நாளே விருது கொடுத்திடுனுமாம் ஏன்னா பயமாம், எங்கடா புலியொன்னு வந்திடும்னு. இன்னும் நாலு மொக்கைப் பதிவைச் சேர்த்து போடு, பின்னூட்ட விளையாட்டு விளையாடு அப்புறம் என்ன தேவைப்படுற டிராபிக் கிடைக்கும். அதுக்கு ஏன்டா எழுதுறவங்க தாலிய அறுக்குறீங்க.
முதலில் நீயாரு நீயென்ன கிழிச்சன்னு பாரு அப்புறம் 2007ல் எவன் என்ன கிழிச்சான்னு அவார்ட் கொடுக்கலாம். வர்ட்டா!
நடுவர்களுக்கு அடிதடி தமிழ்மணத்தில் ரகளை
Mohandoss
Tuesday, December 18, 2007
Mohandoss
Primarily a java programmer, an athiest and a film geek, who loves reading, writing and photography.
Related Articles
Subscribe to:
Post Comments
(
Atom
)
Popular Posts
-
பெங்களூரு பூத்துக் குலுங்கிக் கொண்டிருக்கிறது, வண்ண வண்ணப்பூக்களுடன் வசந்த காலம் என்று நினைக்கிறேன். மஞ்சள், ஊதா, சிகப்பு, வெள்ளை நிறப்பூக்க...
-
எல்லோரையும் வியக்க வைக்கக்கூடியதும், மருள வைக்கக் கூடியதுமான நான்கு நூல் தொகுப்புக்கள் எப்படியோ இவர்கள் கையில் கிடைத்துவிட்டன; வேதங்கள் என்...
-
Desperately Seeking Cleavage வோக் ஆர்ட்டிகிள் வெளியான பொழுது பரபரப்பை ஏற்படுத்தியது. அதை எழுதிய கேத்லீன் “The tits will not be out for...
யாருப்பா இது..இம்புட்டு ஜூடாகுறது...
ReplyDeleteலிஸ்ட்ல் இருக்கிறவங்க எல்லார்க்கிட்டேயும் கேட்டுத் தான் போட்டாங்களா..தெரியல..
மற்றபடி, புதுசா ஏதோ திரட்டியோட பக்கமின்னு நினைக்கிறேன்...
அப்பறம் இது சரியான வார்த்தை தானா, இதுக்கு என்ன அர்த்தம்..புரியல்ல. தயவு செய்து விளக்கவும்.©
என் வெக்காபுலரியயை கூட்ட வாய்ப்புத் தாருங்கள்...
எது சரியான வார்த்தை தானான்னு கேக்குறீங்க TBCD.
ReplyDeleteஅண்ணா கோச்சிகாதிங்க எதுக்கு இப்ப டென்சன்...நீங்களும் விருது குடுங்க நாங்க வேண்டாம்னா சொல்ல போறோம்...நாங்க எல்லாம் தமிழர்கள் இலவசம்னா உடனே க்யூ கட்டி வாங்க வருவோம்
ReplyDeleteஇந்தப் பச்சப்புள்ளங்க பிரச்சனை பெரும்பிரச்சனையா இருக்குப்பா!
ReplyDeleteமோஹன்,
ReplyDeleteஇத்தனை சூடு தேவை இல்லை, ஆனால் தைரியமாக சொல்லி இருக்கிங்க thats great! நான் வலைஉலகில் சின்னப்பையன் , நடுவர்கள் "ஆற்றிய தமிழ் தொண்டு" என்னனு எனக்கு தெரியாது, தெரியாம கேள்வி கேட்கக்கூடாதுனு எதுவும் சொல்லிக்கலை.
நரி இடமா போனா என்ன வலமா போனால் என்ன மேல விழுந்து புடுங்காம போனா சரினு ... இந்த விஷயத்தில ...மி தி எஸ்கேப்பாக இருக்கேன் :-))
கொம்மாஞ்சக்க,
ReplyDeleteகொம்மாஞ்சக்க, கொம்மாஞ்சி எல்லாம் சும்மா கூப்பிடும் வார்த்தைகள். பெரிய அளவில் அர்த்தம் எல்லாம் ஒன்றும் கிடையாது. 'che'guevera வில் இருக்கும் 'che' மாதிரிதான்னு வைச்சுக்கோங்களேன்.
ReplyDeleteதிருச்சி கல்லூரிகளிலோ இல்லை திருச்சி மக்களுக்கோ தெரிந்திருக்கும். கொஞ்சம் பாசமா ஆரம்பிச்சா இதெல்லாம் வரும்.
வவ்வால், என்னைக் கேட்டால் நற்கீரன் மாதிரி - 'நீரே முக்கண் முதல்வனாயும் ஆகுக. உமது நெற்றியில் ஒரு கண் காட்டிய பொழுதிலும் குற்றம் குற்றமே நெற்றிக் கண் திறப்பின்னும் குற்றம் குற்றமே.' என்று அடிக்கடி எழுதிவரும் நீர் ஏன் நடுவராகயிருக்ககூடாது.
ReplyDeleteசொல்லப்போனால் நீர்தான் சரியான நடுவர்.
:)))
ReplyDeleteஅப்டி போடு அருவாள
மோகன் பின்நவீன புரிதல்களோடு இந்த பிரச்சினைய அணுகியிருக்கேன் விரைவில் பதிவாய் :)
ReplyDeleteதம்பி அருவாள் எனக்கா அய்யனாருக்கா?
