In தொடர்கதை

உள்ளம் உடைக்கும் காதல் 7


குளித்துவிட்டு வந்து பார்த்தால், அவன் லேப்டாப்பை மடியில் வைத்து என்னமோ பார்த்துக் கொண்டிருந்தாள். அதுவரை சுத்த சைவம் அந்த லாப்டாப். சொல்லப்போனால் அதுவரை அவன் அக்காவைக் கூட தொடவிட்டதில்லை, ஆனால் வாழ்க்கையில் சில விஷயங்களை நாம் நினைப்பதைப் போல் நடப்பதில்லை, இரண்டு மாதங்களுக்கு முன்னர் அவன் இவளைச் சந்தித்த நாளில், சத்தியமாய் நினைக்கவில்லை, ஒரு நாள் இவள் அவன் ரூமில் தனியாக அவன் லாப்டாப்பை மடியில் வைத்து பார்த்துக் கொண்டிப்பாள் என்று.

"என்னங்க இது, ஒரு கேம் கூட இல்லை, வெறும் சாப்டுவேரா இருக்கு" விரக்தியாகக் கேட்டாள்

"நான் விளையாட கம்ப்யூட்டர் வாங்கவில்லைன்னு நினைக்கிறேன், சரி சிலபஸ் இருக்கா. நாம வரிசையா பார்ப்போமா."

சொல்லப்போனால் அடுத்த ஐந்து மணிநேரம் அவளுக்கு சி லேங்குவேஜ் பற்றி அவள் தேர்வுக்கு தேவைப்படும் எல்லாமும் சொல்லிக் கொடுத்திருந்தான், அவளும் சும்மா சொல்லக்கூடாது ரொம்ப ஆர்வமாய் கற்றுக் கொண்டிருந்தாள். பாடங்கள் ஏற்கனவே நடத்தப்பட்டுவிட்டதும் அது மட்டுமல்லாமல் அவளுமாய் படிக்கத் துவங்கியிருந்ததும் அவள் புரிந்து கொண்ட வேகத்திலேயும் கேட்ட கேள்விகளிலும் அது தெரிந்தது. எங்கெல்லாம் உதாரணம் காட்ட முடியுமே அங்கெல்லாம் லேப்டாப்பில் உதாரணங்கள் எழுதிக்காட்டினான். அவனைப் பொறுத்தவரை கணிணி சம்பந்தப்பட்ட எந்தப் படிப்பும் ப்ராக்டிகலாக இருந்தால் தான் சுவைக்கும். கடைசியில் அவள் முகம் சுருங்குவது போல் இருந்தது உடனே,


"என்னா போர் அடிக்குதா?" அவள் ஆர்வம் மங்கி கண்கள் அலைபாய்ந்த பொழுது கேட்டான்.

"போர் எல்லாம் அடிக்கலை, பசிக்குது. நான் காலையில் இருந்து சாப்பிடலை சரி இங்க வந்தா உங்ககூட சாப்பிடலாம்னு பார்த்தா, எனக்கு சாப்பாடு போடாம சி சொல்லித்தந்து கொன்னுறுவீங்க போலிருக்கு, நல்லா சொன்னாரு வள்ளுவர், செவிக்குணவில்லாத பொழுது சிறிது வயிற்றுக்கும் ஈய்யப்படும்னு. உங்கக்கூட வந்தா வயிற்றுக்கு உணவு கிடையாது போலிருக்கு, வெறும் செவிக்கு மட்டும் தானோ?" சிரித்தாள்.

"ஏய் சொல்லலாம்ல, சாரிம்மா! நானும் இன்னும் சாப்பிடலை. பசிக்கவேயில்லை, சரி உட்கார்ந்திரு, ஏதாவது சாப்பிட வாங்கிட்டு வர்றேன்." அவளை அங்கேயே உட்கார வைத்துவிட்டு அருகில் இருந்த கடையொன்றில் சாப்பாடு வாங்கிவந்தான். பொறுமையாக குறைந்த அளவே சாப்பிட்டாள், அவள் சாப்பிடுவதற்கும் அவள் உடல் எடைக்குமான கேள்வி இதனால் இல்லாமல் போனது.


நாங்கள் சாப்பிட்டு முடித்ததும், "சரி நான் வரலையின்னா, எப்ப சாப்பிடுவீங்க?"

"சில சமயம் சாப்பிடவேமாட்டேன், இராத்திரி எல்லாத்தையும் சேர்த்து ஒன்னா சாப்பிடுவேன். சரி படிப்போமா?"

"இல்ல தலைக்கு மேல ஒரே ப்ளென்சரா போய்க்கிட்டிருக்கு, வேற எதாச்சும் பேசுவோமே?"

"எதைப்பத்தி?"

"ஏன் வாழ்க்கையில 'சி'யையும், கம்ப்யூட்டரையும் தவிர வேறு ஒன்றும் இல்லையா?"

"சரி எதைப்பத்தி பேசலாம் நீயே சொல்லு?" சிரித்தபடியே கேட்டான்.

"வாழ்க்கையைப் பத்தி..." தெளிவாகச் சொன்னாள்.

"உனக்கு இன்னும் அந்த அளவுக்கு வயது வரலைன்னு நான் நினைக்கிறேன்." சீண்டினான்.

"இங்கப்பாருங்க, நான் ஒன்னும் சின்னப் பொண்ணு கிடையாது. வயசாகலையே தவிர எனக்கும் சில விஷயங்கள் தெரியும், எங்கம்மா இறந்தப்ப எனக்கு மூணுவயசு, அப்புறம் நானும் அப்பாவும் தான். நான் சமைக்க ஆரம்பிச்சப்ப வயசு எட்டு, அப்பாவை பார்க்க கஷ்டமா இருக்கும், ஆனா அவரு எனக்காகத்தான் வாழ்கிறார். அவருகிட்ட நான் இன்னிக்கு போய் நான் இப்பிடி மோகன்னு ஒரு பையனை காதலிக்கிறேன்னு சொன்னால். சத்தம் போடமாட்டார், உட்கார்ந்து யோசிப்பார். நான் செலக்ட் பண்ணியிருக்கேன்னா தப்பாயிருக்காதுன்னு நினைப்பார். உங்களைப் பத்தி விசாரிப்பார். பிடிச்சிருந்தா நிச்சயம் கல்யாணம் பண்ணிவைப்பார். எனக்கும் எங்கப்பாவுக்கும் ஈகோ பிராப்பளம் கிடையாது; நான் நல்ல பையனையே பார்த்திருந்தாலும், அவருக்கு தெரியாம பண்ணிட்டேன்னு எகிறி குதிக்க. உங்களமாதிரியே அவரும் ஒரு நல்ல மனிதர்."



"சரி உங்கப்பா நல்ல மனிதராகவே இருக்கட்டும், நான் நல்ல பையன்னு நீ எப்படி கணக்கு போடலாம். நான் பெண்ணுங்க கூட பேசறதில்லை என்பதால் நல்ல பையனாதான் இருப்பேன்னு நினைக்கிறியா?" அவன் கண்களில் விளையாட்டுத்தனம் அவளுக்கும் தெரிந்திருக்கும்.

கேட்டதும் சிரித்தாள் பிறகு,

"தனியா ஒரு ரூம், தன்னைக் காதலிக்கும் பதினெட்டு வயது, சுமாரான அழகுள்ள ஒரு பொண்ணு, ஆனா உங்களால ஐந்து மணிநேரம் வேறு எதையும் பத்தி யோசிக்காம, உங்க பார்வை கூட மாறாம, சி சொல்லித்தர முடியும்னா நீங்க நல்ல பையன்தான். அது மட்டுமில்லாம நீங்க சிகரெட் குடிக்க மாட்டீங்க, தண்ணியடிக்க மாட்டீங்க, இதுவே போதும். நான் இரண்டு வருஷம் பொறுத்துக்கூட என் காதலைச் சொல்லியிருப்பேன். ஆனா ஒன்னுமே தெரியாத இந்தப் புள்ளையை வேறு யாராவது, எதையாவது காட்டி மயக்கிட்டா, அதனாலத்தான் நான் அவ்வளவு சீக்கிரம் சொன்னது. நீங்கத்தான் இப்படி, உங்கக்கா எமகாதகி, நான் நினைச்சதை எவ்வளவு அழகா சொன்னாங்க தெரியுமா, 'இங்கப்பாரு அவன் உன்னை குழந்தைம்பான்; ஆனா அவன்தான் குழந்தை, கம்ப்யூட்டரையும், பேச்சுப்போட்டியையும் தவிர வேறு ஒன்னும் தெரியாது. உன்னைப் பார்த்தால் அவனுக்கு ஏத்த பெண்ணா இருக்கு, நான் அம்மாகிட்ட பேசுறேன். ஆண்டவன் தான் எங்க அப்பாகிட்ட பேசணும். அவனை பத்திரமா பார்த்துக்கோ' னு சொன்னாங்க அன்னிக்கே. நான் வேறு எதாவது சொல்லணுமா இதைப்பத்தி."

அவள் சொன்னதைப் பற்றி சிறிது நேரம் யோசித்திருப்பான், அவன் அக்கா அப்படிச் சொல்லியிருக்கக் கூடியவள் தான். அகிலாவை அவளுக்குப் பிடிக்கும் என்று அவனுக்குத் தெரிந்துதானிருந்தது ஆனால் இத்தனை தூரம் பிடித்திருக்கும் என்று நினைத்திருக்கவில்லை. அகிலாவைப் பற்றி அத்தனை தூரம் அவனுக்குத் தனிப்பட்ட முறையில் தெரியாததால் அவளுடைய முதிர்ச்சி தெரியாதது, அவனை அவ்வளவு சீக்கிரம் காதலிக்கத் தொடங்கியதால் அவன் அவளை வெறும் விடலையாகவே பார்த்தேன். ஆனால் அவள் அதற்குப் பின்னால் இருந்த காரணங்களை அடுக்கிய பொழுது அகிலா அப்படிச் செய்தது நியாயமாகவே பட்டதவனுக்கு. அவளைப் பற்றி இன்னமும் நிறைய தெரிந்து கொள்ள ஆசைப்பட்டான்.

"சரி முதல் நாள் நான் உன்னை அடிச்சப்ப நீ என்ன நினைச்ச?"

"உங்களுக்கு ஒன்னு தெரியுமா, பேச்சுப்போட்டியில் நீங்க ஆரம்பிச்ச தமிழ் வாழ்த்துப் பாட்டு, முடிச்சப்ப சொன்ன சிலவரிகள்னு எல்லாமே நான் வழக்கமா சொல்றது. எனக்கு ஆச்சர்யமாயிருந்தது, இதுல கூட ஒருத்தரோட ஒற்றுமையிருக்குமான்னு, ஆனா உங்களைப்பத்தி அன்னிக்கு சொன்னதுல கோபமாவீங்கன்னு நினைக்கலை. பேச்சுப்போட்டியில பேசுறவங்க பெரும்பாலும் இந்த மாதிரி எதிர்ப்புக்களைச் சந்திச்சிருப்பாங்க. ஒரு வேளை நான் - ஒரு பெண்ணு - உங்களை இப்படி சொன்னது தான் பிரச்சனைன்னு நினைச்சேன் அவ்வளவுதான்."

அவன் பேச்சை மாற்ற விரும்பினான், "சரி கனிமொழி இங்க வரவேண்டியது தானே, வேறு எதும் பிரச்சனையா?"

"அதெல்லாம் ஒன்னுமில்லை, நான்தான் வரவேண்டாம்னு சொன்னேன். அக்காவுக்கு கோபம், உங்ககிட்ட தனியா பேசணும்னு தான் முக்கியமா வந்தேன் பேசிட்டேன். உங்களுக்கு ஒன்னும் கோபம் இல்லையே?"

"கோபமெல்லாம் ஒன்னுமில்லை, வந்தவுடனேயே இதை நீ சொல்லியிருக்கலாம், அவளுக்கும் சேர்த்து சி சொல்லித் தந்திருப்பேன். அவளுக்குச் சொந்தமா இல்லைன்னா நீ என்னை நெருங்கியிருக்கவே முடியாது. அதுதான் உண்மை." அவன் நேர்மையாகச் சொன்னான்.

"நல்லாவே தெரியும். இதுதான் ஃபர்ஸ்ட் அண்டு லாஸ்ட், எனக்கு அக்கா முன்னாடி உங்ககிட்ட இப்பிடிப் பர்ஸனலாய்ப் பேசமுடியாது அதான். மத்தபடி அவங்களை தவிர்க்கணும்னுங்கிறது என்னோட எண்ணம் கிடையாது." அவள் கண்களில் உண்மை இருந்தது.

சிறிது நேரம் இருவரும் ஒன்றையும் பேசாமல் வெறுமனே பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவளுடைய தெளிவும் முதிர்ச்சியும் இயல்பான அழகும் அவளை நோக்கி அவனை இழுக்கவே செய்தன. அத்தனை தைரியமாய் அவளால் அவன் முன்னால் தனியாக இருக்க முடிந்தது ஆச்சர்யத்தைக் கிளப்பியது அவளை வம்பிழுக்க நினைத்தவனாய்.

"அது இருக்கட்டும், நான் படிச்ச காதல் கதைகளில் எல்லாம் முத்தம் இல்லாத கதையே கிடையாது. நீயோ காதல்ங்கற, காதலிங்கிற, ஆனா அந்த விஷயத்தை பத்தி சத்தமே இல்லை?"

"சரி ரூட் மாறுது, நானே நல்ல புள்ளையை கிளப்பி விட்டுட்டேன் போலிருக்கு, நான் கிளம்புறேன்." அவள் அழகாய்ச் சிரித்தாள்.

"இங்கப்பாருங்க இங்கே கிளம்பி வரும் பொழுது நான் இன்றைக்குப் பொழுது இப்படித்தான் போகும் என்று கற்பனை செய்திருக்கவில்லை என்னதான் நல்லவராயிருந்தாலும் 18 வயதுப் பெண்ணொருத்தி பக்கத்தில் இருந்தால் சபலம் கிளம்பும் என்று நினைத்தேன். நானே கூட உங்களிடம் 'நீங்க என்னை எதுவும் செய்யலை' என்று சொல்லாமல் இருந்திருந்தால் இந்த முத்தம் பற்றிய பேச்சைக் கூட நீங்க கிளப்பியிருக்க மாட்டீங்கன்னு எனக்குத் தெரியும். நானாய்க் காதலித்து நானாய்ச் சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொண்டு தனியாய் வந்து உங்களைச் சீண்டினேன். சொல்லப்போனால் முத்தமென்ன நீங்க கேட்டால் கொடுக்காமல் மறைத்து எடுத்துச் செல்ல என்னிடம் எதுவுமே இல்லை. புரிஞ்சிக்கோங்க, ஆனால் வேண்டாம் ப்ளீஸ் இன்றைக்கு ஒரு அற்புதமான நாள் என்னைப் பொறுத்தவரை அப்படியே இருந்துட்டுப் போகட்டும் தப்பா நினைக்காதீங்க. முத்தம் அதை மாத்திடும்னு நினைக்கலை ஆனால் வேண்டாமே." கெஞ்சினாள்.

