ஹிந்தி பற்றி ஏற்கனவே நிறைய பேசியிருக்கிறேன், இன்னிக்கு புதுசா ஒன்னும் சொல்லிடப்போறதில்லை தான். இந்த முறை டெல்லி சென்றிருந்த பொழுது பழைய கம்பெனி நண்பர்களைச் சந்தித்தேன், அது ஏற்படுத்திய தாக்கத்தில் நிச்சயம் ஒரு பதிவே எழுதலாம் நிச்சயம் எழுதுகிறேன். ஆனால் அங்கே நண்பர்கள் சொன்னது "உன்னுடைய ஹிந்தி இப்ப நல்லாயிருக்கு!". நான் சமீப காலமாக ஏறக்குறைய மூன்றாண்டுகளுக்கு சுமார் இப்படி ஒன்றைக் கேள்விப்படவேயில்லை என்பதால் முதலில் என்னை...
வெள்ளிக்கிழமை இரவு John Rambo படத்திற்குச் சென்றிருந்தேன். என் காலத்தில் இல்லாமல் கொஞ்சம் முன் வெளியானவை Ramboவின் மற்ற வரிசைப் படங்கள் பார்த்தவன் என்ற முறையில் இந்தப் படத்திற்கும் செல்ல முடிவெடுத்திருந்தேன். Inox cinemas இணையதளம் எப்பொழுது ஆரம்பித்தார்கள் என்று தெரியாது ஆனால் சமீபத்தில் தான் என்று நினைக்கிறேன். எங்கள் வீட்டில் பக்கத்தில் இருக்கும் தியேட்டர் என்றாலும் கருடா மாலில் இருக்கும் Inox தியேட்டருக்குச் செல்லாமல் இருந்ததற்கு...
போன பதிவின் பொழுதே சொல்லியிருந்தேன் சித்தன்னவாசல் பற்றி எழுதுகிறேன் என்று முதலில் குடுமியான்மலையைப் பற்றி எழுதிவிட்டு சித்தன்னவாசலைப்பற்றி எழுதுவதற்கு பெரிய காரணங்கள் எதுவும் இல்லை என்றாலும் சித்தன்னவாசல் சித்திரங்களை நானாய்ப் புகைப்படம் எடுக்கவில்லை என்ற காரணங்களைச் சொல்லலாம். இந்த மூடப்பட்ட மண்டபத்தில் ஓவியங்கள் வரையப்பட்டிருக்கின்றன. சரியான வழி எங்கேயும் சொல்லப்படவில்லை, சித்தன்னவாசல் என்ற நேம் போர்ட்டை நாங்கள் பார்த்த இடங்களில் அந்த போர்ட்கள் நிச்சயம் தேவையில்லை என்றே...
விமர்சனம் எழுதுவதற்காகவே சிலர் படம் பார்க்கிறார்களோ என்ற சந்தேகம் எனக்கு எப்பொழுதுமே வரும்; சில பேருடைய திரைப்பட விமர்சனம் செய்யும் பதிவுகள் படிக்கும் பொழுது. பீமா படத்தைப் பார்த்த பிறகு அக்காவிடம் அரைமணிநேரம் அட்வைஸ் செய்துகொண்டிருந்தேன்; தமிழ்ப்படத்திற்கு தமிழ்ப்பதிவுகள் தரும் விமர்சனங்களை எப்படி எடுத்துக் கொள்வது என்று. அதை திரும்பவும் இன்னொருமுறை சொல்லி போரடிக்க விரும்பவில்லை அதைவிட நாலுவரி கூடுதலாக பீமா பற்றி எழுதிவிடலாம். வருடக்கணக்கில் எடுத்து...
காஷ்மீர் பயணம் முடித்ததும் கிடைத்த இடைவேளையில் படித்த சில நாவல்களால் கவரப்பட்டு திரும்பவும் சிறுகதை எழுதணும் என்ற ஆர்வம் நிறைய வருகிறது. ஆனால் டோனும் நடையும் பேசும் விஷயமும் வித்தியாசமாக முன்னைக்கு மேம்பட்டதாக இருக்கவேண்டும் என்ற ஆவலில் பயணத்தைப் பற்றி குறிப்புகள் எழுதவும் எடுத்தபடங்களைக் தட்டி நிமிர்த்தி சரிசெய்து போடவும் நேரம் அமையணும். பார்ப்போம். ஆனால் முதலில் எழுதணும் என்று நினைத்திருப்பது "குடுமியான் மலை" பற்றி ஒரு...
சூரியன் அஸ்தமனமாகிக் கொண்டிருக்கும் தால் ஏரியில் கடந்து செல்லும் ஷிக்காரா படகிற்காக காத்திருந்து சூட்டிங் போட்ட படம்.தால் ஏரி பிரம்மாண்டம் என்ற வர்ணித்தால் சொன்னால் கிளிஷே ஆகிவிடும், ஆனால் சூரியனின் அசைவுகளுக்கு(indeed பூமியின்) ஏற்ப தால் ஏரி காட்டும் வண்ணக்குழப்பம் பிரம்மாண்டம். காஷ்மீருக்கு சென்று இந்த வித்தையை மட்டுமே பார்த்துக் கொண்டிருக்கலாம், அப்படி ஒரு தருணம் தான் மேலே படத்தில்.அன்பு நண்பர் இராமநாதன் ஏதோ விளையாட்டென்று கூப்பிட்டிருந்தார்....
Subscribe to:
Posts
(
Atom
)
Popular Posts
-
It was late 2010, Chennai drowning in 2G rumors and the sticky heat of a city faking it wasn’t falling apart. I’d been plotting this night f...
-
Next morning, I cornered Visu—eyes sharp, voice low, catching him sprawled on the couch, wireless headphones still on, eyes bleary like he h...
-
Chennai buzzing with that sticky night heat, the kind that made you want to drown the world in booze and fuck it all off. I’d been itching t...