உண்மைத் தமிழனை எப்பொழுதிலிருந்து தெரியும் என்று யோசித்துப் பார்க்கிறேன். கோவை பதிவர் சந்திப்பில் பார்த்தது, அப்பொழுது பேசவில்லை ஆனால் பிற்பாடு சென்னையில் சந்தித்தபொழுது பேசிய ஞாபகம். அப்பொழுதெல்லாம் வெளியாகும் எல்லாப் படங்களுக்கும் சென்று ஒரு மொக்கை விமர்சனம் எழுதுவார், பெரும்பாலும் விமர்சனமாக இல்லாமல் கதையை எழுதித் தொலைப்பதால் எப்பொழுதும் படித்துத் தொலைத்ததேயில்லை. பின்னர் நானே பதிவுகளில் இல்லாமல் போன காலங்களில் அவர் பிரபல பதிவர் வேறு ஆகித் தொலைத்திருந்தார்....
ஈழத் தமிழர்கள் - Taboo Subject; 7-ம் அறிவு
Posted on Thursday, October 27, 2011
ஏன் 7-ம் அறிவைப் பற்றி இத்தனை எதிர்ப்பு தெரியவில்லை. ஈழத் தமிழர்களைப் பற்றியும் தமிழர்களைப் பற்றியும் பேசியதாலா தெரியவில்லை. ஈழத்தமிழர்களை Taboo சப்ஜெக்டாக வைத்திருப்பதில் எனக்கு சம்மதம் இல்லை. முக்கியமான படம், பார்க்கப்பட வேண்டிய ஒன்று. இணையத்தில் எழுதப்படும் மொக்கை விமர்சனங்களை வைத்து இந்தப் படத்தை நிராகரிக்காதீர்கள். நிச்சயமாகப் பார்க்க வேண்டிய ஒன்று. தமிழர்கள், ஈழத்தமிழர்கள், இலங்கைப் பிரச்சனை எல்லாவற்றையும் காசாக்கப் பார்க்கிறார்கள் அது இதென்று புலம்புகிறார்கள்...
In BHEL REC மாணவிகள் நினைவுகள்
இருட்டு க்ரௌண்டில் ஒரு முரட்டுக் குத்து
Posted on Wednesday, October 26, 2011
இன்னும் ஆறு ரன்கள் அடித்தால் வெற்றி, இரண்டு பந்துகள் மீதமிருந்தது. எப்பொழுதும் இருக்கும் ஆட்டத்தின், வெற்றியின் மீதான தீவிரம் அன்று என்னிடம் இல்லை என்னிடம் மட்டும் இல்லை, எதிரணியில் மீதமிருந்த இரண்டு பந்துகளை வீசப்போகும் கிஷோருக்கும் வெற்றியின் மீதான ஆர்வம் குறைவாகவே இருந்திருக்கும். மனம் ஆனாலும் கணக்குப் போட்டது, கிஷோரின் ஃபேவரைட்டான ஸ்லோ பால் நிச்சயம் இரண்டு பந்துகளில் ஒன்றிருக்கும் நான் எதிர்பார்த்தது சரியாக இருந்தால் கடைசி...
In சாமுராய் சினிமா த லாஸ்ட் சாமுராய்
Mind the sword, Mind the people, Mind the Enemy, three many minds
Posted on Monday, October 24, 2011
சாமுராய்கள் பற்றி நான் முதன்முதலில் அறிந்தது பள்ளிப்பருவத்தில் இரண்டாம் உலகப்போரைப் பற்றி ஆசிரியர் சொல்லிக் கொண்டிருந்த பொழுது அமேரிக்கா ஜப்பானின் மீது அணுகுண்டு போட்டதற்கான காரணங்களில் ஒன்றாக குறிப்பிட்டது எனக்கு மிகுந்த ஆச்சர்யமளித்தது. அதாவது ஜெர்மானியர்களையோ இத்தாலியர்களையோ போலில்லாமல், ஜப்பானியர்கள் இறக்கும் வரை போரிடுபவர்கள் என்றும் 1945ன் இறுதிகளில் ஜெர்மனி, மற்றும் இத்தாலி சரணடைந்துவிட ஜப்பானியர்கள் மட்டும் சரணடையாமல் இறக்கும் வரை சண்டையிட முடிவுசெய்ததாகவும். அமேரிக்கா ஜப்பானிற்குச்...
நின்றவாக்கில் வானைத்தொடும் என்னுடைய முயற்சிகள் தோல்வியைத் தழுவுகின்றன எகிறிக் குதிக்காததால் மட்டுமல்ல வானமே இல்லையென்றான பிறகு தொட்டுவிட முடியுமென்றோ அது ஒரு நம்பிக்கையென்றோ கற்பனைக்கதைகளை மனம் விரும்பாததால் ...
In ma. se maniam selvan maniyam selvan mase செல்வம் மணியம் மணியம் செல்வன் மா செ மா. செ
மணியன் செல்வம் ஓவியங்கள்
Posted on Tuesday, October 18, 2011
எனக்கு ஒரு ஆணின் மீது காதல் உண்டென்றால் அது மணியம் செல்வனின் மீது தான். அவரது ஓவியங்களின் அழகில் மயங்கிப் போயிருக்கிறேன். ஏதோ கொஞ்சம் வரைந்த என் ஓவியங்கள் - அதில் ஏதாவது ஓவியத்திற்கான விஷயம் இருந்தால் - அத்தனையும் மணியம் செல்வனுக்கே. இந்த ஓவியங்கள் என் சேமிப்பில் வெகுகாலத்திற்கு முன் இருந்தது, சமீபத்தில் நான் இவற்றை இழந்திருந்தேன், தற்சமயம் மீண்டும் கைவரப்பெற்றேன். என் கதைக்கான ஓவியம்...
In White Water Rafting பயணம் புகைப்படம் வாட்டர் ராஃப்டிங்
கங்கை கொண்ட சோழபுரம், குதிரைமுக் - கொஞ்சம் புகைப்படங்கள்
Posted on
பிரியமான கங்கை கொண்ட சோழபுரம் முன்னம் ஒரு முறை கங்கை கொண்ட சோழபுரம் சென்று வந்த பொழுது எழுதிய பதிவு, இராஜேந்திர சோழன் - கங்கை கொண்ட சோழபுரம் பற்றியது. குதிரை முகம்(Kudremukh) நண்பர்களுடன் சென்ற பொழுது படங்கள் அனைத்தும் பதிவிற்காக குறுக்கப்பட்டவை, படத்தில் க்ளிக்கினால் பெரிய படம் கிடைக்கும். துங்கபத்திரா ஆற்றில் ...
Subscribe to:
Posts
(
Atom
)
Popular Posts
-
I’d been grinding Visu down for days—teasing, poking—till he broke, voice tight with exasperation. “Fine, but hook me up with a girl I pick ...
-
It was late 2010, Chennai drowning in 2G rumors and the sticky heat of a city faking it wasn’t falling apart. I’d been plotting this night f...
-
ஒரே ஒரு வார்த்தை மட்டும் சொல்லிக்கொள்கிறேன் - மிகவும் மனநிறைவைத் தந்த சந்திப்பு. ஆர்கனைஸ் செய்தவர்களுக்கு நன்றிகள்.