Showing posts with label பெங்களூர். Show all posts
Showing posts with label பெங்களூர். Show all posts

In தொடர்கதை பெங்களூர்

ஆவியை யாகுலஞ் செய்யும்

ராமின் அறிமுகம் நன்மொழித்தேவனுக்கு ஒரு பெண் விபச்சாரியின் மூலம் கிடைத்தது, ராம் ஒரு ஜிக்லோ.

நன்மொழித்தேவன் பிரபல எழுத்தாளன் ஒருவனுடன் இலக்கியம் பேசிக் கொண்டிருந்த பொழுது அதாவது மது அருந்திக் கொண்டிருந்த பொழுது, ஒரு விபச்சாரியைக்கூட நேரில் பார்க்காம நீ எப்படி எழுத்தாளனாக முடியும் என்று அந்த எழுத்தாளன் சொன்ன அடுத்தநாள் நன்மொழித்தேவன் பெங்களூர் வீதிகளில் விபச்சாரிகளைத் தேடி அலையத் தொடங்கினான், உடன் அவனுடன் வேலை பார்த்த இருவர். பின்னர் தான் அவர்களுக்குத் தெரிந்தது MG Roadல் இரவு ஒன்பது மணிக்கு மேல் நிற்கும் விபச்சாரிகள் அவர்கள் கண்ணிற்குப் படாததும் கூட நன்மைக்குத் தான் என்று. அந்த இருவரில் கொஞ்சம் தேர்ச்சி பெற்ற ஒருவன் சொல்லப்போய் தான், ஃப்ரீ ஆட்களில் மசாஜ் என்ற பெயரில் வந்திருக்கும் விளம்பரம் எல்லாம் - குற்றம் கண்டுபிடிப்பவர்களிடம் இருந்து தப்பிக்க, பெரும்பாலும் போட்டுத் தொலையணும் - இதற்குத்தான் என்று தெரியவந்து அவனும் ஆட்ஸ் வாங்கி ஃபோன் செய்த முதல் முறை அவனுக்கு விபச்சாரிகள் என்பவர்கள் தேவதைகளாகவே மனதில்பட்டனர். எப்பப்பாரு பான்பராக் போட்டுக்கொண்டு, வந்தது முதலே தன்னுடைய அல்லது கிடைக்கும் மொபைல் போனில் யாரோ ஒருவனிடம் பேசிக் கொண்டு, சிகரெட் இருக்கா, சாராயாம் இருக்கா, பசிக்குது போய் சாப்பாடு வாங்கிட்டு வா, சீக்கிரம் செய் வந்துத் தொலை, வாய்லல்லாம் செய்ய முடியாது, ட்ரெஸ்ஸையெல்லாம் கழட்ட முடியாது எனத் தொடர்ந்த பொழுதுகளில் இலக்கியத்திற்கும் இவர்களுக்கும் சம்மந்தமே இருக்க முடியாது என்ற நம்பிக்கைக்கு நன்மொழித்தேவன் வந்திருந்தான்.

முந்தைய நாள் வேறொரு நண்பன் கூட உட்கார வைத்துச் சொன்ன அவன் கேர்ள் ப்ரண்டை போட்டக் கதையில் சிக்கி, அடுத்த நாள் தற்செயலாய் பார்த்த எதிர்வீட்டு ஓனர் பெண்ணின் பிரா போடாத முலைகளில் மயங்கி ஹைதரபாத் பிரியாணி ஹவுஸில் உட்கார்ந்து மட்டன் பிரியாணி வந்துவிடாத பொழுதின் அவன் முடிவெடுத்து ஏற்கனவே சேவ் பண்ணியிருந்த மசாஜ் செய்துவிட ஆள் அனுப்புவனிடம் கால்செய்த பொழுதுகளில் வரப்போவது என்ன என்று அவன் அறிந்திருக்கவில்லை. கால் செய்பவன் ஏற்கனவே காசு கொடுத்து மேட்டர் செய்தவன் என்கிற நம்பிக்கை மாமாப் பயலுக்கு வந்ததும், “தொர இங்கிலீஸ் பேசுற குட்டி ஒன்னு இருக்கு வேணுமா? பஜ்ஜாஜ் அலையன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸில் வேலை பார்க்கிற குட்டியாம்” இவர்களின் தொடர்ச்சியான பொய்களில் இதுவும் ஒன்றாக இருக்கும் என்று மட்டும் நினைத்துக் கொண்டு, “எவளாயிருந்தாலும் 3500 தான். எல்லா மாதிரியும் செய்யணும்” என்று சொல்லி உறுதிமொழிவாங்கிக் கொண்ட நன்மொழித்தேவனுக்கு அவன் அவளை ஃபோரமில் காஃபி டேயில் இருப்பா அரைமணி நேரத்தில் போய் பிக்கப் செய்துகொள் என்று சொன்ன பொழுது கூட நம்பிக்கை வரலை.

காஃபி டேவில் பார்த்த பொழுது அவலட்சணமாக அந்த காஃபிடேவின் சூழலுக்கு ஒவ்வாவதது போல் உட்கார்ந்திருந்தது அவளாய்த் தான் இருக்கும் என்று நினைத்தான். ஆனால் எல்லா சமயங்களிலும் அப்படி ஒரு பெண் காஃபிடேவில் உட்கார்ந்திருந்து போல் பட்டதால், ஃபோன் செய்து உறுதி செய்து கொண்டு அவளாய் இருந்தால் போய்விடலாம் என்றே கொஞ்சம் தொலைவில் இருந்து கால் செய்தான். ஆனால் அவள் குரலில் இருந்த ஆங்கிலம் நிச்சயம் பொய்யானது இல்லை என்று உறுதியானது, கால்கள் வெளியில் போக நினைத்தாலும் மனம் வராமல் தடுத்த ஒன்றிற்கும் அவன் மனிதநேயத்திற்கும் சம்மந்தம் இருக்கமுடியாது என்றே அவனும் நினைத்தான். தன்னுடன் மற்றொரு சமயம் பேசிக்கொண்டிருந்த மற்றொரு சூழலில் “ஏன்தான் எல்லாரும் இந்த நடிகைங்க பின்னாடிப் போறானுங்களோ அவளுக்கும் இருக்கிறது இத்துனோண்டு...” கைகளில் காட்டியபடி “... தான” என்று அவன் சொன்னது நினைவில் வந்திருக்கவேண்டும். அவளிடமும் தன்னைப் பார்த்ததும் பிடிக்காமல் விட்டிவிட்டு சென்றுவிடுவானோ என்று பயம் தெரிந்தது.

அழைத்துவந்தான். அதுவரை நண்பர்களது வீட்டிலேயே இதுபோன்ற வேலைபார்த்து வந்த அவன் அந்த முறை தனியாளாய் செய்ய நினைத்தததால் வேறு வழியில்லாமல் அவன் வீட்டிற்கு அழைத்துவரவேண்டியதாயிற்று. வீட்டில் நுழைந்ததும் அவள் கழற்றிவீசிய ஓவர் கோட்டுக்குள் அவளுடைய உடை ரசனை தெரிந்தது, குளித்துவிட்டு வந்திருந்தாள் அவள் ஹேர் ஸ்ப்ரே போட்டிருப்பது தெரிந்தது. ஷாம்பு போட்டு கண்டிஷ்னர் போட்டு சீரம் அப்ளை செய்திருந்த தலை முடி. அவளை விடவும் அழகான பெண்களை அவன் பார்த்திருக்கிறான், பஞ்சாபி, பெங்காலி முஸ்லீம் பெண்கள் ஆனால் அவளுடைய மதர்ப்பான உடலுக்கும் அவளுடைய ஆங்கிலத்திற்கும் அவளுடைய நடவடிக்கைகளுக்கும் சம்மந்தமில்லாத அவலட்சணமான முகம். நன்மொழித்தேவன் அவளது மார்புகளில் கைகளை ஓட்டியதும், “இப்பவே செய்யணுமா! கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக்கிறேனே!” அவள் சொன்னது அவன் இதுவரை செய்த அத்தனை பெண்களும் சொன்னது தான். ஆனால் அவள் மற்றப் பெண்களைப் போல மொபைல் போன்களில் அவளுடைய பாய் பிரண்டுகளுடன் கடலை போடாமல் வீட்டைச் சுற்றிப் பார்க்க ஆரம்பித்தாள். உள்ளறைக்குச் சென்று அங்கே நான் வரைந்து வைத்திருந்த, ஆரம்பித்து முடிக்காமல் வைத்திருந்த ஓவியங்களைப் பார்த்து மயங்கி ஒவ்வொன்றாய் எடுத்துப் பார்க்க ஆரம்பித்தாள். நேரம் கடத்த இவளது வழிமுறை இது போல என்று நினைத்தான்.

