In சொந்தக் கதை

என்னைப் பற்றி பெருமைப்பட இருக்கும் விஷயங்கள் எட்டு

பெரிய கைகளின் தொடக்கத்தில் இருந்து வந்திருக்கிறது இந்த விளையாட்டு, என்பதால் மட்டுமே இதை மறுக்க இயலாமல் தொடருகிறேன். ஒரு விஷயம் நான் இதுவரை பெருமைப் படும்படி எட்டு விஷயங்கள் எதுவும் செய்யவில்லை.

என்னை இந்த ஆட்டத்தில் சந்தோஷும், ப்ரசன்னாவும் இழுத்துவிட்டிருந்தார்கள். Grrr. அதை மறந்திட்டேன்.

பிற்காலத்தில் நான் பெருமைப் படும்படியாக செய்ய இருக்கும் நினைத்திருக்கும் எட்டு விஷயங்களை வேண்டுமானால் சொல்கிறேன்.

1) எப்பாடுபட்டாவது கடைசி வரை சிகரெட் தண்ணி அடிக்காமயிருக்கணும்.

2) நல்லபடியா கல்யாணம் செய்து கொண்டு நல்ல கணவனாய் நடக்கணும்.

3) கடைசி வரைக்கும் அம்மாவை பார்த்துக்கணும்.(பெண்டாட்டியுடன் பிரச்சனை இதனால் வருமென்றால் எத்தனை பொய் சொல்லியாவது. இரண்டு பேருக்கும் நல்லவனாயிருக்கணும்).

4) Giving back to the society அப்படிங்கிற கான்செப்டில் நம்பிக்கை அதிகம் இருந்தாலும் இதுவரை அதற்கான இனிஷியேட்டிவ் எடுக்காமல் இருக்கிறேன். அப்படி இல்லாமல் என் மனசு பெருமைப்படும் அளவிற்கு திரும்பித் தரணும்.

5) இவனால கெட்டழிஞ்சாங்க நாலு பேர்னு இல்லாமல் என்னால நல்ல நிலைமைக்கு வந்தாங்க நாலு பேர் அப்படின்னு பேர் வாங்கணும்.

6) எனக்கு சாப்பாடு போட்டு, வாழ்க்கை கொடுத்த ஜாவாவிற்கு என்னால் எதுவும் செய்ய முடியுமென்றால் செய்ய வேண்டும்.

7) அதிகமா வாழ்ந்து யாரையும் நச்சு பண்ணாம உடல்நிலை திடமாயிருக்கிற வரை உயிர்வாழ்ந்து நல்லபடியா இதே திடகாத்திரமான உடல்நிலையோட யாருக்கும் பிரச்சனை எதுவும் செய்யாமல்(இதில் எனக்குப் பிறக்கப் போகும் குழந்தைகளும், மனைவியும் அடக்கம்) இறந்துடனும்.

8) கடைசி வரைக்கும் நாத்தீகனா இருக்கணும்.

அவ்வளவு தான்.

தொடர அழைப்பவர்கள் :-

1. பிகேஎஸ் அண்ணாச்சி
2. ஹரன்பிரசன்னா அண்ணாச்சி
3. கேவிஆர் அண்ணாச்சி
4. பெயரிலி அண்ணாச்சி
5. மதுரா அக்காச்சி
6. சயந்தன் அண்ணாச்சி
7. வசந்தன் அண்ணாச்சி
8. ஜெயஸ்ரீ அக்காச்சி

விளையாட்டின் விதிகள்:

1. ஆடுபவர் தான் பெருமைப்படும் 8 விஷயங்களை எழுத வேண்டும், அதன் கீழ் இந்த விதிகளையும் எழுதவேண்டும்.
2. தொடர்ந்து எட்டுபேரை இந்த விளையாட்டிற்கு அழைக்க வேண்டும்; அவர்களுக்கு இந்த அழைப்பைப் பற்றி அறியத் தரவேண்டும்.
3. தொடர்பவர்(கள்) இதேபோல் எட்டு தகவல்களையும், விதிகளையும் எழுதி வேறு எட்டுபேரை அழைக்க வேண்டும்

PS: யாரையும் நான் வற்புறுத்துவதில்லை இந்தமாதிரி விளையாட்டுக்கள் ஆட என்பதால், அவர்கள் விரும்பினால் தொடரலாம்.

Related Articles

13 comments:

  1. நினைப்பவை யாவும் கைகூட வாழ்த்துக்கள் மோகனா.

    ReplyDelete
  2. கூப்பிட்டதெல்ல்லாம் ஒரே மரத்தடி கோஷ்டியா இருக்கே? ஏதேனும் காரணம் இருக்கா?

    பெரிய கைகளின் கையில் இருந்து என்ற வாக்கியத்தோடு உடன்படமுடியவில்லை மோகனா. அது என்ன பெரிய கை, கால் எல்லாம்?

    நல்ல கணவனா இருப்பது - ஹிஹி. பயம் காட்ட வேணாமேன்னு பாக்குறேன். நல்லா இருடே!! அவ்வளவுதான் சொல்ல முடியும்

    சாத்தான்குளத்தான்

    ReplyDelete
  3. படிச்சதிலேயே இதுதான் வித்தியாசமான எட்டு. நடந்ததை சொல்லாமல் நடக்கும் என்ற நம்பிக்கையில் சொல்லியிருக்கீங்க - பிடிச்சிருக்கு. வாழ்த்துகள்.

    ReplyDelete
  4. மோகன் = வித்தியாசம்.

