நான் தங்கியிருந்த காந்திபுரத்திலிருந்து சந்திப்பு நடைபெற்ற RS-புரம் எப்படி வரவேண்டும். ஆட்டோவிற்கு எவ்வளவு கொடுக்கலாம் என்றெல்லாம் செல்லாவிடம் ஞாயிறு காலை 9 மணிக்கே(!!!) போன் செய்து கேட்டுக்கொண்டு தான் கிளம்பினேன். எனக்கு இரண்டாவது ப்ளோரில் நடப்பதாக தெரியாததாலும், கௌதம் ஆர்கெட் ஒன்பதரை மணிக்கு ஆளோருவரும் உள்ளிருப்பதைப் போன்ற தோற்றத்தை தராததாலும்; பக்கத்தில் இருந்த பேங்கிற்கு சென்று ஏடிஎம்-ல் காசை உருவி(எனக்கு முன்னர் காசை எடுத்துவிட்டு சென்ற நபர் கார்டை விட்டுவிட்டுச் சென்றிருக்க - என்னிடம் வேறு டிரான்ஸாக்ஷன் செய்யணுமா என்று அந்த நபரின் கார்டில் கேட்டதும். உடனடியாக புரிந்துகொண்டு கார்டை எடுத்துக்கொண்டு வெளியில் வந்து - அந்த நபரிடம் கொடுத்து "புண்ணியம்" சேர்த்துக் கொண்டேன்)வந்தேன்.
பின்னர் இன்னொரு தடவை அந்த பில்டிங்கின் எதிரில் வந்து பார்த்துவிட்டு இன்னமும் ஆள் நடமாட்டம் இல்லாததால் - மேங்கோ ஜூஸ் ஒன்றை பக்கத்தில் இருந்த பழமுதிர்ச் சோலையில் குடித்துவிட்டு; இனி வேலைக்காகாது என்று செல்லாவிற்கு தொலைபேச. அவர் மேலை போங்காணும் - கீழே நின்று என்னத்த பராக் பார்க்கிறீர் என்று சொன்னதும் தான் 2ஆவது ப்ளோருக்கு வந்தேன். எனக்கு முன்பே மா.சிவக்குமார், பாலபாரதி, வினையூக்கி, உண்மைத் தமிழன், சென்ஷி, எ-கலப்பை முகுந்த் அப்புறம் இன்னும் ஒருவர் பெயர் நினைவில் வரமறுக்கிறது, கண்ணாடி போட்டிருந்தவர் கவிதை எழுதுபவராக தன்னை அறிமுகப் படுத்திக் கொண்டவர், போன்றவர்கள் இருந்தனர்.
வழக்கம் போல் நான் தான் மோகன் தாஸ் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு உட்கார்ந்தேன்; அந்தச் சமயத்தில் பார்ட்னர்ஷிப் கொடுத்தது சென்ஷி. தான் வலையுலகத்திற்கு எப்படி வர நேர்ந்தது என்பதைப் பற்றி நாங்கள் இருவரும் பேசிக்கொண்டிருந்தோம். அப்பொழுது தான் பாலா, செல்லாவிற்கு உடல்நலம் சரியில்லாத காரணத்தால் வரமுடியாத நிலையில் இருப்பதை சொன்னார். பின்னர் உதயசெல்வி அவரது கணவருடன் வந்தார் அவரிடம் நாங்கள் ஒருமுறை அறிமுகம் செய்து கொண்டோம். முகுந்த் நாங்கள் ஒவ்வொருவரும் திரட்டிகளில் இருந்து எதிர்பார்ப்பது எதை என்பதைப் பற்றி கேட்க சொல்லிக்கொண்டிருந்தோம்.
நான் சொன்னது தமிழ்மணத்தின் ஒரு விண்டோ என் ஸ்கிரீனில் எப்பொழுதும் இருக்குமென்றும் தேன்கூட்டை, அதிகம் பேர் பார்வையிட்ட பதிவுகளைப் பார்ப்பதற்காகவும் கில்லி பரிந்துரைகளை பார்ப்பதற்காகவும் பயன்படுத்துவதாகச் சொன்னேன். சமயங்களில் தமிழ்ப்ளாக்ஸ் பார்ப்பேன் என்றும், பின்னர் நானே உருவாக்கிக்கொண்ட iGoogle பற்றிச் சொல்லி அது எப்படி எனக்குப் பயன்படுவதாகச் சொன்னேன்.