அவன் பதில் எதுவும் சொல்லலை.

"நான் கிளம்புறேன்னு சொன்னேன், நீங்க பதில் சொல்லலைன்னா எனக்கு இதுதான் மனசிலே ஓடும். அதுனால ஏதாவது பேசுங்க."

விளையாட்டாய்த் தான் அவளிடம் முத்தம் கேட்டேன் அவளிடம் நான் மனமொன்றத் தொடங்கி நாட்களாகியிருக்காது. அவள் தருவாளா மாட்டாளா என்று நினைத்துக் கூட அப்படிக் கேட்கவில்லை. ஆனால் அவள் என்னை உயர்த்தி வைத்திருந்த இடம் கொஞ்சம் அதிகம் என்று மனதிற்குப்பட்டது.

சிரித்தபடியே, "சரி ஒழிஞ்சிப் போ. முத்தம் தான் கொடுக்கலை. ஒரு கேள்விக்குப் பதில் சொல்லிட்டுப்போ."

"தன்யனானேன் பிரபு, கேளுங்க." என்றாள் மகிழ்ச்சியுடன்.

"ஆமாம் உன் சைஸுக்கு எல்லாம் பிரா தயாரிக்கிறாங்களா. என்ன ஸைஸ் உனக்கு" என்றான், கண்களை அவர் மார் மீது ஓட்டியபடி.

அவள் முகம் சிவந்தது அப்படியொரு கேள்வியை அவள் எதிர்பார்த்திருக்கவில்லை என்று தெரிந்தது. பின்னர் நான் கேட்ட கேள்வியை உணர்ந்ததும் கொஞ்சம் முறுவளித்தாள்.

"ரொம்ப கஷ்டப்பட்டு உங்களை கெட்டவனாக்கிக்காதீங்க..." என்று சொல்லிச் சிரித்தவள் "கேட்டுட்டீங்க சொல்றேன். வயசுக்கு வந்ததில் இருந்து அம்மா இல்லாததால் பக்கத்து வீட்டு மாமியைக் கூட்டிக்கொண்டு போய் நானா தான் வாங்கியிருக்கேன். என் ஸைஸுக்கும் பிரா கிடைக்கும். ஸைஸெல்லாம் சொல்லி பிரா வாங்கிறதில்ல நான், போனால் அவங்களே உடம்ப பார்த்து எடுத்து கொடுத்துடுவாங்க. இல்லை அன்டர் பஸ்ட் சைஸ், ஓவர் பஸ்ட் சைஸ் எல்லாம் தெரியணும்னா சொல்லுங்க அளந்து பார்த்துச் சொல்றேன்." சொல்லிவிட்டு கண்களைச் சிமிட்டிக் காட்டினாள்.

"ஏய் சும்மாத்தான் கேட்டேன், போய்ட்டு வா தாயே." என்றான் இரண்டு கைகளையும் கூப்பியபடி.

"கோபமில்லையே?"

"நிச்சயமாய் இல்லை." அவளை பக்கத்திலிருந்த ஆட்டோஸ்டாண்ட் வரை சென்று வழியனுப்பி வைத்துவிட்டு வந்தான்.


அடுத்த நாள் கல்லுரிக்கு போனதும் HOD வந்து,

"மோகன் நேத்திக்கு லெக்சரர் வராததால லேப் அட்டெண்டர, பர்ஸ்ட் இயர் கிளாசுக்கு அனுப்பினேன். அங்க ஒருத்தன் ரொம்ப பருப்புமாதிரி அவங்ககிட்ட பண்ணியிருக்கான். புதுபையன் கொஞ்சம் படிச்சவன் போலிருக்கு. நான் நேரடியா தலையிட விரும்பலை. நீ கொஞ்சம் இன்னிக்கு கிளாசுக்குப் போய் அவனை தட்டிவையேன்."

அவரே சொன்னதுக்கு பிறகு போகலைன்னா எப்பிடி?

"பசங்களா, இன்னிக்கு லெக்சரர் வரலை. அதான் நான் வந்திருக்கேன். ஒரு மணிநேரம் ஜாலியா ஏதாவது பேசலாம். என்ன பேசலாம், ஏதாவது விளையாடலாம்னாலும் விளையாடலாம்."

சொல்லிமுடிந்ததும் அந்தப் பையன் தான் எழுந்தான்.

"எக்ஸ்கயூஸ் மீ, நாங்க இங்க படிக்க வந்திருக்கோம். விளையாட இல்லை, நாலு நாளா லெக்சரர் வரலை. எங்க படிப்புத்தான் வீணாகுது. நேத்திக்கு லேப் அட்டண்டர் வந்தாங்க, அதுகூட பரவாயில்லை, இன்னிக்கு ஒரு ஸீனியர் ஸ்டுடண்ட் வந்திருக்கீங்க. என்ன நடக்குதேன்னே புரியலை. நான் உங்களைத் தப்பா நினைக்கலை, இந்த ஒரு மணிநேரமும் வேஸ்ட்" சொல்லிவிட்டு அவன் உட்கார்ந்ததும். சரியா மாட்டிக்கிட்ட மகனேன்னு நினைத்துக்கொண்டவனாய், "ஐயோ, சூப்பர் தம்பி உங்க பேரு என்ன சொல்லமுடியுமா?" கேட்டான்.

"விஸ்வநாதன்..."

"விசு, எனக்கும் இதுதான் பிராப்ளம். எனக்கு விளையாடவோ, சும்மா ஜாலியா இருக்கவே பிடிக்கவே பிடிக்காது. ஃபர்ஸ்ட் இயர் பையன்கள் சீரியஸா இருக்கமாட்டாங்கன்னு தப்பா கணக்குப் போட்டுட்டேன். சொல்லுங்க இந்த ஒரு மணிநேரம் உபயோகமா போகணும்னா என்ன பண்ணலாம்."

"எது வேண்டுமானாலும் ஆனால் உபயோகமாய்!"


"சரி புரோஜக்ட் பத்தி பேசலாம், நாம படிக்கிறதே அதுக்குத்தானே," சொல்லிவிட்டு புரோஜக்ட் பத்தி எல்லாவற்றையும் சொன்னான். அப்பப்ப அவனையும் எழுப்பி ஒரு கருத்தைக் கேட்டு அவன் சரியான கருத்தே சொல்லியிருந்தாலும் இல்லையென்றும் அவனை மட்டம் தட்டியும் பேசினான். சிலசமயம் அவன் சொன்ன கருத்து எல்லோருக்குமே முரணாக இருந்ததால் மற்ற மாணவர்களிடமும் கேட்டு அவனை முட்டாளாக்கினான். முடிவில் அவன் அப்பொழுது செய்துகொண்டிருக்கும் புரோஜக்ட் பத்தி சொல்லி கையில் வைத்திருந்த லாப்டாப்பில் இருந்து எடுத்துக்காட்டுகளைக் காட்டினான்.

ஒரு மணிநேரம் முடிந்திருக்கும் அவனை எழுப்பி, "உபயோகமாக இருந்ததா?"

"ம்ம்ம், மிகவும் உபயோகமாக இருந்தது!"

"தெரியுமா, நான் இந்த ஒரு மணிநேரத்தை வேஸ்ட் பண்ணிட்டேன். இந்த நேரத்தில் புரோஜக்ட் பண்ணியிருந்தால் சம்பாதித்து இருப்பேன். பரவாயில்லை இந்தப் பையனுக்காக இல்லை. மற்ற மாணவர்களுக்காவும்தான் நான் சொன்னது. அதானால் சந்தோஷம்." சொல்லிவிட்டு வகுப்பறைக்கு வந்துவிட்டான்.

மதியம் கேன்டீனில் அவன் உட்கார்ந்திருக்கும் பொழுது அங்கு வந்தனர் அகிலாவும் கனிமொழியும்.


"அண்ணே, இன்னிக்கு ஜூனியர் ஒருத்தனை போட்டு வாங்கிட்டீங்களாமே?"

"ஆமாங்கா அவன் அழாத குறைதான். எனக்கு ஆச்சர்யம் நம்மாளுக்கு இவ்வளவு தெரியுமான்னு, சும்மா பிசிறு கிளப்பிட்டார். நேத்திக்கு அவர் கேட்டதுக்கும் அதுக்கும், இவர் பேசி முடித்ததும் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்துடலாம்னு பார்த்தேன். ஆனா உண்மையிலே நானே பயந்திட்டேன்."

"இல்லை கனி, லேப் அட்டண்டரை தப்பா பேசியிருக்கான். HOD புலம்புறார். அதான் என்னை விட்டு அடக்கச் சொன்னார்."

"அப்பிடியா, வேணும்னே பழிவாங்குனதா இது. நான் அப்பவே நினைச்சேன். என்னடா இது இப்படி நடந்துக்கிற ஆளில்லையேன்னு. இதுக்கு பின்னாடி இவ்வளவு கதையிருக்கா?" - அகிலா.

"சரி அது போகட்டும் என்னவோ குடுக்கிறேன்னு சொன்னியே, பரவாயில்லை இப்ப கொடு."

"அண்ணே என்ன இது, நான் இங்க இருக்கேன் மறந்திட்டு இரண்டு பேரும் பேசிக்கிட்டிருக்கீங்க." கனிமொழி வேண்டுமென்றே முகத்தை தூக்கிவைத்துக் கொண்டாள்.

(தொடரும்...)

Read More

Share Tweet Pin It +1

2 Comments

In சினிமா நாட்குறிப்பு

தொடர்ச்சியற்ற எண்ணங்கள்

கம்மாட்டிப்பாடம் பார்த்தேன்.

துல்க்கர் சுல்மான் தவிர்த்து படம் நன்றாகயிருந்தது. ரஞ்சித் படம் போல் இருந்தது. இன்னும் கிரிப்பாக மாற்றியிருக்கலாம். ஆனால் மசாலா கூடிவிடுமாயிருக்கும்.

மஹேஷின்ட பிரதிகாரம் படம் பஹத்திற்காகப் பார்த்தேன். மனுஷன் என்னமா நடிக்கிறான். சின்னக் கதையை மலையாளத்தானுங்க எப்படி நல்ல படமா எடுக்குறாங்கன்னு ஆச்சர்யமா இருக்கு.



---------------------------------------------

அசாதாரணமான நேரமொன்றில் நண்பனொருவன் தண்ணியடிக்கலாம் வாயேன் என்று கூப்பிட்டான். அவன் தண்ணியடிப்பதே குறைவு இதில் நான் வேற. என்ன விஷயம் என்றே புரியவில்லை. சரியென்று போயிருந்தேன்.

இரண்டு மூன்று பெக் மன்ஹாட்டன் உள்சென்ற பின் ஆரம்பித்தான். அவன் காசு கொடுத்துச் சென்ற ஒரு பெண்ணைப் போன்ற தோற்றமுள்ள ஒருத்தி அவன் கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்திருக்கிறாளாம். அவளைப் பார்க்கும் பொழுதெல்லாம் மற்ற பெண் ஞாபகம் வந்து வேலை செய்ய முடியாமல் ஆகிறதாம்.

பஃபல்லா விங்க்ஸ் சாப்பிட்டுக் கொண்டிருந்த நான் அடைந்த கடுப்பைச் சொல்லி மாளாது. அவனுடைய ஷூவுக்குள் கால் நுழைத்துப் பார்த்தேன். கொஞ்சம் சங்கடமாகத்தான் இருந்தது.

நான் சொன்னேன், உனக்குன்னு வருது பார் பிரச்சனைகள் சொல்லிவிட்டு அந்தப் புதிதாய்ச் சேர்ந்த பெண்ணிடம் வழக்கத்தை விடவும் இயல்பாய் பழகு என்று. அதுமட்டும் தான் ஒரே வழி, அவளை தவிர்க்க நினைத்தால் இப்படித்தான் லோல்படவேண்டியிருக்கும் என்றேன்.

பேசிப்பார்க்கணும் இப்ப எப்படியிருக்கான்னு.

-----------------------------------

இந்த முறை இந்தியா சென்று வந்ததில் இருந்து மகனிடம் எப்பொழுதும் ஓடிக்கொண்டிருக்கும் ஒரு உரையாடல் மரணம் பற்றியது. மனைவியின் தாத்தா உடல் நலக்குறைவினால் இறந்து போனார், அவருக்கு வயது 92 இருக்கும். உடல்நலமில்லாமல் இருந்து இறந்ததைப் பார்த்த என் மகனுக்கு அதன் காரணம் சொல்லப்பட வேண்டி வந்திருக்கிறது. வயதானால் மனிதர்கள் இறப்பார்கள் என்று எவ்வளவு முடியுமோ அவ்வளவு ரேஷனலாக அவனுக்கு விளக்கியுள்ளனர். மகனுக்கு வயது ஐந்து.

பின்னர் அமெரிக்கா வந்ததில் இருந்து எப்பொழுதெல்லாம் மரணம் பற்றிய காட்சி சினிமாவில் வருகிறதோ அப்பொழுதெல்லாம் இறந்தவருக்கு வயது என்ன என்று கேட்கத் தொடங்கி பின்னால் பின்னலான கேள்விகள். தொடர்ச்சியாக சாவைப் பற்றி மாதம் முழுவதும் பேசிக்கொண்டேயிருந்தோம், அதற்கேற்றார் போல் நாங்கள் பார்த்த படங்களிலும் ஏதோ ஒரு காட்சியில் மரணம் நிகழ்ந்து கொண்டேயிருந்தது.

மக்க கலங்குதப்பா பாடலை ஒருநாள் மகனுக்கு அறிமுகப்படுத்த அவனுடைய ஃபேவரை பாடலானது, பாட்டைப் போட்டுவிட்டு மகனும் மகளும் ஆடுவதை பார்த்துக் கொண்டியேயிருக்கலாம். ஆனால் பிரச்சனை அதுவல்ல. மகனுக்கு அது இறப்பிற்காக பாடுகிறார்கள் என்கிற உண்மை தெரியும். நேற்று ஆப்பிள் பிடுங்கப் போகிறேன் பேர்வழி என்று கிளம்பிய நாங்கள் திரும்பி வரும் வழியில், எங்கிருந்து யோசனை வந்தததோ. அம்மா நீ 92 வயதில் சாகும் பொழுது நான் மக்க கலங்குதப்பா பாட்டைப் போட்டு செலிபிரேட் செய்யறேன்னு என்று ஆரம்பித்தான்.

