நான் ஒரு மாதிரியாக, பிஎஸ்ஸி கம்ப்யூட்டர் சைன்ஸ் படித்துமுடித்துவிட்டு தமிழ்நாடு எக்ஸ்ப்ரஸ் ஏறியதைப் பற்றி குறிப்பிட்டிருந்தேன். எனக்கு நிச்சயமாய் வேலை கிடைக்கும் என்பதில் எனக்கு அதுவரை சந்தேகமேயிருந்ததில்லை; இத்தனைக்கும் பன்னிரெண்டாம் வகுப்பு வரை தமிழ்மீடியம், கல்லூரியில் பரிட்சைகள் ஆங்கிலத்தில் எழுதுவோம் என்றாலும் பேச்சுவார்த்தைகள் எல்லாமே தமிழ்தான். செமினார்கள் கூட தமிழில் தான் எடுத்ததாக ஞாபகம். எனக்கு பிரச்சனையில்லாமல் வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கை(வேண்டுமானால் மூடநம்பிக்கை) எங்கிருந்து வந்தது என்று தெரியாது.
எல்லாவற்றிற்கும் சேர்த்து ஆப்பு வைத்தது என்னுடைய முதல் மாத டெல்லி அனுபவங்கள் என்று சொல்லலாம். டெல்லிக்குள் வந்ததும் தான் பிரகாசமாகப் புரிந்தது ஆங்கிலம் நமக்கு சுத்தமாக வராததும், அப்படி வரும் ஒன்றிரண்டு வாக்கியங்களைப் பேசவும்; எங்கே கிரமேட்டிகள் மிஸ்டேக்ஸ் வந்திடிமோ என்ற பயம். 9 - 10 வகுப்புகள் படிக்கும் பொழுது பாலாஜி வாத்தியார் இங்க்லீஷ் கிராமர் கத்துக்கோ கத்துக்கோன்னு பிரம்பால அடிச்சும் கத்துக்கலைன்னு அப்பத்தான் வருத்தப்பட்டேன்.
முதலில் பிஎஸ்ஸி கம்ப்யூட்டர் சைன்ஸ், ப்ரஷ்ஷர் என்றால் உள்ளேயே விடமாட்டார்கள். அப்படி இப்படின்னு உள்ளே போய் இன்டர்வியூவிற்குள் போனால், அவர்கள் கேட்கும் கேள்விக்கு பதில் தெரியும் ஆனால் அதை ஒரு சொற்றொடராக அமைத்து ஆங்கிலத்தில் சொல்லத் தெரியாது. இத்தனைக்கும் கடைசி வருட பரிட்சைகளில் ஆங்கிலத்தில் தான் பொளந்து கட்டியிருந்தேன், எல்லா பேப்பர்களுக்கும் குறைந்தது 70 பக்கம் எழுதுவேன். ஆறு அடிஷினல் இல்லாமல் நான் பேப்பர் கட்டிக்கொடுத்த வரலாறே இருக்காது.
நான் சீரியஸாக VBயில் வேலை தேடிக்கொண்டிருந்தேன், என்னைப் பொறுத்தவரை அந்தச் சமயத்தில் VBயில் தெரியாததே கிடையாது என்ற எண்ணம். ஏன் என்றால் ஒரு ரியல் டைம் ப்ராஜக்ட் செய்த காரணம். அது ஒரு கதை, பிஎஸ்ஸி பைனல் இயர் ப்ராஜக்ட் செய்ய நான் இரண்டாம் ஆண்டே தயாராகியிருந்தேன். அப்பொழுது மாமாவின் நண்பர் என்ற முறையில் அறிமுகமான ஒருவர் தான் ஒரு கம்பெனி நடத்திவருவதாகவும் அதற்கு ப்ரொஜக்ட் செய்து தரவேண்டும் என்றும் சொல்லியிருந்தார். அப்பொழுதே அந்த நண்பருடன் உட்கார்ந்து டேட்டாக்களை எல்லாம் கலெக்ட் செய்து ஸ்கீரின் எல்லாம் பேப்பரில் வரைந்து காட்டியிருக்கிறேன். பின்னர் இரண்டு நாளில் அவர் சொன்ன ஸ்கிரீனை VBயில் காட்டுவேன்.
