In தொடர்கதை

உள்ளம் உடைக்கும் காதல் 9

"அசந்து தூங்கிட்டிருந்த, அதான் எழுப்ப மனமே வரலை..." சொல்லிவிட்டு மோகன் முறுவளித்தான்.

மெதுவாய் சோம்பல் கலைத்தபின் அவனைப் பார்த்து ஒருக்களித்துப் படுத்தபடியே “நான் தூங்கிக் கொண்டிருந்தது தான் காரணமா இல்லை வேறதெவும் இருக்கா?” அவளும் சிரித்தாள். அவள் கண்களில் அன்றைக்கு ஹாஸ்டலுக்குப் போக முடியாது, மீண்டும் கனிமொழி வீட்டிற்கும் போக முடியாது என்கிற பயம் தெரியவில்லை விளையாட்டுத்தனம் தான் தெரிந்தது. அவள் அறைக்குள் வந்த நேரத்தை வைத்து அவள் அங்கே இரவு தங்கிச் செல்வதற்கான சாத்தியக்கூறுகளுடன் தான் வந்திருக்க வேண்டும் என்று நினைத்தான். இரவு அவனுடன் தங்குவதாய் இருந்தால் அதற்கான சாதக பாதகங்களையும் அவள் யோசித்துப் பார்த்திருக்க வேண்டும், அந்த நினைப்பே அவனுக்கு அன்றைய இரவுப்பொழுது ஏற்படுத்தப்போகும் சந்தர்ப்பங்களை விளக்கியது.

அப்பாவியாய் முகத்தை வைத்துக் கொண்டு, “வேறென்ன காரணம் இருக்க முடியும் அகிலா.” என்றான்.

அவள் முகத்திலிருந்த சிரிப்பு விலகவேயில்லை, கொஞ்சமாய் சிவக்கத்தொடங்கியிருந்தது அவள் முகம் “அப்படின்னா எனக்கொன்னும் பிரச்சனையில்லை. ஆனால் பூனை இந்தக் கட்டில் பக்கம் மட்டும் வரக்கூடாது.” என்றாள். கீழே உட்கார்ந்து லாப்டாப்பில் வேலைபார்த்துக் கொண்டிருந்தவன் எழுந்து போய் அவள் கால்மாட்டில் அமர்ந்தான். இடது கை ரொம்பவும் பழக்கப்பட்டது போல் அவள் பாதங்களை அமுக்கிவிடத் தொடங்கியது அம்மாவிற்கு அமுக்கிவிட்ட பழக்கம். பாதத்தில் இருந்து தொடங்கினான். முதலில் தடுப்பதற்காய் எழுத்தொடங்கியவளை வலது கையால் தள்ளிப் படுக்கவைத்தேன். பஸ்ஸில் வந்த களைப்பு அவள் கால்கள், அவன் கைபேச்சுக் கேட்கத் தொடங்கியது. அவள் வைத்தக்கண் வாங்காமல் அவனையே பார்த்துக்கொண்டிருந்தாள். அவள் கால்கள் மிகவும் மிருதுவாய் இருந்தது அவன் கைகளுக்கும் அவள் கால்களுக்கும் இடையில் அவள் சுடிதார் பாண்ட் இருந்த பொழுதும் அவனால் உணர முடிந்தது. முட்டிக்கு மேல் செல்லாமல் இரண்டு கால்களையும் மடியில் போட்டு அமுக்கிவிடத் தொடங்கினான்.

“உங்க அப்பா எப்படியிருக்காரு?” அதுவரை அவளாய்ச் சொல்லாமல் அவளுடைய அப்பாவைப் பற்றி அவன் கேட்டதில்லை. அந்த ஆச்சர்யம் அவள் முகத்தில் தெரிந்தது.

“நல்லாயிருக்காரு உங்களைப்பத்தி லேசா சொல்லி வைச்சிருக்கேன். அப்படியா அப்படியான்னு கேட்டுகிட்டாரு.” சொன்னாள்.

“ஊரெல்லாம் எப்படியிருக்கு ரொம்ப சந்தோஷமா இருந்திருப்பியே ஊரில்?” கேட்டான் அப்படியிருக்கக் கூடாது என்று வேண்டியபடியே.

“ஏன்டா போனோம்னு ஆயிடுச்சி, அப்பாவுக்காகத்தானேன்னு மனதை அடக்கிக்கிட்டேன்” ஏன் என்பது போல் பார்த்தான். “இங்கையாவது உங்களை பார்க்க முடியாட்டாலும் பக்கத்தில் தான இருக்கிறோம் வேணும்னா பார்த்துக்கலாம்னு நினைப்பேன். அங்க அப்படியில்லை உங்களைப் பார்க்காமல் ரொம்பக் கஷ்டமாயிருந்துச்சு. பல்லக் கடிச்சிக்கிட்டு பதினைஞ்சு நாள் பொறுத்துக்கிட்டேன். எதைப்பார்த்தாலும் உங்க ஞாபகம் தான் வரும். உங்களுக்கு இந்தப் பதினைஞ்சு நாளில் என் ஞாபகம் வந்ததா?” அபாயமான ஒரு கேள்வியைக் கேட்டாள்.

உண்மையில் அவளைப் பற்றிய நினைப்பு அவனுக்கு அவ்வப்பொழுது வந்து கொண்டுதான் இருந்தது.

“வந்தது அகிலா, ப்ராஜக்டில் பிஸியா இருந்ததால அவ்வளவு மிஸ் பண்ணினேன்னு சொல்ல முடியாட்டாலும் மிஸ் செய்தேன் தான்.” உண்மையை உளறிக்கொட்டினான்.

அவள் சொன்னாள், “நான் நினைச்சேன் இப்படித்தான் இருக்கும்னு. இந்த இரவுக்காக நீங்க மாறலைங்கிறது சந்தோஷமா இருக்கு. ஆனா உங்க நினைப்பு என்னைப் பாடாப்படுத்திருச்சு. கண்ணை மூடி தூங்கினா கனவு முழுக்க நீங்க தான். எங்க ஊரு எங்க அப்பால்லாம் இருக்காரு ஆனால் நீங்களும் எங்கிருந்தோ வர்றீங்க முத்தம் கேட்கிறீங்க. இது மாதிரியே தான் கனவு, இழவு முத்தம் கொடுத்தே தொலைஞ்சிருக்கலாம்னு இருந்தது.” கொஞ்சம் நிறுத்தினாள் பின்னர், “இப்ப பஸ்ஸுல வர்றப்ப கூட அப்படித்தான் ஆனால் அதில் முத்தத்தில் நிக்கலை. சட்டுன்னு முத்தத்தில் ஆரம்பிச்சு என் உடம்பெல்லாம் உங்க கை நகறுது நான் தட்டிவிடுறேன்னு நினைச்சு பக்கத்தில் இருக்கிற அம்மா கையைப் பிடிச்சு உதற்றேன் பஸ்ஸில். ஒரே காமடியாப் போச்சு.” அவள் கனவு அவனுக்கு ஊக்கத்தை அளித்தாலும் தானாய்த் தொடங்காமல் இருந்தான் அவளை வற்புறுத்தக்கூடாது என்று நினைத்து அதுவும் அவள் அவன் கேட்டால் எதையும் கொடுப்பாள் என்று சொன்ன பிறகு இது சாதாரணமாய் இயல்பாய் நடக்க வேண்டும் என்று ஆசைப்பட்டான்.

