இது என்ன இதுதான் பேஷனா என்றால் தெரியவில்லை இருக்கலாம். இதை நான் எழுத வேண்டிய கட்டாயம் எதனால் ஏற்பட்டது என்று சொல்லவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன். சொன்னால் சரிசெய்யப்படுமா இல்லை, இந்த வேண்டுகோளும் தூங்குமா என்று தெரியவில்லை.
சரி மேட்டருக்கு, இரண்டு விஷயங்கள் பற்றி என்னுடைய கேள்விகள்.
முதலாவது பூங்கா, நீங்கள் உங்கள் பதிவை எழுதிவிட்டு தமிழ்மணத்திற்குள் இணைக்கும் பொழுது, பூங்கா இதழுக்கு சேர்க்கலாமா சேர்க்க வேண்டாமா என்று கேள்வி கேட்கப் படுகிறது. என்னைப் பொறுத்தவரை இணையத்தில் இது போன்ற Yes/No Agree/Dis Agree, விஷயங்களில் No, Disagree யே டிபால்ட்டாக இருக்கும். ஆனால் பூங்காவிற்கு இணைப்பதை மட்டும் டீபால்ட்டாக வைத்திருக்கிறார்கள்.
முதலில் ஏதோ இன்னுமொரு வகையறா விஷயம், இந்த டேக் இடுவதைப் போல என நினைத்து அதைக் கண்டுகொள்ளவேயில்லை அதே போல் பூங்கா படிப்பதையும் தான். வந்த ரொம்ப நாட்களுக்குப் பிறகு ஒரு லிங்க் அதுவாய்த் தோன்றியது என் வலைப் பக்கத்தில் கிளிக்கிப் பார்த்தால் பூங்காவில் இணைத்திருந்தார்கள். அதன் பிறகுதான் மேட்டர் தெரிந்தது.
என் கேள்வி, இந்த Default தேர்ந்தெடுப்பதில் உங்களுக்கு எதுவும் அரசியல் உண்டா இல்லையென்றால் Default-ஆக அதை Noவிற்கும் Disagreeக்கும் கொண்டுவாங்களேன்.
----------------------------
இரண்டாவது நட்சத்திரக் குத்து
தமிழ்மணத்தில் ஒரு காலத்தில் ரொம்ப பேமஸான விஷயமாக இந்த விஷயம் இருந்த பொழுதே இந்த ஒன்றைப் பற்றி நல்ல அபிப்ராயம் கிடையாது. ஆனால் சிலர் அந்த வாசகர் பரிந்துரையை மட்டும் படித்து, அதிலிருந்து உங்கள் பக்கத்திற்கு வருவார்கள் என்று தெரியும். உதாரணமாக ரோசா வசந்த் போன்றவர்கள். உங்கள் பதிவு மிகச்சிறந்த பதிவாக வாசகர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டால் மட்டுமே அப்படி என்ன கிழித்திருக்கிறீர்கள் என்று பார்க்க ;) வருவார்கள்.
முன்பு தமிழ்மணத்தில் அதை தூக்கும் வசதி கிடையாது. ஆனால் புதிய தமிழ்மணம் வந்த பொழுது இது வாசகர்கள் அவர்களாக தேர்ந்தெடுக்கலாம் ஒரு பதிவுக்கு நட்சத்திரக் குத்து வேண்டுமா வேண்டாமா என்று.
ஆனால் என்னுடைய பதிவுகளில் பெரும்பாலும் நான் அதை De-Select செய்துதான் உள்நுழைப்பது வழக்கம் ஆனால் அந்த நட்சத்திர டப்பா வந்துவிடுகிறது. ஏன் என்று தெரியவில்லை, அந்த ஜாவா ஸ்கிரிப்டை உடைத்தும் பார்த்தேன் ஒன்றும் விளங்கவில்லை. எந்த இன்புட் கொடுத்தாலும் தமிழ்மணத்தில் கொடுக்கப்படும் பட்டை அந்த நட்சத்திர டப்பாவுடன் சிரிக்கிறது.
நாம ரொம்ப சீரியஸா ஒரு பதிவு எழுதிட்டு போனால் வேண்டுமென்றே அந்தப் பதிவிற்கு வந்து ஒரு நெகட்டிவ் குத்து விட்டுவிட்டுப் போகிறார்கள். சில சமயம் ஏகக் கடுப்பாக வரும்.
எனக்குத் தெரிந்து ஒரே ஒரு வலைபதிவரின் வலைபதிவில் நட்சத்திர டப்பா இல்லாத தமிழ்மணப் பட்டை பார்த்திருக்கிறேன். அவரிடம் எப்படி என்று கேட்கும் மனநிலையில் நான் இப்பொழுது இல்லை. அதனால் அந்தப் பட்டையை கொடுக்கும் தமிழ்மணமே இதை விளக்கலாம்.
அவ்வளவுதான் சாமி...
தமிழ்மண நிர்வாகிகள் கவனிப்பார்களா?
பூனைக்குட்டி
Friday, April 13, 2007
பூனைக்குட்டி
Primarily a java programmer, an athiest and a film geek, who loves reading, writing and photography.
Related Articles
Subscribe to:
Post Comments
(
Atom
)
Popular Posts
-
பெங்களூரு பூத்துக் குலுங்கிக் கொண்டிருக்கிறது, வண்ண வண்ணப்பூக்களுடன் வசந்த காலம் என்று நினைக்கிறேன். மஞ்சள், ஊதா, சிகப்பு, வெள்ளை நிறப்பூக்க...
