சாயங்காலம் ப்ளாக்கரை Hack செய்வதைப் பற்றி தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்தேன். முதலில் தீர்மானித்தது தமிழ்மணத்தில் இப்பொழுது புதிதாகச் சேர்த்திருக்கும் "அதிக பின்னூட்டமிட்டவர்கள்" பகுதியை Hack செய்யலாம் என்றுதான் நினைத்தேன்.
ஆசிப் அண்ணாச்சிக்கு "டெஸ்ட் பண்ணுறேன், பப்ளிஸ் பண்ணாதீங்க"ன்னு பின்னூட்டத்தில் ஒரு டெஸ்டிங் வேலை செய்தேன். "Operation Success, patient Died" அப்படிங்கிற மாதிரி டெஸ்டிங் சக்ஸஸ் ஆனாலும் அண்ணாச்சி பின்னூட்டத்த வெளியிட்டுட்டாரு.
அப்படியே இணையத்தில் எங்கடா கோட் கிடைக்கும்னு அலைஞ்சப்ப தான் கிடைச்சது ஒரு அற்புதமான அஜாக்ஸ் கோட். இப்ப என் ப்ளாக்கில் உள்ள "Label" அல்லது "பிரிவுகளில்" ஏதாவது ஒன்னில் கிளிக்கினீர்கள் என்றால் தெரியும் மாஜிக். இந்த மாஜிக் நானாய் செய்ததில்லை. காப்பி-பேஸ்ட் தான், ஆனால் கொடுக்கப்பட்ட கோடை காப்பி-பேஸ்ட் பண்றதுக்குள்ள நான் செத்தே போய்ட்டேன்.
நேத்தும் இப்படித்தான், 1.30 AM க்கு கீதா சாம்பசிவத்தின் "சிதம்பர ரகசியம்" பதிவுக்குள்ள மூக்குமுட்ட முங்கியும், ரகசியம் புலப்படாததால் கடைசியில் அவரிடமே கேட்டுவிட்டேன். அதைப் போலத்தான் இன்றைக்கும். 11.30 PM வரைக்கும் கம்பெனியில் உட்கார்ந்து சரிசெய்து பார்த்தேன். அப்புறம் இது உருப்புடாதுன்னு வீட்டுக்கு வந்த பிறகு, என் தன்மானம்(யாரோ இதைப் பத்தி இன்னிக்கு ஒரு பதிவெழுதியிருந்தாங்க) இடம் கொடுக்காததால். திரும்பவும் ஏகப்பட்ட டிபக்கிங் டூல் எல்லாம் வைத்து ஒருவழியாய் சரிசெய்து விட்டேன்.
அப்பா என்ன ஒரு ஜல்லி. ஹிஹி.
பயர் பாக்ஸில் தெரிகிறது, எக்ஸ்ப்ளோரர் உபயோகிப்பதில்லையாததால் தெரிகிறதா என்று சொல்லவும்.
பிட்(டுப்) போடும் அஜாக்ஸ்
பூனைக்குட்டி
Thursday, June 14, 2007
பூனைக்குட்டி
Primarily a java programmer, an athiest and a film geek, who loves reading, writing and photography.
Related Articles
Subscribe to:
Post Comments
(
Atom
)
Popular Posts
-
வெளியில் சென்று வந்ததும் என்று நினைக்கிறேன் உள்ளே மாலன் வலை நன்னடத்தை தலைப்பில் பேச ஆரம்பித்திருந்தார். அதற்கு முன் ஒரு வார்த்தை, முன்னால் ந...
-
டாப்ஸி, தாகமெடுத்தா பெப்ஸி பாவம் செஞ்சா போகணும் காசி விடுதலைச் சிறுத்தைக்கு ஷார்ட் பார்ம் விசி பிரச்சனை பெரிசானா மேனேஜருக்கு போடணும...
-
It was late 2010, Chennai drowning in 2G rumors and the sticky heat of a city faking it wasn’t falling apart. I’d been plotting this night f...
முன்னாடியும் நால்லாதான் தெரிஞ்சது இப்பவும் நல்லாதான் தெரிகிறது
ReplyDeleteஇது அக்மார்க் ஜல்லி என்பதும் புரிகிறது
உங்க தன்மானத்தை தூங்க விட்டதும் தெளிவாகிறது
//
அண்ணாச்சிக்கு "டெஸ்ட் பண்ணுறேன், பப்ளிஸ் பண்ணாதீங்க"ன்னு பின்னூட்டத்தில் ஒரு டெஸ்டிங் வேலை செய்தேன்.