“அப்ப அந்த முத்தத்த கொடுத்துத்தான் தொலையேன்.” வேண்டினான். இந்த முறை அவள் மறுப்பொன்றும் சொல்லவில்லை கால்களை அவன் மடியில் இருந்து விடுவித்துக்கொண்டு, அருகில் வந்து அவன் கன்னங்களை கைகளால் பிடித்து உதட்டில் முத்தமொன்று கொடுத்தாள், முடித்த பொழுது “இன்னொன்னு கொடேன்” என்றான். இன்னொன்று கொடுத்தவளிடம் “நல்லாயிருக்கு, இன்னொன்னு கொடு” என்றான். இந்த முறை அவள் உதடுகளைப் பிரிக்காமல் சிறிது நேரம் நீண்டிருந்தாள். அவன் வலது கை அதுவாய் அவள் மார்புகளை நோக்கி நகர்ந்தது, அது வரை அவள் துப்பட்டாவிற்குள் மறைத்து வைத்திருந்த இரட்டையர்களின் அளவு கைகளில் தெரிந்தது. உதடுகளைப் பிரிக்கும் வரை அவள் கைகளைத் தவிர்க்கவில்லை உதடும் மார்பும் ஒரே சமயத்தில் பிரிந்தது.  அவனுடையது ஏதோ ஒன்றை இருந்து பிரித்து எடுத்துச்செல்வதைப் போலிருந்தது அவனுக்கு அந்தச் செயல். கட்டிலில் சற்று தூரத்தில் சென்று உட்கார்ந்து “போதுமா?” என்றாள். அவன் இன்னமும் அவளுடைய மென்மையான உதடுகளை உதட்டிலும் அவளுடைய சாந்தமான மார்பை கைகளிலும் உணர்ந்து கொண்டிருந்தான், அடைந்த பரவசம் கண்களில் தெரிந்திருக்க வேண்டும்.

அவன் குழந்தை போல் முகத்தை வைத்துக் கொண்டு “அவ்வளவு தானா?” என்றான் கண்கள் நிறைந்த ஆசைகளுடன். “வேறென்ன வேணும் பாப்பாவுக்கு, எனக்கு அவ்வளவு தானே தெரியும். வேறெதுவும் வேணும்னா சி சொல்லிக்கொடுத்த மாதிரி சொல்லிக் கொடுத்தாத்தான் உண்டு.” அவள் குரலும் அந்தச் சூழ்நிலையும் சேர்த்து அவள் சொன்ன வார்த்தைகள் அவனுக்கு பெரும் மயக்கத்தை ஏற்படுத்தியது. அவளிடம் கம்பீரமான வெட்கம் இருந்தது, அவள் வேண்டாம் என்று சொன்னாள் விலகிவிடுவான் என்கிற தெளிவு அவளுக்கு அந்த துணிச்சலை அளித்திருக்கவேண்டும். ப்ராஜக்ட் அவளைப் பற்றிய சிந்தனையிலிருந்து இயல்பாக விடுவித்திருந்தது, ஆனால் பிரிவும் அவன் மீது கொண்டிருந்த ஆழமான காதலும், இதைப் பற்றியே யோசித்துக் கொண்டிருந்த பேருந்து பயணமும் அவளை மனதளவில் தயார்ப்படுத்தியிருந்தது. அவளை இழுத்து மடியில் போட்டான். ஆட்டுக்குட்டியைப் போல் மடியில் படுத்திருந்தாள். முதலில் கண்களை மூடியபடியே இருந்தாள், பின்னர் திறந்த கண்களில் மோகம் தெரிந்தது, கொஞ்சம் சிரமப்பட்டு அவள் முதுகுவழி கைவிட்டு ஹூக்கைக் கழட்டினான் அவள் முதுகை ஒருமுறை விரித்துப்பார்த்து, “பாப்பாவிற்கு இதெல்லாம் தெரியுதே...” அவள் கண்கள் இன்னும் விரிந்தது. தொடர்ந்து, “சொல்ல மறந்துட்டேன், எங்க ஊர் தையக்காரம்மா சொன்னாங்க. என் சைஸ் 30B யாம். அவ்வளவுதான்பா அதுக்கு மேல வேணும்னா வேற யாரையாவது தான். தேடணும்”. வேறொரு சமயமாயிருந்தால் அவள் சொன்னது இன்னொரு அடல்ஸ் ஒன்லி உரையாடலுக்கு வழிவகுத்திருக்கும். ஆனால் சீறும் மூச்சுடன் அவன் மடியில் படுத்திருந்த அவள் மேல் விரல் ஓடிக்கொண்டிருந்த பொழுதில் பதில் சொல்ல வாய்வரவில்லை. அந்த அறையில் மெல்லியதாய் ஒளி சமையலறையில் இருந்து வந்து கொண்டிருந்தது. அவன் ஏற்கனவே அவிழ்ந்து கிடந்த பூமியில் ஆராய்ச்சியாளனின் தேர்ச்சியுடன் தேடுதலைத் தொடங்கியிருந்தான். தேடுதலுடனேயே அவர்கள் உரையாடல் நீண்டது. தேடுதல் முடிவடைந்த பொழுது அவள் முகத்தில் தெரிந்த வெட்கம் கலந்த மகிழ்ச்சி அவன் தியரியை அதுவரை ஒழுங்காக படித்திருந்தான் என்று நிறுவியது.

காலையில், "யேய், காலேஜ் வரலை?" அவளிடம் கேட்டான்.