சாவைப் பற்றிப் பேசுவது என் குடும்பத்தில் பெரிய விஷயம் இல்லை என்பதால் என் மனைவி, நன்னு அது யுவன் அங்கிள் மியூசிக் பண்ணின பாட்டு நீயே மியூஸிக் டைரக்டர் ஆகி ஒரு பாட்டுப் போடணும் என்றதும் என்ன புரிந்ததோ அப்படியே ஆகட்டும் என்று பதில் வேறு. 92 வயதில் என்றால் நானும் மக்க கலங்குதப்பா பாடலைப் போட்டு செலிபிரேட் செய்ய வேண்டியது தான். 

------------------------------------

கமல்ங்கிற ஆள் எவ்வளவு பெரிய நடிகர்ங்கிறதுக்கு ஒரு சின்ன துளி. கிரேசி மோகனுடன் அவர் செய்திருந்த கமல் ஹாஸ்யம் வீடியோவில் இருந்தது.

அவருடைய ஆர் சி சக்தி நடிப்புத்துணுக்கு ஒன்று போதும், அதை உணர. ஒரு செகண்ட்ல எமோட் பண்ண முடிகிறது கமலால்.

கிரேசி மோகனின் உதவாத சில காமடியைப் பொறுத்துக் கொண்டால் ஒரு நல்ல வீடியோ. 



------------------------------------

சில பாடல்கள்

வெளியில் மழை பெய்து கொண்டிருந்தது, நான் பதினொன்று அல்லது பன்னிரெண்டு படித்துக் கொண்டு இருந்திருப்பேன். பேச்சுப் போட்டிக்காக சென்ற இடம். BHEL முத்தமிழ்மன்றம். "காற்றில் எந்தன் கீதம்” பாடலை ஒரு பெண் பாடினாள். மழையா குரலை அவளா நினைவில்லை அவளை பிடித்திருந்தது. அதற்குப் பின் அவளைப் பார்த்ததில்லை.

கல்லூரியில் படிக்கும் பொழுது முபாரக் என்றொரு சீனியர். ராகிங் விஷயத்தில் சண்டை வந்து பின்னர் கிரிக்கெட் விளையாடி ஒன்றாகி பின்னர் வேறொரு பிரச்சனையில் - அவர் ஜூனியர் பெண்ணொன்றை லவ் செய்தார், அதே பெண்ணை சைட் அடித்த சக மாணவன் ஒரு வனால் - சண்டை போட்டு என்று லவ்-ஹேட் ரிலேஷன்ஷிப். ”வெள்ளைப் புறா ஒன்று” பாடலை அவர் கல்லூரிக்காகவும் என்எஸ்எஸ்ற்காகவும் அவர் பாடக் கேட்டிருக்கிறேன். பிரமாதம். இப்பொழுது என்ன செய்கிறார் என்று தெரியாது.

கிராமம் ஒன்றிற்கு வருமாறு நண்பன் அழைத்தான், அவனது சொந்த ஊர் அது, துறையூர் பக்கம் சின்ன கிராமம். நான் எந்தக் கிராமத்திலும் அதற்கு முன் மொத்தமாய் நான்கு நாட்களுக்கு மேல் இருந்ததில்லை. அரிசி மரத்தில் காய்க்கும் வகையறா நான். சத்திரத்தில் இருந்து துறையூருக்கும் துறையூரில் இருந்து கிராமத்துக்கும் என்று இரண்டு பேருந்து. முதலாவது பற்றி ஞாபகம் இல்லை. இரண்டாவதில் நண்பன் அந்தப் பேருந்து ஓட்டுநரின் நண்பன் என்பதால் ஓட்டுநருக்கு அருகில் உட்கார்ந்திருந்தோம். அழகி வந்தது எந்த வருடம்னு தெரியாது. ஆனால் “ஒளியிலே தெரிவது தேவதையா” பாட்டு, பஸ்ஸின் வெளிச்சம் மட்டும் நாலு புறத்திலும். அம்மாவாசை என்று நினைக்கிறேன். படம் வந்து சிலகாலம் ஆகியிருக்கலாம். நான் அப்பொழுது தான் முதன் முதலில் அந்தப் பாட்டைக் கேட்டேன்.

நான் என் வாழ்நாளின் முதல் வேலையை டெல்லியில் பார்த்துவந்தேன். ஆங்கிலமும் வராது இந்தியும் வராது ஆனால் தனியாளாய் டெல்லியில் சமாளித்து வந்தேன். நான் பஸ்ஸில் வேலைக்குச் சென்றுவந்த ஒரு இடம் டெல்லி தான். காலை முனிர்காவிலிருந்து கனாட் ப்ளேஸ் இரவு வாபஸ். அப்படிப்பட்ட ஒரு இரவில் தான் “அல்லா கி பந்தே” பாடலை முதன் முதலில் கேட்டேன். இன்றும் அந்தப் பாடலைக் கேட்டால் ரெட் லைன் பஸ்ஸில் இரவுப் பொழுதொன்றில் கனாட் ப்ளேஸில் இருந்து முனிர்கா திரும்பி வரும் ஞாபகம் பளீரென்று வருகிறது.

புனே ஒரு அழகான நகரம், நான் தாளேவாடாவில் தங்கியிருந்தேன். MIDCயில் வேலை நான் புனே சிட்டிக்கே ஒன்றரை வருடத்தில் மூன்று நான்கு முறைக்கு மேல் சென்றதில்லை. முதல் முறை சொந்தமாக நானே வீடெடுத்துத் தங்கியிருந்தேன். அங்கே ஹோட்டல்களில்(ரெஸ்டாரன்டுகளில்) எப்பொழுது ஓடும் பாடல் "ஆஷிக் பனாயா ஆப்னே” ஹிமேஷ் ராஷ்மியாவின் பாடல். புனே சென்றிருக்காவிட்டால் எனக்கு ஹிமேஷை பிடிக்காமல் இருந்திருந்திருக்கும். புனேவாசிகளுக்கோ நார்த் இன்டியன்களுக்கு இதனால் ஹிமேஷைப் பிடிக்கும் என்று சொல்லவில்லை, ஆனால் என் வரையில் ஹிமேஷின் மேல் புனா பூச்சொன்று உண்டு எப்பொழுதும். நிமிடத்தில் புனே செல்ல நான் பயணிக்கும் ஊர்தியின் பெயர் ஹிமேஷ் ராஷ்மியா.

ராப் பாடலொன்றை முதன் முதலில் என் நண்பர் எனக்குப் போட்டுக் காட்டிய பொழுதும் நான் புனேவில் தான் இருந்தேன். 50 சென்ட் பாடலென்று நினைவு. கடித்துத் துப்புவதைப் போலிருந்த ஒன்றை என்னால் ரசிக்க என கேட்கக் கூட முடியவில்லை ஆனால் நண்பர் கேரளாக்காரர் நடுத்தர உயரம் கண்ணாடி அணிந்து நீங்கள் சினிமாவில் பார்க்கும் ஏமாளி அத்திம்பேர் மாதிரியிருப்பார். ரேப் சைகைகளுடன் அவர் பாடிய பொழுது விசித்திரமாகயிருந்தது. நிச்சயமாக அவர் தான் எனக்கு எமினெம் பாடல்களை .எம்பி3யாகக் கொடுத்தவர். நான் ‘mocking bird' பாடலை அங்கு தான் முதன் முதலில் கேட்டேன். இன்று எனக்கு மகள் உண்டு. 'Now I'm sittin' in this empty house, Just reminiscing, looking at your baby pictures, It just trips me out" வரிகள் என் மகளுக்காக என்றில்லை மகனுக்கும் கூடத்தான். 

Read More

Share Tweet Pin It +1

0 Comments

In தொடர்கதை

உள்ளம் உடைக்கும் காதல் 6


சனிக்கிழமை அகிலாவும் கனிமொழியும் மோகன் வீட்டிற்கு வந்திருந்தார்கள், முதல் முறை இப்பொழுது தான் அவளைக் கவனித்தான். அழகாகத்தான் இருந்தாள், வெளிர் நிறம், வட்டமான முகம், நடுவில் வாகெடுத்து தலை சீவியிருந்தாள். சிறிய நெற்றியில் சந்தனத்தீற்றும் ஒரு குட்டி கறுப்புப் பொட்டும். அன்றும் எப்பொழுதும் போல பாந்தமான நிறத்தில் சுடிதார் அணிந்து வந்திருந்தாள், தோள்களின் இரண்டு பக்கமும் பின் குத்தி துப்பட்டா போட்டிருந்தாள், அவள் அப்படி துப்பட்டா போடாமல் அவன் பார்த்ததேயில்லை, அந்தத் துப்பட்டா அலை அலையாய்ப் பரவி அவளுடைய மேல்பாதி உடலை சுத்தமாக மறைத்திருந்தது. எப்பொழுதுமே நேர்த்தியாகவே அவள் உடை அணிந்திருந்திருக்கிறாள். கைகள் ஒவ்வொன்றிலும் ஒரு தங்க வளையல், கழுத்தில் ஒரு சின்னச் சங்கிலி, காதில் தோடென்று இரு வளையங்கள் என்று அதிகமாக அலங்காரம் செய்து கொள்ளவில்லை. முகத்திற்கு பவுடர் போடுவதில்லை போலிருக்கிறது. மிகவும் நல்ல பழக்கம், பத்து வயதிலிருந்து அவனும் பவுடர் போட்டதில்லை, ஆகா இவளை ரசிக்க ஆரம்பித்து விட்டோம், இது தவறு என்று நினைத்தவனாய் சார்லசுக்கு போன் செய்து அவனை விளையாட வரச்சொன்னான்.


போகும் பொழுது அகிலாவை கூப்பிட்டு, "அகிலா அம்மாகிட்ட ரொம்ப பேசாதே அம்மாவுக்கு பிடிக்காது, அப்பாகிட்ட பேசிடவே பேசிடாதே சொல்லிட்டேன்," சொன்னதும் அகிலா ஆச்சர்யமாகப் பார்த்தாள். "உன் நல்லதுக்குத்தான் சொல்றேன், பேசணும்னா அக்காகிட்ட பேசு என்னோட பொம்பள உருவம் தான் என் அக்கா, ஜாக்கிரதை, வாயைப் புடுங்குவா மாட்டிக்காதே!" அவள் சரி என்று தலையசைத்தாள். ஆனால் அவனுக்கு ஒன்று புரியவில்லை, எதற்காக இதையெல்லாம் இவளிடம் சொல்லிக் கொண்டிருக்கிறான் என்று.

சார்லஸ் வந்தான், அவர்கள் பக்கத்தில் இருந்த ஸ்கூல் கிரௌண்டில் கிரிக்கெட் விளையாடச் சென்றிருந்தார்கள். மூன்று மணி நேர விளையாட்டிற்குப் பிறகு வீடு வந்தபொழுது பூஜை முடிந்திருந்தது, மோகன் அக்கா, கனிமொழி, அகிலா மூன்று பேரும் பேசிக் கொண்டிருந்தார்கள். அவன் நேராக உள்ளே புகுந்து, "மோனா, நான் சொன்னேன்ல அந்தப் பொண்ணு இதுதான்" கனிமொழியும் அகிலாவும் ஒருவரையொருவர் ஒன்றும் புரியாமல் மாறி மாறிப் பார்த்துவிட்டு அவனைப் பார்த்தார்கள்.

"டேய், நீ வந்தவுடனே சொல்றதில்லையா? நான் ஏதோ நம்ம கனியோட வேற ஃப்ரெண்ட்னு நினைச்சேன். இப்ப சைட் அடிக்க உரிமையா வீட்டுக்கே வர ஆரம்பிச்சாச்சா, முன்னையே சொல்லியிருந்தா இந்நேரம் அழவைச்சிருப்பேன்ல, சின்ன பொண்ணுன்னு சொன்ன, பார்த்தா அப்படித் தெரியலையே?" அவள் இன்னொமொருமுறை அகிலாவை மேலும் கீழும் பார்த்தாள்.


"அக்கா, அண்ணே உங்ககிட்ட சொல்லிட்டாரா, எனக்கு உண்மையிலே தெரியாது. இவளை அழவைக்க நீங்க ரொம்ப சிரமப்படவேண்டாம். அண்ணே முறைச்சு ஒரு தடவை பார்த்தாலே அழுதுறுவா. அதுமட்டுமில்லாமல் இவ சிரிச்சா தான் அதிசயம். அண்ணனைப் பார்த்ததில் இருந்து தினமும் அழுகை தான்" கனிமொழி கண்களில் கலவரம் தெரிந்தது. அகிலா எதுவும் பேசவில்லை அவனையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

"மோனா எனக்குத் தெரியாது, நீதான் இவகிட்டையும் இவ தங்கச்சி கிட்டையும் எப்பிடியாவது சொல்லணும், கனியும் சேர்ந்துக்கிட்டு விளையாடுறா, இதெல்லாம் ரொம்ப டிஸ்டர்பென்ஸா இருக்கு. நான் குளிச்சிட்டு வந்துர்றேன். நீ பேசி வச்சிறு."

அக்கா எப்படியும் இவர்கள் இருவரையும் சமாளித்து அகிலாவிற்கு வேண்டிய அறிவுரைகளைக் கொடுப்பாள் என்று நினைத்திருந்தான். அரைமணிநேரம் கழித்து வெளியே ட்ரெஸ் எல்லாம் போட்டுக்கொண்டு வந்து பார்த்த பொழுது, மோகனாவும் அகிலாவும் பேசிக் கொண்டிருந்தார்கள். கனிமொழி சமையல் கட்டில் அம்மாவுடன் பேசிக் கொண்டிருந்தாள்.

"என்ன மோனா, என்ன சொல்றா?"

"பேசினேன், உங்கிட்ட சில கேள்வி கேக்கணும்?" அவள் அவனைக் கூர்மையாகக் கவனித்தப் படியே கேட்டாள்.

"ம்ம்ம் கேளு..."

"இவளை உனக்குப் பிடிக்குமா?"

"என்ன கேள்வியிது?"

"பதில் சொல்லு..."

