In பதிவர் சந்திப்பு

சென்னை வலைபதிவர் சந்திப்பு

இதைப்பற்றி பாலபாரதியும் நானும் முன்பே ஒருமுறை பேசிக்கொண்டிருக்கும் பொழுது சொல்லியிருந்தார்(அறிவிப்பெல்லாம் வெளியாவதற்கு முன்னால்), நானும் ரொம்ப நல்ல புள்ளையாய் டிரெயின் டிக்கெட் எல்லாம் எடுத்து வைத்திருந்தேன். ஆனால் என்னுடைய கோளாறான வேதாள புத்தியால், கடைசி நிமிடம் வரை திட்டத்தை கேன்ஸல் செய்துவிட்டு முருங்கை மரம் ஏறிவிடும் வாய்ப்பிருந்ததால் பெரும்பாலும் இதைப் பற்றி(நான் சென்னை வருவதைப் பற்றி) யாரிடமும் பேசவில்லை. வலையுலகில் வெகுசிலருக்குத் தெரிந்திருக்கும்.

இடையில் செந்தழல் ரவி அவர்கள், தங்களின்(அவரும் இன்னொரு நண்பரும்) காரில் சென்னை வருமாறு என்னை அழைத்தார், ஆனால் எனக்கு சனிக்கிழமை பெங்களூரில் கொஞ்சம் வேலையிருந்ததால் மறுத்துவிட்டேன். ஆனால் கடைசி நேரத்தில் அந்த வேலை, நடக்காமல் ஈயடித்துக் கொண்டிருந்தேன் என்பதுதான் உண்மை. சென்னைக்கு காலை ஏழு இருபதுக்கெல்லாம் ஆஜராகிவிட்டேன். ஏற்கனவே செய்து கொண்ட சில அப்பாயின்மென்ட்களை நினைவில் வைத்தவாறு நண்பருடன் நேராக அவருடைய வீட்டிற்குச் சென்று, மற்ற வேலைகளை முடித்துவிட்டு கிளம்பினோம்.

கோயம்பேடு பஸ்டாண்ட் அருகில் இருக்கும் சரவணபவனில் காலை டிபனை முடித்துக்கொண்டு நாங்கள் புறப்பட்டது எங்களுடன் கல்லூரியில் படித்த ஒருவரை சந்திப்பதற்காக. இவரைப் பற்றிமுன்பே ஒரு முறை எழுதிய நினைவு. இந்தச் சந்திப்பு முடிந்ததும் தான், எங்கள் ப்ளானில் இருந்த மிகப்பெரிய ஓட்டை நினைவில் வந்தது. அதாவது ஏறக்குறைய பதினொன்னறைக்கு முடிந்த இந்தச் சந்திப்பிற்குப் பிறகு, வலைபதிவு சந்திப்பின் மூன்றரை மணிவரை இருந்த காலம் தான் அது.

நானும் என்னுடன் வந்த நண்பரும் கல்லூரிக்காலங்களில் இருந்தே நிறையப் படங்கள் பார்ப்போம் என்பதால் டீபால்ட்டாக தேர்ந்தெடுத்தது சினிமா பார்க்கலாம் என்பதைத்(இதை கொஞ்சம் போல் முன்பே தீர்மானித்துத்தான் வைத்திருந்தோம்.)தான். ஆனால் சத்யம் சென்று ஒரு சினிமாவிற்கும் டிக்கெட் கிடைக்காமல் கடுப்பாகி அடுத்த நகர்ந்த இடம் தேவி காம்ப்ளக்ஸ். பெரும்பான்மையான தமிழ்ப்படங்கள் பெங்களூருக்கு வருவதில்லை ஆகையால் அந்த காம்ப்ளக்ஸில் ஓடிக்கொண்டிருந்த ஒரு படத்தைத் தவிர்த்து எந்தப் படத்தையும் நான் பார்த்திருக்கவில்லை. பின்னர் நண்பரின் தீர்மானப்படி நாங்கள் தேவி-பாலாவில் "தீபாவளி"க்குப் போனோம்.

