எப்பொழுதோ எழுத வேண்டும் என்று நினைத்து உட்கார்ந்த விஷயம். என்னமோ சட்டென்று ஏதோ ஒரு கணத்தில் இனிமேல் டெக்னிக்கல் விஷயங்கள் எழுதவதில்லை என்று முடிவு கட்டி ஒதுக்கி வைத்திருந்தேன். நிறைய காரணங்கள் உண்டென்றாலும், என்னையே நானே மாற்றிக் கொள்ளும் முக்கியமான விஷயமாக இதைப் பார்க்கிறேன். இன்னமுமே கூட எத்தனையோ முறை எடுத்து எழுதத் தொடங்கி ஏதோ ஒன்று உறுத்த "Draft" ஆகவே உட்கார்ந்திருந்த இந்தப் பகுதியை மீண்டும் எழுத மா.சிவக்குமார் ஒரு முக்கியமான காரணம்.
என் கல்லூரி வாழ்க்கையில் இருந்து ஆரம்பிக்கிறேன்; அங்கே தான் ஆரம்பம் ஆனது ஜாவா எனக்கு. எனக்கு மூன்றாம் ஆண்டு முதல் செமஸ்டர்(அதாவது கணக்குப்படி ஐந்தாவது செமஸ்டர்) ஜாவா ப்ரொக்ராமிங் லாங்க்வேஜாகவும், லேப்பிற்கான லேங்க்வேஜாகவும் இருந்தது. சரியாக 2003, அப்பொழுதெல்லாம் ஜாவா ஒரு செத்துப் போன மொழி(குறைந்தபட்சம் எங்கள் கல்லூரியில்) நான் கல்லூரி படிக்க ஆரம்பித்த பொழுது ஜாவா "Out of fashion" ஆகயிருந்தது. இது ஒரு டைரி போல இருக்க வேண்டும் என்றே நினைக்கிறேன்; ஆனாலும் வழக்கமான என் ஜல்லிக்கதைகள் அதிகம் ஆகிவிடக்கூடாதென்ற எண்ணமும் உண்டு.
நான் படித்த கல்லூரியில் பணியாற்றிய ஆசிரியர்கள் பெரும்பாலும், படித்து முடித்துவிட்டு சாப்ட்வேர் போட்டியில் வேலை கிடைக்காமல்; சும்மாவும் இருக்க முடியாமல் வேலைக்குச் சேர்ந்தவர்கள். அவர்களுக்கு மாணவர்களுடைய சைக்காலஜி தெரியாது; மாணவர்களுக்கு எப்படி பாடம் எடுக்க வேண்டும் என்று தெரியாது. ஒரு ஆசிரியரின் மகன் என்ற விதத்தில் இதை நான் தைரியமாகச் சொல்ல முடியும். ஏதோ ஒரு பக்கத்தில் வேலை தேடிக்கொண்டு, வாழ்க்கையை ஓட்டுவதற்காக எங்கள் கல்லூரியில் ஆசிரியர் பணி. அவர்களை நான் குறை சொல்லவில்லை; நான் ஒழுங்காக மதிப்பெண் எடுத்திருந்தால் நல்ல கல்லூரியில் சேர்ந்திருக்கமுடியும். முதல் தவறு என்னுடையது.
இதன் காரணமாகவும், மேலும் ப்ராக்டிகல் என்ற ஒரு விஷயம் எங்கள் தேர்வுக்கான ப்ரொக்ராம்களை நெட்டுறு செய்வதாக மட்டுமே இருந்ததால், முதலாம் ஆண்டு நான் என் கல்லூரியை முடித்த பொழுது எனக்கு For லூப் எப்படி வேலைசெய்கிறதென்றே தெரியாது என்றால் நம்புங்கள். இத்தனைக்கும் நான் நல்ல மதிப்பெண் வாங்கித்தான் தேறியிருந்தேன். என் முதலாம் ஆண்டு செமஸ்டருக்கு தமிழ், ஆங்கிலம், மேக்ஸ் ஒரு பேப்பர் போக வெறும் C மட்டும் தான் கம்ப்யூட்டர் சம்மந்தமாக, கூடவே C ப்ராக்டிகல்.