"நீங்க போங்க, எனக்குக் கொஞ்சம் வேலையிருக்கு, போறப்ப ஒரு சாவியை இங்க வைச்சுட்டு வெளியில பூட்டிட்டு போயிருங்க"

திரும்பவும் பதினைந்து நாள் கழித்து பார்த்ததால், அன்றைக்கு எல்லாருடனும் பேசிக்கொண்டிருந்து விட்டு, இந்த செமஸ்டர் எல்லாரும் என்ன புரோஜக்ட் செய்யப் போகிறார்கள் என்று கேட்டுக் கொண்டிருந்ததில் மூணு மணிநேரம் ஓடியதே தெரியவில்லை. சாப்பிட கான்டீன் வந்தால், மாம்பழ கலர் பாவாடையும் கருப்பு கலர் தாவணியும் போட்டுக்கிட்டு, ஷாம்பூ போட்ட குளிச்ச தலைமுடி பறக்க, நெத்தியல அழகா, சிறியதாய் ஒரு குங்குமப்பொட்டு வைத்துக்கொண்டு அகிலா தேவதை போல் நின்றுகொண்டிருந்தாள். அவளுடைய வெளிர் மாம்பழ நிற உடம்புக்கு அந்தக் கருப்பு தாவணி மிக அழகாக இருந்தது. இதுதான் அவன் முதல் முறை அவள் தாவணி கட்டிப்பார்ப்பது.

"தாஸ் வாயை மூடுங்க, ஈ எதுவும் உள்ளே போயிரப்போகுது. இப்பிடியா ஜொள்ளு உடறது." அகிலா முகத்திலும் வெட்கம் படர்ந்திருந்தது.

"ஏய் என்னன்னு கூப்பிட்ட?"

"தாஸ்னு... ஏன்?"

"ரொம்ப கொழுப்பு ஏறியிருக்கு நேத்தியிலேர்ந்து..."

"இனிமே அப்பிடித்தான், யாரும் பக்கதில் இல்லைன்னா செல்லமா தாஸ்தான்..."

"ஏய் இன்னிக்கு நீ எவ்வளவு அழகா இருக்க தெரியுமா? அப்பிடியே தூக்கிட்டுபோய்..."

"பாருங்க, இனிமேல் தொட்டீங்கன்னா கடிச்சுடுவேன்..., இன்னிக்கு நாலே காலுக்கு உங்க கிளாசுக்கு வருவேன். என்னைக் கூட்டிக்கிட்டு கோயிலுக்கு போகணும், உங்க புரோஜக்டை தூக்கி குப்பையில் போடுங்க."

"நீங்க சொல்லீட்டீங்கன்னா சரிதான் மேடம்."

நாலே காலுக்கு அவள் அவனைப் பார்க்க வரும் பொழுது, புதிதாய் சேர்ந்திருந்த அவள் கிளாஸ் மாணவி ஒருத்தி - கேரளா - அவனிடம் வந்து நோட்ஸ் கேட்டுக் கொண்டிருந்தாள். கொடுமையென்னவென்றால் அவளே ஜோக் சொல்லி அவளே சிரித்துக் கொண்டிருந்தாள். அவனும் அவள் தப்பா நினைக்கக்கூடாதேன்னு சிரித்து வைத்தான். அவள் சென்ற பிறகு அருகில் வந்தாள் அகிலா.

"அவகிட்ட சிரிச்சு, சிரிச்சு அப்படியென்ன பேச்சு, ஒரு நாள், எனக்கும் அவளுக்கும் சண்டையாயிருச்சு தெரியுமா. சரி அவ என்ன கேட்டா?"

"வேறென்ன நோட்ஸ்தான்..., சரி என்ன சண்டை?"

"அதெல்லாம் பொம்பளங்க சமாச்சாரம், நான் பாத்துக்கிறேன். அவளுக்கு நீங்க என்ன பதில் சொன்னீங்க?"

"வேறென்ன, இங்க கேட்டா கிடைக்காது. என் வீட்டுக்கு வந்து கேளு. அதுவும் இப்பெல்லாம் ஒரு பொண்ணு வீட்டிலேயே இருக்கு. அதனால அவகிட்ட நான் எப்ப ஃபிரின்னு கேட்டு சொல்றேன். அப்ப வந்து கேளுன்னு சொன்னேன்." சொன்னதும்தான் தாமதம் விருட்டென்று கிளம்பி வெளியே ரோட்டில் நடக்க ஆரம்பித்தாள்.

மெதுவாக சார்லசின் வண்டியை எடுத்துக் கொண்டு அவள் பின்னால் வந்து நிறுத்தி. "ஏய் இந்தாடி, ஏறிக்கோ" சொன்னதும் ஏறிக்கொண்டாள். ஆனால் வண்டியில் இருவருக்கும் ஒரு கிலோமீட்டர் தூரம் இருந்தது. அவர்கள், கோயிலுக்குப் போனார்கள். அவன் கடவுளை நம்புகிறவன் இல்லையென்றாலும் அவளுடன் கோயிலுக்கு உள்ளே வந்திருந்தான். குருக்கள் விபூதி தந்ததும் வாங்கிவிட்டு கையிலே வைத்திருந்தேன். அவனைப் பற்றி தெரியுமாதலால் அவள் கையில் இருந்த விபூதியை கொஞ்சம் அவன் நெற்றியிலும் பெரிதாக வைத்துவிட்டாள். பிறகு நாங்கள் ஹோட்டலுக்கு வந்தோம். ஆனால் அதுவரை அவள் அவனிடம் ஒருவார்த்தை கூட பேசவில்லை.

ஹோட்டலில் அவன் பக்கத்தில் அவள் உட்கார்ந்ததும், அவளிடமிருந்து ஒரு வாசனை வீசியது. அவள் வைத்திருந்த மல்லிகைப்பூவும், அவள் வேர்வையும் சேர்ந்த அந்த வாசனையால் தடுமாறியவன் அவள் தோளைச் சுற்றி கையைப் போட்டேன். அவன் கையை எடுத்து கீழே வைத்துவிட்டு, "இதுக்கு மட்டும் நான் வேண்டுமாக்கும், அந்தக் கேரளாக்காரி மேல போய் போடவேண்டியது தானே?"

நான் அதற்குப் பிறகு அவளிடம் எதுவும் பேசிவில்லை. அவளைத் திரும்ப கொண்டுவந்து ஹாஸ்டலுக்கு பக்கத்தில் விட்டுவிட்டு வீட்டுக்கு வந்தேன்.

அதற்கு பிறகு இரண்டு நாள் மோகன் அவளிடம் பேசவில்லை, அவள் பார்க்க வந்தாலும் அவனாய் முகத்தை திருப்பிக்கொண்டு வந்துவிட்டேன். இரண்டு மூணு முறை என்னிடம் பேசமுயன்றாள். அவன் பேசாமல் நகர்ந்து விட்டேன். அடுத்தநாள் சனிக்கிழமை வீட்டுக்கே வந்துவிட்டாள். நேராக அவன் எதிரில் வந்து நின்று, இடுப்பில் கையை வைத்துக் கொண்டு, "இப்ப நான் என்ன பண்ணனுங்கிறீங்க?" கேட்டாள்.