பின்னர் ஒன்றிரண்டாய் ஆட்கள் வந்து சேர்ந்தார்கள். சுப்பையா அவர்களும் கோவை ரவி அவர்களும் வந்ததும் சூடுபிடித்தது என்று நிச்சயமாய்ச் சொல்லலாம். அவர் தான் எப்படி பதிவெழுத வந்தது எப்படி இருந்தது தன் அனுபவம் எப்படி படிப்படியாய் மக்களுக்கு ஏற்றவாறு தன்னுடைய பதிவை மாற்றிக்கொண்டார் என்பதைப் பற்றி கொஞ்சம் பெரிதாய்(;)) தன்னுடைய தெளிவான குரலில் சொன்னார். இந்தச் சமயத்தில் தான் பாமரனும் அவருடைய நண்பர்களும்(செகுவாரா அவருடைய மகன் - இதை நான் படித்திருக்கிறேன்) வந்தார்கள். அதில் ஒருவர் செகுவாராவின் படத்தை கலரில் கருப்பு பேக்ரவுண்டில் போட்டிருந்தார் நன்றாகயிருந்தது.(பின்ன பொண்ணுங்க மட்டும் தான் மத்தவங்க போட்டிருந்த புடவை நன்றாகயிருந்தது என்று எழுதணுமா என்ன?) ஆனால் எனக்கு நான் ப்ரொபைலில் போட்டிருக்கும் செகுவாரா படம் போட்ட டீஷர்ட் வாங்கத்தான் ஆசை. இங்கே கருடா மாலிலும், போரமிலும்(Forum) அப்படி செய்து தருபவர்கள் இருக்கிறார்கள்; செய்யணும்.
பாமரன் வந்ததும் இசைக்கலைஞர் ஆறுமுகம் வந்தார் என்று நினைக்கிறேன். பின்னர் பாமரன் மெதுவாக பாலபாரதியிடம் ஆரம்பிக்கலாமா என்று கேட்டுக் கொண்டிருந்தார். ஒரு ப்ரொபஷ்னலான உரையாடலுக்கு முன்னர் ஆறுமுகம் அய்யா; உட்கார்ந்ததுமே தன்னை அறிமுகப்படுத்துக் கொண்டு பேச ஆரம்பித்தது நன்றாகயிருந்தது. நான் ஆறுமுகம் அவர்களுடனான பாமரன் அவர்களின் உரையாடலுக்குப் பிறகு பாமரன் அவர்களிடம், நீங்கள் அவரிடம் வேறுமாதிரியான கேள்விகள் கேட்டு வேறுமாதிரியான அனுபவங்களை சொல்லச் சொல்லியிருக்க வேண்டும் என்று சொன்னேன். ஆறுமுகம் அய்யா தன்னுடைய ப்ரொபஷ்னல் உரையாடலில் "ராமன்"ஐ பற்றி பேச ஆரம்பித்ததுமே ராஜா வனஜ் எஸ்கேப் ஆகிவிட்டிருந்தார். இதை பக்கத்தில் உட்கார்ந்திருந்த சென்ஷியிடம் சொல்லிக் காட்டினேன்.
