In உண்மைக்கதை மாதிரி

நான் காதலித்த கதை

இது என் காதல்(சொல்லலாமா தெரியவில்லை, வேண்டுமென்றால் விடலை காதல்) கதை, இதில் ஒரு குடும்பமும் ஒரு பெண்ணும் சம்மந்தப்பட்டிருக்கிறார்கள். ஆனால் என்னைப் பொறுத்தவரை எதையும் தவறாக எழுத போவதில்லை நான். சில முக்கியமான காரணங்களுக்காக நான் பெயரையும் இடத்தையும் மாற்ற முடிவு செய்திருக்கிறேன். மற்றபடி நடந்த நிகழ்வுகளே இந்தக் காதல்(வைத்துக் கொள்கிறேன்)கதை.

இது நடந்த பொழுது நான் பன்னிரெண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். அந்தப் பெண் மீனா எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தாள், காதலிக்கவோ இல்லை, அதைப்பற்றி நினைத்துப்பார்க்கவோ கூட, கூடாத வயது அது. ஆனால் வாழ்க்கையில் காதல் இப்படித்தான் வரும்.

பார்த்த முதல் தடவையே எனக்கு காதல் வரவில்லை, நிச்சயமாய் தெரியும். எங்கள் குவார்ட்டர்ஸ்க்கு (இன்னும் சொல்லப்போனால் என் வீட்டெதிரில்) அவர்கள் குடும்பம் வந்து சில மாதங்கள் இருக்கும். இதற்கு முன் என்னைப்பற்றி ஒரு சிறிய அறிமுகம். நான் அவ்வளவு அழகானவன் இல்லை, எங்கள் குடும்பம் மிகவும் நடுத்தரமான குடும்பம் தான். முக்கியமாக நான் தமிழ் மீடியத்தில் படித்துவந்தேன். இதை ஏன் இங்கே குறிப்பிடுகிறேன் என்றால், எங்கள் குவார்ட்டர்ஸ்ஸில் தமிழ் மீடியத்தில் படிப்பவர்கள் மிகக் குறைவு.

அவள் குடும்பம் சிறிது வசதியானது என்று நினைக்கிறேன். எங்கள் ஊரின் மிக நல்ல பள்ளியில்(ஆங்கில மீடியம்) படித்துவந்தாள். அவளுக்கு ஒரு அண்ணன், சரியாக என் வயது ஒத்தவன். நான்படிக்கும் அதே வகுப்பை வேறொரு பள்ளியில் படித்து வந்தான். நாங்கள் இருவரும் கிரிக்கெட் விளையாடியிருக்கிறோம், ஒன்றாய். அவங்க அம்மாவுக்கு என்னை பிடிக்கும் என்று நினைக்கிறேன். பேசிய பொழுதெல்லாம் நன்றாக பேசியதாக ஞாபகம்.

சரி இப்போது என் காதலுக்கு, அவள் அப்படி ஒன்றும் அழகில்லை, கேள்விபட்டவரையில் அறிவுமில்லை, ஆனால் நான் அப்படியில்லை ஒரளவுக்கு நன்றாக படிக்கக்கூடியவன், இன்னும்சொல்லப்போனால் அவள் அண்ணன் ஒரு பப்ளிக் தேர்வில் வாங்கியதை விட இரண்டு மடங்கு மதிப்பெண் வாங்கியவன். ஆனால் நாளாக, நாளாக, நான் படித்த சாண்டில்யன் கதைகளும், பாலகுமாரன் கதைகளும், என்னை அவளைப் பார்க்க சொல்லியது.

அந்தக் காலத்தில் நாம் யாரயாவது காதலித்து(அல்லது நடித்தாவது) தொலையவேண்டியிருக்கிறது. இந்த நிலைமை எனக்கும் ஏற்பட்டது. அந்த பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்கள் மத்தியில் நானும் காதலிக்கிறேன் என்று சொல்ல நினைத்தேன். அதற்கு சேர்ந்தால் போல் இவளும் வந்தாள். எல்லாம் ஒரு சந்தர்ப்ப சூழ்நிலை தான்.

அவள் அந்த சமயத்தில் தலை முடியை பாப் கட் அடித்திருப்பாள். நான் நினைக்கிறேன், குறிப்பாக இவளிடம், அந்த உணர்ச்சியை பெற்றது இதனால் தான் என்று. ஏனென்றால் எல்லா பெண்களும் நீண்ட முடி வைத்திருந்த காலமது. அதுமட்டுமில்லாமல் அவள் ரோட்டிலோ இல்லை சாதாரணமாக வேறு இடங்களிலோ அதிகம் பேசி பார்த்ததில்லை நான். இதுவும் ஒரு காரணம். அவ்வளவுதான் நான் விழுந்துவிட்டேன். இதன் பிறகு நடந்த கூத்துக்களே நான் சொல்ல நினைப்பது.

