In காதல் கதை தொடர்கதை மதுமிதா ரவிவர்மன்

மதுமிதா - 2

அடுத்த நாள் சனிக்கிழமையாதலால், நான் அந்தப் புத்தகத்தை லைப்ரரியனிடம் காலையிலேயே கொடுத்துவிட்டுச் சென்று விட்டேன். பிறகு வந்த நாள்களில் கொஞ்சம் வேலையிருந்ததால் லைப்ரரி பக்கம் போகவில்லை. வெள்ளிக்கிழமை, பக்கத்தில் உள்ள விநாயகர் கோயிலுக்குச் சென்று பிரகாரத்தில் அமைதியாகக் கண்களை மூடி உட்கார்ந்திருந்தேன்.

அரைமணி நேரம் கழித்து கண்ணைத் திறந்தால், எதிரில் மதுமிதா உட்கார்ந்திருந்தாள். ம்ம்ம்.. பெயர் ஞாபகம் இருக்கிறது.

"எப்பிடிங்க! அரைமணி நேரம் கண்ணை மூடிக்கிட்டு உட்காரந்துக்கிட்டு இருக்கீங்க? என்னால பத்து நிமிஷம் உட்காரமுடியாது. எதாவது ஞாபகத்துக்கு வந்துடும் முழிச்சிடுவேன். அன்னிக்கு லைப்ரரியில் உங்க மேல் எனக்குக் கோபம். நான் பேசிக்கிட்டிருக்கும் போதே நீங்க உங்க வேலையைப் பார்க்க ஆரம்பித்துவிட்டீர்கள். எனக்குக் கோபம் வந்துவிட்டது. அதனால் தான் உடனே கிளம்பிவிட்டேன். அடுத்த நாள் புத்தகம் கொடுக்க வருவீர்கள், திட்டலாம்னு பார்த்தால் ஒரு வாரமாய் ஆளையே காணோம். இங்க பார்த்தா சாமியார் மாதிரி உட்கார்ந்துகிட்டிருக்கீங்க."

இவ்வளவு வேகமா என்னிடம் பேசும் முதல் பெண் இவள்தான். எப்பிடித்தான் இவ்வளவு கோர்வையாய் பேசுவாளோ தெரியாது. அவள் பேசுவதைப் புரிந்து கொள்வதே எனக்குக் கொஞ்சம் சிரமமாகத்தான் இருந்தது.

"அன்னிக்கு புத்தகத்தை எல்லாம் அடுக்கிவைத்துவிட்டு உங்களிடம் பேசலாம்னு நினைச்சேன். நீங்க அப்புறம் பார்க்கலாம்னு சொன்னதும், உங்களுக்கு ஏதோ அவசர வேலையிருப்பதாகத்தான் நினைத்தேன்." நான் வெளிப்படையாகச் சொன்னேன்.


"பரவாயில்லை, உங்களை நான் மன்னிச்சிட்டேன்," சொல்லிவிட்டு விகல்ப்பமில்லாமல் சிரித்தாள்.

"நான் உங்களை இந்தக் கோவிலில் இதற்கு முன் பார்த்தது இல்லையே?" சந்தேகமாய்க் கேட்டேன்.


"நான் இந்த இடத்துக்குக் கொஞ்சம் புதுசு, சரி தப்பா நினைச்சிக்காதீங்க கொஞ்சம் வேலையிருக்கு, அப்புறம் பார்க்கலாம்" சொல்லிவிட்டு எழுந்தாள்.

நான் உடனே "இப்ப நான் எதுவும் தவறு செய்துவிடவில்லையே" என்றேன்.


"இல்லை உண்மையாகவே கொஞ்சம் வேலையிருக்கு, உங்களுக்காக ஏற்கனவே அரைமணிநேரம் செலவழித்தாகிவிட்டது. சமயமிருந்தால் பிறகு சந்திப்போம்". சொல்லிவிட்டு சென்றுவிட்டாள். அதற்குப் பிறகும் சுமார் ஒருமாதம் நான் அவளை பார்க்கவேயில்லை, மாதக்கடைசி எப்பொழுதும் போல ஃபாதரைப் பார்க்க சர்ச்சுக்குச் சென்றிருந்தேன். அங்கே நடந்துகொண்டிருந்த ப்ரேயரில் மண்டியிட்டு உட்கார்ந்திருந்தாள் மதுமிதா, எனக்கு ஆச்சர்யம். ஆகக்கடைசியாய் அவளை நான் இங்கே எதிர்பார்க்கவேயில்லை நிச்சயமாய்.

நான் அவளை கவனிக்காததை போல் நேராகப் போய் ஃபாதரிடம் பேசிக் கொண்டிருந்தேன். பின்னால் வந்தவள் நேராக ஃபாதரிடம், "ப்ரைஸ் த லார்ட் ஃபாதர்!"

"ப்ரைஸ் த லார்ட் மை சைல்ட்!" என்றார்.

என்னிடம் திரும்பி, "ரவி, நான் உங்களிடம் சொன்னேனே, புதுசா ஒரு பெண்ணு பசங்களுக்கு உதவுறேன்னு சொன்னிச்சுன்னு. அது இந்தப் பொண்ணுதான், பேரு மதுமிதா."

"தெரியும் ஃபாதர், முன்னாடியே மீட் பண்ணியிருக்கோம்." நான் அவளைப் பார்த்தபடியே சொன்னேன்.


"ஆமாம் ஃபாதர் முன்னாடியே மீட் பண்ணியிருக்கோம், ஆனா எதிரில் பார்த்தால், பார்க்காதது போல் வந்துவிடுவார்." என்று மதுமிதா என்னைச் சீண்டினாள்.


"அப்பிடியா, ரவி அப்பிடிப்பட்ட பையன் இல்லையேம்மா, நம்ம குழந்தைகளுக்கெல்லாம் சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளில் இவர்தான் இரண்டு வருடமாய் பாடம் சொல்லித் தருகிறார். ரொம்ப நல்ல பையனாச்சே, ஏன் ரவி மதுமிதா சொல்வது உண்மையா?" ஃபாதர் உண்மையான அக்கறையுடன் கேட்டார்.


"ஆமாம் ஃபாதர், ஒரு விதத்தில் உண்மை தான். மதுமிதா ப்ரேயர் செய்து கொண்டிருந்தால் டிஸ்டர்ப் பண்ணவேண்டாம்னு..." நான் இழுத்தேன்.

"ஒரு மாதத்திற்கு முன் இவரை கோயிலில் பார்த்த பொழுது தியானம் பண்ணிக்கிட்டிருந்தார். அப்ப நான் இவர் முடிக்கும் வரைக்கும் காத்திருந்து பார்த்து பேசிவிட்டுதான் வந்தேன். ஆனா பாருங்க இவரை, சாக்கு சொல்றார், ப்ரேயர் பண்ணிக்கிட்டிருந்தேன்னு..." அவள் கண்களில் உண்மையிலேயே கோபம் இருந்தது.


நானும் ஃபாதரும் பதில் ஒன்றும் சொல்லாமல் ஒருவர் முகத்தை மற்றவர் பார்க்க...

"சரி நீங்க ஃபாதர்கிட்ட பேசிட்டு வாங்க, தனியா வைச்சி பேசிக்கிறேன் உங்ககிட்ட." சொல்லிவிட்டு நகர்ந்தாள்.


ஃபாதர் என்னிடம், "ப்ரைட் சைல்ட், அப்பா அம்மா கிடையாது, நம்ம சர்ச்சில் தான் வளர்ந்தாள், ஆனால் இங்கேயில்லை, வேறு ஒரு இடத்தில். இப்பத்தான் கல்லூரி படிப்பு முடித்தாள். சர்ச் ரூல்படி இப்ப வெளியில் வந்து ஹாஸ்டலில் தங்கி இருக்கிறாள். ஏதோ வேலை பார்ப்பதாக சொன்னாள் ஜீஸஸ் தான் காப்பாதணும்."

நான் கேட்காமலே விவரங்கள் சொன்னார் ஃபாதர். நான் அவர் சொன்னதை கவனிக்காதது போல் விட்டுவிட்டேன். பிறகு குழந்தைகளின் முன்னேற்றம் பற்றியும் வேறு என்ன செய்யலாம் என்றும் பேசிவிட்டு வந்தேன். வெளியில் அவள் எனக்காகக் காத்துக் கொண்டிருந்தாள்.

"என்னங்க இது, எப்பப் பார்த்தாலும் என்னை ஆச்சர்யப்படுத்திக்கிட்டே இருக்கீங்க. சினிமா மாதிரி இருக்கு, ப்ளெட் டொனேட் பண்றீங்க, லைப்ரரியனுக்கு உதவி பண்றீங்க, ஆர்பன் சைல்டுங்களுக்கு படிப்பு சொல்லித்தரீங்க. நீங்க தப்பா நினைக்கலைன்னா ஒன்னு கேட்கலாமா, நீங்க என்ன வேலை பார்க்கிறீங்க?" தீவிரமாகக் கேட்டாள்.


"வேலைன்னு ஒன்னும் பிரமாதமா செய்யலைங்க, தேவைப்படுற காசுக்கு ஏத்த மாதிரி ஏதாவது வேலை பார்ப்பேன். மற்றபடிக்கு என்னுடைய மிச்சமான நேரங்களை பிறருக்கு பயன்படுகிற மாதிரி ஏதாவது செய்வேன். அவ்வளவுதான்"

"ரொம்ப சுலபமா சொல்லீட்டீங்க, ம்ம்ம், என்னன்ன வேலையெல்லாம் பார்ப்பீங்க?"

"படம் வரைவேன், பாடம் சொல்லித்தருவேன், கணக்கு எழுதித்தருவேன், தோட்டம் போட்டுத்தருவேன். ஒரு சிலசமயம் பரோட்டாக்கடையில் பரோட்டா கூட போட்டிருக்கேன்."

"இவ்ளோ நைஸ் லுக்கிங், உங்களுக்கு யார் பரோட்டா போடுற வேலை தருவா? சும்மா கதைதானே சொல்றீங்க?" அவள் உண்மையிலேயே நம்பவில்லை என்று தெரிந்தது.

"உண்மைதாங்க, நான் குட் லுக்கிங்கா இருப்பதால் இன்னும் இந்த மாதிரி மக்களிடம் நன்றாக பழகமுடியலை. நீங்க சொல்வது மாதிரி இந்த வேலையெல்லாம் தரவே மாட்டாங்க, ஆனா அன்று பரோட்டா கடைக்கு சாப்பிட போயிருந்தேன். ஹோட்டல் முதலாளியிடம் புரோட்டா வேண்டுமென்று கேட்க, மாஸ்டர் வரலை அதனால் கிடைக்காதுன்னு சொல்லிட்டார். நான் அவரிடம், நான் போட்டுக்கொள்ளவான்னு கேட்க, ஒருமாதிரி என்னைப் பார்த்தார். பின்னர் நான் பரோட்டா போட்டதைப் பார்த்து அன்றைக்கு மட்டும் போட்டுத்தரச் சொன்னார். வருமானம் ஐந்நூறு ரூபாய்." சொல்லிச் சிரித்தேன்.

அவள் சிறிது நேரம் என்னையே உற்றுப் பார்த்தாள், என் குடும்பத்தை பற்றி கேட்கப்போகிறாள் என்று நினைத்தேன். நல்லவேளை கேட்கவில்லை. பின்னர் எதையெதையோ பற்றி ரொம்ப நேரம் பேசிக்கொண்டிருந்தோம். கடைசியில் அவள் கேட்டாள்.

"ஃபாதர் என்னைப்பத்தி எதுவும் சொன்னாரா?"

"ஆமாம், நானாகக் கேட்கவில்லை, அவராகத்தான் சொன்னார்." சொல்லிவிட்டு நான் தலையைக் குனிந்துகொண்டேன்.

"நீங்க ஏங்க தலையை குனியிறீங்க, சொல்லப்போனால் என்னைப் பற்றி யாரோ சொல்லக் கேள்விப்பட்டவர்கள். என்னிடம் என் குடும்பத்தை பற்றியும் என் வாழ்க்கையை பற்றியும் கேள்விகேட்டுக் கொன்றிருக்கிறார்கள். என் பர்ஸனல் விஷயங்களில் தலையிடுபவர்களை எனக்கு சுத்தமாகப் பிடிக்காது. நீங்கள்தான் என்னைப்பற்றி கொஞ்சம் தெரிந்தாலும், அதைப்பற்றி கேட்காமல் இருந்தது. ஹாட்ஸ் ஆஃப் டு யூ." சொல்லிவிட்டு திரும்பி நடந்துகொண்டேயிருந்தாள்.

எனக்கு ஆச்சர்யமாயிருந்தது, என்னடா இந்தப்பெண் இப்படி நடந்துகொள்கிறதே என்று. அதன் பிறகு ஒரு வாரத்திற்கு அவளை நான் பார்க்கவே இல்லை. முதல் இரண்டு நாள்கள் போய்வரும் இடங்களில் எல்லாம் தேடினேன் பிறகு சிறிது மறக்கத் தொடங்கினேன்.

ஒரு நாள் மதியம் என் வீட்டு கதவு தட்டப்படும் சத்தம் கேட்டு கதவைத் திறந்தால் மதுமிதா நின்று கொண்டிருந்தாள்.

"வாங்க மதுமிதா."

"உள்ள வரலாம்ல?"

"தாராளமாய். சின்ன ரூம்தான் ஆனால் இன்னொரு நபர் உட்கார நிச்சயம் இடம் இருக்கும்."

"அதற்குக் கேட்கவில்லை, பாச்சுலர் ரூம். பெண்ணு பார்க்கிற மாதிரியிருக்குமான்னு தான்?"

நான் அவள் கேள்விக்கு பதில் சொல்லாமல், சமையல் அறைக்குச் சென்று அவளுக்கு டீ தயார் செய்ய ஆரம்பித்தேன். என்னால் ஊகிக்க முடியும் அவள் என் ரூமில் என்ன செய்து கொண்டிருப்பாள் என்று. நிறைய ஓவியங்களும், நிறைய புத்தகங்களும் இருக்கும் என் அறையில். அவள் ஓவியங்களைப் பார்த்து முடிப்பதற்கும், புத்தகத்தின் தலைப்புக்களை படித்து முடிப்பதற்குமே ரொம்ப நேரம் பிடிக்கும். இரண்டு டம்ளர்களில் டீ எடுத்துக்கொண்டு போய், அவளிடம் ஒரு டம்ளரை நீட்டினேன்.

"என்ன ஆளுங்க நீங்க, நிறைய தடவை மீட் பண்ணியிருக்கோம். இங்கத்தான் எங்கையோ பக்கத்தில் இருப்பேன்னு தெரியும். ஒரு வாரமா பார்க்கலை, அன்னிக்கு கோபமா வேற பேசிட்டு போனேன். என்னைத் தேடுவீங்கன்னு பார்த்தா. ம்ஹூம் ஒரு ரியாக்ஷனும் இல்லை; அதான் இன்னிக்கு நானே வீட்டைத் தேடிட்டு வந்திட்டேன்."

நான் பதில் சொல்லாமல் டீயைக் குடித்துக்கொண்டிருந்தேன்.

"பதில் சொல்லுங்க!"

"என்ன சொல்ல, ஏன் உங்களைத் தேடலைன்னா?"

"டீ ரொம்ப நல்லாயிருக்கு, அன்னிக்கு எனக்கு ஃபாதர் மேல கொஞ்சம் கோபம். என்னைப்பத்தி தெரிஞ்சவங்க எல்லாருமே என்கிட்ட ஒரு சிம்பதி காட்டுவாங்க, அது எனக்குச் சுத்தமா பிடிக்காது. உங்ககிட்ட ஃபாதர் சொல்லிட்டார்னவுடனே எனக்கு ரொம்ப கோபம் வந்தது. ஆனால் அதைப்பற்றி நீங்க கேட்காததால பரவாயில்லை, ஆனா நீங்க எதுவும் கேட்டுறுவீங்களோன்னு பயம் அதனால் தான் உங்களை பார்க்காமல் தவிர்த்தேன். நீங்க ஓவியம் வரைவீங்கன்னு சொல்லவே இல்லை?"

"நீங்க கேட்கவேயில்லை?"

"இல்லை அன்னிக்கு நான் கேட்டேன், ஹாஸ்பிடலில், ரவிவர்மன்னா ஓவியம் கூட வரைவீங்களான்னு?"

"ஆமாம் ஆனால் நீங்க அன்னிக்கு நக்கலா கேட்டீங்க, நான் ஆமாம் பதில் சொல்லியிருந்தா நம்பியிருக்க மாட்டீங்க அதான் சொல்லலை."

"ம்ம்ம், சூப்பரா வரையிறீங்க, அதென்னங்க இவ்வளவு புத்தகம் வைச்சிருக்கீங்க, வாங்கிற காசெல்லாம் புத்தகத்துகே சரியாயிறும் போலிருக்கு?"

