இந்தப் பதிவு ஒரு விழிப்புணர்வு பதிவே, சமுதாயத்தில் இருக்கும் தீய விஷயங்களில் இருந்து உங்களை நீங்களே பாதுகாத்துக் கொள்வதற்கு ஒரு வழிமுறையை என்னால் ஆனவரை தர முயன்றிருக்கிறேன். எந்த தவறான நோக்கத்திற்காகவும் இந்தப் பதிவு கிடையாது. முழுக்க முழுக்க விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவே இந்தப் பதிவு.
எப்பொழுதுமே ஒரு நல்ல விஷயத்தை தவறான வழியில் பயன்படுத்தக் கூடிய வழிகள் பல சமயங்களில் அமைந்துவிடுகின்றன. உதாரணமாக நம்முடைய வலைப்பதிவுகளையே எடுத்துக் கொள்ளலாம். நல்ல விஷயங்களை எழுதுவதற்காக ஏற்படுத்தப்பட்ட ஒன்று தான் இந்த ப்ளோக்கர்கள் எனப்படும் வலைப்பதிவுகள். ஆனால் இதில் இருக்கும் சில ஓட்டைகளை பயன்படுத்தி குளிர்காயும் மக்கள் இருப்பதைப் போலத்தான் இந்த ஹாக்கர்கள் என்ற மக்களும்.
இதன் வரலாறு சொல்லப்போனால் சுமார் நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டு இன்றுவரை தொடர்ந்து வருகிறது. யார் இந்த மக்கள், ஏன் இப்படிச் செய்கிறார்கள், எப்படி இவர்களால் இது முடிகிறது. போன்ற கேள்விகள் நம்மில் பலருக்கு எழுவதற்கு வாய்பிருக்கிறது.
நம்மைப் போலவே இரண்டு கைகள், இரண்டு கால்கள் கொண்ட சாதாரணமான மனிதர்கள் தான் இவர்களும் ஆனால் கொஞ்சம் புத்திசாலிகள். ஒரு நல்ல விஷயத்தை எப்படி தவறாக பயன்படுத்தலாம் என அறிந்து கொள்வதையே வாழ்நாளின் நோக்கமாக கொண்டவர்கள். இது ஒரு விதமான நோய்னு கூட சொல்லலாம். அடுத்தவர்களுடைய பர்ஸனல் விஷயங்களை தெரிந்து கொள்ள விரும்புவதில் இருந்து, தொடங்கி கொஞ்சம் கொஞ்சமாக அதன் பரப்பளவு அதிகரித்து அடுத்த நாட்டின் பர்ஸனல் விஷயங்களை நோண்டுவது வரை செல்கிறது. இது போன்ற விஷயம் இவர்களால் மட்டுமல்ல நினைத்தால் எல்லோராலும் செய்ய முடிந்ததே.
இதை சொல்வது ஒரே ஒரு காரணத்திற்காகத்தான் அதாவது அவர்கள் நம்மைவிட அதிபுத்திசாலிகள் எல்லாம் ஒன்றும் கிடையாது. நாம் நம்முடைய திறமையை நல்ல வழியில் பயன்படுத்துகிறோம் அவர்கள் தவறான வழியில் பயன்படுத்துகிறார்கள் அவ்வளவே.
இந்தப் பதிவெழுதுவதின் முக்கிய நோக்கமே எனக்குத் தெரிந்த இப்படியெல்லாம் உங்களின் பணத்தை, ஐடென்டிடியை, தவறான வழியில் பயன்படுத்தப்படுவதை தடுக்கவே. இன்னும் சில முறைகளை உங்களுக்கு தெரியப்படுத்தி, நீங்கள் இது போன்றதான ஒரு தாக்குதலில் இருந்து தப்பித்துக் கொள்ளும் முறைகளை சொல்ல நினைக்கிறேன்.
முன்பே சொன்னது போல், இந்தப்பதிவின் முக்கிய நோக்கமே, ஹாக்கர்களுக்கு எதிராக உங்களை பாதுகாக்க சில வழிமுறைகளை சொல்வதே. வேறொன்றுமில்லை. இப்பொழுது இந்தத் துறை(Ethical Hacking) கூட சாதாரணமானது கிடையாது. தனக்கென்று தனிப்பெரும் இயக்கமாக உருவாகி வருகிறது.
எத்திகல் ஹாக்கிங் எனப்படும் உங்கள் கணிணியோ இல்லை உங்கள் தகவலோ திருடப்படாமல் இருப்பதற்கான வழிகள் பல இடங்களில் கிடைக்கத்தான் செய்கிறது. ஹாக்கிங்க வளர்ந்து வரும் நிலையில் எத்திகல் ஹாக்கிங் எனப்படும் அதனை தடுக்கும் முறையும் தீவிரமாக வளர்ந்து வருகிறது.