பல பெண்களை இதுபோலவே பார்த்து வெறுத்துப்போயிருந்த நன்மொழித்தேவன் அவளை வற்புறுத்தி மற்றொரு படுக்கையறைக்கு அழைத்து வந்து நிர்வாணப்படுத்தி மேயத் தொடங்கினான். ஆனால் அவளுடைய ஒத்துழைப்பும் அவள் கண்களில் பார்த்த காதலும் அவன் இதுவரை அனுபவித்திராதது. பிரியாணி சாப்பிடப்போகும் முன்பு இருமுறை செய்த சுய இன்பம் அவனை அவள் என்ன செய்தாலும் இன்னும் ஒருமணிநேரத்திற்கு வரவிடாது. விபச்சாரிகளுடனான பழக்கம் அவனை அப்படிச் செய்யப் பழக்கியிருந்தது, அவளுக்கு ஆச்சர்யம். அரை மணி நேரத்தில் மூன்று முறை வந்துவிட்டதாகச் சொல்லி, உனக்கு இன்னமும் வரலையே எதுவும் மாத்திரை போட்டிருக்கிறாயா என்று அவள் கேட்டது நன்மொழித்தேவனுக்கு அவன் செய்த கோட்டித்தனத்தை அவள் உணராததை வெளிப்படுத்தியது. ஆனால் சட்டென்று அவன் எதிர்பாராத கணத்தில் அவள் நிரோத் விலக்கி அவள் வாய்க்குள் விட்டது, அதுவரை அப்படிச் செய்து பழக்கமில்லாததால் உடனே உச்சமடைந்து அவள் வாயிலேயே வந்தது. அவள் சிரித்தாள், இதுக்கே இப்படின்னா அப்ப டீப் த்ரோட் செய்தாள் என்ன ஆவாய் என்றாள். பின்னர் அரைமணிநேரத்தில் அவள் வாயால் மீண்டும் எழுப்பி மற்றதால் அடக்கி அவள் நன்மொழித்தேவனுடன் விளையாண்ட விளையாட்டு அவனை மூன்று நாள் ஜூரத்தில் தூக்கிப் போட்டது.

இடைப்பட்ட நேரத்தில் அவள் சென்று மீண்டும் அந்த ஓவியங்களைப் பார்த்தது ரசித்தது புரிந்து கொள்ள முயற்சித்தது எல்லாம், அவள் மழுப்புவதற்காகவே நேரத்தைக் கடத்துவதற்காகவோ செய்ததல்ல என்பதை உணர்த்தியது. அவளிடம் பணத்தை எடுத்துக் கொடுத்தது, “Forgive me for doing this” என்று சொல்லி அவள் பணத்தை எண்ணியது என அவள் மற்றவர்களைப் போலில்லை என்பதை மீண்டும் மீண்டும் உணர்த்தியது. அதை மீறியும் அவளிடம் மற்றவர்களைப் போன்ற செய்கைகள் இல்லாமல் இல்லை, அவள் பைகளில் இருந்த சிகரெட்டை என் வருதல்களுக்குப் பிறகு ஊதித்தள்ளினாள் ஒரே வித்தியாசத்துடன் “Hope you dont mind”. “You want a surprise" என்று சொல்லி அவளுடைய ஐடி கார்டைக் காட்டினாள். “I know you were not believing me" அழகாய்ச் சிரித்தாள். உடனே எல்லா விபச்சாரிகளிடமும் போடும் பிட்டை நன்மொழித்தேவன் அவளிடம் போட்டான் “நான் ஒரு எழுத்தாளன், எனக்கு இது போன்ற விஷயங்களில் ஈடுபடும் ஆட்களைப் பற்றி எழுதணும். நீ உதவ முடியுமா” என்று. அவள் அவனை கொஞ்ச நேரம் தீர்க்கமாய்ப் பார்த்தாள், பின்னர், “I believe that you are not bluffing.” என்று சொல்லிச் சிரித்தவள் “I will introduce you to one of my friend. That will suite your requirement”. சொன்னவள் ஜீரோ-ஜி பப்-ல் தொடர்ச்சியான ஒரு நாளில் ராமை அறிமுகப்படுத்தினாள், ராம் ஒரு ஜிக்லோ - ஆண் விபச்சாரன்.

புதன்கிழமைகளில் பெண்களுடன் வந்தால் மட்டும் அனுமதிக்கும் ஜீரோ-ஜியில் நன்மொழித்தேவன் அவளுடன் சென்றேன், ராமிற்கு அங்கே அப்படியொரு ரெஸ்ட்ரிக்‌ஷன் கிடையாதாம். பப் முழுவதும் இசை வழிந்தோடிக்கொண்டிருந்தது ஜோடிகளின் கண்களில் தெரியும் காமவெறி அங்கே வழிந்து கொண்டிருந்திருந்த மதுவுடன் சேர்ந்து நிரம்பி வழிந்துகொண்டிருந்தது. ராம் ஒரு அழகன். அப்படியிருந்துவிடக்கூடாதே என்று நினைத்தபடியே நன்மொழித்தேவன் உங்கள் முழுப்பெயர் என்று கேட்க, சிரித்தபடி ராமச்சந்திரமூர்த்தி என்றான். அவனிடம் தன் இலக்கிய வாழ்க்கை ஒரு தொடக்கம் இல்லாமல் இருப்பதையும் அவன் கதை மூலமாகவே இலக்கிய உலகில் அடியெடுத்து வைக்க நினைத்திருப்பதாயும் அதுவரை அடித்திருந்த இரண்டு மக் பியரில் உளரத் தொடங்கினான். “நன்மொழித்தேவ நான் என் கதையை மட்டுமே சொல்லமுடியும் அதுவும் உனக்காக இல்லை, உன்னிடம் எதையோ கண்டு மயங்கியிருக்கும் இவளுக்காக ஆனால் இலக்கியம் என்னிடம் இல்லை” என்றான். அவசரமாய் அவளுக்கு அவளுடைய மாமா ஃபோன் செய்து, மசாஜ் செய்ய அவளை ஜேசி ரோட் அனுப்ப, ராம் தன் கதை சொல்லத் தொடங்கினான். கதைகளில் வரும் மாய உலகமாய் ஜீரோ-ஜி அன்றிரவு நீள்வதாய்ப்பட்டது எனக்கு.

ராம் திருச்சி ராம்ஜி நகரைச் சேர்ந்தவன், அவங்க அப்பா ஒரு இந்து அம்மா முஸ்லீம் காதல் திருமணம். பிறன்மலைக் கள்ளருங்க, அவங்க அப்பா டெல்லி பக்கம் ஒரு முறை திருடப்போனப் பொழுது அடிவாங்கியே செத்துப்போனவர். உடம்புக் கூட கிடைக்கலை அவங்க அம்மா ராம் அப்பாவின் தம்பியையே மணந்து கொண்டாள். ராம்ஜி நகரின் நினைவிருக்கக்கூடாதென அவர்கள் எழில் நகரில் குடியேறினார்கள். ராம் பாண்டிச்சேரியில் இருந்து சரக்கு கடத்துவதை அவன் பத்தாவது படித்துக் கொண்டிருக்கும் பொழுது அவன் எதிர்வீட்டில் இருக்கும் ஒருவன் சொல்லியே தெரிந்துகொண்டான். தொடர்ந்த சனி ஞாயிறுகளில் அவனுக்கு இது ஒரு தொழிலானது, அவனுடைய வயது அவனது அம்மாவிடம் இருந்து பெற்ற நிறம் என அவன் மீது யாரும் சந்தேகப்படாமலேயே இருந்தனர். அவனுடைய ஸ்கூல் பேக்கில் வைத்து சாராயம் கடத்தி ஒரு முறை காரைக்காலில் வைத்து அவனைப் போலீஸ் பிடித்த பொழுது அவனுக்கு பிடிபட்டால் என்ன நடக்கும் என்பதைப்பற்றிய எந்த அறிவும் அவனுக்கு இல்லை.