கொய்யால, தியேட்டராய்யா அது - எங்க ஊரு பிலக், எலெக்ட், சாந்தி தியேட்டர் பக்கத்தில் கூட வராது இந்தத் தியேட்டர், 'ஏசி' சாரி 'பேன்' கூட இல்லை தியேட்டருள். என்னவோ நினைத்து எங்கேயோ போய்விட்டோம், அந்தச் சோகக்கதையை விடுங்கள். படம் கொஞ்சம் வன்முறையாக இருந்தாலும் 'ஃபோரம் - பிவிஆர்' மாதிரியான தியேட்டர்களில் பார்த்திருந்தால் பிடித்திருக்கக்கூட செய்திருக்கும். 'பில்லு' 'பில்லு'ன்னு சப்தம் நான் சந்திப்பிற்கு வரும் வரை காதிலே ஒலித்துக்கொண்டேயிருந்தது.

-------------------------------------

நடேசன் பார்க், நான் நினைத்ததைப் போல கண்டுபிடிக்க கடினமானதாக இல்லை. பாலபாரதியிடம் பத்துநிமிடம் அடையாளம் கேட்டதெல்லாம் வீண். உள்ளே நுழைந்ததும் ஒரு மாதிரி வட்டமாய் உட்கார்ந்திருந்த மக்களைப் பார்த்ததும் தெரிந்தது இதுதான் நம்ம கும்பல் என்று ஆனால் பக்கத்தில் இன்னொரு கூட்டமும் நின்று கொண்டிருக்க சுதாரிக்க ஒரு நிமிடம் ஆனது, ஆனால் வழமையாக தருமியையும், பிரகாஷரையும் வைத்து நம்மக் கூட்டத்தைக் கொஞ்சம் சுலபமாக கண்டறிந்துவிட்டேன்.

நான் தான் மோகன்தாஸ் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு, கிருபா ஷங்கர், பிரகாஷ், பாஸ்டன் பாலா, பக்கத்தில் உட்கார்ந்தேன் எனக்குப் பக்கத்தில் உட்கார்ந்திருந்தது முத்து தமிழினி, நான் அவருடன் தொலைபேசியில் பேசியிருந்தாலும் நேரில் பார்த்துப் பேசியிருக்கவில்லை. தனியாக பக்கத்தில் உட்கார்ந்திருந்த பிரகாஷிடம் அறிமுகம் செய்து கொள்ள, அவரும் தன்னை; நான் தான் பிரகாஷ் என்று அறிமுகப்படுத்திக் கொண்டார். நான் அது பிரகாசமாகத் தெரியுதே என்று சொன்னதை ஜாலியாக எடுத்துக்கொண்டார் மனிதர்.

பின்னர் பக்கத்தில் உட்கார்ந்திருந்த பாபாவிடம் இட்லிவடை பற்றி கதைத்துக்கொண்டிருந்தேன், அவர் சுவாரசியம் காட்டியமாதிரி தெரியவில்லை. நான் இட்லிவடை பற்றி தெரிந்து கொள்ள விரும்பியது அரசியல் காரணங்களுக்காக அல்ல, முன்பொரு முறை என்னைப் பற்றி இட்லிவடையில் வந்திருந்த ஒரு கருத்தை சொன்ன நபர் யார் என்று தெரிந்துகொள்ளும் ஆவல் மட்டும் தான். திரும்பவும் சொல்கிறேன் நான் அரசியலுக்கு அப்பாற்பட்டவன் குறைந்த பட்சம் இணைய அரசியலுக்கு ;).

