In கவிதைகள் புகைப்படம்

யாசித்தலின் குரூரம்

அவள் கரம் பிடித்து காற்றாடியதில்லை
போட்டியொன்றின் பூரணமாய் முத்தம் பரிமாறியதில்லை
உருவாக்கிக் கலைக்கும் பிம்பம் கடந்து வேறு பேசியதில்லை
ஆனாலும் நாங்கள் காதலித்தோம்
முகமூடிகள் இளகின நாளொன்றில்
காமம் சொல்லியதால் மீண்டும் காதல் யாசிக்கிறேன்
காமம் மறந்த / மறைத்த காதல்
தரமுடியாத சோகம் அவள்
கொட்டிக்கவிழ்த்து வைத்த 'ஜூஸ் டம்ளரில்'
பிரதிபலிக்கிறது
யாசித்தலின் குரூரம் இல்லாமையை
உரத்துச் சொல்ல மூக்கின் வழி
ஒழுகும் 'ஜூஸின்' துளியை
இருத்தலியத்தை ருசித்தபடி
சுவைத்துப் பார்க்கிறேன்.

------------------------------------------------

இதனுடன் தொடர்புடைய ஒரு பதிவு:

Mohandoss's new status message - பெண்கள் மேலே மையல் உண்டு நான் பித்தம் கொண்டது உன்னில் மட்டும்

Related Articles

5 comments:

  1. சார் நல்ல கவிதை

    ReplyDelete
  2. "பிரதிபளிக்கிறது" பிரதிபலிக்கிறது என்று இருக்க வேண்டுமோ...

    ReplyDelete
  3. கிருத்திகா,

    நான் ஒலி க்கு பிரதிபலித்தல் என்றும் ஒளிக்கு பிரதிபளித்தல் என்றும் நினைத்து தான் பிரதிபளித்தல் என்று போட்டேன்.

    அப்படியில்லை என்று தெரிகிறது, கேட்டிருக்கிறேன் விசாரித்துக் கொண்டிருக்கிறேன். தெரிந்ததும் சொல்கிறேன்.

    ReplyDelete
  4. கிருத்திகா - பிரதிபலிக்கிறது தான் வருமாம்

    உங்கப் பேரைச் சொல்லி மாற்றிக் கொள்கிறேன்.

    ReplyDelete

Popular Posts