செல்லா பட்டறையைப் பற்றி சென்னை வலைபதிவர் சந்திப்பில் சொல்லியிருந்த பொழுதே. எனக்கான இடத்தை புக் செய்து கொண்டிருந்தேன்(செல்லா அப்பொழுது எல்லோருக்கும் இணைய வசதியுடன் கணிணி கிடைக்க ஏற்பாடு செய்வதாகச் சொல்லியிருந்தார்.) பின்னர் இன்னொரு நாள் பாலபாரதியிடன் "கடலை" போட்டுக்க்கொண்டிருந்த பொழுது நான் கோவை வர ஆர்வமாகயிருப்பதாகவும். டிக்கெட் புக் செய்ததும் சொல்வதாகவும் சொல்லியிருந்தேன்.
பின்னர் பெங்களூருவிலிருந்து கோவைக்கு ரயிலிலும், கோவையிலிருந்து பெங்களூருக்கு ப்ளைட்டிலும் புக் செய்துவிட்டு செல்லாவுக்கு தகவல் சொன்னேன். இந்தச் சமயத்தில் எல்லாம் என்னுடன் பேச்சுலர் டிகிரி படித்துவிட்டு கோவையில் வேலை செய்து வரும் என் நண்பர், ரூம் மேட்டுக்குச்(ஹாஸ்டல் ரூம்மெட்) சொல்லியிருந்தேன். அவர் நான் இருப்பதும் காந்திபுரத்தில் தான் வந்ததும் ஒரு போன் செய்யுமாறும் தான் அழைத்துக் கொள்வதாகவும் சொல்லியிருந்தார். உண்மையான ப்ளான் படி ஞாயிற்றுக் கிழமை விடியற்காலை இரண்டரை மணிக்கு கோவையை ரீச் ஆவேன் நான்.
இந்தச் சமயத்தில் தான் நான் இண்டர்வியூ பானலில் உட்கார்ந்த பிறகு என்னால் முதன் முதலில் ரெக்ரூய்ட் ஆன நண்பர் ஒருவர் தான் கோவை செல்வதாக எதேச்சையாகச் சொன்னார்(இண்டர்வியூவில் எங்களிடம் இருந்து அதாவது முதல் ரவுண்டில் இருந்து இரண்டாவது ரவுண்ட் போகும் ஸ்டாட்டிஸ்டிக்ஸ் ரொம்பவும் கம்மியாக இருக்கும் எப்படியென்றால் பத்திற்கு ஒன்று தேறுவதே பெரிய விஷயம். இதைப் பற்றி தனியாக எழுதுகிறேன்). நான் என்னுடைய ப்ளானைச் சொல்லி அவர் எப்படி செல்கிறார் என்று கேட்டேன். அவர் தன்னுடைய தன்டர் பேர்டில் செல்வதாகச் சொல்ல அப்பொழுதே அரிப்பெடுக்கத் தொடங்கியது.
ஏற்கனவே டிக்கெட் புக் செய்திருந்ததாலும், அந்தச் சமயத்தில் என்னுடைய பெற்றோர் பெங்களூரில் இருப்பார்கள் என்பதாலும் முடிவெடுக்கத் தடுமாறிக் கொண்டிருந்தேன் ஆனால் பைக்கில் பயணம் செய்வதைப் பற்றி யோசிக்கக்கூட இல்லை; அதுதான் சந்தோஷமான விஷயம் ஆயிற்றே. பின்னர் முதலில் அம்மாவை சமாளித்து, அம்மா மூலமாய் அப்பாவைச் சமாளித்து இருவருக்கும் தெரியாமல் டூவீலரில் கோவை போவதென்பது முடிவானது. ஏனென்றால் இடையில் வரும் சனிக்கிழமை ரொம்பவும் முக்கியமான ஒன்று. அவர்கள் இருவரும் பெங்களூர் வந்த பிறகு வரும் முதல் சனி ஞாயிறு; நான் இருக்க மாட்டேன். அடுத்த சனி, ஞாயிறு அவர்கள் இருக்க மாட்டார்கள் என்று இடியாப்ப சிக்கல்.
பின்னர் இந்தப் பயணத்தைப் பற்றி நானும் நண்பரும் சிறிது நேரம் ப்ளான் செய்தோம், பெங்களூரிலிருந்து கோவைக்கு 400 KM, போகும் வழியைப் பற்றி எப்பொழுது ஆரம்பிக்கலாம் எப்பொழுது ரீச் ஆவோம் என்பதைப் பற்றி. பின்னர் நண்பர் தன்னுடைய டீம் லீடரிடம் முன்பே அனுமதி கேட்க; நாங்கள் வண்டியில் கோவை செல்வது பாதி கம்பெனிக்கு தெரிந்துவிட்டது. வெள்ளிக்கிழமை மதியம் கிளம்பவேண்டிவந்ததால் நண்பர் டீம் லீடரிடம் பெர்மிஷன் கேட்டார். எனக்கு அந்த ஃபார்மாலிட்டி எல்லாம் கிடையாது. தோ போய் டீ குடிச்சிட்டு வர்றேன்னு சொல்லிட்டு வெள்ளிக்கிழமை மதியம் கிளம்பியிருப்பேன்.