ReplyDelete//கொம்மாஞ்சக்க, கொம்மாஞ்சி எல்லாம் சும்மா கூப்பிடும் வார்த்தைகள்//
ReplyDeleteஅட நம்ம "ங்கொக்காமக்க" போல இதுவும் ஒண்ணா... கொம்மாஞ்சக்கா... இதுவும் நல்லா தான் கீது :-))
-----------------------------------
மோஹன்,
//சொல்லப்போனால் நீர்தான் சரியான நடுவர்.//
உமக்கு நான் என்ன துரோகம் செய்தேன், உமது உற்சாகப்பானத்தை தட்டி விட்டேனா...இல்லை சைட் டிஷில் தான் மண்ணை அள்ளிப்போட்டேனா.... ஏன் இந்த கொலைவெறி!
நான் மற்றவர்கள் மீது மட்டும் அல்ல என் மீதும் நெற்றிக்கண் திறந்து சுட்டுக்கொள்வேனாக்கும். அய்யோ தப்பு செய்துவிட்டோம் என்று குமைந்து அதை குறைக்க ஒரு 1/4 விடுவேன், ச்சே தண்ணி அடிக்கிறதும் தப்பாச்சேனு அப்போவும் ஒரு குரல் ஒலிக்கும் அதையும் மறக்க மறுபடி ஒரு கட்டிங்க் வேற போட்டு.... ஷ்ஷ் அப்பா.... முடிய்யல...
என்னடா இது நல்லவனாவும் இருக்க முடியல ..கெட்டவனாவும் இருக்க முடியலனு ... கடைசில நானே ஒரு பரிசோதனைக்கூடமா மாறியாச்சு.. இதுல நீங்க வேற இப்படிலாம் உசுப்பி விட வேணாம் ராசா... :-))
என் வோட்டை உங்களுக்கே போடுடுறேன், ஆனா இந்த விளையாட்டு மட்டும் வேணாம்.:-))
ஆஹா முன்ன பின்ன வந்திருக்கு. ஆனால் எனக்கு முதலில் கிடைத்த பின்னூட்டம் அய்யனார் உடையது. இரண்டாவது தான் தம்பியுடையது.
ReplyDeleteஇங்க வந்து பார்த்தா உல்ட்டாவா இருக்கு, என்னைப் பார்த்தால் இந்த ப்ளாக்கருக்குக் கூட சிரிப்பாயிருக்கு போலிருக்கு ;)
//
ReplyDeleteTBCD said...
யாருப்பா இது..இம்புட்டு ஜூடாகுறது...
//
//
Baby Pavan said...
அண்ணா கோச்சிகாதிங்க எதுக்கு இப்ப டென்சன்...நீங்களும் விருது குடுங்க நாங்க வேண்டாம்னா சொல்ல போறோம்...நாங்க எல்லாம் தமிழர்கள் இலவசம்னா உடனே க்யூ கட்டி வாங்க வருவோம்
//
ரிப்பீட்டேய்!!
//முதலில் நீயாரு நீயென்ன கிழிச்சன்னு பாரு அப்புறம் 2007ல் எவன் என்ன கிழிச்சான்னு அவார்ட் கொடுக்கலாம். வர்ட்டா!//
ReplyDeletekilikarathukalam ethuku sir award... :-))) tention padathinga sir...
மோகனதாசு, யாரு பிரியாணி வாங்கிக் கொடுத்தாங்க, இப்படிக் கோஷம் போடுறீங்க :-) விருதை இவர்தான் அல்லது இவிங்கதான் கொடுக்கணும்னு இல்லையே. விருப்பப்படுறவங்க விரும்பியவங்களுக்குக் கொடுக்கறாங்க. விருப்பப்படுறவங்க வாங்கிக்கறாங்க. உங்களுக்கு வேணாம்னு சொல்லிட்டீங்க. அது சரி. அப்புறம் என்ன, இருக்கிறவங்க அள்ளி முடிஞ்சிக்கறாங்கன்னு போகலாமே. அதைவிட்டுவிட்டு, இப்படிக் கூச்சல் போடுவது, இன்னார் தருகிற விருதுக்கு இவர்கள் போட்டியாக ஆரம்பித்து வந்துவிட்டார்களோ என்ற எரிச்சலில் யாருக்கோ லாலி பாடுவது மாதிரி இருக்கிறது. - பி.கே. சிவகுமார்
ReplyDeleteதிருச்சி மோகன் தாஸூ,
ReplyDeleteஎன்னமோ சங்கமங்கிற பதிவில தெரியாத்தனமா ஒரு பின்னூட்டத்தை இட்டேன், அதுவும் உங்க வார்த்தைகளுடன் உடன் பட்டுப் போனதால உங்களோட வார்த்தைகளை கட் அண்ட் பேஸ்ட் பண்ணிப்போட்டு, அதுக்காக தோடா!_ன்னு விளிச்சிருந்திங்க அப்படின்னா என்னாங்க?
அப்படியே இதுக்கும் என்னா பொருள்னு சொன்னீங்கன்ன கொஞ்சம் தெரிஞ்சு புரிஞ்சுக்குவேன்...
//ஷரத் கோடோம்பே லகாதேங்கே கடோர், ஷெஹ்ரோம்பே நஹி..//
பிகேஎஸ்,
ReplyDeleteஇன்னுமொரு சிரிப்பைப் பிடித்துக் கொள்ளுங்கள் :)
தெகா,
ReplyDeleteதோடா! என்பது அடடா என்பதின் சென்னைத் தமிழ்பெயர்ப்பாயிருக்கும் அவ்வளவு தான்.
ஹிந்தி சொற்றொடரின் நேரடியான தமிழர்த்தம் 'பந்தயம் குதிரைங்க மேல் கட்டுவாங்க அண்ணாச்சி, சிங்கங்க மேல இல்லை' என்று வரும். :)
//தோடா! என்பது அடடா என்பதின் சென்னைத் தமிழ்பெயர்ப்பாயிருக்கும் அவ்வளவு தான்.//
ReplyDeleteகிட்டத்தட்ட அப்படி வேண்டுமானால் சொல்லிக்கலாம், ஆனால் அதுவல்ல,
இதோ பாருடா ... சுருங்கி தோடா ஆகிடுச்சு!