நான் உட்கார்ந்ததுமே, "வாய்யா மோகன்தாஸ் - உட்காரு" என்று வந்த பாசக்காரக் குரல் நன்றாகப் பழகியதாகயிருந்தாலும் ஆளை அடையாளம் தெரியாமல் ஒரு நிமிடம் விழித்தேன். கடைசியில் பதிவர் சந்திப்பிற்காக கெட்டப்பை மாற்றியிருந்த பாலபாரதிதான் அது என்று தெரிந்தது; நான் எதிர்பார்த்ததை விடவும் உயரம் கொஞ்சம் அதிகம் ஆள் வாட்ட சாட்டமாகயிருந்தார் ;)(அண்ணாச்சி! என்னைச் சொல்லிட்டு(வீட்டுச் சாப்பாடுன்னு) நீங்க தான் ஓய் வீட்டுச் சாப்பாடு சாப்பிடுவது மாதிரி இருக்கிறியள். இத்தனைக்கும் சொந்தச் சமையல் வேறு கிடையாது என்று சொன்ன நீங்கள். ம்ம்ம்ம், இன்னொரு நாள் இந்த ரகசியம் பற்றி பேசுவோம், அதுசரி வீட்டுப் பக்கம் யாராவது இருந்தால் சுத்திப் போடச் சொல்லுங்கள், என் கண்ணே பட்டுடும் போலிருந்தது ;)).



பின்னர் அறிமுகப்படலம், (அதற்கு முன்பே சிறில் அலெக்ஸின் பெட்டகம் பற்றி பேசி முடித்திருந்தார்கள். மாற்று பற்றி ஆரம்பிக்கும் பொழுது வந்திருந்தேன் - கையை உயர்த்தி ஒரு கேள்வி கேட்டேன், யாரும் கண்டுகொண்ட மாதிரி தெரியாததால் விட்டுவிட்டேன்.) ஒருவர் பின் ஒருவராக அறிமுகப்படுத்திக் கொண்டிருந்த பொழுது எனக்கும் முத்துவிற்கும் இடையில் இன்னொரு பிரபலம் வந்து உட்கார்ந்தார், அது ஜி.இராகவன். நான் மோகன் என்று அறிமுகப்படுத்திக் கொண்டேன்.

கிருபா ஷங்கரின் அறிமுகத்தின் பொழுது பாலபாரதி ஒரு கமென்ட் கொடுக்க, பாபா மற்றொரு நண்பரின் அறிமுகத்தின் பொழுது குரல் கொடுத்ததை பலர் கவனிக்காதது போல் விட்டு விட்டார்கள்(போட்டு விட்டுட்டுடனே...) பின்னர் சில ஜல்லி விஷயங்களைப் பற்றி நான் பிரகாஷுடன் பேசிக்கொண்டிருந்தேன். இடையில் வந்து உட்கார்ந்தவரைப் பார்த்ததும் முதலில் மற்ற அறிமுகம் இல்லாதவர்கள் போல் தான் நானும் நினைத்தேன்; கடைசியில் தான் தெரிந்தது அது ரோஸா வசந்த். என்னை அறிமுகப்படுத்திக் கொண்டேன் - குவான்டம் பற்றி முன்பொருமுறை சண்டை போட்டதை வைத்து கொஞ்சம் நேரம் பேசிக்கொண்டிருந்தோம்.

அந்தச் சமயத்தில் தான் பாபாவை Snap Judgement பற்றி பேசச் சொன்னார்கள். என்னை ஆங்கிலத்தில் பேசச்சொன்னால் "Actually" யை அதிகம் தடவை உபயோகிப்பேன், அதைப் போல் பாபா "அது என்ன பேரது..."(இல்லை அதை ஒத்ததோ) ஒன்றை அதிகம் தடவை உபயோகித்தார்.(குற்றம் கண்டுபிடிப்பதற்கு மன்னியுங்கள், கல்லூரிக் காலத்தில் லெக்சரர் ஒருவர் சொல்லும் "Actually" யைக் கணக்கெடுத்து எடுத்து அப்படியாகிவிட்டேன் நான்.) சொன்ன மேட்டர் நன்றாகயிருந்தது உபயோகித்துப் பார்க்கலாம் என்று நினைத்திருக்கிறேன்.