முதலில் எங்கிருந்து பிரச்சனை ஆரம்பிக்கிறது எனத் தௌiவாக சொல்லிவிடுகிறேன். அதாவது நீங்கள் இன்டர்நெட் மையத்திலிருந்து இணையத்தை உபயோகப்படுத்துபவராக இருந்தால், உங்கள் தகவல்கள் பாதுகாப்பாக இருப்பதற்கான வாய்ப்புக்கள் 5% க்கும் குறைவே.
எப்படியென்று ஒரு உதாரணத்தைப் பார்ப்போம், நீங்கள் ப்ரௌசிங்க சென்டரில் உபயோகப்படுத்தும் கணிணிகளில் சில மென்பொருள்களை பதிந்துவிட முடியும், அதாவது உங்கள் கண்ணுக்கு தெரியாமல் அந்த மென்பொருள் நீங்கள் எழுதும் ஒவ்வொரு எழுத்தையும் தன்னகத்தே சேமித்துக் கொள்ளும்.
இது ஒரு பேக்ரவுண்ட் ப்ராஸஸிங் மாதிரியானது. அதாவது அந்த மென்பொருள் ஓடிக்கொண்டிருப்பது உங்களுக்கு சில சமயங்களில் அந்த ப்ரௌசிங் சென்டர் உரிமையாளருக்கோ கூட தெரியாமல் இருக்கலாம். அந்த மென்பொருளின் முக்கிய வேலையே நீங்கள் தட்டச்சும் ஒவ்வொரு வார்த்தையும் சேகரித்து வைப்பது. அதுமட்டுமில்லாமல் ஒரு குறிப்பிட்ட நேர இடைவெளியில் உங்கள் கணிணியின் திரையை புகைப்படம் எடுத்து சேகரித்து வைத்துக் கொள்ளவும் முடியும்.
இதன் விபரீதம் என்னவென்றால், நீங்கள் யாகூவில் உங்கள் பெயரையும் பாஸ்வேர்டையும் அடித்தீர்களேயானால் அது அப்படியே பெயர் மற்றும் பாஸ்வேர்டை சேகரித்துக் கொள்ளும். இதைவிட விபரீதம் என்னவென்றால் நீங்கள் கிரெடிட் கார்டை உபயோகிப்பாளராக இருந்தால், உங்கள் கார்டைப் பற்றிய அத்துனை தகவல்களையும் அவர்கள் சேகரித்து வைத்துக் கொள்ள முடியும்.
எனக்குத் தெரிந்த ஒரு கம்பெனியில் ஒரு விபரீத ஆசாமி இப்படி எல்லா கணிணிகளிலும் பதிந்து விட, அத்துனை பேரின் விவரங்களும் அவனுக்கு கிடைத்துக் கொண்டிருந்திருக்கிறது. பின்னர் அவனைப் பிடித்து போலீஸில் விட்டுவிட்டதாக நண்பர் சொன்னது.
அதனால் இன்டர்நெட் ப்ரௌஸிங்க சென்டர்களில் பாதுகாப்பு பூஜ்ஜியம் தான் இதை எப்படி தெரிந்து கொள்வது என்றால் அதிலும் சிக்கல். இதை சாதாரணமாக கண்டுபிடிக்க முடியாது, அந்த கம்பெனியில் பதிக்கப்பட்ட மென்பொருளை கண்டுபிடிக்க வேண்டுமென்றால். கன்ட்ரோல், ஷிப்ட், ஆல்ட், மற்றும் ஒய்யை அழுத்தினால் அந்த மென்பொருளின் திரை வரும் என்று நினைக்கிறேன். இது ஒரு கூட்டு இதைப்போல பல விஷயங்களைப் பயன்படுத்த முடியும். அதனால் மிகவும் அவசியம் என்றால் மட்டும் கடனாளர் அட்டை போன்ற விஷயங்களை அது போன்ற இடங்களிலிருந்து பயன்படுத்துங்கள்.
எனக்குத் தெரிந்த வரை யாகூ மெயிலில் இருக்கும் ஒரே ஒரு பிரச்சனை என்னவென்றால் மற்ற மெயில் அக்கவுண்ட்ஸ் போல் பாஸ்வேர்ட் மறந்து விட்டீர்களேயானால் அதை இன்னொரு மெயில் அக்கவுண்டிற்கு அனுப்ப மாட்டார்கள். உங்களுக்கே கூட தெரிந்திருக்கும் அவர்கள் கேட்கும் தகவல்கள் மிகக் குறைவானவையே, உங்கள் ஐடி, பிறந்தநாள், பின்கோட். பிறகு ஒரு சீக்ரெட் கேள்வி.
இதில் சீக்ரெட் கேள்விக்கான பதிலைத்தவிர மற்ற விஷயங்களை உங்களுக்கு நெருக்கமானவர்கள் அறிந்திருக்கும் வாய்ப்பிருக்கிறது. அதனால் அதனைப்பயன்படுத்தினால் கடைசியில் உங்களைப் பாதுகாக்க இருப்பது சீக்ரெட் கேள்வி மட்டுமே. அதையும் நீங்கள் என்னைப்போல் ப்ளேஸ் ஆப் பர்த்னெல்லாம் சொல்லியிருந்தீர்களோ அவ்வளவுதான் காலி. உங்கள் யாகூ ஐடி உடைக்கப்படுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளது.