"ஆமாம் கேன்வாஸ் வாங்கிறதுக்கும் புத்தகம் வாங்குறதுக்கும்தான் சரியா இருக்கும்." அதற்குப் பிறகு அவள் என் தினசரி வாழ்க்கையில் பெரிய பாதிப்பை உண்டாக்கினாள். என் நேரங்கள் பலவற்றை வீணாக்கினாள். நானும் அவளும் அதிக நேரம் பேசிக்கொண்டிருக்கத் தொடங்கினோம். இன்னும் சரியாகச் சொல்லவேண்டுமானால் அவள் பேச நான் கேட்டுக் கொண்டிருக்கத் தொடங்கினேன்.

எல்லா விஷயங்களைப் பற்றியும் பேசுவாள். ஆட்டம் பாமில் ஆரம்பித்து தெருமுனையில் விற்க்கும் மல்லிகைப்பூ வரை பேசுவாள். பெரும்பாலும் நான் பதில் சொல்வது கிடையாது. ஆனால் சிலசமயங்களில் பதில் சொல்லுங்கள் என்று கேட்டு பதில் வாங்கிக் கொள்வாள். நான், அவள் என்னை எடைபோடுகிறாள் என்று நினைத்துக் கொள்வேன். பெரும்பாலும் அவளைப்பற்றிய எல்லா விஷயங்களையும் சொல்லிவிட்டிருந்தாள். அவளுடைய உள்ளாடை சைஸ் உட்பட.

ஒரு நாள் இப்படித்தான் ஏதோ ஒரு படம் பார்த்திருப்பாள் போலிருக்கிறது. நேராக என்னிடம் வந்தவள், "பாஸ்டர்ட்ஸ்..."

"என்னங்க ஆச்சு..."

"சினிமாவுல ஒருத்தன் ஒரு பெண்ணைக் கெடுத்து குழந்தை கொடுத்துட்டு, விட்டுட்டு போயிருறான். பிற்காலத்துல அவனை காட்டுறப்போ பெரிய தியாகி மாதிரி காட்டுறாங்க. புல்ஷிட்."

"சினிமாதானே, உங்களை யாரு அந்தப் படத்தை உட்கார்ந்து பார்க்கச் சொன்னது?" நான் புரியாமல் கேட்டேன்.


"என்னங்க சினிமா, சினிமான்னா பொம்பளங்கள எப்பிடி வேணா காட்டலாமா. மேல் சாவனிஸ்ட் சைக்கோ, அந்த டைரக்டர பார்த்து கன்னத்தில் அறைஞ்சாத்தான் என் கோபம் அடங்கும்." அவள் கண்களில் அந்த கோபம் தெரிந்தது. எங்கே என்னை அடித்துவிடுவாளோ என்ற பயம் கொஞ்சம் போல் வந்தது.


நான் பதில் பேசாமல் இருந்தேன்.

"உங்களுக்கு தெரியுமா எங்கம்மாவும் இது மாதிரிதான். ஒருத்தன் சும்மா பம்மாத்து வேலை காமிச்சிருக்கான்; அதை நம்பி ஏமாந்து நாலுமாசம்; போய் அவன்கிட்ட கேட்டா, செருப்பால அடிப்பேங்கிறான்; எனக்குத்தான் முந்தானை விரிச்சன்னு என்ன நிச்சயம்னு கேட்கிறான். எங்கம்மா ஒன்னுமே பேசாம என்னைய பெத்து சர்ச்சில் போட்டுட்டு, போய் ட்ரெயின் முன்னாடி விழுந்து தற்கொலை பண்ணிக்கிச்சு, சொல்லாமலாவது செத்துப் போயிருக்கலாம் இதையெல்லாம். லெட்டர் எழுதிவைச்சிட்டு போயிருக்கு. நான் பதினாறு வயசில எங்கம்மா, அப்பாவை பத்தி தெரிஞ்சிக்கணும்னு ஆர்வத்தில் ரிக்கார்ட்ஸ் எல்லாம் எடுத்து கடைசியில் இந்தக் கடிதம் படிச்சி, சீன்னு ஆயிருச்சு."

எப்பொழுதும் போல் நான் பதில் பேசவில்லை, அவளே தொடர்ந்தாள்.

"வாழவே பிடிக்கலை, சந்நியாசம் வாங்கிரலாம்னு நினைச்சேன். இருபது வயது நான் காலேஜ் முடிக்கிறப்ப, முதல் முதலா சர்ச்சை விட்டு வெளியே வர்றேன், அசிங்கமாப் போச்சு, அழகா வேற இருக்கனா. எல்லாரும் மாரையே பார்க்கிறாங்க..." முகம் சிவந்து போயிருந்தது.

நான் பேச்சை மாற்றவிரும்பி, "நான் கூட சாமியாராகிரலாம்னு மொட்டையெல்லாம் போட்டுட்டு, இமயமலை பக்கம் போய் ஒரு வருஷம் ஒரு சாமியார் கிட்ட சிஷ்யனா இருந்தேன்."

அவள் நம்பாமல் என்னைப் பார்த்தாள். சொல்லப்போனால் இதுதான் நான் என்னைப்பற்றி அவளிடம் சொல்லும் முதல் பர்ஸனல் விஷயம். அவளும் கேட்டதில்லை, நானும் சொன்னதில்லை.

"ரொம்ப நல்ல சாமியார். அங்கதான் நான் தியானம் பண்ண, மத்தவங்களுக்கு உதவி பண்ண, எல்லாம் கத்துக்கிட்டது. கடைசியில் சாமியார் உனக்கு இன்னும் வயசாகவில்லை, உனக்கு சில விஷயங்கள் கத்துக்கொடுக்கணும்னு நினைச்சேன். கத்துக் கொடுத்துட்டேன். இனிமேல் ஆண்டவன் நினைத்தால் நீ என்னைப் பார்க்கலாம்னு சொல்லிட்டுப் போய்ட்டார்."

நான் அவளைப் பார்த்தேன். அவள் என்னையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

"இமயமலையில் இருக்கும் போது, யாரிடமும் பேசக்கூடாது. என் குரு பேசினால் மறுமொழி கூறவேண்டும், நானாக பேசக்கூடாது. இதனால் பல மாதங்கள் பேசாமலேயே இருந்திருக்கிறேன். ஆனால் உன்னைப் பார்த்ததும் அது சிறிது மாறிவிட்டது."

"தாங்ஸ்..." என்றாள் அவள்.

"எதற்கு?"

"இல்லை என்னை நம்பியும் உங்கள் பர்ஸனல் விஷயங்களை சொல்லலாம்னு தோணிச்சே அதுக்குத்தான்."

நான் அதற்கும் பதில் எதுவும் சொல்லவில்லை.

(தொடரும்...)

Read More

Share Tweet Pin It +1

6 Comments

In காதல் கதை தொடர்கதை மதுமிதா ரவிவர்மன்

மதுமிதா - 3

சில மாதங்களில் எங்களுக்குள் பழக்கவழக்கங்களில் மாறுபாடு வரத்தொடங்கியிருந்தது. நான் அவளை ஒருமையிலும், 'டி' போட்டும் அழைக்கத் தொடங்கியிருந்தேன். சில சமயங்களில் தொட்டும் பேசியிருந்தேன். ஆனால் பல காரணங்களுக்காக வீட்டிற்கு பெரும்பாலும் வரமாட்டாள். நானும் அதைத் தவிர்த்துவிடுவேன். அவள் ஆரம்பத்தில் இருந்தே என்னுடன் இயல்பாகப் பழகிவந்திருந்தாள்.

"ரவி, உங்க சைக்கிளில் என்னைக் கூட்டிக்கொண்டு போனதேயில்லை!" எதற்காக அதைத் தொடங்கினாள் என்று தெரியவில்லை.

"போய்விட்டால் போச்சு!" சைக்கிள் எடுத்துவந்தேன். நான் அவளை பின்சீட்டில் உட்காரச்சொல்ல. அவள், "ஏன் நீங்க உட்காருங்களேன். நான் ஓட்டிட்டு வர்றேன்? பொம்பளங்க ஆம்பளைங்களை பின்னாடி உட்காரவைச்சு சைக்கிள் ஓட்டக்கூடாதா?"

நான் மெதுவாக ப்ளடி ஃபெமினிஸம் என்றேன்.

"என்ன சொன்னீங்க." அமைதியாகவே கேட்டாள் அவள் காதில் விழுந்திருக்க வேண்டும்.

"ம்ம்ம். ஒன்னும் சொல்லலை..." சமாளிக்க நினைக்காவிட்டாலும் அவளை வருத்தப்பட வைக்க விரும்பாததால் சொன்னேன்.

"சொல்லுங்க ரவி..." வற்புறுத்தினாள்.

"ப்ளடி ஃபெமினிஸம்னு சொன்னேன்." அவளிடம் பெரும்பாலும் நேரடியாய்ப் பேசிவிடுவதே நலம் என்று நினைத்ததால்.

"தாங்ஸ், சொன்னதுக்கு. இனிமே அப்பிடி சொல்லாதீங்க" இதுவும் அவளிடம் நான் எதிர்பார்த்தது தான்.

நாங்க இரண்டுபேரும் காதலிக்கிறோம்னு சொல்லிக் கொள்ளவில்லையே தவிர அதைத்தான் செய்து கொண்டிருந்தோம். அது ஒரு விடலைக் காதலாக இல்லாததால் அதற்கான கவர்ச்சி இல்லாமலிருந்தது நானும் அவளும் செய்துகொண்டிருந்தது ஒரு வகையான முதிர்ச்சியான காதல் என்றே நினைத்திருந்தேன். இன்னமும் அவளுக்கு என் பர்ஸனல் விஷயங்கள் தெரியாது. நானும் அவள் கேட்டால் சொல்லிக் கொள்ளலாம்னு விட்டிருந்தேன். சில சமயங்களில் சூழ்நிலை எங்களை மீறியிருக்கிறது. ஆனால் சில சமயங்களில் நானும் சில சமயங்களில் அவளும் சமாளித்து நகர்ந்திருக்கிறோம். அடுத்த முறை பார்க்கும் பொழுது சிறிது சிரிப்பாய் இருக்கும். ஆனால் சிறிது நேரத்தில் சகஜமாகிவிடும்.

ஒருநாள் மதுமிதா என்னிடம் வந்து, "ரவி, கோயிலுக்குக் கூட்டிட்டு போங்களேன்..." அவள் பொதுவாய் அமைதியாய் இருக்க நினைத்தால் கோவிலுக்குப் போவாள் என்று தெரியும் இல்லை முடிவெதுவும் எடுக்க நினைத்தால் கோவிலுக்கு வருவாள். இன்றைக்கு எதற்காக கூப்பிடுகிறாள் என்று தெரியவில்லை.

கோவிலில் வைத்து, "ரவி, எனக்கு உங்களை மிகவும் பிடித்திருக்கிறது. உங்களுக்கு என்னை பிடிச்சிருக்கா?" சாந்தமாய்க் கேட்டாள். அவளால் அப்படிக் கேட்க முடிந்திருந்தது யாராவது நிச்சயம் அப்படிக் கேட்டிருக்கத்தான் வேண்டும் நான் இன்னும் நேரம் கடத்தியிருப்பேன்.

"பிடித்திருக்கு...!" நான் மேலும் சொல்ல தொடங்கும் முன், "எனக்கு அது போதும், ஹோட்டலுக்குக் கூட்டிட்டு போய் ஃபுல் மீல்ஸ் வாங்கிக் கொடுங்க."

நான் சிரித்துக்கொண்டே "அது என்ன ஃபுல் மீல்ஸ்?"

"எனக்கு இன்னிக்கு நிறைய சாப்பிடணும் போல இருக்கு..." சிரித்தாள்

சாப்பிட்டதும் எனக்கு தூக்கம் வருகிறது, நான் ஹாஸ்டலுக்கு போகிறேன்னு சொல்லிவிட்டுப் போய்விட்டாள். அடுத்த நாள் காலையிலேயே வீட்டிற்கு வந்திருந்தாள். உட்காரச்சொல்லிவிட்டு நான் குளிக்கக் கிளம்பினேன். குளித்துவிட்டு வந்து பார்த்தால் தூங்கிவிட்டிருந்தாள் நான் அவளை எழுப்பி,

"ஏய் சாப்பிட்டியா?" என்று கேட்டேன்.

"இல்லை..."

"சரி வா சாப்பிடலாம், உனக்கும் சேர்த்துத்தான் ரொட்டி சுட்டேன்." அழைத்தேன்.

சாப்பிட உட்கார்ந்தவள், சிறிது நேரம் எதையோ யோசித்துக் கொண்டிருந்தாள்.

"என்னடி யோசனை?" கேட்டேன்.

"என்னவோ கேட்கணும்னு நினைச்சேன் மறந்திட்டேன்... ஆங்... ஞாபகம் வந்திருச்சு. என்னைய நீங்க ஒரு படம் வரைஞ்சு தரணும்." சுத்தி வளைத்து எங்கேயோ வர நினைத்தாள்.

"நான் பொண்ணுங்களை ட்ரெஸ் போட்டு படம் வரையறதில்லை..." சொல்லிவிட்டு அவளைப் பார்த்து சிரித்தேன். 

அவள் நேரடியாய் "இதுக்கு முன்னாடி அதுமாதிரி வரைஞ்சிருக்கீங்களா?" சந்தேகமாய்க் கேட்டாள்.

"ம்ம்ம், இரண்டு மூணுதரம் வரைஞ்சிருப்பேன். நான் தனியா ஓவியம் படிச்சப்ப, எல்லா ஸ்டுடண்ட்சும் வரையணும். எந்தவித உணர்ச்சியும் இல்லாமல் ஓவியம் மட்டுமே கண்ணாக இருக்கணுங்கறதுக்காக அப்படி ஒரு பயிற்சி கொடுப்பார்கள்" என்றேன்.

சிறிது நேரம் யோசித்துக்கொண்டிருந்துவிட்டு, "ரவி, உங்களால உணர்ச்சிவசப்படாம வரைய முடியும்னா, நீங்க என்னையும் வரையலாம். எனக்கு ஒரு பிரச்சனையும் கிடையாது." விட்டுக்கொடுப்பதைப் போல் சொன்னாள். 

ஆனால் என்னால் அன்று உணர்ச்சிவசப்படாமல் இருக்க முடியவில்லை. நிச்சயமாய் அவள் ஓவியக்கல்லூரி மாடல் இல்லை. மேலும் அந்த ஓவியக் கல்லூரி மாடலை நான் நேசித்திருக்கவில்லை.

"என்னாடி இது ஒன்னயுமே காணோம்..."

அதற்கு அவள், "என் உடல் வாகே அப்படித்தான்!" என்று சொன்னாள். அவள் நிர்வாணம் ஏற்படுத்திய சலனம் ஒரு அருமையான போர்ட்ராய்டிற்கு வழிவகுத்திருந்தது மட்டுமல்லாமல் சுமூகமான எங்களின் உறவிற்கும் அடித்தளம் அமைத்துக் கொடுத்தது. ஓவியத்தில் இருந்த நோக்கம் மற்றையதற்கு மாறியது அவள் எனக்கு இதுதான் முதல் முறை என்றால், நான் பதில்லும் என் முறையைச் சொல்லவில்லை அவள் கேட்காததால் மட்டுமல்ல. ஆரம்பத்தில் இருந்த தடுமாற்றம் என் முறையையும் அவளுக்குச் சொல்லியிருக்க வேண்டும். நாங்கள் கூடலில் காட்டிய நிதானம் அதை இன்னமும் மெருகூட்டியது தெரிந்தது. ஃபெமினிசம் பேசுவியே இதில் மட்டும் ஏன் விதிவிலக்கென்று சொல்லி அவளை நக்கலடித்து மேலேற்றிவிட்டேன். ஃபெமினிஸமும் அவள் வெட்கமும் கலந்ததாய் அமைந்த அது அதிக நேரம் களைப்பில் ஆழ்த்தியது. அன்று சாயங்காலம் அவள் ஹாஸ்டலை காலி செய்துவிட்டு நேராக என் வீட்டிற்கே வந்து சேர்ந்தாள்.

"ரவி, இனிமேல் நான் ஹாஸ்டலில் தங்கவில்லை, உங்களுடனேயே தங்கிவிடுகிறேன். ஆனால் ஒன்று, நான் உங்கள் பர்ஸனல் வாழ்க்கைபற்றி எதுவும் கேட்கமாட்டேன், நீங்களும் என்னுடயதைப்பற்றி கேட்கக்கூடாது. நானாக உங்களை, என்னை கல்யாணம் பண்ணிக் கொள்ளுமாறு கேட்க மாட்டேன். அதே போல் கல்யாணம் ஆனாலும் சரி, நீங்கள் சமைத்துப்போடவோ, துணிதோய்க்கவோ, வேறு உங்களுடைய வேலையைச் செய்யவோ என்னைக் கேட்கக்கூடாது. எக்காரணம் கொண்டும் என் பர்ஸனல் வாழ்க்கையை உங்களுடைய வாழ்க்கை பாதிக்ககூடாது. ஆறுமாதம் போல் சேர்ந்திருப்போம். பிடித்திருந்தால் கல்யாணம் செய்து கொள்வோம். இல்லையென்றால் நான் மீண்டும் ஹாஸ்டல் சென்றுவிடுகிறேன். இடையில் இருவருக்கும் உடன்பாடென்றால் செக்ஸ் வைத்துக் கொள்வது பற்றி எனக்குப் பிரச்சனையில்லை."

