அந்த கண்ணாடி அறைக்குள் உட்கார்ந்திருந்த இருவரின் முகமும் இறுக்கமாய் இருந்தது. அந்த அறையில் நிலவிய நிசப்தத்தை போல.
“அவனை முடிச்சிடுங்க.”
எதிரே உட்கார்ந்திருப்பரின் உணர்ச்சிகளற்று முகத்தில் மாற்றங்களை எதிர்பார்த்து ஏமாந்தவாராக,
“அந்த முக்கியமான் கோப்புக்களை அவன் பார்த்திருக்கக்கூடிய வாய்ப்புக்கள் அதிகம். அதனால் தான் சொல்கிறேன்.”
இதற்கும் பதில்வராத காரணத்தால்,
“அவனுக்கு குடும்பம் எதுவும் உண்டா?”
“இல்லை.”
மீண்டும் நிசப்தம் அந்த அறையில் பரவத்தொடங்கியது.
...
நாற்பத்தைந்து வயது மதிக்கத்தக்க ஒருவர், முனிர்கா வீதியில் கொலை செய்யப்பட்ட நிலையில் கிடந்தார். அவரை பற்றிய எந்த விவரமும் தெரியாத நிலையில் காவல் துறை அதிகாரிகள் தீவிரமான விசாரணையில் ஈடுபட்டுள்ளார்கள்.
...
முக்கியமான அழைப்புக்காக காத்திருப்பவள் போல் தொலைபேசி எதிரிலேயே உட்கார்ந்திருந்த தீபிகா, மணி பன்னிரெண்டு அடித்ததும் ஓவென்று அழத்தொடங்கினாள்.
அவளுக்குத் தெரியும் இனிமேல் தான் காத்திருந்த அந்த அழைப்பு வராதென்றும், அவளை அழைக்க வேண்டியவர், இந்நேரம் உயிருடன் இருக்க மாட்டாரென்றும்.
...
“தீபி, நாளைக்கு பன்னிரெண்டு மணிக்குள் நான் உனக்கு தொலைபேசவில்லையென்றால், நான் இறந்துவிட்டதாக அர்த்தம். அதன் பின் நீ என் சம்மந்தப்பட்ட அனைத்து கோப்புகள், நிழற்படங்கள் அத்துனையையும் அழித்துவிடு. முன்பே சொன்னது போல் உன் தேவைக்கான பணம், வங்கியில் இருக்கிறது. எதுவும் பிரச்சனையென்றால் இந்த தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு பிரச்சனையை சொல். தீர்த்து வைக்கப்படும்.”
இது வழக்கமாக அவள் தந்தை சொல்வதுதான். சிறுவயதில் இருந்தே கேட்டு கேட்டு பழக்கமாகிவிட்டதென்றாலும். எல்லாமுறையும் அப்பா தொலைபேசிவிடுவார். இந்தமுறை, இந்தமுறை...
...
இரண்டாம் நாள் அவளுக்கு ஒரு தபால் வந்தது. பிரித்து படித்தாள்.
“தீபி, இத்துனை நாள் உனக்கு சொல்லாத ரகசியங்களை இன்று சொல்லப்போகிறேன். நான் இந்திய அரசின் உளவுத்துறையில் வேலை பார்த்துக்கொண்டிருக்கிறேன். ஒருவாறு நீ இதை ஊகித்திருப்பாய். பலநாட்கள் அந்நியதேசத்து ஆட்களால் தான் கொல்லப்படப் போகிறோம் என்று ஆனந்தமாய் இருந்தேன்.
நீ இந்தக் கடிதத்தை படித்துக்கொண்டிருக்கும் பொழுது நான் உயிருடன் இருக்க மாட்டேன். நான் வேலை பார்த்த உளவுத்துறையே என்னை கொலை செய்யப்போகிறது. அரசாங்கத்தின் ஒரு முக்கியமான் கோப்பை மீட்டுவரும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. நானும் முடித்துவிட்டேன், ஆனால் உயரதிகாரிகள் என்மேல் சந்தேகப்படுவதாகப்படுகிறது.
எனக்கு ஒரு குடும்பம் இருப்பதாக இவர்களுக்கு தெரியாது. அதனால் நீ இந்தக் கடிதத்தை படித்ததும் கிழித்துவிடு. இந்தக் கடிதத்தை வைத்து எதுவும் செய்யலாம் என்று கனவிலும் நினைக்காதே. அவர்கள் உன்னையும் அழித்துவிடுவார்கள். உன்னிடம் மட்டும் சொல்லவேண்டும் போல் தோன்றுகிறது. நான் இறந்துபோனால் அதற்கு முழுக்காரணம் உள்துறை அமைச்சர்தான்.