ஒரு முக்கியமான விஷயம், நான் அந்தப் பெண்ணை காதலிப்பது(பார்த்துக் கொண்டு பின்னாலேயே சுற்றுவது) என் வீட்டில் அப்பாவை தவிர எல்லோருக்கும் தெரியும். எங்கள் வீட்டில், அப்பாவுக்கு இந்த விஷயங்களில் விருப்பமில்லை. அம்மா, அக்கா இருவருக்குமே நன்றாகவே தெரியும். இருவருமே ஒன்றும் சொல்லவில்லை, இன்னும் சொல்லப்போனால் எங்க அம்மா சில சமயங்களில், தம்பி இன்னிக்கு பல்லு விளக்கலைன்னா மீனு அம்மாகிட்ட சொல்லிடவேண்டியது தான்னு சொல்லி பயமுறுத்துவாங்கன்னா பார்த்துக்கோங்களேன். நான் சிறிது ஓவியம் கூட வரைவேன். எங்கள் வீட்டு சுவரில் இரட்டை சடை(கொஞ்ச நாளில் அவங்க அம்மா பாப் வேண்டாமுன்னு சொல்லிட்டாங்கன்னு நினைக்கிறேன், என் வாழ்க்கையில் நான் மிகவும் வருத்தப்பட்ட நாட்கள்) போட்டு அவளை மாதிரியே
ஒரு படம் வரைந்து வைச்சிருந்தேன்(இன்னும் சுவற்றில் இருப்பதாக ஞாபகம்). ஓரளவுக்கு நல்ல ஒற்றுமையே இருக்கும் அந்த படத்தில், அவளைப்போல. இதனால் என் அப்பாவுக்கும் விஷயம் தெரிந்திருக்கக்கூடும்.

இப்படியாக சாதாரணமாக நான் அவளைப் பார்த்துக்(காதலித்துக்) கொண்டிருக்கையில்.
ஒருநாள் அவளும் அவள் நண்பியும் எதையோ சொல்லி என்னைப் பார்த்து சிரித்து
தொலைத்தார்கள். அவ்வளவுதான் முடிந்துபோனது என் சந்தோஷ வாழ்க்கை.

அதன் பின்னால் என்னைப் பார்க்க வேண்டுமென்றால் மீனு எங்கருக்காளோ அங்கதான் இருப்பான் என்றுஎங்க வீட்டில் சொல்லுமளவுக்கு அட்டகாசம். பொண்ணு மேக்ஸில் பெயிலாகி ட்யூஷன் போயிக்கிட்டிருந்தது. அவள் வீட்டிலிருந்து கிளம்பும் போது பின்னாலேயே கிளம்புவது. அவள் ட்யுஷன் சென்டர்வரைக்கும் கொண்டுவிட்டுவிட்டு; பின்னர், அருகே உள்ள கிரெவுண்டில் கிரிக்கெட் விளையாடிவிட்டு, அவள் வீட்டிற்கு திரும்பும் போது அவள் பின்னாடியே வந்து வீட்டிற்கு கொண்டுவிடுவது. இதெல்லாம் அவளுக்கு தெரியாமலே.

தினமும் இப்படித்தான் இதில் கொடுமை என்னவென்றால் நான் அப்பொழுது பன்னிரெண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். வீட்டில் படிக்கிறதாவது அப்பிடின்னா என்னன்னு கேட்டுக்கிட்டிருந்த காலமது. என் நாட்கள் இப்படியே போய்க்கிட்டிருந்தது, அப்பொழுது ஒருநாள் பக்கத்தில் உள்ள ஒரு கிளப்பில்(கொஞ்சம் பெரிய) ஒரு விழா, நடத்தும் பொறுப்பில் இருந்த எங்கள் பள்ளி N.S.S. மாணவர்களை அங்கே அனுப்பியது. நானில்லாமலா, அங்கே போனபின்தான் தெரிந்தது. மீனு படிக்கும் பள்ளியும் வந்திருந்தது என்று பிறகென்ன ஒரு திருவிழாத்தான்.

ஆனால் நான் போட்டிகளில் பங்குகொள்ள முடியாது. ஏனென்றால் நாங்கள் தான் நடத்துவதற்கு உதவி செய்ய வேண்டும். அவள் என்னவோ செய்தாள் சரியாக ஞாபகமில்லை, நாட்டியமோ, ஆங்கிலப்பாடலோ பாடினாள் என நினைக்கிறேன். மதியம் வரை சரியாக சென்றது. எல்லோரும் சாப்பிட சென்றார்கள். எங்களுக்கு பரிமாறும் பொறுப்பு. மதியம் உணவு முடிந்து அனைவரும் வந்து அரங்கத்தில் அமர்ந்தார்கள்.