"இங்கப்பாரு எனக்கு கனிமொழியைக் கூட பிடிக்கும் அந்த மாதிரிதான் கேட்கிறேன்னா, இவளையும் பிடிக்கும். ஏன் கேட்கிற?" ஒரு தேவையில்லாத ஒரு சூழலில் சிக்கிக்கொள்ளத் தொடங்கியதாகப்பட்டது அவனுக்கு.


"இல்லை, என்ன பிரச்சனைன்னு தெரிஞ்சிக்கலாம்னு தான். நான் நினைச்சேன் எல்லா பெண்ணுங்க கூட உனக்கு இருக்கிற மாதிரி எதுவும் ஈகோ பிரச்சனையோன்னு, ஏன்னா உனக்குத்தான் யாரும் உன் கருத்துக்கு எதிர் கருத்து இருந்தா ஒத்துக்க மாட்டே, இந்தப் பொண்ணு முதல் நாளே உன்னை திட்டியிருக்கு, அதனால ஏதும் ஈகோ பிராப்ளமான்னு கேட்டேன்." மோகனாவிடமும் இப்பொழுது விளையாட்டுத்தனம் தெரிந்ததாய்ப்பட்டது அவனுக்கு.

"இல்லை, நிச்சயமா இல்லை, உங்கூட கூடத்தான் பாதி நேரம் சண்டை போடுவேன் அதுக்கா உன்கூட ஈகோ பிரச்சனையா, சின்ன பொண்ணு, பதினேழு, பதினெட்டு வயதிருக்கும். இந்த வயதிலேயே காதல்னா கோபம்தான் வருது. அவங்கப்பா படிக்கிறதுக்கு அனுப்பினா, இவ இங்க வந்து காதல் பண்ணுறா. இப்பவாவது பரவாயில்லை, முன்னாடி எங்க போனாலும் பின்னாலையே வர்றது, வந்து என்னையே பார்த்துக்கிட்டிருக்கிறதுன்னு ஒரே ப்ராப்ளம். இப்ப திட்டினது பிறகு பரவாயில்லை, நான் அவளைப் பார்க்கிறது இல்லை, நல்லா நோட் பண்ணிக்கோ; நான்தான் அவளைப் பார்க்கிறதில்லை. அவள் என்பின்னாடி தான் சுத்துறான்னு நினைக்கிறேன்" சொல்லிவிட்டு அகிலாவைப் பார்த்தான். அவள் தலையைக் குனிந்திருந்தாள்.

"அப்ப உன் பிராப்ளம் அவ வயது, அவ படிப்பு, உன் கான்ஸன்டிரேஷன் அப்பிடித்தானே, அவளை உனக்கு பிடிக்கலை, அழகாயில்லை, எதிர்த்து பேசுறா இதுமாதிரியெல்லாம் ஒன்னுமில்லையே?"

"மோனா என்னயிது?" இது எங்கே போகிறது என்று பாதை தெரியாமல் குழம்பினான்.

"கேட்ட கேள்விக்கு பதில்"

"மேலோட்டமா பார்த்தா ஆமாம், ஆனா இந்தக் காரணங்களுக்காக எல்லாம் நான் அவளைக் காதலிக்க முடியாது. எனக்கு அந்த கான்ஸப்டிலேயே நம்பிக்கையில்லை."

"இங்கப்பாரு உன்னைப்பத்தி எனக்கு நல்லாத் தெரியும். நீ சொன்ன இதையேத்தான் நான் அவகிட்ட சொன்னேன். முதல்ல ஒழுங்கா படி, இன்னும் இரண்டு மூணு வயசு ஆகட்டும். அவனைத் தொந்தரவு பண்ணாதே, அவனை உனக்கு கல்யாணம் பண்ணி வைக்க வேண்டியது என் பொறுப்பு அப்பிடின்னு தான் சொன்னேன்." கட் அண்ட் ரைட்டாக அவள் சொன்னாள்.


"மோனா இது வீண் பேச்சு, நாளைக்கு இவளை விட அழகா ஒரு பொண்ணை பார்த்து நான் அவளைக் காதலிச்சா என்ன பண்ணுவ?" கேட்டுவிட்டு பயத்துடன் அகிலாவைப் பார்த்தான், அழுது தொலைக்கப் போகிறாளோ என்று. அப்படியொன்றும் நடக்கவில்லை.

"இங்கப் பாரு, நான் ஒன்னு சொல்லவா. நீ இவளை காதலிக்கிறன்னு சொல்லமாட்டேன், ஆனா இவளை உனக்கு ரொம்ப பிடித்திருக்கு. அதனாலத்தான் நீ இவளை இங்க வரவைச்சு என்கூட பேசவைச்சிருக்கே, நான் இவகிட்ட என்ன சொல்லுவேண்ணும் உனக்கு தெரியும். அது தான் உன் விருப்பமும். நீ வேலை வாங்கணும். அவளுக்கும் இருபதுக்கு மேல வயசாகணும். ஆனா உனக்கென்னன்னா, எங்க யாராவது மோகன் சின்ன பெண்ணை ஏமாத்திட்டான்னு சொல்லிடுவானோன்னு பயம். அதான் வீட்டுக்கு வரவைச்சு என்ன வச்சு பேசவைச்சு, உன் விருப்பத்தை சொல்லிட்ட, நானும் அம்மாவும் கனியும் பூஜையும் ஒரு கருவி உனக்கு."

"சரி நான் இப்ப என்ன பண்ணனுங்ற?" அப்படியொன்று அவன் மனதில் இல்லாவிட்டாலும் இருந்திருக்க முடியுமோ என்ற கேள்வி அவள் சொன்ன பிறகு வந்தது.

"ஒன்னும் பண்ணவேணாம், ஏற்கனவே இவ உன் முன்னாடி வர்றதில்லை, நான் சொல்லிட்டேன் இனிமே உனக்குத் தெரியாம கூட உன் பின்னாடி சுத்தமாட்டா; ஆனா ஒன்னு, நீ கனிமொழிகிட்டையோ, இல்லை என்கிட்டையோ பேசுற மாதிரி கூட வேணாம். சாதாரணமா ஒரு பெண்ணுகிட்ட பேசுற மாதிரி அவகிட்டையும் பேசு, முக்கியமா பயமுறுத்தாதே. என்ன புரியுதா" கண்டிப்புடன் சொன்னாள்.

"மோனா உன்கிட்ட பிரச்சனையை சால்வ் பண்ண சொன்னா, நீ இன்னும் பெரிசாக்குற?" உண்மையிலேயே புலம்பினான்.

"நீ ஏன் இப்பிடி நினைக்கிற, எப்பிடியிருந்தாலும் ஒரு கல்யாணம் பண்ணிக்கப் போற, அந்தப் பொண்ணு ஏன் இவளா இருக்கக்கூடாதுன்னு தான் கேட்கிறேன்."

"மோனா அது அவ்வளவு சுலபமில்லை, அது அய்யர் பெண்ணு, நைனாவுக்கு தெரிஞ்சதுன்னா அவ்வளவுதான். அது மட்டுமில்லாம எனக்கு அவளைப் பத்தி எதுவுமே தெரியாது." அவளைப் பற்றி அவனுக்கு எதுவும் தெரியாதென்பது எவ்வளவு உண்மை என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டிருந்தான்.

"அதைப் பத்தியெல்லாம் இப்பவே எதுக்கு நினைக்கிற, பிரச்சனைதான் சால்வ் பண்ணுவோம். நான் பேசின வரை உனக்கு ரொம்ப மேட்ச்சான பெண்ணு, அவளைப்பத்தி என்னல்லாம் தெரியணுமோ பேசித் தெரிஞ்சிக்கோ."

"ம்ம்ம்ஹூம், இது சரியாப் படலை. சரி இப்ப என்ன, எனக்கு வேலை கிடைச்சு, இவளுக்கு இன்னும் கொஞ்சம் வயசாகி, நான் கல்யாணத்த பத்தி யோசிக்கும் போதுதானே பிரச்சனையில்லை அதுவரைக்கும் என் மனசு மாறலைன்னா கல்யாணம் பண்ணிக்கிறேன். ஆனா அதுவரைக்கும் இவ என்னை தொந்தரவு பண்ணாமலிருந்தால்."

அகிலா முகத்தில் ஒரு சாந்தமான புன்னகை அரும்பியது, காலையிலிருந்தே அவளை அவன் ஜீனியர் என்கிற விதத்தில் இல்லாமல் ஒரு தோழி என்று பின்னர் என்னைக் காதலிப்பவள் என்று பார்க்கத் தொடங்கியிருந்தான். அதுவரை அவன் கண்களில் படாத அவளுடைய பயம் கொள்ளவைக்காத அழகு அவனைக் கட்டிப்போடத் தொடங்கியது.

அதன் பிறகு அவன் அகிலா அழுது பார்த்ததே கிடையாது. இன்னொரு புது புரோஜக்ட் எடுத்து வேலை பார்க்க ஆரம்பித்தான். கல்லூரிக்கும் வரவேண்டும் ப்ராஜக்ட்டும் பண்ணனும், இதனால் நிறைய நேரம் ட்ராவலுக்கே செலவளிக்க விருப்பமில்லாமல் கல்லூரிக்கு அருகில் ஒரு வீடு எடுத்துக்கொண்டான். ஒரு பழைய கம்ப்யூட்டரும், இன்னொரு கம்ப்யூட்டர் வாடகைக்கு எடுத்து அவனும் சார்லசும் அந்தப் புரோஜக்ட்ல் வேலை செய்ய ஆரம்பித்தார்கள். கொஞ்சம் பெரிய புரோஜக்ட், வெற்றிகரமாக முடித்த புரோஜக்ட் ரெஃபரென்ஸுடன் சென்றதால் கிடைத்தது. இரண்டு மாசம் டெட்லைன் ஐம்பதாயிரம் ரூபாய். சார்லசுக்கு பதினைந்தாயிரம், அவனுக்கு முப்பந்தைந்தாயிரம் என்று டீல்.


பத்து நாள்களில் டெக்ஸ்டாப் கம்ப்யூட்டரை விற்றுவிட்டு இன்னும் கொஞ்சம் பணம் போட்டு ஒரு லாப்டாப் வாங்கினான். புரோஜக்டுக்கு முக்கியமாக இருந்தது. கல்லூரியில் வகுப்புகள் சீரியஸாய் நடக்கத் தொடங்கியருந்த நேரம் அது. அன்றும் காலேஜ் முடிந்த மாலை நேரத்தில் லாப்டாப்பில் டாக்குமென்ட்ஸ் தயார் பண்ணிக் கொண்டிருந்தான். அகிலா வந்து நின்றாள். மனம் ஒருபக்கம் அகிலாவைப் பார்க்க வேண்டும் என்று அரித்துக் கொண்டிருந்தாலும் அவனாய் அவளைப் பார்க்காமல் கட்டுப்படுத்திக் கொண்டிருந்தான்.

"ம்ம்ம் சொல்லு..."

"இன்னிக்கு எனக்கு பிறந்த நாள்... அதான்!" அமைதியாகச் சொன்னாள், அகிலா என்றில்லாமல் பொதுவாய் யாருக்கும் பிறந்தநாள் என்றால் சின்னது முதல் பெரியது வரை ஏதாவது ஒரு பரிசு கொடுப்பது அவனது வழக்கம்.

"ரொம்ப சந்தோஷம், விஷ் யூ அ வெரி ஹாப்பி பர்த்டே, முன்னாடியே சொல்லியிருக்கலாம் இல்ல, நான் ஏதாவது ப்ரஸென்டேஷன் வாங்கி வைத்திருப்பேனே?"

"அதெல்லாம் ஒன்னும் வேண்டாம், ஒரு சின்ன பார்ட்டி. நீங்க, நான், கனி அக்கா மூணுபேரும் ஹோட்டலுக்குப் போய் சாப்பிடலாம் வரீங்களா?"

"ம்ம்ம் போகலாமே, எப்ப?"

"இப்பவே..."

பக்கத்தில் இருந்த ஒரு பெரிய ஹோட்டலுக்கு வந்தார்கள்.

அவனும் கனிமொழியும் பக்கத்தில் உட்கார்ந்து கொள்ள அகிலா எதிரில் உட்கார்ந்தாள். புதுத்துணி போலிருந்தது அவள் அணிந்திருந்த ஊதா நிற சுடிதார். வழமையான அவள் நேர்த்தியுடன் தலையில் ஒரு மஞ்சள் ரோஜாப்பூ பூத்திருந்தது. நினைத்துக் கொண்டான், ‘எனக்கு மஞ்சள் நிறம் பிடிக்குமென்று இவளுக்குத் தெரியுமா’ என்று.


"ஆமா அகிலா உன்னை இப்பெல்லாம் பார்க்கவே முடியறதில்லை, முன்னமாதிரி தானா இல்லை, உண்மையிலேயே படிக்கிறியா?"

"இல்லை உண்மையிலேயே டைம் கிடைப்பதேயில்லை, நிறைய படிக்கவேண்டியிருக்கிறது. ஆனால் உண்மையில் உங்களைத்தான் பார்க்க முடிவதில்லை, காலேஜூக்கு வரீங்களான்னே தெரியலை" அவனைப் பார்க்க முடியாத வருத்தம் தெரிந்தது அகிலாவிடம்.

"ஆமாம் உண்மைதான், அண்ணே நிறைய சம்பாதிக்கிறீங்க ஆனா செலவு செய்து பார்க்கவேயில்லை, சரியான கஞ்சன் நீங்க." என்றாள் கனிமொழி.

"இல்லைம்மா நான் புரோஜக்ட் முடிஞ்சவுடனேயே ஒரு பார்ட்டி தரணும்னு ஆசை. அதுக்குள்ள இவ புகுந்து குட்டையைக் குழப்பிட்டா. அதான் முடியலை. இப்ப சுத்தமா டயமே இல்லை. ரொம்ப பிஸி. ஆமா ரெண்டுபேருக்குமே இந்த செமஸ்டர் சி லேங்குவேஜ் இல்லையா."

"ஆமா, எனக்கு எப்பொழுதையும் போல, ஆனா இவளுக்கு சிலபஸ் மாறியதால் இப்பவே." என்றால் கனிமொழி.

"யார் எடுக்குறா உங்களுக்கு, ஏதாவது புரியுதா?"

"மாணிக்கவாசகம் எடுக்கிறார், ஒரளவுக்கு புரியது, டவுட் கேட்கலாம்னா உங்களைக் காணோம். ஆளை பிடிக்கவே முடியறதில்லை." என்றாள் கனிமொழி.

"என்னாதிது, நான் தங்கியிருக்கிற வீடு தெரியுமில்லை, வரவேண்டியது தானே. ஆமா ரெண்டுபேரும் ஹாஸ்டலில் தானே இருக்கிறீங்க?"

