In Only ஜல்லிஸ்

நான் வேலை பார்க்கிறேனா இல்லையா?

இதுதான் இப்ப தமிழ்மணத்தின் ரொம்ப முக்கியமான கேள்வியா உலவுதுன்னு சொன்னா அப்புறம் நான் தினம் தினம் பார்க்கும் என் ஸ்டாட் கவுண்டர் தப்பா சொல்லுதுன்னு அர்த்தம் ஆய்டும். அதனால் ஒருவாறு கேள்வியா இருக்கு.

இந்த வாரம் ஒரு ஐந்து திரைப்படங்களின் விமர்சனங்களைப் போடவேண்டும் என்று நினைத்திருந்தேன் அதற்காக போன லாங் வீக் எண்டிலேயே எழுதிவைக்கப்பட்டு ப்ளாக்கரில் காத்திருந்தன ஐந்து விமர்சனங்கள் நாளொன்றாக வெளியிடப்படுவதற்கு.

என் முதலாளிக்கு நான் நல்லவனாயிருக்கிறேனா என்று யாருக்கும் தெரியவேண்டிய அவசியம் இல்லை. அது எனக்கும் என் முதலாளிக்கும் தெரிந்தால் போதும். என் வேலையைப் பற்றி விளக்கி நான் ப்ளாக் முன்பே எழுதிவைத்திருந்ததைப் போன்ற என்னுடைய மூன்றாண்டு(மூன்றரையாண்டு) சாப்ட்வேர் உலகத்தில் உயிர்வாழ்வது எப்படி என்ற கண்டுபிடித்து வைத்திருப்பதை சாதாரணமாக வெளியில் சொல்லமுடியாது.

சிதம்பர ரகசியத்தைப் போன்றது அது. பல ஆயிரம் $$$$$ சம்மந்தப்பட்டது. எனவே என் வேலையை, என்னை, என் முதலாளியைப் பற்றிய உங்களின் கன்செர்ன்களை தூக்கிக் குப்பையில் போட்டுவிட்டு மனதை உங்கள் பக்கமாக திருப்பிக்கொள்ளுங்கள். கடேசியில் ஒன்றே ஒன்று நான் இப்பொழுது பெஞ்சில் இல்லை.(போதுமா! இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா?)

Related Articles

6 comments:

  1. ஏய் என்னப்பா ஆச்சு.....

    சரி சரி கவுண்டர் எவ்ளோ காட்டுது ?

    ReplyDelete
  2. ஆகா நான் உங்களை மறந்துட்டேன். இந்தப் பதிவு உங்களுக்கானதுயில்லை ரவி.

    பொய் சொல்லாத, ஆனால் பல சமயம் சர்வர் டவுண் ஆகிவிடுவதால் வருகையை எழுதிக்கொள்ளாத என்னுடைய சொந்தப் ப்ரோக்கிராமைத் தான் சொல்கிறேன் கவுண்டர் என்று

    நீங்கள் கூட பார்க்கலாம்.

    http://outflanksolutions.com/testStatistics.jsp

    ReplyDelete
  3. பிப்ரவரி 14க்கு புதுசா காதல் கதை எழுதியாச்சா? :))

    சென்ஷி

    ReplyDelete
  4. என்னய்யா பிரச்சனை, கொஞ்சம் வெளக்கமா சொல்லறது?

    ReplyDelete
  5. சென்ஷி, பிப்பிரவரி 14க்காக நான் கதையெழுதுவதில்லை. எழுதினாலும் சரிவருவதில்லை.

    ஆனால் காதல் கதை தானே வேண்டும் நிறைய இருக்கிறது ஸ்டாக்கு.

    அனானி,

    இப்படி ஒன்னுமே தெரியாதது போல் கேக்குறீங்களே.

    ReplyDelete
  6. உங்களிடம் இருப்பது கவுண்டர். என்னிடம் இருப்பது முதலியார்.

    ReplyDelete

Popular Posts