எங்க மாமா அடிக்கடி சொல்வார் C ஒரு கடல் போல் என்று, எனக்கெல்லாம் ஒரு For லூப் போட்டு அது எப்படி வேலை செய்யும் என்று சொல்லித் தந்ததாக தெரியவில்லை. நானும் படித்து முடித்திருந்தேன்; இரண்டாம் செமஸ்டருக்கு COBOL அதில் Error வராமல் கொடுக்கப்பட்டிருந்த 15 ப்ரொக்ராம்களை அடித்து, கம்பைல் செய்து நெட்வொர்க்கில் என் லாகினில் சேர்த்து வைக்கவே ஆறுமாதம் சரியாகயிருந்தது. ப்ரொக்கிராமேட்டிகலா யோசிக்கவே தெரியாமல் என்னுடைய இரண்டு செமஸ்டர்கள் முடிந்திருந்தது. இதெல்லாம் நான் ஹாஸ்டலில் இருந்த சமயம், முன்பொறுமுறை சொல்லியிருந்தது போல் கல்லூரி முடிந்ததும் கிரிக்கெட் பேட் எடுத்துக் கொண்டு ஆடுவது, பேச்சுப்போட்டிக்கு தயார் செய்வது. அவ்வளவுதான் வேலை.
நான் ஹாஸ்டலை விட்டு வெளியில் வந்தேன் மூன்றாவது செமஸ்டருக்கு; இந்தச் சமயத்தில் தான் என்று நினைக்கிறேன் அதாவது ஒரு Bard Festival (Bharathidasan University festival) க்கு தயாராக வேண்டி என் சீனியர் அண்ணன்களின் வீட்டிற்குச் சென்றிருந்த பொழுது தான், Visual Basic ல் அவர்கள் பைனல் செமஸ்டர் ப்ரொஜெக்ட் செய்து கொண்டிருந்தார்கள். சொல்லப்போனால் அதுவரை என் மாமாவால் மிரட்டப்பட்டிருந்ததால் ப்ரொக்கிராம் மேல் ஒரு பயமே கூட வந்திருந்தது; ஆனால் அந்தப் பயத்தை போக்கியது Visual Basic.
அப்பாவை நச்சரித்து, மாமாவை நச்சரித்து நான் Visual Basic கத்துக்கிறதுக்கு CSCயில் சேர்ந்தேன். என்னைப் பொறுத்தவரை நான் இன்று இந்த நிலையில் இருக்கிறேன் என்றால் அதற்கு அன்று எடுத்த அந்த முடிவு ஒர் பெரிய காரணம். நானெல்லாம் For, While லூப்கள் எப்படி வொர்க் ஆகிறது என்று தெரிந்து கொண்டது Visual Basic மூலமாகத்தான். அதுமட்டுமல்லாமல் எங்கள் கல்லூரியில் கிடைக்காத எக்ஸ்ட்ரா கணிணி நேரம் இங்கே கிடைத்தது. மாமாக்கள் அவர்கள் வேலையில் பிஸியாகயிருந்ததால், எனக்கு அவர்களின் கணிணி கிடைக்காது. நான் நிறைய புத்தகங்களை எடுத்து புரட்டிப் பார்த்து அதிலுள்ள ஐட்டங்களை வொர்க் செய்து பார்க்க என்று என் மூன்றாவது செமஸ்டரில் தான் ப்ரொக்கிராமேட்டிக்கலாக சிந்திப்பதாக உணர்ந்தேன்.
எங்கள் கல்லூரி போன்ற ஒன்றில் படிப்பவர்களுக்கு இருக்கும் பிரச்சனை, நான் என்னுடன் ஒப்பிட்டுப் பார்க்க ஆட்கள் கிடைக்கவே மாட்டார்கள். நான் அவர்களுடன் ஒப்பிட்டு என்னை பெரிய ஆளாக நினைக்கும்/நினைத்த ஒவ்வொரு கணத்திலும் செருப்படி(யாய்) மாமா கொடுத்துக் கொண்டிருந்தார். இன்று நன்றியுடன் நினைத்துப் பார்க்கிறேன். சாதாரண விஷயம் கிடையாது என்னிடம் நேரில் சொன்னது கிடையாது நீ செய்வதெல்லாம் ஒரு விஷயமே கிடையாதென்று; ஆனால் நான் ஒரு அற்புதமான விஷயத்தைச் செய்து கொண்டிருக்கவில்லை என்பதை மட்டும் மறைமுகமாக உணர்த்திக் கொண்டிருந்தார். ஏனென்றால் வெகுசுலபமாக நாற்பத்தைந்து பேர் படிக்கும் ஒரு வகுப்பில் முதல்வனாகயிருக்கும் எனக்கு தலைக்கனம் வந்திருக்க வேண்டியது; வந்திருந்தது என்று வேண்டுமானால் வைத்துக் கொள்ளலாம்.