"ஆமா இவளால ஹாஸ்டலில் தான் இருக்கிறோம். ஒரே பயம் அங்க வருவதற்கு, எங்க கடிச்சுடுவீங்களோன்னு? அதுவும் இவளோட மேட்டருக்கு பிறகு நாம பழகின மோகன் அண்ணனான்னு சந்தேகமா இருக்கு."

"இந்த வாரம் சனிக்கிழமை வாங்க, பார்க்கலாம். சீக்கிரமா படிங்கடி எனக்கு புரோஜக்ட்ல ஹெல்ப் பண்ணலாம்ல?"

"உங்களுக்கா? நாங்களா? என்ன விளையாட்டா. சரி எதுல பண்ணுவீங்க நீங்க புரோஜக்ட்." - அகிலா கேட்டாள் சுட்டித்தனமாய்.

"ஜாவாதான் வேறென்ன" பின்னர் கனிமொழி கைகழுவ சென்றிருந்த நேரம்.

“அகிலா எனக்கு உண்மையிலேயே வருத்தமாய் இருக்கு நீ இன்னிக்கு உனக்கு பிறந்தநாள்னு சொல்லியிருக்கலாம். உனக்கு எதுவும் கொடுக்க முடியலையே...” அதுதான் உண்மையில் அகிலாவிடம் அவன் மனம்விட்டு பேசிய முதல் வரிகளாகயிருக்கும். அவளிடம் அப்படி பேசியதே ஆச்சர்யத்தை அளித்திருக்க வேண்டும். அவள் எதுவும் பேசாமல் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

எதையாவது அவளிடம் பேசவேண்டும் என்று மனம் அரித்தது.


“எனக்கு மஞ்சள் நிறம்னா ரொம்ப பிடிக்கும். அதுவும் மஞ்ச ரோஸ்னா ரொம்ப ரொம்ப பிடிக்கும்” மோகனாவிற்கு அடுத்து தன் தனிப்பட்ட விருப்புவெறுப்புக்களை சொல்லிக் கொண்டிருந்தான் அவளிடம்.

சிரித்தாள், “தெரியும். அன்னிக்கு உங்க வீட்டில் அக்கா சொன்னாங்க.” அவள் சொல்லிக் கொண்டிருந்த பொழுது கனிமொழி வந்தாள்.

“சரி நேரமாச்சு, கொஞ்சம் வேலையிருக்கு. வரேன் அப்புறம் பார்ப்போம்." சொல்லிவிட்டு அவர்களைப் பிரிந்தான்.

வெள்ளிக்கிழமை இரவு அவனுக்கு நிறைய வேலை இருந்தது, காலை நாலு மணி வரைக்கும் வேலை பார்த்ததால் ஒன்பது மணி வரைக்கும் தூங்கிக்கொண்டிருந்தான். காலிங்பெல் அடித்தது. திறந்தால் அகிலா நின்று கொண்டிருந்தாள்.

"ம்ம்ம்... வா அகிலா, கனி வரலை."

"இல்லை, உடம்புக்கு சரியில்லை, பொம்பளங்க சமாச்சாரம், சொல்லிட்டமே அதான் பார்த்துட்டு வந்திரலாம்னு வந்தேன்"

"படிக்கிற ஐடியாவில் தானே வந்திருக்க?" என்னவோ கேட்கவேணும் போலிருந்ததால் கேட்டான்.

சிரித்தாள், "வேற எதுக்குன்னு நினைச்சீங்க?"

"இல்ல அதுக்குத்தான், சும்மா கேட்டேன். புக் வைச்சிருக்கிறியா."

"ம்ம்ம், பாலகுருசாமி புக் வைச்சிருக்கேன். உங்க கம்ப்யூட்டர்ல கம்பைலர் இருக்குள்ள?"

"ம்ம்ம் இருக்கு, சொல்லு எங்க ப்ராப்ளம்?"

"சரி ஒரு விஷயம், பாச்சுலர் ரூம் மாதிரியே இல்லையே, பொம்பளைங்க சுத்தம் செய்யுற ரூம் மாதிரியில்ல இருக்கு."

"ஏன் நாங்கல்லாம் சுத்தமா வைச்சிருக்க கூடாதா, சரி இரு குளிச்சிட்டு வந்திர்றேன், அதுவரைக்கும் வேண்டுமானால் கம்ப்யூட்டரை நோண்டிட்டு இரு." குளிக்காமல் ஒரு மாதிரியாக இருந்தது அவனுக்கு.

"சரி பாஸ்வேர்ட் சொல்லுங்க?"

"எங்க நீ சொல்லு பார்க்கலாம்?"

"செகுவாரா?"

"சரிதான் நீ சொன்னது; ஆனா இப்ப மாத்திட்டேன், அகிலாண்டேஸ்வரி தான் பாஸ்வேர்ட்" சொல்லிவிட்டு குளிக்கக் கிளம்பினான்.

(தொடரும்...)

Read More

Share Tweet Pin It +1

4 Comments

In தொடர்கதை

உள்ளம் உடைக்கும் காதல் 5


அடுத்த ஒரு மாதம் அகிலா மோகன் கண்ணில் சிக்கவேயில்லை, சரி பொண்ணு திருந்திவிட்டது என்று நினைத்துக் கொண்டு இவனும் சும்மாயிருந்துவிட்டான். கல்லூரியில் எப்பொழுது வெளியில் போனாலும் அவள் பார்ப்பது போன்ற ஒரு உணர்வு அவனுக்கு வரும், ஆனால் சுற்றிப் பார்த்தால் அவள் எங்கும் இருக்க மாட்டாள். இதெல்லாம் முதல் ஒரு வாரத்திற்குத்தான், பின்னர் உண்மையிலேயே அவளை மறந்துவிட்டிருந்தான். கனிமொழி மட்டும் அவ்வப்பொழுது வந்து அவனைப் பார்ப்பாள், ஏதாவது பேசிக்கொண்டிருந்துவிட்டு செல்வாள், அவ்வளவுதான். அகிலாவை பார்த்து மூன்று வாரம் ஆகியிருக்கும், பின்னர் ஒருநாள் கனிமொழி அவனைப் பார்க்க வந்திருந்தாள், அவள் பின்னாடியே யாரோ வருவது போல் இருந்தததால், யாரென்று கனிமொழி பின்னால் பார்க்க முயற்சித்தான்.

"யாரண்ணே தேடுறீங்க, உங்க லவ்வரையா?" நக்கலடித்தாள்.

"கனி, என்ன விளையாட்டிது, அவளே விட்டுட்டாலும் நீ விடமாட்டே போலிருக்கே?" உண்மையிலேயே கவலையுடன் கேட்டான்.

"அவ விட்டுட்டாளா, யார் சொன்னது?" அவள் முகத்தில் புன்னகை அரும்பியது விளையாட்டுத்தனத்துடன்.

"பின்னே என்ன, நான் அவளைப் பார்த்தே பல வாரம் ஆகுது, சரி அவ என்னதான் சொல்றா?"

"ரொம்ப சந்தோஷமா இருக்கிறா, நீங்கதான் யாரையும் காதலிக்கலைன்னு சொல்லீட்டீங்களாமே, அதனால அன்னிலேர்ந்து ஒரே ஆட்டம் தான். நீங்க தான் அவளை பார்க்கலைன்னு சொல்றீங்க. அவளைப் பார்த்தா அப்படி தெரியலை, ஒரு வேளை உங்களுக்கு தெரியாம, சுத்திக்கிட்டிருக்கிறாளோ என்னவோ?" அவளுக்கு நன்றாகவே தெரிந்திருக்கவேண்டும். ஆனால் சமாளித்தாள்.

"எப்பிடியோ போகட்டும், இந்த பயம் இருந்தா சரி, அதுமட்டுமில்லாம என் வம்புக்கு வராம இருந்தா ரொம்ப நல்லது." அவன் வரைக்கும் அகிலா விஷயம் வராமல் இருந்தால் சரிதான் என்று நினைத்து தன்னையே சமாதானப்படுத்திக் கொண்டான்.

இந்த நிகழ்ச்சி நடந்து முடிந்த பிறகும் இரண்டு வாரங்கள் திரும்பவும் அவன் அவளைப் பார்த்திருக்கவில்லை, அன்றைக்கு மோகன் சந்தோஷமாக இருந்தான், அவனாக தேடி அலைந்து கஷ்டப்பட்டு எடுத்துச் செய்து கொண்டிருந்த ப்ரோஜட் ஒரு வழியா நல்ல விதமாக முடிந்து கிளெயண்ட் கிட்ட காட்டியிருந்தார்கள். பின்னர் கொஞ்சம் ரெக்வயர்மெண்ட் சேஞ்சும் நிறைய பக் ஃபிக்ஸிங் எல்லாம் முடிஞ்சு நாலேஞ் ட்ரான்ஸ்ஃபரும் ஆகியிருந்தது. ப்ரொஜக்ட் கொடுத்த முதலாளி அன்றைக்குத்தான் இருபதாயிரம் ரூபாய்க்கு செக் குடுத்திருந்தார். அதுமட்டுமில்லாமல் அவன் காலேஜ் ப்ராஜக்ட்க்கும் இதை உபயோகப்படுத்தக் கொள்ளலாம் என்றும் என்ன சர்டிபிகெட் வேணுமின்னாலும் வாங்கிக்கொள் என்றும் சொல்லியிருந்தார்.


ஆறு மணிக்கு கல்லூரிக்கு அருகில் உள்ள ஒரு மரத்தடியில் உட்கார்ந்து அவனும் சார்லசும் பேசிக் கொண்டிருந்தார்கள். தூரத்தில் கனிமொழியும், அகிலாவும் நடந்து வருவது தெரிந்தது. என்னமோ அன்றைக்கு அகிலாவை வம்பு இழுக்கணும் போல் இருந்தது அவனுக்கு. ஆனால் எதற்கு வேலியில் போற ஓணானை எடுத்து வேட்டியில் விட்டுக்கணும் என்று பேசாமல் இருந்தான். சொல்லப்போனால் ஒரு மாதம் கழித்து அவளைப் பார்க்கிறான். அவர்கள் இவர்களை நோக்கித்தான் வந்தார்கள். ஏதோ ஒரு பிரச்சனையில் இருப்பதை அவர்கள் முகம் காட்டிக் கொடுத்தது.

"அகிலா உங்ககிட்ட தனியா பேசணுமாம்," என்றாள் கனிமொழி

"முடியாது!" கண்டிப்புடன் சொன்னாலும் அவனிடம் விளையாட்டுத்தனம் வந்திருந்தது.

"அண்ணே கொஞ்சம் சீரியஸ்." கனிமொழி புலம்பினாள்.

"நீயே சொல்லு கனி!"

"அவதான் சொல்லணுமா, என்னன்னு தான் கேளுங்களேன்.."

அவளிடம் திரும்பி, "சரி சொல்லு!" கேட்டான்.

"தனியா பேசணும்..." சொல்லிவிட்டு குனிந்து கொண்டாள். அவன்  சொல்லாமலே சார்லசும் கனி மொழியும் நடக்கத் தொடங்கியிருந்தார்கள்.


அகிலா "ஒரு பிரச்சனை.." நிமிர்ந்து ஒரு முறை அவன் கண்களைப் பார்த்துவிட்டு பின்னர் தலையை குனிந்தபடியே சொல்ல ஆரம்பித்து பின்னர் தொடராமல் நிறுத்தினாள்.

"என்ன பிரச்சனை?"

"என் கூடப்படிக்கிற ஒரு பையன் என்னை காதலிக்கிறேன்னு சொல்றான், எனக்கு பயமா இருக்கு." அவள் கண்களில் பயம் தெரிந்தது. அவன் அவளுடன் விளையாடும் ஆசையில் இருந்தான்.

சந்தோஷமாய், "கன்கிராட்ஸ், ரொம்ப சந்தோஷம். அப்ப இனிமே என்னை விட்டுறுவ." நக்கலடித்தான்.

"ம்ம்ம், சீரியஸ்..." கண்களில் கோபம் தெரிந்தது.

"சரி பிரச்சனை பண்றானா?"

"இல்லை பிரச்சனையெல்லாம் ஒன்னும் பண்ணலை, லெட்டர் எழுதிக் கொடுத்தான் அதான்"

"இதிலென்ன பிரச்சனை, பிடிக்லைன்னா பிடிக்லைன்னு சொல்லு, பிடிச்சிருந்தா லவ் பண்ணு, இதுக்கு என்னை ஏன் கேட்குற?" அவன் சொல்லிமுடித்ததும் தான் தாமதம், அழ ஆரம்பித்துவிட்டாள். இதுதான் முதல் முறை அவன் குடும்பத்தில் இல்லாத பெண் அவன் முன்னாடல் இப்படி அழுவது.

"ஏய் நான் என்ன சொன்னேன்னு இப்பிடி அழுது ஆர்ப்பாட்டம் பண்ணுற?" கத்தினான்.

"நான் உங்களைக் காதலிக்கிறேன்னு தெரியும் உங்களுக்கு, இருந்தும் இன்னொருத்தனை காதலின்னு சொன்னா அழாம என்ன பண்ணுறதாம்" அவள் அவன் கண்களையே கவனித்தபடி சொன்னாள், அவன் இதற்குச் சொல்லப்போகும் பதிலை எதிர்பார்த்தபடி இருந்து அவளது கண்கள்.

"இதென்னடி வம்பாயிருக்கு, நானா உன்னை காதலிக்க சொன்னேன், ஒரு மாசத்தில திருந்திட்டேன்னு நினைச்சேன் இல்லையா?" விட்டேத்தியாகப் பதில் சொன்னான்.

"அது நமக்குள்ள உள்ள பிரச்சனை, நாம பேசி தீர்த்துக்கலாம். இதுக்கு ஒரு வழி சொல்லுங்க" அவள் சொன்னதும் “தோ பாருடா” என்று நினைத்துக் கொண்டவனாய், "என்ன சொல்லச் சொல்லுற?" அமைதியாகவே கேட்டான்.

"நான் அவன்கிட்ட, 'இந்தமாதிரி நான் மோகனை காதலிக்கிறேன், நீ வேற யாரையாவது பார்த்துக்கோ'ன்னு சொல்லப் போறேன்; இதுல நீங்களும் இருக்கிறதால உங்ககிட்டையும் சொல்றேன்" சொல்லிவிட்டு நிமிர்ந்து பார்த்தாள். அவளிடம் ஒரு தெளிவு இருந்தது அது மோகனை ரொம்பவும் சீண்டியது.