யாராவது பீலா விட்டால், சவுண்ட் விட்டால் அவரை அலட்சியமாக கையாள எதிரில் இருப்பவர் அப்படி சொல்வார்களாம்... தெ.கா விட்டது அப்போ பீலாவா :-))
உ.ம்: ஒருத்தர் பொய்யாக எதையோ சொல்கிறார், தோடா அரிச்சந்திரன் சொல்றார் கேட்டுக்கோங்கடானு நக்கல் விடுவாங்க பசங்க :-))
மெட்ராஸ் பாஷைல எதுனா டவுட்னுனா நம்ம கைல சொல்லிக்கினா போதும், பூந்து பொறப்ட்ரூவோம்ல... சொம்மா கில்லிக்கணக்கா! வர்ரட்டா...
மோகனதாசு, உங்கள் பொறுமையும் நிதானமும் உங்கள் வயதுக்கு மீறிய முதிர்ச்சியுடையவை. எனக்குப் பிடித்தவை. என் பின்னூட்டத்திற்குத் தாங்கள் அளித்த பதிலிலும் அது தெரிகிறது. அவ்வளவு நிதானமும் பொறுமையும் உடைய நீங்கள் இப்படிப்பட்ட ஒரு பதிவை எழுதியிருக்க வேண்டுமா என்ற ஆதங்கத்திலேயே நான் எழுதினேன். கூர்மையாக ஏதும் பட்டிருந்தால் மன்னிக்கவும். ஆயிரம் மலர்கள் மலரட்டுமே என்கிறோம். ஆயிரம் வலைப்பதிவுகள் வரட்டுமே என்கிறோம். அப்படி, ஆயிரம்பேர் வலைப்பதிவுகளுக்குப் பரிசுகள் தரட்டுமே. என்ன குறைந்துவிடப் போகிறது? ஏன் இந்தக் கொலைவெறி? வலைப்பதிவு நீதிபதிகளின் ஜட்ஜ்களின் தகுதி பற்றிப் பேசுகிறீர்கள். என்ன எழுதுகிறார்களோ, எதைப்பற்றி எழுதுகிறார்களோ அதற்கேற்ற ஜட்ஜ்கள்தான் அமைவார்கள். வலைப்பதிவருக்கேற்ற ஜட்ஜ்களும், ஜட்ஜ்களுக்கேற்ற வலைப்பதிவர்களும் சாத்தியமாவது இயல்பே. அரசியலில் எனக்கு ஆர்வமில்லை என்று சொல்லிக் கொண்டு, பிடித்தவர்கள் சார்பாக மட்டுமே நடுநிலை ஜல்லி அடிப்பீர்களே அந்த ஜல்லியே இந்த மாதிரி பதிவுகளுக்கு பலமடங்கு மேல். தவறாக ஏதும் சொல்லியிருந்தால் மன்னிக்கவும். - பி.கே. சிவகுமார்
ReplyDeleteபிகேஎஸ்,
ReplyDeleteநான் இந்தப் பதிவு எழுதியதற்கு நேரில் தெரிவதை விடவும் காரணம் உள்பக்கம் உண்டு. அதைச் சொல்லமுடியாத நிலையில் இருக்கிறேன், நேரில் தெரிவது என்று சொல்வதில் 'தமிழ்மண விருது' சப்போர்ட்டும் உண்டு.
//அவ்வளவு நிதானமும் பொறுமையும் உடைய நீங்கள் இப்படிப்பட்ட ஒரு பதிவை எழுதியிருக்க வேண்டுமா என்ற ஆதங்கத்திலேயே நான் எழுதினேன்.//
எல்லாவற்றிற்கும் ஒரு எல்லா உண்டு என்று நம்புபவன் நான் எல்லைகள் மீறப்படும் பொழுது எருமைமாடு மாதிரி என்னால் சும்மா உட்கார்ந்திருக்க முடியாது. நீங்களும் அதை என்னிடம் விரும்ப மாட்டீர்கள் என்றே நினைக்கிறேன்.
எல்லா சமயங்களிலும் நான் செய்த விஷயங்களைத் தவறேன்று நினைத்தால் ஒப்புக்கொள்வதில் எனக்குப் பிரச்சனையில்லை. ஆனால் எனக்கு இன்னமும் கூட இந்தப் பதிவெழுதியது பற்றி தடுமாற்றம் வரவில்லை. நிறைய யோசித்து தான் எழுதினேன்.
நடுவர்களாக ஆசிப் இருக்கிறார், இளவஞ்சி இருக்கிறார் இன்னும் என்னை பர்ஸனாலாகத் தெரிந்த நிறைய நண்பர்கள் அந்தக் குழுவில் இருக்கிறார்கள், ஆனால் பிரச்சனை இவர்கள் பின்னால் ஒழிந்திருக்கிறது எனும் பொழுது இவர்களுக்காக பிரச்சனையைப் பற்றி பேசாமல் இருக்க முடியாது.
இதைப் பற்றி இவர்களிடம் கூட தனிப்பட்ட முறையில் பேசவில்லை, எல்லாம் புரிந்துகொள்வார்கள் என்ற நம்பிக்கை தான். கொஞ்சம் மூடநம்பிக்கை போல் இருந்தாலும் சல்தா ஹை என்று விட்டிருக்கிறேன்.
பேசுவோம்.