அப்பொழுது நிகழ்ச்சி தொடங்குவதற்கு ஒரு அரைமணிநேரம் இருந்தது. மேடை அறிவிப்பாளர், மைக்கில் இந்த நேரத்தை உபயோகித்து மக்களை மகிழ்விக்க யாராவது முன்வந்தால் வந்தனம் என்றார். நான் காத்திருந்த வாய்ப்பு கிடைத்தது. சிறிது கூட கவலைப்படாமல் நான் மேடையேறி,திருவிளையாடல் வசனத்தை(நக்கீரன் சிவன் வாக்குவாதம்) சொன்னேன். சொல்லிமுடித்ததும் அரங்கம் அதிரும் சத்தம், (அத்துனையும் உண்மை). ஏனென்றால் அதில் சிவன் ஒரு பாடல்சொல்வதாக வரும் அந்த பாடல் முதற்கொண்டு நான் சரியாக மனப்பாடம் செய்து வைத்திருந்தேன்.

மேடையில் இருந்து கீழிரங்கினால் ஒரே பாராட்டு மழை, நான் சுற்றி சுற்றி பார்க்கிறேன் அவள்
இருக்கிறாளா? பார்த்தாளா? என்று. என் கண்ணுக்கு அகப்படவில்லை. ஒன்று தெரியுமா! அன்று எந்தப்போட்டியிலும் கலந்து கொள்ளாத எனக்கு ஒரு பரிசு கூடக் கொடுத்தார்கள்!.

பிறகு வீட்டிற்கு வந்து கொண்டிருந்த பொழுது, எதிரில் அவள் வந்து கொண்டிருந்தாள். ஆகா இவள் பார்க்கவில்லை போலிருக்கிறது என நினைத்து வருந்தினேன். அவள் நேராக என்னிடம் வந்து நல்லாயிருந்தது என்று சொல்லிவிட்டு போய்விட்டாள்(இது நாள் வரை அவள் என்னிடம் பேசிய ஒரே ஒரு வார்த்தை இதுதான்). அப்போழுது கூட நான் அவளிடம் ஒரு வார்த்தை பேசவில்லை.

பின்னாட்களில் எங்கள் வீட்டெதிரில் கிரிக்கெட் விளையாடும் பொழுது, வேண்டுமென்றே
பந்தை அவர்கள் வீட்டு மாடிக்கு அடித்து விட்டு அதைக் கேட்கும் சாக்கில் போயிருக்கிறேன்.
வீடு அழகாக இருக்கும். சுத்தமாக பளிச்சென்று. பிறகு உண்மைநிலை உணர்ந்து பன்னிரெண்டாம் வகுப்புக்கு படிக்க ஆரம்பித்தேன். என்னையும் ட்யுஷன் அனுப்பினார்கள்.(இது வேறு இடம் இன்னும் சொல்லப்போனால் எங்கள் வீட்டிலிருந்து 12 கி.மீ தொலைவில் உள்ள இடம்.).

அப்பொழுது தான் காதலர்தினம் படம் வந்தது, அதில் வரும் ரோஜா ரோஜா பாடலைத்தான் நான் முதல் முதலாக மனப்பாடம் செய்தேன். பிறகு இன்றுவரை தொடர்கிறது. இதற்கு வாலியின் வரியமைப்பு காரணமா, தமிழ் உள்ளே ஊறியது காரணமா, இல்லை அவள் காரணமா தெரியாது. ஆனால் நல்லது தான். மனனம் செய்வது எப்பொழுதுமே நல்லதுதான். (பராசக்தி, மனோகரா,சாம்ராட் அசோகன், திருவிளையாடல் என மனப்பாடம் செய்தது அதிகம், இன்றும் அத்துனைவசனங்களும் நினைவிருக்கிறது). ஆனால் பாடல்களே பிடிக்காமல் இருந்த என்னை, பாடல்களின் பின்னால் திரும்ப வைத்ததில் அவளுக்கும் என் காதலுக்கும் சம்மந்தமுண்டு.

தினமும் காலையில் 6 மணிக்கு ட்யூஷனுக்கு கிளம்பவேண்டும், முடிந்ததும் பஸ் ஏறி பள்ளிக்கூடம் வந்துபடிக்கவேண்டும், பிறகு மாலை இரண்டு ட்யுஷன் இதில் என்ட்ரென்ஸ்க்கு தனியாக ட்யுஷன் வேறு. (மொத்தமாக இவையெல்லாம் உபயோகமாகவில்லை என்பது வேறு விஷயம். கடைசியில் நான் இன்ஜினெயரிங் படிக்கவில்லை, அதற்கு சில சொந்த காரணங்கள் உண்டு, அதை இங்கே குறிப்பிட விரும்பவில்லை). ஆனால் தினமும் நான் ரோஜாப்பூவாங்கி வருவேன்,(அவளுக்குக் கொடுக்கத்தான்)ஆனால் கொடுத்ததில்லை.