என்னால் ஒருவகையில் ஆறுமுகம் அவர்கள் வைத்த வாதத்தை தவறாகச் சொல்ல முடியவில்லை ஏனென்றால், அவருடைய வயதை கருத்தில் கொண்டும் அந்தக் காலத்தில் அவர் வாழ்ந்து வந்த முறைகளைக் கொண்டும் என்னால் அவர் சொல்லிய விஷயங்களைப் புரிந்து கொள்ள முடிந்தது. ஏனென்றால் நானும் என் அப்பாவுடன் உரையாடுவதுண்டு ஒரு(number) ஜெனரேஷன் இடைவெளியின் தாக்கமே பெரிதாக இருக்கும் பொழுது. அங்கிருந்த பலருடன் அவருடைய ஜெனரேஷன் இடைவெளி அதிகமாக இருந்திருக்கும். என்னைப் பொறுத்தவரை அவரிடம் வேறு வித்தியாசமான கேள்விகள் கேட்டிருக்கலாம். நான் பாமரனைக் குறை சொல்லவில்லை அவரும் உரையாடல் வேறு திசையை நோக்கிப் போகும் பொழுதெல்லாம் தன்னால் முடிந்தவரை எங்களுக்கு இடையிலான ஜெனரேஷன் கேப்பை சரிசெய்ய முயன்றார். ஆனால் பேட்டி எடுப்பவர்களுக்கான ரெஸ்டிரிக்ஷன்; எனக்கு நான் மாங்காயாக இருப்பதால் புரியுமென்பதால் அக்செப்டட்.
இந்தச் சமயத்தில் தான் பாலபாரதிக்கும், ஆறுமுகம் அவர்களுக்கும், செந்தழல் ரவிக்கும் சுப்பையா அவர்கள் பொன்னாடை போற்றினார். இதுவும் ஒரு ஜெனரேஷன் கேப் தான் நிச்சயமாய், ஆறுமுகம் அய்யா பற்றி தெரியாவிட்டாலும் பாலபாரதியும் ரவியும் இதை எதிர்பார்த்திருக்க(விரும்பியிருக்க) மாட்டார்கள் என்றே நம்புகிறேன். அடுத்த இதைப் போன்ற சந்திப்புக்களில் இந்த விஷயத்தை செய்ய வேண்டாம் என்று இந்தச் சமயத்தில் கேட்டுக் கொள்கிறேன். இதனாலெல்லாம் நான் பாலபாரதியின், ரவியின் சேவைகளை பாராட்ட வேண்டாம் என்று சொல்லவில்லை; இப்படித் தொடர்ந்தால் நாளை ஒரு மீட்டிங்கின் பொழுது ஆளாளுக்கு நான்கைந்து பொன்னாடைகளை எடுத்துவந்து வலைபதிவர் மீட்டிங்கையும் அரசியல் மேடையாக ஆக்கிவிடும் சூழ்நிலை பிரகாசமாகத் தெரிகிறது.
இந்தச் சமயத்தில் தான் ரவி வந்திருந்தார், அப்படியே சுகுணா திவாகரும். இதற்கெல்லாம் கொஞ்சம் முன்னர் லிவிங் ஸ்மைல் வித்யாவும் வந்து சேர்ந்திருந்தார். பின்னர் ரமணி அவர்களின் பின்நவீனத்துவம் பற்றிய பேச்சு; ஓரளவிற்கு இந்தக் காலக் கட்டங்களில், மையம், விளிம்புநிலை, அமேரிக்க மேலாதிக்கம் பற்றி தெளிவாகத் தெரியுமென்று சொல்ல முடியாவிட்டாலும் அப்படின்னா என்ன என்று புரியுமாதலாலும், தீவிரமாக பின்நவீனத்துவத்தைப் பற்றிய என்னுடைய புரிதல்களை அதிகமாக்க வேண்டும் என்றும் நினைத்துக் கொண்டிருப்பதால்; தீவிரமாக கவனிக்கத் தொடங்கினேன்.
என் N73ல் அதனுடைய சில பிரச்சனைகளுக்கு இடையிலும் இவருடைய பின்நவீனத்துவ உரையாடல் ஓரளவிற்கு என்னிடம் MP4 பைலாக இருக்கிறது. செல்லா வீடியோகிராபரை ஏற்பாடு செய்திருந்ததால்; அவர் இதை வலையேற்றுவார் என்று நினைக்கிறேன். அப்படி இல்லை என்றால் என்னிடம் இருப்பதை வலையேற்றுகிறேன். இந்த பின்நவீனத்துவ உரையாடலைப் பற்றி சுகுணா திவாகர் ஏற்கனவே எழுதிவிட்டார். அதனால் அதற்குள் அத்தனை தீவிரமாகப் போகவில்லை.