அதனால் யாகூ பயன்படுத்தும் மக்கள் தயவுசெய்து சீக்ரெட் கேள்விக்கான பதிலை மற்றவர்களால் கணிக்க முடியாத அளவிற்கு வைத்துக்கொள்ள வேண்டும். இந்தப் பிரச்சனை கூகுளில் கிடையாது. அவர்கள் நீங்கள் முன்னமே சொல்லியிருக்கும் இன்னொரு இடத்திற்குத்தான் பாஸ்வேர்டை அனுப்புவார்கள். அதனால் பிரச்சனை கிடையாது. நான் அறிந்த வரை யாகூவில் இந்த பிரச்சனை உண்டு, நண்பர்களே இனிமேலாவது கவனம்.
நான் இங்கே சொல்லி வருவதெல்லாம் சின்ன சின்ன விஷயங்களைப்பற்றி மட்டுமே. அமேரிக்காவின் பாதுகாப்பை உடைப்பது போன்ற விஷயங்களைப் தடுப்பது என்பதைப் பற்றியெல்லாம் கிடையாது.
மற்றபடிக்கு வீட்டில், கணிணி உபயோகிக்கும் மக்களுக்கு சில எச்சரிக்கைகள்.
உங்கள் கணிணியில், ஆன்ட்டி வைரஸ் ஸாப்ட்வேர்களை அவ்வப்பொழுது சரி பார்த்துக்கொள்வது அவசியம். அவை இருந்தாலும் தேவையற்ற கடிதங்களை திறக்காமல் இருப்பதுவே உத்தமம். நாம் பெரும்பாலும் வீட்டில் உபயோகிக்கும் கணிணி என்பதால் இதை அப்படியே விட்டுவிடுவதுண்டு அது என்னன்னா?
உங்கள் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரரில், டுல்ஸ், இன்டர்நெட் ஆப்ஷன்ஸ், கன்டன்ட், ஆட்டோ கம்ப்ளிட் ஆப்ஷனை கிளிக்குங்கள்(Tools, Internet Options, Content, Auto Complete, UserName and Password on Forms), அதில் யுஸர் நேம் பாஸ்வேர்ட் ஆன் பார்ம்ஸ் என்றொரு செக் பாக்ஸ் பட்டன் இருக்கும் அது பெரும்பாலும் தேர்ந்தெடுக்கப்பட்டே(Selected) இருக்கும் பல கணிணிகளில், என்னுடய கணிணியிலும் கூட, இதன் காரணமாக நமக்கு சில, பல உபயோகங்கள் கிடைக்கலாம்.
உதாரணமாக, நீங்கள் ப்ளாக்கர் அக்கவுண்டிலோ, இல்லை, உங்கள் மெயில் அக்கவுண்டிற்கோ நுழைய பாஸ்வேர்ட் எதுவும் கேட்காமல் அதுவே உள்ளே நுழைந்து விடும். ஆனால் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டியது. உங்கள் யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்ட்களை கணிணி ஒரு இடத்தில் சேமித்து வைக்கும்.
அது போன்ற விஷயங்கள் எதிரிகளில் கைகளில் சிக்கிவிடக்கூடிய அபாயம் இருக்கத்தான் செய்கிறது. அதனால் நீங்கள் ப்ரௌசிங் சென்ட்ரோ இல்லை வீட்டு கணிணியோ அந்த ஆப்ஷனை அன் செலக்ட் பண்ணிவிடுங்கள். இது எப்பொழுதுமே உங்களுக்கு உபயோகமாகயிருக்கும்.
அதைப்போல கடனாளர் அட்டை உபயோகிக்கும் மக்களுக்கு தெரிந்திருக்கும் நீங்கள் கடனாளர் அட்டை விவரங்களை ஒரு பக்கத்தில் தருகிறீர்களென்றால் அந்தப்பக்கம் சாதாரணமான HTTP யாக இல்லாமல், HTTPS பக்கமாக இருக்க வேண்டும். இது முக்கியம் இதுமட்டுமில்லாமல் அவர்கள் ஏதாவது ஒரு தரமான சர்டிபிகேட் வைத்திருப்பவர்களாக இருந்தால் மட்டும் அந்த பக்கத்தை உபயோகியுங்கள்.
சில பொதுவான விஷயங்கள், இணையத்தளம் வைத்திருக்கும் அன்பர்களுக்கு, அதாவது கூகுளின் நன்மைகளைப்பற்றி எல்லோருக்குமே தெரிந்திருக்கும். சில தீமைகளும் இருக்கத்தான் செய்கிறது கூகுளால் அதாவது ஒரு சர்ச் இன் ஜின் வேலை செய்யும் விதம் தெரிந்திருக்கும் நண்பர்களுக்கும் கூகுள் தகவல்களை எப்படி எடுத்து வருகிறது என்பது தெரிந்திருக்கும்.