இடையிடையில் ஒவ்வொரு நிகழ்வின் பொழுதும், பிரகாஷ் இல்லை(OR) ரோஸா வசந்த் கொடுத்த கமென்ட் நன்றாகயிருந்தது. ஆனால் அவ்வளவு கரெக்டாக நினைவில் இல்லாததால் எழுதவில்லை. ஓசை செல்லா தன்னுடைய கோவை "வலைபதிவுப் பட்டறை" பற்றி சொல்லிக் கொண்டிருக்கும் பொழுது, பிரகாஷ் சிகரெட் குடிப்பீங்களா என்று கேட்க, நான் மாட்டேன் என்றும் ஆனால் கம்பெனி கொடுப்பேன் என்றும் சொல்லி நானும் அவரும் கிளம்பியது தான் தாமதம், படபடவென்று ஒரு பெரிய கும்பலே புகைபிடிக்க வந்து சேர்ந்தது.

கொஞ்ச நேரம் அவர்களுடன் ஜாலியாக அரட்டை அடித்துவிட்டு திரும்பவும் பதிவர் வட்டத்திற்குள் வந்து உட்கார்ந்ததற்கும் தருமி பேசத் தொடங்கியதற்கும் நேரம் சரியாகயிருந்தது. ஒரு திறமையான ஆசிரியரைப் போல முதலில் நல்லவைகளை(ப்ளாக்கர்களைப்) சொல்லிவிட்டு பிறகு என்ன செய்யவேண்டுமென்று கேட்டுக்கொண்டார். அவருடைய Think Tank பற்றிய கருத்துக்கு, பொன்ஸ், பிறகு இருவர் சந்தேகம் கேட்டார்கள் அவர் எதை Think Tank என்று சொல்ல வருகிறார் என்று. எனக்கு அவர் சொல்லவந்த கருத்து ஒரு மாதிரி புரிவது போல் இருந்தது. இந்தச் சமயத்தில் எல்லாம் பிரகாஷ், பாபா, ரோசா வசந்த, மற்றும் குழுவினர் எஸ்கெப் ஆகியிருந்தார்கள். அவர்கள் நான் பிறகு சந்திக்கவேயில்லை.



இப்படியாக தருமி பேசிக்கொண்டிருந்த பொழுது, ஓரளவிற்கு சீரியஸான டிஸ்கஷன்ஸ் போய்க்கொண்டிருந்தது, தமிழ்மணம், 40, அனானி பின்னூட்டங்கள், நல்ல கெட்ட பதிவுகள் பற்றிய பேச்சு சுவாரசியத்தைக் கொடுத்தது. ஓகை, இலவசமாக தமிழ் சாப்ட்வேர் தருவதை பற்றி பிரஸ்தாபிக்கத் தொடங்கியதும், கௌதம் அதை எப்படி இன்னும் நன்றாகச் செய்யலாம் என்பதைப் பற்றி பேசினார்கள். சிறிது நேரத்தில் குங்குமம், மக்கள் தொலைக்காட்சி ஆகியவை வலைபதிவர் சந்திப்பை இன்னொரு நிலைக்கு நகர்த்த புகைப்படம், ஒளிப்பதிவு போன்ற விஷயங்களில் இறங்கியது. பின்னர் குரூப் போட்டோவிற்கு போஸ் கொடுக்கத் தொடங்கினர் வலைப் பதிவர்கள்.



பின்னர் சின்ன சின்ன குழுக்களாகப் பிரிந்து அவரவர்கள் பேசிக்கொண்டிருந்தார்கள். நான் பேசக் கிடைத்த ஆள் கிருபா ஷங்கர், அவர் தான் .Netல் வேலை செய்வதாகச் சொன்னதும் நான் அவரிடம் J2EEல் வேலை செய்வதாகச் சொல்லி கொஞ்சம் நேரம் அதைப் பற்றி பேசிக்கொண்டிருந்தோம். இடையில் புகுந்த பொன்ஸ் இடம் எங்கே நாங்கள் ஆரக்கிள் ஓப்பன் சோர்ஸ்டா இல்லையா என்று கேட்டுவிடுவோம் என்று பயந்து கொஞ்ச நேரத்தில் எஸ்கேப் ஆகிவிட்டார்.

