In Only ஜல்லிஸ்

எனக்கும் மகாத்மாவிற்கும் உள்ள ஒற்றுமை

இதையொன்னும் நான் சொல்லித்தான் உங்களுக்குத் தெரியணும் என்று இல்லை. என் பெயரைப் பார்த்தாலே உங்களுக்குத் தெரிந்திருக்கும். தெரியாத சில விஷயங்களைப் பத்தி மட்டும் இங்கே பார்ப்போம்.

எனக்கு உண்மையில் மோகன்தாஸ் என்று பெயர் வைத்தது, மக நட்சத்திரம் சிம்ம ராசிங்கிறதால மட்டும் தான் என்பது தான் உண்மை.(சரி சரி உண்மையைச் சொல்லவேண்டியது தானே. ஆனால் எனக்கு நட்சத்திரம் 'பொச்'சத்திரத்திலெல்லாம் நம்பிக்கையில்லை - அதற்காக பெயரை மாற்றுவதாகவும் உத்தேசம் இல்லை). ஆனால் நான் சரி ஏதோ வைச்சது வைச்சிட்டாங்க நம்மலால முடிஞ்சது கொஞ்சம் கதையை சொல்லுவோம்னு, என் பெயர் எப்படி வந்ததுன்னு ஒரு கதை சொல்லுவேன் பெரும்பாலான இடத்தில் அந்தக் கதை.

எங்கம்மா அப்பாவிற்கு காந்தின்னா ரொம்ப பிடிக்கும், அது மட்டுமில்லாமல் காந்தி இறந்த அன்று(சொல்லப்போனால் அடுத்தநாள் ஆனால் அரைமணிநேரம் தான் என்பதாகவும் ஒரு கிளைக்கதை உண்டு) முப்பத்தெட்டு ஆண்டுகள் கழித்து நான் பிறந்ததால் தான் இந்தப் பெயரை வைத்தார்கள் என்று. பலர் அப்படியா என்று ஆச்சர்யப்பட்டிருக்கிறார்கள்(;)).

இதைச் சொல்லும் பொழுது இன்னொரு ஜோக் நினைவில் வருகிறது. பிறந்தப்ப என் மூக்கு கொஞ்சம் சப்பையா இருக்குமாம்(இப்ப இல்லையான்னு கேட்காதீங்க) அம்மாவுக்கு பக்கத்து பெட்டில் பிரசவம் செய்து கொண்ட பொண்ணு ஏன் இப்படி சப்பையா இருக்குன்னு கேட்க அம்மா, "அதுவா பஸ் ஏறிருச்சு"ன்னு சொன்னாங்களாம். அந்தம்மாவும் அப்படியான்னு கேட்டுக்குச்சாம். (So இது காலம் காலமா வருது...)

மற்றபடிக்கு எனக்கும் காந்திக்கும் தான் ஒற்றுமையிருக்குன்னு கதை சொல்றதுண்டா, அதனால நான் தண்ணியடிக்காம, தம்மடிக்காம இருக்கிறதுக்கும்(சரியா கவனிச்சுக்கோங்க மூன்றாவது கிடையாது!) காந்தி தான் காரணம் என்று ஒரு புகைச்சல் விடுறது வழக்கம். எப்படின்னா அம்மா என்கிட்ட சத்தியம் வாங்கினாங்கன்னு தான்.

இதுமாதிரி நிறைய சொல்லலாம். இப்போதைக்கு இது போதுமுன்னு நினைக்கிறேன்.

Related Articles

1 comments:

  1. நான் சமீபத்தில் 1963-ல் பொறியியல் கல்லூரியில் சேருவதற்கான இண்டெர்வ்யூ அட்டெண்ட் செய்தேன். நிறைய பேர் வந்திருந்ததால் மூன்று பேர் கொண்ட குழுக்களாக மாணவர்களை பிரித்து அவர்களை ஒன்றாக இண்டெர்வ்யூ செய்தனர். க்விஸ் மாதிரி என்று வைத்து கொள்ளுங்களேன்.

    என்னுடன் வந்த இருவரில் ஒருவன் பெயர்தான் ஞாபகத்தில் உள்ளது. ஏனேனில் அவன் பெயர் எம்.கே. காந்தி.

    அவன் பெயரை பார்த்ததுமே மணிசுந்தரம் சார் (திருச்சி ஆர்.இ.சி.யின் முதல் பிரின்சிபால் அவர்) கேட்டார், "உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வைத்தார்கள்" என்று. அவனும் மென்று விழுங்கி, தனது தந்தை காந்தி பக்தர் என்று கூறினான். அப்புறம் நாங்கள் வெளியில் வந்ததும் கேட்டோம், ஏன் அவன் அதை சொல இத்தனை சிரமப்பட்டான் என்று. அப்போதுதான் அவன் சொன்னான், தான் அக்டோபர் 2-ஆம் தேதியில் பிறந்ததாக. 'அடப்பாவி, இதை சொல்வதுதானே" என்றதற்கு அவன் ஸ்கூலில் தனது பிறந்த நாளை தவறாகக் கொடுத்து விட்டதால் அந்த உண்மையை இங்கே கூற முடியவில்லை என்றான்.

    நல்ல விவரமான பையந்தான்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete

Popular Posts