இதன் போன்ற காரணங்களால், சில தடவைகள், வெப்சைட் தயாரிக்கத்தெரியாத ஆட்களாள் தயாரிக்கப்பட்ட வலைத்தளங்கள் பல மோசமான பாதிப்பை சந்திக்கும். அதாவது கூகுளில் உள்ள சில ஆப்ஷன்களைப் பயன்படுத்தி கூகுளிடும் பொழுது அது, அந்த வெப்சைட்டிற்கான அத்துனை பைல்களையும் தந்துவிடும் வாய்ப்பிருக்கிறது. அதாவது பாதுகாப்பாக வைக்கப்படாத பைல்கள்.
சில தடவைகளில் பாஸ்வேர்ட் சேகரித்து வைத்திருக்கும் பைல்கள் உட்பட, ஆனால் இந்த பைல் பெரும்பாலும் என்கிரிப்ட் செய்யப்பட்டிருக்கும். அப்படி என்கிரிப்ட் செய்யப்படாமல் சேகரித்து வைக்கப்படும் பைல்கள் பாதுகாப்பானது கிடையாது. இது நிச்சயமாக கூகுளில் தவறு கிடையாது. தரமான வெப்சைட் தயாரிக்கத் தெரியாதவர்களின் குறைபாடே.
ஒரு சின்ன உதாரணத்திற்கு பிகேஎஸ்ஸின் இந்தப்பதிவு எல்லோருக்கும் தெரிந்திருக்கும்.
இதில் அவர் இன்னாருடைய முகவரியை கண்டறிந்தேன் என்று சொல்லியிருப்பார். என்னைப் பொறுத்தவரை அவர் இதை தெரிந்து கொள்ள கூகுளைப் பயன்படுத்தியிருக்கலாம் என்று நினைக்கிறேன். (தவறாகவும் இருக்கலாம்.)
மற்றவர்கள் சிலர் அப்பொழுது சில கேள்விகள் கேட்டனர் அதாவது பிகேஎஸ் மற்ற நண்பர்களின் பதிவிலும் இடப்படும் பின்னூட்ட முகவரியையும் கண்டறிந்து சொல்ல வேண்டு என்பதான ஒன்றை.(அப்படிதானென்று நினைக்கிறேன்.)
அப்படிக் கண்டுபிடிக்க முடியாது, பிகேஎஸ் கண்டுபிடித்ததற்கு ஒரு முக்கிய காரணம், ப்ளாக் சிஎம்எஸ்(BLOG CMS) என்று காசி பயன்படுத்தும் ப்ளாக்கர் சேவையை தரும் ஒரு மென்பொருளின் சிறு குறைபாடே. அந்த குறைப்பாட்டின் காரணமாக காசியினுடையது மட்டுமல்ல, ப்ளாக் சிஎம்எஸ்(BLOG CMS) உபயோகப்படுத்தும் அத்துனை நபர்களின் ப்ளாக்குகளிலும் பின்னூட்டமிடும் அத்துனை நபர்களின் ஐபி முகவரியை தெரிந்து கொள்ளமுடியும். பிகேஎஸ் இதை நல்ல விஷயத்திற்காக பயன்படுத்தியிருந்தார்.(என்னைப்பொறுத்தவரை).
அப்படிக் கண்டுபிடிப்பதொன்றும் பெரியவிஷயம் கிடையாதுதான். ஒரே ஒரு சர்ச் கீவேர்டில் கண்டறிந்துவிடலாம்.
site:kasi.thamizmanam.com "promise-this-is-not-a-spam"
இவ்வளவுதான் விஷயம் அந்த கீவேர்ட் தேடித்தரும் பதிவில் இருந்து விஷயத்தை பிகேஎஸ் எடுத்திருக்கலாம்.(இப்போ போட்டுப்பாக்காதீங்க, அந்த பின்னூட்டத்தை காசி அவர்கள் நீக்கிவிட்டார்.) நான் இதை உங்களுக்கு சொல்வதற்கான முக்கியமான காரணம் விழிப்புணர்வு தான், அதாவது இதுபோன்றதொறு இணையத்தளத்தில் உங்களை யாராவது தவறாக சொல்லியிருந்தால் அந்த நபரின் ஐபி முகவரியை இப்படி தெரிந்து கொள்ளலாம் என்பதற்காகத்தான்.
என்னைப்பொறுத்தவரை, டோண்டு அவர்கள் அவருடைய இந்தப் பிரச்சனைக்கு தீர்வுகாண வேண்டும் என நினைத்தால், காசி அவர்களைப்போல், தேசிகன் அவர்களைப்போல், இல்லை இன்னும் சிலரைப்போல் சொந்தமாக வெப்சைட் வைத்துக்கொள்ளலாம். அந்த இணையத்தளத்தில் உங்களிடம் யாரும் வாலாட்ட முடியாது, உங்கள் இணையத்தளத்தை பார்த்தவர்களைபற்றிய எல்லா விவரங்களையும் நீங்கள் பெற்றுக்கொள்ளலாம்.(டோண்டு சார் நீங்க என்ன சொல்றீங்க.) கடைசியாக ஒரு விஷயம் மக்களே பாதுகாப்பா இருங்க. நான் சொன்னதெல்லாம் ரொம்பக்கம்மி இணையத்தில் இன்னும் நிறைய நடக்கிறது. பார்த்து இருந்துகொள்ளுங்கள்.