"நீ எனக்கு செருப்படி வாங்கித்தரப்போற, அதானே?" கொஞ்சம் கோபமாகக் கேட்டான், திரும்பவும் அழத் தொடங்கினாள். அவன் அப்பொழுது எதுவும் பேசாமல் இருந்தான். சிறுது நேரத்தில் அங்கு வந்த கனிமொழி, "திரும்பவும் அழவுட்டுட்டீகளா, என்னண்ணா இது, சின்னப் பொண்ணை எப்பப் பார்த்தாலும் அழவைச்சி வேடிக்கை பார்க்கிறது."

கனிமொழியிடம் "அவ யார்கிட்டையும் எதுவும் பேச வேண்டாம், நான் அவன் கிட்ட பேசிக்கிறேன், கூட்டிட்டு போ இவளை இங்கிருந்து, எப்பப்பாரு அழுமூஞ்சியாட்டம் அழுதுகிட்டு" சொல்லி அவர்களை அனுப்பிவிட்டு, அடுத்த நாள் அந்தப் பையனை அழைத்து கண்டித்து அனுப்பினான். அவன் "இல்லை தெரியாமல் செய்துட்டேன் விஷயத்தை பெரித்தாக்காதீர்கள்" என்று சொல்லிவிட்டுச் சென்றான்.

அதென்னமோ ப்ரோஜக்ட் நல்லா முடிஞ்சதில் இருந்தே அகிலா ஞாபகமாவே இருந்தது, அந்தப் பிரச்சனைக்கு பிறகும் கூட அவளைப் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை, ஆனால் அவள் ஒளிந்து விளையாடிக் கொண்டிருந்தாள் என்று தோன்றியது. அவனுக்கும் விளையாட வேண்டும் போல் தோன்றியது வாஸ்தவம் தானே, அதனால் ஒரு நாள் விடுமுறை எடுத்துவிட்டு பக்கத்து ஊரில் இருக்கும் பாட்டியை பார்க்க சென்றுவிட்டான். அடுத்த நாள் கல்லூரியில் முதல் மூணு மணிநேரமும் கம்ப்யூட்டர் லேப், அகிலாவுடைய கிளாசுக்கு பாடம் எடுக்க வேண்டிய லெக்சரர் வரவில்லை.

Head of the Department அவனிடம் வந்து, "தாஸ், கொஞ்சம் டைட் ஸெட்யூல், நீ அந்த ஃபர்ஸ்ட் இயர் ஸ்டுடண்டுகளுக்கு ஏதாச்சும் பாடம் எடுத்துட்டு வந்திரேன்?" என்றார்.

"சார் சொல்றனேன்னு தப்பா நினைக்கக் கூடாது, எனக்கு உடம்பு சரியில்லை, வேணும்னா அவங்களை லேப்புக்கு வரச் சொல்லுங்களேன்" சொன்னதும், HOD, அப்பிடியா, உடம்பு சரியில்லையா பரவாயில்லை, லேப்புக்கு வரச்சொல்லிவிடு என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார்.


அட்டெண்டர் ஒருவரிடம் சென்று அவர்களை லேப்பிற்கு வரச்சொல்லிச் சொல்லிவிட்டு, பிறகு நேராக சார்லஸிடம் வந்து, "சார்லஸ், அவ வருவா. நான் இல்லைன்னா நிச்சயம் உன்கிட்ட வந்து கேட்பா, நீ எனக்கு உடம்பு சரியில்லைன்னும் ரெஸ்ட் ரூமில் இருக்கிறேன்னும் சொல்லு!" சொன்னதும் சார்லஸ், "மாமா, எதுக்குடா இது. இதுவரைக்கும் சரியா போய்க்கிட்டிருந்த நீ இப்ப ரூட் மாத்தறாப்புல இருக்கு." என்றான்.

"ரூட்டும் மாறலை ஒன்னும் மாறலை, அவ என்கிட்ட கண்ணாம்மூச்சி விளையாடுறா அதான்," சொல்லிவிட்டு அட்மின் ரூமிற்குள் சென்றான். அங்கே விசேஷம் என்னவென்றால், அட்மின் ரூமிலிருந்து லேப்பைப் பார்க்க முடியும் ஆனால் லேப்பில் இருந்து உள்ளே பார்க்க முடியாது. இது மாணவர்கள் தப்பு எதுவும் பண்ணாமல் இருப்பதற்காக உருவாக்கப்பட்டது.

சிறிது நேரத்தில் லேபிற்கு வந்தாள், எங்க கிளாஸ் தான் உள்ளேயிருக்கிறதுன்னு தெரிந்து கொண்டதும் என்னைத் தேடினாள். நான் இல்லாததால், நேரே சார்லஸிடம் போய் என்னவோ கேட்டாள். பின்னர் நேராக அவளுக்கு ஒதுக்கப்பட்டிருந்த இருக்கையில் உட்கார்ந்தாள். கால் மணிநேரம் இருக்கும், நேராக லேப் அட்டெண்டரிடம் போய் என்னவோ சொன்னாள், வேறு என்னவாயிருக்கும் அவளுக்கும் உடம்பு சரியில்லைன்னு சொல்லி ரெஸ்ட் ரூமிற்கு வர நினைத்திருப்பாள்.


அவள் லேபை விட்டு வெளியே வந்தாள், அவனும் அவள் பின்னே லேப்பை விட்டு வெளியே வந்து பின்னாலிருந்து அவள் தோளைத் தொட்டான். பயந்து திரும்பியவளிடம், "ஏய் லேப்பில் இல்லாமல், எங்கடி ஊர் சுத்திக்கிட்டிருக்க?" கேட்டான்.

அவள், "சே..., நீங்கதானா, நான் பயந்திட்டேன். பின்னாலேர்ந்தெல்லாம் தொடாதீங்க பயமாயிருக்கு. ஆமா உங்களுக்கு உடம்புக்கு என்ன?" என்று கேட்டாள்.

"இனிமேல் தொடலை, ஏன் உடம்புக்கு ஒன்னுமில்லையே"

"நான் பயமுறுத்தாதீங்கன்ற அர்த்தத்தில் தான் சொன்னேன்." விளக்கம் வேறு சொன்னாள். "நேத்திக்கு நீங்க வரலை, இன்னிக்கு சார்லஸ் சொன்னார் உங்களுக்கு உடம்பு சரியில்லைன்னு அதான் கேட்டேன்".

"எனக்கு உடம்பு சரியில்லைன்னா உனக்கென்ன?" சொல்லிவிட்டு அவளையே பார்த்தான். மூஞ்செல்லாம் சிவந்து போனது உடனே, "ஏய் அழுதுத் தொலையாதே, இது காலேஜ், என் சீட்டைக் கிழிச்சிருவாங்க."

"அழமாட்டேன், பயப்படாதீங்க. உடம்புக்கு ஒன்னும் பிரச்சனை இல்லைல்ல, நீங்க இன்னிக்கும் லீவு போட்டிருந்தீங்கன்னா. உங்க வீட்டுக்கே வந்திருப்பேன்."

"வருவே, வருவே. எங்கம்மாகிட்ட போட்டுக் குடுத்துருவேன். நீ என்னை காலேஜூல மிரட்டுறன்னு"

"நானா மிரட்டுறேன், நீங்கதான் சந்திச்ச முதல் நாளே கன்னத்தில் அறைஞ்சீங்க, அப்புறம் தினம் தினம் அழவைச்சுக்கிட்டிருக்கீங்க. நானும் சொல்றேன் அத்தைகிட்ட"

"சொல்லுவடி, சொல்லுவ..." சொல்லிக் கொண்டிருக்கும் பொழுது கனிமொழி அங்கே வந்தாள்.

"அய்யோ காதலர்கள் பேசும் போது குறுக்கே வந்திட்டனோ?"- கனிமொழி.

"கனி, என்னம்மா இது. உனக்கு எத்தனை தடவை சொல்றது. என்னய கேட்டா உன் பேருலத்தான் தப்பு. இவளை அதட்டி வைக்காம நீதான் தூண்டிவிட்டுக்கிட்டு இருக்க. இது ரொம்ப தப்பு"

"ஆமா தப்பெல்லாம் என் பேருலத்தான், உங்காளுக்கு ஒன்னுமே தெரியாது, பப்பா பாரு." கனிமொழி சீண்டினாள், ஆனால் அவள் உங்காளுக்கு என்று சொன்னதை அவன் கண்டுகொள்ளவில்லை.


"ம்ம்ம், இங்கப்பாரு உங்ககூட வெட்டிப்பேச்சு பேச எனக்கு நேரம் இல்ல, நானே உன்னை பார்க்ணும்னு நினைச்சேன். அம்மா உன்னை கூட்டிட்டு வரச்சொன்னாங்க. இந்த வாரம் வீட்டில ஏதோ விசேஷமாம். ஞாயிற்றுக்கிழமை வந்திரு என்ன?" சொன்னவுடன் அகிலா தலையைக் குனிந்து கொண்டாள். அவளை கூப்பிடவில்லை என்றவுடன் அவள் வருத்தப்பட்டது தெரிந்தது, இன்னும் கொஞ்சம் வம்பிழுப்போம் என்று நினைத்தேன்.

"அண்ணே என்ன இது, அகிலாவை கூப்பிடுறதில்லையா? உங்க லவ்வரா இல்லைன்னா கூட என் தங்கச்சின்னாவது கூப்பிடலாமில்லை"

"கனி அவரை ஏன் வற்புறுத்துற? அவருக்குப் பிடிக்கலைன்னா விட்டிரு!"  அகிலா ரொம்பவும் பிகு பண்ணினாள்.

"கனி, அவளையும் கூட்டிட்டு வா, ஆனா வந்தா சும்மா இருக்க மாட்டாளே, அத்தேம்பா, கால்ல விழுவா, ஓவரா பில்டப் கொடுப்பா, அதான் பயமாய் இருக்கு. நார்மலா நடந்துப்பான்னா கூப்பிட்டு வா," அவளைப் பார்த்து சொல்லிவிட்டு அவன் நகர்ந்தான்.

Read More

Share Tweet Pin It +1

7 Comments

In டெம்ப்ளேட் ப்ளாக்கர் தீம் ஜாவா ஸ்கிரிப்ட்

ப்ளாக்கிற்கு புது சட்டை உடுத்தின கதை



வெப்சைட் ஒன்றில் இருந்து திருடி(விளக்கமாக சொல்கிறேன்) என் ப்ளாக்கிற்கு புது சட்டை மாட்டினேன். பிரச்சனை அதுவல்ல. புதுச்சட்டை என் ப்ரொக்கிராமர் ஈகோவைத் தொட்டது.

தீம்/டெம்ப்ளேட் இது தான்.

சட்டையை மாட்டிவிட்டு பின்னர் திருத்தங்களைச் செய்து கொண்டிருந்தேன்.(இன்னமும் முடிந்தபாடில்லை). அங்கெல்லாம் பிரச்சனையில்லை, பின்னர் சட்டையின் அடியில் பார்க்கும் பொழுது தான் பிரச்சனை வந்தது, ப்ளாக்கர் டெம்ப்ளேட் தீம் கொடுத்தவன் பெயரில், அதாவது ஃபுட்டரில். 

© 2016Mohandoss. Designed With By Free Blogger Templates

இது தான் மொத்தப் பிரச்சனை, ப்ரொக்ராம் செய்ய ஆரம்பித்திருக்கும் வாண்டுகளைக் கேட்டால் கூட சொல்லும் இதை நீக்குவது பிரச்சனையாய் இருக்காது என்று. அங்கே தான் அந்த ஈகோ டச்சிங் மேட்டர் நடந்தது. 

சுலபமாய் அதை நீக்க முடியவில்லை. 

ஒரு சின்ன டிவ்,


அவ்வளவு தான் மேட்டர், திரும்பவும் வாண்டு பிரச்சனை, அந்த டிவ்வில் இருந்த டெக்ஸ்டை மாற்றினால் சரியாகிவிடும் என்று நினைத்தால் அதுவும் இல்லை. சரி டிவ்வையே மொத்தமாக தூக்கிவிடலாம் என்ற முன்யோசனையின்றி நினைத்த பொழுது தான் பிரச்சனை பூதாகரமானது. டெம்ப்ளேட்/தீம்-ஐ உபயோகிக்க முடியாமல் அந்த டிவ்வை நீக்கியது. என் பதிவு நேராய் அந்த டெம்ப்ளேட் டிசைன் செய்தவர் பதிவுக்குச் சென்றது. 

அப்படியும் முட்டி மோதி சரி ஜாவாஸ்க்ரிப்ட் வைத்துத்தான ஜாலம் காட்டுறீர், வாரும் பிள்ளாய் என்று மொத்த ஜாவாஸ்கிரிப்டையும் நீக்கினேன். எனக்கு தேவையான மாதிரி ஃபுட்டர் வந்தாலும் இந்தச் சட்டையில் நான் ரசித்த விஷயங்கள் இல்லாமல் போனது. அதற்குக் காரணம் நான் மொத்தமாய் எல்லாம் ஜாவாஸ்க்ரிப்டையும் நீக்கியிருந்தது. 

நான் அடைந்த கோபத்தை சொல்லித் தீர்க்கமுடியாது. சரி ஃபுட்டர் தானே ஒரு லைன், நம்ம ப்ளாக்கையே படிக்கமாட்டாங்க ஃபுட்டரையா மதிக்கப்போறாங்கன்னு விட்டிருக்கலாம் தான் ஆனால் ஈகோ விட்டுக்கொடுக்க விடலை. வக்காலி இருங்கடா வர்றேன் என்று ஜாவா ஸ்கிரிப்டை திரும்பவும் நுழைத்து என்ன எழவுதான் எழுதியிருக்கிறான்கள் என்று பார்த்தால். அங்க இருந்தது இன்னொரு டிவிஸ்ட். 