// நான் இந்தப் பதிவு எழுதியதற்கு நேரில் தெரிவதை விடவும் காரணம் உள்பக்கம் உண்டு. அதைச் சொல்லமுடியாத நிலையில் இருக்கிறேன்//
ReplyDeleteஇத்தனை கருத்துக்களை நேர்மையாக வெளிப்படையாக சொல்லத் துணிந்தவருக்கு இதுமட்டும் சொல்ல முடியவில்லையெனில் எங்கயோ இடிக்குதே? :) சொந்த காரணங்கள் ஏதாச்சும் இருக்கிறதா?
இக்காலத்துல வெளிச்சத்தம் மட்டும் வேளைக்காகாது. அண்டர்கிரவுண்லயும் அவங்ககூட ஒரு லிங்க்ல இருங்க. அப்பத்தான் பிரியாணி பொட்டலம் தீருவதற்கு முன்னால் கைப்பற்ற தோதாக இருக்கும் :)
//இத்தனை கருத்துக்களை நேர்மையாக வெளிப்படையாக சொல்லத் துணிந்தவருக்கு இதுமட்டும் சொல்ல முடியவில்லையெனில் எங்கயோ இடிக்குதே? :) சொந்த காரணங்கள் ஏதாச்சும் இருக்கிறதா? //
ReplyDeleteஎல்லா விஷயங்களையும் நாம் நினைக்கிற மாதிரியே சொல்லிட முடியாதுங்க உதாரணத்துக்கு நீங்க இப்படி பெயர் சொல்லாமல் வந்திருப்பதைச் சொல்லலாம்.
மோகனா, இந்தப் பதிவை நீங்கள் எழுதியதில்தான் அதிகபட்ச அரசியல் நோக்கம் இருப்பதாக நான் நினைக்கிறேன். தமிழ்ப்பதிவர்கள் அனைவரையும் ஒரு திரட்டியின் பெயரில் அடக்கி விளிக்கிற உங்கள் முதல்வரியே பெரிய அரசியல்தானே. அந்தத் திரட்டிதான் தமிழ் வலைப்பதிவுலகமே என்று சொல்ல வருகிற அரசியல். அப்புறம் என்ன பெரிய புடலங்காய் மாதிரி மற்றவர்கள் அரசியலை நீங்கள் பேசப் போகிறீர்கள். :-) தேன்கூடு என்ற திரட்டி வந்தபோது அதைப் பிரபலமாக்க போட்டிகள் நடத்திப் பரிசு தந்தார்கள். நீங்கள்கூட கதையெழுதினீர்கள். தேன்கூடு நடத்துகிறவர்கள் யார், அவர்கள் தகுதி என்ன என்று அப்போது நீங்கள்கூட கேள்வி கேட்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதையெழுதுவதால் நீங்கள் அப்படிக் கேட்டிருக்க வேண்டும் என்று சொல்லவரவில்லை. நீங்களும் போட்டிகளில் பங்கெடுத்தீர்கள். அப்போது உங்களுக்கு அரசியல் நோக்கம் இல்லாமல் இருந்தது. ஒருவர் எதையோ தன் விளம்பரத்துக்காகக் கூடச் செய்தாலும் அதில் மற்றவர்களுக்குப் பலன் இருந்தால் வரவேற்கவும் பயன்படுத்திக் கொள்ளவும் தெரிந்தது. ஆனால் இப்போதோ, வாய்கிழியப் பின்நவீனத்துவம் பேசிக் கொண்டு, பரிசு கொடுக்கிறவர்களின் தகுதியைக் கேள்வி கேட்கிற சனாதன மரபின் அடிப்படையிலான உங்கள் மனதைத் தோலுரித்துக் காட்டுகிறீர்கள். சங்கமமோ வேறு எந்த எழவோ கொடுக்கிற எந்தப் பரிசுக்கும் எனக்கும் தொடர்பில்லை. ஜனநாயக நாட்டில் இருக்கிறவன் பரிசைக் கொடுக்கிறான். இவன்தான் கொடுக்கணும் அவனுக்குக் கொடுக்கத் தகுதியில்லைன்னு எவன் சொல்றது? தகுதியில்லாதவன் பரிசு கொடுக்கக் கொடுக்க அதுபற்றிய விமர்சனங்கள் வரவரவே, பரிசு கொடுக்கிறவனும் வளருவான், பரிசு வாங்குகிறவனும் வளருவான். எனவே, வேணும்னா கலந்துக்கோ. இல்லைன்னா வேடிக்கை பார். அடுத்தவன் கல்யாணத்துல போய் உம்ம ஒப்பாரியை வைக்காதீங்க. கடைசியா, வலைப்பதிவுல இதுவரைக்கும் பரிசு தரப்போறதா அறிவிச்சி இருக்கிற யாரோடயும் எனக்கு எந்தத் தொடர்பும் இல்லை. எனக்கு யாரும் பிரியாணியும் வாங்கித் தரலை.