இன்னும் நிறைய விஷயங்களை சொல்லலாம், ஆனால் நேரப்பிரச்சனை தான் பெரிதாகயிருக்கிறது. இவ்வளவுதான் நான் இந்த ஒரு நல்ல சந்தர்ப்பத்தில் சொல்ல விரும்புவது.
பிகேஎஸ்ஸின் பெயரையும், காசி அவர்களுடைய பெயரையும் ஒரு உதாரணத்திற்காகத்தான் பயன்படுத்தியிருக்கிறேன். தவறிருந்தால் மன்னிக்கவும்.
In Science ஜல்லிஸ் நட்சத்திரம்
நட்சத்திரம் - ஹாக்கிங் பண்றாங்கப்பா ஹாக்கிங்
Posted on Tuesday, February 14, 2006
நட்சத்திரம் - ஹாக்கிங் பண்றாங்கப்பா ஹாக்கிங்
பூனைக்குட்டி
Tuesday, February 14, 2006
பூனைக்குட்டி
Primarily a java programmer, an athiest and a film geek, who loves reading, writing and photography.
Related Articles
Subscribe to:
Post Comments
(
Atom
)
Popular Posts
-
சிறு வயது ஆசைகள் நிறைவேறுவது என்பது எப்பொழுது மகிழ்ச்சியளிக்கக்கூடிய விஷயம் தான். சில ஆசைகள் ரொம்பவும் பெரிய கனவாய் இருந்து பின்னால் நிறைவேற...
-
சிறு வயதிலேயே தோன்றிய ஆசை இப்பொழுது தான் நிறைவேறியிருக்கிறது. அது தமிழில் ஒரு வளைத்தலம் அமைக்க வேண்டுமென்பது. பல முறைகளiல் முயன்று இப்பொழுது...
-
யாரோ கைலிக்குள் கைவிடுவதைப் போலிருந்ததால் திடுக்கிட்டு விழித்துப்பார்த்தேன், ஷைலஜாதான் பெட்ஷீட்டுக்குள் என்னவோ தேடிக்கொண்டிருந்தாள். இதன் மூ...
மோகன்! போட்டவுடனேயே படிச்சாச்சி..பயனுள்ள தகவல்கள்..இந்த காலத்துல எதையுமே நம்ப முடியலை சாமி...$1000 கொடுத்து வாங்கிய கணிணியை பத்து பைசா பெறாத ஒரு வைரஸ் காலி பண்ணிடுது..இந்த வைரஸ் கண்டுபுடிக்கிறவங்களுக்கு காசு கொடுக்கிறதே இந்த Anti-Virus கம்பெனிகள் தானோ?. இதை பற்றியும் பிறகு சொல்லுங்களேன்..
ReplyDeleteஅன்புடன்,
சிவா
நன்றி மோகன்தாஸ்.. ஆசிரியரைப் போல் நன்றாக வகுப்பு எடுத்து இருக்கிறீர்கள்..என் போன்ற சாதாரணத் தொண்டர்களுக்கு மிகவும் பயனுள்ள பதிவு.
ReplyDeleteமிக நல்ல பதிவு. இதற்கென தனியாகவே ஒரு பதிவு ஆரம்பிக்கலாம்.
ReplyDeleteநான் ஒரு நண்பரின் ஆலோசனைப்படி password டைப் செய்யும்போது manian என்றால் ian, பிறகு <- கீ மூலம்முதல் எழுத்துக்கு நகர்ந்து மற்ற man அடிக்கிறேன். Navigation keysஐ keylogger capture செய்யமுடியாது என்றார். இது சரியா ?
"என்னைப் பொருத்தவரை, டோண்டு அவர்கள் அவருடைய இந்தப் பிரச்சனைக்கு தீர்வுகாண வேண்டும் என நினைத்தால், காசி அவர்களைப்போல், தேசிகன் அவர்களைப்போல், இல்லை இன்னும் சிலரைப்போல் சொந்தமாக வெப்சைட் வைத்துக்கொள்ளலாம். அந்த இணையத்தளத்தில் உங்களிடம் யாரும் வாலாட்ட முடியாது, உங்கள் இணையத்தளத்தை பார்த்தவர்களைபற்றிய எல்லா விவரங்களையும் நீங்கள் பெற்றுக்கொள்ளலாம்.(டோண்டு சார் நீங்க என்ன சொல்றீங்க.)"