(தொடரும்...)

Read More

Share Tweet Pin It +1

4 Comments

In சிறுகதை

நீங்களே சொல்லுங்க சார்!!!

வாங்க சார்! நீங்களே சொல்லுங்க சார், இவ பண்ணுறது சரியான்னு. யாரப்பத்தி பேசுறேன்னு கேக்குறீங்களா? இவதான் சார் கார்ல, என் பக்கத்தில் உட்கார்ந்து வர்றாலே என் பொண்டாட்டி இவளைப் பத்தித்தான் சார் சொல்றேன். கல்யாணம் ஆகி ஒரு ஆறுமாசம் ஆகியிருக்கும் சார். அப்பப்ப சண்டை போட்டுக்குவம்னாலும் இரண்டு நாளெல்லாம் பேசாமயிருந்ததில்லை. அப்படி நான் என்ன தப்பு பண்ணேன்னு கேட்டு சொல்லுங்க சார்.

ஒன்னுமில்ல சார், இரண்டுநாளைக்கு முன்னாடி நாங்க இரண்டுபேரும் வேலை பார்க்கிற அலுவலகத்தின் 10ம் ஆண்டுவிழா பார்ட்டி நடந்துது, எல்லாரும் தண்ணியடிச்சிட்டு டான்ஸ் ஆடிக்கிட்டிருந்தாங்க. நமக்கு தண்ணியடிக்கிற பழக்கமில்லாததால சும்மாத்தான் சார் உட்கார்ந்திருந்தேன், எம்மேல தப்பு கிடையாது, நான் இவக்கிட்ட அப்பவே கேட்டேன் நாம இரண்டுபேரும் சேர்ந்து டான்ஸ் ஆடலாமான்னு, முடியாதுன்னுட்டா சார் இவ. பரவாயில்லை தமிழ்நாட்டுல படிச்ச பொண்ணாச்சே வெக்கப்படுவாள்னு நானும் சும்மா விட்டுட்டேன்.

அப்ப அங்க ஏற்கனவே தண்ணியடிச்சிட்டு ஆடிக்கிட்டிருந்த ஒரு பொண்ணு, எனக்கு கீழ வேலைசெய்றவதான் சார், கொஞ்சம் அழகாயிருப்பா அது என்தப்பா. நேரா என்கிட்ட வந்து ஆடவரீங்களான்னு கேட்டா, நானும் இல்லை வொய்ப் இருக்காங்க முடியாதுன்னு தான் சார் சொன்னேன். இவத்தான் பெரிய இவமாதிரி போய்ட்டுவாங்கன்னு சொன்னா. சரி நானும் நம்ம பொண்டாட்டி ஆறுமாசத்திலேயே நம்மல நல்லா புரிஞ்சிக்கிட்டான்னு நினைச்சிக்கிட்டே ஆடப்போனேன் சார். அங்க புடிச்சதுசார் வேதாளம். அன்னிலேர்ந்து என்கிட்ட பேசுறதில்லை. நானா பேசினாலும் பதில் மட்டும் சொல்லிட்டு நகர்ந்துர்றா சார்.

ஆனா இன்னிக்கு காலைல பாருங்க சார், என்னோட பேவரைட் சட்டை சலவை பண்ணாம இருந்ததால் குளிச்சிட்டு சலவை பண்ணிக்கலாம்னு எடுத்துவச்சிட்டு குளிச்சிட்டு வந்துப்பார்த்தா, சட்டை கிட்ட இவ சுகிதாரும் உக்காந்திருக்கு. நான் அதையும் சலவை பண்ணித்தரணுமாம். தரதப்பத்தி ஒன்னுமில்லை சார், அவசர ஆத்திரத்துக்கு ஆறுமாசத்தில பலதடவை பண்ணிக் கொடுத்துருக்கேன். ஆனா எப்பவும் நான் சலவை பண்ணுரப்ப பின்னாடியே நிப்பா சார், அப்பப்ப ஒம்பிழுத்துக்கிட்டே, நிறைய ப்ளீஸ், நிறைய தாங்க்ஸ், சில சமயம் கிஸ்ஸெல்லாம் கூட கிடைக்கும் சார். ஆனா இன்னிக்கு பாருங்க ஆளையே பார்க்க முடியலை, நாம இதெல்லாம் கிடைக்கும்னா சார் சலவை பண்ணித்தர்றது. ஏதோ நம்ம பெண்டாட்டி உதவலாமேன்னு தானே. நானும் பண்ணி அங்கையே வைச்சிட்டேன் சார்.

இப்பக்கூட பாருங்க சார் நான் சலவை பண்ணின சுகியைத்தான் போட்டிருக்கா, என் பக்கத்திலேத்தான் உட்கார்ந்திருக்கா ஆனா அந்நியமா தெரியறா, சாதாரணமா எங்க வீட்டில் இருந்து ஒரு ஏழு கிலோமீட்டர் இருக்கும் சார் அலுவலகம். ஒழுங்கா காரை ஓட்டவிடமாட்டா சார் என்னை, ஈசிக்கிட்டே உக்காந்திருப்பா அப்பப்ப ஸ்டேரிங்கை திருப்புறேன்னு ஒரே வம்புவேற. இன்னிக்கு பாருங்க இன்னும் ஒரு இஞ்ச் தள்ளி உக்காந்தான்னா காரிலிருந்து கீழே விழுந்துடுவாங்க்ற மாதிரி உக்காந்திருக்கா, மனசு கஷ்டமாயிருக்கு சார். நான் இன்னிக்கு விட்டுக்கொடுத்திரலாம்னு இருக்கேன் சார். நைட்டு பேசாம நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டுடலாம்னு இருக்கேன்.

ஆனா சார் எனக்கென்னமோ அந்தச் சம்பவத்துக்கு முன்னாடிலேர்ந்தே ஒரு வாரமாவே அவ கொஞ்சம் சரியாயில்லாதது மாதிரி தோணுச்சு, பின்னாடி அது பிரமைன்னு நானே முடிவு பண்ணிக்கிட்டேன். என்ன சார் பிரச்சனையிருக்க முடியும், சுத்தமா வரதட்சணையே வாங்கலை, நான் வேற இவளை காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கிட்டேன், இவ சொன்னாங்கறதுக்காக, அமேரிக்க வேலையெல்லாம் விட்டுட்டு இவளுக்காகவும் இவங்க குடும்பத்துக்காகவும் தான் சார் இந்தியாவுல இருக்குறதே; ஒரே பெண்ணா விட்டுட்டு வரமாட்டேன்னு சொல்லிட்டா. எங்கம்மா ஆரம்பத்திலேயே நீ பெண்டாட்டி தாசன் ஆய்ட்ட உன்கிட்ட இனிமேல் இருக்க முடியாதுன்னு அவங்க கட்டுன வீட்டுக்கு போய்ட்டாங்க சார். இவ பேர்ல தப்பில்லை, அம்மாத்தான் புரிஞ்சிக்கவே மாட்டேங்கிறாங்க.