நிறைய விஷயங்களைப் பற்றிய அறிமுகம் கிடைத்தாலும் 'பின்நவீனத்துவத்திற்கான' அறிமுகமாக இந்த உரையாடலை வைத்துக் கொள்ளலாம். அதுவும் கடைசியில் அவர் நவீனத்துவத்தின் பிரச்சனைகளையும் அது எப்படி சரியில்லை என்றும் சொன்னார் ஆனால் பின்நவீனத்துவம் எப்படி இந்தப் பிரச்சனைகளை சரி செய்கிறது என்பதை சொல்லவில்லை(அப்படின்னு நினைக்கிறேன்). ஆனால் ராஜா வனஜ், சுகுணா திவாகர், முகுந்த் மற்றும் நான் இடையிடையே நிறைய கேள்விகளை கேட்டுக் கொண்டிருந்தோம். அவ்வப்போது மா. சிவக்குமாரும் தன்னுடைய புரிந்துணர்வுகளைப் பகிர்ந்து கொண்டார்.
இந்த உரையாடல் அப்படியே ரிலையன்ஸ் ப்ரஷ் மற்றும் மேற்கு வங்காளப் பிரச்சனை என பல தரப்புகளில் விவாதம் சூடுபிடித்தது. அந்தச் சமயம் ஹிந்துவின் நிருபராக வந்திருந்தவரும் தன்னுடைய பங்கிற்கு சில விஷயங்களைப் பற்றிய தன்னுடைய புரிதல்களைச் சொன்னார். இந்த மாதிரி விவாதங்களில் முதலில் கருத்தைச் சொன்னவர் விவாதத்தை தள்ளி நின்று வேடிக்கைப் பார்ப்பது அவ்வளவு சரியாகயிருக்காது அதைப் போலவே ஒரு இனிஷியேட்டிவ்வை நான் கொடுத்திருக்கிறேன், நீங்கள் யோசித்து தீர்வை நோக்கி நகர்த்துங்கள் என்று விலகி உட்காருவது எந்த அளவிற்கு சரிவரும் என்று தெரியவில்லை.
இந்த விவாதம் முடியும் தருவாயில், சுப்பையா அவர்கள் மாற்றங்களுக்கா நாமெதுவும் செய்யவேண்டுமென்ற அவசியம் இல்லை மாற்றம் அதுவாய் ஏற்படும் என்றும். நீங்களெல்லாம் நம்ப மாட்டீர்கள் என்றாலும் "கடவுள்" அந்த மாற்றம் ஏற்பட ஏதாவது செய்வார் என்பதையோ இல்லை அதை ஒத்ததையோ சொன்னார். நான் "தானாய் எல்லாம் மாறும் என்பது பழைய பொய்யடா" அப்படின்னு சொன்னதை எத்தனை பேர் கவனித்தார்கள் என்று தெரியாது. கடவுள் பற்றி அவருடைய பேச்சுக்கும் எதிர்வாதம் வைத்தேன்; பாமரனும் நக்கலாக ஒரு வார்த்தைச் சொல்லி நிறுத்தினார்.
இதற்கெல்லாம் இடைப்பட்ட காலத்தில் நிறைய விஷயங்கள் நடந்தது, அதாவது சின்னச் சின்ன விஷயங்கள். பாலபாரதி தன்னுடைய கத்தி போன்ற பற்களால் கடித்து(;)) ஒரு பார்சலைப் பிரித்து எல்லோருக்கும் நோட் புக்கும் பேனாவும் கொடுத்தார். நான் மட்டும் "நானெல்லாம் காலேஜிலேயே நோட் எடுக்க மாட்டேன்" என்று சொல்லி தவிர்த்துவிட்டேன். எனக்குத் தெரிந்து நன்றாய் நோட்ஸ் எடுத்தவர்கள்(நான் பார்த்தவரையில்) சென்ஷி, மற்றும் வினையூக்கி. செந்தழல் ரவி, பின்நவீனத்துவ ஓவியம் ஒன்றை வரைந்திருந்தார் இடைப்பட்ட இந்த நேரத்தில். நான் அவர் வரைந்திருந்த அந்த ஓவியத்தில் பின்நவீனத்துமே இல்லை என்றும். அந்தப் படம் பின்நவீனத்துவ ஓவியமாக ஆக என்ன செய்யவேண்டும் என்றும் சொன்னேன்; அவர் முறைக்க எக்ஸ்கேப் ஆகினேன்.
