வெற்றி தோல்வி இல்லாத போட்டியொன்றின் முடிவை நிர்ணயிக்கப்போகும் என் இயக்கத்தை தீர்மானிக்கும் வலிமைபெற்றதாய் வீரியம் பெறுகிறது என் இருப்பின் மீதான மற்றவர்களின் கோபம் அடர்கானகத்தின் வழியேயான முடிவென்னும் பெருவெளியை நோக்கிய பயணத்தின் இடையில் இயக்கத்தை நிறுத்த முயலும் அத்தனைப் பொறிகளையும் சுட்டு வீழ்த்தியவனாய் நகர்ந்து கொண்டேயிருக்கிறேன் கடக்கவேண்டிய தொலைவை மட்டுமே கருத்தில் நிறுத்தி சிறிதும் பெரிதுமாய் வண்ணக்குழப்பங்களுடன் கூடியதாய் பல சமயங்களில் பொருந்தாததாயுமான முகமூடிகள் பயணத்தின் நடுவே...
அபூர்வமான ஒரு சமயம் ஒன்றில் நான் தேர்ந்தெடுத்த தொடர்ச்சியான நான்கு அப்பாஸ் கியாரோஸ்டாமியின்(Abbas Kiarostami) படங்கள், திரைப்படங்கள் பற்றி எனக்கிருந்த எண்ணங்களை வெகுவாக மாற்றியது. எதையெல்லாம் திரைப்படமாக எடுக்கலாம் எப்படியெல்லாம் திரைப்படங்கள் எடுக்க முடியும் என்பதைப் பற்றிய என் முடிவுகளை மறுபரிசீலனை செய்ய வேண்டிய நிலைக்கு உள்ளாக்கியது அவரின் படங்கள்.Ten, Close-up, The wind will carry us மற்றும் Where is my friends home...
எக்ஸிஸ்டென்ஷியலிஸம் பற்றி முதலில் தெரிந்து கொண்டது என்றால், நான் வலைப் பதிவில் வந்து சேர்ந்திருந்த சமயம் என்று நினைக்கிறேன். பெரிய ராயர் எக்ஸிஸ்டென்ஷியலிஸம் பற்றி க.பெ.வில் கொளுத்திப் போட அது வலையுலகில் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்தது. எப்பவுமே என்னமோ நோட்ஸ் எடுப்பது போல க.பெவில் வரும் பெயர்களை எடுத்துக் கொண்டு கூகுளில் தேடும் வழக்கம் உண்டு. அன்றும் அப்படித்தான் சார்த்ர்(Jean-Paul Charles Aymard Sartre) வையும் சிமோன்...
கல்யாணம் பற்றிய கனவுகள் இல்லாத யாராவது இருக்க முடியுமா தெரியவில்லை, எனக்கு ஏகப்பட்ட கனவுகள். என்னுடைய பெரும்பான்மையான கனவுகளை நான் மொழிப்பெயர்த்திருக்கிறேன் எழுத்தாக. ஆனால் கனவுகள் தீர்வதாகத் தெரியவில்லை, இதற்கான ஒரே தீர்வு கல்யாணம் செய்து கொள்வதாகத்தான் இருக்க முடியும். கல்யாணத்தையும் பாத்ரூம் செல்வதையும் ஒப்பிட்டு சொல்லப்பட்ட விஷயம் கொஞ்சம் வேடிக்கையானது தான் என்றாலும் யோசிக்கப்பட வேண்டியது. ஏனென்றால் தண்ணியடித்துவிட்டு புலம்பும் எல்லா ஆண்களும் கல்யாணம் ஆனவர்களாகவே...
நண்பர்கள் சிலர் மீள்நட்சத்திரமாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பதிவு போட்டிருந்தார்கள் என்று சென்ஷி சொல்லிக் கேள்விப்பட்டேன். முன்பே சொன்னது போல் இது தொடர்வதில் எனக்கு இருக்கும் பிரச்சனையே. இசை போட்ட பதிவை நான் ரீடரில் பார்ப்பதற்கு முன்பே சென்ஷி சொன்ன காரணத்தால் போய்ப் பார்த்தேன்.நட்சத்திரமாக என்னை மறுமுறை தேர்ந்தெடுத்தற்குக் காரணம் தமிழ்மணம் தான் சொல்ல வேண்டும். ஆனால் என்பக்கத்தில் கிளப்பப்பட்டிருந்த அவதூறை மட்டும் இங்கே சரி செய்து கொள்கிறேன்....
பதினைந்து நாட்களுக்கான ஒரு பயணத்திட்டத்தை எத்தனை நேர்த்தியுடன் செய்ய முடியுமோ அத்தனை நேர்த்தியுடன் செய்யப்பட்ட பயணம் நான் லதாக் சென்று வந்த பயணம். மூன்று நபர்கள் சூப்பர் பைக்கில்(பிரபு, சுமித், சுனில்), ஒரு ஆள் பல்ஸரில்(சேத்தன்) மற்றும் நான் என மொத்தம் ஐந்து பேர். பைக்குகள் நான்கையும் நாங்கள் கிளம்புவதற்கு முன்பே சண்டிகர் அனுப்பிவிட்டு நாங்கள் அங்கே சென்று பிக்கப் செய்து கொள்வதாக ப்ளான். வண்டிக்குத் தேவையான...
இணையத்தில் தமிழில் எழுத ஆரம்பித்து நான்கு-ஐந்து வருடங்கள் இருக்குமாயிருக்கும். அத்தனை எழுதுவதில்லை தற்சமயங்களில் என்பதைப் போல் அத்தனை வாசிப்பதுமில்லை, எப்பொழுதாவது தீவிரம் வந்தது போல் இரண்டு மூன்று வாரங்கள் எழுதமுடிவதுண்டு, தொடர முடிவதுண்டு அவ்வளவே. டிவிட்டரில் கொஞ்சக் காலமாய் எழுதுவதாலோ என்னவோ இப்பொழுதெல்லாம் வளவள என்று எழுதமுடிவதில்லை. சரி இந்த வாரம் கொஞ்சம் தொடர்ச்சியாக எழுதலாம் என்று நினைத்திருக்கிறேன். பார்க்கலாம். நட்சத்திரமாய் இருக்கச் சம்மதமா என்று கேட்டு...
Subscribe to:
Posts
(
Atom
)
Popular Posts
-
இங்க இப்படி ஒரு ஐட்டம் இருக்கிறதென்பதே மறந்து போயிருந்தது. காந்தாரா படமல்ல பொன்னியின் செல்வன் படம் தான் என்னை ப்ளாக் பக்கம் திருப்பியது, ஆனா...
-
"Its not fair" ஆரம்பித்தேன், ஜெயஸ்ரீ "நான் நினைச்சேன்..." என்று கோபப்பட்டாள், அகிலா சிரித்தாள். எங்கள் ரோல்களில் கொஞ்சம்...
-
"இதுக்கு முன்னாடி மணாலிக்கு போயிருக்கிறியா மீனா?" ரவி தன் மனைவியிடம் கேட்டதும், அவள், "இல்லைங்க. நான் ஊட்டி, கொடைக்கானல் தான்...