அக்கா அந்த ரோஜாப்பூவை காந்தி புகைப்படத்துக்கு வைப்பாள், பிறகு இரவு நான் அந்தப் பூவைபாடமாக்கி வைக்க பெரிய புத்தகங்களின் மத்தியில் வைப்பேன். இன்றும் இப்படி பாடமாக்கப்பட்ட நூற்றுக்கணக்கான ரோஜாக்கள் என்னிடம் உள்ளன(என் முதல் காதல் நினைவாய்).

அதே கிளப்பில் ஒவ்வொரு சனிக்கிழமையும் படம் போடுவார்கள். எங்கள் அப்பாவிற்கு பாஸ் கிடையாது. ஆனால் அவள் வீட்டிற்கு உண்டு(இந்த வேறுபாடுகள் தான் நான் சொன்னது நடுத்தர குடும்பம்).ஆனால் காதலுக்கு முன்னால் எடுபடுமா நான் என்னென்னமோ தந்திரங்கள் செய்து அங்கே படம் பார்த்திருக்கிறேன். சில சமயங்கள் அவளும் என்னைப் பார்ப்பாள் பார்த்து சிரிப்பாள். அவ்வளவுதான், இதற்குத்தான் நான் பாடுபட்டு, வீட்டில் அடிபட்டு அந்தப் படங்கள் பார்க்க போனது. எங்கப்பாவுக்கு எட்டுமணிக்கு மேல் வெளியில் இருந்தால் பிடிக்காது. ஆனால் படமோ ஏழுமணிக்குத்தான் தொடங்கும், இடைவேளை எட்டரைக்குத்தான், அப்பொழுது தான் முறுக்கு, சீடை வாங்க வருவாள். அங்கேதான் அவள்
என்னை பார்க்க முடியும் (நான்தான் அவளை பார்த்தக் கொண்டேயிருந்தேனே). என்னை கிளப் வாசலில் விடமாட்டார்கள். அதனால் சுவர் ஏறிக் குதித்து, கதவின் கீழ்வழியாக வந்து இப்படியெல்லாம் ஹீரோயிஸம் காட்டியும், நான் அந்தப் படம் பார்க்கமாட்டேன்.

அரைமணிநேரத்தில் வீட்டிற்கு போகவேண்டும் (அதாவது எட்டரை) இல்லையென்றால் செருப்படி. படமும் பார்க்காமல், அவளும் என்னைப் பார்க்காமல் வேதனையில் தள்ளிய நாட்களும் உண்டு.

அவர்கள் இங்கே வ்ந்த பிறகு முதல் வருடபிறப்பு. அவள் வீட்டில் எல்லோரும் அந்தக் கிளப்பில் கொண்டாடினார்கள். அதற்காக நானும் உள்ளே போகலாமென்றால் உள்ளே விடமாட்டார்கள், மேலும் பார்ட்டியே பத்துமணிக்கு பிறகு தான். என் வாழ்நாளில் நான் பத்துமணிக்கு மேல் வெளியில் இருந்ததில்லை. ஆனால் வெளியில் இந்த வருடம் இருக்க வேண்டும். என் அப்பாவிடம் எவ்வளவோ கெஞ்சி கூத்தாடி, அம்மாவின் ஒப்புதல்லோடு நான் முதல் முறையாக வெளியே வந்தேன்.

எட்டுமணி இருக்கும், கிளப்பிறகு சென்று நான் உள்ளே நுழையும் இடங்களைப் பார்த்தால் செக்யுரிட்டி நின்று கொண்டிருந்தார்கள். அன்று என்னிலும் மூத்தவர்கள் குடித்துவிட்டு பிரச்சனை செய்வார்கள் என்பதால் அந்த ஏற்பாடு. எனக்கோ தூக்கிவாரிப் போட்டது. நான் உள்ளே நுழையும் அத்துனை வழியும் அடைபட்டிருந்தது. ஆனாலும் நான் உள்ளே செல்ல வேண்டும். அப்பாவிடம் அவ்வளவு போராடி அனுமதிபெற்று வந்தால் இப்படியரு நிலைமை. அழுகையே வந்தது எனக்கு. பிறகு தான் ஐடியா வந்தது. என்வீட்டிற்கு அருகில் வசிக்கும் ஒருவர் அந்தக் கிளப்பில் உறுப்பினர். நான் நேராக அவரிடம் சென்று எனக்கு உங்கள் மெம்பர் கார்டு கிடைக்குமா? என்று கேட்டேன்(இன்று நினைத்தால் ஆச்சர்யமாயிருக்கி
றது). அவரும் கொடுத்தார்.