    ReplyDelete
  5. லக்ஷ்மி என்னாத்த சொல்றது ஏகவல்லோன் எல்லாம் வல்ல இறைவன் அதற்கு உதவட்டும் ;)

    ReplyDelete
  6. இல்லை அண்ணாச்சி நாம் கூப்பிடறவங்களை யாரும் கூப்பிட்டிருக்க கூடாதுன்னு நினைப்பேன் அது முதல்ல.

    அப்புறம் பிகேஎஸ்ஸையும், பிரசன்னா, கேவிஆர், ஜெயஸ்ரீயை ஏதாவது வம்பில் மாட்டிவிடுறதுன்னா ரொம்ப பிடிக்கும் அது இரண்டாவது காரணம்.

    நான் சைக்கிள் கேப்பிள் பெரிய கைகளை வம்பிழுத்ததை மறைச்சிடலாம்னு பார்த்தா போட்டுக் கொடுக்குறீங்களே.

    ReplyDelete
  7. ஜெஸிலா, ப்ரசன்னா வித்தியாசமா தெரியணுங்கிறதுக்காக இப்படி எழுதலை நிச்சயமா ;)

    அதுவா வந்துடுச்சு

    ReplyDelete
  8. நல்லா இருக்குங்க நீங்க போட்ட 8,

    //இல்லை அண்ணாச்சி நாம் கூப்பிடறவங்களை யாரும் கூப்பிட்டிருக்க கூடாதுன்னு நினைப்பேன் அது முதல்ல. //

    மதுராவை நான் கூப்பிட்டுட்டேனே?..

    //நல்லபடியா கல்யாணம் செய்து கொண்டு நல்ல கணவனாய் நடக்கணும்.//

    ரொம்ப கஷ்டம்.. உங்க மேல தப்பு இல்லைங்க பெண்கள் அப்படி...:)

    //(பெண்டாட்டியுடன் பிரச்சனை இதனால் வருமென்றால் எத்தனை பொய் சொல்லியாவது. இரண்டு பேருக்கும் நல்லவனாயிருக்கணும்).//

    ம்ம்..எத்தனை பொய் சொல்லியாவது ஓகே...ஆனா அது எப்பவாவது தெரிஞ்சிட்டா... இரண்டு பேருமாக சேர்ந்து......:)))

    படிக்க நல்லா இருக்கு, எனக்கு நல்லா மனைவியா வரணும்னு கேட்காம.. நீங்க உங்களை மாற்றிக்கொள்ளனும்னு நினைக்கறது நல்லா இருக்கு. எல்லாம் நல்லபடியாக அமையும்.

    //அதிகமா வாழ்ந்து யாரையும் நச்சு பண்ணாம உடல்நிலை திடமாயிருக்கிற வரை உயிர்வாழ்ந்து நல்லபடியா இதே திடகாத்திரமான உடல்நிலையோட யாருக்கும் பிரச்சனை எதுவும் செய்யாமல்(இதில் எனக்குப் பிறக்கப் போகும் குழந்தைகளும், மனைவியும் அடக்கம்) இறந்துடனும்.//

    நான் எப்பவும் இப்படி நினைப்பதுண்டு, ரொம்ப வயதாகி நம் குழந்தையின் வீட்டு திண்ணைக்கு பாரமாகி, அல்லது ஏதோ ஒரு முதியோர் இல்லத்தில் பாசத்திற்காக ஏங்கின்னு இருக்ககூடாது நினைப்பேன்.

    ReplyDelete
  9. அண்ணாத்தே.... அதெல்லாம் கெடக்கட்டும்.... நம்மத் தங்கத்தலைவி பாரீஸ் ஹில்டனை அவுத்து விட்டுட்டாங்க தெரியுமா? மணிக்கு 80 கிலோமீட்டர் வேகத்துல உங்க வீட்டுக்குத்தான் வந்துகிட்டு இருக்காங்க...

    செய்திகளை முந்தி தருவது
    சின்ன சாத்தான்குளத்தான்

    ReplyDelete
  10. Dear Mohan, Thanks for your invite. But I dont have any 8 which I am proud of. Sorry. Hope you wont mistake me.

    ReplyDelete
  11. thamizachchi akkaachchi innum thamiz bloggaachchikku backalanrathaala, so far no eightoo rightingoo ...
    kavi kUta kUppitturukkaanGka ...

    Those were excellant eight to aim for Mohan! Reality always gets better than what we can dream about. You have dared to dream high and reality will take you higher.

    aiy, Naan thaan inGkittu chaathaankuLathaachchinGkO ... mUnNaavathu? athu aaru iranNtaavathu chinnu Namma kuLaththilaruNthu anNnNaachchi?! :)

    ReplyDelete
  12. மோகன்,
    இப்போதுதான் உங்கள் தனிமடல் பார்த்தேன். அதன்வழி இப்போதுதான் இவ்விடுகைக்கு வந்தேன்.

    அழைப்புக்கு நன்றி.
    நான் எழுதுவேனா இல்லையா என்பது எனக்கே தெரியாது. (இனியொரு காலத்தில் பெருமைப்படும் நிகழ்வுகளுக்குள் நீங்கள் அழைத்து எழுதாமல் விட்டதையும் குறிப்பிடக்கூடும். வேறு யார் யாரெல்லாம் அழைத்திருக்கிறார்களோ தெரியாது.)

    ஆசிப்மீரான்,
    மற்றவர்களைப் பற்றித் தெரியாது. ஆனால் நானும் சயந்தனும் 'மரத்தடி'க் குழுவில் வருகிறோமா?

    ReplyDelete
  13. நீங்க சொல்லியிருக்கறதில 3&4 எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. எல்லாம் நினைத்தபடி நடக்க வாழ்த்துக்கள் !

    ReplyDelete

Popular Posts