இந்த விஷயம் எங்கள் கம்பெனியின் இந்திய நிர்வாகிக்கிக்கு தெரியப்போக அவர் என்னிடம்; "என்னடா வெள்ளிக்கிழமை மத்யானம் வெளியில் போறியா; சொல்லவேயில்லை. உங்காளு தான் சொன்னான். அரைநாள் லீவு கேட்டிருக்கான் நீ கேக்கவேயில்லை; "ப்ங்க்" அடிக்கப்போறியா என்றார்" ஏன் இத்தனை பேச்சுவார்த்தைகள் என்றால் எங்கள் கம்பெனிக்கு "டெஸ்டிங்" மக்களை எடுக்கவேண்டு, சனிக்கிழமை இன் டர்வியூ செஷ்ட்யூல் செய்திருக்கிறார்கள். நான் அந்த இன் டர்வியூ பானலில் இருந்ததால் தான் இத்தனை கேள்வி. பின்னர் அவர் தான் அதுவரை சென்ற பைக் பயணத்தைப் பற்றி பேசப்போக ஒரு நல்ல மூடில் பெங்களூரில் இருந்து கிளம்பினோம்.
நண்பர் பெங்களூரை விட நம்ம ஊரில் பெட்ரோல் விலை கம்மி என்பதால் ஓசூரில் சென்று போட்டுக் கொள்ளலாம் என்று சொல்ல நான் தேவையில்லாமல் தமிழ்நாட்டை விட பெங்களூரில் "குவார்ட்டர்" விலை கம்மி என்று சொன்னேன். நாங்கள் முடிவு செய்திருந்த வழி பெங்களூர் - ஒசூர் - சேலம் - ஈரோடு - திருப்பூர் - கோவை. சாயங்காலம் ஒன்பதரை அல்லது பத்து மணிக்குப் போய்சேர்ந்துவிடலாம் என்று தான் நினைத்திருந்தோம். பெட்ரோல் போட வண்டியை நிறுத்தியது தான் முதல் முறை; நாங்கள் பெட்ரோல் போடும் பொழுதே கவனித்தோம் இருநூறு மீட்டரில் மழை கொட்டிக் கொண்டிருந்ததை. நண்பர் போகலாமா வெய்ட் பண்ணலாமா என்று கேட்டதற்கு, "மழை கவிதை கொண்டு வருது யாரும் கதவடைக்க வேண்டா; வெறும் கருப்புக் கொடியைக் காட்டியாரும் குடை பிடிக்க வேண்டாம்" என்ற வைரமுத்துவின் வரிகளைச் சொல்லாமலே போகலாம் என்றேன்.
நாங்கள் போகும் 80 கி.மீ வேகத்தில் வான் துளிகள், முகத்தில் படுவேகமாய் பட்டுக் கொண்டிருந்தது. மழையில் ஆட்டம்போடுவது வேறுமாதிரியானது என்றால் மழையில் பயணம் செய்வது வேறுமாதிரியானது. நல்ல ஓப்பன் ரோட்டில் இயற்கை செய்யும் வேடிக்கையைப் பார்த்துக் கொண்டே வண்டி ஒசூரை நோக்கி வேகமாகப் பயணித்தது. பின்னர் அடுத்த ஸ்டாப் டீ குடிக்க; டீ குடித்து விட்டு வந்துதான் பார்த்தோம். ட்ரிப் மீட்டர் "111" யைக் காட்டியது. டீ குடிப்பதற்காக நாங்கள் முதல் முறை நிறுத்தியது தான் இப்படி என்றில்லாமல் மொத்த 400 கி.மீட்டர் தூரத்திலும் 4 முறை தான் நாங்கள் நிறுத்தினோம் அதுவும் ஏறக்குறைய பதினைந்து இருபது நிமிஷங்கள் மட்டுமே.
பெங்களூர் - சேலம் ரோடு நன்றாகவேயிருக்கும்; அதுவும் ஒசூர்வரை பிரம்மாதமாகவும் அதற்கு மேல் நன்றாகவும். ஆனால் சேலம் - ஈரோடு ரோடு அத்தனை வசதிகரமானதில்லை. அதுவும் பெருந்துறையில் இருந்து திருப்பூருக்கு ரோடேயில்லை என்று கூட சொல்லலாம். சங்ககிரியில் வழியில் இரவு உணவை முடித்துக் கொண்டு கிளம்பினோம்.
அப்படியிப்படி என நாங்கள் திருப்பூருக்கு பத்து மணி வாக்கில் வந்து சேர்ந்திருந்தோம். நண்பர் உடுமலைப்ப்பேட்டை போகவேண்டுமாதலால் அவர் வேறுவழியை எடுக்க நான் கோவைக்கு பஸ் பயணம் மேற்கொண்டேன். கண்டெக்டரிடம் "காந்திபுரம் வந்ததும் சொல்லுங்க" என்று மட்டும் சொல்லிவிட்டு அதுவரை டூவீலரில் வந்த பயணக்களைப்பை போக்கும் விதமாக நன்றாகக் கால்நீட்டி படுத்துக் கொண்டாயிற்று. கோவை வந்ததும் தான் எழுந்தேன்.