மேலும் சோதனை நான் அந்தக் கார்டை எடுத்துக்கொண்டு நான் ஒரு வாசலுக்கு வந்தேன் அங்கிருந்தவரிடம்(கேட் கீப்பர்) மெம்பர் கார்டை காட்டினேன். அவர் கார்டை பார்த்துவிட்டு, உங்கப்பாவுக்கு பாஸ் கிடையாதே யாரோடது இதுன்னு கேட்டாரே பார்க்கலாம். நடுங்கிட்டேன் உடனே கார்டை வாங்கிட்டு திரும்பிவந்திட்டேன். கொஞ்ச நேரம் கழித்து நான் நினைத்தது போலவே, அவர் ஒரு செக்யூரிட்டியிடம் அந்தப் பொறுப்பை கொடுத்துவிட்டு போய்விட்டார். நான் பருப்புபோல் கார்டை அந்த செக்யூரிட்டியிடம் காட்டிவிட்டு உள்ளே வந்துவிட்டேன். ஆனால் சோகமே அன்று அவள் என்னை பார்க்கவில்லை. இன்னும் சொல்லப்போனால் நான் தைரியத்தையெல்லாம் திரட்டி அவளிடம் சொல்ல நினைத்த Happy NewYear கூட அவளிடம் சொல்லவில்லை.

நான் அவளை நிறைய தடவைப் பார்த்தது, நிறைய நேரம் பார்த்தது, எல்லாமே. அவள் பள்ளியில் இருந்து திரும்பி வரும்பொழுது தான். அழகா குதிரை மாதிரி நடந்து வருவாள், எப்பவுமே தனியா வரமாட்டாள். யாராவது ஒரு பெண் அவள் கூடவே வருவார்கள். ஆரம்ப காலங்களில் சுமார் ஆறு மாதங்களுக்கு நான் அவள் நடந்து வரும்பொழுது வீட்டின் வெளியே சேர் போட்டு உட்கார்ந்து கொண்டு பார்ப்பேன், இல்லையென்றால் சிலசமயம் ஜன்னலில் இருந்தும் பார்ப்பேன். பிறகு சிறிது தைரியம் வளர்த்துக்கொண்டு அவள் நடந்து வரும் பொழுது நான் புத்தகத்தையோ, இல்லை கிரிக்கெட் மட்டையையோ எடுத்துக்கொண்டு எதிரில் நடந்து வர ஆரம்பித்தேன். சில நாட்கள் இப்படியே சென்றது பிறகு எப்பொழுதெல்லாம் நான் அவள் எதிரில் இப்படி நடந்து வர ஆரம்பிக்கிறோனோ அப்பொழுதெல்லாம் அவளும் அவள் நண்பியும், என்னைப் பார்த்து சிரிக்கத் தொடங்கினார்கள்(பின்னாட்களில் தான் அவர்கள் நக்கலாகத் தான் சிரித்தார்கள் என்று உணர்ந்து கொண்டேன்). இதெல்லாம் சொர்க்க காலம். அதாவது என் காதலின் கடைசிக்காலம்.

அப்பொழுதெல்லாம் மழை பெய்தால் வீட்டில் உட்காருவதில்லை, வெளியில் நிற்பது, கவிதை
எழுதுவது, இல்லை மழையில் டான்ஸ் ஆடுவது என்று உடல் நலத்துக்கு நல்லதில்லாத எல்லாவற்றையும் செய்து வந்தேன். இதன் காரணங்களால்(மேலும் சில காரணங்களாலும்) நான் இன்ஜினியரிங் படிக்க இயலாமல் போனது. ஏன் இந்த காரணங்களால் என்று குறிப்பிடுகிறேன் என்றால், என் அப்பாவும் அம்மாவும் ஆசிரியர்கள், அதனால் நான் ஆரம்ப காலங்களில் இருந்தே வீட்டில் படிப்பது என்பது சுத்தமாக கிடையாது. இதனால் என் பெற்றோர் நான் முதல் மாணவனாக வந்த பொழுதும் என்னை ட்யூஷனுக்கு அனுப்பினார்கள். ஆனால் அங்கே போயும் நானும் படிக்காமல் மற்ற மாணவர்களை படிக்கவிடாமல் இருந்ததால். முக்கால்வாசி ட்யூஷன் சென்டரில் இருந்து விலக்கப்பட்டேன்
(அதென்ன முக்கால்வாசி என்றால் மற்ற ட்யூஷன் மாஸ்டர்களெல்லாம் அப்பாவிற்கு பயப்பி
டுபவர்கள் அதனால் விலக்க முடியாத பயம். அந்த முக்கால் வாசியும் என் அப்பாவிடம் வந்து, சார் எல்லாரையும் கெடுக்குறான் சார்ன்னு புலம்பித்தான் நிறுத்தினார்கள்).