ReplyDeleteபிகேஎஸ்,
ReplyDeleteஎல்லாவற்றிற்கும் பின்னால் அரசியல் உண்டு, இதே சங்கம வகையறாவை அவர்களுடைய திரட்டியிலேயே கொட்டிக்கவிழ்த்து நடத்திக் கொண்டிருந்தால் எவன் கேட்கப்போகிறான். தேன்கூடு அதைச் செய்தார்கள், அவர்களுக்கு அவர்களுடைய திரட்டியை பிரபலப்படுத்த வேண்டிய தேவை இருந்தால் அதற்கு பயன்படுத்திக்கொள்ள தமிழ்மணம் வேண்டுமா? அதற்காகத்தான் தமிழ்மணத்தை விளித்துப் பேசியது. தேன்கூடு தனிப்பட்ட திரட்டி அதில் அவர்கள் போட்டி நடத்தினார்கள் அதில் பங்கேற்க வேண்டுமா இல்லையா என்பது தனிப்பட்ட விருப்பம், ஆனால் இங்கே அப்படியில்லாமல் நானும் தமிழ்வலைபதிவு எழுதுகிறேன் இல்லையா? யாராவது என் பதிவை பரிந்துரைக்கிறார்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள், இல்லை இப்படி வைத்துக் கொள்வோ, யாராவது உங்கள் பதிவை பரிந்துரைக்கிறார்கள் இலக்கியத்திற்கு இல்லை வேறு ஏதோ ஒன்றிற்கு. என்றால் நீங்கள் வந்து தான் என் பதிவின் பரிந்துரையை எடுத்துக் கொள்ளாதீர் என்று சொல்லவேண்டிவரும். இதுதான் தேன்கூடு போட்டிக்கும் இதற்கும் இருக்கும் பிரச்ச்னை.
பின்நவீனம் சனாதனம் இதை இன்னொரு முறையும் உங்களிடம் இருந்து கேட்கிறேன் முன்னமே இதற்கு பதில் சொன்னேன் இன்றைக்கும் அதே தான், யாரும் பிறக்கும் பொழுதே தத்துவக் கோட்பாடுகளுடன் பிறப்பதில்லை. அதுபோல் சனாதனத்தின் எல்லாவற்றையும் துறந்து யாரும் ஒரே நாளில் பின்நவீனத்துவவாதியாக ஆவதும் இல்லை. இவை தொடர்ச்சியான process இதில் எல்லோருக்குமாய் இல்லாமல் சிலருக்கு process நடந்து கொண்டிருக்கும் பொழுதே கூட process நடந்து கொண்டிருப்பவரை பார்க்கிற அவதானிக்கிற வாய்ப்பு கிடைத்து விடுகிறது. இந்த process நாட்கணக்கு இல்லை வருஷக் கணக்காகலாம். அல்லது பாதியிலேயே process பிடிக்காமல் நான் பின்நவீனத்தை விட்டு வெளியேறி வேறு வகையறாவில் சேரலாம் இதில் சனாதனமும் இருக்கலாம். ஆனால் நாளை நடைபெறப்போகும் ஒன்றை எண்ணி இன்றைக்கு நான் என்ன உணர்கிறோனோ அதை இல்லை என்று சொல்ல என்னால் முடியாது.
// இதுவரைக்கும் பரிசு தரப்போறதா அறிவிச்சி இருக்கிற யாரோடயும் எனக்கு எந்தத் தொடர்பும் இல்லை. எனக்கு யாரும் பிரியாணியும் வாங்கித் தரலை. //
இது எனக்குத் தெரியும் புரிந்து கொள்ள முடிகிறது, ஆனால் இங்கே வைஸ் வர்ஸா இல்லை அதுதான் பிரச்சனை :) நான் தனிப்பட்ட முறையில் சொன்னதையே திரும்பவும் சொல்கிறேன் தமிழ்மணமோ இல்லை அதைச் சார்ந்த ஒருவரோ அவர் பெயருடையவரோ இல்லை பெயரில்லாதவரோ என்னிடம் இதுவரை பேசவும் இல்லை, பிரியாணிப்பொட்டலம் அனுப்பவும் இல்லை.
இன்னொன்றையும் சொல்லிவிடுகிறேன், என் தத்துவ/அரசியல்களுக்கு உட்பட்ட ஒன்றை நான் சப்போர்ட் செய்கிறேன் என்பதற்காக எனக்கு பிரியாணி கிடைக்குமென்றால் நல்ல லெக்பீஸ் சிக்கன் பிரியாணியாய் கேட்டு வாங்கிச் சாப்பிடுவேன்.
பேசலாம்.
பரிசு கொடுப்பதற்கு வேண்டிய ஒரே தகுதி பணம் (அல்லது வேறு சூழல்களில், அதிகாரம்) இருப்பதுதான். அதைத் தவிர வேற எந்தத் தகுதியும் வேணுமான்னு தெரியல. ஜனாதிபதி விருது தர்றதுக்கு ஜனாதிபதிக்கு (இலக்கியத்திலயோ, விளையாட்டுத் துறையிலயோ) என்ன தகுதி இருக்கு? இல்ல, தொலைக்காட்சியில கலக்கப்போவது / அசத்தப்போவது யார்ன்னெல்லாம் போட்டி நடத்தி விருது வழங்கற வணிக நிறுவனர்களுக்கு என்ன நகைச்சுவை திறமைகள் இருக்கும்ன்னு எதிர்பாக்க முடியும், இல்ல இருந்தாலும் அது அவசியமா?
ReplyDeleteதமிழ்மணத்தில் விளம்பரம் செய்யறதுதான் உங்களுக்கு பிரச்சனைன்னா, எனக்குத் தெரிஞ்சி எவ்வளவோ விளம்பரங்கள் தமிழ்மணத்தில் வந்துக்கிட்டுதான் இருக்கு. அதை தமிழ்மண நிர்வாகம் வெளிப்படையா தடை செஞ்சிருக்கான்னு தெரியல. பதிவு எழுதறதே ஒரு சுய விளம்பரம்தான், அதுலயும் அதை தமிழ்மணத்தில் இணைச்சி, ஒவ்வொரு இடுகையையும் ping செஞ்சி காட்டறதும், ஒரு மாபெரும் விளம்பரம்தான். நானும் அதுக்கு விதிவிலக்கு கிடையாது. ஒரு பாவமும் செய்யாதவர்கள் முதல் கல்லை எடுத்து எறிவோமே?