ராம், “ஒரு இரவு உன் வாழ்க்கையை மாற்றிவிடும்னு சொன்னா நம்புவியா, நன்மொழித்தேவ, அந்த இரவு என் வாழ்க்கையை மாற்றிப்போட்டது” என்று சொல்லிச் சிரித்தான்.

உடலுறவென்பது எத்தனை அசிங்கமானது என்று ராம் அப்பொழுதுதான் கற்றுக்கொண்டான், முதல் இரண்டு நாள் அவனை வைத்திருந்த பொம்பள சப்-இன்ஸ்பெக்டர், பின்னர் அவளுடைய ப்ரெண்ட் ஒருத்தி ஒரு இன்ஸ்பெக்டர் இரண்டு கான்ஸ்டபிள் என்று அத்தனையையும் ஒரு வாரத்திலேயே பார்த்திருந்தான். எல்லாம் முடிந்ததும் அந்த சப்-இன்ஸ்பெக்டரின் ப்ரண்ட் அவன் கையில் கொடுத்தனுப்பிய பத்தாயிரத்தில் இருந்து தான் எல்லாம் தொடங்கியது. அவன் மாதம் முழுவதும் பாண்டிச்சேரியில் இருந்து திருடி வந்து கொடுத்தாலும் அத்தனைப் பணம் கிடைக்காதென்பது அவனுக்கு அப்பொழுது முக்கியமாகக் கற்றுக் கொண்டது.

Read More

Share Tweet Pin It +1

2 Comments

In புத்தகங்கள் பெங்களூர்

பெங்களூர் புத்தகக் கண்காட்சியை புறக்கணித்த பதிப்பகங்கள்

தொடர்ச்சியாய் இது மூன்றாவது வருடம் நான் பெங்களூர் புத்தகக் கண்காட்சிக்கு போவது, ஆனால் இந்த முறை ஒரு வித்தியாசம். நான் விரும்பி புத்தகம் வாங்கும் பதிப்பகங்கள் இந்தக் கண்காட்சிக்கு வரவில்லை. குறிப்பாய் உயிர்மை, கிழக்கு மேலும் கண்ணதாசன், நர்மதா, அல்லயன்ஸ், கலைஞன் இப்படி நிறைய வந்த பதிப்பங்களை சுலபமாகச் சொல்லிவிடலாம்.

வழமை போல் காலச்சுவடு, விகடன், திருமகள், வானதி, நாதம் கீதம், NCBH, பிறகு மேலும் ஒரு தமிழ்ப் பதிப்பகம். அவ்வளவு தான் தமிழில் மொத்தமே. NCBH சில கிழக்கு புத்தகங்கள் வைத்திருந்தார்கள் அத்தனையும் பழசு. மொத்தமே ஐந்து பத்து எண்களுக்குள் தான் இருக்கும். மற்றவர்கள் வராததற்கு காரணமாக கடந்த முறை விற்பனை மோசமாக இருந்ததைக் குறிப்பிட்டார்கள்.

நான் காலச்சுவட்டில் மட்டும் புத்தகங்களை தட்டிக் கொண்டுவிட்டு கொஞ்சம் புகைப்படம் எடுத்துவிட்டு நகர்ந்துவிட்டேன். நான் காலச்சுவட்டில் வாங்கிய புத்தகங்களை புத்தகப் பையில் அடுக்கிக் கொண்டிருந்த பொழுது, துப்பறியும் சாம்பு புத்தகம் கேட்டு காலச்சுவட்டில் வந்து நின்ற பெரியவர் வருத்தத்துடன் நகர்ந்தார். சுஜாதாவின் புத்தகங்கள் வாங்கவும் மக்கள் அலைந்தது தெரிந்தது. நான் 2004 டெல்லி புத்தகக் கண்காட்சியில் காலச்சுவட்டிடம் சுஜாதா, பாலகுமாரன் புத்தகமெல்லாம் எடுக்காம ஏன் சார் வர்றீங்க என்று கேட்ட நினைவு நிழலாடியது. நான்கு வருடங்களில் என்னிடம் தான் எத்தனை மாற்றம் என்று நினைத்தவாறு புத்தகங்களை மூட்டைக் கட்டிக் கொண்டு வந்து சேர்ந்தேன்.

மொத்தத்தில் பெங்களூர் புத்தகக் கண்காட்சியை இந்த முறை பதிப்பகங்கள் புறக்கணித்துவிட்டன என்றே சொல்லலாம் என்று நினைக்கிறேன்.

வாங்கிய புத்தகங்கள்

ஆத்மாநாம் படைப்புகள்
புனலும் மணலும்
ஜி. நாகராஜன் ஆக்கங்கள்
நினைவுப் பாதை - நகுலன்
சுந்தர ராமசாமியின் கவிதைக் கலை - ராஜமார்த்தாண்டன்
ஜி. நாகராஜன் - சுந்தராமசாமி நினைவோடை
தி. ஜானகிராமன் - சுந்தரராமசாமி நினைவோடை
சி.சு. செல்லப்பா - சுந்தரராமசாமி நினைவோடை
க.நா.சு - சுந்தரராமசாமி நினைவோடை
சொல்லில் அடங்காத வாழ்க்கை - காலச்சுவடு சிறுகதைகள்
நடந்தாய்; வாழி, காவேரி! சிட்டி - தி. ஜானகிராமன்
தோட்டியின் மகன் - தகழி சிவசங்கரப் பிள்ளை - தமிழில் சுந்தர ராமசாமி
செம்மீன் - தகழி சிவசங்கரப் பிள்ளை - தமிழில் சுந்தர ராமசாமி
தூர்வை - சோ. தர்மன்
நிழல் முற்றம் - பெருமாள் முருகன்

சில புகைப்படங்கள்








Read More

Share Tweet Pin It +1

2 Comments

In Only ஜல்லிஸ் சினிமா புகைப்படம் பெங்களூர்

பெங்களூர் தேர்தல் சீதோஷணநிலை மரங்கள் IPL Chennai Super Kings திரைப்படங்கள் புகைப்படம் கொல்லிமலை

தேர்தலுக்கான அறிகுறியே இல்லாமல் பெங்களூரில் தேர்தல் நடந்து முடிந்துவிட்டது, No Poster, No பொதுக்கூட்டம்(பெங்களூருக்குள்?!), No Sound, No disturbance. கூட வேலை செய்யும் மக்கள் பொதுவாக அரசியல் பேசுவதில்லை, நானாய்ப் போயும் பேசுவதில்லை. கௌடா குடும்பத்தின் மீது கோபமாகயிருக்கிறார்கள் அது மட்டும் தெரிகிறது. என் கம்பெனியில் என் ப்ரொஜக்டில் 10 ல் 8 பேர் ஓட்டுப் போட்டிருந்தார்கள். சும்மானாச்சுக்கும் "IT Professional's" ஓட்டு போடமாட்டாங்கன்னு சொல்றது வெறும் புரளி.

10, 15 வருடங்களுக்கு முன்பிருந்த பெங்களூர் என்பது இப்பொழுது இல்லை என்ற சொல்லாடல் இப்பொழுது பெரும் க்ளிஷே ஆகிவிட்டது. வெயிலின் தாக்கத்தில் எல்லோரும் இதைப் புலம்புவதைப் பார்த்திருக்கிறேன். நான் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த பொழுது ஒருமுறை வந்திருக்கிறேன், நிச்சயம் பெங்களூரின் சீதோஷணநிலை மாறிவிட்டதுதான். சின்னம்மை இங்கே கொஞ்சம் போட ஆரம்பித்திருக்கிறது, இளநீர் சாப்பிடவேண்டிய கட்டாயம் இங்கேயும் இருக்கிறது.