சார் நீங்க அவள தப்பா நினைக்கக்கூடாது, நாங்க தனியா இருக்கணும்தான் அம்மா விட்டுட்டு போனாங்கன்னு நினைக்கிறேன். இப்பையும் தினமும் இரண்டு மணிநேரம் அங்கப்போய் அம்மா அப்பாவை பார்த்துட்டுத்தான் சார் வருவா. போனாப்போறா யார் சார் அவ எப்பிடிப்பாத்தாலும் எம்பெண்டாட்டிதானே. இன்னிக்கு நைட்டு ஒருவழியா சரி பண்ணிறணும் சார்.

------------------------------

ஆச்சு சார் ஒருவழியா பிரச்சனையை பேசித்தீத்தாச்சு சார். நான் ஏற்கனவே அன்னிக்கி நைட்டு அவக்கிட்ட பேசுறதா தீர்மானம் பண்ணியிருந்தனா, அம்மாவை பார்க்க போன இடத்திலேயே சாப்டுட்டோம் சார், அம்மாக்கிட்ட ரொம்பநேரம் என்னாத்தையோ தனியா பேசிக்கிட்டிருந்தா சார். ஒன்னுமே புரியலை, வீட்டுக்கு வந்ததுமே என்கிட்ட என்னவோ பேசணும்ங்கிற மாதிரியே நடந்துக்கிட்டிருந்தா ஆனா பேசலை சார், நைட் டிரெஸ் போட்டுக்கிட்டு கட்டிலில் நான் வந்து உட்கார்ந்ததுமே,

"நான் உங்கக்கிட்ட கொஞ்சம் பேசணும்" அப்படின்னு ஆரம்பிச்சா சார். நானும் அப்படியே, "நானும் தான்." சொல்லிட்டு மனசிலயிருந்ததையெல்லாம் கொட்டிட்டேன் சார்.

"இங்கப்பாரு அகிலா, நாம இரண்டு பேரும் காதலிச்சுத்தான் கல்யாணம் பண்ணிக்கிட்டோம, உனக்கும் என்னைப்பத்தி நல்லாவேத்தெரியும். அன்னிக்கு கூட நீ சொன்னதாலத் தான் நான் அவகூட ஆடுனேன். நீ என்னை நல்லா புரிஞ்சிக்கிட்டேன்னு நினைச்சுத்தான் அப்பப்ப அவளைப் பத்தி உன்கிட்ட விவரிச்சது, அழகாயிருக்கா, நல்லா டான்ஸ் ஆடுவா அப்பிடினெல்லாம், அதுமட்டுமா சொன்னேன், கோடிங்கே அவளுக்கு எழுதத்தெரியலைன்னு கூடத்தான் உன்கிட்ட சொல்லியிருக்கேன். முன்னாடியே சொல்லிட்டேன் அன்னிக்கு தனீரூமில் அவள் கோடை ரிவ்யூ பண்ணுறேன்னு கூட்டிக்கிட்டு போனதுக்கான காரணத்தை. பாவம் இப்பத்தான் சேர்ந்திருக்கா நாலுபேருக்கு முன்னாடி திட்டினா கஷ்டமாயிருக்கும்னு தான் தனியா கூட்டிட்டு போய்த்திட்டினேன். அந்தச் சமயத்தில நீ வந்துட்டதால நான் பண்ணினது தப்பாயிடாது.

ஒன்னு நல்லாத்தெரிஞ்சிக்க, அவ ரம்பையா இருந்தாலும் ஊர்வசியாயிருந்தாலும் என் அகிலா முன்னாடி தூசிதான். உன்னைத்தவிர இன்னொரு பொண்ணை மனசாலக்கூட நினைக்கமாட்டேன். இவ்வளவுதான் இதுக்குமேலையும் நீ என்னை நம்பமாட்ட, பேசமாத்தான் இருப்பேன்னா அது உன் விருப்பம். ஆனா என்னால நான் சோகமா இல்லாத மாதிரியெல்லாம் நடிக்கமுடியாது. எனக்கு ரொம்ப வருத்தமாயிருக்கு, சொல்லிட்டேன்."

முடிச்சதும் சிரிக்கிறா சார், எனக்கு ஒன்னுமே புரியலை சார், ஆனா கண்ணுல மட்டும் ஒரு சோகம் இருந்துச்சு சார், மெதுவா பக்கத்தில் வந்து உட்கார்ந்தவள் என்கையை அவள் கையில் எடுத்து வைச்சிக்கிட்டா சார்.

"என்னங்கயிது சின்னப்புள்ளத்தனமா, இதையெல்லாம் நினைச்சு குழம்பிக்கிட்டிருந்தீங்களா, உங்களைப்பத்திதான் எனக்கு நல்லாவே தெரியுமே, அவக்கூட டான்ஸ் ஆடினதாப் பிரச்சனை. உண்மையிலே அன்னிக்கு நீங்க டான்ஸா ஆடினீங்க ஏதோ ஆடணுமேன்னு ஆடிக்கிட்டிருந்தீங்க, அதைப்பார்த்து எனக்குக்கூட சிரிப்பு வந்துச்சு. இன்னுமொன்னு கோட் ரிவ்யூ மேட்டரைப்பத்தியும் நான் தப்பா நினைக்கலை. உங்களைப்பத்தி தெரியாதா காதலிச்ச என்னையே தொடமாட்டீங்க, என்ன கொஞ்சம் ஜொள்ளுவுடுவீங்க போட்டோஜெனிக், சிற்பம்னு ஏதாவது சொல்லிக்கிட்டு, அவளே எலிக்குஞ்சு மாதிரியிருக்குறா, அவ எனக்கு போட்டியா, சான்ஸே கிடையாது."