"திரும்ப ஹாஸ்டல் போறது கஷ்டமில்லை?" அவள் நிலைப்பாட்டை எதிர்த்துப் பேசி நினைக்காததால் அப்படியொன்றைக் கேட்டேன். 

அவள் நிதானமாய் என்னைப் பார்த்தாள், "கஷ்டம்தான்; வலிக்கும்தான்; ஆனா இன்னொருத்தரை டிபண்ட்பண்ணி வாழாமல் இருக்கலாம். என்ன ஒன்னு இவ்வளவு நாள் கழித்தும் தப்பான ஒருத்தரை தேர்ந்தெடுத்துட்டோம்னு தான் கொஞ்சம் வருத்தமா இருக்கும். அதற்கென்ன பண்ணுவது. ஆனால் ஒன்று எக்காரணம் கொண்டும் நான் என் அம்மாவைப் போல் தற்கொலை செய்து கொள்ளமாட்டேன்."

எனக்கு ஏண்டா இந்தக் கேள்விளைக் கேட்டோமென்று ஆயிற்று.

(தொடரும்...)

Read More

Share Tweet Pin It +1

4 Comments

In காதல் கதை தொடர்கதை மதுமிதா ரவிவர்மன்

மதுமிதா - 1

மதுமிதா இறந்துவிட்டாள் என்ற செய்தியை என்னால் சிறிதும் நம்பமுடியவில்லை, நான் சிறிது சிறிதாக மயக்கமாகிக் கொண்டிருப்பதை உணர முடிந்தது.

o

அந்த இரவு பதினொரு மணியிருக்கும், என் வீட்டு போர்ட்டபிள் டிவியில், கேபிள் சேனலின் கீழ் ஒரு அவசர அறிவிப்பு; AB-ve வகை இரத்தம் உடனடியாக தேவையென்று. நான் வேக வேகமாய், டிவியை அணைத்துவிட்டு, வீட்டையும் பூட்டி என் சைக்கிளை எடுத்துக் கொண்டு, ஆஸ்பிடலை நோக்கி விரைந்தேன். அங்குதான் நான் அவளை முதன்முதலில் பார்த்தேன். சுடிதார் போட்டிருந்தாள், அநாயாசமாய் அவள் உடலில் துப்பட்டா பரவியிருந்தது, நீண்ட தலைமுடி.

நான் வருவதைப் பார்த்தும் என்னிடம் வந்தவள், "சார், ஒரு ஆக்ஸிடண்ட் ஆயிருச்சு, நீங்க உதவ முடியுமா? உங்களுக்கு AB-ve வகை இரத்தமா?" என்று ஆங்கிலத்தில் கேட்டாள். சாதாரணமாக என்னைப் பார்த்தால், சௌத் இண்டியன் போல் இருக்காது. என்னைப் பலரும் நார்த் இண்டியன் என்றே நினைப்பார்கள். அதற்கேற்றது போல் நானும் குர்தா பைஜாமாதான் போடுவேன். அதனால் அவள் ஆங்கிலத்தில் பேசியது எனக்கு வியப்பளிக்கவில்லை. அவள் வேறு கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டிருந்தாள்.

நான் பதில் சொல்வதற்குள் அங்கு வந்த நர்ஸ், "வாங்க ரவி, உங்களுக்கு ஃபோன் பண்ணிக்கிட்டே இருக்கேன். பிடிக்கவே முடியலை. கம்பௌண்டரை வீட்டுக்கு அனுப்பலாம்னு பார்த்தேன். டிவியில் ஃபிளாஷ் நீயூஸ் பார்த்துட்டு வந்திருவீங்கன்னு தெரியும். அதனால வெயிட் பண்ணினேன். கொஞ்சம் சீரியஸ். போகலாமா?"

நான் அந்த சுடிதார் பெண்ணிடம் எதுவும் பதில் சொல்லாமலே நர்ஸ் உடன் வந்துவிட்டேன். எனக்குப் பழக்கமான விஷயம் தான் இரத்தம் கொடுப்பது. அதனால் நானாகப் போய் கட்டிலில் படுத்துக்கொண்டு என்னைத் தயார்படுத்திக் கொண்டேன். ஐந்து நிமிடங்களில் எல்லாம் ஏற்பாடுகள் முடிந்து, என் இரத்தம் அந்த ப்ளாஸ்டிக் பையினுள் சென்றுகொண்டிருந்தது. மெஷினுடன் இணைக்கப்பட்ட அந்தப் பை மேலும் கீழுமாய் ஆடத்தொடங்கியது. அது எனக்கு மிகவும் பிடிக்கும். எப்பொழுதும் அந்த அரைமணி நேரத்தில், நான் என் வாழ்க்கையை நினைத்துப் பார்ப்பேன். ஆனால் இன்று அந்தச் சுடிதார் பெண்ணைப் பற்றிய எண்ணம் வந்துகொண்டிருந்தது.

நான் நர்ஸிடம், "நர்ஸ், யாருக்கு ஆக்ஸிடெண்ட்?"

"சின்னப் பொண்ணுங்க ரவி, எட்டு வயசுதான் இருக்கும். வெளியில் நிற்குதே அந்தப் பொண்ணுதான் பார்த்துட்டு இங்க எடுத்துட்டு வந்துச்சு. கேக்க மறந்திட்டேன் சாப்பிட்டுட்டீங்கள்ல?"

"ம்ம்ம், சாப்டுட்டேன்." நான் மெதுவாய் அவளைப் பற்றி யோசிக்கத் தொடங்கினேன். யாராய் இருக்கும். இதுதான் முதல் முறை ஒரு பெண் என் கவனத்தை திசை திருப்பியது.

"ரவி முடிஞ்சிருச்சு போலிருக்கே, ஒரு நிமிஷம் இருங்க மேங்கோ ஜூஸ் கொண்டு வந்திர்றேன்."

கையில் ஊசிக்காயம் மறையப் போடப்பட்டிருந்த ப்ளாஸ்டருடன் வெளியே வந்தேன். வளாகத்தில் குறுக்கும் நெடுக்குமாய் அவள் நடந்து கொண்ருந்தாள்.

என்னை பார்த்ததும் அருகில் வந்தவள், "சார் ரொம்ப நன்றி, நீங்க தமிழா, பார்க்கத் தெரியவேயில்லை. அதனால் தான் ஆங்கிலத்தில் பேசிவிட்டேன். மன்னிக்கவும்." சொல்லிவிட்டு எதையோ மறந்தவள் போல் முகத்தை மாற்றிக் கொண்டு "மறந்துட்டேன், என் பெயர் மதுமிதா," சொல்லி கையை நீட்டினாள்.
ஆச்சர்யமாய் இருந்தது தமிழகத்துப் பெண்கள் பொதுவாய் ஆண்களுடன் கை குலுக்குவதில்லை. ஆச்சர்யத்தைக் காட்டாமல் நானும் கைகுலுக்கிவிட்டு, "என் பெயர் ரவிவர்மன், ரவின்னு கூப்பிடுவாங்க." என்றேன்.


"ரவிவர்மன்னா ஓவியமெல்லாம் வரைவீங்களா?" சொல்லிவிட்டுச் சிரித்தாள். அந்தக் சூழ்நிலையிலும் கூட அவளால் சிரிக்க முடிந்தது, ஆச்சர்யமாயிருந்தது. அது ஒரு நிமிடம்தான் நீடித்தது பின்னர் பழைய நிலைக்கே வந்துவிட்டாள். அப்பொழுதுதான் பார்த்தேன் அவள் சுடிதாரில் இரத்தக்கறைகள் இருந்ததை.

நான் அவளிடம், "நீங்கள் வீட்டிற்குப் போய் உடை மாற்றிவிட்டு வருவதாய் இருந்தால் வாருங்கள். நான் பார்த்துக் கொள்கிறேன்"

"நர்ஸ் என்னை இங்கே இருக்கச் சொன்னார்கள்."

"பரவாயில்லை நான் நர்ஸிடம் பேசிக் கொள்கிறேன். நீங்கள் போய் மாற்றிவிட்டு வாருங்கள்." அவள் சென்று சிறிது நேரத்தில் வேறு சுடிதார் போட்டுக்கொண்டு வந்திருந்தாள். அவள் முடியை பார்த்ததும் இந்த இரவிலும் குளித்துவிட்டு வந்திருக்கிறாள் எனத் தெரிந்தது. இரண்டு மணி நேரம் ஆகியிருக்கும் அவள் திரும்பிவர, அவள் வந்த சிறிது நேரத்தில் எல்லாம் அந்தக் பெண் குழந்தையின் பெற்றோர் வந்து, அவளிடம் நன்றிசொல்லிக் கொண்டிருந்தார்கள். நான் விடை பெற்றுக்கொண்டு திரும்பவும் வீட்டிற்கு வந்துவிட்டேன். அவளைப்பற்றி மறந்தும்விட்டேன், அதுதான் என் வழக்கமும் கூட.

அடுத்த வாரம் லைப்பரரியில், யாரோ கூப்பிட்டதைப் போலிருக்கவும் திரும்பினேன். அந்தச் சுடிதார் பெண்தான் நின்று கொண்டிருந்தாள். பெயர் என்னவோ சொல்லியிருந்தாள், ஞாபகம் வரவில்லை.

"மறந்துட்டீங்களா ரவி, நான் மதுமிதா."

"ஆமாம் சாரி, என் பெயரை ஞாபகம் வைத்திருக்கிறீர்களே?"

"நான் சாதாரணமாகவே பெயர்களை மறப்பதில்லை, அதுவும் அந்த ராத்திரியில் தேவதை போல் கூந்தல் பறக்க வந்து ரத்தம் கொடுத்துவிட்டு, எனக்காக இரண்டு மணிநேரம் காத்திருந்த உங்கள் பெயரை மறக்க முடியுமா? சொல்லப்போனால் உங்களைத்தான் தேடிக் கொண்டிருந்தேன். ஆனால் இங்கே சந்திப்பேன் என்று நினைக்கவில்லை. நீங்கள் இங்கேதான் வேலை பார்க்கிறீர்களா?"

என்னுடைய போனிடைலை அவள் அழகாக விமர்சித்ததை ரசித்தேன். அன்றிரவு அவசரம் ஆதலால் ரப்பர் பேண்ட் போடாமல் வந்திருந்தேன்.

"இல்லீங்க நான் இங்கே வேலை பார்க்கவில்லை, ஏன் கேட்கிறீர்கள்?"

"இல்லை, நான் லைப்பரரியன் கிட்ட ஒரு புத்தகத்தைப் பற்றிக் கேட்டேன். அவங்க உங்களைக் காட்டி உங்களிடம் கேட்கச் சொன்னார்கள். குர்தா பைஜாமா, போனிடைல் பார்த்ததும் நீங்களா இருக்குமோன்னு நினைச்சேன். கடைசியில் நீங்களேதான்."

"என்ன புத்தகம்?"

"சில நேரங்களில் சில மனிதர்கள், ஜெயகாந்தனுடையது."

"அப்பிடியா, அதுதான் என்னிடம் கேட்கச் சொல்லியிருக்கிறார்கள். அந்தப் புத்தகம் என்னிடம் தான் இருக்கிறது. நாளை வாங்கிக் கொள்ளுங்கள்."

அவள், நான் கையில் வைத்துள்ள புத்தகங்களை ஆச்சர்யமாகப் பார்த்தாள்.

"லைப்ரரியன் கொஞ்சம் வயசானவங்க, அதனால தினமும் அரைமணிநேரம் அவங்களுக்கு உதவ இங்கே வருவேன். புத்தகங்களையெல்லாம் அடுக்கிக் கொடுத்துவிட்டுப் போவேன்." நான் சொல்லிவிட்டு கையில் இருக்கும் புத்தகங்களை ரேக்கில் அடுக்கத் தொடங்கியிருந்தேன்.

"சரிங்க ரவி, அப்ப இன்னொரு நாள் பார்ப்போம்!" அவள் சொல்லிவிட்டுப் போனாள். இப்படித்தான் நாங்கள் முதன்முதலில் பார்த்துக் கொண்டது.

(தொடரும்...)

Read More

Share Tweet Pin It +1

1 Comments

In BHEL கதை சிறுகதை திருச்சி

காக்கா'பீ' ரோட்டில் ஒரு காதல் கதை



"ஏய் நில்லுடி, என்னமோ நான் பேசப்பேச பதில் சொல்லாமப் போய்க்கிட்டேயிருக்க?"

இது நம்ம ஹீரோ, பேரு சுந்தர பாண்டியன் மனசுக்குள்ள பெரிய மதுரையை மீட்ட சுந்தரப் பாண்டியன்னு நினைப்பு, படிக்கிறது பன்னிரெண்டாவது. அப்பா BHEL எம்ப்ளாய், அம்மா ஹவுஸ் வொய்ஃப், ஒரே ஒரு தங்கச்சி பேரு ரமா பத்தாவது படிக்கிறாள்.

"இங்கப் பாருடா உனக்கு இவ்ளோதான் மரியாதை! இனிமேட்டும் கண்டத பேசிக்கிட்டு என் பின்னாடி வந்த போலீஸ்கிட்ட பிடிச்சிக் கொடுத்துறுவேன்."

இது நம்ம ஹீரொயின், பேர் ரேஷ்மா. ரெண்டு வருஷத்துக்கு முன்னால் பார்க்கச் சகிக்காது, இப்ப என்னடான்னா 'B' செக்டர் பசங்கள்ள பாதி பேரு இவ பின்னாடி தான் சுத்தராங்ய, மீதி பாதி நம்ம ஹீரோவின் தங்கச்சி ரமா பின்னாடி. படிப்பில பூஜ்யம், வருஷாவருஷம் அவங்கப்பா சிபாரிசில மேலத்தூக்கிப் போட்டே பத்தாவது வந்துட்டா. சரி இப்ப மேற்சொன்ன சிச்சுவேஷனுக்கு.

பேக்ரவுண்ட் என்னான்னா, இப்படிப்பட்ட நம்ம ஹீரோயினி ரேஷ்மா பத்தாவது வந்துட்டாலும், பாஸாக அப்பா சிபாரிசு உதவாதுன்னு டியூஷன் படிக்கப்போக. 'B' செக்டரின் ரவுடி வேறயாரு நம்ம ஹீரோ, ஒரு கிரிக்கெட் மேட்சில் கிடைத்த கேப்பில், ஸ்டம்ப்பை உருவி, ரேஷ்மாவை ரூட்டுக் கட்டிக் கொண்டிருந்த சங்கரையும், பிரசன்னாவையும் அடித்து ரத்தம் பார்த்துவிட்டு, ரேஷ்மாவை பின் தொடரும் முழு உரிமையையும் நிலைநாட்டிய பிறகுவந்த ஒரு வெள்ளிக்கிழமை தான் மேற்சொன்ன சம்பவம் நடந்தது.

அதாவது 'B' செக்டர் ஹீரோயினி 'C' செக்டர் டியூஷன் மாஸ்டரிடம் பாடம் படிக்க, நம்ம ஹீரோவுக்கு காவல்காரன் பொறுப்பு தானா வந்திருச்சு, 'C' செக்டர் மன்மதன்களிடமிருந்து ரதி தேவதையை காப்பாற்ற வேண்டிய கட்டாயம். சிகப்பு கலர் BSA SLR லேடீஸ் ஸ்பெஷல், பச்சை கலர் யூனிபாரம், வெள்ளை ரிப்பன் தேவதை 'B'யையும் 'C'யையும் ரெட்டைச் சடை பட்டாம்பூச்சியாய்க் கடக்க பாவம் நம்ம ஹீரோ; அவனிடம் இருந்ததோ இன்னொரு BSA SLR, வெய்ட் அ மினிட் அது பொண்ணுங்க வண்டியாச்சே. ஆமாம் உண்மைதான் பொண்ணுங்க வண்டிதான் அது, நம்ம ஹீரோவோட அப்பா சார், பரிட்சையில் பாஸானாத்தான் 'அட்லஸ்' வண்டின்னு சொல்லிட்டார். பொம்பளை புள்ள வண்டியேதுன்னு கேக்குறீங்களா? நான் ரமா பரிட்சையில் பெயிலாகும்னு சொல்லையே?