-
Girlfriend experience பற்றி... GFE is pseudo girl friend experience, you mother fucker. However improbable it may be, stop fuc...
-
வாங்க சார்! நீங்களே சொல்லுங்க சார், இவ பண்ணுறது சரியான்னு. யாரப்பத்தி பேசுறேன்னு கேக்குறீங்களா? இவதான் சார் கார்ல, என் பக்கத்தில் உட்கார்ந்த...
பெரும்பாலான படைப்புகள் சம்மதத்தை அளிப்பதனால் அது குறிக்கப்பட்டு இருக்கலாம். சம்மதித்து விட்டுப் போங்களேன். அவர்களுக்குப் பிடித்து இருந்தால் எடுத்து போடட்டுமே. என்ன இப்போ?
ReplyDeleteநட்சத்திர குறியீடு எல்லாம் யாரு பாக்கறாங்க? நான் சாம்பார் சாதத்துக்கு சமயற்குறிப்பு எழுதினா அதுக்கு '-' குத்தறாங்க! என்னத்த சொல்லறது? மீண்டும் ஒரு முறை விட்டுத் தள்ளுங்க வாத்தியாரே.
கொத்தனார் அண்ணாச்சி, எனக்கு வேண்டாம்னா நான் செலக்ட் பண்ணிட்டுப் போகப்போறேன். ஆனால் ஒரு முறைன்னு ஒன்னு இருக்கில்லையா?
ReplyDeleteமற்றபடிக்கு நச்சத்திரக் குத்துற்கு ஏதோ செய்தாற்போல் இருக்கு. இப்ப ஒழுங்கா வேலை செய்யுது.
//என்னைப் பொறுத்தவரை இணையத்தில் இது போன்ற Yes/No Agree/Dis Agree, விஷயங்களில் No, Disagree யே டிபால்ட்டாக இருக்கும். // யார் சொன்னது? பெரும்பாலான வலைதளங்களில் அவர்களின் செயல் கடித மடல் வேண்டுமா இல்லையா என்ற கேள்வியோடு வேண்டும் என்பது போல் defaultஆக இருக்கும். பார்க்காமல் அழுத்திவிட்டால் தொடர்ந்து தேவையற்ற மடல்கள் வந்துக் கொண்டே இருக்கும். ஆனால் இந்த பூங்காவின் சம்மதம் அப்படியல்ல சம்மதித்த பிறகும் தேர்வுச் செய்யப்பட்டல்தானே போடுவார்கள். அதில் என்ன பிரச்சனையை கண்டீர்கள் என்று புரியவில்லை.
ReplyDeleteபூங்காவிற்கு சம்மதமா இல்லையா என்றால் சம்மதமில்லை என்றால் அதை கிளிக்குங்களேன். அதுதான் defaultஆக இருக்க வேண்டும் என்று ஏன் அடம்பிடிக்கிறீர்கள்?
ஜெஸிலா, தமிழ்மணம் ஒன்றும் தவறான இணையத்தளம் கிடையாது. நிச்சயமாக தனக்கென ஒரு ஸ்டாண்டர்ட் உடன் உள்ள ஒரு இணையத் தளம்.
ReplyDeleteநீங்கள் சொல்லும் பெரும்பான்மையான இணையத்தளங்களைப் பற்றித் தெரியாது ஆனால் நல்ல இணையத் தளங்களைப் பற்றி தெரியும் அவைகளில் எப்பொழுதும் ஒரு சர்வீஸோ இல்லை எந்தவொரு விஷயமாக இருந்தாலும் 'No/Disagree' தான் டிபால்ட்டாகயிருக்கும்.
அதைத்தான் சொல்லியிருந்தேன்.
//அதைக் கண்டுகொள்ளவேயில்லை //
ReplyDeleteஒரு உதாரணத்துக்கு No, Disagree யே டிபால்ட்டாக இருக்குதுன்னு வச்சிக்குவமே, இதே மாதிரி யாராச்சும் கண்டுக்காம கிளிக்கிட்டுப் போயிட்டு, பூங்காவுல என்னோடது மட்டும் வரவே மாட்டேங்குதேன்னு குறை சொல்ல வாய்ப்பு இருக்கில்ல? அதோட, நிறைய பேர், தாங்கள் எழுதினது வலைப்பதிவு வட்டத்தையும் தாண்டி வெளியே வந்தா சந்தோஷப்படுறாங்க அப்படிங்கறது உண்மை.
//நாம ரொம்ப சீரியஸா ஒரு பதிவு எழுதிட்டு போனால் வேண்டுமென்றே அந்தப் பதிவிற்கு வந்து ஒரு நெகட்டிவ் குத்து விட்டுவிட்டுப் போகிறார்கள்.//
:)) நாட்டுல இதெல்லாம் சகஜமுங்க!
இதெல்லாம் என்னோட கருத்து மட்டுமே!
சுந்தரவடிவேல் இருக்கலாம், பல தடவைகள் அவசரக் கோலத்தில் பதிவை கொடுக்கும் பொழுது, பல சமயங்களில் பூங்காவில் வெளியிடவேண்டாம் என்று சமர்பிக்க முடிவதில்லை.
ReplyDeleteநான் திரும்பவும் சொல்கிறேன், முறைன்னு ஒன்னு இருக்கில்லையா? அதைத்தான் கேட்டேன்.
மற்றபடிக்கு நட்சத்திர குத்திற்கு ஒரு வழி பண்ணியாச்சு அதுவரைக்கும் சந்தோஷம்.