Voice on wings,
ReplyDelete//பரிசு கொடுப்பதற்கு வேண்டிய ஒரே தகுதி பணம் (அல்லது வேறு சூழல்களில், அதிகாரம்) இருப்பதுதான். //
உங்களுக்கு அந்த அதிகாரம் யார் கொடுத்தது என்பதைத்தான் கேட்கிறேன். என் பதிவு நல்லாயிருக்கு நல்லாயில்லை என்று நாலு பேர் பரிந்துரைக்க வைக்கவோ அதை வைத்து என்பதிவைப் பற்றி தீர்மானிக்கவோ உரிமை யார் கொடுத்தது.
எல்லாரும் திரும்பத்திரும்ப மொக்கையா ஜனாதிபதி விருது, மாணிக்சந்த் விருது என்று புலம்புறீங்களே உண்மையிலேயே புரியலையா இல்லை இதிலும் ஆக்டிங்கா. நானும் எழுதுறேன் நீயும் எழுதுறங்கிறப்ப கூட எழுதுறவன் கொடுக்குற விருது வேணாங்கிறேன், ஏன்டா கொடுக்கிறீங்கன்னு கேட்கிறேன் இதிலென்ன இருக்கு, நோபல் ஆஸ்கர் விருதுகளையே நிராகரித்தவர்கள் இருக்கிறார்கள், அவர்களுடன் என்னை ஒப்பிடவில்லையென்றாலும் information sake.
//எனக்குத் தெரிஞ்சி எவ்வளவோ விளம்பரங்கள் தமிழ்மணத்தில் வந்துக்கிட்டுதான் இருக்கு.//
ஆரம்பிச்சிட்டாங்கய்யா, எதுக்கும் எதுக்குங்க முடிச்சு போடுறீங்க. தமிழ்மணம் விருது வழங்கப்போறோம் என்று சொன்னதுக்கப்புறமும் நீங்களும் வழங்குறேன்னு நிக்கிறீங்க என்றால் for heaven's sake தமிழ்மணத்தின் நிழலில் நின்று மொக்கை போடாதீங்க.
எத்தனையோ பேர் தமிழ்மணத்தை தூக்கியெறிஞ்சிட்டு போயிருக்காங்க, போய் இன்னமும் எழுதுகிறார்கள் அவர்களை நான் வரவேற்கிறேன். ஏன் என்றால் அது சரியான வழி. நீங்க தமிழில் திரட்டி வெளிவிடுவீங்க, அதைப் பிரபலப்படுத்த போட்டு நடத்துவீங்க, அந்தப் போட்டியைப் பிரபலப்படுத்த மட்டும் தமிழ்மணம் வேண்டுமா?
//ஒரு பாவமும் செய்யாதவர்கள் முதல் கல்லை எடுத்து எறிவோமே?//
கடவுளின் ஆலோசனைகளைப் புரிந்து கொள்ள மட்டுமல்ல ஏற்றுக்கொள்ளவும் ஒரு தராதரம் வேண்டும் எனக்கில்லை வர்ட்டா!
//(அல்லது வேறு சூழல்களில், அதிகாரம்) இருப்பதுதான். //
ReplyDelete//உங்களுக்கு அந்த அதிகாரம் யார் கொடுத்தது என்பதைத்தான் கேட்கிறேன்.//
புரிஞ்சிக்கிறதுல யாருக்கு பிரச்சனைங்கறதுக்கு ஒரு சிறு உதாரணம். நானும் வர்றேன்.
ila,
ReplyDeleteI cant publish your comment because I dont want answers for aiyanar's questions.
So if you can republish your comment with whatever you want to say only to my post it can be published.
And for your question relating our chat transcript. I dont know what significance it is going to make whether I am accepting it or not. You are already doing the same right whether it is for 17 people or all doesnt matter.
I am not in office or in my home so comments moderation can take time.
மோகன்தாஸ், லேட்டாக இப்பொழுதுதான் இதை பார்த்தேன். டூலேட்டா என்பது தெரியாது எனினும் தோன்றியதை பகிர்ந்து கொள்கிறேன்.
ReplyDeleteஅ) தகுதியிருக்கிறதா என்பது ஒரு புறமென்றாலும், எந்த ஒரு போட்டியிலும் கலந்து கொள்வதில் எனக்கு விருப்பமோ ஆர்வமோ இல்லை. ஆ) எனக்கும் வேறு எந்த ஒரு திரட்டி அல்லது குழுவுக்கும் நன்றியுணர்ச்சியோ/காழ்ப்போ இல்லை.
முதலில் சில கேள்விகள் :
உங்களின் கோபத்திற்கு காரணம்,
நீங்கள் பின்னூட்டத்தில் தெரிவித்தது போல, தமிழ்மணம் விருதுகள் என்று அறிவித்த பின்பு அதையொட்டி இன்னொரு குழு விருதுகள் என்று அறிவித்ததா? அல்லது பதிவில் சொன்னது போல அந்த அறிவிப்பையே தமிழ்மணத்தின் மூலம் விளம்பரம் செய்வதா?
தமிழ்மணம் விருதுகள் என்று அறிவித்த பின்பு அதையொட்டி இன்னொரு குழு விருதுகள் என்று அறிவித்ததாகவே வைத்துக்கொண்டாலும் அதனால் என்ன ப்ரச்னை. அது தமிழ்மண விருதுகளை நீர்க்கச்செய்யும் முயற்சியாக பார்க்கவேண்டுமா? அப்படி பார்த்தால் தமிழ் வலைப்பதிவுகளுக்கு(ம்) இண்டிப்ளாக்கீஸ் என்ற நிறுவனம் கடந்த இருவருடங்களாகவே விருதுகள் தந்து கொண்டிருக்கிறது. அந்த விருதை பலகீனப்படுத்தும் முயற்சிதான் தமிழ்மணத்தின் விருதுகள் என்று சொல்ல முடியுமா?விருதுகள் என்பது தமிழ்மணத்தின் காப்பிரைட் ப்ராப்பர்டி என்பதாக ஆகுமா? தமிழ்மணத்தின் விருதுகளை ஒட்டி அப்படியே ஈயடிச்சான் காப்பியாக அதே தேர்வு முறைகள், அதே டெர்ம்ஸ் & கண்டிஷன்ஸ் என்றெல்லாம் செய்தால் அது கண்டிக்கத்தகுந்தது. ஆனால் தமிழ்மணம் விருதுகள் பற்றிய அறிவிப்பை தவிர வேறு எதையும் செய்ததாக தெரியவில்லை. ஆக வேறு யார் யார் விருதுகள் தந்தால் என்ன?