மாமாவிற்று விஷுவல் பேஸிக் பிடிக்காது, ஆனால் நான் அன்று என் தலையை ஜாவாவில் விட்டிருந்தேன் என்றால் பல நபர்களைப் போல நானும் எனக்கு ப்ரொக்கிராமிங் வராது என்று வீட்டில் உட்கார்ந்திருக்க வேண்டியது தான். இன்றுமே நாங்கள்(நான் மற்றும் என் நண்பர்கள்) எங்களிடம் அட்வைஸ் கேட்டு தேடிவருபவர்களிடம், அவர்களிடம் உண்மையான திறமையிருந்தால், ஆர்வமிருந்தால் மட்டுமே Java, J2EE பரிந்துரைப்போம். இல்லையென்றால் இருக்கவேயிருக்கிறது VB.Net ASP.Net. அதென்னமோ ஜாவா, ஜே2ஈ போல் .Net ஐ யோசிக்க முடியவில்லை. எனக்குத் தேவையான் ப்ரேக் VBயில் கிடைத்தது; ஒரு அற்புதமான ப்ரேக். For லூப் கோடிங் எழுதத்தெரியாமல் இருந்த எனக்கு ஒரு பிஸனஸ் அப்ளிகேஷனை செய்துவிடமுடியும் என்ற நம்பிக்கையை கொடுத்தது VB.
இதெல்லாம் நடந்தது மூன்றாவது நான்காவது செமஸ்டரில். ஐந்தாம் செமஸ்டரில் தான் ஜாவா; அப்படியொன்றும் என் வாழ்க்கையை புரட்டிப்போடப்போகும் லாங்க்வேஜாகவும், ஒரு குடும்பத்தின் நிலையையே மாற்றிப்போடப்போகும் ஒரு விஷயமாகவோ எனக்கு ஜாவா அறிமுகம் ஆகவில்லை. எனக்கு ஜாவா பாடம் எடுத்தது மீனா மேடம்; இவர்கள் தான் எனக்கு C++ ம் கொஞ்ச காலம் எடுத்தார்கள். அவருக்கும் எனக்கும் சண்டை வராத நாளே இருக்காது. ஏதாவதொரு ப்ரொக்கிராம் போர்டில் எழுதிப்போட்டு எழுதிக்கொள்ளச் சொன்னால் என்னமோ என் மண்டையில் JVM(Java Virtual Machine) இருப்பதைப் போல் இது வொர்க் ஆகாது என முதலில் சொல்வேன். பின்னர் அந்தம்மா லேபில், நாளை நடத்தப் போகும் ப்ரொக்கிராமை எழுதி, கம்பைல் செய்து ரன்செய்து பிரிண்ட் அவுட் என்னிடம் கொடுத்துவிட்டு பாடம் நடத்தினார்கள். அப்படியும் நிறைய கேள்விகள் கேட்பேன் ஏனென்றால் அந்தப் ப்ரொக்கிராமில் எல்லாம் ஆப்டிமைஷேஷன் நிறைய செய்யமுடியும். அப்பொழுது Optimization பற்றி எல்லாம் தெரிந்திருக்கா விட்டாலும், இன்னும் நன்றாக செய்யமுடியும் என்று நிரூப்பிக்க(மீனா மேடத்திடம்) அரும்பாடுபட்டேன்.
அதனால் மீனா மேடத்திடம் கேள்விகள் கேட்கவேண்டுமென்றே ஜாவா படித்தேன், தீவிரமாய் என்றால் அது பொய்யில்லை. இந்தச் சமயத்தில் எல்லாம் VBதான் என் மனம் முழுவதும்; என் பைனல் இயர் ப்ரொஜக்ட் என் கண் முன்னே ஓடிக்கொண்டிருந்த நாட்கள் அவை. இடைப்பட்ட நேரத்தில் மீனா மேடத்திற்காக படித்தது தான் ஜாவா. ஒரு உண்மை தெரியுமா நான் ப்ராக்டிகலில் எல்லா பாலிடிக்ஸ்-ம் தாண்டி, முதல் முறையாக 100 வாங்கியதும் ஜாவாவிற்காகத்தான். அப்படித்தான் வகுப்பிலேயே முதல் முறையாக ஒரு பாடத்தில் முதல் மதிப்பெண் வாங்கியதென்றால் அதுவும் ஜாவாவிற்காகத்தான்.
