பெரும்பாலும் இணைய உலகில் உலவுபவர்கள் அனைவருமே ஐபி, ஐபி டிராக்கர் போன்ற டெர்ம்களை கேள்விப்பட்டவர்களாகத்தான் இருப்பார்கள். அதனுடைய பங்ஷனாலிட்டியும் பெரும்பாலும் தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். ஆனாலும் தமிழ்மணத்தில் அடிக்கடி ஐபி டிராக்கர் வைத்திருக்கிறேன் தேர்ட் பார்ட்டி ஐபி டிராக்கர் வைத்திருக்கிறேன் என்று எல்லா சொல்பவர்கள் கூட ஒரு பங்ஷனாலிட்டியை புரிந்து கொள்ளவில்லையோ என்ற சந்தேகம் வருகிறது.(இல்லை நான் புரிந்துகொள்ளவில்லையென்றால் புரிந்துகொள்ளவே இந்தப் பதிவென்றும் வைத்துக்கொள்ளலாம்.)
சாதாரணமாக நபர்கள் ஐபி தெரிந்துவிட்டது என்று சொல்லும் பொழுது பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை, முன்பே கூட ஒரு முறை இதைப்போன்ற பிரச்சனை எனக்கு வந்த பொழுது சொல்லியிருக்கிறேன். ரொம்ப கரெக்டா நீதான் பின்னூட்டம் போட்டன்னு சொல்லவே முடியாதுன்னு. சமீபத்தில் பெயரிலி அண்ணாச்சி ஒரு பதிவில் சொல்லியிருப்பதைப் பார்த்ததும் திரும்பவும் அந்தச் சந்தேகம் வந்தது. இந்தப் பதிவு நீங்கள் ப்ளாக்கர் உபயோகிக்கிறீர்கள் என்றால் மட்டுமே அதுவும் இலவச சேவை மட்டுமே.(பெயரிலி அண்ணாச்சி உபயோகிக்கிறது காசு கட்டிய சேவைன்னா நான் எஸ்கேப் அவர் பெயரை உபயோகித்ததில் இருந்து ;))
Blogger ஐப் பொறுத்தவரை நீங்கள் பின்னூட்டம் போடுவதற்கு தனிப்பட்ட இடத்தைத் தருகிறார்கள். எப்படியென்றால் என்னுடைய இந்தப்பதிவின் கீழ் "நீங்களும் சொல்லுங்களேன் ஏதாச்சும்" என்று பின்னூட்டம் போடவேண்டியவர்கள்/விரும்பியவர்களை அழைத்திருப்பேன் அதுவரை தான் உங்கள், ஐபிடிராக்கர், தேர்ட்பார்ட்டி ஐபி டிராக்கர் எல்லாம் உபயோகமாகும். அந்தப் பேஜை கிளிக் செய்துவிட்டீர்களேயானால். அது Bloggerன் சொந்தப் பதிவு அதில் யாராலும் ஐபிடிராக்கரை உபயோகிக்க முடியாது. (http://www.blogger.com/comment.g?blogID=15417112&postID=6031665407035373379 இங்கே)
இப்ப என் கேள்வி, உங்கள் பதிவு தமிழ்மணத்தில் வந்ததுமே ஒருவர் உங்கள் பதிவிற்கு கிளிக் செய்து வருகிறார். மேற்சொன்ன பின்னூட்ட இணைப்பை கிளிக் செய்கிறார்(Open in a new window) என்று வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் முன்னால் வந்த Parent Window வை க்ளோஸ் செய்துவிடுகிறார். இந்தப் பின்னூட்ட பக்கத்தை ஆறப்போடுகிறார்(ஒரு அரைமணிநேரத்திற்கு என்று வையுங்கள்). பின்னால் இருக்கும் அநாநிமஸ், அதர் ஆப்ஷனைக் கொண்டு பின்னூட்டம் போடுகிறார் என்றால் நீங்கள் உங்களிடம் இருக்கும் ஐபிடிராக்கரை வைத்து கண்டுபிடிக்கும் ஐபி யாருடையதாக இருக்கும். உண்மையிலேயே புரியவில்லை, இது மற்றவர்களுக்கு பெரும்பாலும் தெரிய வாய்ப்பில்லையென்றாலும் பெயரிலிக்குமா(அண்ணாச்சி இது சும்மா ஒரு உதாரணத்திற்கு - மேற்படி அநாநிமஸ் பின்னூட்டம் எனக்கும் வருத்தத்தை கொடுப்பது தான் - ஆனால் அதைக் கண்டுபிடிக்கும் முறை சரியானதுதானா? என்ற ஒரே ஒரு கேள்வி)
நான் சொன்ன இந்த அரைமணிநேர கணக்கும் கூட சரிவராது. இன்னும் தெளிஞ்சவனா இருந்தா. வெறுமனே ஜாவா அப்ளிகேஷன் ஒன்றில் உங்கள் பதிவின் பெயரைக் கொடுத்தேனேயானால்(http://wandererwaves.blogspot.com) உங்களின் பதிவின் எண்ணையும் ப்ளாக்கர் எண்ணையும் கண்டுபிடித்துவிட முடியும். http://www.blogger.com/comment.g?blogID=9437046&postID=7993645203957527874 அதாவது மேற்சொன்ன நம்பர்களைச் சொல்கிறேன். இதன் காரணமாக உங்கள் பதிவில் கிளிக்கே விழாமல்(உங்கள் ஐபி டிராக்கர்களை ஏமாற்றி) நேராக பின்னூட்ட பெட்டியை அடைய முடியும். இல்லையா? நான் சொன்ன கணக்கு சரிவருதா?