முன்னமே எழுதணும் என்று நினைத்திருந்தேன், பெங்களூரில் சாலையோரத்தில், சாலை நடுவில் இருந்த மரங்களை எல்லாம் வெட்டியாகிவிட்டது. மடிவாலாவில் இருந்து ஆலமரம் அடியோடு களையப்பட்டது. அதைப் போலவே இந்திராநகர் CMH சாலையில் இருந்த மரங்களும். மொட்டையாக ரோடுகள் பெங்களூரின் தனித்தன்மை இல்லாமல் போனது போல் இருக்கிறது. மடிவாலாவை நான் அத்தனை உபயோகிப்பதில்லை என்பதால் அதுபற்றி தெரியாவிட்டாலும், இந்திராநகர் CMH சாலை தன் தனித்தன்மையை இழந்துவிட்டதை நிச்சயம் உணர்கிறேன்.

IPL பார்ப்பதில்லை என்ற முடிவில் இருந்தேன் இப்பொழுது சற்று மாற்றிக் கொண்டிருக்கிறேன், ஷேன் வார்னேவை ஆஸ்திரேலிய காப்டனாக ஆக்காதது என்னை வருத்தப்படுத்தியதுண்டு. ஆனால் பான்டிங் சில மாதத்தில் எல்லாம் காப்டனுக்கான முழுத்தகுதியும் உண்டென்று நிரூபித்துக் கொண்டவர். இப்பொழுது ராஜஸ்தான் ராயல் அணிக்காக தலைமைப் பொறுப்பில் ஷேன் வார்ன் பிரம்மாதப்படுத்தும் பொழுது சந்தோஷமாகயிருக்கிறது.

ஹைடனுக்காகவும் ஹஸ்ஸிக்காவும் சப்போர்ட் செய்யத் தொடங்கி இப்பொழுது அவர்கள் இருவரும் இல்லாத பொழுதும் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியை சப்போர்ட் செய்யத் தொடங்கியிருக்கிறேன். IPLல் மட்டமான பௌலிங் அட்டாக் சென்னை சூப்பர் கிங்க்ஸ் உடையது தான் என்று நினைக்கிறேன். ஸ்பெஷலிஸ்ட் பாஸ்ட் பௌலர் இல்லாத அணியாக சென்னை சூப்பர் கிங்க்ஸ் இருக்கிறது. (மகாய'ன்' கடைசி மாட்சில் ஹார்ட்ரிக் எடுப்பதற்கு முன் எழுதியது.)

"Then she found me" என்றொரு நகைச்சுவை - சென்ட்டி படம் பார்த்தேன். Adoption பற்றிய சீரியஸ் கதைக்கருவைக் கொண்டிருந்தாலும் மெல்லிய நகைச்சுவையுணர்வோடு, புன்னகையுடனே படம் முழுவதும் பார்க்க வைத்திருக்கிறார்கள். Adoption எடுப்பதற்கு எத்தனை பெரிய மனது வேண்டும் என்பது எனக்கு தனிப்பட்ட முறையில் தெரியும் என்ற காரணத்தால், படத்தில் அந்தப் பெண் Adoption எடுப்பதை மறுக்கும் ஒவ்வொரு முறையும் அதைப் புரிந்து கொள்ள முடிகிறது.

"Scent of a Woman" படம் பார்த்தேன், Al Pacino பற்றி என்ன சொல்ல, தேர்ந்த நடிகன் என்பதை இன்னொரு முறை மெய்ப்பித்திருக்கிறார். இந்தப் படத்தில் Charlesற்கு வரும் பிரச்சனை போலவே எனக்கும் ஒரு பிரச்சனை கல்லூரிக் காலத்தில் வந்தது, கடைசியில் நானும் அவரை(Charles) மாதிரியே சொல்லாமல் விட்டதால்(நம்புக்கப்பா!) கடைசியில் பிரச்சனை செய்த மாணவர்கள் நான் தான் செய்ததாக ஒரு 'கதை' சொல்ல, ஏற்கனவே இருந்த என் Image நான் செய்திருக்க முடியும் என்று அவர்களை நம்பவைக்க, Apology லெட்டர் கொடுத்திருந்தேன். அது சட்டென்று நினைவில் வந்தது. இந்தப் படம் பார்த்ததும். கொடுமை என்னன்னா அந்தப் பிரச்சனையைச் செய்தது ஒரு Pasterன் மகன் என்பதால் மறுபேச்சே இல்லாமல் அவன் சொன்னதை நம்பினார்கள் :(. Personality does matters என்பது அந்தப் பிரச்சனையில் பொழுது தெரிய வந்தது. அதன் காரணமாக என் உருவத்தை/செயல்களை/எழுத்தை வைத்து என்னை தவறாக மதிப்பிடுபவர்களை நான் பிற்காலங்களில் எதிரியாக பார்க்காமல் இருப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. ஏனென்றால் இயல்பில் எங்க பிரின்ஸி ரொம்ப நல்லவர். :)

இம்சை அரசியின் கல்யாணத்தை ஒட்டி, திட்டமிட்டு கொல்லிமலைக்குச் சென்றிருந்தோம். வழமையான நண்பர்களுடன் புதிதாகச் சில நண்பர்களையும் சந்தித்திருந்தேன், மகிழ்ச்சியான பயண அனுபவம். 'இருள்வ மௌத்திகம்' புத்தகம் எப்படியோ(!?) என் பையில் வந்திருக்க அதைப் பார்த்த நண்பர்களிடம் ஒரு 'பெட்' கட்டியிருந்தேன். அதில் இருக்கும் ஒரு பக்கத்தை படித்து பின்னர் விளக்கம் சொன்னால் 1000 ரூபாய் தருவதாக, ஒரு லட்ச ரூபாய் தருவதாகக் கூட பெட் கட்டியிருக்கலாம். ஆனால் ஒரு இயல்புணர்ச்சியை வரவைப்பதற்காக 1000 ரூபாய்க்கான பெட் கட்டினேன். :) படித்துவிட்டு தலைசுற்றி கீழே விழாதது ஒன்று தான் குறை. கொல்லிமலையில் முக்கிய அருவிக்கு செல்வதற்கான நேரம் கழித்துச் சென்றதால் பக்கத்தில் இருந்த குட்டி அருவிக்குச் சென்று புகைப்படங்கள் எடுத்துக் கொண்டு அப்படியே சின்னதாய் ஒரு குளியல் போட்டுவிட்டு வந்தோம்.

கொல்லி மலை அருவியில் நான் எடுத்த ஒரு புகைப்படம்.

Falls

Read More

Share Tweet Pin It +1

3 Comments

In Only ஜல்லிஸ் சுய சொறிதல் புத்தகங்கள் பெங்களூர்

பெங்களூர் புத்தக கண்காட்சி - அள்ள அள்ளப் பணம் - ஜல்லி

நான் எழுதும் பதிவுகளை என்னைத்தவிர யாரும் ரொம்ப சீரியஸா எல்லாத்தையும் படிப்பாங்களான்னு எனக்கு எப்பவுமே ஒரு டவுட் உண்டு; ஏன்னா நான் அப்படி படிக்கும் பதிவுகளின் எண்ணிக்கையை வைத்தும். என் ஸ்டாட்டிஸ்டிக்ஸ் கவுன்டர் சொல்லும் உண்மைகளை வைத்தும் தான்.

"...பின்னர் சிவக்குமாரிடம் நீங்கள் பங்குவணிகத்தில் ஈடுபடுகிறீர்களா என்று கேட்டு பின்னர் அதைப் பற்றி வெகுநேரம் பேசிக்கொண்டிருந்தோம். முகுந்த் நான் பங்குச்சந்தைப் பற்றி தெரிந்துகொள்ள சோம. வள்ளியப்பனின் "அள்ள அள்ளப் பணம்" நன்றாகயிருக்கும் என்றார். தான் முதலில் கொஞ்ச காலம் நேரடி பங்கு வர்த்தகத்தில் இருந்தாலும் இப்பொழுதெல்லாம் மியூட்சுவல் பண்ட் தான் என்று சொல்லி கொஞ்சம் பயப்படவைத்தார். நான் பருப்பு மாதிரி வாழ்க்கையில் எப்பவும் தான் ரிஸ்க் எடுத்துக் கொண்டேயிருக்கிறோமே இதிலும் எடுப்போம் என்று கூறினேன். மா. சிவக்குமார் தன்னுடைய பாயாசத்தை என்னிடம் கொடுத்ததற்கு என்னுடைய ரம்பம் தான் காரணம் என்று நான் நினைக்கவில்லை..."

