இப்பொழுது நடக்கப்போகும் ஜனாதிபதி தேர்தல் எவ்வளவு முக்கியமானது என்று எல்லோருக்குமே தெரிந்திருக்கும். இந்த UPA ஆட்சிக்குப் பிறகு வரப்போகும் நாடாளுமன்றத் தேர்ததில் பிஜேபிக்கும் சரி, காங்கிரஸ்க்கும் சரி பெரும்பான்மை கிடைக்கப் போவதில்லை. இப்பொழுது இருக்கும் அளவிற்குக் கூட கிடைக்கப்போவதில்லை.
அதனால் இப்பொழுது தேர்ந்தெடுக்கப் படப்போகும் ஜனாதிபதியைப் பற்றிய கேள்விகள் அதிகமாய் யோசனைகள் நிலவுகின்றன. இதனால் தான் கலாமை ஜனாதிபதியாக்கக்கூடாதென சொன்னதாகக் கூட செய்திகள் வெளிவந்தன.
சமூக நல நோக்கர்களிடம் இருந்து அரசியல்வாதியாக இருக்கும் ஒருவர் இந்தப் பதவிக்கு வரக்கூடாதென்றும் எண்ணங்கள் வெளிப்பட்டன. ஆனால் ஜனாதிபதியைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பில் உள்ள அரசியல் வாதிகள் அதற்கு உடன்பட மறுக்கிறார்கள். இதுவும் அவர்களுக்கு அரசியல் செய்யும் வாய்ப்பு அவ்வளவே. நம்ம கருணாநிதி தாத்தா கூட டெல்லிக்கு ரொம்ப சீரியஸா ஜனாதிபதிய தேர்ந்தெடுக்கப் போனதுக்கான காரணம் இதுதான். வரும்காலத்தில் பிரதமரை தேர்ந்தெடுக்கும் குழுவாக ஏதாவது ஒன்று அமையுமானால் அப்பொழுது தானும் முக்கியமானவர் என்பதை இப்பொழுதே சொல்லத்தான் தலைவர் போயிருக்கிறார்.
இது போன்ற காரணங்களினால் தான் வரப்போகிறவர் பெண் ஜனாதிபதியாகவோ இல்லை ஆண் ஜனாதிபதியாகவோ இல்லை யாராகவோ இருந்துவிட்டுப் போகட்டும் ஆனால் சுயமாய்ச் சிந்தித்து முடிவெடுப்பவராய் இருக்க வேண்டும் என்கிறேன். எல்லாம் வல்ல ஆண்டவன் தற்பொழுது அடிபடும் இரண்டு பெண் பெயர்களுக்கும் மற்ற ஆண் பெயர்களுக்கும் அந்த வலிமையை நல்குவானாக.
சாதாரணமாகவே நம்ம நாட்டின் ஜனாதிபதிக்கு ரப்பர் ஸ்டாம்ப் என்ற பெயர் உண்டு. என்ன தான் Supreme Commander of the Indian Armed Force ஆகயிருந்தாலும், கொலு பொம்மைதான் ஜனாதிபதிகள்.
இப்ப ஒரு பெண் ஜனாதிபதி ரொம்ப முக்கியமா?
பூனைக்குட்டி
Thursday, June 14, 2007
பூனைக்குட்டி
Primarily a java programmer, an athiest and a film geek, who loves reading, writing and photography.
Related Articles
Subscribe to:
Post Comments
(
Atom
)
Popular Posts
-
Next morning, I cornered Visu—eyes sharp, voice low, catching him sprawled on the couch, wireless headphones still on, eyes bleary like he h...
-
"என் வயசு என்னயிருக்கும் சொல்லுங்க பார்ப்போம்!" எனக்கு சாமியார்களின் மீது நம்பிக்கையே கிடையாது, பொய் சொல்கிறவர்கள், மக்களை ஏமாற்ற...
-
இங்க இப்படி ஒரு ஐட்டம் இருக்கிறதென்பதே மறந்து போயிருந்தது. காந்தாரா படமல்ல பொன்னியின் செல்வன் படம் தான் என்னை ப்ளாக் பக்கம் திருப்பியது, ஆனா...
//யாராகவோ இருந்துவிட்டுப் போகட்டும் ஆனால் சுயமாய்ச் சிந்தித்து முடிவெடுப்பவராய் இருக்க வேண்டும் என்கிறேன்.//
ReplyDeleteதலைப்புக்கும் இந்த மேலுள்ள வரிக்கும் முடிச்சு போட்டு பாத்தா, பெண்கள் சுயசிந்தனை அற்றவர்கள் என்று உணர்த்துவது போலுள்ளதே? எதுக்கும் பொதுமாத்துக்கு தாயாராகுங்க :)
ஒன்னே ஒன்னு எனக்கு தெரிஞ்சு போச்சு!
ReplyDeleteநீயு ரொம்ப வெட்டியா இருக்கன்னு! சரி தானே?! :)))
உலக அரங்கில்
ReplyDeleteதாடியை வைத்துத்தான்
சொல்லமுடிகிறது
இது ஆடு என்று!
தலைப்பு ரொம்ப கேவலமா இருக்கு.
ReplyDeleteபொம்மை ஆணா இருந்தா என்ன,
ReplyDeleteபெண்ணா இருந்தா என்ன?
ரெண்டுமே கீ குடுத்தா ஆடும்.