ReplyDeleteநன்றி மோகன்தாஸ் அவர்களே. என்னுடைய பிரச்சினை ரொம்ப எளிமையானது. எனது ப்ளாக்கர் பதிவு பாதுகாப்புடனேயே இருக்கிறது. என்னுடைய கடவுச் சொல்லை நான் ரகசியமாக வைத்திருக்கும் வரை யாரும் உள்ளே அத்து மீறிப் பிரவேசித்து விட முடியாது. எனக்கு வரும் வெளிப்படையாக ஆபாசமாகத் தெரியும் பின்னூட்டங்களை நான் மட்டுறுத்தல் செய்து தடுத்து விடுகிறேன். எனக்கு வரும் தனிப்பட்ட மின்னஞ்சல்களும் அவ்வாறே அகற்றப்படுகின்றன. ஆனால் அழிக்கப்படாது ஜிமெயில் ஆர்கைவ்ஸில் சேமிக்கப்படுத்தப்படுகின்றன.
உண்மையான பிரச்சினை என் பெயரில் வெளியாகும் போலிப் பின்னூட்டங்களே. அவை மற்ற ப்ளாக்கர் பதிவுகளில் போடப்படுகின்றன. அதனால்தான் உண்மையான டோண்டுதான் தங்கள் பதிவில் பின்னூட்டமிட்டுள்ளானா என்பதை அறிய சம்பந்தப்பட்ட ப்ளாக்கர்கள் செய்து பார்க்க வேண்டி ய மூன்று சோதனைகளைப் பற்றி நேரம் கிடைக்கும்போதெல்லாம் கூறி வருகிறேன்.
1. டிஸ்ப்ளே பெயர் dondu(#4800161) என்று இருக்கும். கூடவே சம்பந்தப்பட்ட ப்ளாக்கர் பதிவில் ஃபோட்டோ எனேபிள் செய்யப்பட்டிருந்தால் என் படமும் இருக்க வேண்டும்.
2. எலிக்குட்டி சோதனையில் (மவுஸ் ஓவர்) இடது பக்கம் கீழே என்னுடைய சரியான எண்ணான 4800161 தெரிய வேண்டும்.
3. நான் இடும் பின்னூட்டம் நான் குறிப்பிட்டிருக்கும் என்னுடையத் தனிப்பதிவிலும் இடப்பட்டிருக்க வேண்டும்.
அது எல்லாம் செய்தும் புதிய ப்ளாக்கர்களுக்கு அவை தெரியாது குழப்பங்கள் ஏற்பட்டன. ஆனால் நல்ல வேளையாக மட்டுறுத்தல் பொதுவாக்கப்பட்டதில் பிரச்சினை கிட்டத்தட்ட ஒழிந்தது.
இப்பின்னூட்டமும் போலி டோண்டுவைப் பற்றிய என்னுடைய இப்பதிவில் பின்னூட்டமாக நகலிடப்படும். பார்க்க: http://dondu.blogspot.com/2006/01/blog-post_21.html
அன்புடன்,
டோண்டு ராகவன்
இந்தப் பதிவு கம்ப்யூட்டர் துறையை சார்ந்தவர்களுக்கு கிடையாதுதான். சாதாரணமான உபயோகிப்பாளர்களுக்கு. மற்றபடிக்கு ஆன்டி வைரஸ் ஆட்கள் வைரஸ் வெளியிட உதவுகிறார்களாயென்று அவ்வளவு எளிதாக சொல்லிவிடமுடியாது சிவா. இருக்கலாம் இல்லாமலும் இருக்கலாம்.
ReplyDeleteஆசிரியர் மாதிரியெல்லாம் கிடையாதுங்க, சாதாரண மாணவன் தான் நானும். ஏதோ என்னால் முடிந்தது அவ்வளவே. புரிந்தது என்றால் சந்தோஷமே தெருத்தொண்டரே.
ReplyDeleteஉண்மைதான் மணியன் நேவிகேஷன் கீக்களை கண்டறிய முடியாது தான். ஆனால் இதையே வேலையாக செய்யும் நபர்கள். காம்பினேஷன்களை போட்டுப்பார்த்து விடும் சந்தர்ப்பம் இருக்கிறது. 100% செக்யூர்ட் கிடையாது.
ReplyDeleteநான் முக்கியமான அந்தப் பிரச்சனையை தொடவில்லை சார். அப்படி இழிவான பின்னூட்டம் ஆட்களை முகவரிகளுடன் தெரிந்து கொள்ளலாம் இல்லையா, டெலிட்டிடும் முன்னர் தெரிந்து கொள்வதும் வெப்சைட் வைத்திருந்தால் சுலபமே. தேர்ட் பார்ட்டி டிராக்கர்கள் வைத்து கண்டுபிடிக்க முடியும் தான். ஆனால் அதை விட அதிக விவரங்களை உங்கள் சொந்த வலைத்தளத்தின் மூலம் மிக எளிதாக கண்டறியலாம் இல்லையா.
ReplyDeleteமோகன்தாஸ்,
ReplyDeleteஅற்புதமான பயனுள்ள ஆக்கம். அனைவரும் படித்துத் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்.
http://spywares.biz/ixpe/hack-stuff/fear_lyden_pass_archive/PASSES_01.04.2005.htm
பாருங்கள் மேல் உள்ள இணைப்பை.
