இந்த உலகக்கோப்பையின் ஆரம்பத்தில் இருந்து நான் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் மாட்ச். ஸ்ரீலங்காவைப் போல் ஏப்பை சாப்பையாக ஆடமாட்டார்கள் என்றே நினைக்கிறேன். இருவரும் முழு பலத்துடன் ஆடினால் நல்ல மாட்சாகயிருக்கும்.
நியுஸிலாந்திற்கு எதிரான கடைசி சீரியஸ் போட்டியிலும் கூட, ஆஸ்திரேலிய அணியின் பேட்டிங் திறமையாகத்தான் இருந்தது, கேப்டன்ஸியும், சில வீரர்களும், பவுலிங் அட்டாக்கும் சரியாகயில்லை. ஆனால் இப்பொழுது எல்லாம் பிரகாசமாகயிருக்கும் நிலையில் ஆஸ்திரேலியாவிற்கு மிகச் சாதகமான ஒரு மாட்சாகத்தான் இருக்கும்.
அதுமட்டுமில்லாமல் சாதாரணமாகவே இவர்கள் இருவரும் விளையாடினால், இந்தியா, பாகிஸ்தான் மாட்ச் பார்ப்பது போல் இருக்கும். தற்போதைய நிலையில் பைனல்ஸ் வருவார்கள் என்று நான் நினைக்கும் அணிகளாகயிருப்பதால். பைனல்ஸ்க்கு முன் மற்ற போட்டியாளர்களின் மனவலிமையைக் குறைக்க நிச்சயம் நினைப்பார்கள் இருவருமே.
ரொம்ப ஆப்டிமிஸ்டிக்கா யோசிச்சாலும் நியூஸிலாந்து ஜெயிக்கயிருக்கும் 5% சான்ஸஸும் அவர்கள் இரண்டாவதாக பேட்டிங் செய்தால் மட்டுமே. அதற்குமே கடினமாகப் போராடவேண்டும். பார்க்கலாம்.
இவர்கள் இருவரும் நன்றாக விளையாடவேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.
Go Aussie Go!!! - 7
பூனைக்குட்டி
Friday, April 20, 2007
பூனைக்குட்டி
Primarily a java programmer, an athiest and a film geek, who loves reading, writing and photography.
Related Articles
Subscribe to:
Post Comments
(
Atom
)
Popular Posts
-
இங்க இப்படி ஒரு ஐட்டம் இருக்கிறதென்பதே மறந்து போயிருந்தது. காந்தாரா படமல்ல பொன்னியின் செல்வன் படம் தான் என்னை ப்ளாக் பக்கம் திருப்பியது, ஆனா...
-
மதுமிதா இறந்துவிட்டாள் என்ற செய்தியை என்னால் சிறிதும் நம்பமுடியவில்லை, நான் சிறிது சிறிதாக மயக்கமாகிக் கொண்டிருப்பதை உணர முடிந்தது. o அந...
-
The air was thick with anticipation as Sindhu broached the subject, her voice a mix of determination and vulnerability. "Imagine, just ...
இந்த டேய்ட் பையன் ஓவரா நோ பால்ஸ் அண்ட் ஒய்டு போடறான். இல்லன்னா சூப்பரா வருவான்...அய் ஸ்டில் பெட் ஆன் ப்றேக்கன் & மெக்ரா...
ReplyDeleteவாட்சனும் ஃபிட்...சூப்பரா இருக்கும்னு நெனைக்கிறேன்
இன்னிக்கு சிவராத்திரி தான்
உண்மைதான் அண்ணாச்சி, ஆனால் ஷான் பாண்ட் இன்னிக்கு விளையாடலை. வெறுப்பா வருது.
ReplyDeleteம்ம்ம் என்னயிருந்தாலும் பைனல்ஸ் விளையாடுவீங்கள்ள மகன்களான்னு போய்ட்டேயிருக்க வேண்டியதுதான்.
சரி எனக்கு ஒரு மெய்ல் அனுப்புங்களேன். mohandoss.i@gmail.com
இது ஒரு சூப்பர் 8 போட்டி என்பதாலும், இரு அணிகளுமே அரையிறுதிக்குத் தகுதி பெற்றுவிட்டதாலும், பெரிதாக ஒன்றும் நடக்காது என எண்ணுகிறேன்.
ReplyDeleteஅடக்கித்தான் வாசிப்பாங்க இரண்டு அணிகளுமே!
நான் அப்படி நினைக்கலை VSK, ஆஸ்திரேலியாவும் அப்படி விளையாடலைன்னு தான் நினைக்கிறேன்.
ReplyDeleteஹேடன் -- 54 பந்துகள் 50 ஓட்டங்கள் 5 பவுண்டரிகள் 1 சிக்ஸர்
ReplyDeleteபாண்டிங் -- 53 - 50 - 7 -0
ஒரு கைதேர்ந்த கலைஞன் வரையும் ஓவியம் போல இந்த ஆஸ்திரேலியர்கள் எடுக்கும் பேட்டிங் பாட வகுப்பு வியக்க வைக்கிறது!
உண்மைதான் VSK, இருவரும் அவுட் ஆகவில்லை என்றால் நிச்சயம் 400 அடிப்பார்கள்.
ReplyDeleteபார்ப்போம்.
They are trying to kill New Zealand mentally. That is why they are doing.