அடுத்த பிரதமர் ஆவதற்கான அத்துனை முயற்சிகளும் செய்து வருகிறார் அவர். உன்னுடன் அதிக காலம் கழிக்கமுடியாமல் போனதற்காக வருந்துகிறேன்.”
...
கடிதத்தை படித்து முடித்ததும் தீபிகாவிற்கு அழுகை அழுகையாக வந்தது. அவளுக்கு விவரம் தெரிந்ததில் இருந்தே. அப்பாவின் முகம் ஞாபகத்தில் இல்லை. அதிகம் பேசியிருக்கமாட்டாள். எல்லாமே கடிதத்தொடர்புதான். சில வருடங்களில் அவளுடைய தாயாகப்பட்டவளும் இறந்துபோக விடுதிவாழ்க்கைதான் அவளுக்கென்றாகியது.
ஒரு முறை நேரில் பார்த்தபொழுது அவசர அவசரமாய், அவர் எழுதும் கடிதங்களை படிக்கும் வித்தையை சொல்லிக்கொடுத்தவர். அதற்கு பிறகு முழுவதும் கடிதங்களால் மட்டுமே அறிமுகம் ஆகியிருந்தார். அவள் கேட்காமலேயே அவளுக்குறிய அனைத்தும் கிடைத்தது. அன்பை தவிர.
...
அவள் தந்தையினுடைய நாட்குறிப்பேட்டை படிக்கத்தொடங்கினாள், அதுவரை அந்த நாட்குறிப்பேடு அவளிடம் இருந்தாலும் தந்தையே ஆனாலும் இன்னொருவருடயதென்பதால் படிக்காமல் இருந்தவள். இப்பொழுதுதான் படிக்கத்தொடங்கினாள்.
படிக்க படிக்க அவரின் மேல் அளவுக்கதிகமான அன்பும் பாசமும் ஏற்பட்டது. உயிரைக் கூடமதிக்காமல் நாட்டிற்காக உளவறியப்போகும் இவர்களை போன்றவர்களை, சந்தேகத்தால் அநாதைகளாக சாகடிப்பது அவளுக்கு சரியாகப்படவில்லை.
அவளுக்குள் மெதுவாக பழிவாங்கும் எண்ணம் ஊற்றெடுக்கத்தொடங்கியது. தன் தந்தையை கொன்றவர்களை நிச்சயமாக பழிவாங்க வேண்டுமென்று நினைத்தாள். ஆனால் அவளுக்கு தெரிந்துதான் இருந்தது. அவள் பழிவாங்க நினைக்கும் ஆட்கள் எப்படிப்பட்டவர்களென்று.
...(1)
தான் பங்கேற்ற, வெளிநாட்டு உளவுவிவகாரங்களஇல் சிலவற்றை தந்தை நாட்குறிப்பில் எழுதியிருந்து, அதை படித்துவிட்ட பிறகு, தீபிகாவிற்கு ஆச்சர்யமே அதிகரித்தது. எங்கெல்லாம் ஊடுருவுகிறார்கள், என்னவெல்லாம் செய்கிறார்கள். பயன்படுத்தும் தந்திரங்கள். விநோதம்.
இப்படித்தான் சுவிட்ஸர்லாந்தில் இந்தியாவின் ஒரு முக்கியமான புள்ளியின் வங்கிவிபரங்களைப் பற்றிய துணுக்குகளை சேகரிக்க சென்றிருந்த சமயத்தில் தான் உபயோகப்படுத்திய ஒருவனைப் பற்றி எழுதும் பொழுது, அவன் செய்த அரசியல் கொலைகளுக்காக உலகம் முழுவதும் தேடப்பட்டு வரும் ஒருவன் என்றும். இந்திய அரசிற்கே தெரியாமல், அவனை அணுகி அந்த வேலையை கச்சிதமாக முடித்ததாகவும் எழுதியிருந்தது. அவளுக்கு ஆச்சர்யமாயிருந்தது.
என்ன இருந்தாலும் அவன் கொலைகாரன் இல்லையா, அவனுடைய உதவியை எப்படி நாடலாம் என்று நினைக்கும் பொழுது. அவனைப் பற்றி அவள் தந்தையெழுதிய ஒற்றை வரி நினைவில் வந்தது.
ஆந்தனி கன்ஸாலஸ் – கொலைத்தொழில் வல்லவன்.
.