இதனால் தனக்கு ஆமாம் சாமி போடும் இரண்டு பச்சை பிள்ளைகளில் ஒருநாள் மாற்றி ஒரு அட்லஸ் இரவல். பரிகாரமாய் ஒருத்தனுக்கு கிரிக்கெட் மேட்சில் ஓப்பனிங்கும் இன்னொருத்தனுக்கு பத்து ஓவர் மேட்சில் கிடைக்கிற ஒரே ஒரு மூணு ஓவர் போடும் வாய்ப்பும் கொடுங்க வேண்டும். காதலுக்குத்தான் கண்ணில்லையே கிரிக்கெட்டும் மறைக்கலை. இதனால் நம்ம ஹீரோவோட கேப்டன்ஷிப்பை மாத்தணும்னு ஏற்கனவே ரத்த அடிப்பட்ட, பிரசன்னாவும் சங்கரும் எட்டப்பனாகியிருந்தார்கள் 'B' செக்டர் கிரிக்கெட் டீமிற்கு.


ஒருவாரமாய் நன்றாக சிச்சுவேஷனை அனலைஸ் பண்ணி வந்த நம்ம ஹீரோ வெள்ளிக்கிழமை, முன்னாடியே ப்ளான் செய்திருந்தது போல டியூஷன் மாஸ்டர் வீட்டின் முன் நிறுத்தியிருக்கும் நாற்பத்தம்பது ஐம்பது சைக்கிள்களில் சரியாய் நம்ம ஹீரோயின் சைக்கிள் முன்னால் நிறுத்தி யாரும் பார்க்காத ஒரு நிமிஷத்தில் அவளுடைய சைக்கிளின் வால்டியூபை பிடிங்கிவிட்டான். பிறகென்ன தன்னோட ப்ளான் படி காக்கா'பீ' ரோட்டிற்கு கொஞ்ச தூரம் முன்னாடி வண்டியை நிறுத்திவிட்டு தேவதைக்காகக் காத்திருந்தான். அவன் நினைத்தது போல், ரேஷ்மா வண்டியைத் தள்ளிக்கொண்டே காக்கா'பீ' ரோட்டில் நுழைந்ததும், வேறெங்கிருந்தோ வருவதைப் போல் வந்தவன் அவளருகில் வண்டியை நிறுத்தினான்.
இப்ப இன்னொரு பேக்ரவுண்ட், இந்த காக்கா'பீ' ரோடு என்பது இந்த மாதிரி காதல் வயப்பட்டவர்களின் சொர்க்கபுரி. ஒரு பக்கம் அவள் படிக்கும் RSK ஸ்கூல், இன்னொரு பக்கம் அவன் YWCA ஸ்கூல். இரண்டு ஸ்கூலுக்குமான பொதுவான ரோடு. ரோட்டோரத்தில் அடர்த்தியான மரங்களுடன் சாதாரணமாக பத்தடிக்கு ஒரு ஸ்ட்ரீட் லைட் இருக்கும் BHELல் இந்த ரோட்டில் மட்டும் இருபத்தைந்தடிக்கு ஒரு லைட் போஸ்ட் வீதத்தில் நான்கு. இயற்கை வெளிச்சம் சுத்தமாயிருக்காத ஒரு ரோடு.

அந்த மாதிரியான மரங்களில் காக்காய்களின் கூடுகள், எவ்வளவு வேகமாக வண்டியில் போனாலும் மாலை வேளைகளில் அவைகள் போடும் எச்சத்திலிருந்து தப்பவேமுடியாது. காதலர்களின் சொர்க்கபுரியாக காக்கா'பீ' ரோடு பேமஸானதற்கு இதுவும் ஒரு காரணம். நைட் நேரத்தில் குளிக்க விரும்பாதவர்கள் அந்தப் பக்கம் வருவதில்லை. அதுமட்டுமில்லாமல் மரங்களில் இருந்து காக்கைகள் போடும் எச்சம் 10% மக்கள் மீது விழுந்தாலும் 90% ரோட்டில் விழுவதால் வரும் ஒருவித நாற்றம் காரணமாயும் அந்த ரோட்டை உபயோகிப்பது குறைவு. ஆனால் காக்கா'பீ' ரோட்டை உபயோக்கிக்காமல் போக வேண்டுமானால், ரொம்பவும் சுற்றிக் கொண்டு போகவேண்டும். பஞ்சரான சைக்கிளை தள்ளிக்கொண்டு போக மற்ற ரோட்டை உபயோகிக்க மாட்டாள் என்றும்; அந்த ரோட்டில் தான் தள்ளிக் கொண்டு வருவாள் என ஹீரோ நினைத்தது அப்படியே நடந்தது.

"என்ன ரேஷ்மா பஞ்சராயிடுச்சா?"

ஹீரோவின் தங்கச்சியும் ஹீரோயினும் ஒரே கிளாசில் படித்ததால் கொஞ்சம் பழக்கம் உண்டு, அதுமட்டுமில்லாமல் ரேஷ்மாவிற்கு கோக்குமாக்காக அவன் அவள் பின்னால் சுற்றுவது தெரியும்.

"ஆமாம். நீ எங்க இங்க?"

"இல்லை சும்மா கிரிக்கெட் விளையாட வந்தேன்..." சற்று நிறுத்தியவன், "...நான் உன்கிட்ட ஒரு விஷயம் சொல்லணும். ஆனா எப்படி சொல்லறதுன்னே தெரியலை!"

மனசென்னமோ ரேஷ்மாவிடமும் அவன் சொல்லப்போகும் விஷயத்திலும் இருந்தாலும் காக்கா அசிங்கம் செய்திடுமோ என்ற பயம் இருந்தது. 'ஏன் அந்த ரோட்டில் போனே?' என்ற கேள்வி மிகச் சுலபமாய் வீட்டில் கேட்கப்படலாம்.

"அப்பச் சொல்லாத!" சொல்லிவிட்டு வேகமாய் நடையைக் கட்டினாள் நம்ம ஹீரோயின்.

சுதாரித்தவனாய், தானும் வேகமாய் வண்டியைத் தள்ளிக்கொண்டு அவளுடைய வேகத்திற்கு ஈடுகொடுத்தவனாய் முன்னேறியவன். அவள் வண்டிக்கெதிராய் இவன் வண்டியை நிறுத்தி, சைக்கிள் ஹேண்டில்பாரில் இருந்த அவள் கையைத் தொட்டு,

"I Love You!!!" சொல்ல,

அந்தக் இருட்டு ரோட்டிலும் கூட ரேஷ்மாவின் கன்னமெல்லாம் சிவந்து அழத் தயாரானது தெரிந்தது.

"செருப்பால அடிவாங்கப்போற. வழிய விடுடா" அவனுடைய வண்டியைத் தள்ளிவிட்டு வேகமாக நடந்தாள்.

பின்னாலிருந்து,

"ஏய் நில்லுடி, என்னமோ நான் பேசப்பேச பதில் சொல்லாமப் போய்க்கிட்டேயிருக்க?"

அவன் கத்த, அவளும் கத்தினாள்.

"இங்கப் பாருடா உனக்கு இவ்ளோதான் மரியாதை! இனிமேட்டும் கண்டத பேசிக்கிட்டு என் பின்னாடி வந்த போலீஸ்கிட்ட பிடிச்சிக் கொடுத்துறுவேன்."

மேகத்திலிருந்து ததாஸ்து தேவதைகள் "ததாஸ்து" சொல்லியிருக்க வேண்டும். தொப்பையை தள்ளிக்கொண்டு பத்தடி தூரத்தில் போலீஸ் மாமா இருவருக்கும் எதிர் திசையில் வந்துகொண்டிருந்தார்.


ஆனால் அந்த இருட்டில் வந்த போலீஸ்காரருக்கு ஹீரோவின் முகத்தில் படர்ந்த பயரேகைகள் தெரிந்திருக்க நியாயமில்லை தான். ஆனால் காக்கா'பீ' ரோட்டில் ஒரு பெண்ணுடன் ஒரு ஆணைப் பார்த்தால் BHELல் எல்லா போலீஸ்காரர்களுக்கும் வரும் டவுட் அவருக்கும் வந்தது.

"என்னாம்மா வண்டியைத் தள்ளிக்கிட்டு வர்ற இந்தப் பய ஏதாவது பிரச்சனை பண்றானா?"

நம்ம ஹீரோ அதான் சுந்தரப் பாண்டியன் இதயத்திலிருந்து வந்த இதயத்துடிப்பொலியை 'பீட்'டா வைத்து எமினெம் ராப் பாடலொன்றே கூட பாடிவிடலாம், அவள் என்ன சொல்லப் போகிறாள் என்று இரண்டு காதுகளையும் தீட்டிக் கொண்டிருப்பது அவனுடைய சிவக்கும் காதுகளைப் பார்த்தாலே நன்றாகத் தெரிந்தது.

"இல்லை மாமா! இது எனக்கு தெரிந்த பையன் தான், இப்படி கிராஸ் பண்ணிப் போய்க்கிட்டிருந்தான். நான் தான் இந்த ரோட்டை கிராஸ் பண்ண பயந்துக்கிட்டு என்கூட கூட்டிக்கிட்டு போறேன்."

ஹீரோவுக்கு முதலில் ஹீரோயின் இவ்வளவு பேசுவாள் என்றே தெரியாது. அவள் அப்படிப் பேசியதும், அவன் வயிற்றுக்குள் பட்டாப்பூச்சி பறக்கத்தொடங்கியது அவன் கண்களின் கிறக்கத்திலேயே தெரிந்தது. ஜொள்ளு வழிய அவன் ஹீரோயினை கண்களாலேயே சாப்பிட்டு விடுபவனைப்போல் பார்த்துகொண்டிருந்தான், பெருமிதம் வழிந்தோடியது அவன் கண்களில். அவள் தன்னைப் போட்டுக்கொடுக்கவில்லை அந்தப் போலீஸ்காரரிடம் என்னதான் தன்னிடம் அதட்டி, திட்டிப் பேசினாலும் அவள் தன்னைக் காதலிக்கிறாள் அதனால் தான் அப்படி நடந்துகொள்கிறாள் என்று தனக்குத்தானே கற்பனைக் கோட்டைகள் கட்டிக் கொண்டிருந்தான்.

இத்தனையிலும் போலீஸ்காரர் அவனைக் கவனிப்பதைக் கூட இவன் உணரவில்லை, அவருக்கு நம்ம ஹீரோவிடம் ஏதோ தப்பிருப்பதைப் போல் பட்டிருக்க வேண்டும்,

"வேணும்னா நான் உன் வீடுவரைக்கும் வரட்டுமா பாப்பா?" கேட்க நம்ம ஹீரோயினி, "இல்ல மாமா ஒன்னும் பிரச்சனையில்லை நீங்க போய்ட்டுவாங்க."

அவருக்கும் நம்ம ஹீரோ மேல சுத்தமா நம்பிக்கையில்லாவிட்டாலு, நம்ம ஹீரோயின் ரொம்பவும் தெளிவா பேசினதால மனது எதோ தப்பு நடக்குதுன்னு சொன்னாலும் தேத்திக்கிட்டு நடையைக் கட்டியதும்தான் தாமதம். ஹீரோயினி,

"இங்கப்பாருடா, நான் மட்டும் அந்தப் போலீஸ்கிட்ட சொல்லியிருந்தேன்னா, உங்க குடும்பத்துக்கே ரொம்ப அவமானமாப் போயிருக்கும். இத நான் உனக்காக செஞ்சேன்னு நினைக்காத, அங்கிள் ஆண்ட்டிக்காகத் தான் அப்படி சொன்னேன்.

மரியாதையா சைக்கிளை ஓட்டிக்கிட்டுப் போயிரு அவ்வளவுதான் சொல்வேன்." கத்தியது.

போய்க் கொண்டிருக்கும் போலீஸ் காதில் விழுந்திடுமோ என்று பயந்தவனைப் போல் வேகமாக சைக்கிளில் ஏறிப் பறந்தேவிட்டான் நம்ம ஹீரோ. கதை இதோட முடிஞ்சிருந்தா தான் பரவாயில்லையே, கதையை நேரில் பார்த்தவன்ங்கிற முறையில் இந்தக் கதையை இங்கயே நிறுத்திறலாம்னு தோன்றினாலும். உண்மையை மறைப்பதில்லை என வாக்குறுதி கொடுத்துள்ளதால் தொடர்கிறேன்.

அடுத்த நாள் நம்ம ஹீரோவோட அப்பா எழுப்ப எழுந்தவனுக்கு தன்னைச் சுற்றிலும் நின்று எதோ எக்ஸிபிஷனைப் பார்ப்பதைப் போல் பார்த்துக் கொண்டிருக்கும் அம்மாவையும் தங்கையையும் பார்த்து ஒன்றும் புரியாதது நியாயம் தான் இல்லையா? அவன் தூங்கிக் கொண்டிருந்த பொழுது ரேஷ்மாவின் அப்பா வந்து நேற்று காக்கா'பீ' ரோட்டில் நடந்ததையெல்லாம் சொல்லி கண்டித்து வைக்குமாறு சொல்லியதும். அவங்கப்பா தர்மசங்கடமா கையைக் பிசைந்து கொண்டு நின்றதையும்.

"யேய் இங்கப் பாரு, இன்னிக்கு சாயந்திரம் உன்னை தபோவனத்தில் சேர்த்துவிடப் போறேன். உன் பிரச்சனை நாளுக்கு நாள் அதிகமாய்டே போகுது. இனிமேல் பொறுக்க முடியாது. ஒரு வருஷமாவது நீ அங்கப் படிச்சாத்தான் திருந்துவ." சொல்லிவிட்டு ஹீரோவின் அப்பா நகர, அம்மா தங்கை கண்களில் கண்ணீர். ஆனால் யாருடைய கண்ணீரும் அவருடைய முடிவை மாற்றமுடியாது என்று தெரிந்துதான் இருந்திருக்க வேண்டும் ஹீரோவிற்கு.

உண்மையில் நம்ம ஹீரோவிற்கு அந்தச் சமயத்தில் தபோவனம் போய் படிப்பது என்பது பெரிய பிரச்சனையாக இருக்கவில்லை, அவனால் ரேஷ்மா அவன் விரும்பாமல் போனதைத்தான் ஜீரணிக்கவே முடியவில்லை. அதனால் திருப்பராய்த்துரை தபோவனத்தில் போய்ப் படிப்பதைப் பற்றி எந்த அபிப்பிராயபேதமும் ஏற்படவில்லை. ஆனால் அங்கே சேர்ந்த முதல் வாரத்திலேயே தான் அனுபவித்துவந்த சவுகரியங்கள், தான் செய்துவந்த மூடத்தனங்கள் எல்லாம் பிரகாசமாப் புரிந்துவிட்டது என்றாலும்...

நான் பார்த்தவன் என்பதால் நிச்சயமாய்ச் சொல்லலாம்,

அப்பா, அம்மா, தங்கச்சியைப் பார்க்காமல், படு ஸ்டிரிக்ட்டான ஒரு இடத்தில் இருப்பது அவனுக்கு ஆறுமாதங்கள் வரை பெரும் பிரச்சனையாகத்தான் இருந்தது. ஒரு மாதத்திற்கு ஒரு முறை அம்மா அப்பா வரலாம் என்றாலும் அவனை பார்க்காமல் இருந்தால் தான் திருந்துவான் என்று ஹீரோவின் அப்பா அவனைப் பார்க்கவே வராமல் இருக்க. ஐந்துமணிக்கு எழுந்து குளித்துவிட்டு, பஜனைகள் முடித்துவிட்டு, வீட்டுப்பாடம் படித்து, மணிக்கு சாப்பிடப்போய், மாதத்திற்கு ஒரு முறை சாப்பாடு பரிமாறி என ஒழுக்கமே வாழ்க்கையாய் இருக்கும் ஒரு இடம் அவனுக்கு முதலில் பிரச்சனையாய் இருந்தது ஆச்சர்யமே கிடையாது. ஆனால் தன்னையெல்லாம் விடவும் மோசமானவர்களும், பணக்காரர்களும் அந்த இடத்தில் அப்படி படித்துவந்ததையும் பார்த்தவனுக்கு, கிடைத்த நல்ல சாமியார் ஆசிரியர்கள் நிறைய நல்ல விஷயங்கள் நல்ல விதமாய்ச் சொல்லித் தந்ததையும் வைத்து அவன் அடுத்த ஆறுமாதத்தில் நல்லவனாய் மாறியதைத்தான் நம்பவேமுடியவில்லை.

சொல்லப்போனால் ஹீரோவின் அப்பாவாலும் தான், எப்படியிருந்தாலும் அந்த வருஷம் +2 வில் கோட்டடிச்சிருவான் என பயந்துகொண்டிந்தவர். அவன் மீது ரேஷ்மாவின் அப்பா கம்ப்ளெய்ன்ட் செய்ததும் இதுதான் சாக்கு, ஒருவருஷம் தபோவனத்தில் போட்டால் ஒழுக்கம்னா என்னான்னாவது கற்றுக்கொண்டுவருவான் என மனதைத் தேற்றிக் கொண்டு போட்டவருக்கு. பிள்ளை பன்னிரெண்டாவதில் அந்த பள்ளியில் முதலிடமும், மாவட்ட அளவில் இரண்டாவது இடமும், அவங்கப்பா நினைக்கவே நினைக்காத மார்க்கும் வாங்கிவிட இன்னொரு பிரச்சனை தோன்றியது.