கேட் பெர்ரீஸ் சாக்லேட்டும், டீயும் கொடுக்கப்பட்டது(இது முதல் ரவுண்ட்) நான் சாக்லேட் சாப்பிடக்கூடாது என்று தீவிரமான உத்தரவு ஒன்று நிலுவையில் உள்ளதால் சாயாவை மட்டும் குடித்துவிட்டு பேசாமல் உட்கார்ந்துவிட்டேன். பாமரனின் "நக்கல்" தொணித்த ஒன்றிரண்டு வரி கமெண்ட்களை ரசித்தேன்.
இப்படியாக முதல் அமர்வு நிறைவு பெற்றவுடன், கிளம்பிய சுப்பையா அவர்களும் கோவை ரவியும், ஹிந்து பேட்டிக்காக மீண்டும் வந்து உட்கார இன்னொரு இன் - பார்மலான பார்மல் பேட்டி ஒன்று நடந்தேறியது. நானும் பாலாவும் முதலில் பின்னூட்டத்திலும் பின்னர் தொலைபேசியிலும் விவாதித்த பிரச்சனை இன்னொரு முறை கிளப்பப்பட்டது. இந்த முறையும் நான் "எனக்கு" சரியென்று பட்டதை சொன்னேன். பின்னர் விவாதம் வேறுபக்கமாக திரும்புவதாக மா.சிவக்குமார் விளக்க மீண்டும் விவாதத்திற்கு வந்தோம்.
முகுந்த், முன்னர் ஒரு முறை ஹிந்துவில் தவறாக வந்திருந்த ஒரு தகவலைச் சொல்லி, ஹிந்து நிருபரிடம் எழுதிப் பதிவிடும் முன் யாராவது ஒருவரிடம் காட்டி சரிபார்த்துக் கொள்ளும்படி சொன்னார் எனக்கு அது சரியென்று பட்டது. லிவிங் ஸ்மைல் வித்யா தன்னுடைய பதிவுலக அனுபவங்களையும், வாழ்க்கை அனுபவங்களையும் சொன்னார். பின்னர் தமிழ் பதிவுலம் ஹிந்து போன்ற பத்திரிக்கைகளில் இருந்து எதிர்பார்ப்பது என்ன என்பதை யாரோ ஒருவர் சொல்ல கடைசியில், தமிழில் இலவசமாக எழுத முடியும் என்பதை மட்டும் சொன்னாலே போதும் என்ற நிலைப்பாட்டிற்கு வந்தோம். நிருபர் தானும் தமிழில் எழுத ஒரு சாப்ட்வேர் காசு கொடுத்து வாங்கியதாகவும் அதுவும் வொர்க் ஆகவில்லை என்ற தன்னுடைய ஆதங்கத்தைச் சொன்னார்.
இரண்டாவது அமர்வை இன்னொரு பதிவு போடுகிறேன். முதல் அமர்வில் சில கண்ணில் பட்ட விஷயங்கள்.
* சென்ஷி என்றால் என்ன என்பதை சென்ஷி விளக்கவேண்டும் என்று நிறைய பேர் ஆசைப்பட்டனர்.
* சுப்பையா அவர்கள் தான் எப்படி வாத்தியார் ஆனார் என்பதை நிறைய தடவை சொல்லும் படியான சூழ்நிலை அமைந்தது.
* உடனுக்குடன் வினையூக்கியும், பாலாவும், மாசிவக்குமாரும் பதிவெழுதிக் கொண்டிருந்தனர்.
* மோகன்தாஸ் தன்னுடைய மொபைலில் இருந்து போட்டாக்களை பதிவிட ப்ளூடூத் வசதியுள்ள மடிக்கணிணியை தேடிக்கொண்டிருந்தார். (கிடைக்கவில்லை)
* செந்தழல் ரவிக்கு நாங்கள் பெங்களூரில் இருந்து கோயம்புத்தூருக்கு தண்டர் பேர்டில் வந்ததை நான் படம் காண்பித்துக் கொண்டிருந்தேன்.