நாங்க கடம் தட்டுவது என்று சொல்வோம் என்னுடன் படித்த ஆறு பெண்களில் மூன்று பெண்கள் மிகவும் நன்றாகப் படிக்கக் கூடியவர்கள். அவர்கள் தான் முதல் மதிப்பெண் வாங்குவார்கள் பெரும்பாலும், இதை நான் ஜாவாவில் முறியடித்த அதே சமயத்தில் தான் என் நண்பர்கள் ராஜேஷ் மற்றும் உதய சங்கர் வேறு பாடங்களில் அவர்களை முந்தியிருந்தார்கள். இதில் எங்களின் பங்கு எவ்வளவோ அதே அளவு பங்கு அந்தப் பெண்களுடையது அவர்கள் காதலில் விழுந்திருந்த சமயம் அது. காதல் கண்ணை மறைக்க மதிப்பெண் பட்டியல் வாசித்த பொழுது மூவரும் அழுதது என் மனதில் இன்னும் இருக்கிறது.
இப்படியாக ஜாவா தான் என் லாங்க்வேஜ் என்று தெரியாமலே என் கல்லூரி வாழ்க்கை முடிந்தது என்று வைத்துக் கொள்ளலாம் நான் என் பைனல் இயர் ப்ரொஜக்ட் VBயில் தான் செய்தேன் சொல்லப்போனால் அந்தக் கல்லூரியிலேயே சொந்த ப்ரொஜக்ட் கொடுத்தது நான் மட்டுமாகத்தான் இருப்பேன். அப்படியே என்னுடைய ஒரு நண்பனுக்கும் முழு ப்ரொஜக்ட் செய்து கொடுத்திருந்தேன். இந்த நம்பிக்கைகள் எல்லாம் இருக்கத்தான் நான் MCA படிக்காமல் டெல்லிக்கு தமிழ்நாடு எக்ஸ்ப்ரஸ் வண்டியேறியது. என் வாழ்க்கையை புரட்டி போட்ட நாட்கள் அவை.
என் ஜாவா அனுபவம் தொடரும்...
PS: தனித்தமிழில்(கொடுந்தமிழில்) எழுத எனக்கு விருப்பமில்லை அதனால் அதற்காக என்னை வற்புறுத்தாதீர்கள். நான் இன்று எழுதுவது நிச்சயமாக இன்னொரு நாள் யாராவது ஒருவருக்கு பயனுள்ளதாக இருக்கும் என்றுதான்.
என் சாப்ட்வேர் வாழ்க்கையை பாதிக்காத அளவிற்குத்தான் இந்தப் பதிவுகளில் உண்மையிருக்கும்.
ஜாவாவில் ப்ரொக்கிராம் எழுதுவது எப்படி என்பது மாதிரியான விஷயங்களை நீங்கள் தூய தமிழில் எதிர்பார்க்கிறீர்கள் என்றால்; சாரி என்னிடம் அது கிடைக்காது பெட்டர் நல்ல புத்தகம் வேறு கடைகளில் கிடைக்கக்கூடும்.
ஆரம்பத்தில் இப்படி ஆரம்பித்து பின்னர் கொஞ்சம் போல் ஆர்க்கிடெக்சர், Struts, Spring, ஜாவா இண்டர்வியூ எப்படி அட்டெண்ட் செய்வது என்பது வரையில் எழுதலாம் என்று உத்தேசம். ஏகவல்லோன் எல்லோர்க்கும் பொதுவான "இறைவன்" அதற்கு உதவுவானாக.
என் ஜாவா அனுபவங்கள்
பூனைக்குட்டி
Monday, June 11, 2007
பூனைக்குட்டி
Primarily a java programmer, an athiest and a film geek, who loves reading, writing and photography.
Related Articles
Subscribe to:
Post Comments
(
Atom
)
Popular Posts
-
இன்னும் படித்துக்கொண்டிருக்கும் என் அக்காவிற்கு நேற்றிரவு நாய்கள் என்னைப்பார்த்தது நக்கலடிப்பதாய்ப்பட்டது தெரியப்போவதில்லை உள்ளிருப்பது த...
-
"முரளீதரனைப்பற்றி என்ன நினைக்கிற சொரூபா?" "கள்ளனண்னா அவன், தமிழனே கிடையாது அவனும் சிங்களவன்தான்." சில காலமாகவே எனக...
