நண்பரொருவர் முன்னாலேர்ந்து புலம்பிக்கொண்டிருந்தார். இவனுங்க பின்னூட்டத்தில் போடுற அலப்பறை தாங்க முடியலை. இதுக்கு ஏதாச்சும் செஞ்சே ஆகணும். அவரே கேட்டார் ஏன் இந்த கொலைவெறி; என் பதிவுக்குத் தான் அதிகப் பின்னூட்டம் கிடைச்சுதுன்னு புலம்பத்தானே அதை முறியடிச்சாவணும். ஏதாவது பண்றேன்னு சொல்லிக்கொண்டேயிருந்தார்.
இப்ப மக்களே நான் கொஞ்ச நாளைக்கு முன்னால் போட்ட இந்த "பனிக்காலமும் பாச்சுலர் வாழ்க்கையும்" என்ற பதிவை அவரே தேர்ந்தெடுத்து ஆயிரம் பின்னூட்டம் போட்டுக் காண்பிக்கவா என்று சொல்லி; கரெக்டா பத்தே நிமிஷத்தில் "1000" பின்னூட்டம் போட்டு பின்னிட்டார்.(ஆரம்பித்தது 4.51 முடித்தது 5.01 ஏது எப்படின்னு பின்னாடி சொல்றேன்னு அவரே சொன்னார்.
1) நான் முதல்ல நீ முதல்ல பின்னூட்டங்களுக்கும் - டெஸ்டிங் பின்னூட்டங்களுக்கும் எந்த வித்தியாசமும் கிடையாதுன்னு சொன்னார்.
2) இது தொடர்ச்சியாக ஒரே விஷயத்தைச் சொல்வதாகவும். வேண்டுமென்றால் உலகப் புகழ்பெற்ற "கோட்"கள் ஆயிரத்தை நாளை மற்றொரு பதிவில் போடுவதாகவும் சொல்லியிருக்கிறார்.
3) இதுதான் அதிகப் பின்னூட்டம் என்று சொன்ன அவர், இல்லை இன்னும் போடவேண்டுமென்றால் நம்பரை மட்டும் சொல்லச் சொன்னார். (நீங்க உதவுங்க மக்களே!)
4) யாருக்கும் இதுமாதிரி, புகழ்பெற்ற கோட்டுகள் ஆயிரமோ, ஆயிரம் வார்த்தைகள் விளக்கங்களுடனோ வேண்டுமென்றால் மெய்ல் அனுப்பச் சொன்னார்.
PS: அந்த நண்பர் என்னுடைய ஸ்ப்லிட் பர்ஸனாலிட்டி என்று வரும் வதந்திகளை நம்பவேண்டாம்.
ஆயிரம் பின்னூட்டம் கண்ட 'நச்' பதிவு
பூனைக்குட்டி
Wednesday, May 30, 2007
பூனைக்குட்டி
Primarily a java programmer, an athiest and a film geek, who loves reading, writing and photography.
Related Articles
Subscribe to:
Post Comments
(
Atom
)
Popular Posts
-
"இதுக்கு முன்னாடி மணாலிக்கு போயிருக்கிறியா மீனா?" ரவி தன் மனைவியிடம் கேட்டதும், அவள், "இல்லைங்க. நான் ஊட்டி, கொடைக்கானல் தான்...
-
"கருவினிலே என்னை உருவாக்கினாயே தாயே, ஆயிரம் பேர் அமர்ந்திருக்கும் சபை நடுவே நின்று பேசும் அளவிற்கு என்னை ஆளாக்கினாயே உன்னை வணங்கி என் உ...
-
வாங்க என்ன வெளியிலேயே நின்னுட்டீங்க, உள்ள வாங்க என்னடா இந்த வீடு கூட அமைதியா இருக்கேன்னு பார்க்கிறீங்களா? ம்ஹும் என்ன செய்றது அப்படியாய்...
சரியான பதிலடி. கைகொடுங்க தல. இனிமேலாவது இவனுங்க பண்ணுற குறையுதான்னு பார்ப்போம்.
ReplyDeleteஎன்ன மேனியாவோ இந்த பின்னூட்ட நம்பர்ல...
ReplyDeleteஅதுசரி, "பனிக்காலமும் பாச்சுலர் வாழ்க்கையும்" டைட்டில் நல்லாருக்கு கொஞ்சம் சுட்டி குடுக்கறது?
//4) யாருக்கும் இதுமாதிரி, புகழ்பெற்ற கோட்டுகள் ஆயிரமோ, ஆயிரம் வார்த்தைகள் விளக்கங்களுடனோ வேண்டுமென்றால் மெய்ல் அனுப்பச் சொன்னார்.
ReplyDeleteஆமாம், Data Table-ல வச்சுக்கலாம் :-)
http://imohandoss.blogspot.com/2005/12/blog-post_15.html
ReplyDeleteஅனானிமஸ் இதுதான் உர்ல்.
ப்ரசன்னா ஆமாம். இல்லாவிட்டால் இண்டர்நெட்டில் இருந்து எக்ஸ்டர்னலாக எடுக்கலாம்.
அனானிமஸ் இந்த விளையாட்டு வேண்டாமே.
ReplyDeleteஎனக்கு இந்த பின்னூட்ட விளையாட்டில் ஆர்வம் கிடையாது; அது சும்மா நக்கல் பண்றதுக்கு அவ்வளவு தான்.
நீங்களும் சொல்லுங்க ஏதாச்சும்
ReplyDelete///
எனக்கும்
பின்னூட்ட விளையாட்டில் அவ்வளவு ஆர்வம் கிடையாது என்ற பொய்யை அலுத்தமாக சொல்லி கொல்கிறேன்
:)
M