இப்படி நான் படிக்காமலே நல்ல மதிப்பெண்ணும் ரேங்க்கும் வாங்கிய காலமது. ஆனால் இப்படியெல்லாம் படித்து மார்க் வாங்க முடியாது என எனக்கு உணர்த்தியது 10 வகுப்புத் தேர்வு. எல்லோரும் நான் பள்ளியில் முதலிடம் வருவேன் என நினைத்த பொழுது எல்லாருடைய எண்ணங்களையும் தகர்த்தெறிந்தேன். ஆனாலும் 80% வாங்கினேன். எதிர்பார்த்ததுக்கு மிகவும் குறைவான மார்க்குகள். இப்படியாக நான்
இருந்த பொழுதுதான் +2 தேர்வு. நான் படிக்கும் அறைக்கு நேர் எதிரே அவள் வீட்டு மாடி ஜன்னல். திரைபோட்டுத்தான் இருக்குமென்றாலும். வெய்யில் காலங்களில் திறந்துமிருக்கும். நான் தேவதைக்காக காத்திருந்து தேர்வில் கோட்டைவிட்டேன்.(கோட்டைவிட்டேன் என்றால் பெயில் இல்லை). சரி பையன் திருந்தி விட்டான் எப்பப் பார்த்தாலும் புத்தகத்தோடு மேஜையில் உட்கார்ந்து படித்துக் கொண்டிருக்கிறான். இந்த முறை நிச்சயம் நல்ல மார்க் வாங்கிவிடுவான்(பள்ளி முதல் மாணவன் கனவெல்லாம் உடைத்தாகிவிட்டது). ஒரு 1000 ஆவது வாங்கிவிடுவான்னு நினைத்தார்கள். வாங்கியதோ 70% (மொத்தம் 1200 க்கு கணக்கிட்டு பார்த்துக்கொள்ளுங்கள்).

சரியான அடி(மனதில்) இரண்டு நாள் அப்பாவும் அம்மாவும் அக்காவும் என்னை விட்டு நகரவேயில்லை, நான் எங்கே தற்கொலை செய்துகொள்வேனோ என நினைத்தார்கள்(பின்நாட்களில் அவர்களே சொன்னது). கட்டாப் பரவாயில்லை தான் (224 னு நினைக்கிறேன்). நான் என்ட்ரென்ஸில் நல்ல(சொல்லிக்கிட்டாங்க) மார்க் வாங்கியிருந்தேன். இன்ஜினெயரிங் கூட கிடைத்திருக்கும் (சிவில், மெக்கானிக்கல்). ஆனால் என் மாமாக்களின்(அமேரிக்க) ஆலோசனையின்(கட்டளையின்) படி. கம்ப்யூட்டர் தான் படிக்க வேண்டும் என்று முடிவானது. நான் இன்டர்வியூவுக்குள் போவற்குள் கம்ப்யூட்டர் ஸீட் முடிந்து போனது. (அடுத்த வருடம் சுமார் ஐயாயிரம் கம்ப்யூட்டர் ஸீட்டுகள் இருந்தன பில்லப்செய்யப்படாமல்).

அப்புறமென்ன, அலையோ அலையென அலைந்து எனக்கு பிஎஸ்ஸி ஸீட் வாங்கித்தந்தார்கள். நான்வேண்டிக் கேட்டுக் கொண்டு ஹாஸ்டலில் தங்கினேன். காதலை(என் காதலை) விட்டு விட்டு வேறுஎங்கோ போகிறேன்னு நினைக்கிறீங்களா இல்லை தோ வந்துட்டேன். அதன் பிறகு அவளை நான் பார்ப்பது சிறிது சிறிதாக குறைந்தது(கல்லூரியல் சேர்ந்து விட்டேனே). அடுத்த வருடம் நியூயியரில் அதே கிளப்பில் பார்த்ததாக ஞாபகம். அன்று தான் நான் அவளிடம் ஹேப்பி நியூயியர் சொன்னேன். அது தான் நான் அவளிடம் பேசிய கடைசி வார்த்தை. பிறகு நான் டிகிரி முடித்து டெல்லி, பெங்களுர் என்று இரண்டு வருடம் இருந்துவிட்டு சற்று நாளைக்கு முன் ஊருக்கு சென்றிருந்தேன்.

அதே ஜன்னல் முன்னாலிருந்து சிரித்துக் கொண்டிருந்தேன். அக்கா வந்து `என்னடா தம்பி' என்றாள். நான் 'மோனா மீனா எங்கன்னு தெரியுமான்னு' கேட்டேன். அதற்கு அவள் 'அவங்க குடிமாறிபோயிட்டாங்க. ஏய்! உனக்கு அவளை இன்னமும் ஞாபகம் இருக்கிறதா?'ன்னு கேட்டா. பிறகு 'தெரியுமா நீ இங்க இல்லைல்ல அவளுக்கு பல்லு கொஞ்சம் வெளிய தெரிய ஆரம்பிக்க, கிளிப்போட்டிருந்தா, அவங்கம்மா கூட உன்னை சில தடவை கேட்டாங்க. அன்னிக்கு அவங்க வீட்ட கிரகப்பிரவேஷத்துக்கு அம்மா போயிருந்தப்ப, அம்மாகிட்ட சரியா நடந்துக்கலைன்னு(நாங்க அப்ப நடுத்தரகுடும்பம்) அம்மாவுக்கு கோபம்'னு, ஏதேதோ சொல்லிட்டுப் போனாள் என் அக்கா.

