In உலகக்கோப்பை கிரிக்கெட்

Go Aussie Go!!! - 8(Semi Final)

ஒருவழியா உலகக்கோப்பை கிரிக்கெட் அதன் இறுதிக் கட்டத்துக்கு வந்தாச்சு. ஏற்கனவே ஒரு அரையிறுதிப் போட்டி முடிஞ்சு நியூஸிலாந்து வெளியேறிவிட்டது. இன்றைக்கு கடைசி அரையிறுதிப் போட்டி, 8 வருடங்களாக உலகக்கோப்பைப் போட்டிகளில் தோற்காமலும், குரூப் ஸ்டேஜில் சௌத் ஆப்பிரிக்காவை போட்டு புரட்டி எடுத்தும் மனதளவில் பிரகாசமாக இருக்கிறார்கள் ஆஸ்திரேலிய அணியினர்.

மாத்யூ ஹைடன், ஆடம் கில்கிறிஸ்ட், ரிக்கி பான்டிங், மைக்கேல் கிளர்க், அண்ட்ரூ சைமண்ட்ஸ், மைக்கேல் ஹஸ்ஸி போன்ற பலமான பேட்ஸ்மேன்களும். மிகவும் வித்தியாசமான பௌலிங் அட்டாக்குடன் மிகவும் வலுவாகயிருக்கிறது ஆஸ்திரேலியா அணி.

மனதளவில் தளர்ந்து போயே சௌத் ஆப்பிரிக்க அணி இருந்தாலும், செமியிலாவது ஒரு நல்ல போட்டியை எதிர்பார்த்து காத்திருக்கிறேன். முதல் பேட்டிங்காக இருந்தாலும் சரி, இரண்டாவது பேட்டிங்காக இருந்தாலூம் சரி என்று பின்னிக் கொண்டிருக்கும் ஆஸ்திரேலிய அணியை சௌத் ஆப்பிரிக்கா ஜெயிக்க வேண்டுமானல் They have to play like champions. அவ்வளவுதான்.

ஒரு மாதிரியான போட்டி கூட இல்லாததால ஒவ்வொரு போட்டிக்கும் பதிவு போடணும்ங்கிற கான்செப்ட் கூட உதைவாங்குது எழுதவே ஒன்னும் இல்லை. யாரும் ஆஸ்திரேலியா பக்கத்தில் கூட வரலைங்கிறதால, என்னாத்த எழுத... ஆனாலும் உற்சாகப் படுத்துவதற்காக(உற்சாகப் படுத்திக் கொள்வதற்காக...) இந்தப் பதிவு.

Related Articles

19 comments:

  1. //நீங்களும் சொல்லுங்க ஏதாச்சும்//

    Go Aussie Go!

    ReplyDelete
  2. எங்க அதுக்குள்ள ஸ்மித் அவுட் ஆயி பெவிலியன் போயாச்சு.

    இன்னிக்கு 200 கூட அடிப்பாங்களான்னு தெரியலை.

    ReplyDelete
  3. பொட்டீக்கடை ரிப்பீட்டு,

    மூணு பேரு ஏற்கனவே உள்ளப் போயாச்சு. இன்னும் கிப்ஸ் ஒரு ஆளு தான் பாக்கி.

    இன்னிக்கு மேட்ச் இப்படி சப்பையா போச்சே!

    ReplyDelete
  4. 27-5
    31-6
    41-7
    55-8
    65-9
    72-10
    73-0/10 overs

    ReplyDelete
  5. ம்ஹூம் கிப்ஸும் அவுட். பக்னர் ஏமாதிட்டார். இதை நான் ஒத்துக்க மாட்டேன்.

    ReplyDelete
  6. /இன்னிக்கு மேட்ச் இப்படி சப்பையா போச்சே!//

    ரிப்பிட்டே... :)

    1996 World cup final---> 2007 :)

    ReplyDelete
  7. கிப்ஸு அவுட்டா? ஆடிட்டு இருக்காருங்க...

    ReplyDelete
  8. இராம் ரொம்ப கனவு காணாதீங்க, கரைஞ்சு போயிடப்போகுது. ஆஸ்திரேலியா இங்கே ஒரு மாதிரியைக் கொண்டு விளையாடுவது கிடையாது. இன்றிருக்கும் ஆஸ்திரேலிய அணிக்கு அருகில் கூட வராது இலங்கை. அதை பைனல்ஸில் பார்ப்போம்.

    பிரகாஷ் அண்ணாச்சி, அவர் இன்சைட் எட்ஜ் அவுட். ஆனால் ஸ்டீவ் பக்னர் அவுட் கொடுக்கவில்லை. அதைத்தான் சொன்னேன்.

    ReplyDelete
  9. 149 ஒரு ஸ்கோரா?

    வெட்டி ஊறுகாய் போட்டு ப்ரெட்டுக்குத் தொட்டுச் சாப்பிட்டுடுவாங்க

    15 - 20 ஓவர்லே மேட்ச் முடியுதுன்றேன் நான். எனி பெட்ஸ்?