என்று கோவை வலைபதிவர் சந்திப்பின் பின் எழுதி நான்கு மாதம் இருக்கும் என்று நினைக்கிறேன்.

அள்ள அள்ளப் பணத்தை கைகளில் பார்க்க இத்தனை நாட்கள் ஆனதற்கு நானொருவனே தனிப்பட்டமுறையில் காரணமாகயிருக்கமுடியும். பிறகு இரண்டு மாதங்களுக்கு முன்னர் சட்டென்று சனியனாய் முளைத்த இன்னொரு பிரச்சனை. பிரச்சனைகள் முடிந்து ஆராம்சேயாய் உட்கார்ந்த நேரம் பங்குச்சந்தை மீண்டும் இன்னொரு உச்சத்தை எட்டியிருந்தத்து 19,000 BSE.

என் கியூபிக்கில் அமர்ந்திருக்கும் மற்ற இரு நபர்களுமே பங்குச்சந்தையில் கொட்டை போட்டவர்கள் என்று சொல்லலாம் - ஒரு நபர் ஏறக்குறைய 5 லட்சங்களுக்கு இன்வெஸ்ட் செய்துவிட்டு எப்பொழுதும் ICICI Directன் பக்கத்தை திறந்து உட்கார்ந்திருப்பார்(10.30 - 3.30) பின்னர் அன்றைய நாளுக்கான Analysis நடக்கும் 3.30க்குப் பின்னர். இப்படி நாளொன்றுக்கு சரியான அளவிளான நேரத்தை பங்குவணிகத்தில் செலவிட்டால் மாதம் பிறந்தால் சம்பளம் தந்து தனக்கு மூன்றுவேளை சோறுபோடும் தன் முதலாளிக்காவது நேர்மையாக இருக்கிறாரார்களா என்று கொஞ்சம் சுயநேர்மையைக் கேள்வி கேட்கும் புண்ணியவான்களுக்கு(!!!) பதில் என்னிடம் இல்லை வேண்டுமானால் உண்மையில் எங்கள் முதலாளியிடம் இருக்கலாம். ஆனால் எங்கள் வேலையில் மீது திருப்தி இல்லாவிட்டால் மாதாமாதம் சம்பளமும் கொடுத்து வருடக்கடைசியில் போனஸும்/அப்ரைசலும் கொடுப்பது உண்மையிலேயே ஆச்சர்யமான விஷயம் தான். ஒருவேளை 'கோடி'களில் புலங்குபவர்கள் முட்டாள்களாக இருப்பார்களோ! ம்ம்ம் இருக்கலாம் ஏனென்றால் அவர்கள் பதிவெழுதுவதில்லையே!

அப்படிப்பட்ட ஒரு நல்லநாளில் தான் நானும் ICICIல் Demat அக்கவுன்ட்டும் ட்ரேடிங் அக்கவுன்ட்டும் தேவைகளுக்காக ஒரு சேவிங் அக்கவுன்ட்டும்(Shaving இல்லை saving) திறந்தேன். அதற்கு நாட்கள் அதிகமானதாலும் மார்க்கெட் இன்வெஸ்ட் செய்யும் நிலையில் இருந்ததாலும் நண்பருக்கு 10,000 ரூபாய் அனுப்பி ஷேர் வாங்கச் சொல்லி என்னுடைய ட்ரேடிங் வாழ்க்கையைத் தொடங்கினேன். உண்மையில் ரிஸ்க் எடுப்பதில் எனக்கிருக்கும் இயல்பான விருப்பம் தான் என்னை இதில் இறங்கச் சொன்னாலும் சோம. வள்ளியப்பனின் அள்ள அள்ளப் பணம் I & II அதற்கான தைரியத்தை எனக்குக் கொடுத்தது என்று சொல்லலாம்.

உண்மையில் நான் என்ன விஷயத்தை தெரிந்து கொள்ள வேண்டும் என்று விரும்பினேனோ அதைத் தெளிவாக விளக்கியது அள்ள அள்ளப் பணம் புத்தகம். ஏற்கனவே ஆங்கிலத்தில் கட்டுரைகளாகவும் நண்பர்களுடன் இந்தி/ஆங்கிலத்தில் உரையாடல்களாகவும் என் கேள்விகளைத் தொடர்ந்து எழுப்பியிருந்தேன் என்பதால் என்னுடைய தேடல் எது என்று எனக்குச் சரியாகத் தெரிந்திருந்தது ஆனால் இப்படி புதிதாய் ஷேர் மார்கெட்டில் இன்வெஸ்ட் செய்யப்போகும் ஒருவர் எதிர்பார்ப்பது என்ன என்பது தெரிந்து எழுதப்பட்டிருப்பது அதிசயம் என்று தான் சொல்வேன் நான்.

ஓவராய் தியரியாகச் சொல்லி போரடிக்காமல் அதே சமயம் வெறும் ப்ராக்டிக்கல் அப்ரோச்சாகவும் இல்லாமல் இரண்டும் கலந்து எழுதப்பட்டிருப்பது இந்தப் புத்தகத்தின் வெற்றியின் முக்கிய காரணம். கூட வேலை செய்யும் டிரேடிங் புலிகளிடம் இப்படி ஒரு விஷயம் செய்யத் துணிந்திருக்கிறேன் என்று சொன்னதும் அப்படி ஒன்றும் ஆதரவு அலைகள் எதுவும் எழவில்லைதான். சொல்லப்போனால் மிரட்டியவர்கள் தான் அதிகம் - அதிலும் இன்வெஸ்ட் செய்யும் நண்பர்களே கூட! ஆச்சர்யமாயிருக்கிறதா - எனக்கு இல்லை.

சரிதான் என்று நினைத்தவனாய் நண்பர் ஒருவரின் ஆலோசனையின் படி Reliance Energy ஒரு ஷேர் 1475 க்கு என்று 10,000 ரூபாய்க்கு 6 ஷேர் வாங்கிப் போட்டேன் வெள்ளிக்கிழமை(19/10/2007). சாயங்காலம் 1350ல் நின்றுகொண்டிருந்தது. சோம.வள்ளியப்பன் புத்தகத்தில் சொல்லியிருப்பது போல் இரவு - பகல் லாஜிக் என்று நினைத்து நான் ஒன்றும் பெரிசாய் கவலைப்படவில்லை. என் மனதில் ஒரு கணக்கு இருந்தது 20% அதிகம் அவ்வளவே. அது இரண்டு நாளில் கிடைத்தாலும் சரி - ஒரு வருடத்தில் கிடைத்தாலும் சரி என்று. மார்கெட், நண்பர் சொன்னது போலவே அடுத்த ட்ரேடிங் நாள் முன்னோக்கி நகர நான் காத்திருந்தேன் அடுத்த செவ்வாய் கழிந்து புதன்(24/10/2007) வரை என் கணக்கு 20% க்கு மேல் வந்த நிலையில் 1670 ரூபாய்க்கு சட்டென்று அவரிடம் விற்கச் சொல்லிவிட்டேன். மூன்று நாட்களில் 20% லாபம் சொல்லப்போனால் 2000 ரூபாய். இதை இங்கே சொல்ல வந்ததன் காரணம் என்னவாய் இருக்கும் என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்.