விருது கொடுப்பவனின் தகுதி குறித்து கேட்கிறீர்கள். எல்லோரும் ஏதோ ஒரு புள்ளியில் ஆரம்பிக்கத்தான் வேண்டும். இரு வருடங்களுக்கு முன்பு நான் சிறுகதை போட்டி ஒன்று நடத்தினேன். தமிழ் வலையுலகில் முதல் முறையாக நச்சுன்னு ஒரு போட்டி என்று அறிவிப்பு ஏதும் செய்தேனா என்று ஞாபகம் இல்லை. மாலன் நடுவராக இருந்தார். என் வேலை வந்த கதைகளை அவருக்கு அனுப்பியது மட்டுமே. அதனை எனக்கு தெரிந்த முறையில் நேர்மையாக நடத்தினேன் என்றே நினைக்கிறேன். அப்போது இதை நடத்த உனக்கு என்ன தகுதி என்று யாரும் கேட்டிருப்பார்களேயானால் என்னால் என்ன பதில் தந்திருக்க முடியும்.
// எவனுக்கு எவன்டா விருது கொடுக்குறது. தகுதியை நிரூபிக்கணுமாம். எவனோட தகுதியை எவன்கிட்ட நிரூபிக்கணும். தன்னைத்தானே பீடத்தில் அமர்த்திக்கிட்டு கூட இன்னும் கொஞ்சம் பேரையும் நீயும் உக்காந்துக்க நீயும் உக்காந்துக்க என்று பீடத்தை பகிர்ந்து கொடுத்துட்டா போச்சுதா பீடத்தில உட்கார்ந்தவனுங்க எல்லாம் கிழிச்சிட்டதா அர்த்தமா? இந்த கிழிச்ச பிரகஸ்பதிகள் தான் 2007ல் நீதான் பெஸ்டா கிழிச்சன்னு சொல்வாங்களா? // என்ற உங்களின் கேள்வி தமிழ்மண விருதுகள் குழுவுக்கும் பொருந்துமா? ஏன் கேட்கிறேன் என்றால் உங்களை போலவே பின்புல அரசியல் தெரிந்த நிலையில் நானும் இருந்திருக்கிறேன். அப்பொழுது தகுதி குறித்து கேள்வியெழுப்பியவர்களை பார்த்திருக்கிறேன். பின்னர் அவர்களே தங்களை தாங்களே தகுதியானவர் என்று அறிவித்த அவலமும் நடந்தது.
ஒரு ஆசிரியர் குழு சிறந்ததாக அவர்கள் கருதும் தமிழ் பதிவுகளை தொகுத்து பூங்கா என்ற மின் இதழில் வெளியிடுகிறார்கள். அவர்களுக்கு என்ன தகுதி என்று கேட்க முடியுமா? எப்படி அவர்கள் பார்வையில் சரியென்று படுவதை அவர்கள் செய்கிறார்கள் விரும்பினால் படி இல்லை விடு என்று சல்தா ஹை செய்கிறோமோ அது போலவே ஏன் இந்த விருதுகளையும் எடுத்துக்கொள்ளக்கூடாது? இனிமேல் யாரும் வலைப்பதிவுகளை தொகுத்து மின் இதழ் வெளியிட்டால் பூங்காவுக்கு போட்டி என்று உங்கள் கோபம் அவர்கள் மேலும் திரும்புமா?
புகைப்படங்களுக்கு மாதா மாதம் போட்டி வைத்து பரிசுகள் தருகிறார்கள். அவர்கள் எல்லாம் என்ன Pilsner Urquell International Photography Awards வாங்கியவர்களா? அதிலும் ஒரு பதிவர் எதிராளி எல்லாம் ஒன்றும் தெரியாத கூமுட்டைகள் என்ற எண்ணத்தில்தான் எழுதுவார். சிரிப்போடு நகர வேண்டியதை தவிர செய்ய என்ன இருக்கிறது?
உங்கள் பதிவின் போக்கு ஒருவாறாக இருந்தாலும், மற்றொரு குழுவினர் தமது விருதுகள் அறிவிப்பையே தமிழ்மணத்தின் மூலம் விளம்பரம் செய்வதுதான் தலையாய ப்ரச்னை என்பதாக உங்கள் பின்னூட்டம் தெரிவிக்கிறது... எனில் அதனால் உங்களுக்கு என்ன ப்ரச்னை? தமிழ்மணத்தில் சினிமா வெளியீடு குறித்த விளம்பரம் வரலாம். இடியாப்ப கம்பெனி குறித்த விளம்பரம் வரலாம். ஆனால் தமிழ் பதிவுகளுக்கான விருது குறித்த விளம்பரம் தமிழ் பதிவுகள் திரட்டியான தமிழ்மணத்தில் வரக்கூடாதா?