சொன்னா நம்புங்க சார் எனக்கு யாரோ நெஞ்சுமுழுக்க பால் ஊத்துறமாதிரியிருந்துச்சு, சாதாரண சமயமாயிருந்தா ஜொள்ளுவுடுவீங்கன்னு சொன்னதுக்கே பிரச்சனை பண்ணியிருப்பேன். ஆனா இன்னிக்கு முடியுமா அதான்,

"அப்ப ஏண்டி இரண்டு நாளா முறைச்சிக்கிட்டே இருந்த, என்ன தான் பிரச்சனை." நான் கேட்டதும் கொஞ்ச நேரம் என்னையே பார்த்துக்கிட்டிருந்தா சார். அப்புறம்,

"நான் இனிமேல் வேலைக்கு போகலை, ரிசைன் பண்ணலாம்னு இருக்கேன்." சொன்னதும் உண்மையிலேயே ஒன்னும் புரியலை சார், அவ வேலைக்கு போகணும்னு அவசியமே கிடையாது, எங்க அம்மா அப்பா கவர்மெண்ட் வேலையில இருந்தவங்க, நானும் ஒரே பையன், காசுக்கு பிரச்சனையே கிடையாது, ஏன் இவங்க வீட்டிலையுமே நிறைய பணம்தான். இவத்தான் பிடிவாதமா வேலைக்கு போவேன்னு ஒத்தக்காலில் நின்னா, அதனாலத்தான் குழந்தை பெத்துக்கிறதக்கூட தள்ளிப்போட்டோம். இப்ப வந்து போகலைன்னு சொல்றா சார். நானும் ஏதாவது கேட்கணுமேன்னு,

"ஏன் போகலைங்கிற?" கேட்டேன் சார். இன்னும் நல்லா பக்கத்திலே உட்கார்ந்துக்கிட்டு,

"நான் சொல்லப்போற விஷயத்தை கேட்டு நீங்க டென்ஷன் ஆகக்கூடாது, நான் சொல்றத அமைதியா கேட்கணும்" அப்படீன்னு பெரிய பீடிகையெல்லாம் போட்டா சார், உண்மையிலேயே ஒன்னும் புரியலை சார்.

"இங்கப்பாருங்க அன்னிக்கு பார்டியில என்னோட பி.எம் இருக்கானே கிரிஷ் கிமானி, நல்லா தண்ணியடிச்சிட்டு ஆடிக்கிட்டிருந்தானா. கொஞ்சம் நேரம் கழிச்சு நீங்க பக்கத்தில் இல்லாததப்பார்த்துட்டு வந்து பக்கத்தில் உட்காரந்தவன், மேலக்கையை வச்சான், எனக்கு வந்ததே கோபம் பளீருன்னு கன்னத்தில் அறைஞ்சிட்டேன். உடனேயே அங்கேர்ந்து போய்ட்டான்." சொல்லிவிட்டு என்னையே பார்க்கிறா சார், பொய்சொல்லமாட்டா சார் அவ, நிச்சயமா கிரிஷ் அப்படி நடந்திருந்தா அறைஞ்சிருப்பாத்தான் அவ, எனக்கு நம்பிக்கையிருந்தது. ஆனால் கோபமும் வந்தது,

"அதை ஏண்டி அன்னைக்கே சொல்லலை." நான் கோபமாய்க் கேட்க,

"இல்லை நீங்க என்னைத் தப்பா புரிஞ்சிக்க மாட்டீங்கன்னு தெரியும் ஆனா கிரிஷ் விஷயத்தில என்ன முடிவு எடுப்பீங்கன்னு சுத்தமா தெரியலை அதான் சொல்லலை. கிரிஷ் ரொம்ப நல்லவன் அன்னிக்கு தண்ணியடிச்சிருந்ததால அப்படி நடந்துக்கிட்டான். அடுத்தநாளே என்கிட்ட மன்னிப்பும் கேட்டான். ப்ளீஸ்ங்க புரிஞ்சிக்கோங்க அவனைப்பார்த்தால் ரொம்ப பாவமாயிருக்கு, தப்பை உணர்ந்துட்டான். தினமும் என் மூஞ்சில முழிக்கிறதுக்கு வெட்கப்படுறான். பாவம், எனக்கு இந்த விஷயத்தை உங்கக்கிட்ட சொல்றதப்பத்தி பயமே கிடையாது நீங்க என்ன நம்புவீங்கன்னு தெரியும். ஆனால் கிரிஷ் விஷயமாத்தான் ஒரு முடிவு எடுக்கமுடியாம இருந்துச்சு, உங்கக்கிட்ட ஒரு விஷயத்தை மறைக்கிறோம்னதுமே என்னால சாதாரணமா பேசமுடியலை. உங்களை ஏமாத்துறதா ஒரு கில்டி ஃபீலிங்வேற. ப்ளீஸ்ங்க நான் இனிமேல் வேலைக்கு போகலை. அவன்கிட்ட ஒன்னும் கேட்காதீங்க, ரொம்ப பயப்படுறான் அவன், நீங்க ஒரு மெய்ல் அனுப்புனா, ஹாரஸ்மண்ட் கேஸ்ல அவனை நிச்சயமா தூக்கிறுவாங்க. ஆனா வேணாங்க." சொல்லிவிட்டு பாவமாய்ப் பார்த்தாள் சார்.

எனக்கு அவகிட்ட உண்மையிலேயே என்ன சொல்றதுன்னு தெரியலை, பாத்தீங்களா சார் எம்பொண்டாட்டி எவ்வளவு நல்லவன்னு, தண்ணியடிச்சிட்டு தப்பு பண்ணிட்டான் அதுக்காக வேலையை விட்டு தூக்கவைக்ணும் நினைக்காம, அவனுக்காக என்கிட்டயே பரிஞ்சு பேசறா பாருங்க. எனக்கு கோபமாத்தான் வருது கிரிஷ்மேல, ஆனா அகிலா சொல்ற மாதிரி ரொம்ப நல்லவன்தான் கிரிஷ் எனக்கும் தனிப்பட்ட முறையிலேக்கூட தெரியும் சார். போனாப்போகுது விட்டுடலாம் சார், மன்னிப்பது மனுஷப்பண்பு மறக்குறது தெய்வ குணம் சொல்லுவாங்க சார், நாம் மனுஷனாவாவது இருப்போம் சார்.

"அகிலா இதை நீ என்கிட்ட அப்பயே சொல்லியிருக்கலாம் பரவாயில்லை இப்பவாவது சொன்னியே, பிரச்சனையில்லை. இதுக்காகயெல்லாம் நீ வேலையை விடவேண்டாம் வேணும்னா நான் சொல்லி வேற ப்ரோஜக்ட்ல போட சொல்றேன். என்ன?" அப்பிடின்னு கேட்டேன் சார் நான், பின்ன என்ன சார் எவனோ ஒரு தண்ணியடிக்கிறவன் பண்ணினதுக்காக எம்பெண்டாட்டி வேலைக்கு போகாம இருக்கணுமா சார்.