பிறகு மா.சிவக்குமாரை சந்தித்து முன்பே தனிமடலில் பேசிக்கொண்டிருந்த, கல்லூரி இறுதியாண்டு ப்ராஜக்ட் விஷயமாகப் பேசிக்கொண்டிருந்தேன். அவரோ ஏக பிஸி, நானோ ரொம்ப சீரியஸாக பேசிக்கொண்டிருக்க இடையில் வந்த செல்லா சிவக்குமாரை தட்டிக்கொண்டு போய்விட்டார்.(KPN ஆபீஸ் சென்றார்கள் என்று நினைக்கிறேன் - பின்னர் நடு வழியில் அதாவது நானும் நண்பரும் நடேசன் பார்க்கை விட்டு வெளியேற எத்தனிக்க அவர்கள் உள்ளே வர அங்கே ஒரு ஐந்து நிமிடம் பேசிக்கொண்டிருந்தோம்.)பின்னர் வடுவூர் குமாரை சந்தித்துப் பேசினேன், ஆள் பூராவும் புன்னகையாகயிருக்கிறார்.

நண்பர் ஒருவர் நீங்கதானே அந்த "சார்... சார்...னு போட்டு ஒரு கதை எழுதினீங்க நல்லாயிருந்தது" என்று சொன்னார் பின்னர் நான் அது ரொம்ப பழைய கதையாச்சேன்னு கேட்க அதற்குப் பிறகு உங்கப் பதிவு படிப்பதில்லைன்னு சொல்லிட்டுப் போனார். :(

பின்னர் தருமியிடம் கொடுக்க வேண்டியதைக் கொடுத்துவிட்டு, பாலபாரதியிடம் போய்வருவதாகச் சொல்லக் கிளம்பினேன். சொல்லக் சொல்லக் கேட்காமல் என் புகைப்படத்தை க்ளோசப்பில் எடுத்து வைத்திருக்கிறார் ;). பாவம். (அண்ணாச்சி கம்ப்யூட்டரில் போடும் பொழுது பார்த்துப் போடுங்கள். குழந்தைகள் பயந்திடப்போகுது.) நாமக்கல் சிபி வந்து ஒரு ஹாய் சொல்லி பேசிக்கொண்டிருந்தார். லக்கிலுக், வரவனையான், ஜெய் சங்கர் இவர்களுடன் பேசிக்கோண்டிருந்தேன். இடையில் நிறைய பதிவர்களுடன் பேசிக்கொண்டிருந்தாலும் யாருடனும் அவ்வளவு பிரகாசமான தொடர்பு இல்லாததால் பேச்சுக்கள் இடையில் தொங்கின...



மற்றபடிக்கு பதிவர்களைப் பற்றிய நல்லதொரு அறிமுகம் கிடைத்தது. நல்ல முறையில் ஆர்கனைஸ் செய்யப்பட்டு சிறப்பாக முடிவடைந்தது சந்திப்பு. இதே போல் பதிவர் சந்திப்புக்களை சில நாட்களோ வாரங்களோ இல்லை மாதங்களோ இடைவெளிவிட்டு தொடர்ச்சியாக நடத்த வேண்டும். பெரும்பாலும் இது போல நடக்கும் சந்திப்புக்களால் ஒருவருக்கொருவர் கிடைக்கும் பழக்கம், தமிழ் வலைப் பதிவுகளை இன்னொரு நிலைக்கு கொண்டு செல்ல உதவும். இந்தமுறை கொஞ்சம் டைட் ஷெட்யூலில் வந்ததால் நிறைய விஷயங்கள் பேச, பகிர்ந்து கொள்ள முடியாமல் போனது. இது ஆரம்பம் தானே என்று விட்டுவிட்டேன்...

பிறகு இன்னொரு முறை எல்லோரிடமும் சொல்லிக் கொண்டு பெங்களூருவைப் பார்க்கக் கிளம்பினேன்.(அந்தக் கதை இன்னொரு நாள்...)