எனக்கு அன்றைய நாட்களை நினைத்தால் சிரிப்பாக இருந்தது. சைக்கிளில் அவள் பின்னாடி
போறதும், கதவு இடுக்கில் புகுந்து சினிமா பார்க்கிறதும், அவளைப்பற்றி கவிதை எழுதி
யதும். அன்னிக்கு முழுக்க சிரித்துக் கொண்டே இருந்தேன். அம்மாவுக்கு ஒரே பயம், கம்ப்யூட்டரில் ரொம்ப வேலைப் பார்த்தா லேசா பைத்தியம் பிடித்திடும்னு யாரோ அம்மாகிட்ட சொல்லியிருந்தது தான் அதற்கு காரணம்னு நான் நினைத்தேன். அவள் வீடு எங்கிருக்கிறதுன்னு தெரியும், எப்பிடி போறதுன்னும் தெரியும். வருடத்திற்கு இரண்டு நாட்களாவது நான் சொந்த வீட்டுக்குபோறேன் அதனால நேரமும் உண்டு. ஆனால் ஈகோ தடுக்கிறது. இப்போழுது நாங்கள் பணக்காரர்கள் (இரண்டு கவர்மெண்ட் எம்ப்ளாயிஸ், இரண்டு சாப்ட்வேர் ப்ரொப்ஷனல்ன்னு நாங்க பணக்காரங்க), ஆனால்
எங்கம்மாவை கிரகப்பிரவேசத்துல ஒழுங்கா நடத்தாததுதான் இப்போ ஞாபகம் வருது.

இப்போவும் போய்க் கேட்கலாம் அம்மா மீனாவீட்டுல போய் பெண்ணு கேளுங்கன்னு. ஆனா
வேணாம் அதுக்கு சில பர்ஸனல் காரணங்கள் இருந்தாலும் ஈகோத்தான் முதல் காரணம்.

Related Articles

26 comments:

  1. Mudhal kadhal....eh ..enjoy.
    Btw...Chola history enna aachu.
    waiting ..

    ReplyDelete
  2. If u love something set it free.. if it belonged to you.. It will come back to you..
    if it does not... It never belonged to you...

    - Dev

    ReplyDelete
  3. he he he இன்னும் எத்தனை நாளைக்கு இதே பழமொழி சொல்லிட்டு இருக்கீங்கன்னு நானும் பார்க்கிறேன்...;)
    ஸ்ரீஷிவ்

    ReplyDelete
  4. பீலமேடு இந்தக்கதையெல்லாம் ரொம்ப நாளைக்கு முன்னாடி எழுதினது. நல்லா விரிவா படிச்சீங்கன்னா தெரியும் எலக்கியவாதியானதுக்கு முன்னாடி எழுதினதுன்னு பெனாத்தமாட்டேன் :-) ஆனா கதையெழுத தொடங்கியது இந்தக்கதையில் இருந்துதான்னா பார்த்துக்கோங்களேன் எத்தனை பழசுன்னு. கொஞ்சம் டைம் கிடைத்தால் சோழர்கள் எழுதிற வேண்டியதுதான் அதுக்கு கொஞ்சம் நிறைய டைம் வேணும். அதுவுமில்லாம ரொம்ப சிக்கலான பகுதியில் நிக்குறேன். அடுத்த அத்யாயம் பேரைப்பார்த்தாலே தெரியும், சோழர்களும் கேசரிப்பிரச்சனையும் ஆனால் நான் பெரிய இடியாப்பச்சிக்கலில் மாட்டிக்கிட்டிருக்கிறேன்.

    ReplyDelete
  5. தேவ் நன்றி.

    ஒய் அண்ணா காதல்வலை போகுது போலிருக்கு, எங்க டிஸ்கிளேய்ம்பர் காணோம் :-)

    ReplyDelete
  6. \\எலக்கியவாதியானதுக்கு முன்னாடி எழுதினதுன்னு பெனாத்தமாட்டேன் :-) \\
    usha neenga ithai parkalaya innum?

    ReplyDelete
  7. \எலக்கியவாதியானதுக்கு முன்னாடி எழுதினதுன்னு பெனாத்தமாட்டேன் :-) \\
    usha neenga ithai parkalaya innum?

    யோவ் மோகன்தாஸு, போட்டுக் கொடுக்க எத்தனை பேரு இருக்காங்கங்கனு பாத்தியா? ஏதோ எனக்குதான் ஒரே வேலையா போச்சுன்னீரு இப்ப பாருமைய்யா;-)

    ReplyDelete
  8. ohh unga velaya nan parichtanoo...sorry sorry neengale thodarnthu seyunga Vellikanadanaathare.

