In Only ஜல்லிஸ் Science ஜல்லிஸ் சுய சொறிதல்

வாசகர் பரிந்துரை அரசியல், blogger wordpress அரசியல், கன்னடம் படிக்கலாம் வாங்க!

வாசகர் பரிந்துரை சம்மந்தப்பட்டு நிறைய மடல்கள் வந்த வண்ணம் இருந்தன. சொல்லப்போனால் அது எப்படி 20/20 வரைக்கும் போனதோ அப்படியே 0/40 கொண்டு வந்துவிட்டு பின்னர் ஆட்டத்தை முடிக்கலாம் என்று தான் நினைத்திருந்தேன். போய்த் தொலையுது என்று விட்டேன், நண்பர்கள் அதை இறக்கிக் கொண்டிருக்கிறார்கள். நன்றி நண்பர்களே 0 ற்கு கொண்டு வந்து விட்டால் இன்னும் சந்தோஷம்.

வாசகர் பரிந்துரை ஆரம்பத்தில் கொண்டுவரப்பட்ட தொடக்கத்தில் இருந்த அதற்கான importance சிறிது காலத்திற்கு முன்பு இல்லை. எல்லோரும் சூடான இடுகைகளில் கால் கழுவிக் கொண்டிருக்கையில், தமிழ்மணம் மீண்டும் முகப்பிறகு 'வாசகர் பரிந்துரை'யை கொண்டு வந்து இங்கையும் கொஞ்சம் கழுவிக்கோங்க என்று விட்டிருக்கிறது.

நண்பர் ஒருவர் நிறைய '-' வருவதைப் பற்றி வருத்தப்படுவதாக, நண்பரின் நண்பர் என்னிடம் சொன்னார். ஒரு முறை எனக்கும் இதே பிரச்சனை வந்த பொழுது தமிழ்மண நிர்வாகிகள் கவனிப்பார்களா? என்று எழுதி அவர்களும் கவனித்து, பதிவர் பட்டை 'செப்புப்பட்டயம்' திற்கு 'நட்சத்திரக் குத்து' இல்லாமல் வந்து கொண்டிருந்தது. நான் mohandoss.comற்கு மாறும் வரை. இப்பொழுதைய செப்புப்பட்டயத்தில் '+' '-'ற்கான ஆப்ஷன் வந்தாலும் இரண்டுமே 99% செய்ய முடியாது. அதனால் விட்டுவைத்திருக்கிறேன். (அந்த 1% வேலையை யாரும் நண்பர்கள் செய்தால் தமிழ்மணத்திடம் மீண்டும் முறையிட வேண்டியது தான்.)

மேற்சொன்ன நண்பரின் பதிவுகளைப் படிப்பவன் என்ற முறையில் 'உள்ளடி அரசியல்' காரணங்களுக்காக அந்த '-' போடும் பழக்கம் இருப்பது புரிந்தது. நண்பர் இந்த வகையறா 'வாசகர் பரிந்துரை' பிரச்சனையை மூட்டை கட்டிவிட்டு நகரணும் என்பது என் அவா.

--------------------------------------------

WordPress, Blogger இரண்டில் bloggerஐயே அதிகம் சப்போர்ட் செய்தவன் என்ற முறை என் பதிவை, mohandoss.comல் ப்ளாக்கர் கொண்டே இணைத்தேன். பதிவு feedburner மூலம் வருவதால் கிடைக்கும் statistics அத்தனை தூரம் ப்ளாக்கரை தேர்ந்தெடுத்ததை சரியென்று மனதிற்குச் சொல்லவில்லை.

என் செப்புப்பட்டயம், பூனையாக இல்லாமல் போன சோகங்கள் பதிவுகளின் மொத்தமும் 2004லிலிருந்தே அவ்வப்பொழுது WordPressல் சேகரிக்கப்பட்டிருப்பதால் wordpress statistics அற்புதமாக இருக்கிறது. நாம் பதிவெழுதும் நாட்கள் தவிர்த்து இன்னும் சொல்லப்போனால் அதற்கு ஒரு வாரம் கழித்து எனக்கு வருகை 30 - 40 தான் இருக்கும் நாட்கணிக்கில் பார்க்கும் பொழுது. ஆனால் பதிவு எழுதுகிறோமோ இல்லையோ ஒரு நாளைக்கு 250 - 350 வருகை wordpressற்கு வருகிறது. கூகுள் தேடலிலும் wordpress பதிவே முன்னால் வருகிறது, புது domainஐ தொடங்கியவுடன் கூகுள் indexingற்காக Webmaster centralல் இணைந்து பதிவை இணைத்து எல்லாம் செய்தும் கொஞ்சம் வேலை காட்டிக் கொண்டிருந்தது என் புது domain.