* இன்று வரை, சுகுணா திவாகர் செந்தழலாரிடம் இருந்து தான் பெற்ற பின்நவீனத்துவ பரிசைப் பற்றி பின்நவீனத்துவக் கவிதை எழுதவில்லை.
In சொந்தக் கதை பதிவர் சந்திப்பு
கோவை பதிவர் சந்திப்பு - என் குறிப்புகள்
Posted on Tuesday, May 22, 2007
கோவை பதிவர் சந்திப்பு - என் குறிப்புகள்
பூனைக்குட்டி
Tuesday, May 22, 2007
பூனைக்குட்டி
Primarily a java programmer, an athiest and a film geek, who loves reading, writing and photography.
Related Articles
Subscribe to:
Post Comments
(
Atom
)
Popular Posts
-
இன்னும் படித்துக்கொண்டிருக்கும் என் அக்காவிற்கு நேற்றிரவு நாய்கள் என்னைப்பார்த்தது நக்கலடிப்பதாய்ப்பட்டது தெரியப்போவதில்லை உள்ளிருப்பது த...
-
"முரளீதரனைப்பற்றி என்ன நினைக்கிற சொரூபா?" "கள்ளனண்னா அவன், தமிழனே கிடையாது அவனும் சிங்களவன்தான்." சில காலமாகவே எனக...
-
அதாவது நான் சொல்லவந்தது என்னன்னா? இரண்டொறு வாரத்திற்கு முன்னாடி ஒளியின் வேகம் குறைக்கப்பட்டது அப்படின்னு ஒரு கட்டுரையைப்போட்டேன், அதை போடுறத...
//இன்று வரை, சுகுணா திவாகர் செந்தழலாரிடம் இருந்து தான் பெற்ற பின்நவீனத்துவ பரிசைப் பற்றி பின்நவீனத்துவக் கவிதை எழுதவில்லை.//
ReplyDeleteஅதானே ? எங்கேப்பா கவிதை ??
உண்மைத்தமிழனை பற்றி ரெண்டு வரி போடுங்க...அவர் டெங்சனாகிடுவாரு...ஏற்கனவே தலைமுடிய கானோம்...!!
இது போன்ற ஒரு பதிவர் சந்திப்பில் கலந்துக்கொள்ளவேண்டும் என்ற ஆவலை தூண்டுகிறது.
ReplyDelete//பின்ன பொண்ணுங்க மட்டும் தான் மத்தவங்க போட்டிருந்த புடவை நன்றாகயிருந்தது என்று எழுதணுமா என்ன?) //
ReplyDeleteஆரம்பிச்சாச்சா.. இன்னிக்கு உங்களுக்கு நிம்மதியா தூக்கம் வரும்.. ;)
//அடுத்த இதைப் போன்ற சந்திப்புக்களில் இந்த விஷயத்தை செய்ய வேண்டாம் என்று இந்தச் சமயத்தில் கேட்டுக் கொள்கிறேன். //
ரொம்பச் சரி.. நானும் கேட்டுக்கிறேன்.. அரசியல் மேடையா ஆக்குவதில் அர்த்தமில்லை தான்..
மத்தபடி பாகச வேலைய ஒரு குறையும் இல்லாம செஞ்சிருக்கீங்க போல.. ;)
//மேங்கோ ஜூஸ் ஒன்றை பக்கத்தில் இருந்த பழமுதிர்ச் சோலையில் குடித்துவிட்டு///
ReplyDeleteஅங்கேயும் மாங்காதானா? :-)
மோகனா, உன் ப்ரொஃபைல்ல இருக்குறது செகுவாராவா? அது உன் ப்டம்னுல்லா நெனச்சிட்டிருந்தேன்.
பொன்னாடையை போற்றினார்களா?
யாரு போட்டவரா? போட்டுக்கிட்டவரா?
தெளிவா சொல்லு மோகனா.
