இங்கே பெங்களூருவில், INOX தியேட்டர் காம்ப்ளக்ஸில் சிவாஜி ரிலீஸாம். நாளை ரிலீஸுக்கு இன்னிக்குத்தான் டிக்கெட் கொடுக்கிறார்களாம். நாமத்தான் தமிழ்நாடு போறோமே; நம்ம ப்ரண்ட் ஒருத்தன் போய் வந்திருந்தான். டிக்கெட் 10.30 கொடுப்பதாகச் சொல்லியிருந்தார்களாம். நம்பாளு 8.30க்கு போயிருக்கான், 500 நின்று கொண்டிருந்தார்களாம். நம்ப பையன் திரும்ப வந்துட்டான். வேறயாரு என்கூட கோயம்புத்தூர் வந்த அதே நபர் தான். இப்ப ஒசூர் போய் பார்க்கப் போறதா சொல்லிக் கொண்டிருக்கான்.
நான் இப்ப சொல்றேன், அப்படின்னு சொல்லுறதுக்குள்ள ஒரு வாரத்துக்கு பெங்களூரில் புக் ஆய்டும் பாருங்க. சொல்லப்போனால் தமிழ் மக்களை விட கன்னடக்காரர்கள் தான் அதிகம் டிக்கெட் வாங்கியிருப்பார்கள். ஏன்னா கன்னடப் படம் பார்த்துப் பார்த்து செத்து சுண்ணாம்பா ஆய்ருப்பாங்க அவங்க.
என்னைப் பொறுத்தவரை சிவாஜி பாடல்களும் சரி டிரைலரும் சரி அத்தனை தூரம் கவரவில்லை, வேண்டுமானால் என்னுடைய எல்லைகள் விரிவடைந்தது காரணமாகயிருக்கலாம். எல்லோரையும் போல் இந்த விஷயத்தில் சும்மா சொல்லமுடியலை, எனக்கென்னமோ ரஹ்மானை விடவும், ஹாரிஸிடம் கொடுத்திருந்தால் இன்னும் நச் பாடல்கள் கிடைத்திருக்கும் என்ற எண்ணம் உண்டு. படம் அப்படி என்னை ஏமாற்றாது என்றே நினைக்கிறேன். அப்படியும் அன்னியன் என்னை அவ்வளவாக இம்ப்ரஸ் செய்யவில்லை.
டிரைலரும் அத்தனை பிரகாசமாகயில்லை. இவர்களை எல்லாம், ஆங்கிலம் என்னா இந்தி பட டிரைலர்களை பார்க்க அனுப்ப வேண்டும். தூம் 2 ன்னு ஒரு பக்வாஸ் படத்துக்கு அவங்க கொடுத்த டிரைலரைப் பார்க்கணுமே. சூப்பராகயிருந்தது.
இங்கே எப்பொழுதும் ஒரு விஷயம் பேசப்பட்டுக் கொண்டேயிருக்கிறது, அது மற்ற கஷ்டப்படும் பொழுது உங்களால் எப்படி சந்தோஷமாக பார்க்க முடிகிறது என்று. உலகம் தோன்றிய நாள் முதற்கொண்டே பிரச்சனைகள் இல்லாமல் இருந்ததில்லை, நீங்கள் பிரச்சனைகளையே பார்த்துக் கொண்டிருந்தால் சரிவராது என்பது என் எண்ணம். நேற்று சயந்தன் போட்ட ஒரு வீடியோ பதிவில் குறிப்பிட்டிருந்ததைப் போல, கொழும்பில் மக்களிடம் இருக்கும் பீதியோ, பயமோ விடுதலைப் புலிகள் வாழும் பகுதியில் உள்ள மக்களிடம் இல்லை என்று.