சாமியார் கால்களிலெல்லாம் விழுந்து பவ்யமாய் தன்னுடன் வீட்டிற்குக் கிளம்பிய பையனை பார்த்தால் பாதிச் சாமியார் போலத்தான் இருந்தது. நெற்றி முழுக்க வைக்கப் பட்டிருந்த திருநீரும் புருவங்களுக்கிடையில் சாந்தமாய் இடப்பட்டிருந்த சந்தன குங்குமமும். அழுக்கிலாமல் துவைக்கப்பட்டு அயர்ன் செய்யப்பட்டிருந்த காக்கி பேண்ட் வெள்ளைச் சட்டையில் அவன் முகம் தேஜஸ் கிளம்பும் ஒன்றாய் ஹீரோவின் தந்தைக்குப் பட்டது சரிதான் என்பதைப் போலிருந்தது அவனுடைய சைகைகள். வீட்டிற்கு வந்த பிறகும் ஐந்து மணிக்கு எழுவது யாரையும் தொந்தரவு செய்யாமல் குளித்துமுடித்து பக்கத்தில் உள்ள பிள்ளையார் கோவிலுக்குப் போய்விட்டு நேரங்கழித்து வருவது. அவசியம் இருந்தால் மட்டும் பேசுவது என ஹீரோ வீட்டில் அவர்கள் எதிர்பார்த்ததற்கெல்லாம் நல்லவனாய் இருந்தது ஒரு வித பீதியையே ஏற்படுத்தியது. அதைவிட அவன் அடுத்துச் சொன்னது,

அதே சாமியார் மேனேஜ்மெண்ட் நடத்தும் கல்லூரியில் படிக்கப்போவதாய்ச் சொன்னதும் ஹீரோவினுடைய அப்பாவிற்கு கோபம் பொத்துக் கொண்டு வந்தது வாஸ்தவம்தானே.

"ஒன்னு முழுக்க ஒழுங்கீனமாயிரு இல்லைன்னா இப்படியிரு. சாதாரணமா ஏண்டா இருக்க மாட்டேங்கிற, நீ மாறிட்ட உன்னைய அன்னைக்கு தபோவனத்துக்கு அனுப்பியிருக்க கூடாது தான். தப்பு பண்ணிட்டேன் மன்னிச்சுக்கோ. அதை விட்டுட்டு இனிமேலும் அங்கத்தான் படிப்பேன்னா என்ன. சரியில்லை, நீ பேசாமயிரு உனக்கு நீ வாங்கியிருக்கிற மார்க்குக்கு பீஇ கம்ப்யூட்டர் சைன்ஸ் ஸீட் நான் வாங்கித்தர்றேன்.

அதை விட்டுட்டு பிஎஸ்ஸி படிப்பேன், அதுவும் சாமியார்க் காலேஜில் தான் படிப்பேன்னு நிக்காத அவ்வளவுதான் சொல்லிட்டேன்."

நம்ம ஹீரோ அம்மா, அப்பா வெளியில் போயிருந்த ஒரு நேரத்தில் தன்னுடைய பெட்டி படுக்கையை எடுத்துக் கொண்டு நகர்ந்ததை மட்டுமல்ல, அதன் பிறகு அவன் அப்பா ஊரே தேடியதையும் பின்னர் என்னமோ நினைத்துக் கொண்டவராய் தபோவனத்திற்கு வர அங்கே இருந்துகொண்டு அவர் என்ன சொல்லியும் வரமாட்டேன் என்று திடமாய்ச் சொன்னதையும் பார்த்தவன் என்ற முறையில் அன்று அவன் மீது எனக்கு கொஞ்சம் கோபம் கூட வந்தது.

ஹீரோவின் அப்பாவிற்கு தெரிந்திருக்க வேண்டும், அப்படியே பிடிவாதத்தில் தன்னை உரித்துக்கொண்டு பிறந்தான் என்பது மனைவியையும் பிள்ளையையும் இழுத்துக் கொண்டு போனவர் சரியாய் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை என அடுத்த மூன்றாண்டுகள் 18 முறை அவனை பார்க்க வந்திருப்பார். ஒவ்வொரு முறையும் அவன் அவர்களை விட்டு வெளியே போய்க் கொண்டிருப்பதாகவே உணர்ந்தார் என அவருடனே பயணித்த அந்த பஸ் பயணங்கள் உணர்ந்திருக்கிறேன். 36 மாதங்கள் மெழுகுவர்த்தியாய்க் கரைய ஹீரோ வாழ்க்கையென்ற பயணத்திற்கு பிரம்மாதமாய்த் தயாராகியிருந்தான்.

இங்கேயும் முடித்துவிட வேண்டும் எனதான் நினைக்கிறேன், மீண்டும் உண்மையை மறைப்பதில்லை என்பதால் தொடர்கிறேன்.

அவனுடைய வாத்தியார்கள் சாமியார்களாகயிருந்த போதிலும், அவனை இன்னொரு சாமியாராக ஆக்கிவிடாமல் இருந்ததற்காக ஹீரோவின் அப்பா உடைத்த தேங்காய்கள் சிதறியதை பார்த்து சிரித்த எனக்குக்கூட ஹீரோவின் மனநிலை புரியவில்லை, என்ன நினைத்துக் கொண்டிருக்கிறான் என்று. ஆனால் அவன் ஆசிரியர்கள் அவனை ஒரு நல்ல மனிதனாக மாற்றிவிட்டதாகவும், நல்ல மனிதர்கள் ஒரு நல்ல சமூகத்தை ஏற்படுத்தவேண்டுமே ஒழிய சமூகத்தைப் புறக்கணித்து சாமியாராவது சமுதாயத்தைப் பலவீனப்படுத்தும் என்று சொல்லி அனுப்பிவைத்த நாள் மழை பெய்யவில்லை.

அவனாய் திரும்பவும் வீட்டிற்கு வந்தவனைப் பார்த்து BHEL முழுக்கவே வியந்தது என்றால் அது மிகையல்ல, வேலை வாங்கித் தருவதாய்ச் சொன்ன தந்தையை தடுத்து நிறுத்தி தானாய் சுயமாய் வாங்கிக் கொள்ள முயற்சிக்கிறேன் முதலில் கிடைக்காவிட்டால் உங்களிடம் சொல்கிறேன் என்றவனை இன்று நீங்கள் சொன்னால் கூட நம்ப மாட்டார்கள் நான்கு வருடத்திற்கு முன்பு இவன் தான் ஒரு பெண்ணிடம் அவள் சைக்கிளை நிறுத்து தன்னுடைய காதலைச் சொன்னவன் என்றால். திரும்ப ஹீரோ ஹீரோயினைப் பார்க்கவேயில்லையா என்றால் பார்த்தார்கள் ஏறக்குறைய அதே காக்கா'பீ' ரோட்டில்.

காலாற நடந்துவரக் கிளம்பியவனின் கால்கள் தானாக காக்கா'பீ' ரோட்டில் தடம்பதிக்க, நான்காண்டு நினைவுகள் கரையும் பனிமலையால் உருகி ஓடத்தொடங்கியது. அதன் பின் நடந்ததை என்னவென்று சொல்வது, அவனருகில் சைக்கிள் வந்து 'சலீரென்று' பிரேக் போட்டு நிற்க நினைவு திரும்பியவனாய் நிமிர்ந்து பார்த்தவனுக்கு முதலில் அடையாளம் தெரியவில்லை தான். வேறயார் நம்ம ஹீரோயினி ரேஷ்மா தான்.

"ஹேய் நீங்க சுந்தர் தானே. என்னைய ஞாபகம் இருக்கா? இதே ரோட்டில் வச்சு என்கிட்ட I Love You சொன்னீங்களே! ஏதும் ஞாபகம் இருக்கா?"

அவள் பேச அவளையே பார்த்துக் கொண்டிருந்தவனி உதடுகளில் அசைவில்லை.

"அன்னைக்கு எங்கப்பாக் கிட்ட சொன்னப்ப, உங்கப்பா இவ்வளவு சீரியஸாய் எல்லாம் எடுத்துப்பார்னு நினைக்கலை. ஏதோ உங்களை திட்டுவிடுவார், நீங்க என் பின்னாடி சுத்த மாட்டீங்கன்னு தான் நினைச்சேன். பச், என்னென்னமோ நடந்திருச்சு. உங்கம்மாவையும், உங்கத் தங்கச்சியையும் பார்த்தாத்தான் பாவமாயிருக்கும். என்னாலத்தானே இவங்க பையனையும், அண்ணனையும் விட்டுட்டு இருக்காங்கன்னு.

ம்ம்ம் என்ன நினைச்சு என்ன ப்ரயோஜனம். நடந்தத மாத்த முடியுமா என்ன?

சரி நான் பாட்டுக்கு பேசிக்கிட்டேயிருக்கேன். நீங்க ஒன்னுமே சொல்லலை. என்ன நான் பேசுறது காதில் கேக்குதா?"

நான்காண்டுகளுக்கு முன் இந்தக் குரல் கேட்டால் பாலாறும் தேனாறும் பாய்ந்த காதுகளில் அந்தச் சமயத்தில் பெரிய வித்தியாசம் ஏற்படவில்லையென்று அவன் கண்கள் சொன்னது, கண்கள் சொல்வதை மட்டும் நம்பும் நான் முழுதாய் நம்பினேன்.

"ம்ம்ம் என்ன கேட்டீங்க..."

"என்னது கேட்டீங்களா? சரியாப் போச்சு. ஹலோ நான் உங்களை விட சின்னப் பொண்ணு. சரிதான் ரமா சொல்லிக்கிட்டிருந்தா எங்க அண்ணன் பாதி சாமியாரா ஆய்ட்டான்னு. அவ சொன்னப்ப நான் நம்பலை இப்ப நம்பித்தான் ஆகணும் போலிருக்கு. " நிறுத்தியவள்

"வாங்களேன் நடந்துக்கிட்டே பேசுவோம்..."

இப்படி மீண்டும் ஆரம்பித்த இன்னொரு பக்க காதல், கொஞ்சம் கொஞ்சமாய் சாமியாராய்ப் போய்க்கொண்டிருந்தவனை சாதாரணமானவனாய் மாற்றத் தொடங்கியது. ரேஷ்மாவின் வீட்டிலும் தங்களால் தான் ஹீரோவின் குடும்பம் ஹீரோவை பிரிந்திருந்ததாக ஒரு மனநிலை நிலவியதால், ரேஷ்மாவிற்கு பிடித்திருந்தால் சரியென்று விட்டுவிட்டார்கள்.

இது இப்படியே போய் இரண்டாவது வருடத்தில் அவர்கள் கல்யாணம் செய்து கொண்டவரை நான் அவர்களுடனேயே இருந்தேன் ஆனால் அவர்களுக்கு கலியாணம் ஆன பின்னால் இருவரின் வாழ்க்கையில் எட்டிப் பார்ப்பது அநாகரீகம் என்று அவர்களின் காதலுடன், காதலித்த நாட்களின் நினைவுகளுடன், காக்கா'பீ' ரோட்டுடன் மட்டும் இப்பொழுது நிற்கிறேன். இன்னொரு முறை வேறொரு ஹீரோ, ஹீரோயினியிடம்.

"ஏய் நில்லுடி, என்னமோ நான் பேசப்பேச பதில் சொல்லாமப் போய்க்கிட்டேயிருக்க?"

என்று சொல்லமாட்டானா என்ற ஏக்கத்துடன்.

Read More

Share Tweet Pin It +1

3 Comments

In ஆடை உதிர்ப்பவள் சிறுகதை ஸ்ட்ரிப் க்ளப்

ஆடைகளற்றவளின் அறம்




பாடலுடன் தனிநபரை அடையாளப்படுத்தும், அவரை நினைக்கும் பொழுதெல்லாம் மனதில் அந்தப் பாடல் ஒலிரும் நிகழ்வு எனக்கு எப்பொழுதும் அமைவதில்லை. மியாவின் ‘லிவ் ஃபாஸ்ட் டைய் யங்’ பாடல், சௌத் கரோலினாவின் கிரீன்வில் நகரத்தில் அத்தனை புகழ்பெறாத லஸ்ட் ஸ்ட்ரிப் க்ளப்பில் ஆடை உதிர்க்கும் ஹாலன்டிற்கானது. இந்த வகைப் பெண்களுக்கு இப்படி ஒரு பாடல் இருக்குமென்றாலும் ஹாலன்ட்-டின் முதல் பாடல் எப்பொழுதும் லிவ் ஃபாஸ்ட் டைய் யங் தான். ஒரு முறை டிஜே ஹாலன்ட் மீதான கோபத்தினால் வேறொரு பாடலை போட்டுவிட, இவள் உதிர்த்து முடித்துவிட்டு கோபத்தில் கண் கலங்கியது நினைவில் இருக்கிறது. இளமை கொஞ்சிய 60 கிலோ மெல்லிடை தேகத்திலிருந்து கனக்கும் 90 கிலோவிற்கு அவள் ஊதிய பொழுது அவள் தனங்களின் கனமும் கூடியிருந்தது தான் இப்பொழுது எழுதும் பொழுது சட்டென்று நினைவில் வருகிறது. எடைபார்க்கும் கருவிகளாலில்லை அவளுடனான நடனப் பொழுதுகளில் அவள் உட்கார்ந்த கனம் விழுந்த தொடைகளின் வலியால் தெரியும். புகழ்பெறாத என்றால் புகழ்பெற்றதும் இருக்கவேண்டுமே, அப்படி ஒன்று கிரீன்வில்லில் இருந்தது ப்ளாட்டினம் ப்ளஸ். ஐ-85 சவுத்தில் கிரீன்வில் சிட்டிக்குப் போகும் வழியில் இந்த பிரம்மாண்டமான ஸ்ட்ரிப் க்ளப்பில் கவனம் சிதறாமல் வண்டி ஓட்டிவிட முடியாது. அட்லாண்டா - ஜார்ஜியா, ராலே - நார்த் கரோலினா போன்ற நெருக்கமான நகரத்து மக்கள் மட்டுமல்ல ஒரு முறை மயாமி - ப்ளோரிடாவிலும், லாஸ் வேகஸ் நெவேடாவிலும், நியூயார்க் சிட்டி - நியூயார்க்கிலும் கூட நான் கிரீன்வில் நகரத்தவன் என்று சொன்னதும் மக்கள் குறிப்பிட்டு ப்ளாட்டினம் ப்ளஸ்ஸைக் கேட்ட அனுபவம் உண்டு. அமெரிக்கா போன்ற மாபெரும் நாட்டில் இப்படிப் பொதுவாய் நிகழ்வதில்லை, இன்று தென் அமெரிக்க நாடுகள் ஐரொப்பிய நாடுகள் என்று சுற்றித்திரிந்துவிட்டு இதை எழுத உட்காரும் பொழுது இன்னமும் ஆச்சர்யமாகத்தான் இருக்கிறது, கிரீன்வில்லின் ப்ளாட்டினம் ப்ளஸ் அடைந்திருந்த பிரபள்யம். 

அமெரிக்காவிலே கிரீன்வில் - சௌத் கரோலினா அத்தனைப் பிரபலமான பெரிய நகரமல்ல, இன்னும் சொல்லப்போனால் பைபிள் பெல்ட் என்று சொல்லப்படும் ஞாயிற்றுக் கிழமைகளில் ஆல்கஹால் விநியோகம் மறுக்கப்படும் பிற்போக்குத்தனங்கள் நிறைந்த பழமைவாத கன்சர்வேட்டிவ் களம் தான். உள்நாட்டுப் போர் என்று வட அமெரிக்காவின்  வட அமெரிக்காவும் தென் அமெரிக்காவும் சண்டை போட்டார்கள் என்று நீங்கள் பாடங்களில் படித்திருக்கக் கூடும் ஆனால் இந்த தென் அமெரிக்க மாநிலங்களில் அதிக சண்டை அல்லது மொத்தமாகவே சண்டை நடந்தது சௌத் கரோலினாவில் தான். ஏன் உள்நாட்டுப் போர் என்று கேட்கலாம் அடிமைகளாக கறுப்பினத்தவரை தேயிலை தோட்டங்களில் வைத்துக் கொள்வதை நிறுத்தச் சொன்னதை எதிர்த்து தென் அமெரிக்க மாநிலங்கள் போட்ட சண்டை தான் உள்நாட்டுப் போர். இரண்டு லட்சம் பேர் இறந்த போரில் தென் அமெரிக்க மாநிலங்கள் தோற்றுப்போனது என்றாலும், இன்றளவும் நொடிப்பொழுதில் பெரும்பிரச்சனையை கிளப்பிவிடும் தலைப்பு இந்த விஷயம். ஞாயிற்றுக்கிழமை மட்டும் மது விற்பனை கிடையாது என்று கேட்கலாம், காரணம் ஞாயிற்றுக்கிழமை சர்ச் போகவேண்டும் என்பதற்காக. வெளித்தோற்றத்தில் அத்தனை இறுக்கம் கொண்ட நிலம். 