அவர் கம்ப்யூட்டர் நன்கறிந்த ஒருவர் என்பதாலும், அவருடைய ரெக்வைர்மென்ட் நன்றாகத் தெரிந்தவர் என்பதாலும் ஸ்கிரினில் சில மாற்றங்கள் சொல்வார். சொல்லப்போனால் Functionality கூட பிரச்சனையாயிருக்காது சில இந்த மாற்றங்கள் படம் காண்பிக்கும். ஒரு உதாரணம் சொல்கிறேன். ஒரு ஸ்கிரினில் சர்ச்(Search) பட்டன் இருக்கிறது நீங்கள் உங்கள் கஸ்டமர்களை தேடப் போகிறீர்கள் இதுதான் கிரைட்டீரியா. நான் நீங்கள் பேரை "Mohan" என்றோ இல்லை "Mohandoss" என்றோ எழுதி தேடினால் கிடைப்பது போல் கோட் எழுதியிருந்தேன். அந்த நபர் கேட்டது, "M" என்று நான் டைப் செய்ய ஆரம்பித்ததுமே அந்த டெக்ஸ்ட்பாக்ஸில் கீழே ஒரு டிராப் டவுன் பாக்ஸ் போல வந்து "M" ஆரம்பிக்கும் பெயர்களைக் காட்ட வேண்டும். இப்படியே தேடும் நபர் ஒவ்வொரு கேரக்டராக டைப் செய்ய கீழிருக்கும் டிராப்டவுன் மாற வேண்டும்.
சொல்லப்போனால் தற்சமயம் நான் வேலை செய்யும் கம்பெனியில் கூட இந்த ஒரு Functionality செய்ய தனியாய் ஒரு நபர் போட்டு, தனியாய் ஒரு யூஸ்கேஸ் போட்டுச் செய்வார்கள். நான் அப்பொழுது இந்த விஷயத்தைச் செய்துகாட்டினேன் அவருக்கு, இப்படி நிறைய உதாரணங்கள் சொல்லலாம். ஆனால் அவர் கேட்ட பலவிஷயங்களை செய்யவில்லை என்பது தான் உண்மை. சொல்லப்போனால் Google இம்ளிமெண்ட் செய்திருக்கும் Fuzzy Logic க்கை என்னை இம்ளிமென்ட் செய்யச் சொன்னார் மனிதர். அதெல்லாம் ரொம்பவும் பெரிய விஷயம் நான் கல்லூரியில் படித்த பொழுது.
ஆனால் நல்ல அனுபவத்தைக் கொடுத்திருந்த அந்த கோடிங் எக்ஸ்பீரியன்ஸ் தான் என்னிடம் VBயில் எதை வேண்டுமானாலும் செய்துவிட முடியும் என்ற தலைக்கனத்தைக் கொடுத்திருந்தது. இன்றும் நீங்கள் ஒரு பெரிய அப்ளிகேஷனை என்னிடம் கொடுத்து VBயில் செய்யச் சொன்னால் சுலபமாகச் செய்துவிடுவேன், அதுவும் இன்டர்நெட்டுடன் கூடிய கம்ப்யூட்டரில் கொஞ்சம் லாஜிக்கலாக யோசிக்கத் தெரிந்த யாருமே ப்ரொக்கிராம் சுலபமாக எழுதிவிடலாம், கூகுளாண்டவர் துணையால். சரி விஷயத்திற்கு.
நான் மட்டும் VBயில் Bsc ப்ரொஜெக்ட் செய்திராமல் VB.net செய்திருக்கணும் என்று கிருபா ஷங்கரைப் போல், ஜாவாவை வெறுப்பனாக இருந்திருப்பேன். என் அதிர்ஷ்டம்(அந்தக் காலத்தில் துரதிஷ்டம்) VBயில் ப்ரொஜக்ட் செய்திருந்தேன். VBயிலுமே எந்த வேலையாயிருந்தாலும் செய்துவிடமுடியும் என்ற நம்பிக்கையிருந்தாலும் அதை என்னால் என்னை Interview செய்பவரிடம் வெளிக்காட்ட முடிந்ததில்லை. என்மேலேயே எனக்கு கோபம் வந்த நாட்கள் அவை. ஆனால் சின்னப் பையன் என்பதால்(அப்பொழுதுதான் இருபது வயது எனக்கு) யாரும் வம்பிழுக்கவில்லை ஆரம்பத்தில், ஆனால் எல்லோருக்குமே நன்றாகத் தெரிந்திருந்தது ரொம்ப சீக்கிரம் நான் நல்லா வந்திடுவேன்னு.