ஆனா அவள், "இல்லைங்க கிரிஷ்னாலத்தான் வேலைக்கு போகமாட்டேன்னு சொல்றேன்னாலும் அவன் மட்டுமே காரணம் கிடையாதுங்க, எனக்கே வரவர இந்த வேலை போரடிக்குதுங்க, என்கூட படிச்சவளெல்லாம் இடுப்புல ஒன்னு வயித்துல ஒன்னுன்னு நிக்கிறப்ப எனக்கு மட்டும் தலையெழுத்தா, கண்ட கண்ட தண்ணியடிக்கிறவன் கிட்டல்லாம் நிக்கணும்னு. காசுக்கும் ஒன்னும் பிரச்சனைகிடையாது, பின்னாடி திரும்பவும் ஆசைப்பட்டேன்னா நீங்க மறுக்கவா போறீங்க, அப்ப போய்க்கிறேன். என்ன சொல்றீங்க."

இப்படி கேட்டா நான் என்ன சார் சொல்றது நீங்களே சொல்லுங்க, இல்லை அவக்கேட்டு நான் மறுக்கத்தான் முடியுமா ஊன்னு சொல்லிட்டேன் சார். நீங்களும் அந்த முடிவுக்குத்தானே வந்திருப்பீங்க. சரி சார் கதைகேட்டதுக்கு நன்றிசார் போய்ட்டு அப்புறம் வாங்க சார்.

Read More

Share Tweet Pin It +1

25 Comments

In தொடர்கதை

உள்ளம் உடைக்கும் காதல் 8

அதற்குப் பிறகு மோகனுக்கு நேரம் கிடைப்பதே அரிதாக இருந்தது, கிளெயன்ட் இடம் போய், ரெக்வெய்ர்மெண்ட் வாங்கி வந்து, அவர்களுக்கு அந்தப் ப்ரொஜக்டை எப்படிச் செய்யப்போகிறோம்னு டிஸைன் அனுப்பி பின்னர் அவன் அதில் கேட்ட சந்தேகத்தை தீர்த்து இன்னொரு ட்ராஃப்ட் அனுப்பி என்று புரோஜக்ட் தலைக்கு மேல் போய்க்கொண்டிருந்ததால் மிகவும் சிரமமாக இருந்தது, அந்த நாட்களில் அவனும் சார்லசும் கல்லூரி சென்றுவந்த பிறகு இரவு ஐந்து, ஆறு மணிநேரம் தினமும் வேலை பார்த்துக் கொண்டிருந்தார்கள். உணவை பற்றி அவர்கள் கவலைப்படாத நாட்கள் அவை. அகிலாவிற்கும் கனிமொழிக்கும் கல்லூரி வேலை அதிகம் இருந்ததால் பல நாட்கள் பார்க்கக்கூட முடியாது. சில நாட்கள் பார்த்தாலும் ஹாய், ஹலோ சொல்லத்தான் நேரம் இருக்கும், வெகுசில நாட்கள் தான் அவன் அகிலாவிடம் கூட தனிப்பட்ட முறையில் பேசியிருந்தான்.

சரியாக உணவு உட்கொள்ளாத காரணத்தால் மெலியத் தொடங்கியிருந்தான், கண்கள் உள்ளே சென்றுவிட்டதாக சனிக்கிழமை பார்க்க வந்திருந்த அவனுடைய அம்மாவும் அக்காவும் சொல்லியிருந்தார்கள். திங்கட்கிழமை மதிய உணவுவேளையில் மோகனும் சார்லசும் கிளாசில் உட்கார்ந்து புரோஜக்ட் டிசைன் பற்றிப் பேசிக்கொண்டிருந்தார்கள். சார்லஸ் அந்த வாரம் செய்ய வேண்டியதை சொல்லிவிட்டு அதற்கு உதாரணங்களை காட்டிக்கொண்டிருந்தான். கனிமொழியும், அகிலாவும் அங்கு வந்தார்கள்.

அகிலா வேகமா அவனருகில் வந்து லாப்டாப்பை மூடி கையில் எடுத்துக் கொண்டாள்.

"ஏய் என்னாடி பண்ணுற?" மெதுவாகக் கத்தினான்.

"ஒன்னும் பேசாதீங்கண்ணே, நேத்திக்கு அம்மாவும் அக்காவும் ஹாஸ்டலுக்கு வந்திருந்தாங்க. அம்மா ஒரே அழுகை, உங்களை அப்படிப் பார்க்கவே முடியலையாம். என்னைத்தான் திட்டினாங்க. நீங்கல்லாம் இருக்கீங்க தான. அவன் சாப்பிடுறதேயில்லை, கேட்கிறதில்லையான்னு?" இது கனிமொழி.

"உங்கக்கா என்கிட்ட வந்து, என்னாடி அவனை காதலிக்கிறேன்னு சொன்னே, அவனோ லூசு மாதிரி கம்ப்யூட்டர் முன்னாடி உட்கார்ந்துக்கிட்டிருக்கான். நீ அவனை தினமும் பார்க்கிறியான்னு கேட்கிறாங்க. நான் என்னத்த சொல்றது, நான் உங்களை பார்த்தே பத்து நாள் இருக்கும். சார்லஸ் கூட வண்டியில் வறீங்க, காலேஜ் முடிஞ்சதும் போயிர்றீங்க. இனிமே உங்க இரண்டு பேருக்கும் மதியம் சாப்பாடு எங்ககூடத்தான்." அவளிடம் கவலை தெரிந்தது.

"சொல்லியாச்சுல்ல, கொடு அதை. உங்ககூட சாப்பிட்டா தப்பா நினைக்காமாட்டாங்களா. லூசுங்களா"

"சரி எங்ககூட சாப்பிட வேண்டாம், நான் கேன்டீனில் சொல்லிடுறேன் சாப்பாட்டுக்கு நீங்க சாப்பிடலைன்னா வந்து லாப்டாப்பை தூக்கிட்டு போயிருவேன், சரி இப்ப போய் சாப்பிட்டு வந்து வாங்கிக்கங்க." லேப்டாப்பைத் தூக்கிக்கொண்டு போயேவிட்டாள்.

ஆனால் சிறிது நாள்களில் எங்களுக்கு எல்லா ரெக்வெய்ர்மண்டுகளும் வந்து சேர்ந்துவிட்டது, டிசைனும் முழுதாய் முடிந்திருந்தது. இனிமேல் வெறும் டெவலப்மெண்ட் மட்டும் தான் மீதமிருந்தது. அதனால் மூச்சு வாங்க முடிந்ததால் தினமும் அவனும் சார்லசும் சாப்பிடத்தொடங்கியிருந்தார்கள். செங்குட்டுவன் சார் கூப்பிடுறதா சொல்லி அட்டெண்டர் வந்து சொன்னார். போய்ப் பார்த்தேன்.