இந்த ஆடை உதிர்க்கும் ஆட்டையில் வேடிக்கை என்னவென்றால் - வேடிக்கை மட்டுமில்லை சிறிது விநோதமும், ஆனால் உள்நோக்கிப் பார்த்தால் முக்கியமான விஷயமொன்றும் உண்டு - அது இந்த வகைப் பெண்கள் சொந்த ஊரில் மட்டுமல்ல சொந்த ஊருக்கும் அருகில் இருக்கும் ஊர்களில் கூட வேலை செய்வதில்லை. அதனால் கிரீன்வில் அவர்களுக்கு பாதுகாப்பானது, தூரத்து ஊர்களில் இருந்து பெண்கள் கிரீன்வில்லில் கவர்ச்சி நடனம் ஆடிவந்தனர். பதினெட்டு வயதில் பொதுவாய் வீட்டை விட்டு வெளியேறி விடும் அமெரிக்க பதின்ம வயது பெண்களை வாழவைப்பது சர்வீஸ் இன்டஸ்ரி என்று சொல்லப்படும் ரெஸ்டாரன்ட் மற்றும் ஹோட்டல் சம்மந்தப்பட்ட தொழில் தான். பின்னர் வால்மார்ட் கே-மார்ட் போன்ற டிபார்ட்மென்ட் ஸ்டோர்கள், இதில் கிடைக்கும் நாள் வருமானம் போதாத பெண்கள் பெரும்பாலும் இப்படி ஆடை அவிழ்ப்பதில் இறங்கிவிடுவார்கள். உங்களுடைய அறம் எத்தனை தூரம் வளையும் என்பதில் இருக்கும் உளவியல் சார்ந்த கூறுகள் இவர்கள் அங்கே நின்றுவிடுவதிலும் அதிலிருந்து நகர்ந்து இன்னமும் சுலபமாய் பணம் பார்க்கும் வேலைகளில் இறங்கிவிடுவதிலும் சென்று முடியும். வெகுசிலரே ஆடை அவிழ்க்கும் துறையில் இருக்கும் சாதகங்களுக்காக வந்து சேர்கிறார்கள், அப்படிச் சிலரை பின்னைய காலங்களில் நான் பார்த்திருந்தேன். அமெரிக்காவின் மிகப்பிரபலமான கல்லூரிகளில் படித்து நல்லவேளையில் சேர்ந்து பின்னர் அதே அளவிற்கான பணத்தை மிகக் குறைந்த வேலை நாட்களில் குறைந்த வேலை நேரத்தில் சம்பாதிக்க முடிந்தது, என்னுடைய மிச்ச நேரத்தை இன்னும் தரமாக செலவழித்துக் கொள்ள முடிகிறது என்று சொன்ன பெண்ணை எனக்குத் தெரியும். 9 - 5 வரை வாரத்திற்கு ஐந்து நாள் வேலை செய்து வரும் பணத்தை மூன்று நாள் ஆறு மணிநேர ஆடை அவிழ்ப்பில் சம்பாதித்து விடுவதாகச் சொன்னவள் படித்தது நான் நினைத்துப் பார்த்தாலும் படிக்க முடியாத கல்லூரியில். சமூகம் மற்றும் பொருளாதாரத்தில் மேம்பட்ட ஆடை அவிழ்க்கும் பெண்களின் கருத்தமைவைப் பற்றிய ஆராய்ச்சிக் கட்டுரைகளை படிக்குமாறு வலியுறுத்தி, முப்பது டாலர்களில் எப்படி வீரியமாக உச்சமடைவது என்று ஆராய்ந்து கொண்டிருந்த என் தலைக்கு மேல் செல்லும் பந்துகளை அவள் வீசினாள். ‘Women who use their bodies for profit contributing to their own opperssion.’ என்கிற கருத்துவாக்கத்தில் எனக்கு நம்பிக்கையில்லை என்று அவள் சொல்லி நான் ஒரு ‘Feminist Stripper’ என்றாள். பொதுவாய் ஆடை அவிழ்க்கும் பெண்கள் அப்படிப்பட்டவர்கள் இல்லை, மிகவும் சராசரியான குடும்பத்தில் பிறந்து, வற்புறுத்தி படிக்க வைக்க யாருமில்லாமல் பள்ளி இறுதி கூட முடிக்காமல் இதைச் செய்கிறவர்களே அதிகம். எந்த முன் தயாரிப்பும் இல்லாமல் பயிற்சியும் பெறாமல் ஆடை அவிழ்ப்பதை தொடங்கிவிட முடியும் என்பதால் பொதுவாக இந்த உலகத்தில் வேலை செய்ய இரண்டு மூன்று முக்கியவிஷயங்களை கற்றுக் கொண்டாலே போதும் என்று ஒரு முறை லாஸ்வேகஸில் என்னுடம் பேசிக் கொண்டிருந்த பெண் சொல்லித் தெரியும். கிடைக்கும் காசை பத்திரப்படுத்திக் கொள்ளவது, கஸ்டமருடன் க்ளப்பை விட்டு வெளியேறாமல் இருப்பது டேபுள் டேன்ஸுக்கு யார் அழைத்தாலும் மறுக்காமல் செல்வது. அவ்வளவுதான். 

ஹாலன்ட் ப்ளாட்டினம் ப்ளஸில் இல்லாமல் லஸ்டில் ஆடை அவிழ்க்க பெரிய காரணம் ஒன்றும் இல்லை அவள் தோழி ஒருத்தி இங்கே அவளுக்கு முன்பே அவிழ்ந்து போய் நிர்வாணத்தில் இருந்தாள் அவ்வளவுதான். பொறாமைகளுடனான தொழில் தான் என்றாலும் தோழிகளுடன் இருப்பது பாதுகாப்பு, குறைந்த பட்சம் ஆரம்ப காலங்களில். ப்ளாட்டினம் ப்ளஸின் நடன அறை பிரம்மாண்டமானது, லஸ்டின் பரப்பளவை விடவும் ஐந்து ஆறு மடங்கு பெரிதானது. இளம் பெண்கள், நிறைய பெண்கள் என்று பொதுவாய் நீங்கள் ஸ்ட்ரிப் க்ளப் செல்லும் காரணங்களுக்கு எல்லா விதத்திலும் உகந்தது, ஆனால் இந்த இரண்டு க்ளப்பிற்கும் இடையில் ஒரு முக்கிய வித்தியாசம் இருந்தது. அது ஸ்ட்ரிப் க்ளப்கள் பொதுவாக எப்படி செயல்படும் என்பதில் பொதிந்திருந்தது. நுழைவுக் கட்டணம் ஒன்றை - கிரின்வில் போன்ற நகரங்களில் 10 அல்லது 20 டாலர்கள் - செலுத்திவிட்டு க்ளப்புக்குள் வந்தால், குறைவாக ஒளியூட்டப்பட்ட ப்ரம்மாண்ட அறையில் அங்கங்கே கொஞ்சம் இடைவெளிவிட்டு, இரண்டு பேர் உட்கார்வதற்கான வசதியுடன் இருக்கை மற்றும் இரண்டு மூன்று பியர் பொத்தல்கள் மட்டுமே வைக்க முடியும் வட்ட வடிவ குட்டி மேஜை, இதில் எந்த காலி இடத்திலும் அமரலாம். ப்ளாட்டினம் ப்ளஸில் இது போல் 100 பேர் உட்கார்வதற்கான வசதி இருக்குமென்றால், லஸ்டில் 30 நபர்களுக்கு மட்டுமே இருக்கும். பொதுவாக இப்படி நீங்கள் உட்கார்ந்ததும் காக்டெய்ல் வெய்ட்ரஸ் நீங்கள் ஒரு தீர்த்தமாவது வாங்குவீர்கள் என்று எதிர்ப்பார்ப்பார்கள். பெப்ஸியோ பியரோ இல்லை ஆன் த ராக்ஸ் லிக்கரோ பிரச்சனையில்லை. ஏனென்றால் அதற்கான பணம் க்ளப்பிற்கு, ஆனால் நீங்கள் கொடுக்கப்போகும் டிப்ஸ் ஒரு டாலரோ இல்லை இரண்டு டாலரோ அவர்களுக்கு. அதனால் ஏதாவது ஒன்று வாங்கியே ஆகவேண்டும். இந்தப் பணிப்பெண்களுக்கான சம்பளம் என்பது ஒரு மணிநேரத்துக்கு 10$ இருந்தாளே பெரிய விஷயம். பெரும்பாலான சமயங்களில் இந்தப் பெண்கள் ஆடை உதிர்க்கும் பெண்களை விடவும் நலினமாக அழகாக கண்கவரும் வகையில் இருப்பார்கள். இவர்கள் ஆடை அவிழ்ப்பைச் செய்யாமல் வெறும் பணிப்பெண்களாக இருப்பதற்கு நிறைய காரணம் இருக்க முடியும், அதில் முக்கியமானது கொள்கை அளவினானது. ஆடை அவிழ்ப்பு மேடையைச் சுற்றி அமைக்கப்பட்டிருக்கும் இந்த இருக்கைகள் அவர்களின் கண்காணிப்பில் இருக்கும்.

ப்ளாட்டினம் ப்ளஸ்ஸில் இந்த ஆடை அவிழ்ப்பு மேடை பிரம்மாண்டமானது, ஒரே சமயத்தில் இருபது பேர் நடனம் ஆடக்கூடிய அளவு, ஆனால் மேடையின் நடுவில் இருக்கும் பளபளப்பான கம்பத்தில் ஒருவர் அல்லது சில குறிப்பிட்ட தருணங்களில் இருவர் மட்டுமே நடனம் செய்வர். ஸ்சேட்டிலைட் எனப்படும் துணை மேடைகளும் - அளவில் சிறியவை - பொதுவாய் இதே போன்று கம்பங்களுடன் பிரம்மாண்ட மேடையில் இடது வலது ஓரத்தில் இருக்கும். இந்தப் பெண்கள் முதலில் பிரம்மாண்ட மேடையில் இரண்டு பாட்டிற்கு உதிர்த்துவிட்டு பின்னர் தொடர்ச்சியாய் ஸ்சேட்டிலைட்களில் உதிர்க்கவேண்டும். எந்த வரிசையில் நடனம் ஆடவேண்டுமென்பது  அன்று அவர்கள் க்ளப்பிற்கு வந்த அடிப்படையில் பொதுவாக இருக்கும். அவர்களுக்கான அழைப்பு பாடலின் முடிவில் பொதுவாய் சொல்லப்படும். அன்றைய அவிழ்ப்பாளர்களின் கணக்குப் படி மணிக்கொரு முறையோ மணிக்கு இரண்டு முறையோ அவர்களுக்கான அழைப்பு வரும். ப்ளாட்டினம் ப்ளஸ் போன்ற பெரிய க்ளப்களில் வெள்ளி சனி ஞாயிறுகளில் இரண்டு மணிக்கொரு முறை அழைப்பு வருவதே பெரிய விஷயம். 


பெரும்பாலான க்ளப்களில் ஆடை அவிழ்த்து நடனம் ஆடுவதற்கு பெண்கள் க்ளப்பிற்கு பணம் கொடுக்க வேண்டும், அதிலிருந்து தொடங்கும் இரவில் அவர்களுக்கு மூன்று விதத்தில் பணம் கிடைக்கும். இப்படி மேடையில் ஆடை அவிழ்ப்பு செய்யும் பொழுது மேடை அருகில் அன்பர்கள் இறைக்கும் பணம். பின்னர் இந்த ஆடை உதிர்ப்பை ரசித்த சீமான்களை நடன மங்கையர்களின் இன்னபிற விஷேஷங்களில் மயக்கி உட்கார்ந்திருக்கும் இடத்திலேயே அவர்கள் மீது ஏறி ஆடி உற்சாகமூட்டும் டேபுள் டான்ஸ், அல்லது தனிப்பட்ட இடத்திற்கு அழைத்துச் சென்று - லேப் டேன்ஸ் - இடை நடனம் - என்கிற பெயரில் வசூலிக்கும் பணம். இடை நடனம் என்று சொன்னதும் ஒருவேளை பெண்கள் இடுப்பை வளைத்து ஆட்டி நடனம் செய்வதைத் போன்ற ஒன்றைத்தான் சொல்வதாக நீங்கள் ஊகிக்க முடியும், காரணப் பெயரும் அப்படித்தான் வந்திருக்கும் என்றாலும். பொதுவாய் அவர்கள் ரசிகக் கண்மணிகளின் இடுப்பில் ஆடுவது தான் நடக்கும். மாநிலங்களின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு க்ளப்புக்களின் ஆடை அவிழ்ப்பு அளவும் இருக்கும். சில மாநிலங்களில் நீங்கள் மேலாடை இல்லாமல் இடை நடனம் செய்யக்கூடாது. சில மாநிலங்களில் மேலாடை இல்லாமல் போகலாம் ஆனால் கீழாடை அவசியம். சில மாநிலங்களில் இரண்டுமே அவசியம் இல்லை. அத்தனை நேரடியான சட்டம் கூட இல்லை. கொஞ்சம் விலக்கு உண்டு. சில மாநிலங்களில் கீழாடை இல்லாமல் நடனம் ஆட வேண்டும் என்றால் க்ளப்பில் மது விற்பனை செய்யக்கூடாது. முழுநிர்வாணம் என்பது கேட்க கிளர்ச்சியாய் இருந்தாலும் ஆடை உதிர்க்கும் கலையில் நிர்வாணம் கலைப்பொருளை இழந்துவிடும். இதனால் பொதுவாய் பெயர்பெற்ற க்ளப்கள் மேலாடை இல்லாத நடனத்தை ஊக்குவிப்பார்கள். கீழாடை வேண்டுமென்றால் பாவாடையோ ஜீன்ஸோ இல்லை ஒரு குட்டி ஜட்டி அவ்வளவே. குறியை மட்டும் மறைக்கும் அளவுக்கு. இந்த இடுப்பில் சிறிய ஆடை மட்டும் அணிந்த பெண்கள் உங்கள் மேல் உட்கார்ந்து உரசி மகிழ்விக்கும் நடனத்தை தான் இடை நடனம் என்ற பெயரிலில் அழைப்பது. பொதுவாய் பாடல் கணக்கில் பணம் வசூலிக்கப்படும், குறைந்த பட்சம் ஒரு பாடல் அதிக பட்சம் பணம் இருக்கும் வரை. இந்த ஆட்டத்திற்கு உங்களை அழைத்துச் செல்வதற்கு ப்ளாட்டினம் ப்ளஸ் போன்ற க்ளப்புகளில் பொதுவாய் உரையாடல் என்ற ஒன்று இருக்காது, நேரடியாய் உங்களிடம் வந்து ‘லெட்ஸ் கோ’ வரும். ஆனால் லஸ்ட் க்ளப்பில் பெண்கள் உங்களிடம் உட்கார்ந்து கதை பேசி கதை சொல்லி டான்ஸுக்கு அழைப்பதில் ஒரு உரையாடல் உருவாகும். நீங்கள் முதல் முறை இது போன்ற க்ளப்புக்கு போகும் பொழுது உங்களுக்கு ‘லெட்ஸ் கோ’ அணுகுமுறை பிடிக்கலாம். ஆனால் தொடர்ச்சியாய் இந்த வேலையைச் செய்யும் பொழுது உரையாடல் முக்கியத்துவம் பெரும். இதன் காரணமாய் லஸ்ட் போன்ற க்ளப்புகளில் தொடர்ச்சியாய் இதே வேலையாய் இருக்கும் ஆட்களைப் பார்க்க முடியும். பொதுவாய் இவர்களுக்கு பிடித்ததாய் உதிர்ப்பவர்கள் என்று ஒரு தொடர்பு வளையம் இருக்கும்.