என் மாமா என்னிடம் ஷேர் மார்கெட்டைப் பற்றி படித்துக் கொண்டு விசாரித்துக் கொண்டோ இரு என்று சொன்ன பொழுது என் வயது 16 - 17 இருக்கும். நான் உண்மையில் பார்க்க ஆரம்பிக்கும் பொழுது வயது 24 சொல்லப்போனால் 7 ஆண்டுகள் அவர் சொன்னதைக் கேட்கவில்லை. ஆனால் என்னுடைய பைனான்சியல் பொஸிஷன் அப்படி என்று வைத்துக் கொண்டாலும் பைனான்ஸியலி நான் ஸ்ட்ராங்கான கடைசி மூன்று வருடங்களில் கூட நான் அதைச் செய்யவில்லை. இப்பொழுது தான் செய்யத் தொடங்கியிருக்கிறேன். இன்று நான் லாபம் சம்பாதித்ததைப் பற்றி பெருமை பேச இதைச் சொல்லவில்லை, பணம் தூங்கிக் கொண்டிருக்கும் நபர்களுக்கு ஒரு ஆலோசனையாய் டிரேடிங்க் செய்யச் சொல்லவும் இதை எழுதவில்லை. எனக்குத் தெரிந்து அள்ள அள்ளப் பணம் புத்தகத்தை வாங்கி ஒரு முறை புரட்டிப் பாருங்கள் அவ்வளவே.

ஏன் என்றால் ட்ரேடிங்க் செய்வதென்பது பணத்துடன் சம்மந்தப்பட்டது இன்னமும் பணத்தை லக்ஷ்மிகரமான விஷயமாக நினைத்து வேடிக்கைக்கான ஒன்றாக விளையாட்டாக பயன்படுத்த நிறைய பேருக்கு பயம் இருக்கும். என் அப்பாவிடம் இதைப்பற்றிச் சொன்னால் ஒரு மணி நேரம் வேறெதாவது விஷயத்தைச் சுத்திச் சுத்தி பேசி கடைசி ஐந்தாவது நிமிடத்தில் இங்கே வந்து நின்று கேட்பார் இது தேவையா என்று! ஆனால் நான் சொல்வதெல்லாம் ஒருமுறை படித்துப் பாருங்கள் என்பதுதான்.

----------------------------------

இந்த வருடம் பெங்களூர் புத்தகக் கண்காட்சியைப் பற்றிய பெரிய அளவிலான பதிவுகள் வெளிவரவில்லை காரணம் தெரியாது; பத்ரி ப்ராங்க்போர்ட் சென்றிருந்தது காக்காய் உட்கார பனம்பழம் விழுந்த கதையாகவே நினைக்கிறேன். மனுஷ்யபுத்திரனும் வரலை(நினைக்கிறேன் - கடைசி நாள் வந்தாரா தெரியாது). நான் புத்தகங்களை அள்ளிக்கொண்டு வரவே நேரம் போதலை! மழை கொட்டியதால் ரிஸ்க் எடுக்க விருப்பமில்லாமல் காமெரா கொண்டு போகவில்லை. ஆனால் நிறைய நல்ல படங்களை மிஸ் செய்தேன். ராம் எனக்கு காலையில் ஃபோன் செய்து என்னை அழைத்துக் கொள்வதாகச் சொல்லிவிட்டு சொல்லாமல் கொள்ளாமல் போய்வந்துவிட்டார்(சொல்லப்போனால் நான் தான் அவரை மிஸ் பண்ணிட்டேன்னு சொல்லணும் - சனிக்கிழமை காலை தூக்கம் வராததால் காலையிலேயே கிளம்பி புத்தகக் கண்காட்சிக்குப் போய்ட்டு வந்துட்டேன்). நான் சாட்டிங்கில் அன்றிரவு, என்னை அழைத்துச் செல்லாததற்காக நல்லப்புள்ளை போல் திட்டினேன் வாங்கிக் கொண்டார்.

வழக்கம் போல் காலச்சுவடு - உயிர்மை - கிழக்கு தான் என் நோக்கமாகயிருந்தது. மூன்றிலும் இந்த முறை கொஞ்சம் அதிக புத்தகம் அள்ளினேன் என்று நினைக்கிறேன். ஆனால் வாரநாட்களில் மழை பெய்ததால் இரண்டாம் நாள் சனிக்கிழமையும் ஒன்பதாம் நாள் சனிக்கிழமை மட்டுமே புத்தக் கண்காட்சிக்கு சென்றிருந்தேன். கிழக்கில் ரெகுலர் கஸ்டமர்னு சொல்லி 15% டிஸ்கவுண்ட் கொடுத்ததை இங்கே குறிப்பிட வேண்டும் என்னை மீண்டும் நினைவில் வைத்திருந்தவரின் பெயர் நினைவில் இல்லை; போன தடவை பெங்களூர் புத்தகச் சந்தைக்கு வந்திருந்தீங்க இல்லையா என்று கேட்டார்! என்னை சென்னை புத்தக சந்தையிலும் அவர் பார்த்திருக்க வாய்ப்புண்டு. போன தடவை போல் பிரச்சனை வரக்கூடாது என்று நினைத்தோ என்னமோ இந்த முறை கிழக்கே கிரடிட் கார்ட் ட்ரான்ஷாக்ஷன் செய்யும் வசதியுடன் வந்திருந்தார்கள். ஆனால் நான் பொய் ஒன்றும் சொல்லவில்லை என்னுடன் வந்திருந்த நண்பர் ஒருவரிடம் இந்த முறையும் அதே கி.மு - கி.பி மதன் புத்தகத்தைக் காண்பித்து அருமையான புத்தகம் சார் வாங்கிக்கோங்க என்று மற்றொரு விற்பனைப் பிரெதிநிதி சொன்னார். மதன் எதுவும் காசுகொடுத்து ஆள் செட்டப் பண்ணியிருக்காரா கிழக்கில் தெரியாது!

ஜெயமோகனின் காடு, விஷ்ணுபுரம், பின்தொடரும் நிழலின் குரல் ஏற்கனவே Anyindian.comன் ஷாப்பிங்க் கார்ட்டில் தூங்கிக் கொண்டிருந்தது. சரி இந்த முறை புத்தகக் கண்காட்சியில் ஆட்டையைப்(காசு கொடுத்துத்தாம்ப்பே) போட்டுடலாம்னு நினைச்சேன் ஆனால் ஜெமோவை யாருமே எடுத்துவரலை(சில புத்தகங்கள் உயிர்மையில் இருந்ததுன்னு நினைக்கிறேன் - அங்கே தான் நினைவின் நதியில் வாங்கினேன்). வேறென்ன செய்ய ஷாப்பிங் கார்ட் காலியாய்டுச்சு இப்ப ;-). காலச்சுவடில் பிரமீள் நினைவோடை - சுந்தர ராமசாமி வாங்கினேன், ஒரே இரவில் அதுவும், நினைவின் நதியில் - ஜெயமோகனும் தொடர்ச்சியாகப் படித்தேன் கொடுத்து வைச்சிருக்கணும் நான்; இப்படி ஒரு காம்பினேஷன் கெடச்சதுக்கு. விமர்சனம் வருது வருது.

பிறகு பெண்ணிய ஜல்லி விமர்சனம் செய்வதற்காக - இந்துமதி - லக்ஷ்மியினுடைய சில புத்தகங்களை எடுத்து வைத்துக் கொண்டேன்(அதுவும் காசுகொடுத்துத்தான்).

என்னுடன் வேலைசெய்யும் நண்பர் ஒருவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் நீயும் என்கூட வாயேன் கொஞ்சம் புஸ்தகம் வாங்கிட்டு வரலாம் என்று சொல்லிக்கொண்டேயிருந்தார் முதல் வாரத்தில் இருந்து முதல் வாரம் எஸ்கேப் ஆகியிருந்தேன். அடுத்தவாரம் மாட்டிக்கொண்டேன்(ஹாஹா) அவர் மனைவி மற்றும் மாமியார் உடன் புஸ்தகம் வாங்க வந்திருந்தார் - ஜாவாவில் Head First Java வாங்கிக்கச் சொல்லிவிட்டு தமிழில் தாயுமானவன் - பாலகுமாரன் மட்டும் சஜஸ்ட் பண்ணினேன்.(பாலகுமாரனின் பயணிகள் கவனிக்கவும் பற்றி ஒரு பதிவு வருது வருது வருது). அவர் விகடனில் நுழைந்து 'இவன் தான் பாலா' வாங்கினார் அங்கே அவரைத் திட்டினேன் அதை வாங்குவதற்காக. நான் வாலியின் கிருஷ்ண விஜயம் 1 & 2 வாங்கினேன்(வெறும் மணியம் செல்வம் ஓவியத்திற்காக).