பெர்ன், ஆந்தனிக்கு மிகவும் பிடித்த ஒரு நகரம். பழமையான கருங்கற்கலால் ஆன, சொல்லப்போனால் 18ம் நூற்றாண்டுக்கு முந்தைய நினைவுச்சின்னங்கள் நிறைந்த ஒரு அற்புதமான நகரம். பெர்ன் சுவிட்ஸர்லாந்தின் தலைநகரம். அந்த நகரின் மனிதர்கள் ஆழ்ந்து யோசித்து நகர்பவர்களாகவும், மெதுவாக பேசுபவர்களாகவும் இருப்பதாக அவனுக்குப்பட்டது.
ஆறடி உயரமாய் இல்லாமல் சாதாரணமான ஒருவனாக இருந்தான் ஆந்தனி. அவனுடைய உருவத்தை வைத்து அவன் இந்த நாட்டை சேர்ந்தவன் என் தீர்மானிக்க முடியாதவனாகவும் தோன்றினான். கூர்மையான கண்கள், நீண்ட பெரிய கைகள், அதிகம் பேசாதவனாகவும், எப்பொழுதும் எதையோ யோசித்துக் கொண்டிருந்தவனாகவும் இருந்தான்.
“குடென் டக்.” சுவிஸ் நாட்டின் உச்சரிப்பில் அவன், தங்கயிருந்த விடுதியின் காப்பாளனை அழைக்க,
“சொல்லுங்க சார். நான் எதுவும் உதவி செய்ய வேண்டுமா?”
“டாங்கே, இல்லை, எனக்கு முக்கியமான தகவல் எதுவும் வந்ததா?”
“இல்லை.” அந்த காப்பாளான் சொல்லிவிட்டு அவனையே பார்க்க மீண்டும் நன்றி சொல்லியவனாக அந்த இடத்தை விட்டு நகர்ந்தான்.
உலகமே தேடும் ஒரு கொலைகாரன், சுவிட்ஸர்லாந்தில் அதன் தலைநகரத்தில் சுதந்திரமாக உலாத்துகிறான் என்றால் அவனுடைய அடையாளம் தெரிந்து நேரில் பார்த்தவர்கள் வெகு சிலரே. இன்டர்போல் இவனை தேடுவதற்காக, உபயோகப்படுத்திக் கொண்டிருக்கும் புகைப்படம் கூட சுமார் பத்துவருடங்களுக்கு முன்னர் எடுத்தது.
பல நாட்டு உளவு நிறுவனங்கள் இவனை கொல்வதற்காக தேடிக்கொண்டிருக்கும் அதே நேரத்தில் சில உளவு நிறுவனங்கள் இவன் உதவியை பெறவும் அவனைத் தேடுகின்றன. இஸ்ரேலிய உளவு நிறுவனமான மொஸாட் கூட சில சந்தர்ப்ங்களில் அவர்கள் பெயர் வெளியாக வேண்டாம்மென்று நினைத்து, ஆந்தனியை வைத்து பாலஸ்தீன தலைவர்களை, அரசியல் படுகொலை செய்திருக்கிறார்கள். ஆந்தனியை பொறுத்தவரை அவனுக்கு மதம் கிடையாது, மொழி கிடையாது. பலருக்கு அவன் எந்த நாட்டை சேர்ந்தவன் என்பதே தெரியாது. ஜெர்மன், ப்ரெஞ்ச், ஆங்கிலம் உட்பட உலகின் பலமொழிகளை எழுதவும் படிக்கவும் பேசவும் வல்லவன்.
யாரோ ஒருநாள், ஆந்தனியை கொலைத்தொழிலில் வல்லவனாக உருவாக்கியது அமேரிக்காதான் என பத்திரிக்கைகளில் எழுத எப்பொழுதுமே சிரிக்காத ஆந்தனி அன்று முழுவதும் நினைத்து நினைத்து சிரித்துக் கொண்டிருந்தான்.
.
செய்தி
உள்துறை அமைச்சர், சந்த்கோஷ் முகோபாத்யாய், எதிர் கட்சிகள் வெளியிட்ட கருத்துக்களுக்கு கடும் கண்டனம் தெரிவித்தார். மேலும் தனது பேட்டியில், தங்கள் கட்சியில் எந்த உட்கட்சி பூசலும் இல்லையென்றும் அடுத்து நாடாளுமன்ற தேர்தலுக்கும் தற்போதைய பிரதமரே, தங்கள் கட்சியின் பிரதமர் உறுப்பினராக நிறுத்தப்படுவார் என்றும் தெரிவித்தார்.
.