    ReplyDelete
  9. அம்மா சினேகிதி, நம்ம எல்லாரும் சினேகதமா இருக்க வேணாமா? சும்மா டமாஸூ, அம்புட்டுதான், யாரு வேணாலும் டமாஸூ பண்ணலாம்;-)

    ReplyDelete
  10. எனக்கொரு மின்னஞ்சல் போடுவீர்களா?
    maathahal@hotmail.com

    ReplyDelete
  11. \\அம்மா சினேகிதி, நம்ம எல்லாரும் சினேகதமா இருக்க வேணாமா? சும்மா டமாஸூ, அம்புட்டுதான், யாரு வேணாலும் டமாஸூ பண்ணலாம்;-)\\
    aiya vellikandanathare ambututhana...appa okay :-)

    ReplyDelete
  12. தமாஷ் பாண்டி உங்கள் கருத்திற்கு நன்றி. வசந்தன் போட்டாச்சு.

    சினேகிதியையும் உதயகுமாரையும் வன்மையாக கண்டிக்கிறேன். நான் சொல்லவந்ததின் அர்த்தத்தை திரித்து வேண்டுமென்றே எனக்கு பகையை(சும்மா) உருவாக்கவேண்டாம் என்று வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறேன்.

    ReplyDelete
  13. சும்மாமாமாமாமாமா

    ReplyDelete
  14. தோ வந்துட்டேன், சிநேகிதி, வெ. நா! விடுங்க, பையன் என் எழுத்தை 'ஆழ்ந்து" படிப்பதாக உணர்ந்து மகிழ்கிறேன் :-)))))

    ReplyDelete
  15. உஷா புரிந்துகொண்டமைக்கு நன்றி. சினேகிதி இந்த சும்மா கதையெல்லாம் சொல்ல வேண்டாம். மீண்டும் நீங்கள் எனக்கு ஒரு உதவி செய்யவேண்டும். தனிமடலிடுகிறேன்.

    ReplyDelete
  16. \\இந்த சும்மா கதையெல்லாம் சொல்ல வேண்டாம்\\
    appa sari intha murai uthavi seithavudane evlo Indian rupee $CDN ku convert panni anupratha irukeenga Mohandoss:-)

    ReplyDelete
  17. அப்பா! எல்லாரும் ராசியாயிட்டாங்க:-)))எப்படி ஆர்வமா உங்க படைப்புகளை படிச்சு ஒரு கனெக்ஷ்ன் கொடுக்கிறோம் பாத்தீங்களா! இல்ல சினேகதி கண்ணு?

    ReplyDelete
  18. //appa sari intha murai uthavi seithavudane evlo Indian rupee $CDN ku convert panni anupratha irukeenga Mohandoss:-) //

    சினேகிதி, அது உங்கள் விருப்பத்தை சார்ந்தது. தீர்மானம் செய்து சொன்னால் டிரான்ஸ்பர் செய்வதை பற்றி சொல்கிறேன். நிச்சயமாய் இந்தக்கேள்விக்கான பதிலில் ஸ்மைலி இல்லை.

    ReplyDelete
  19. வாங்க பல்லவி உதயகுமார் இப்படித்தான் வருத்தப்படாதீங்க. :-)

    ReplyDelete
  20. Hello V.N thatha pethhiya pathu kannu endu kopuduringa enga chokka?? Doss kasu transfer panraram appidiye neengalum pethiku chocka vangi anupidunga.

    ReplyDelete
  21. இந்த தமிழை இங்கிலிபீஷ்ல எழுதறதை உட்டுடு பேத்தி! என்ன்மோ காக்கா கரஞ்ச மாதிரி இருக்கு!

    ReplyDelete
  22. //வெளிகண்ட நாதர் said...
    இந்த தமிழை இங்கிலிபீஷ்ல எழுதறதை உட்டுடு பேத்தி! என்ன்மோ காக்கா கரஞ்ச மாதிரி இருக்கு!
    ஆஹா என்னாச்சு உங்க //

    இரண்டுபேருக்கும் ஏதாவது பிரச்சனையா நான் தீர்த்துவைக்கு முடியுமா???????

    ReplyDelete
  23. pirachanya yaru sona? appidi ondume illaye ..thatha ena nan solrathu?

    ReplyDelete
  24. அண்ணா!!!

    மெய்யாகவே நீங்கள் காதலிச்சது சரிதான், ஆனால் குந்தவை வந்தியதேவன் பேரில் நிறைய பேரை காதலிச்சு நிறைய கதைகள் எழுதி உள்ளீர்கள் அது மாதிரிதான் இருக்கு அண்ணே!!!

    ReplyDelete
  25. நல்லா இருக்குங்கண்ணா :)))

    ReplyDelete
  26. தாஸ்,

    இது மீள்பதிவா? ஏற்கனவே வாசித்த நினைவு வருகிறது.

    ReplyDelete

Popular Posts