இப்படியாக நான் VB படித்துவிட்டு இன்டர்வியூ கிடைக்காமல் அலைந்த பொழுது தான் என் மாமா டெல்லிக்கு வந்திருந்தார். அவருக்கு VBன்னாலே ஆகாது மைக்ரோசாஃப்ட், பில்கேட்ஸ்ன்னா உதைக்க வருவார். சரி ஏதாவது ஒரு கோர்ஸ் மாதிரி படிச்சு வேலை வாங்கிடலாம் அப்படின்னு சொன்னவர் என்னிடம் கேட்டார் எதைப் படிக்க விரும்புற என்று, VB.net ஆ Java, J2EE ஆ என்று. அவருக்கு இந்தச் சமயத்தில் எல்லாம் சந்தேகம் வந்திருந்தது ஒரு வேலை இவன் சாஃப்ட்வேருக்கு லாயக்கில்லையோ என்று. இப்படியாக மாமாதான் உனக்கு Java, J2EE சரிவரும் அதைப் படி என்றார்.
நான் கைக்கு கிடைத்த ஒரு சிறிய வேலையில் சேர்ந்து கொண்டு(மாமா சிபாரிஸில் - நான்காயிரம் சம்பளம்) Java, J2EE படிக்கத் தொடங்கினேன். கம்பெனியில் டப்பா ஸ்விங்ஸ்(Swing) எழுதும் வேலை. என் வாழ்க்கையை திருப்பிப் போட்ட நாட்கள்.
சில இன்டர்வியூ குறிப்புகள்.
1) இப்ப நினைச்சா சிரிப்பு வருது, இன்டர்வியூவில் ஆங்கிலத்தில் பேச பயந்து, இன்ட்ர்வியூவரிடம் இந்தியில் பதில் சொல்லவா என்று கேட்டது. இதில் கூத்தென்னன்னா இந்தியே தெரியாது எனக்கு.
2) மாமா எவ்வளவோ சொல்லியும் இன்டர்வியூ ஏற்பாடு செய்வார்கள் என்பதால், கன்ஸல்டென்ஸிக்காரர்களிடம் காசு கொடுத்து பதிந்து கொண்டது.
3) கேட்கும் கேள்விக்கான பதில் ஓரளவிற்கு தெரியும் என்பதால் அதை என்னுடைய ஓட்டை ஆங்கிலத்தில் எப்பாடுபட்டேனும் சொல்லிவிடுவது, அதுவும் தமிழில் இப்பொழுது எழுதுவது போல் புல்ஸ்டாப்பே இல்லாமல் பேசுவது. அவன் நான் ஆரம்பிச்ச இடம் பேசிக்கொண்டிருந்தது, முடித்தாது எல்லாம் யோசித்தால் தலை சுற்றணும்.
4) தைரியமாக ஓட்டை இந்தியுடன் நார்த் டெல்லி எல்லாம் சென்று அடாத மழையிலும் விடாமல் அடிக்கப்படும் காஜி போல் வேலை தேடியது. ஏன் என்றால் நார்த் டெல்லியில் சுத்தமாக ஆங்கிலம் பேசமாட்டார்கள். எல்லாம் இந்தி தான்.
5) தியரடிக்கலாகப் படிப்பவர்களை நக்கல் செய்வதே பொழப்பு என்பதால், டெல்லியில் இன்டர்வியூ போன பொழுது இரண்டு லைன் கோடு எழுதச் சொன்னால் பேப்பரில் எழுத முடியாது. ஆனால் கம்ப்யூட்டரில் VBயில் செய்துவிடுவேன். பிறகு கற்றுக் கொண்டதுதான் வேறவழியேயில்லை, சில விஷயங்களையாவது கடம் போட்டே ஆகவேண்டும் என்ற விஷயத்தை.
6) வியாழக்கிழமைகளில் காலங்கார்த்தால எழுந்து குளிச்சு, ஷூ எல்லாம் போட்டுக்கொண்டு பேப்பருக்காக உட்கார்ந்திருப்பேன், பேப்பர் வந்ததும் யாராவது வாக்-இன் சொல்லியிருந்தால் உடனே அட்ரஸ்ஸை மட்டும் எழுதிக்கொண்டு கிளம்புவது. ஏன் என்றால் நான் அட்ரெஸ் கண்டுபிடிச்சு போறதுக்குள்ள இன்டர்வியூ முடிஞ்சிறக்கூடாதில்லையா? அதான்.
7) நான் நாலாயிரத்தில் காஜி அடித்துக் கொண்டிருந்த பொழுது, RS 15,000 சாலரியில் கால்சென்டர் வேலைக்கு கூப்பிட்டார்கள்; நல்ல வேலை தப்பித்தேன். எல்லாம் மாமாக்கள் புண்ணியம் தான்.