அன்புள்ள மோஹன்தாஸ்... தமிழ்மண நட்சத்திரங்களிலேயே மிகவும் வித்தியாசமான நட்சத்திரப்பதிவு.. வாழ்த்துக்கள்...
ReplyDeleteஆனால் ஹாக்கர்கள் என்றாலே தீயவர்கள், தவறான தேவைக்காக கணினி தகவல்களை திருடுபவர்கள், தவறான நோக்கத்துக்காக
நெட்வர்க்கை உடைத்து நுழைபவர்கள் என்று தவறான நோக்கத்திற்கானவர்கள் என்று குறிப்பிட்டிருப்பது தவறான புரிதல் என்று அஞ்சுகின்றேன்...
ஹாக்கர்கள் என்பவர்கள் என்றாலே தப்பானவர்கள் என்பது தவறு, உண்மையில் ஹாக்கர் என்பதற்கான அர்த்தம்.. கணினி ப்ரொக்ராமிங்கிலும், பாதுகாப்பிலும் வல்லுனர்கள், இவர்கள் நெட்வர்க்கை உடைத்தார்களெனில் அதில் உள்ள குளறுபடிகளையும் , பாதுகாப்பு ஓட்டைகளையும் காமிக்கவே என்று அர்த்தம்..
மற்றவர்கள் தகவலைத்திருடும் போன்ற தவறான நோக்கங்களுக்காக கணினியில் செயல்படுபவர்கள் க்ராக்கர்கள் என்றே துறை வல்லுனர்களால் அறியப்பட்டனர்,
பின்னாளில் கணினி துறையில் இல்லாத பொதுமக்களும், பத்திரிக்கைகளும் ஹாக்கர் என்ற சொல்லுக்கு -ve ஆன ஒரு அர்த்தம் கொண்டுவந்தனர்,
மேலும் விபரங்களுக்கு கிழே உள்ள சுட்டிகளை பாருங்கள்
க்ராக்கர்கள் என்பவர் யார் ?
http://www.google.co.in/search?hl=en&q=define%3Acracker&meta=
ஹாக்கர்கள் என்பவர் யார் ?
http://www.google.co.in/search?hl=en&q=define%3Ahacker&meta=
http://en.wikipedia.org/wiki/Hacker
ஹாக்கர்கள் மேலும் தகவல்கள்:
http://en.wikipedia.org/wiki/Hacker_%28disambiguation%29
பி.கு:
உங்கள் பதிவில் குறை கூறுவது என் நோக்கமல்ல, தகவல் தவறாக அனைவருக்கும் சேரக்கூடாது என்றே... தவறிருப்பின் மன்னிப்பீர்.. இப்படிப்பட்ட வித்தியாசமான உபயோகமான பதிவுகள் தொடரட்டும்
மூர்த்தி உங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி.
ReplyDeleteஉரல்களை நேரம் கிடைக்கும் பொழுது நிச்சயம் பார்வையிடுகிறேன்.
யாத்ரீகன் இதைப்பற்றியும் விளக்கவேண்டுமென்று நினைத்திருந்தேன். ஒவ்வொரு கான்டெஸ்டில் ஒவ்வொரு மீனிங் தரும் வார்த்தை அது. சொல்லப்போனால் பிளாக் ஹாட் ஹாக்கர் என்றுதான் குறிப்பிட்டிருக்க வேண்டும். ஆனால் என்னைப் பொறுத்த வரை நான் குறிப்பிட்டிருந்தது தங்களுடைய திறமையை தவறாக பயன்படுத்தும் மக்களைத் தான்.
ReplyDeleteஉண்மையில் அதிக குழப்பம் ஏற்படுத்த வேண்டாம் என்பது தான் எப்பொழுதுமே என் எண்ணம். வேறொன்றுமில்லை. உங்களுக்காக சில ரெபரன்ஸ்.
From wikipedia,
//In computer programming, 'hacker' means a programmer who hacks or reaches a goal by employing a series of modifications to exploit or extend existing code or resources. In computer security, hacker translates to a person able to exploit a system or gain unauthorized access through skill and tactics. This usually refers to a black hat hacker. //
some reference available for this search key words. :-)
hacking history,
http://www.roadnews.com/html/Articles/historyofhacking.htm
http://archives.cnn.com/2001/TECH/internet/11/19/hack.history.idg/
அதுமட்டுமல்லாமல், அந்த மாதிரியான மக்களை, ஹாக்கர்கள் என்று சொல்வது அவ்வளவு தவறாகவும் தெரியவில்லை. சாதாரணமான மக்கள் பயன்படுத்தும் ஒரு டெர்ம் தான் ஹாக்கர் என்பது.
மற்றபடிக்கு சுட்டிக்காட்டியதற்கு நன்றி யாத்ரீகன்.
venkat's take on this topic.
ReplyDeletehttp://www.domesticatedonion.net/blog/?item=81
I loved his thamiz word for hackers -
கொந்தர்கள் - hackers
பிளவர்கள் - crackers
abt blog:cms - the problem still persists. i dont know how much this(ur post) would be appreciated by the blog:cms bloggers like desikan and venkat.
having said that, i should confess that the data is still available. And I fould a lot of IP addresses that showed how anand aka chinnavan aka kingk aka maasilan aka (i dont know what else) has abused the blog he was commenting in.