புலிகளை விடவும் திறன் அதிகம் வாய்ந்த ஆயுதங்களையும் விமானங்களையும், அனைத்துலக ஆதரவையும் பெற்றிருந்தும் ஏன் சிங்களவர்களால் நிம்மதியாகயிருக்க முடியவில்லை. என்னக்கென்னமோ ஒரு விஷயம் தான் படுகிறது உங்களின் சோகமே பெரிய கதையாக இருக்கும் பொழுது, மற்றவர்களின் சோகங்களைப் பார்த்து பரிதாபப்படவும், உங்களின் கையாலாகாத்தனத்தை நினைத்து வருத்தப்படவும் மட்டுமே முடியும். அந்த வேதனையும் வலியும், வருத்தமும், சிந்தனையும் எனக்கு சிவாஜி பார்க்கும் பொழுது கூட இருக்கும்.
Entertainment என்ற ஒரு விஷயம் தமிழ்நாட்டில் வித்தியாசமாக இருக்கிறது.
சிவாஜி எதிர்பார்ப்புகள் மற்றும் அப்டேட்ஸ்
பூனைக்குட்டி
Thursday, June 14, 2007
பூனைக்குட்டி
Primarily a java programmer, an athiest and a film geek, who loves reading, writing and photography.
Related Articles
Subscribe to:
Post Comments
(
Atom
)
Popular Posts
-
இன்னும் படித்துக்கொண்டிருக்கும் என் அக்காவிற்கு நேற்றிரவு நாய்கள் என்னைப்பார்த்தது நக்கலடிப்பதாய்ப்பட்டது தெரியப்போவதில்லை உள்ளிருப்பது த...
-
"முரளீதரனைப்பற்றி என்ன நினைக்கிற சொரூபா?" "கள்ளனண்னா அவன், தமிழனே கிடையாது அவனும் சிங்களவன்தான்." சில காலமாகவே எனக...
-
அதாவது நான் சொல்லவந்தது என்னன்னா? இரண்டொறு வாரத்திற்கு முன்னாடி ஒளியின் வேகம் குறைக்கப்பட்டது அப்படின்னு ஒரு கட்டுரையைப்போட்டேன், அதை போடுறத...
முத நாளே அடிச்சு புடிச்சு போயி ப்ளாக்'ல டிக்கெட் வாங்கி.. 'வேதனையும் வலியும், வருத்தமும், சிந்தனையும' அனுபவிப்பீங்களா.. :) பரவாயில்லையே :)
ReplyDeleteஅண்ணாச்சி சாதாரணமா சொல்றீங்கன்னா சரி, இல்லை நக்கல் பண்றீங்கன்னா சொல்றேன்.
ReplyDeleteஎன்னைப் பொறுத்தவரை எல்லா விஷயங்களுமே தொடர்புடையவை தான்.
//முத நாளே அடிச்சு புடிச்சு போயி ப்ளாக்'ல டிக்கெட் வாங்கி.. 'வேதனையும் வலியும், வருத்தமும், சிந்தனையும' அனுபவிப்பீங்களா.. :) //
அனுபவிப்பனா மாட்டனாங்கிறத நானோ இல்லை நீங்களோ கூட தீர்மானிக்க முடியாது. அது தானா நடக்கும் ஆனால் நடக்கும் என்று நான் எதிர்பார்க்கிறேன், நடந்தும் இருக்கிறது.
நக்கலா தான் சொன்னேன் :)
ReplyDelete//அனுபவிப்பனா மாட்டனாங்கிறத நானோ இல்லை நீங்களோ கூட தீர்மானிக்க முடியாது. அது தானா நடக்கும் ஆனால் நடக்கும் என்று நான் எதிர்பார்க்கிறேன், நடந்தும் இருக்கிறது.//
ஒத்துகிடுறேன்..
இங்கயும் நடந்திருக்கு. இந்த தடவையும் நடந்திருக்கும், இந்த 'ஆல்ஃபா' மட்டும் இல்லையின்னா ;)
சிவாஜி யின் இம்சை இம்சையோ இம்சை
ReplyDeleteசிவாஜி யின் இம்சை இம்சையோ இம்சை
சிவாஜி யின் இம்சை இம்சையோ இம்சை