    ReplyDelete
  10. நானும் அப்படித்தான் நினைக்கிறேன் சுரேஷ். அதனால் நோ பெட்ஸ். ;)

    ReplyDelete
  11. இவ்ளோ மோசமான ஆட்டத்தை தென்னாப்பிரிக்காவிடம் இருந்து எதிர்பார்க்கலை..

    கொஞ்சம் கடுப்பாதான் இருந்துது என்றாலும், ஸ்ரீலங்காவை சுளுக்கெடுக்க, ஆஸ்திரேலியாதான் தோது.... முரளிதரன்களுக்கும், மலிங்காக்களுக்கும் இருக்கு சரியான ஆப்பு

    ReplyDelete
  12. ஆஹா தலீவா! நீங்க நம்ம பக்கமா. சொல்லவேயில்லை.

    உண்மைதான், மலிங்காவினுடைய பந்துவீச்சை ஹைடன் கிழித்தெடுப்பதைப் பார்ப்பதற்காகத்தான் நான் காத்திருக்கிறேன்.

    ReplyDelete
  13. இலங்கை ஒன்றும் சொத்தை டீம் இல்லை.

    ஆஸ்திரேலியா மிக அருமையாக விளையாடி வருகிறது.

    இன்றிருக்கும் இரண்டு நல்ல டீம்கள் இறுதிப் போட்டியில் மோதுவது நல்ல விருந்தாக இருக்கப் போகிறது.

    இலங்கையைக் குறைத்து மதிப்பிட வேண்டாம்.

    60/40 என்ற விகிதம் ஆஸி பக்கம்!

    சனிக்கிழமை பார்க்கலாம்!
    இப்ப போய்ப் படுக்கலாம்!
    :))

    ReplyDelete
  14. இல்லை VSK அவர்கள் வாஸ்ஸையும், முரளியையும் விளையாட விடாமல் செய்ததற்காகவே அவர்கள் தோற்க வேண்டும்.

    ஏனென்றால் இது ஒரு Best Practice ஆ ஆய்டக்கூடாதுன்னு நினைக்கிறேன்.

    அவ்வளவே.

    ReplyDelete
  15. //ஏனென்றால் இது ஒரு Best Practice ஆய்டக்கூடாதுன்னு நினைக்கிறேன்.//

    since you have been harping abt sportamanship of SL I guess you conveniently forgot how Aussies batted in 1999 WC vs West Indies in group B.Its a spineless way compare to anything everseen in cricket.

    They chased down 110 in 40.4 overs in what u can call as crawling instead of chasing down the target.The reason is simple; they didn't want to face NZ again in super 6 bec NZ defeated them earlier.

    Looks how the one day specialist Bevan batted..
    SR Waugh 19 in 73 balls
    MG Bevan 20 in 69 balls

    if u can call it gamemanhip or part of strategy it would apply to SL cae too.

    Read the comments at the end of this link...
    http://www.cricinfo.com/link_to_database/ARCHIVE/WORLD_CUPS/WC99/SCORECARDS/GROUP-B/AUS_WI_WC99_ODI28_30MAY1999_BBB-COMMS.html

    but NZ made it at the end to the super6 by beating scotland comfortably despite the Aussie underhand tactics.
    for group B matches
    http://www.cricinfo.com/link_to_database/ARCHIVE/WORLD_CUPS/WC99/SCORECARDS/

    ReplyDelete
  16. We want to resettle the '96 finals score...

    AUSSIE RULES

    ReplyDelete
  17. ராஜ் அண்ணாச்சி, நான் ஆஸ்திரேலியா செய்ததை சரியென்று சொல்லவில்லை. அதேபோல் இன்று இலங்கை செய்வதையும்.

    நான் கண்மூடித்தனமாக ஆஸ்திரேலியா செய்த அனைத்தும் சரியானது என்று சொல்பவனல்ல.

    எப்படி அன்று அவர்கள் செய்தது சரியில்லையோ எப்படி தடுக்கப்பட்டிருக்க வேண்டுமோ அப்படியே இந்தத் தடவை இலங்கை செய்ததும்.

    ReplyDelete
  18. //மோகன்தாஸ் சொன்னது...
    ராஜ் அண்ணாச்சி, நான் ஆஸ்திரேலியா செய்ததை சரியென்று சொல்லவில்லை. அதேபோல் இன்று இலங்கை செய்வதையும்.
    //

    ஆஸ்திரேலியாவுக்கு சப்போர்ட் பண்ணா உடனே 'அவனுங்க செய்ற ஸ்லெட்ஜிங் சரின்னு சொல்றீங்களான்னு' கேட்குறவங்கதான் அதிகம். அவங்களோட திறமையை இது போன்ற குற்றச்சாட்டுகளால் ஒரு போதும் மறைக்க முடியாது. அதற்காக ஒழுக்கக் கேடுகள், மோசமான கிரிக்கெட் தந்திரங்கள் (Sportsmenship-ஐ பாதிக்கும்) யார் செய்தாலும் அசிங்கமே. என்ன சொல்றீங்க மோகன்தாஸ்?

    ReplyDelete

Popular Posts