Related Articles

11 comments:

  1. மோகன்தாஸ் ஸார்..

    புகைப்படங்களுடன் ஒரு செய்தித் தொகுப்பை வழங்கியிருக்கிறீர்கள்.. நன்றிகள்.. நான் வந்திருந்தாலும் பலருடனும் அறிமுகம் இல்லாத சூழலாகிவிட்டது.. வருத்தப்படுகிறேன். அடுத்தச் சந்திப்பில் பேசுவோம்.

    நீங்கள் எடுத்திருக்கும் புகைப்படத்தில் தெரிந்தோ தெரியாமலோ எனது(உண்மைத்தமிழன்) ‘பூத உடல்’ சிக்கியிருக்கிறது. (முதல் புகைப்படத்தில் பாலபாரதிக்கு அப்பால் காதில் ஹியரிங் எய்டோடு இருப்பவன்) எடுத்துக் கொடுத்தமைக்கு நன்றிகள்..

    இந்தப் புகைப்படத்தை மட்டும் இப்போதோ அல்லது பின் வரும் காலங்களிலோ எந்த இடத்திலாவது பயன்படுத்துவதற்கு எனக்கு அனுமதி தருமாறு கேட்டுக் கொள்கிறேன்..

    ReplyDelete
  2. நிச்சயமா உங்களுக்கு இல்லாததா உபயோகிச்சிக்கோங்க.

    ReplyDelete
  3. மாற்று! பற்றி என்னப்பா கேட்க வந்தீங்க?

    ReplyDelete
  4. பொன்ஸ், அவரு ஏதோ சீரியஸா சொல்லிக்கொண்டிருந்தார். பட்டென்று ஏதோ சந்தேகம் வந்தது. கேக்கணும்னு பார்த்தேன். நீங்க ரெண்டு பேரும் ரொம்ப சீரியஸா பேசிக்கிட்டிருந்தீங்க.

    இப்ப என்னான்னு ஞாபகம் வரமாட்டேங்குது. வந்தா கேக்குறேன்.

    ;)

    ReplyDelete
  5. குரூப் போட்டாவில் இருப்பது யார் யார் சொல்லமுடியுமா?

    ReplyDelete
  6. //குரூப் போட்டாவில் இருப்பது யார் யார் சொல்லமுடியுமா?//

    ஏன்? அவங்களை வெச்சு போலி வலைப்பூ தயார் பண்ணனுமா?

    ReplyDelete
  7. உங்கள் பார்வையில் நன்றாக சொல்லி இருக்கிறீர்கள்...!~!

    சூப்பர்...!!

    ReplyDelete
  8. மோகன் தாசு

    எனக்கு ஞாபகம் வந்துடுச்சியா நீரு கேட்க் நெனச்சது.. மாற்று யாருக்கு மாற்றுன்னுதானே கேட்க நெனச்சீரு? :-)

    சாத்தான்குளத்தான்

    ReplyDelete
  9. ரவி உங்களைத்தான் பார்க்க முடியாமல் போய்விட்டது. மற்றபடிக்கு நன்றாகவே போனது பதிவர் சந்திப்பு.

    ReplyDelete
  10. இல்லை ஆசிப்,

    சிறில் கொஞ்சம் தொலைவில் உட்கார்ந்திருந்தார். அதனால் கொஞ்சம் போல் காதில் விழவில்லை, மேலும் "மாற்று" பற்றி சொல்லும் பொழுது, சிறந்த பதிவுகள் தேர்ந்தெடுக்கிறார்கள் என்றோ இல்லை அதைப் போல ஒன்றையோப் பற்றி பேசினார்.

    நல்ல பதிவுகளை தேர்ந்தெடுப்பது எப்படி என்று கேள்வி கேட்கலாம் என்று நினைத்தேன். ஒரு வேளை சிறில் அதைப் பற்றி பேசாமல் கூடயிருந்திருக்கலாம். இப்பொழுது யோசித்துப் பார்த்தால் ஒன்றும் விளங்கலை.

    ReplyDelete

Popular Posts