நான் வாங்கிக் குமிப்பதைப் பார்த்த நண்பரின் மாமியார் "தம்பிக்கு இன்னும் கல்யாணம் ஆகலை போலிருக்கே" என்று கேட்டார் எனக்கு முதலில் உள்குத்து புரியலை. நானும் எப்பவும் சொல்றதைப் போல், "இல்லம்மா எனக்கு இன்னும் கல்யாண வயசாகலை, 24 தான் ரன்னிங்..." பாவமேன்னு சொன்னேன். அப்புறம் அந்தப்பக்கமா திரும்பி அவங்க பொண்ணுக்கிட்ட "பொண்டாட்டி வந்து தான் இதையெல்லாம் திருத்தணும்னு" சொல்ல எனக்கு குபீரென்று சிரிப்பு வந்தது. ஆனால் இதெல்லாம் நடந்த உண்மை பதிவு செய்து வைக்கிறேன்(ஹாஹா).

பின்னர் மழை கொட்டோ கொட்டென்று கொட்ட நண்பர் கால்டாக்ஸி அரேன்ஞ் செய்துகொண்டார். நான் கீர போண்டாவில் புத்தககுவியலுடன் அல்ஸூரை நோக்கிப் பயணித்தேன். என் கம்பெனி கொடுத்த மிக அருமையான ப்ரொடக்ட்டான(என் கம்பெனி ஒரு ப்ரொடக்ட் ஓரியண்ட்டட் கம்பெனி - ஆனால் Bag தயாரிப்பில் இல்லை) Bagன் மீதான நம்பிக்கையில் அடாத மழையிலும் கிளம்பினேன். சுமார் 10 கிலோமீட்டர் இருக்கணும்(கூடவும் இருக்கலாம்) ஒரு சொட்டு தண்ணி கூட பைக்குள்ள வரலை!!!. அருமையான பை ஒன்றைக் கொடுத்த எங்க கம்பெனிக்கு ஒரு ஓ!!!

நண்பர் ஒருவர் புத்தகக் கண்காட்சிக்கு போவதுவும் புத்தகம் வாங்வதும் அதைப் புகைப்படமாய் போடுவதும் விமர்சனம் எழுதுவதும் அறிவாளி என்று சொல்லிக்கொள்ளத்தான் ஆனால் அப்படியெல்லாம் செய்தால் அறிவாளி என்று அர்த்தம் இல்லை என்று சொன்னார். அவருக்கு இந்தப் பதிவு சமர்ப்பணம். கீழிருக்கும் புகைப்படங்களும் ;-)


பெரிதாய் தெரிய புகைப்படத்தின் மேல் கிளிக்கவும்...

Read More

Share Tweet Pin It +1

11 Comments

In Only ஜல்லிஸ் அகநானூறு சினிமா சுஜாதா பெங்களூர்

ஆண்கள் எல்லோரும் ஏமாளிகளா?

ஆஸ்திரேலிய அணியின் அண்மைய வெற்றியைப் பற்றிச் சொல்ல ஒன்றுமில்லை; இன்னும் ஐந்துபோட்டிகள் மீதமிருக்கிறது என்பதைத் தவிர. வழமை போல் இல்லாமல் மிடில் ஆர்டர் பாட்ஸ்மான்களுக்கு விளையாட வாய்ப்பு கிடைத்திருக்கிறது; அதனை சரிவர உபயோகித்துக் கொண்டும் இருக்கிறார்கள். அடுத்த ஆட்டத்தில் ரிக்கி பான்டிங் விளையாட வாய்ப்புக்கள் உண்டு. நானூறுக்கான வாய்ப்புக்களை எதிர்பார்த்தபடி நான் காத்திருக்கிறேன்.

=

கர்நாடகாவில் நடக்கும் குழப்பங்களால் பெங்களூருவின் அன்றாட வாழ்வில் பெரிய பாதிப்புக்கள் இல்லை. அலெக்ஸ் பாண்டியன் சொல்லியிருந்ததைப் போல் நான் அவ்வளவு ஓசூர் - பெங்களூர் ரோட்டை உபயோகிக்க மாட்டேன் என்பதால் அது தெரியாது. ஆனால் 'நம்ம மெட்ரோ'விற்காக மகாத்மா காந்தி ரோட்டை கந்தர கோலம் செய்திருக்கிறார்கள். பெங்களூரு டிராஃபிக் ஏற்கனவே ரொம்பவும் பிரசித்தம் இதில் இது வேறு.

=

காந்தியைப் பற்றிய கவியரங்கம் பார்த்தேன்(indeed கேட்டேன்) கலைஞர் டீவியில். பா.விஜய் மக்களைக் கவரும் படி கவிதைப் படிக்கிறார். 'காந்தி கடைசியா சொன்னது ஹே ராம், கலைஞர் முடிவாய்ச் சொன்னது No ராம்' என்று சொல்ல கரகோஷம் வானைப் பிழந்தது(கிளிஷே)' வாலி வராதது எனக்கு வருத்தமே வந்திருந்தால் நான் ரொம்பவும் ரசித்திருப்பேன். காந்தியைப் பற்றியாவது பாடியிருக்கலாம் என்றாலும் அழைத்திருக்கவே மாட்டார்கள் என்று நினைக்கிறேன்.

=

கன்னட ஹீரோ, கன்னட(?) ஹீரோயின், கன்னட வில்லன், கன்னட தயாரிப்பாளர் சேர்ந்து ஒரு தமிழ்ப்படமாம். தேவுடா தேவுடா ரொம்ப நாட்களாக தியேட்டர் சென்று தமிழ்ப்படம் பார்க்காததால் வேறு வழியில்லாமல் 'மலைக்கோட்டை'க்குச் சென்றிருந்தேன். விஷாலின் ஆக்ஷன் காட்சிகள் பார்க்கும் படியிருந்தன; அதே போல் ஆஷிஷ் வித்யார்த்தி/ஊர்வசியின் காதல் காட்சிகள்(ஊர்வசி வித்யார்த்தியின் உறவு முறை எனக்குப் புரியலை) மற்றபடிக்கு நிறைய காட்சிகளின் landscape களில் மலைக்கோட்டை தெரிகிறது. பொன்னம்பலத்தை இவ்வளவு கேவலப்படுத்தியிருக்க வேண்டாம். மற்றபடிக்கு படம் பக்வாஸ் தான். ப்ரியாமணி ஆம்பளை மாதிரி இருக்கிறார்(இது சன்மியூஸிக்கில் அவருடைய உரையாடலுக்கு பிறகான முடிவு அல்ல) அவருடைய மேக் அப்பும், ட்ரெஸ்ஸிக்கும் கேவலமாயிருக்கு.

=

பொல்லாதவன் படத்தில் 'எங்கேயும் எப்போதும்' ரீமிக்ஸ் பாடல் கேட்கக்கூடியதாய் இருக்கிறது.

=

ராயல் ஆர்சிட்டின் 'டைகர் ட்ரையல்' உணவகத்தின் பஃபே நன்றாகயிருக்கிறது. புதன் கிழமைகளில் மதிய உணவிற்கு பெரிய ஹோட்டலுக்குச் செல்லும் வழக்கம் போல் இந்த முறை இந்த ஓட்டலுக்குச் சென்றோம். முந்தைய வாரம் சென்ற 'இந்திரா நகர்' ன் 'ரொமாலி வித் அ வியூ' வை விட வெரைட்டிகளிலும் சரி, ருசியிலும் சரி நன்றாக இருந்தது. அதைப்போல் விலையும் குறைவே.

ரொமாலி வித் அ வியூ - 245 ரூபாய்
ராயல் ஆர்சிட் 'டைகர் ட்ரையல்' - 170 ரூபாய்.