சரி எல்லோருக்குமா ஜாவா ப்ரொக்கிராம் கிடைக்குதுன்னு நீங்க கேட்கலாம். சரிங்க உங்க பதிவுக்கு வர்றாரு, பின்னூட்ட பெட்டியின் உரலை காப்பி செய்து நோட்பேடில் வைத்துக் கொள்கிறார். ஒரு நாள் கழிச்சு போடுறார் பின்னூட்டத்தை என்ன செய்வீர்கள் எப்படி கண்டுபிடிப்பீர்கள்.
ஏன் சொல்கிறேன் என்றால் இது போன்ற ஆட்கள் பின்னூட்டம் போடும் பொழுது ஐபி டிராக்கர் வைத்திருக்கிறேன் தேர்ட் பார்ட்டியோடது வைத்திருக்கிறேன் என்றெல்லாம் பெரிய ஆட்கள் சொல்வதை நம்பி சின்ன ஆட்களும் ஏடாகூடமாகச் சொல்கிறேன் பேர்வழியென்று சும்மா பார்த்துட்டுப் போனவனையெல்லாம் சொல்றாங்க. இது உண்மை எனக்கே நடந்திருக்கு.
இல்லை என் கான்செப்டில் தப்பிறுக்குன்னா சொல்லுங்க திருத்திக்குறேன். கொண்டையை மறைப்பது எப்படி என்று நேரடியாகச் சொல்லவில்லை இந்தப் பதிவில்.
டிஸ்க்கிளெம்பர் - நான் சொன்ன இந்த இன்பர்மேஷன் பெரும்பான்மையானோருக்கு தெரிந்திருக்கக்கூடிய ஒன்றுதான். இந்தப் பதிவின் மூலம் யாருக்கும் கெட்டது செய்வது எப்படி என்று சொல்லித்தரவில்லை. அதற்கான முயற்சியும் இது இல்லை ஒரு சந்தேகத்தை நிவர்த்தி செய்து கொள்கிறேன். அவ்வளவே.
கொண்டையை மறைப்பது எப்படி
பூனைக்குட்டி
Tuesday, July 10, 2007

பூனைக்குட்டி
Primarily a java programmer, an athiest and a film geek, who loves reading, writing and photography.
Related Articles
Subscribe to:
Post Comments
(
Atom
)
Popular Posts
-
I’d been grinding Visu down for days—teasing, poking—till he broke, voice tight with exasperation. “Fine, but hook me up with a girl I pick ...
-
Next morning, I cornered Visu—eyes sharp, voice low, catching him sprawled on the couch, wireless headphones still on, eyes bleary like he h...
-
பெங்களூரு பூத்துக் குலுங்கிக் கொண்டிருக்கிறது, வண்ண வண்ணப்பூக்களுடன் வசந்த காலம் என்று நினைக்கிறேன். மஞ்சள், ஊதா, சிகப்பு, வெள்ளை நிறப்பூக்க...
மோகனா,
ReplyDeleteஇன்னைக்கு ரொம்ப ஃபிரியா?
இல்ல ஓய், இன்னிக்கு மட்டும் ஒரு யூஸ் கேஸை முழுசா முடிச்சிருக்கேனாக்கும். அந்தச் சந்தோஷத்தில் பதிவு போட்டுக்கிட்டேயிருக்கேன்.
ReplyDeleteஇது முன்னாடி எழுதினது தல, இப்ப போட்டிருக்கேன் அவ்வளவுதான்.
கொண்டையை மறைத்து பின்னூட்ட விரும்புவர்கள் பின்னூட்ட பெட்டியை திறந்து சிறிது நேரம் கழித்து பின்னூட்டினால் எந்த ஐ.பி டிராக்கராலும் கண்டுபிடிக்க முடியாது.
ReplyDelete(பின்னூட்டமிடும் பக்கத்திற்கு வந்து விட்டாலே ஐ.பி டிராக்கருடனான தொடர்பு அறுந்து விடுகிறது என்பதே உண்மை).
உங்கள் கூற்று சரியே.