உங்களின் தார்மீக கோபத்தின் பின்னால் இருக்கும் தமிழ்மணத்தின் மீதான நன்றியுணர்ச்சியை - அதுவே கேள்விக்குட்பட்டதுதான் - மீறிய பக்தி குறித்தான் கேள்விகள் எனக்குண்டு. இதற்கு முன்பே பல சந்தர்ப்பங்களில் இது குறித்த விவாதங்களில் பரவசப்பட்டவரின் உணர்ச்சிகளை புரிய முயன்று தோற்றிருக்கிறேன். அதனால் ஒரு பாதிப்பும் இல்லை. ஆனால் கட்டற்ற இணையவெளி, மட்டற்ற சுதந்திரம் என்றெல்லாம் ஒரு பக்கம் பேசிக்கொண்டே இன்னொரு புறம் தமிழ் வலையுலகின் எல்லா நலலது (கெட்டதற்கும்?) ஒரு நிறுவன ப்ராண்டை மட்டும் முன்னிறுத்தி அதை மோனோபோலியாக ஆக்க துணை நிற்கும் முரண்பாட்டு எண்ணங்கள் எழுப்பும் பாதிப்புகளின் எச்சம் மட்டும் கொஞ்சம் உண்டு.
முகமூடி உங்கள் பின்னூட்டத்தின் tone உங்களுக்கான பதிலை சரியாக/தெளிவாக/நான் எப்படி நினைக்கிறேனோ அதை மறைக்காமல் சொல்லவேண்டும் என்ற ஆவலை வழங்குகிறது.
ReplyDeleteநிச்சயம் சொல்கிறேன் ஆனால் இந்தியாவில் மணி இப்பொழுது 1.21 ஆகிறது டிராவலுக்காக பர்சேஸ் செய்து, பேக்கிங் செய்து இப்பொழுது தூங்கப்போகிறேன். நாளைக்கு நிச்சயமாய் எழுதுகிறேன்.
பிகேஎஸ்,
ReplyDeleteஎனக்குத் தெரிந்து நீங்கள் தற்பொழுது அனுப்பியிருக்கும் பின்னூட்டமும் முன்பு பேசிய அதே விஷயத்தையே பேசுவதாக நான் நினைக்கிறேன். அதுமட்டுமல்லாமல் என்னைப்பற்றிய தனிப்பட்ட விமர்சனங்களை நான் எடுத்துக்கொள்ளும் விதம் வேறு. மற்றவர்களைப் பற்றிய விமர்சனங்களை என் பக்கத்தில் வைக்க வேண்டாமென்றே நினைக்கிறேன்.
எப்பொழுதோ முன்பே ஒரு சிலமுறை எழுதியிருக்கிறேன் எனக்கு கருத்து சுதந்திரத்தில் அத்தனை தூரம் நம்பிக்கையில்லை என்று.
இந்தப் பதிவின் நோக்கம் நிச்சயமாக திசை திரும்புவதாக நான் நினைக்கிறேன். பின்னூட்டம் கைவசம் இல்லையென்றால் கேளுங்கள் மெயிலில் அனுப்புகிறேன் அந்தப் பின்னூட்டத்தை பதிவிடும் உத்தேசம் இல்லை.
மோகன்தாஸ்,
ReplyDeleteயாருமே விருது வழங்கத் தேவையில்லை என்று எழுதி இருந்தீர்களானால் உங்கள் கருத்தில் உள்ள நியாயத்தைப் புரிந்து கொண்டிருப்பேன்.
சங்கமம் விருதுகள் வழங்குவோரின் தகுதி, நோக்கம் ஆகியவற்றை நீங்கள் தாராளமாக கேள்வி கேட்கலாம். ஆனால், தமிழ்மணம் வழங்கலாம், பிறர் வழங்கத் தகுதி இல்லை என்பது என்ன நியாயம்? ஒரு திரட்டியை ஒரு சில ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கி நடத்துகிறார்கள் என்பது மட்டும் போதுமான தகுதியாகி விடுமா? திரட்டி நடத்துவதற்கு தொழில்நுட்பம் தெரிந்திருக்க வேண்டிய ஒரு தகுதியே போதுமானது. அதைத் தமிழர்களும் செய்யலாம். கூகுளும் செய்யலாம்.
பிற திரட்டிகள் குறித்த விளம்பரங்கள் தமிழ்மணத்தில் வரக்கூடாது என்பது சிறுபத்திரிக்கைச் சூழல் மனப்பான்மை போல் இருக்கிறது. தங்களுக்கு போட்டியானவர்களின் தகவல்களை எல்லாம் வடிகட்டி ஒரு திரட்டியோ தேடுபொறியோ கொடுக்குமானால் அதைவிட முட்டாள்த்தனம் வேறு ஒன்றும் இருக்க முடியாது.
என்னைப் பொறுத்தவரை பணமாகவோ பொருளாகவோ கொடுக்கப்படாத வரை, வலைப்பதிவு விருதுகளால் ஒருவருக்கும் பயன் இல்லை. அதை யார் கொடுத்தாலும் சரி. பணமும் பொருளும் கொடுத்தால் போதுமா என்று கேட்க வேண்டாம். குறைந்தபட்சம் விருது வாங்குபவருக்காவது கண்ணுக்குப் புலப்படும் குறைந்தபட்ச பயன் அதுவே. மற்றபடி விருதுகள் என்பது வீண் சர்ச்சைகள், குழு சேர்த்தல், ego வளர்ப்பு, நிறுவனப்படுத்தல், மையப்படுத்தல், அதிகாரமயமாக்கல் ஆகியவற்றுக்குத் தான் உதவும்.
பதிவை எழுதினோமா போனோமா என்று jollyஆக இருப்பது நல்லது. இதை ஏதோ சாகித்ய அகாதெமி rangeக்கு மாற்றி formal ஆக்குவதில் உடன்பாடில்லை.