இப்பொழுது பிரச்சனையில்லை 'செப்புப்பட்டயம்' என்று தேடினால் blog.mohandoss.comற்கு வருகிறது, முன்னர் google index சரிவர செட் ஆகாததால் என் wordpress பதிவிற்கோ இல்லை AnyIndianன் உடைய பக்கமான பாலகுமாரனின் செப்புப்பட்டயம் புத்தகத்திற்கோ சென்று கொண்டிருந்தது.

ஆனால் இப்பொழுது என் kundavai.wordpress.com பதிவிற்கு இருக்கும் கூகுள் ரேங்க் 4, என் blog.mohandoss.comற்கு வர எவ்வளவு நாட்கள் ஆகுமோ? SEO எல்லாம் அத்தனை தூரம் தெரியாவிட்டாலும் இந்த விஷயத்தில் wordpress, bloggerஐ விட நன்றாக இருக்கிறது என்றோ சொல்வேன்.

--------------------------------------------
என் கம்பெனியில் தேவையென்றால், பெங்களூருவில் கன்னடத்தில் பேச கஷ்டப்படுகிறீர்கள் என்றால் கம்பெனி உங்கள் தனிநபர் விருப்பத்தின் பெயரில் கன்னடம் கற்றுக் கொடுக்கும் என்றும் விருப்பப்பட்டவர்கள் சேர்ந்து கொள்ளலாம் என்றதும் நானும் 'yes' பட்டனைத் தட்டி சேர்ந்து கொண்டேன்.

சொல்லப்போனால் பெங்களூரில் இருப்பதற்கு நல்ல உபயோகமாக வகுப்புகள் இருப்பதால் அதை ஒரு பதிவாக தர உத்தேசம். நான் இங்கே எழுதுவதும் தனிநபர் விருப்பத்தின் பெயரில் கற்றுக்கொள்ள விரும்புபவர்களுக்கே. அவர்கள் சென்ற வழியிலேயே நானும் செல்கிறேன்.

சரி இனி கன்னடம்,

நானு மோகன்தாஸ் - நான் மோகன்தாஸ்

நீவு யாரு? - நீங்க யாரு?

நிம்ம ஹெசுரு ஏனு - உங்க பெயர் என்ன?

நன்ன ஹெசுரு மோகன்தாஸ் - என் பெயர் மோகன்தாஸ்

நிம்ம கெலசா ஏனு - உங்கள் வேலை என்ன?(அல்லது) நீங்கள் என்ன வேலை செய்கிறீர்கள்?

நிம்ம தந்தைய ஹெசுரு ஏனு - தந்தைய - அப்பாவுடைய
நிம்ம தாயிய ஹெசுரு ஏனு - தாயிய - அம்மாவுடைய
நிம்ம அக்கன ஹெசுரு ஏனு - அக்கன - அக்காவுடைய
நிம்ம தங்கிய ஹெசுரு ஏனு - தங்கிய - தங்கச்சியுடைய
நிம்ம அண்ணன ஹெசுரு ஏனு - அண்ணன- அண்ணனுடைய
நிம்ம தம்மான்ன ஹெசுரு ஏனு - தம்மான்ன - தம்பியுடைய
நிம்ம கண்டன ஹெசுரு ஏனு - கண்டன - கணவனுடைய
நிம்ம ஹெண்டத்தியிய ஹெசுரு ஏனு - ஹெண்டத்திய - மனைவியுடைய

இவத்து - இன்று
நாளே - நாளை
நினே - நேற்று
நாடிட்டு - முந்தா நேற்று
மொன்னே - நாளை மறுநாள்

யாரது - யார் அது?
யாவத்து - எது?

நந்து - என்னுது
ஈ பேனா நந்து!
ஈ புஸ்தகா நந்து!

இது தொடரும்...

-------------------------------------------------------

தமிழ்மணத்தில் தொடர்ச்சியாக பதிவுகள் படிப்பவர்கள்(அல்லது என் பதிவுகளை) எண்ணிக்கையை நான் 150லிருந்து 200க்கு மேல் உயர்த்தமாட்டேன். அவ்வளவு பேர் தான் தொடர்ச்சியாக என்ன எழுதினாலும் படிப்பார்கள் என்றே நினைக்கிறேன். சமீபத்தில் கூகுள் ரீடரில் விளையாடிக் கொண்டிருந்த பொழுது, அதில் Recommendation என்று வரும் இடத்தில் வந்த பதிவுகள் அனைத்திற்கும் ஏறக்குறைய 70 - 120 வரை கூகுள் ரீடரில் சேர்க்கப்பட்டுள்ளதாக செய்தி கிடைத்தது. இது நபர் எத்தனை பிரபலம் என்ற விகிதத்தில் மாறியது.