பின்னர் நண்பருக்கு தொலைபேசி அழைத்தேன் வந்து அழைத்துச் சென்றவர் அறையிலேயே படுத்துக்கொண்டேன். நண்பருக்கு அடுத்தநாள் வேலைநாள், என் ப்ளான் படி அடுத்த நாள் ஊட்டி செல்ல வேண்டும் ஆனால் அசதியில் காலை ஒன்பது மணிக்கு எழப்போக ஊட்டி ட்ரிப் கான்ஸல் ஆனது பின்னர் இன்னும் இரண்டு மணிநேர உறக்கத்திற்குப் பிறகு பக்கத்தில் இருந்த தியேட்டரில் "உன்னாலே உன்னாலே" நல்லவேளை ரம்பம் போடவில்லை பார்க்கும்படியாகத்தான் இருந்தது.
பின்னர் சாயங்காலம் நண்பர் அலுவலகத்தில் இருந்து வந்ததும் பக்கத்தில் இருந்த ஒரு "நான் - வெஜ்" ஹோட்டலில் ஒரு கட்டு கட்டிவிட்டு சென்றது தான் "நினைத்து நினைத்துப் பார்த்தேன்". கொக்கா மக்க, படுக்க போட்டு கழுத்தில் ரம்பத்தை வைத்து அறுக்கிறார்கள். சரி கடைசி வரைக்கும் ஏதாச்சும் சொல்லுவாங்ய என்று எதிர்பார்த்தே நொந்து போனோம்.
பின்னர் அடுத்தநாள் "பட்டறை" முடிந்ததும் கிளம்பி விமானத்தில் பெங்களூருக்கு வந்து சேர்ந்தேன்.
கோவை பயணம்(பட்டறை பற்றியது அல்ல)
பூனைக்குட்டி
Sunday, May 27, 2007
பூனைக்குட்டி
Primarily a java programmer, an athiest and a film geek, who loves reading, writing and photography.
Related Articles
Subscribe to:
Post Comments
(
Atom
)
Popular Posts
-
இங்க இப்படி ஒரு ஐட்டம் இருக்கிறதென்பதே மறந்து போயிருந்தது. காந்தாரா படமல்ல பொன்னியின் செல்வன் படம் தான் என்னை ப்ளாக் பக்கம் திருப்பியது, ஆனா...
-
“மம்மி, உன் பையனெல்லாம் வெக்கப்படுறான் இங்கவந்துப்பாரு, ஆச்சர்யம்தான் போ?” அக்கா வேண்டுமென்றே வம்பிழுத்துக் கொண்டிருந்தாள், எங்கள் இருவர...
-
பெங்களூரு பூத்துக் குலுங்கிக் கொண்டிருக்கிறது, வண்ண வண்ணப்பூக்களுடன் வசந்த காலம் என்று நினைக்கிறேன். மஞ்சள், ஊதா, சிகப்பு, வெள்ளை நிறப்பூக்க...
:) :) :)
ReplyDeleteநானும் கோவை பட்டறைக்கு வந்திருந்தேன்.அடடா நீங்க ஆள் எடுக்கற இடத்துல இருக்கறது தெரியாம போச்சே நம்ம பையன் ஆஸ்த்ரேலியாவில படிச்சுக்கிட்டிருக்கான்.அவன் என்ன செய்யலாமுன்னு உங்ககிட்ட விவாதித்து இருக்கலாம்.அதுசேரி நீங்க பைக்கில வந்தது உங்க அப்பா அம்மாவுக்கு தெரியுமா?
ReplyDeleteபின்னால குந்திக்கினு வந்ததுக்கே இம்மாம் கதையா???!!
ReplyDeleteநானும்தான் அப்பப்ப ப்ளேன்ல யாராவது ஓட்டும்போது உள்ளாற உக்காந்துக்கிட்டு வரேன். உன்னை மாதிரி கதையா சொல்லிக்கிட்டு வரேன்..அதுவும் திருப்பூர்லேயே ஜூட்டு.. நல்லா இருங்ககடே!! :-)))
சாத்தான்குளத்தான்
தாமோதர், தெரியாது ஆனால் ஒருமாதிரியாகத் தெரியும். ;-)
ReplyDeleteஆசீப் அண்ணாச்சி, இதில எங்கயாவது யார் ஓட்டினா யார் உட்கார்ந்து வந்தான்னு சொல்லியிருக்கேனா? ;)
அந்த மேட்டரைத் தான் நான் மறைச்சிட்டனே நீங்களா எதாவது முடிவுக்கு வந்தா நான் பொறுப்பா?
கதை சொல்றதுக்கு மேட்டர் கிடைக்கலைன்னா என்கிட்ட கேளுங்க ஓய்.
PS: இதுக்கே இப்படின்னா நாளைக்குப் போடப்போற பதிவ படிச்சுப் பாருங்க; கிழிஞ்சிறும்.