அமெரிக்காவிற்கு வந்த ஆறாவது மாதத்தில் ஒரு வெள்ளிக்கிழமை அமச்சூர் நைட்டில் தான் நான் முதன் முதலாய் ஹாலன்டை சந்தித்தேன். இந்த வகை அமச்சூர் நைட்கள் பொதுவாய் ஏமாற்றமாய் முடியுமென்றாலும் ஹாலன்ட் நிகழ்ந்தது ஒரு ஆச்சர்யம் தான். அமெரிக்க வந்த இரண்டாவது வாரமே, அமெரிக்க இன்டக்‌ஷன் என்கிற பெயரில் நண்பர்கள் ஸ்ட்ரிப் க்ளப்பிற்கு அழைத்து வந்திருந்தார்கள். தமிழகத்தின் நடுத்தர வர்க்க குடும்பத்தின் முதல் தலைமுறை பட்டதாரி வாலிபனின் அத்தனை கூச்சங்களும் எனக்கிருந்தது. நடுநிலை வரை இருபாலினரும் படிக்கும் பள்ளி தான் என்றாலும் அந்தப் பெண்களுடன் பேசிய வழக்கமில்லை, உயர்நிலை பள்ளி ஆண்களுக்கானது. பின்னர் கல்லூரியில் ஆங்கில் வழியில் இருபாலினருக்குமான பள்ளியில் படித்த மாணவர்களுக்கு இருந்த மனதிடமானது இல்லாததால் மூன்று வருட கல்லூரி வாழ்க்கையிலும் பெண்கள் இல்லாத வறட்சி. தட்டுத்தடுமாறி கல்லூரி முடித்து தாழ்வு மனப்பான்மை பொங்கி வழிய சேர்ந்த வட இந்திய அலுவலகத்திலும் பெண்களுடன் பழகுவதற்கான பேசுவதற்கான வாய்ப்பு அமையவில்லை. மனதை திடப்படுத்திக் கொண்டு இவர்களுடன் பேச தயாரான பொழுது அறிமுகமான ‘செக்ஸுவல் ஹாரஸ்மென்ட்’ வார்த்தையும் அதைப் பற்றிய உண்மை பொய்யான சில கதைகளும், ஓணானை வேலியுடனே போகவைத்தது. எந்தக் காரணத்துக்காகவும் வேலையை இழக்க முடியாதவனாய் சமூகம் நிர்பந்தப்படுத்தியிருந்தது. பெண்களும் செக்‌ஷுவல் ப்ளஷரும் அதில் ஒரு முக்கியப்பிரச்சனையே இல்லை. அமெரிக்க L1 விசா பாஸ்போர்ட்டில் குத்தப்பட்டு நார்த் கரோலினாவில் இறங்கிய முதல் வாரமே இந்த இன்டக்‌ஷன் செரிமனி தொடங்கியது. அதன் கடைசி பகுதி தான் ஸ்ட்ரிப் க்ளப். புதிதாய் வருபவர்களை அழைத்துச் செல்வதாய் ஒரு சாக்கு சொல்லி பழையவர்களும் செல்வது. இரண்டு வாரமும் இதற்கான தகவல்கள் கொஞ்சம் கொஞ்சம் சொல்லப்பட்டு வந்தது என்றாலும் முதல் முறை சென்று அமர்ந்ததும் அதுவரை ஹாலிவுட் படங்களில் மட்டுமே பார்த்துவந்த அழகிகள் பக்கத்து இருக்கையில் அல்ல, தொடையில் உட்கார்ந்த பொழுது வியர்த்தது இன்னமும் பிசுபிசுப்பாய் நினைவில் இருக்கிறது. கொஞ்சம் கஷ்டப்பட்டு யோசித்தால் முதல் முறை என் மடியில் உட்கார்ந்த பெண் பெயரைக் கூட சொல்லிவிட முடியும், அவள் பெயர் ராக்ஸி ஆறடி உயரம் வெண்சங்கைப் போன்ற நிறம் மயில்கழுத்தின்  நீலம் தழுவிய கண்கள் பொன்னிற தோள் வரை நீண்ட தலைமுடி. முதல் முறை நண்பர்களுடன் சென்ற பொழுது உட்கார்ந்த அவளிடமே தொடர்ச்சியாய் அந்த ஸ்ட்ரிப் க்ளப் சென்ற பொழுதெல்லாம் இன்புற்றிருக்கிறேன், கற்புக்கரசனாய் அந்தக் க்ளப்பில் அவளுக்காய் காத்திருப்பவனாய் நீண்டிருக்கிறது பொழுதுகள், நிச்சயம் அவளுடன் மட்டுமே போவேன் என்று தெரிந்தபின் பார்த்தவுடன் வந்து முத்தமொன்றை கன்னத்தில் கொடுத்துவிட்டு பின் மற்றவர்கள் கூடச் சென்றுவிட்டு யாரும் இல்லாமல் போகும் வேளையில் என்னிடம் வருவாள். இரண்டு டான்ஸ் - டூ ஃபார் ஒன் - முறையில், உசுப்பேற்றி அந்த பத்து நிமிடங்களுக்குள் பேன்ட்டிற்குள் உச்சமடையாத பொழுதில் மூன்றாவது பாடல். அப்பொழுது தான் அமெரிக்கா வந்திருந்த காரணத்தால் மனதிற்குள் ஓடும் கன்வர்ஷன் ரேட் காரணமாய் இதுவே அதிகம் என்கிற மனநிலை தவிர்க்கமுடியாததாயும் வீட்டிற்குப் போனால் ஏதோவொரு போர்ன் வெப்சைட் பத்துநிமிடம் அமைதியாகிவிடலாம் என்று மூளை சொல்லும் கணக்குகளுடன் கடந்தது நாட்கள். 


அமெரிக்க போலீஸ் மீதான பயம் காரணமாய் இவ்விடத்தில் எப்பொழுதும் கனவானாய் மட்டும் திகழ்ந்திருந்த என்னை அங்கிருந்து ஸ்ட்ரிப் க்ளப்பின் இருண்மையை நோக்கி நகர்த்தியது சிதம்பரம். ஒருமுறை க்ளயண்டிற்காக வேலை செய்த, எப்பொழுதும் எதைப் பற்றியாவது புலம்பிக் கொண்டேயிருக்கும், முன்தலையில் சற்றும் முடியேயில்லாத பாதி வழுக்கை சிதம்பரத்திடம் டென்னிஸ் ஆடிக்களைத்த பொழுதில் என்னுடைய ஹாபி ஸ்ட்ரிப் க்ளப் செல்வது என்று  வீண் பெருமைக்காக உளறிவைத்த கணத்தில் நான் முதன்முதலாய் அந்த க்ளப்பை வேறுவிதத்தில் பார்க்கத் தொடங்கினேன். ஆடிய இரண்டு செட்களையும் நான் ஜெயித்திருக்க வேண்டும் என்று இப்பொழுது அந்த நாளைப் பற்றி யோசித்துப் பார்த்தால் தோன்றுகிறது, வெற்றி தரும் கர்வத்தில் தான், அவருக்கு என்னுடைய ரகசியத்தை சொல்லியிருக்க வேண்டும்.  நானும் வருவேன் என்று அடம்பிடித்து என்னுடன் வந்த அந்த 43 வயது இளைஞர் அடித்த லூட்டி ஆச்சர்யமானது. வாரம்தோறும் திங்கள் முதல் வியாழன் வரை ப்ராஜக்டில் வேலை செய்வதற்காக வேறொரு நகரத்திலிருந்து வரும் அவர் அமெரிக்க பிரஜை என்பது வேறு, பறந்து வர விமானம், தங்க ஹோட்டல், வந்து போக கார், சாப்பிட பர் டைய்ம் கிடைக்கும் மனிதருக்கு கல்யாணம் ஆகி 14 - 15 வயதில் பையனொருவன் உண்டு. ப்ராஜக்டில் இப்படி சிலரை க்ளெயன்டிடம் காசு அடிப்பதற்காக வைத்திருப்பார்கள். அதில் ஒரு முக்கியமான வெண்ணை வெட்டி இந்த சிதம்பரம். 

பொதுவாய் ஸ்ட்ரிப் க்ளப்பில் ஆடை அவிழ்ப்பவர்களிடம்  - ஹோட்டலுக்கு - வர்றியா கேள்வி பெரும்பாலும் கேட்கப்படுவது உண்டு தான், ஆனால் நான் சிதம்பரத்தை அழைத்துக் கொண்டு ஸ்ட்ரிப் க்ளப் வந்த பொழுது அது அத்தனை எளிதாய் அவர்களிடம் கேட்க முடியும் என்று தெரியாது நான் கேட்டதுமில்லை.  சிதம்பரம் ஆடை அவிழ்ப்பவர்களிடம் மட்டுமல்ல மதுபானம் கொண்டுவந்து கொடுக்கும் பெண்களிடம் கேட்க ஆரம்பித்தார். அதுவும் உரையாடல் வழி நீண்டு அல்ல, பியரை வைத்துவிட்டு காசு கேட்கும் பொழுது உனக்கு எவ்வளவு என்கிற வகையில். பின்னர் ஸ்ட்ரிப் க்ளபுக்கு எங்களைப் போல் டான்ஸ் பார்க்க வந்த வெள்ளைக்கார பெண்களிடம் தொடங்கினார், நான் அடிவிழும் முன் உங்களுக்கு ஓவராய்டுச்சு என்று திரும்ப அழைத்து வந்திருந்தேன. அவருக்கு அங்கேயிருந்து பெண்களை அழைத்துச் செல்லும் விருப்பம் இல்லை. உலக மகா கஞ்சனான அவருக்கு உள்நுழைவதற்கான கட்டணமான என்ட்ரி பீஸ் கூட நான் தான் கொடுத்திருந்தேன். மனித மனங்கள் எத்தனை விகாரமானது என்பதற்கு அது ஒரு உதாரணம், ஆடை அவிழ்க்கும் பெண்கள் தவிர்த்து மற்ற பெண்கள் வரமாட்டார்கள் என்பது அவருக்குத் தெரிந்து தான் இருந்தது, சில ஆடை அவிழ்க்கும் பெண்களுமே கூட வரமாட்டார்கள், ஆனால் அந்தக் கேள்விக்காக அவருடன் சண்டைக்கு வரமாட்டார்கள் என்பதுவும் அவருக்குத் தெரிந்திருந்தது. அவர்களைத் தாழ்த்தி அதில் கிளர்ச்சியடையும் ஒரு மகத்தான சல்லித்தனம், இப்படியான இழிசெயல்களை பெரும்பாலான இந்தியர்கள் தொடர்ச்சியாக செய்வதை கவனித்தபடியே இருந்தேன். இதன் காரணமாய் சில வாரங்கள் ஸ்ட்ரிப் க்ளப் போகாமல் தவிர்த்தேன், சிதம்பரத்துடன் சேர்ந்து பதிந்து போயிருந்த என் பிம்பம என் முகம் அவர்களுக்கு மறக்கவேண்டும் என்பதற்காய். ஆனால் காலம் கலைத்துப் போட்டு விளையாடும் விளையாட்டில் ஒன்றாய் நான் முதலில் சென்றிருந்த ப்ராஜக்டில் இருந்து விலகி மற்றொரு ஸ்டேட்டுக்கு மற்றொரு ப்ராஜக்டுக்கு ஏறக்குறைய சிதம்பரம் போல் ப்ளைட், ஹோட்டல், காரி, பர் டைய்ம் என்று தான் முதலில் சௌத் கரோலினாவிற்கு வந்திருந்தேன். 

அங்கே தான் அமைச்சூர் நைட்டில் ஹாலன்டை சந்தித்தேன். அந்தக் க்ளப்பில் அவளுக்கும் எனக்கும் ஒரே நாள் முதல் நாள். என் கற்பை அப்பொழுது ஹாலன்ட் கணக்கிற்கு மாற்றியிருந்தேன். ராக்ஸியைப் போலில்லை ஹாலன்ட் என்று சொல்லத் தொடங்குவதில் பல சிக்கல் இருந்தது, அதே ஆறடி வெள்ளை நிறம் தோள் வரை நீளும் பொன்னிற கூந்தல் மட்டுமில்லாமல் மிளிரும் நீல வண்ணம் கண்கள் என்று கைதேர்ந்த தொடர் கொலைகாரன் போல் அவளுக்கான என் தேர்ச்சியில் ஆச்சர்யம் எதுவும் இல்லை. ஆனால் முதல் முறை லஸ்ட் கிளப்பில் ஹாலன்ட் நிகழ்ந்த்தது ஆச்சர்யம், அவள் அன்று வராமல் போயிருந்தாள், ஆயிரம் பொய் சொல்லி எப்பொழுதும் மறுக்கும் எத்தனையோ பெண்களில் இன்னொருத்தியாய் அவளும் உதிர்ந்து போயிருப்பாள். அந்த க்ளப்பிற்கு அவள் வந்தது முதல் முறையாய் இருந்தாலும் ஆடை உதிர்ப்பதில் அவளுக்கு அனுபவம் இருந்தது, ஆடை அவிழ்க்க பாடலுடன் ஒத்திசைந்து ஆட, அங்கிருந்த கம்பத்தில் மேலும் கீழுமாய் நாகமாய் அநாயாசமாய் நகர்ந்து மயக்கிவைக்கவும். ஒரு மணிநேரத்துக்கு ஒருமுறை மட்டும் வரும் ஸ்பெஷல் பொழுதில் பெண்கள் வரிசையாய் மேடையேறி இறங்கி அதற்கு முன்பே பேசி வைத்திருந்த அன்பர்களை அழைத்துக் கொண்டு நகர்ந்து போக, எப்பொழுதையும் போல் நான் இன்னமும் கண்டுபிடிக்காத என்னவளுக்காகக் காத்திருந்த பொழுதுதான் அவள் மேடையில் நிகழ்ந்தாள். மியாவின் பாடல் ஏறக்குறைய என்னையும் ஹாலன்டையும் டிஜேவையும் தவிர்த்து இன்னும் ஒரேவொருவர் மட்டும் தான். ஏறக்குறைய எங்கள் இருவருக்கும் மட்டுமான பிரத்யேக நடனம், அந்த மற்றவர் அங்கே ஆடை அவிழ்க்கும் இன்னொருத்தியின் உரிமைக்கானவர், இவள் நடனத்தில் கவனம் செலுத்தவில்லை. நாகரீகம் கருதி மியாவின் பாடலின் இடையிலேயே சென்று ஐந்து டாலர்களை தூவிவிட்டு நின்றதை கவனித்தவளாய் வந்து நன்றிக்காய் கன்னம் உரசியவளிடம் ‘See you around.’ சொல்லிவிட்டு வந்து இருக்கையில் அமர்ந்தேன். எப்பொழுதைக்குமான ஒன்றுதான், அதில் என்னிடம் வந்து பேசு என்றோ, லேப்டான்ஸ் உன்னுடன் செல்லத் தயார் என்றோ எந்த மறைமுக செய்தியும் கிடையாது. சமூகநீதி. அசாதாரணமான பொழுதில் தனித்துவிடப்பட்ட நானும், எனக்காக மட்டும் ஆடிய அவளுக்கு பணம் கொடுப்பது, அந்தச் சமூகம் கட்டமைத்திருந்த ஒரு நியதி. எல்லோரும் செய்யவேண்டும் என்பதில்லை, அந்த மற்ற நபர் இவற்றை கண்டுகொள்ளவேயில்லை. ஆனால் நான் அப்பொழுதுவரை இழந்திராத கண்ணியமான ஆண்களுக்கான கடமை என்று நான் நினைத்துக் கொண்டிருந்த ஒன்றுதான் அப்படிச் செய்யவைத்தது. நிறைந்த சபைக்கு அவள் ஆடும் நடனத்தின் எதிலும் ஒரு சிறு குறையையும் எனக்காக மட்டும் அவள் ஆடிய பொழுது செய்யவில்லை. அவளுக்கான ஒரு நாளில் அவளுடைய அந்த ஆட்டம் சில நூறு டாலர்களை அவளுக்கு அள்ளித் தந்திருக்கும், தந்ததை நான் பார்த்தும் இருக்கிறேன். இரண்டு பாடல்கள் நிறைவடைந்தது. மறைவான லேப்டான்ஸிற்கான கேபின்களில் இருந்து ஜோடி ஜோடியாய் மக்கள் வெளிப்பட்ட தருணம், ஹாலன்ட் மேடையில் இருந்து நான் தூவிய பணத்தை பொறுக்கிக் கொண்டு வந்து என்னிடம் நெருங்கி உட்கார்ந்து, ‘If you want special, we could do it now.’ என்றாள். அப்படியான ஒன்று க்ளப்களில் வழமை தான், எப்பொழுதும் ஏதாவது ஒரு பெண் மைய கம்பத்தில் ஆடிக் கொண்டிருக்க வேண்டும் என்ற விதி கொண்ட க்ளப்கள், இது போன்ற ஸ்பெஷல் நேரங்களில் ஆடிக் கொண்டிருக்கும் நங்கைகளுக்கு கொடுத்த விதிவிலக்கு தான் அது. பொதுவாக ஒரு நான்கிலிருந்து ஐந்து நிமிடம் பிடிக்கும் ஒரு பாடலுக்கு 30 டாலர் என்று வைத்துக் கொண்டால், அந்தச் சிறப்புக் காலத்தில், இரண்டு பாடல்களுக்கு 20 டாலர் என்று கணக்கு, இன்னொரு பத்து டாலர் நடன மாதருக்கு டிப்ஸ். அதற்கு முன்பு அரை மணிநேரமாவது என்னுடன் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தாள் மட்டுமே கேபினுக்கு கூட்டிச் செல்லும் என் வழக்கத்தை அவளின் ‘Blue eyed blonde’ற்காக தவிர்த்திருப்பேன் தான் என்றாலும், அப்பொழுது அவள் முகத்தில் தெரிந்த ஏக்கப்பார்வை யோசிக்கவே விடாமல் செய்திருந்தது. மேலாடை கழற்றி என் இடுப்பில் ஏறி அவள் செய்து காட்டிய மந்திர தந்திரங்களால்  நிலைதடுமாறி உச்சமடைய எனக்கு ஒரு பாடல் கூட பிடித்திருக்கவில்லை. ஆச்சர்யமாய் அவளுக்கும் அது புரிந்திருந்தது, வேறொன்றும் செய்யாமல் அடுத்த முழு பாடலுக்கும் வெறுமனே கட்டிக் கொண்டு உட்கார்ந்திருந்தாள். வெறும் உடம்பில் சில்க் ஷர்ட் மட்டும் அணிந்திருந்த என் மார்பில் அவள் இளமுலைக்காம்புகள் குத்தியது. என் தோள்களில் முகம் புதைத்திருந்தாள், அவள் முதுகை வருடிக் கொண்டிருந்தேன். இரண்டாம் பாடலும் முடிந்ததும் எடுத்துக் கொடுத்த முப்பது டாலருக்கு நறுவிசாய் கட்டியணைத்து நன்றி சொன்னவள், காதில் ‘You smell nice.’ என்றாள். ‘I try.’ என்று பதிலளித்துவிட்டு உட்கார்ந்த என்னருகில் அவளும் உட்கார்ந்தாள், நான் எதிர்பார்த்திருக்கவில்லை. அவளுடைய தேவை முடிந்து விட்டிருந்தது, இன்னொரு நடனத்துக்கு அன்றைக்கு நான் வருவேன் என்று அவள் உத்தேசித்திருக்கமுடியாது. அடுத்த அரைமணிநேரம் அவளிடம் என்ன பேசினேன் என்பது நினைவில் இல்லை, அது அவசியமும் இல்லை. ஆனால் அவள் அதன் காரணமாய் என்னை அவள் வாழ்வில் கட்டிப் போட்டுக் கொண்டாள்.  