கடந்த சில நாட்களாகவே தீபிகாவின் மனதில் ஆந்தனி கன்ஸாலஸ் என்ற பெயர் சுழன்று கொண்டேயிருந்தது. ஆளைப்பார்த்ததேயில்லை, தந்தையின் நாட்குறிப்பை படிக்கும் முன் அந்தப் பெயரை கேள்விக்கூட பட்டதில்லை. ஆனால் ஆந்தனியை வைத்து உள்துறை அமைச்சரை பழிதீர்க்க வேண்டுமென்ற எண்ணம் மட்டும், மேலெழத்தொடங்கியிருந்தது.
அவனை எப்படி தொடர்பு கொள்வது, உலகமே தேடும் கொலைக்காரன், தான் சொன்னதற்காக, உள்துறை அமைச்சரைக் கொல்ல வருவானா? வந்தாலும் அவனுக்கு கொடுக்க தன்னிடம் பணம் ஏது. இதுபோன்ற சிந்தனைகளால் தீவிரமாக யோசித்துக்கொண்டிருந்த தீபிகா தான் இரண்டு நாட்களாக சாப்பிடவில்லையென்பதைக் கூட மறந்துவிட்டிருந்தாள்.
அடுத்த இரண்டு நாட்கள் அவளுக்கு முட்டாள்தனமாக தெரிந்தாலும், இன்டர்நெட்டில் உட்கார்ந்து அந்த பெயரில் ஒரு தேடுதல் வேட்டையே நடத்திக் கொண்டிருந்தாள். ஆனால் அவளுக்கு ஒரு தகவலும் உபயோகமாய் கிடைக்கவில்லை.
.
சில நாட்கள் தீவிரமாக யோசனை செய்த பிறகு, அவளுக்கு ஏதோ ஒருயோசனை தட்டுப்பட்டதை போல் உணர்ந்தவள். ஒரு முடிவுக்கும் வந்தவளாய்,
அந்த எண்ணுக்கு தொலைபேசினாள்.
“ஹுலோ, இந்திரஜித், நான் தீபிகா, ஜகதலப்பிராதபனின் மகள். ஒரு உதவி வேண்டும். மிகவும் முக்கியமானது.”
...(2)
In திரில்லர் தொடர்கதை நட்சத்திரம்
நட்சத்திரம் - கொலைத்தொழில் வல்லவன் 1 & 2
Posted on Thursday, February 16, 2006
நட்சத்திரம் - கொலைத்தொழில் வல்லவன் 1 & 2
பூனைக்குட்டி
Thursday, February 16, 2006
பூனைக்குட்டி
Primarily a java programmer, an athiest and a film geek, who loves reading, writing and photography.
Related Articles
Subscribe to:
Post Comments
(
Atom
)
Popular Posts
-
"இதுக்கு முன்னாடி மணாலிக்கு போயிருக்கிறியா மீனா?" ரவி தன் மனைவியிடம் கேட்டதும், அவள், "இல்லைங்க. நான் ஊட்டி, கொடைக்கானல் தான்...
-
ரவிவர்மனுக்கு சில மாதங்களாகவே அவனுடைய வாழ்க்கை சுவாரஸ்யமற்றதாக தோன்றியது. அவனுடைய வாழ்க்கைமுறை சிலசமயம் ஆச்சர்யத்தையும் பலசமயம் கோபத்தையும் ...
-
“மம்மி, உன் பையனெல்லாம் வெக்கப்படுறான் இங்கவந்துப்பாரு, ஆச்சர்யம்தான் போ?” அக்கா வேண்டுமென்றே வம்பிழுத்துக் கொண்டிருந்தாள், எங்கள் இருவர...
பார்த்தி, நான் காலேஜ் படிக்கும் பொழுது எனக்கு உடுமலைப்பேட்டையிலிருந்து ஒரு திக்கெஸ்ட் பிரண்டு விமல்னு ஒருத்தன் உண்டு. இப்ப எங்க எப்படி இருக்கான்னு தெரியலை. உங்களைப்பற்றிய குறிப்பை பார்த்தபொழுது பழசெல்லாம் நினைவில் வந்தது.
ReplyDeleteStory Interesting, ithaiththaan unggalitam irunthu ethirpaarkkiren.
ReplyDelete(but i do not mean to say other posts are less interesting.. but I always liked your stories better.)
ஆகா! அப்புறம் என்னாச்சு...அடுத்த பதிவு வரைக்கும் காத்திருக்கனுமே!
ReplyDeleteகதை சொல்லும் புதுமையான நடையும் நன்றாக இருந்தது. துண்டு துண்டாய்ச் சொன்னாலும் முழுவதும் பொருந்தி வருகிறது.
ReplyDeleteவணக்கம் தாஸ், ரொம்ப நாள் கழிச்சி வந்திருக்கேன்.. அப்புறம் ஹாக்கிங் பதிவை போட்டாச்சு போலிருக்கே.. நல்லாயிருக்கு.. வாழ்த்துகள் இதற்கும், நட்சத்திரமானதற்கும் !!