நேரடியான ஆங்கிலத்தில் எழுதாமல் எல்லாவற்றையும் ஹெக்ஸாடெஸிமலில் எழுதியிருந்தார்க்கள். அதாவது இப்படி,

var _0xd162=["\x73","\x72\x65\x70\x6C\x61\x63\x65","\x73\x72\x63","\x61\x74\x74\x72","\x77\x69\x64\x74\x68","\x68\x65\x69\x67\x68\x74","\x65\x61\x63\x68","\x69\x6D\x67","\x66\x69\x6E\x64","\x2E\x61\x76\x61\x74\x61\x72\x2D\x69\x6D\x61\x67\x65\x2D\x63\x6F\x6E\x74\x61\x69\x6E\x65\x72","\x72\x65\x61\x64\x79","\x6F\x6E\x6C\x6F\x61\x64","\x74\x65\x6D\x70\x6C\x61\x74\x65\x63\x6C\x75\x65","\x67\x65\x74\x45\x6C\x65\x6D\x65\x6E\x74\x42\x79\x49\x64","\x68\x72\x65\x66","\x6C\x6F\x63\x61\x74\x69\x6F\x6E","\x68\x74\x74\x70\x3A\x2F\x2F\x77\x77\x77\x2E\x74\x65\x6D\x70\x6C\x61\x74\x65\x63\x6C\x75\x65\x2E\x63\x6F\x6D\x2F","\x73\x65\x74\x41\x74\x74\x72\x69\x62\x75\x74\x65","\x72\x65\x66","\x64\x6F\x66\x6F\x6C\x6C\x6F\x77","\x74\x69\x74\x6C\x65","\x46\x72\x65\x65\x20\x42\x6C\x6F\x67\x67\x65\x72\x20\x54\x65\x6D\x70\x6C\x61\x74\x65\x73","\x73\x74\x79\x6C\x65","\x64\x69\x73\x70\x6C\x61\x79\x3A\x20\x69\x6E\x6C\x69\x6E\x65\x2D\x62\x6C\x6F\x63\x6B\x21\x69\x6D\x70\x6F\x72\x74\x61\x6E\x74\x3B\x20\x66\x6F\x6E\x74\x2D\x73\x69\x7A\x65\x3A\x20\x69\x6E\x68\x65\x72\x69\x74\x21\x69\x6D\x70\x6F\x72\x74\x61\x6E\x74\x3B\x20\x63\x6F\x6C\x6F\x72\x3A\x20\x23\x34\x32\x34\x32\x34\x33\x21\x69\x6D\x70\x6F\x72\x74\x61\x6E\x74\x3B\x20\x76\x69\x73\x69\x62\x69\x6C\x69\x74\x79\x3A\x20\x76\x69\x73\x69\x62\x6C\x65\x21\x69\x6D\x70\x6F\x72\x74\x61\x6E\x74\x3B\x20\x6F\x70\x61\x63\x69\x74\x79\x3A\x20\x31\x21\x69\x6D\x70\x6F\x72\x74\x61\x6E\x74\x3B","\x69\x6E\x6E\x65\x72\x48\x54\x4D\x4C","\x6C\x65\x6E\x67\x74\x68","\x23\x74\x65\x6D\x70\x6C\x61\x74\x65\x63\x6C\x75\x65\x3A\x76\x69\x73\x69\x62\x6C\x65"]

முதலில் இது என்ன எழவு என்று புரிய கொஞ்ச நேரம் ஆனது. பின்னர் புரிந்ததும், நான் இதை இப்படி மாற்றி, வைத்துக்கொண்டேன். 

var _0xd162=["length","random","floor","entry","feed","
","write","$t","title","term","category","link","rel","alternate","href","replies","type","text/html"," ","split","content","summary","...","published","",”","","","","onload","templateclue","getElementById","location","http://www.templateclue.com/","setAttribute","ref","dofollow","Free Blogger Templates","style","display: inline-block!important; font-size: inherit!important; color: #424243!important; visibility: visible!important; opacity: 1!important;","innerHTML","#templateclue:visible"]

இடைப்பட்ட காலத்தில் மொத்தப் பிரச்சனைக்கும் காரணம் டிவ்வில் இருந்த, templateclue இந்த ஐடி தான் காரணம் என்பதை உணர்ந்திருந்தேன். பின்னர் இந்த வேரியபிள்களை என்னதான் செய்யறான்கள் என்று பார்த்தால், அதையும் நேரடியாக உபயோக்கிவில்லை பின்னர் அதை இன்னொரு வேரியபிளுக்கு மாற்றி,

_0x1580[0],_0x1580[1],_0x1580[2],_0x1580[3],_0x1580[4],_0x1580[5],_0x1580[6],_0x1580[7],_0x1580[8],_0x1580[9],_0x1580[10],_0x1580[11],_0x1580[12],_0x1580[13],_0x1580[14],_0x1580[15],_0x1580[16],_0x1580[17],_0x1580[18],_0x1580[19],_0x1580[20],_0x1580[21],_0x1580[22],_0x1580[23],_0x1580[24],_0x1580[25],_0x1580[26],_0x1580[27],_0x1580[28],_0x1580[29],_0x1580[30],_0x1580[31],_0x1580[32],_0x1580[33],_0x1580[34],_0x1580[35],_0x1580[36],_0x1580[37],_0x1580[38],_0x1580[39],_0x1580[40],_0x1580[41],_0x1580[42],_0x1580[43],_0x1580[44],_0x1580[45],_0x1580[46],_0x1580[47],_0x1580[48],_0x1580[49],_00x1580[51],_0x1580[52],_0x1580[53],_0x1580[54],_0x1580[55],_0x1580[56],_0x1580[57],_0x1580[58],_0x1580[59],_0x1580[60],_0x1580[61],_0x1580[62],_0x1580[63],_0x1580[64]

இப்படி மாற்றியிருந்தார்கள். இவையெல்லாமே அந்த ஒரு ஃபுட்டரை நீக்கக்கூடாது என்பதற்காக எழுதியது என்பது தான் இதில் பியூட்டியே. சரிடா இப்படியே எவ்வளவு தூரம் தான் போறீங்கன்னு பார்ப்போம்னு என்று இன்னமும் நோண்டினால் இந்த ஸ்கிரிப்ட். 


function(){
var _0x8146x15=document[_0xf256[54]](_0xf256[53]);
if(_0x8146x15== null){
window[_0xf256[55]][_0xf256[14]]= _0xf256[56]};
_0x8146x15[_0xf256[57]](_0xf256[14],_0xf256[56]);
_0x8146x15[_0xf256[57]](_0xf256[58],_0xf256[59]);
_0x8146x15[_0xf256[57]](_0xf256[8],_0xf256[60]);
_0x8146x15[_0xf256[57]](_0xf256[61],_0xf256[62]);
_0x8146x15[_0xf256[63]]= _0xf256[60];
setInterval(function(){
if(!$(_0xf256[64])
[_0xf256[0]]){
window[_0xf256[55]][_0xf256[14]]= _0xf256[56]}},3000)
}

இதுதான் மொத்த லாஜிக்கும் - அதாவது templateclue என்கிற ஐடியை டெம்ப்ளேட்/தீம்-இல் இருந்து எடுத்தால்/மாற்றினால் தீம் செய்தவனின் வெப்சைட் செல்லும் கோட். முக்கிமுக்கி இதுவரை வந்து, மொத்த ஜாவா ஸ்க்ரிப்டில் இந்தப் பகுதியை மட்டும் நீக்கிவிட்டுப் பார்த்தால், திரும்பவும் அதே பிரச்சனை. 

இங்க தான் நான் அந்த கோட் எழுதிய மனுஷனை பாராட்ட நினைத்தேன். ப்ரில்லியண்ட் ஐடியா. நானும் வேறொரு நாளாக இருந்தால் போங்கடா மயிரானுங்களான்னு போயிருப்பேன். எனக்கு இது சுரண்ட சுரண்ட தங்கம் கிடைக்கும் சுரங்கம் போல் இருந்தது. 

பின்னர் இன்னும் கொஞ்சம் நோண்டிப்பார்த்ததில், இந்த ஜாவா ஸ்கிரிப்டையே நாலு தரம் காப்பி/பேஸ்ட் செய்து வைத்திருந்தது தெரியவந்தது. இதெல்லாம் 90% சக்செஸ் என்று தெரிந்த பின் கண்டுபிடித்தது. பின்னர் எல்லா ரெஃபரென்ஸையும் தூக்கிவிட்டுப் பார்த்தால், இந்த தீம்/டெம்ப்ளேட் எழுதியவனின் விவரம் இல்லாத ஃபுட்டருடன் என் ப்ளாக் அழகாகக் காட்சியளித்தது.

ஒரு லைன் அந்த ஃபுட்டரை எடுக்க எனக்கு ஒன்றரையிலிருந்து/இரண்டு மணிநேர உழைப்பு தேவைப்பட்டது. ஆனால் பலகாலம் கிடைக்காத ஒரு நிறைவு © 2016 Being Mohandoss. என்று என் பெயரை மட்டும் சொல்லும் ஃபுட்டருடன். இதுக்கு இவ்வளவு அலப்பரையா என்றால் அதற்குத்தானே அத்தனை கோட் எழுதியிருந்தது என்பதை மட்டும் சொல்லிக் கொள்கிறேன். 

Read More

Share Tweet Pin It +1

3 Comments

In சிறுகதை

ஓடிப்போனவளது வீட்டின் மரணம்



வாங்க என்ன வெளியிலேயே நின்னுட்டீங்க, உள்ள வாங்க என்னடா இந்த வீடு கூட அமைதியா இருக்கேன்னு பார்க்கிறீங்களா? ம்ஹும் என்ன செய்றது அப்படியாய்ப்போச்சு, உங்களை முன்னாடியே ஒருதரம் இங்க பார்த்த மாதிரியிருக்கே? ம்ம்ம் ஞாபகம் வந்திருச்சு போனதடவையும் இந்த வீடு அமைதியா இருந்த ஒரு நாள் நீங்க வந்திருந்தீங்கள்ள, ஞாபகம் வந்திருச்சு. சரி, சரி வெட்டிப் பேச்சு பேசிக்கிட்டிருக்கேனே உள்ள வாங்க.

மறந்திடாம காலில் போட்டிருக்கிறதை வெளியக் கழட்டிப்போட்டுட்டு வந்திருங்க, இந்த வீட்டம்மாவுக்கு சுத்தமா பிடிக்காது, சூடா ஆவிபறக்கிற அந்தம்மாவோட மணமான காபியை எதிர்பார்த்து வந்திருந்தீங்கன்னா சாரி, அம்மா நேத்திலேர்ந்து காபி போடுவதை நிறுத்திட்டாங்க. இன்னும் என்னவெல்லாம் எங்க பழக்கவழக்கத்தில் இருந்து மறையப்போகுதோ? ஆண்டவா அய்யோ ஆண்டவனைக் கூப்பிடுறேனே நான் நாத்தீகவரியில்லையா? ஒரு வேளை மறந்திட்டனோ…

என்னங்க அதிசயமா சுத்திச்சுத்தி பார்க்கிறீங்க, ஓஹோ நீங்க அந்தச் சம்பவத்துக்கு அப்புறம் இப்பத்தான் வர்றீங்கல்ல, அம்மாதான் வால்பேப்பர், காந்தி படம், கன்னியாகுமரியிலேர்ந்து வாங்கிவந்த சிப்பி மாலையெல்லாத்தையும் தூக்கிக் கடாசிட்டாங்களே. ம்ஹும் உங்களுக்குத்தான் தெரியுமே அம்மாவோட கோபத்தின் செறிவு.

"எதப்பாத்தாலும் அவமூஞ்சே தெரியுது."

கோடையின் வெம்மை சுவற்றில் தங்கியிறங்கிய ஒரு இரவில் வியர்வை வாசத்துடன் புரண்டுபடுக்க கூழாங்கற்கள் தான் நகர்ந்ததோயென்னவோ வெளிப்பட்ட சப்தத்தில் அம்மா என் காதில் சொன்ன இந்த விஷயம் இப்ப நான் சொல்லி உங்களுக்கு தெரிஞ்சிருக்கு. என்ன என் குரல் கம்முதேன்னு பார்க்கிறீங்களா இன்னிக்கு அந்தம்மா சொன்ன ஒரு வார்த்தை தான் இன்னும் உறுத்திக்கிட்டேயிருக்கு…

"என்னங்க வீட்டை மாத்திரலாம் இனிமே என்னால முடியாது."

அழுது ஓஞ்சிருந்த அய்யாவின் காதுகளுக்கு மட்டும் கேட்கும் படியாய்ச் சொன்னது என் காதுகளுக்கு எப்படி கேட்டிச்சுன்னு கேக்குறீங்களா எனக்குத்தான் ஆயிரம் காதுகளாச்சே. ஆனால் இப்படி நடக்கும்னு நான் எதிர்பார்க்கவில்லை. என் சகோதரர்கள் சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறேன். எல்லோருக்கும் மரணம் உண்டென்று. ஆனால் எனக்கு மரணம் வராதென்றே நினைத்திருந்தேன். இல்லையா பின்ன மூணு தலைமுறையா உயிரோடயிருக்கேன்ல அதில் வந்த திமிர்தான்.

எத்தனை குழந்தைகள் பிறந்ததையும் வயதானவர்கள் சாவதையும் பார்த்திருக்கிறேன். ஏன் அந்த பொண்ணு பேரென்ன, ஆஹா நான் சாவப்போறேன் எனக்குத் தெரிய ஆரம்பிச்சிறுச்சு. மூணு தலைமுறை பெயர்களைக்கூட ஞாபகம் வச்சிருந்த எனக்கு போன வருஷம் இருந்த அந்தப் பொண்ணு பேரு நியாபகத்தில் வரமாட்டேங்குதுன்னா சரிதான் நீங்கவேற வந்துட்டீங்கள்ள அதையே மறந்திட்டேன். போனதடவை வந்தப்ப உங்களை ஓட ஓட விரட்டினது ஞாபகத்தில் வருது. அப்ப சோகத்தில் கூட எவ்வளவு சந்தோஷமா இருந்தது. சாவையே ஜெயிச்சிட்டேன்னு.

எல்லாம் அந்தச் சனியனால, அய்யய்யோ நான் சொன்னது உங்களுக்கு கேட்டிருச்சா அந்தம்மாக்கிட்ட சொல்லிடாதீங்க, வருத்தப்படுவாங்க. ம்ம்ம் நியாபகம் வந்திருச்சு வந்தனா, வாயில் சக்கரைத்தண்ணியைத் தொட்டுவைச்சி அவக்காதில் வந்தனா வந்தனா வந்தனா ன்னு சொன்னதை நீங்க பார்த்திருக்கீங்களா நான் பார்த்திருக்கேன். அதைமட்டுமாப் பார்த்தேன் ஒரு நாள் அந்தப் பொண்ணு பொட்டியைத் தூக்கிக்கிட்டு யாரும் முழிச்சுப் பார்த்திருவாங்களோன்னு திரும்பித்திரும்பிப் பார்த்துக்கிட்டே வெளியே போனதையும் பார்த்துத் தொலைத்திருந்தேன். ஆயிரம் காதுன்னு சொன்னேன்ல ஆனால் ஒரு வாய் இல்லைன்னு வருத்தப்பட்டது அன்னைக்குத்தான். இருந்திருந்தால் அந்த அம்மாவை உஷார் பண்ணியிருக்கலாம் இல்லைன்னா அய்யாவை இரண்டுமே முடியலைன்னா அந்தச் சோம்பேறி மோகனையாவது.