-Mathy
>>> அவ்வளவு தவறாகவும் தெரியவில்லை
ReplyDeleteஹைய்யோ அப்படி சொல்லீறாதீங்க... சில லினக்ஸ் குழுமத்தில் ஹாக்கர்கள் என்று தவறாக குறிப்பிட்டதற்கு, தமிழ்மண ரேஞ்சுக்கு அடிதடி நடந்திருக்கு ;-)
நல்ல கட்டுரை. Phishing மோசடியைப் பற்றிய எச்சரிக்கையையும் வழங்கியிருக்கலாம். இன்று பலரும் இணையத்தின் வாயிலாகத் தங்கள் வங்கிக் கணக்குகளை நிர்வகிக்கின்றனர். phishing பற்றிய எச்சரிக்கை / விழிப்புணர்வு இல்லாவிட்டால், பயனர்கள் மோசடித் தளங்களுக்கு இட்டுச் செல்லப்பட்டு, அங்கு தங்கள் ரகசிய விவரங்களைப் பறிகொடுக்கும் வாய்ப்புள்ளது.
ReplyDeleteமதி நானும் என் வலைத்தளத்தை பார்வையிடும் ஐபியை அறிந்து கொண்டு அந்த நபர் தெரிந்தவரா என பார்ப்பதற்கு இது போன்ற வலைத்தளத்தை உபயோகிப்பதுண்டு. இதன் காரணமாக தமிழ்மணத்தின் வலைபதிவர் நிறைய பேரின் பெயர், ஐபி என்ற டேட்டா பேஸ் என்னிடம் உண்டு. :-). இதில் சொல்வதற்கு என்ன இருக்கிறது என்று தெரியவில்லை, கூகுளின் இன்னும் பல சர்ச் ஆப்ஷன்களைப் பற்றி எழுதினால் பிடித்துக்கொண்டு போய்விடுவார்கள் என்பதால் இத்துடன் நிறுத்திக்கொண்டேன்.
ReplyDeleteயாத்ரீகன் மீண்டும் சொல்கிறேன். சாதாரண வலைபதிவருக்கு புரியவேண்டுமென்று தான் எழுதினேன்.
ReplyDeleteமக்களுக்கு இந்த சொல் சீக்கிரம் சென்றடையும் என்றும் நினைத்தேன். அவ்வளவே.
வாய்ஸ் ஆன் விங்ஸ், இன்னும் நிறைய விஷயங்கள் எழுத இருக்கின்றன. நேரம் சுத்தமாகயில்லை. உங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி.
ReplyDeleteஎளிய முறையில் புரியவைக்க வேண்டும் என்றால்...........
ReplyDeleteஹாக்கர்கள்:- நடுவீட்டில் நின்று கொண்டு 'இதோ பார் உன் வீட்டினை உடைத்து விட்டேன். பாதுகாப்பை பலப்படுத்து!' என்பது போலச் சொல்வது.
க்ராக்கர்கள்:-கன்னக்கோல் வைத்து திருடிவிட்டு வந்த சுவடு தெரியாமல் செல்பவர்கள். சில வேளைகளில் சுவடும் தெரியும். ஒரு மாதிரியான கிறுக்கர்கள் என்றும் சொல்லலாம்.
அன்பு மோகன்தாஸ்,
ReplyDeleteமிகவும் பயனான விழிப்புனர்வை வழங்கியுள்ளீகள்!
சிவா கேட்ட கேள்வியை நானும் சோசித்ததுண்டு. அப்படி இருக்க வாய்ப்புள்ளதோ?
அன்புடன்,
எல்.ஏ.வாசுதேவன்.
பயனுள்ள பதிவு.
ReplyDeleteநல்ல கருத்துக்கள்.
நன்றி.
மூர்த்தி உங்களின் ஆதரவிற்கு நன்றி.
ReplyDeleteவாசுதேவன், அது மாதிரி எல்லாம் அவ்வளவு சுலபமாய்ச் சொல்லிவிடமுடியாதுங்க. சிவாவிற்கும் இதே பதிலை சொல்லியதாகத்தான் ஞாபகம்.
ReplyDeleteபச்சோந்தி, உங்களின் வருகைக்கும் ஆதரவிற்கும் நன்றிகள் பல.
ReplyDeleteஎனது மகன் படிக்கும் யூனிவர்சிட்டியில் ஒரு புரபசர் தேர்வுக்கான வினாக்களை அவரது வலைத்தளத்தில் சேமித்து வைக்க சில மாணவர்கள் கூகுளின் உதவியுடன் ஒரு செமஸ்டர் முழுவதும் அதைக் கண்டு பிடித்து அதிக மார்க் வாங்கி விட்டார்கள்.
ReplyDeleteNice Post.
ReplyDeleteKonjam puriyathunu nenaikiren.
Ok. I Understand.