ஹி ஹி
ReplyDeleteஇதெல்லாம் தரைத்தண்ணீரிலே (கலங்கின) விம்பத்தைப் பார்த்தபடி மேலே குறியடிக்கும் விளையாட்டுத்தான் :-)
எல்லாம் இலவசசேவையும் நெடுங்காலக்கண்காணிப்புமேதான். இதெல்லாம் ஒரு பெரிய விஷயமென்று, போய்க் காசைக் கட்டினால், வீட்டிலே, கழுத்திலே கயிற்றைக் கட்டிக் காலுக்குக் கீழே கதிரையை இழுத்து, சதாம் ஹுஸேன் கதிதான் எனக்கு :-)
நூத்துக்கு நூறு வீதம் சரியாகப்போகிறதில்லை. (நூத்துக்கு ஒண்ணுமே சரிவருவதில்லை என்று யாராவது மோப்பம் பிடித்ததைக் கிண்டல் பண்ணுகின்றவர்கள் பின்னூட்டம் பின்னால் ஊட்டுவார்கள் :-))
ஆனால், மீதியெல்லாம், முகம்மூடின புரொக்ஸியானாலுங்கூட, ஒரே புரொக்ஸியைப் பயன்படுத்தாமலிருக்கவேண்டுமல்லவா?
அதை விட்டால், operating platform, screen resolution, (ஓரளவுக்கு திட்டிப் பின்னூட்டும் நாடு & நேரம்.. அதேநேரத்திலே தமிழ்மணத்திலே ஏறும் பதிவுகள்..... ).. அந்தந்த ஊரிலே உட்கார்ந்திருக்கும் ஆட்கள் பற்றிய ஓரளவு "ஞானம்" :-)
எல்லாமே மூன்று மாங்காய்களுக்குக் கிட்டக் கல்லெறிவதுதான்... ஏதாச்சும் ஒன்று இரண்டாம் மூன்றாம் கல்லிலாவது விழும்.... நாற்பது மாங்காய்களிலே எதைக் குறி வைப்பது என்பதைவிட இஃது எவ்வளவோ பரவாயில்லையே!! :-)
அப்போ நான் யார்னு உங்களால கண்டு பிடிக்க முடியாதா?
ReplyDelete:)
லொடுக்கு பெயரிலி நன்றிகள். வேறென்ன சொல்ல....
ReplyDeleteகொண்டை இல்லாதவன் - முடியலை.
அண்ணாச்சி சூப்பர் மேட்டர்பா. தமிழ்மணத்தில கூட பிங்க் பண்ணும்போது ஐபி மேட்டரை பாக்குறாங்கோ பாக்குறாங்கோன்னு கொஞ்ச நாள் மின்னாடி பேசிக்கிட்டாங்களே. அது இன்னா மாட்டரு? அப்படி பாக்க முடியுமா? என்ன மாதிரியான சாஃப்ட்வேர் யூஸ் பண்ணுவாங்கன்னு சொல்லுங்க அண்ணாச்சி.
ReplyDeleteஆமாம் மோகன்...இது கூட கேட்கவேண்டும் என்று நினைத்தேன்...நாம் தமிழ்மணத்த்தை பிங்கினால், எங்கிருந்து பிங்குகிறோம் என்று தெரியுமா தமிழ்மணத்துக்கு ?
ReplyDeleteஅம்புடன்
நைட்டு உன்னோட லெமன் சோடா குடித்தவன்.
லெமென் சோடா சாப்பிட்டவருக்கு.
ReplyDeleteஆமாம் அது ரொம்ப சுலபம், ஒரு சின்ன ஸ்கிரிப்ட் போட்டாலே போதுங்கிறப்ப, நீங்க போட்டிருக்கும் பட்டையை வைத்து நீங்கள் எங்கிருந்து 'பிங்'குகிறீர்கள் என்று தெரிந்துகொள்ள முடியும் தான்.
விரிவாக எழுதுகிறேன்.
இதை விட நீங்க ஒரு பதிவை பார்வையிட்டதையே மறைக்கும் அளவுக்கு வசதி வந்து விட்டது.
ReplyDeleteஎழுதுங்கய்யா இதையெல்லாம் புதுசுன்னா தெரிஞ்சிப்போம்ல.
ReplyDeleteமோகன்,
ReplyDeleteபட்டறைகுறித்தான உங்கள் பதிவை படிக்க வந்தேன் இப்போ தான் இந்த பதிவைப்பார்த்தேன், தொழில்நுட்பம் இல்லாமல் கொண்டையை மறைத்து ஏமாற்ற எளிய வழி டயல் அப் அல்லது , டைனமிக் ஐ.பி உள்ள usb modem connection அகலப்பட்டை உள்ள இணையம் பயண்படுத்தினால் போதும், ஒவ்வொரு முறையும் வேறு வேறு ஐ.பி காட்டும். உடனே ஐ.பி மாற வேண்டும் என்றால் ஒரு முறை மோடெம் ஆஃப் செய்து போட்டால் மாறிவிடுமே! அதிக பட்சம் அந்த இணைய சேவை வழங்குவோரை தான் கண்டுபிடிக்கலாம்.