ReplyDeleteஎன் கதைகள் மீதான உங்களுடைய பிரியம் எனக்குத் தெரியும் சுரேஷ். நன்றி.
ReplyDeleteஇராகவன், அந்த கதையை நான் எழுதத்தொடங்கியதே, இது போன்ற ஒரு நடையில் ஒரு கதை எழுதவேண்டுமென்று தான். இந்த கதையை இப்பொழுது வெளியிட்டதற்கு முக்கியக் காரணம். ரொம்பகாலமாக கிடப்பில் கடக்கும் இந்த கதையை முடித்துவிடும் எண்ணமே. உங்கள் வருகைக்கும் விமர்சனங்களுக்கும் நன்றிகள் பல.
ReplyDeleteசோம்பேறிப்பையன் இப்போ வெளிவிடுகிற எல்லா விஷயங்களுமே கொஞ்ச காலத்திற்கு முன்பே முன் எச்சரிக்கையை எழுதுவைக்கப்பட்டு கொஞ்சமே கொஞ்சம்னு மாத்தி போடுறேன். அவ்வளவுதான் அதை நீங்கள் தொடர்ந்து என் பதிவை படித்து வந்திருந்தால் புரிந்திருக்கும். :-)
ReplyDeleteஒரு மாதிரி Ken Follet range-க்கு எழுதறீங்களே...நல்லா இருக்கு.
ReplyDeleteசீக்கிரமாய் அடுத்ததை போடுங்கள்!!!
ReplyDeleteதருமி என்னமோ சொல்ல வரீங்கன்னு புரியுது. ஆனா என்னனு தான் புரியலை. இந்த மரமண்டைக்குக்கும் புரியிற மாதிரி சொல்லுங்க. எழுத்தாளரோடு ஒப்பிடுறீங்கன்னா வேணாங்க விட்டுடுங்க. ப்ளீஸ்.
ReplyDeleteமற்றபடிக்கு ரொம்ப நன்றிங்க.
ஒளியினிலே இவ்வளவு அவசரப்பட்ட எப்படிங்க. பொறுமை பொட்டுக்கடலையைவிட பெரியது.
ReplyDeleteஆனால் இதெல்லாம் சும்மா, அடுத்த பகுதி எழுதித்தான் போடணுங்க. இந்த வாரத்திற்குள் எழுதி முடிக்கப்பார்க்கிறேன். உங்களின் உற்சாகம் என்னை எழுதச் சொல்கிறது.
//பொறுமை பொட்டுக்கடலையைவிட பெரியது//
ReplyDeleteஅதுதான் என்னிடம் இல்லாதது :-)
//அடுத்த பகுதி எழுதித்தான் போடணுங்க//
ஆனால் ஒண்று இடண்டு பேரையும்(பாத்திரத்தையும்) காதலிக்க வைச்சு தொலைக்காதீங்க!!! அப்பிடி வந்தாலும் பிரிகிற மாதிரி பாத்துக்குங்க!!!!
கதை நல்லா இருக்கு மோகன். என்ன மாதிரியே 'தொடரும்' போட்டு விட்டுட்டீங்க :-(.
ReplyDeleteஇனி தான் எழுதனுமா..சீக்கிரம் நாளைக்கே போடுங்க..என்னுடைய தனிப்பட்ட வேண்டுகோள்.
அன்புடன்
சிவா
// ஆனால் ஒண்று இடண்டு பேரையும்(பாத்திரத்தையும்) காதலிக்க வைச்சு தொலைக்காதீங்க!!! அப்பிடி வந்தாலும் பிரிகிற மாதிரி பாத்துக்குங்க!!!! //
ReplyDeleteவெளங்கீரும். ரொம்ப நல்ல எண்ணம் ஒமக்கு ஒளியினிலே.
ஒளியினிலே உங்களுக்கு ஏதாவது மந்திரம் தந்திரம் தெரியுமா? பின்னூறீங்க. அந்த மாதிரி தான் ஆனால் அந்த மாதிரி கிடையாது. :-)
ReplyDeleteசிவா என்னத்தை சொல்ல இன்னும் ஒரு அத்தியாயத்தில் முடியக்கூடிய கதை கிடையாது அது. ஆனாலும் முடிந்த அளவு இந்த வாரத்திற்க்குள் முடிக்கப்பார்க்கிறேன்.
ReplyDeleteஇராகவன் தான் நம்மப்பக்கம்(நம்மப்பக்கம் தானே???).
ReplyDelete