இனி ஒவ்வொரு புதன்கிழமை மட்டும் பதிவெழுத உத்தேசித்திருக்கிறேன். வேறென்ன தூக்கத்தை கட்டுப்படுத்தத்தான் - பஃபே சாப்பிட்டுவிட்டு வந்து வேலை வேறு செய்யமுடியுமா என்ன?(பஃபே பற்றி செல்லா எழுதிய கவிதை(தானே?) இணைப்பாக!, பஃபே பத்தி எழுதியிருக்காருப்பா தேடிப்பாருங்க...)

=

இது நான் சமீபத்தில் வரைந்த இன்னொரு படம் - பெரிதாகப் பார்க்க படத்தில் கிளிக்கவும்.



=

ஒரு அகநானூற்றுப் பாடலும் அதற்கான விளக்கமும்.

அளிநிலை பொறாஅது அமரிய முகத்தள்,
விளிநிலை கொள்ளாள், தமியள், மென்மெல,
நலமிகு சேவடி நிலம்வடுக் கொளாஅக்,
குறுக வந்துதன் கூர்எயிறு தோன்ற
வறிதகத் தெழுந்த வாயல் முறுவலள்
கண்ணிய துணரா அளவை, ஒண்ணுதல்,
வினைதலைப் படுதல் செல்லா நினைவுடன்-

முளிந்த ஓமை முதையலம் காட்டுப்,
பளிங்கத் தன்ன பல்காய் நெல்லி,
மோட்டிரும் பாறை ஈட்டுவட்டு ஏய்ப்ப,
உதிர்வன படூஉம் கதிர்தெறு கவாஅன்,
மாய்த்த போல மழுகுநுனை தோற்றி,
பாத்தி யன்ன குடுமிக் கூர்ங்கல்,
விரல்நுதி சிதைக்கும் நிரைநிலை அதர,
பரல்முரம்பு ஆகிய பயம்இல் கானம்
இறப்ப எண்ணுதிர் ஆயின்- 'அறத்தாறு
அன்று' என மொழிந்த தொன்றுபடு கிளவி
அன்ன ஆக என்னுநள் போல,

முன்னம் காட்டி, முகத்தின் உரையா
ஓவச் செய்தியின் ஒன்று நினைந்து ஒற்றி
பாவை மாய்த்த பனிநீர் நோக்கமொடு,

ஆகத்து ஒடுக்கிய புதல்வன் புன்தலைத்
தூநீர் பயந்த துணையமை பிணையல்
மோயினள் உயிர்த்த காலை, மாமலர்
மணிஉரு இழந்த அணியழி தோற்றம்
கண்டே கடிந்தனம், செலவே-ஒண்டொடி
உழையம் ஆகவும் இனைவோள்
பிழையலள் மாதோ, பிரிதும் நாம் எனினே!

- எழுதியவர் பாலை பாடிய பெருங்கடுங்கோ

ஆனால் ஆச்சர்யமாக இருக்கிறது அகநானூற்றுப் புலவர்கள் எவ்வளவு ரசித்து ரசித்து இந்தக் கவிதைகளை எழுதியிருக்க வேண்டும் என்று நினைக்கும் பொழுது ;). அந்தப் பாடலுக்கு சுஜாதா ஐயா கொடுத்த விளக்கம்.(போன பதிவில் கொடுத்த டிஸ்க்ளெம்பர் இந்தப் பதிவுக்கும் ஒத்து வரும்.)

ஆறுதல் கூறுவதையும் பொறுக்காது, மாறுபட்ட முகமுடையவள்
கூப்பிட்டாலும் கேளாதது போல் இருப்பாள். தன்னந்தனிபோல் ஆனாள். மெல்லமெல்ல
அழகுமிகுந்த சிவந்த பாதங்கள் நிலத்தில் பதிய
அருகில் வந்து கூர்மையான பற்கள் தெரிய
வெறிதே போலிப் புன்முறுவல் பூக்கிறாள்.

பிரிந்து செல்வதை நான் உணர்வதற்குள்ளாகவே,
ஒளிவீசும் நெற்றியுடையவள் தான்உணர்ந்து
பிரியும் செயலைப் பற்றிய நினைவில் துயரடைகிறாள்.

பட்டுப்போன 'ஓமை' மரங்கள் உள்ள பழைய கானகத்தில்
பளிங்கு போன்ற நெல்லிக் காய்கள்
வட்டாடும் சிறுவர்கள் சேர்த்துவைத்ததுபோல் உதிர்ந்துகிடக்கும்!
கதிரவன் எரிக்கும் மலைச்சாரல் அது.

தீட்டியது போன்ற கூர்மையான முனையை உடைய
கற்கள் விரல் நுனிகளைச் சிதைக்கும் பாதை அது.
பரல்கள் தவிர வேறு தாவரமேதும் இல்லாத கானகம்.
அதைக் கடந்து செல்ல எண்ணுவீரானால்' - அது
அறமல்ல' என்று சொல்லப்படும் பழமொழி
வெறும் பேச்சுத்தான் என்பவள் போல
குறிப்புக் காட்டி முகத்தாலும் தெரிவித்தாள்.
அதை மட்டுமே எண்ணிய ஓவியம் போல் இருந்தாள்.
கண்விழிகளைத் திரையிட்ட கண்ணீரால் பார்த்தாள்.

உடலோடு அணைத்த புதல்வனது தலையில்
பனிநீர் சொட்டச் சூடிய பூச்சரத்தை
முகர்ந்து பெருமூச்சு விட்டாள், அப்போது பெரிய பூக்கள்
அழகிய உருவை இழந்து பொலிவற்று வாடின

அதுகண்டு, பிரிந்து செல்லும் எண்ணத்தைக் கைவிட்டேன்.
இப்போதே இப்படி இருப்பவள்
பிரிந்து சென்றால் பிழைக்க மாட்டாள்.

=

கடைசியாய் தலைப்பிற்கு; சமீபத்தில் ஒரு விளம்பரம் பார்க்க நேர்ந்தது அதில் ஒரு காதலனின் காரில் ஏறிக்கொண்டு காதலியை வீட்டை விட்டு வெளியேறுகிறார். வழியில் மறிக்கும் காதலியின் தந்தை காரைச் சுற்றி சுற்றி பார்த்துவிட்டு கடைசியில் உள்ளே உட்கார்ந்திருக்கும் தன் மகளைக் கூட கவனிக்காமல் 'குட் செலக்ஷன்' என்று சொல்வது போல் அமைத்திருந்தார்கள். ஜெஸிலாவைப் போல் எனக்கும் இந்தத் தலைப்பில் ஒரு பெரிய கட்டுரை எழுத வேண்டும் என்று ஆசை தான். ஆனால் இல்லையா அப்படியெல்லாம் எழுதக்கூடாது.

=

Read More

Share Tweet Pin It +1

13 Comments

In பெங்களூர்

பெங்களூரில் இன்று

பெங்களூரில் வியாழக்கிழமை பந்த் அறிவித்திருக்கிறார்கள். பெரும்பாலும் எல்லாக் கம்பெனிகளும் பள்ளிக்கூடங்களும் விடுமுறை அறிவிக்கும் என்று நினைக்கிறேன்.

கட்டிடங்கள் ஏற்கனவே மஞ்சள்/சிகப்பு கொடிகளை கட்டிக்கொண்டு நிற்கின்றன.

தமிழ்சானல்கள் கருப்படிக்கப்பட்டு நாளாகிறது. போக்குவரத்து தமிழ்நாட்டிற்கும் பெங்களூருக்கும் இடையில் இல்லை. அவசர ஆத்திரம் என்றால் கூட பெங்களூரில் இருந்து கேரளாவோ, ஹைதராபாத்தோ சென்றுதான் தமிழ்நாடு வரமுடியும் என்று நினைக்கிறேன். பிளைட் ஒன்று உண்டு பெங்களூரையும் திருச்சியை கனெக்ட் செய்ய, கிங் பிஷர். மொத்தமாக பிசியாக இருக்குமென்று நினைக்கிறேன்.

வாழ்க இந்தியக் குடியுரிமை.

Read More

Share Tweet Pin It +1

0 Comments

Popular Posts