அடுத்தது ஜாவா படிக்க எங்கிருந்து தொடங்கலாம், எதையெல்லாம் படிக்கலாம் என்பதைப் பற்றி எழுதுகிறேன்.
முன்பு எழுதியவை
(ஜாவா) ப்ரொக்கிராமிங் ஃபார் டம்மீஸ்
என் ஜாவா அனுபவங்கள்
என் முதல் இன்டர்வியூ அனுபவம்(ங்கள்)
பூனைக்குட்டி
Friday, June 22, 2007
பூனைக்குட்டி
Primarily a java programmer, an athiest and a film geek, who loves reading, writing and photography.
Related Articles
Subscribe to:
Post Comments
(
Atom
)
Popular Posts
-
இன்னும் படித்துக்கொண்டிருக்கும் என் அக்காவிற்கு நேற்றிரவு நாய்கள் என்னைப்பார்த்தது நக்கலடிப்பதாய்ப்பட்டது தெரியப்போவதில்லை உள்ளிருப்பது த...
-
"முரளீதரனைப்பற்றி என்ன நினைக்கிற சொரூபா?" "கள்ளனண்னா அவன், தமிழனே கிடையாது அவனும் சிங்களவன்தான்." சில காலமாகவே எனக...
-
அதாவது நான் சொல்லவந்தது என்னன்னா? இரண்டொறு வாரத்திற்கு முன்னாடி ஒளியின் வேகம் குறைக்கப்பட்டது அப்படின்னு ஒரு கட்டுரையைப்போட்டேன், அதை போடுறத...
நல்ல வேளை!! நீங்களும் இந்த தொடரை பாதியிலேயே விட்டிவிட்டீர்களோ என்று நினைத்தேன்.
ReplyDeleteலாசிக்கலா யோசிப்பவர்களுக்கு கூகிளான்டவரிடம் உதவி கிடைக்குமா?தகவல்களுக்கு நன்றி.
குமார், நான் இந்தத் தொடரை விடுவதாக உத்தேசமேயில்லை. தொடர்கதைகளுக்காவது யாராவது ரிப்ளை பண்ணனும்னு ஆள்மனதுக்குள்ள(;)) ஒரு ஆசையிருந்தாலும். இந்தத் தொடருக்கு அப்படியில்லை, சொல்லப்போனால் கிடைச்சிக்கொண்டிருக்கும் வரவேற்புக்கு இன்னும் வேகமாத்தான் எழுதணும்.
ReplyDeleteவரவேற்பே இல்லாமல் நாலு பதிவு போனாலும், நான் ஜாவா பத்தி எழுதணும்னு நினைச்சதை எழுதாம விடமாட்டேன்.
ரொம்ப நல்லா இருக்குங்க உங்க அனுபவங்கள்.....
ReplyDeleteஇப்ப எத்தனி வருஷம் எக்ஸ்பீரியன்ஸ்?, என்னவா இருக்க, பெங்களூர்ல J2EE கன்ஸல்டன்ஸி டீம்-ல வேலை செய்ய விருப்பமா?...சொல்லுங்க, தனிமடல் அனுப்புகிறேன்.
நான் மட்டும் VBயில் Bsc ப்ரொஜெக்ட் செய்திராமல் VB.net செய்திருக்கணும் என்று கிருபா ஷங்கரைப் போல், ஜாவாவை வெறுப்பனாக இருந்திருப்பேன்.
ReplyDeleteஇது என்ன கலாட்டா? நான் ஜாவாவை வெறுக்க எல்லாம் இல்லை. நீங்க வேற. நான் பொட்டி தட்ட ஆரம்பிச்சதே HTML முடிச்சுட்டு appletலதான். ஏதோ கனி இருப்பக்காய் கவர்ந்தற்றுன்னு .NETல க்கீறேன். அதோட, நிறைய freelancing projects எல்லாம் Visual Basicலதான் கிடைச்சுது. நான் முதலில் இருந்த துறை மருத்துவத்துறை ஆவணவாக்கம்.
hi mohan sir...
ReplyDeletethis is sathish.me to an software student.am doing my final year msc software engg in komarapalayam,erode.am regular bloger of arutperungo.now a days ur blogs too.u r rocking..allthe best...am waiting for ur next blogs related to this..pls give some tips and suggestions to my id:csathish.se@gmail.com.
thank u.......