-
அதாவது நான் சொல்லவந்தது என்னன்னா? இரண்டொறு வாரத்திற்கு முன்னாடி ஒளியின் வேகம் குறைக்கப்பட்டது அப்படின்னு ஒரு கட்டுரையைப்போட்டேன், அதை போடுறத...
ரொம்ப நல்ல விஷயம் மோகன்...
ReplyDeleteஅருமையாவும் கொண்டு போறீங்க... வாழ்த்துக்கள்!!!
//என் ஜாவா அனுபவம் தொடரும்...
ReplyDelete//
ஆர்வமுடன் எதிர்பார்த்திருக்கிறேன்!!
ஜாவா வாழ்க!! :)))
"For" கூட தெரியாமல்...
ReplyDeleteபலரிடம் இப்படி இருந்தாலும் அப்படியே போட்டு உடைத்திருக்கிறீர்கள்.
மேலே சொல்லுங்க.காத்திருக்கோம்.
அருமையான ஆரம்பம், ரசித்துப் படித்தேன். தொடர்ந்து எழுதுங்கள்.
ReplyDeleteநல்ல ஆரம்பம். நீங்கள் 'For' லூப் பத்தி சொன்னவுடன், என் கல்லூரியில் ஒரு ஜூனியர் கேட்ட கேள்வி ஞாபகம் வருகிறது. முதல் டெஸ்டில் 'if' பத்தி கேட்டார்கள். இரண்டாம் டெஸ்டுக்கு 'for', 'while' பாடம். அதில் 'if'யையும் கேட்பார்களா? :-)
ReplyDeleteஉங்கள் தொடரை ஆர்வத்துடன் எதிர்பார்க்கிறேன்.
வெட்டிப்பயல், கப்பி பய, வடுவூர் குமார், முகுந்த், நாகு நன்றிகள்.
ReplyDeleteஏதோ என்னால் முடிந்தது செய்கிறேன். உங்களுடைய தொடர்ச்சியான வாழ்த்துக்களை வேண்டி...
நல்ல தொடர்.
ReplyDeleteஆர்வத்துடன்..
சத்தியா.
//கப்பி பய said...
ReplyDelete//என் ஜாவா அனுபவம் தொடரும்...
//
ஆர்வமுடன் எதிர்பார்த்திருக்கிறேன்!!
ஜாவா வாழ்க!! :))) //
கப்பி,
ஒவ்வொரு தொடருக்கும் வந்து உன்னுடைய அனுபவங்களையும் சொன்னா நல்லா இருக்கும்.
நமக்கு ஜாவா தெரியாது.. அதனால வெறும் ஊக்கம் மட்டும் தான் கொடுக்க முடியும் :-)
இத வெச்சி நானும் ஜாவா கத்துக்கலாம்னு இருக்கேன்...
நானும் ஜாவான்னதும் ஏதோ மோட்டார் சைக்கிள்ல ஊர் சுத்துன அனுபவமக்கும்னு நெனச்சுக்கிட்டேன். கடைசில பார்த்தா.....
ReplyDeleteமுக்கியமான கேள்வி. அந்தப் பொண்ணுங்களை ஜெயிக்குறதுக்காக அதுங்க கிட்ட நீ ஏதும் 'ஐ லவ் யூடா'ன்னுல்லாம் சொல்லலையே?? உங்களையெல்லாம் நம்ப முடியாதுடே!!
சாத்தான்குளத்தான்
அருமையான விஷயம். தொடர்ந்து எழுதுங்கள்.
ReplyDeleteஎன்னுடைய முதல் புரொகிராமிங் அனுபவமும் கிட்டத்தட்ட இதேபோன்றதுதான். நானாக சொந்தமாக புத்தகம் வாங்கி கற்றுக் கொண்ட மொழி விபி6 தான். அதில் கற்ற அடிப்படைகள்தான் நல்ல அடித்தளம் அமைத்துக் கொடுத்திருக்கிறது. ஜாவாவில் கூட கொஞ்சம் படித்து அதனுடன் குப்பைக் கொட்டியிருக்கிறேன், கடைசிவரை மருந்துக்குக் கூட எட்டிப் பார்க்காத மொழி சி++. நீங்கள் வெளியிடாமல் இன்னும் Draftல் புரோகிராமிங் கட்டுரைகள் வைத்திருந்தால் நேரம் கிடைக்கும்போது வெளியிடவும், நிச்சயமாய் யாராவது ஒருத்தருக்காவது பயன்படும்.
ReplyDelete