//
அங்க ரீப்பிட்டேனு ஒன்னு குடுத்தேன் இங்க ஒரு ரீப்பிட்டேய்ய்ய்ய்ய்ய்ய்
:)
மின்னல் புரியலை, வொர்க் ஆகலையா? நீங்க இண்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் உபயோக்கிறீங்களா.
ReplyDeleteஒரு உதவி செய்யுங்களேன், பதிவின் கீழே பிரிவுகள் அப்படின்னு ஒரு அய்ட்டம் இருக்கும், இன்னும் சொல்லணும்னா Only ஜல்லிஸ்னு இருக்கும் அதைக் கிளிக் செய்து பாருங்கள்.
பண்ணிவிட்டு ஒருமுறை ஸ்க்ரோல் பாரை முழுவதுமாக மேலே தூக்கிப் பாருங்கள்.
படுபாவி மோக்னா,
ReplyDeleteஅந்த பின்னூட்டம் தன்னால பப்ளிஷ் ஆயிடுச்சுன்னு சொன்னா நீ நம்பவா போற? ஆனா அதுதான் உண்மை. அதுவும் மின்னுது மின்னல் நான் பப்ளிஷ் பண்ணாமலேயே எப்படி ரிப்பிட்டே போட்டாருன்னு தெரியலை.
எவம்லே என் பதிவை ஹேக் பண்ணது?
சாத்தான்குளத்தான்
எக்ஸ்ப்ளோரர் ஆப்பு வச்சுடுச்சு போல மோக்னா. ஒன்லி ஜல்லிஸை Kலிக்கிட்டு மேலே போனா 'ஐய்யய்யோ வொர்க் ஆகலை'ன்னு கட்டட்ம் கட்டி சொல்லுது
ReplyDeleteசாத்தான்குளத்தான்
அப்படின்னா டெஸ்டிங் டபுள் சக்ஸஸ்புல், இனிமேல் ஒரு Hacking தான். ஹாஹா
ReplyDeleteஎன்னை வச்சு எலி சோதனை பண்றிய நீ? என்ன உலகம் சுற்றும் வாலிபன்ல எம்ஜியார் சொன்னா மாதிரி சக்ஸஸ்ங்குற. ஒரு மண்ணும் புரியலை.ஏதோ பாத்து செய்டே.. பாரிஸ் ஹில்டன் அது இதுன்னு ஒரு மார்க்கமாத்தான் திரியுற.
ReplyDeleteசாத்தான்குளத்தான்
அப்ப எக்ஸ்ப்ளொரர் ஊத்திக்கிச்சு.
ReplyDeleteஅதுக்கு ஏதாவது வழியிருக்கான்னு பார்க்குறேன்.
ஃபயர் பாக்ஸில் பாஸ்.
ReplyDeleteவின் 95 IE யில் பெயில்.
நல்லா இருக்கு,ஆனா எதுக்கு இவ்வளவு கஷ்டப்பட வேண்டும் என்று தோனுகிறது.
மோகன்தாஸ் said...
ReplyDeleteமின்னல் புரியலை, வொர்க் ஆகலையா? நீங்க இண்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் உபயோக்கிறீங்களா.
///
ஆமப்பா ஆமா..
///
ஒரு உதவி செய்யுங்களேன், பதிவின் கீழே பிரிவுகள் அப்படின்னு ஒரு அய்ட்டம் இருக்கும், இன்னும் சொல்லணும்னா Only ஜல்லிஸ்னு இருக்கும் அதைக் கிளிக் செய்து பாருங்கள்.
///
சரி கிளிக்கியாச்சி
///
பண்ணிவிட்டு ஒருமுறை ஸ்க்ரோல் பாரை முழுவதுமாக மேலே தூக்கிப் பாருங்கள்.
///
page conn't be display...:(
'ஐய்யய்யோ வொர்க் ஆகலை'ன்னு கட்டட்ம் கட்டி சொல்லுது
ReplyDelete//
ரீப்பிட்டேய்
இது போல சில வெப்ஸைட்டுகளும் இருக்கு ஒரே ஸைட்டு IE ல ஒரு கலருலையும் firefox ல் வேற மாதிரியும் தெரியும் நீங்க IE க்கு எழுதுன கோடு சக்சஸ் தான் ..:)
ReplyDelete(என் அறிவுக்கு அவ்வளவு )