நான் உருவான பொழுது பக்கத்தில் சகோதரர்கள் பேசக் கேட்டிருக்கிறேன். பெண்கள் யாருக்கும் கேட்காத அளவிற்கு பேசக்கூடியவர்களென்று உண்மைதான் அந்தம்மா மனசில என்ன நினைக்குதுன்னோ இல்லை தூக்கத்திலேயோக்கூட அவள் மனதில் இருக்கும் விஷயம் நான் அறிய முடிந்ததில்லை, அதுபோலில்லை ஆண்கள் அவர்கள் புலம்புவது மட்டுமல்லாமல் அவர்கள் மனதில் நினைக்கும் விஷயங்கள் கூட எளிதாகக் கேட்டிருக்கிறது. அப்படித்தான் வந்தனா ஓடிப்போன அன்றவன் எவனோ ஒருவன் அந்த அழகுதேவதையை அனுபவித்துக் கொண்ருப்பான் நினைத்ததும் தெளிவாகவேக் கேட்டது. என்னையும் அறியாமல் நான் ஆமாம் என்று சொல்லியதை நினைத்து சிரித்தேன். உண்மைதான் என்னதான் அவன் தம்பிக்காரனாயிருந்தாலும் நான் பார்த்த அளவிற்கு அவன் பார்த்திருக்க வாய்ப்பில்லையில்லையா. இதை ஒருமுறை சகோரனிடம் சொல்லும் பொழுது அவன் எதையோ புரிந்துகொண்டவனைப் போல் சிரித்தான் முதலில் பின்னர், என்னவோ உனக்கு சாவில்லைன்னு சொன்னியே உனக்கும் சாவு உண்டு, உன் சாவு என் கண்ணில் தெரியுதுன்னு சொன்னதை கொஞ்சம் கொஞ்சமாய் யோசித்துப் புரிந்து கொண்டேன்.

ஆமாம் எனக்கும் சாவு உண்டென்பதை நான் புரிந்து கொண்டேன் என்றுதான் சொல்லவேண்டும் ஆனாலும் மூன்று தலைமுறையாய் உயிர்வாழ்ந்தது அதை மறக்கடிக்கும் வித்தைதான் ஆச்சர்யமே. மூன்று தலைமுறை மக்களுடனான பழக்கம் இருந்தாலும் யாருடனும் ஒட்டாமலே இருந்து வந்திருக்கிறேன். எல்லாம் ஒரு நிமிடத்தில் மாற்றப்பட்டது, இந்த அம்மா அய்யாவிற்கிடையேயான உறவினைக்கூட விலகியிருந்து பார்க்கமுடிந்திருக்கிறது, இதுவரையிலும் இவர்களிடத்தில் அந்த ஒட்டுதல் இல்லைதான், சகோதர்கள் அவரவர் வீட்டு அய்யா அம்மாவின் இரவு விளையாட்டுக்களைப் பற்றி பேசும் பொழுது தலையில் அடித்தக்கொண்டு நகர்ந்திருக்கிறேன். அவர்களுக்கு மரணம் வேண்டும், தங்களை அவர்களாக பாவித்து ஒரு தலைமுறை வாழ்ந்து மடிவதில் அவர்களுக்கு விருப்பம் அதிகம், அவர்களின் சோகங்களுக்கு அழுது, சந்தோஷத்தில் சிரித்து, மரணத்தில் தங்கள் நினைவுகளை அழித்து மீண்டும் நினைவில்லாமல் பிறப்பதில் சுகம் காண்பவர்கள்.

அந்தக் கிராமத்தில் சுவர்களுக்கு வெள்ளைப் பூச்சே அரிதாகயிருந்த காலக்கட்டத்தில், அய்யாவிடம் கெஞ்சிக்கூத்தாடி டிஸ்டம்பர் அடித்து, அழகழகான குழந்தைப் படங்களை வால்பேப்பர்களாக வாங்கிவந்து ஒட்டி, சோழிகள், சிப்பிகளால் ஆன மாலைகளால் அலங்கரித்து ஒரு சூரியன் மேற்கேசாயும் அந்திவேளையில் என்மேல் காதைவைத்து இப்ப நீ எவ்வளவு அழகாயிருக்கத் தெரியுமா அந்தப் பெண் கேட்ட ஒரு நிமிடத்தில் எல்லாம் மாறிப்போனது. காதலா அந்த வார்த்தைக்குத்தான் எத்தனை போதைதரும் வல்லமை. பின்னர் என் கண்கள் எல்லாம் ஒடுங்கிப்போய்விட்டன இரண்டேயிரண்டைத்தவிர்த்து, காதுகளும் கூட. அவளுக்காக மட்டும் இயங்குபவையாக, இப்படி ஒருவருடத்திற்கு முன்பே அவள் வீட்டை விட்டு ஓடிப்போன பொழுதே அழிந்திருக்க வேண்டிய நினைவுகள் இன்னமிருப்பதற்கு காரணம் அதோ அந்தச் சோபாவில் தூங்வதற்கான எல்லா முயற்சிகளையும் செய்து தோற்றுப்போனவனாய் விட்டத்தை வெறித்துப் பார்த்தவாறு படுத்திருக்கானே அந்தச் சோம்பேறி மோகன் தான் காரணம்.

அடாத மழையில் விடாமல் காஜி அடித்து ஜுரத்தினால் படுத்திருந்த ஒரு நாளில் அவன் மேல் ஆரம்பித்தது இந்தப் பொறாமையுணர்ச்சி, காய்ச்சல் 106க்கும் மேல் போய்விட, வந்தனா அவன் பக்கத்திலேயே உட்கார்ந்திருந்து அழுதபடியே கைகளைப் பிடித்துக் கொண்டிருந்தது நினைவில் உள்ளது. இப்படி ஆரம்பித்ததுதான் அவன் மீதான ஒட்டுதல், அக்காவைப் போலவே அவனுக்கும் என்மேல் காதல் உண்டு, எத்தனைப் படங்கள் எத்தனைப் படங்கள், அவன் எதிர்த்தவீட்டு இரட்டைச்சடைப் பெண், ஒரு கையில்லாத அய்யர் வீட்டு ஆன்ட்டி என அவன் பொருந்தாக் காதலெல்லாம் படங்களாக என் மேனியெங்கும் பரவியிருந்தது அவனது திறமை உண்மையில் ஆச்சர்யமானதுதான். ஆனால் ஆச்சர்யமூட்டும் அந்த ஓவியங்களை அதிர்ச்சிக்குரியவையாக்கிய அவனை நினைத்து இன்னமும் துடைத்துக் கொண்டேயிருக்கிறேன் உதடுகளை. என்னை ஆணாக வரித்து அவன் அக்காவை நான் காதலிக்க அவன் என்னைக் காதலுடன் முத்தமிட்டதைக் கூட பொறுத்துக் கொண்டிருந்தேன் வந்தனாவிற்காக, ஆனால் அவன் ஒருநாள் கொண்டுவந்தானே ஒரு சனியன் பேரைப்பாரு பாரு ஜிம்மியாம் ஜிம்மி.

கைகளுக்குள் அடங்கிவிடும் சைஸில் கொண்டுவந்த அந்த ஜீவனை அம்மாதான் காப்பாற்றினாள், நூழிலையில் பால்விட்டு, கொஞ்சமாய் வெட்டிய கம்பளிக்குள் வெதுவெதுப்பை உண்டாக்கி, அவனுக்கு தற்பெருமை அதிகம் அவன்தான் ஜிம்மியின் மீது பாசம் அதிகம் வைத்திருப்பதாய், ஆனால் எனக்குத் தெரியும் அம்மாவிற்கு வந்தனாவையும் மோகனையும் விட ஜிம்மியை அதிகம் பிடிக்கும்.

ஆனால் எனக்கு பிடிக்கவேப்பிடிக்காது, அம்மாவிற்கும் அய்யாவிற்கும் தெய்வமாய், வந்தனாவிற்கும் மோகனுக்கும் காதலன் காதலியாயும் இருந்த என்னை காலைத்தூக்கி அசிங்கம் செய்யும் பொருளாகப் பார்த்த ஜிம்மியை எனக்கு பிடிக்கவேயில்லை, உண்மையில் இது கூட ஒருவகையில் ஒட்டுதல் தான். பிரியமோ இல்லை கோபமோ இருக்கக்கூடாது சாவு வேண்டாமென்றால். ஆனால் எனக்கு பிரியம் பொறாமை கோபம் மூன்றும் வந்தது மூன்றாம் தலைமுறையில். ஆனால் ஜிம்மி வந்த பிறகு அந்த வீடு அமைதியாய் இருந்து நான் உணர்ந்ததேயில்லை, ஒருவர் மாற்றி ஒருவர் அவனைக் கொஞ்சிக் கொண்டும் கோபித்துக் கொண்டும் விளையாடிக்கொண்டும் ம்ஹும் அந்த நாட்கள் மகிழ்ச்சியானவை. சோம்பேறி மோகன் ஆரம்பக்காலத்தில் பள்ளிக்கூடத்திற்கு போனதற்கு பிறகும் பிற்பாடு காலேஜுக்கு போனதிற்கு பிறகும் அய்யாதான் ஜிம்மிக்கு எல்லாமே, எனக்கென்னமோ மோகன் கண்முன்னால் அய்யா ஜிம்மியை பிடிக்காதது போல் நடிக்கிறாரோ என்ற எண்ணம் எழுந்து கொண்டேயிருந்தது.

பின்னர் ஒருநாள் தான் காதலித்த வேற்று மத பையனைக் கல்யாணம் செய்துகொள்வதற்காய் சொல்லாமல் கொள்ளாமல் லெட்டர் மட்டும் எழுதி வைத்துவிட்டு வந்தனா போன நாள் ஜிம்மி மட்டும் கொஞ்ச நேரம் பசியில் கத்திக்கொண்டிருந்தான். ஊரே இந்த விஷயம் பற்றி பேசிக்கொண்டிருக்க வீட்டில் நிசப்தம். நான் வந்தனா காதலித்த பையனைப் பார்த்ததில்லை அதனால் தான் மோகன் எவனோ ஒருவனைப் பற்றி நினைத்ததும் ஒத்து ஊதத் தோன்றியது. என்னயிருந்தாலும் எனக்குக் கூட காண்பிக்கமாட்டேனெற்று உடை உடுத்துபவளாயிற்றே வந்தனா, இன்னொருவனுடன் உடையில்லாமல்…

அப்படியிப்படியென்று ஒருவருஷம் ஆகியிருந்தது. காலையில் அம்மா படிச்சிப் படிச்சி சொன்னாங்க, டேய் கதவை மூடிட்டு போ ஜிம்மி வெளியப் போயிறப்போறான்னு இந்தச் சோம்பேறிதான் மூடாமல், எதிர்த்தவீட்டு ஏஞ்சலை சைட் அடிச்சிக்கிட்டே போய்விட்டான் அப்படியே ஜிம்மியும், இது இரண்டாவது முறை நான் வாய் இல்லாமல் போனதற்காக வருந்தியது, என்னதான் நான் பொறாமைப்படும் விஷயம் என்றாலும் ஜிம்மி கூழாவதைப் பார்க்கும் நிலையில் நான் இல்லை, வந்தனா ஓடிப்போன அன்றுகூட கண்ணை திறந்து வைத்திருந்தவன் வாழ்க்கையில் முதல் முறையாய் கண்களை மூடினேன். விஷயம் தெரிந்து அய்யா ரோட்டிலேயே கூழைக்கையில் எடுத்து முகத்திலறைந்து அழுததும் அவர் வந்தனா வீட்டை விட்டு ஓடிப்போனதின் பிறகு வந்த முதல் சனிக்கிழமை முதல் வார்த்தையாக சொன்னது ஞாபகத்தில் வந்தது,

"ஒருவார்த்தை சொல்லிட்டு போயிருக்கலாம்."

எல்லாம் போச்சு, அய்யாவிற்கு அழுகையுடன், மோகனுக்கு கழிவிரக்கத்துடன் ஆனால் அம்மாதான் சொல்லிவிட்டாள் என் சாவிற்கான நாளை இந்த வீட்டை விட்டு போவதான ஒரு வார்த்தையுடன். நான் அழிந்து போவதற்காக வருந்தியதெல்லாம் உண்டுதான், எனக்கென்னவோ வந்தனா போனதிலிருந்தே நான் பாதி இறந்துவிட்டவனாயும், எல்லாவற்றையும் கடந்துவிட்டவனாகவும் ஆனாலும், மோகன் மீதும், ஜிம்மியின் மீது மட்டும் பாசம் உரியவனாயும் இருப்பதாய் உணர்ந்தேன். வந்தனா ஓடிப்போய்விட்ட நாட்களின் ஆரம்பக்காலத்தின் இரவுகளில் யாருக்கும் கேட்காமல் அம்மா அழுதது தெரியும்.

இன்று எதற்கும் கவலைப்படாதது போல், அம்மா சமையற்கட்டை வெறித்து வெறித்துப் பார்த்து வெடித்து அழுது கொண்டிருந்தாள், இது போதும் இது நிச்சயமாகப் போதும். நான் சந்தோஷமாய் இறந்து போவேன். பின்நாட்களில் என்றைக்காவது இவர்கள் திரும்பவும் வந்து தெருமுனையில் இருந்து பார்க்கலாம். ஆனால் நான் அப்போது இருக்கப்போவதில்லை. என்னுடைய மூன்று தலைமுறை நினைவுகள் இழந்தவனாய் புதிதாய் பிறந்து ம்ஹூம் இன்னும் நிறைய தலைமுறைகளைப் பார்க்கப்போகிறேன். அம்மா சொன்ன அந்த வார்த்தையைக் கேட்டுத்தானே வந்திருக்கீங்க நீங்க, இருங்க அந்த லாரி தெருமுனையை கடந்ததும் அழிச்சிறுங்க என் நினைவுகளை.

------------------------

இது இரண்டு கவிதைகளைப் படித்ததின் விளைவு

எழுதியவர் இளவஞ்சி.

ஓடிப்போனவளின் வீடு

ஜிம்மியும் சில நிகழ்வுகளும்…

நன்றி இளவஞ்சி.

Read More

Share Tweet Pin It +1

0 Comments

Popular Posts