சுவாரஸ்யமான பதிவு.
இடிப்பறவையில் பெங்களூர் - கோவை பயணம் தேவைதானா? இளம்கன்று பயமறியாதுங்குறது சரியாத்தான் இருக்கு.
சாத்தான்குளத்தான்
---------------------
இந்தப் பின்னூட்டம் ஆசிப் போட்டது. இந்த ஹாப்லாக் பிரச்சனையால எதை அப்ரூப் பண்ணுறேன் எதை ரிஜக்ட் பண்ணுறேன்னு குழப்பமாயிருக்கு.
ரவி,
ReplyDeleteநானும் அவரை பார்த்த வரை சொல்லிக் கொண்டு தான் இருந்தேன். விடாதீங்க அவரை.
மஞ்சூர் ராசா,
உண்மையில் நானும் பதிவர் சந்திப்புக்களைப் பற்றி படித்துக்கொண்டிருந்த பொழுது இப்படி வருத்தப்பட்டிருக்கிறேன்.
அதனால் புரிந்து கொள்ள முடிகிறது.
அண்ணாச்சி,
ReplyDeleteபோத்தினார்கள் என்று வருமோ? யோசிச்சிக்கிட்டே தான் எழுதினேன். ஆனால் குற்றம் கண்டுபிடிக்கிறதிலேயே இருக்கிறீங்க. ;)
Motorcycle Diaries பார்த்ததில் இருந்தே இந்த ஆர்வம் உண்டு. இப்ப நிறைவேறி விட்டது. இன்னும் நான் ஓட்டிக்கொண்டு போகவில்லை. அது பாக்கியிருக்கிறது.
ம்.. சந்தோஷம்..
ReplyDeleteமோகன்தாஸ் தங்களுடனான சிறுகதைப் பற்றிய கருத்து பரிமாற்றம் பயனுள்ளதாக இருந்தது. நன்றி.
ReplyDeleteபொன்ஸ்,
ReplyDeleteநிறைய பேரை மிஸ் செய்தேன். அடுத்த அமர்வு தான் எனக்குப் பிடித்திருந்த ஒன்று. எழுதுகிறேன் விரைவில்.
//மோகன்தாஸ் தன்னுடைய மொபைலில் இருந்து போட்டாக்களை பதிவிட ப்ளூடூத் வசதியுள்ள மடிக்கணிணியை தேடிக்கொண்டிருந்தார். (கிடைக்கவில்லை)//
ReplyDeleteஅடப்பாவீஈஈஈஈஈஈஈ...
நான் கேட்டேனே... என்னுடைய மடிக்கணிணியில மாத்தலாம்னு.. நீ தானே அப்புறம் செய்யலாம்னு சொல்லி.. மறந்துட்டு கிளம்புன... நற..நற..
பாலா சிவாவும் சொன்னார் உங்கள் கணிணியில் உண்டு என்று. ஆனால் நான் தேடிய பொழுது(ரொம்ப முன்னாடி) கிடைக்கவில்லை அப்படிங்கிறத எழுதினேன்.
ReplyDeleteஉண்மைத் தமிழன்,
ReplyDeleteஎன்ன சந்தோஷம். இரண்டாவது அமர்வைப் பற்றி எழுதும் பொழுது தான் உங்களைக் காலை வாரப் போகிறேன்.
வினையூக்கி,
அதைப் பற்றி எழுதுகிறேன்.
அன்பரே எல்லோரையும் நன்றாக தான் கவனிச்சுருகீங்க (என்னையும் சேர்த்துதான்). பதிவு அருமை. வாழ்த்துக்கள்.
ReplyDelete//அடுத்த இதைப் போன்ற சந்திப்புக்களில் இந்த விஷயத்தை செய்ய வேண்டாம் என்று இந்தச் சமயத்தில் கேட்டுக் கொள்கிறேன்.//
ReplyDeleteஅட.. இத கவனிக்காம விட்டுட்டேனே.. சரியா சொன்ன ராசா..
செந்தழலாவது கூச்சமா இருக்குன்னு எழுதிட்டாரு. ஆனா அதை எழுதுறதுக்கே எனக்கு கூச்சமா இருந்ததால தான் நான் சொல்லவே இல்லை.