அப்படிப்பார்த்தால் ஏறக்குறைய 100 நபர்கள் ரீடரில் இருந்தே பெரும்பாலும் பதிவுகளைப் படிக்கிறார்கள், பதிவின் தீவிரத்தை - நோக்கை கொண்டு பின்னூட்டம் இடவோ பின்னூட்டம் படிக்கவோ பதிவை நாடுகிறார்கள். பெரும்பாலும் பின்னூட்டங்கள் வரவே வராது என்னும் பதிவுகளை க்ளிக்கி படிப்பார்கள் என்று நான் நம்பவில்லை. இளவஞ்சியிடம் நான் ரீடருக்கு மாறியதைச் சொன்னதும் அவர் வழமை போல் என் கொள்கையை வம்பிழுத்து, போலி கம்யூனிஸ்ட் என்று திட்டினார். கொள்கையை மாற்றிக் கொள்ளவே மாட்டேன் என்று வீம்பு பிடிப்பதனால் கொள்கைக் குன்று என்ற பெயரைத் தவிர்த்து ஒன்றும் கிடைக்காது என்று தெரிந்ததால் விட்டுவிட்டேன்.

பல பதிவுகளுக்கு இப்பொழுது என்னுடைய ஒரு ஹிட் கிடைக்காதாயிருக்கும் பெரும்பாலும் பின்னூட்டம் படிக்க விரும்பமாட்டேன் என்பதால் எனக்கு ரீடர் 100% ஏதுவாயிருக்கிறது. இடையில் feedஐ குறைத்துவிடலாம் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். anonymous chatல் வந்த பல நண்பர்கள் ப்ளாக்கர், flickr போன்ற பல தடை செய்யப்பட்ட நாடுகளில் ரீடர் மூலமாக படிப்பதாகச் சொல்லியதாலும், நானும் ரீடருக்கு மாறியதாலும் அந்த எண்ணத்தை விட்டுவிட்டேன்.

Related Articles

5 comments:

  1. பெரும்பாலும் உங்கள் பதிவுகளை விரும்பி படித்தாலும் பின்னூட்டமிட நேரம் இருப்பதில்லை. இணைய தொடர்பும் அடிக்கடி அற்றுப்போவதால் இந்த தொல்லை.

    +,- தொல்லையைப்பற்றி நீங்கள் யோசிப்பது வியப்பாக உள்ளது..

    பதிவுலகில் கன்னட வாத்தியாராக புதிய பதவி ஏற்றதற்கு வாழ்த்துக்கள். கண்டிப்பாக பலருக்கு உபயோகப்படும். :)). எனக்கும் சேர்த்து... :)

    ReplyDelete
  2. நிம்ம ஹெண்டத்தியிய ஹெசுரு ஏனு?

    ReplyDelete
  3. சென்ஷி,

    நான் பதிவு எழுதத் தொடங்கிய காலத்தில் அறிமுகமானது இந்த 'பதிவர் பரிந்துரை'. அப்பொழுது அதைப்பற்றிய க்ரேஸ் இருந்தது, இப்பொழுது 'சூடான இடுகை'கள் மீதிருப்பதைப் போல.

    எனக்கு என் பதிவுகளுக்கு 'தேவையேயில்லாமல்' நெகட்டிவ் குத்து விடுவது பிடிக்கவில்லை அதனால் தான் தூக்கியிருந்தேன்.

    இப்பொழுது(எப்பொழுதும் இல்லை) என்னை 'வாசகர் பரிந்துரை' பாதிப்பதில்லை, இது நண்பருக்காக எழுதிய பகுதி.

    ReplyDelete
  4. அனானி அண்ணை,

    ஒரு நல்ல பதிவுக்கு மேட்டர் எடுத்துக் கொடுத்திருக்கியள்.

    'என் மனைவிக்கு பெயர் என்னவாக இருக்கலாம்' என்று பதிவு எழுதுகிறேன்.

    நன்றி.

    ReplyDelete
  5. சும்மா இருங்க தல :) நான் கேள்வியை வாபஸ் வாங்கிக்கிறேன்

    அதே அனானி

    ReplyDelete

Popular Posts