அங்கிருந்து அவளுடைய வழமையான வாடிக்கையாளர் ஆனதும், பின்னர் அவளுக்காக மட்டும் தான் நான் அந்த க்ளப்பிற்கு வருகிறேன் என்று உறுதியான பின் அன்றைக்கு வேலை செய்யப்போகிறாள் இல்லை என்பதை குறுஞ்செய்தி அனுப்பும் வரை வந்திருந்தது, பெரும்பாலும் அதற்கு பதில் செய்தி கூட அனுப்பியதில்லை என்றாலும் அவளைச் சென்று பார்த்து லேப் டான்ஸ் கொண்டு, வழமையான அவளுக்கான ஸ்ட்ராபரி டாக்கரி வாங்கிக் கொடுத்து அலறும் இசையின் மத்தியில் எதைப் பற்றியும் பேசும் அளவிற்கு முன்னேறியிருந்தோம். எங்களுக்குள் விலகல் இருந்தது, அதற்கு அவளுக்கு காதலன் இருந்தது மட்டும் காரணம் இல்லை. வெள்ளி சனி மட்டும் க்ளப்பிற்கு வருபவர்களில் வயதானார்களாய் வசதியானவர்களாய் தேர்ந்து அவர்களுடன் உடலுறவு கொள்வாள் என்று எனக்குத் தெரிந்துதானிருந்தது, அதற்குப் பின் அவளை வீட்டிற்கு அழைத்துவரும் அளவிற்கு அவள் காதலனுக்கு இந்த விஷயங்கள் தெரியும். அவளுக்கும் அவள் காதலனுக்குமான உறவு பற்றி நிறைய யோசித்திருக்கிறேன் கொஞ்சம் பேசியும் இருக்கிறேன், அவளுடன் வாழும் ஒட்டுண்ணியாயிருந்தாலும் சண்டையில் சிலசமயம் அவள் முகம் அறைந்து சிதைத்திருக்கிறான் என்று தெரியும்.  என்னுடன் வீடுவர அவள் ஒப்புக் கொள்ளவேயில்லை, எவ்வளவு காசு கேட்டாலும் கொடுப்பேன் என்று தெரியுமாயிருக்கும் என்னமோ அவளுக்கு ஒரு காரணம். தொடர்ச்சியான அதைப் பற்றிய பேச்சு எங்கள் மற்றைய பொழுதுகளை பாதிக்கத் தொடங்க முழுவதுமாய் விட்டொழித்திருந்தேன். அங்கிருந்து அவளை என் படுக்கைக்கு அழைத்து வந்தது ஒரு திட்டம், எப்படியோ மாறி மாறி கேட்டுப் பார்த்திருந்தேன் என்றாலும் கடைசியில் தந்திரம் தான் வேலை செய்தது. காத்திருந்து அவள் உண்மையிலேயே மகிழ்வாய் இருந்த ஒரு சந்தர்ப்பத்தில், கனகாலம் கழித்து ஒருவேளை நான் ஒரு இந்தியன் அதனால உன் பாய்ப்ரண்ட் ஒத்துக்க மாட்டேங்கிறான்னு தான் நீ என்னுடன் படுக்க மாட்டேங்கிற, என்று கிசுகிசுத்தேன் ஒரு பொழுதில். மறைமுகமாக அவளை ரேஸிஸ்ட் என்றும் அவளுக்கான முடிவுகளை எடுப்பவன் அவள் காதலன் என்று நான் உணர்த்தியதை அவளால் ஏற்றுக்கொள்ள முடியாமல் போனது அவளுக்கு. பதிமூன்று வயதில் இருந்து அவள் அம்மாவுடன் பிரச்சனை, பலமுறை வீட்டைவிட்டு ஓடிப் போய் சில நாட்களில் போலீஸில் பிடிபட்டு வீட்டில் திரும்பவிடப்பட்டு, 18 வயதாவதற்காய் காத்திருந்து வீட்டைவிட்டு வெளியேறியவள் அவள். என்னிடம் அவள் அம்மாவைப் பற்றி பேசிய பொழுதெல்லாம் ‘Bitch’ என்பதைத் தவிர்த்து வேறெந்த வார்த்தையையும் உபயோகித்ததில்லை. ஐந்து வயதில் தன்னை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய அவள் குடும்பத்திற்கு மிகவும் நெருக்கமானவனைப் பற்றி வயதுக்கு வந்ததும் சொல்லியும் கண்டுகொள்ளாத தாய்க்கு உகந்த வார்த்தை தான். பொருளாதார சுதந்திரத்திற்காக இந்த வேலையைச் செய்துவந்தவள் வழமை போல் தாயிடம் இருந்து தப்பி ஒரு கொடுமைக்கார காதலனிடம் மாட்டிக் கொண்டிருந்தாள், பாதுகாப்பிற்காக இப்படிப் போய் சுழலில் சிக்கிக் கொள்வதும் இந்தத் தொழிலின் ஒரு மிக முக்கியமான பிரச்சனை. பின்பொருநாள் இவள் சுயமாக கார் வாங்குவதற்காக சேர்த்துக் கொண்டிருந்த பணத்தை எடுத்துக் கொண்டு ஓடிப்போன பின்தான் அவனிடமிருந்து விடுதலை கிடைத்தது, பணத்தை இழந்து புலம்பியவள் அதுவும் நல்லதிற்குத்தான் எனகிற எண்ணத்துக்கு இரண்டு ஸ்ட்ராபரி டாக்கரிகளுக்குப் பிறகு வந்திருந்தாள்.

அவள் வீடு உள்நாட்டுப் போரில் பங்கேற்றிருந்தது, அதுவும் அடிமைத்தனத்திற்கு ஆதரவாய், இன்னமும் அதைப்பற்றி பெருமை பேசும் குடும்பம். மற்றவர்களைப் போலில்லாமல் அவள் அம்மாவை பழி வாங்குவதற்காகவே கிரீன்வில்-இல் ஆடை அவிழ்த்து வந்தாள் என்று தெரியும், அதைப் போலவே எவ்வளவு தேடினாலும் ஒரு மயிர் அளவுக்குக் கூட பிற்போக்குத்தனங்கள் இல்லாதவள், லிபரல் என்று கூட தகுதி பிரிக்கமுடியாது அவளை, இடதின் இடது ஓரத்தில் இருப்பவள். அவளை வெறுமனே சீண்டும் எண்ணம் மட்டும் தான் எனக்கிருந்தது, இரண்டு புள்ளிகள் தான் அவள் முன் இருந்திருக்க வேண்டும். என்னை அறவே ஒதுக்குவது, இல்லை என்னிடம் தன்னை நிரூபிப்பது என்று நானாய் மனக்கணக்குப் போட்டேன். நான் அவளை ரேசிஸ்ட் என்று சொன்னதை அவளால் ஒப்புக்கொள்ளவே முடியவில்லை. அதைவிட முக்கியம் அவளுக்கான முடிவுகளை எடுப்பது அவள் காதலன் அல்ல என்று என்னிடம் நிரூபிப்பது. நான் அவளிடன் 2000 டாலர் வரை கொடுக்கிறேன் என்று முன்னமே பேசியிருக்கிறேன், ஆனால் அவள் என்னிடம் 600 டாலர் கேட்டாள், ஒரு மணிநேரம் மட்டும் என்றாள், ஒரு தடவை தான் என்றாள். அன்றிரவு அவள் உழைத்தாள், நான் வாய்வைத்த சில நிமிடங்களில் உச்சமடைய, டிஷ்யூ பேப்பர் வைத்து துடைத்துவிட்டு பத்துநிமிடம் மசாஜ் செய்து இரண்டாம் தடவை உச்சமடைய வைத்துவிட்டு, நாளை க்ளப் வரும்போது காசு எடுத்துவா என்று சொல்லிவிட்டு கிளம்பிப் போனாள். அவளை திருமணம் செய்துகொள்ளும் எந்த உத்தேசமும் என்னிடம் இருந்ததில்லை, அதற்கான தேவையில்லை, நான் அவளைக் காதலிக்கவில்லை என்ற தெளிவு இருந்தது. ஆனால் அவளுடனான உடலுறவு கொள்ளாமல் முடியாது என்று என் விநோதமான மனம் முடிவெடுத்திருந்தது. அவளுக்கு எதுவோ உறுத்தியிருக்க வேண்டும், முதல் லேப்டான்ஸிலிருந்து அன்றைய பொழுதிற்கு எட்டு மாதம் இருந்திருக்கவேண்டும். சிலருடன் முதல் நாளே கூட உடலுறவு கொண்டவள் தான் என்பதால், தானொரு ரேஸிஸ்ட் இல்லை, அப்படி ஒரு இழை கூட தன்னில் இருக்கமுடியாதென்று, எனக்கில்லை, தனக்குத்தானே நிரூபித்துக் கொள்ளத்தான் நினைத்திருக்க வேண்டும். அன்றைக்கு சியர்ஸை ராபர்ட் ஈ லீக்குச் சொன்னேன். பின்னர் வந்த மாதங்களில் மற்றவர்களைப் போல் என்னிடமும் 200 டாலர் வாங்கிக் கொண்டு வரத் தொடங்கியிருந்தாள், எப்பொழுதையும் போல ஒட்டுண்ணி அவள் இரத்தம் குடித்து வளர்ந்து கொண்டிருந்தது. என்னிடம் பிரியம் கொண்டிருந்தாள் என்று ஊகித்திருக்கிறேன்.

இந்தக் காலத்தில் எங்கள் ப்ராஜட்டில் புதிதாய் சேர்ந்த ஷ்யாமிற்கு, இந்தியாவில் என்னிடம் இருந்த எதற்கும் அடங்காத ‘quintesstial jackass’ என்கிற பிம்பத்தின் மீது காதல் இருந்தது. அமெரிக்காவில் நான் விருப்பப்பட்டு விலக்கிய பிம்பம் அது. இந்தியாவில் இருந்தவரை வேலை சம்மந்தப்பட்டு சொல்லப்படும் எல்லாவற்றுக்கும் மறுப்பு மட்டுமே சொல்லும் வழக்கமாயிருந்த எனக்கு அமெரிக்கா கொடுத்த விலையின் காரணமாய் காசு கொடு செய்கிறேன் என்பதில் நின்றிருந்தேன். அதை அசைத்துப் பார்த்தவன் ஷ்யாம் எங்களுக்குத் தெரிந்த எல்லோரிடமும் அவன் என் பற்றிய இந்திய பிம்பத்தை மீண்டும் அள்ளித்தெளித்த வண்ணம் இருந்தான்.  என்னைப் பற்றிச் சொல்வதற்கு எப்பொழுதும் பல கதைகள் இருந்தது அவனிடம், எதுவும் நான் செய்யாத ஒன்றில்லை, கொஞ்சம் மிகைபடுத்தப்பட்ட வடிவம். நான் அந்த பிம்பம் தான், ஆனால் அமெரிக்காவுக்காக நான் வேறொரு முகமூடியை பொறுத்திக் கொண்டு வாழ்ந்து வந்தேன். அந்த முகமூடியை கழட்டியபடியிருந்தான் ஷ்யாம். அமெரிக்க இன்டக்‌ஷன் செய்கிறேன் என்று நான் தான் அவனை லஸ்டிற்கு அறிமுகப்படுத்தியிருந்தேன். விடுமுறைக்காக இந்தியா சென்று பல நாட்கள் கழித்து திரும்பிய பொழுது ஷ்யாம், ஹாலன்டின் காதலனாகியிருந்தான், என்னைவிட எல்லாவிதத்திலும் மேலானவன் எனக்கு கொஞ்சம் பொறாமையாகத்தான் இருந்தது பொதுவாய் இப்படி ஆண்கள் காதலில் விழுவதுண்டு, ஹாலன்ட் விழுந்தது ஆச்சர்யம் அதைவிடவும் ஆச்சர்யம் அவள் இன்னமும் ஆடை அவிழ்த்துக் கொண்டிருந்தது. ஒரு இந்திய மனத்திடம் அத்தனை விசாலத்தை நான் எதிர்பார்க்கவில்லை, என்னால் அவளைக் காதலிக்க முடியாது என்பதும் எனக்குத் தெரிந்துதானிருந்தது. லஸ்ட் செல்வதைத் தவிர்க்கத் தொடங்கினேன், பிடிக்காவிட்டாலும் ப்ளாட்டினம் ப்ளஸ் செல்வதுதான் ஒரே வழியாகப் பட்டது எனக்கு. நாங்கள் முதலில் அவளைப் பற்றிப் பேசுவதை தவிர்த்தோம் பின்னர் செய்திகளாக அவளைப் பற்றி எனக்குத் தெரியத் தொடங்கியது. ஹாலன்ட் ஷ்யாமின் வீட்டிற்கு குடியேறினாள். சிலமாதங்களில் அவள் கர்ப்பமானாள், சர்ச்சில் சிறிய அளவில் திருமணம் செய்து கொண்டாள், அதற்கடுத்த சில மாதங்களில், பொன்னிற தலைமுடியும், நீல நிறக்கண்களுடன் அழகான ஒரு பெண் குழந்தையைப் பெற்றெடுத்தாள், குழந்தைக்கு ஒன்றரை வயதிருக்கும் பொழுது கொக்கெய்ன் ஓவர்டோஸில் தன் வாந்தியை தானே விழுங்கி ஷ்யாம் இறந்து போனான். ஷ்யாம் ஒரு இந்தியன் என்பதைத்தவிர இந்தக் கதையில் வேறொன்றும் வித்தியாசம் கிடையாது. இப்படி ஒரு மருமகள் பேத்தி இருப்பது தெரியாமலே ஷ்யாமின் குடும்பம் அவன் உடலை இந்தியாவில் பெற்று இறுதிச்சடங்கு நடத்தியது. நான் க்ரீவில்லில் இருந்து செய்ன்ட் பால், மினசோட்டா செல்லும் முன் ஒரு முறை ப்ளாட்டினம் ப்ளஸில் பார்த்தேன், மெலிந்திருந்தாள், அவள் உடை அவிழ்க்கும் முன் வெளியேறினேன் பின்னணியில் Cardi B’யின் Stripper Hoe ஒலிரத்தொடங்கியது. 

Got 'em sending gifts, it's not even my birthday
You niggas soft and I meant that in the worst way
Oh you bitches suckin' dick just to get a bag
You hustlin'-backwards ass bitch, you're doin' bad
It's pretty sad, you should be getting more than that
Suck a dick so you can pay your rent, couple months with that
I mention flow, keep it on the low, I tell you facts
When a nigga 'bout to cum, just throw it back
It's over, you won, that nigga trapped
And that bank account, girl? Empty that

- இது புனைவு, அமெரிக்க தேவதைகள் சீரிஸில் முதல் கதை ஹாலன்டுடயது

Read More

Share Tweet Pin It +1

0 Comments

In Edinburgh New year 2021 Snow

தொடர்ச்சியற்ற எண்ணங்கள்

 புத்தாண்டில் எடின்பரா... பனி போர்த்திய எடின்பராவின் புகழ்பெற்ற கோட்டை.







Read More

Share Tweet Pin It +1

0 Comments

Popular Posts