நானும் இதை வழிமொழிகிறேன்.
Hi Mr. Mohandoss,
ReplyDeletei also read yours. i saw photos - if it is named who is who, would be btter - where are you mr. mohan - i know you are too young - so that you have mentioned about generation gap - will please furnish names of the persons
friend
ரவி(கோவை)
ReplyDeleteநான் உங்களுடன்(மற்றும் சிலருடன்) தனிப்பட்ட முறையில் பேசமுடியாத அளவிற்கு நிகழ்ச்சி நம்முடைய நேரத்தை எடுத்துக் கொண்டிருந்தது.
அடுத்த சந்திப்பிலாவது எல்லோருடனும் ஒரிரு வரிகளாவது தனிப்பட்ட முறையில் பேசிவிடவேண்டும் என்று பிரயத்தனம் செய்கிறேன் நிச்சயமாய்.
பாலா,
ReplyDeleteஉங்களையும் ரவியையும் தனிப்பட்ட முறையில் தெரியும் என்பதால் டிஸ்கி எல்லாம் தனியாகப் போடவில்லை. நான் சொல்லவந்ததை சரியான முறையில் இருவரும் எடுத்துக் கொண்டிருப்பீர்கள் என்று தான் நினைக்கிறேன்.
சொல்லவேண்டுமென்று நினைத்தேன்; சொல்லிவிட்டேன்.
சுகுணா திவாகர் சொன்ன சில விஷயங்களோடு ஒத்துப் போகிறேன். இதை இரண்டாவது அமர்வைப் பற்றிய என்னுடைய இடுகையில் எழுதலாம் என்றிருக்கிறேன்.
அனானி,
ReplyDeleteதனிப்பட்ட முறையில் எனக்கு அன்புடன்(மிரட்டலாக ;-)) சொல்லப்பட்டிருக்கிறது; எது என்றால் போட்டா போட்டாலும் போடு நீங்கள் கேட்ட who is who என்பதை போடக்கூடாதென ஹிஹி.
அது நல்லதற்குத்தான்.
பெரும்பாலும் நீங்கள் கோவை வலைபதிவர் சந்திப்பைப் பற்றிய இடுகைகளைப் படித்திருந்தால் எல்லோரையுமே அடையாளம் காணமுடியும்.
நான் பெரும்பாலும் போட்டோ எடுக்கும் பொழுது எஸ்கேப் ஆகிவிடவே முயல்வேன். அதனால் என்னை போட்டோவில் பிடிப்பது கஷ்டமே!
பதிவர் சந்திப்பு பற்றிய பகிர்தலுக்கு நன்றி மோகன்தாஸ்.
ReplyDelete///செந்தழலாவது கூச்சமா இருக்குன்னு எழுதிட்டாரு. ஆனா அதை எழுதுறதுக்கே எனக்கு கூச்சமா இருந்ததால தான் நான் சொல்லவே இல்லை.
ReplyDeleteநானும் இதை வழிமொழிகிறேன்.///
முதல் தடவை கூச்சமாகத்தான் இருக்கும்.அப்புறம் பழகிவிடும்!
Token of respect & token of appreciation இவற்றை வெளிப்படுத்த
பொன்னாடை வேண்டாமென்றால் வேறு என்ன் செய்யலாம் சொல்லுங்கள் - நண்பர்களே!
பொக்கே - கொண்டுபோகிறீர்களே - அதைவிட இது எந்த விதத்தில் மாறுபடும்?
இந்த ஹாப்லாக் பன்னாடைக்கு வேற வேலையே இல்லையா? எங்க பார்த்தாலும் பேண்டுகிட்டே இருக்கான் பரதேசி
ReplyDelete`இனய தலம
வண்ணக்கோலங்கல்`
தமிழே ஒழுங்கா தெரியாத பரதேசிக்கு அடுத்தவன் வீட்டில் அடாவடி பண்ண மட்டும் தெரியிது.
ஹாப்லாக் பன்னாடையால் பாதிக்கப் பட்டவன்.