"மோகன், பார்ட் பெஸ்ட்க்கு அழைப்பு வந்தாச்சு, சேர்மன் உன்னைக் கூப்பிட்டு கொடுக்கச்சொன்னார். நான் அவரிடம் சொல்லிவிட்டேன் நீ கொஞ்சம் பிஸியா இருக்கன்னு இந்த வருஷம் வேறு யாரையாவது வைத்து செஞ்சுக்கலாம்ன்னு. ஆனால் அவருக்கு இதில கொஞ்சம் கோபம். அதனால நீ சின்னதா ஏதாச்சும் பண்ணிக் கொடுத்துறேன். ப்ரைஸ் கிடைக்கலன்னாலும் பரவாயில்லை. எப்பிடியிருந்தாலும் எலொக்கேஷன்ல நீதான் வருவ. என்ன?" அவரிடம் சுயபச்சாதாபம் மேலிட்டது.

"சார் பரவாயில்லை, நான் நாடகம் பண்ணித்தரேன், ஆனா நான் இந்த வருடம் பேசலை, வேறு யாரையாவது பேசவைக்கலாம்."

"யாராவது மனசில் இருக்காங்களா?" பெரும்பாலும் அவனை மறுக்கமாட்டார் என்பதால் கேட்டார்.

"அதெல்லாம் இல்லை சார், காம்படீஷன் நடத்துங்க, ஜெயிக்கிறவங்க கலந்துக்கிட்டும்." அகிலா மனதில் இருந்தாலும் இதுதான் சரிவரும் என்று சொல்லியிருந்தான்.

"அப்ப ஒரு ப்ரைஸ் போயிருச்சு, நாடகத்துக்கு கிடைக்குமா?" அவர் முகத்திலேயே அந்தக் கேள்வி இருந்தது.

"அப்படியெல்லாம் இல்லை சார், பேச்சுலயும் நான் வாங்க வைக்கிறேன். இந்த வருஷம் நாடகம் நமக்குத்தான், சார் அப்ப நான் ஆரம்பிக்கிறேன். ரிகர்ஸல் எப்ப பார்க்கிறீங்க."

"ரிகர்ஸல் எல்லாம் வேண்டாம், உனக்கு நம்பிக்கையிருந்தா போதும், பேச்சுப்போட்டிக்கு நீயே ஆளை செலக்ட் பண்ணிரு" தட்டிக்கழிக்கப் பார்த்தார்.

"இல்லை சார், அது நல்லாயிருக்காது. இந்த வாரம் சனிக்கிழமை நடத்தி நீங்களே செலக்ட் பண்ணிடுங்க" சொல்லிவிட்டு நேராக முதலாம் ஆண்டு வகுப்பிற்கு வந்தான். பேசுவேன்னு சொன்ன பையனை செங்குட்டுவனை பார்க்கச் சொல்லிவிட்டு கனிமொழியையும் அகிலாவையும் கேன்டீனுக்கு கூப்பிட்டான்.

"அகிலா, இந்த வருஷம் பேச்சுப்போட்டியில் நான் கலந்துக்கலைன்னு சொல்லிட்டேன். அதனால இந்த சனிக்கிழமை காலேஜில் ஒரு போட்டியிருக்கும். ஜெயிச்சா நீ கலந்துக்கலாம்"

"நான் கலந்துக்கலை..." தலையைக் குனிந்தபடியே சொன்னாள்.

"ஏன்?"

"கலந்துக்கலைன்னா கலந்துக்கலை, இதுக்கு என்ன காரணம் சொல்ல?" காரணம் அவள் முகத்தில் தெரிந்தது.

"உதை வாங்குவ, உனக்காகத்தான் நான் பேசலைன்னு சொன்னேன், இப்ப நீ இப்பிடி சொன்னாயெப்படி?" கேட்டேன்.

"தெரியும் எனக்கு, அதனாலத்தான் சொல்றேன் நீங்களே கலந்துக்கோங்க, நான் கலந்துக்கிட்டாலும் தோத்திடுவேன்." அவளிடம் பயம் தெரிந்தது.

"அப்பிடியெல்லாம் உன்ன தோக்க விடுவேனா, நான் எழுதி தரேன நீ போய் பேசு. அப்புறம் ஒரு நாடகம் நானும் கனிமொழியும் இன்னும் கொஞ்சம் பேர், தேவையிருந்தா நீயும். என்ன கனிமொழி?"

"அண்ணே, இதுக்கு முன்னாடி யாரும் வரமாட்டாங்க அதனால நான் நடிச்சேன். இப்பத்தான் இவ நடிப்பாளே இருந்தும் நான் நடிக்கணுமா?" கனிமொழி அகிலாவிற்காகப் பேசினாள்.

"இங்கபாரு இதுல கொஞ்சம் மெச்சூர்டான பெண்ணு வேணும், அதுக்கு நீதான் சரியாயிருப்ப. அதுவும் இல்லாம இந்த நாடகத்தில் பெண்களுக்கு காலம் காலமா நடக்கும் கொடுமைகளைக் காட்ட வேண்டியிருக்கும், சில இடத்தில் பெண் கேரக்டரை அடிக்கிற மாதிரி கதையிருக்கும்..." முடிக்காமல் நழுவினான்.

"அதானே பார்த்தேன். சோழியன் குடுமி சும்மா ஆடுமா. இவளை அடிக்க மாட்டீங்க, என்னை அடிப்பீங்க அப்பிடித்தானே?" கனிமொழி சீண்டினாள்.

"ஏம்மா ஏறுக்குமாறா பேசுனா எப்படி, பதில்தான் வேணும்னா, ஆமாம்னு வைச்சுக்கோயேன்." சொல்லி விட்டு அகிலாவைப் பார்த்தான், அவளுக்கு இதில் விருப்பம் இல்லையென்று தெரிந்தது. ஆனாலும் அவன் முடிவை மாற்றுவதாக இல்லை. கடைசியில் நாடகத்திலும் அவள்தான் நடித்தாள்.

அடுத்த நாள், கனிமொழி என் முன்னால் நின்று கொண்டிருந்தாள்.

"என்னம்மா?"

"நான் நடிக்கலை அந்த நாடகத்தில்?"

"ஏன் என்னாச்சு?"

"நேத்திக்கு பூரா அகிலா மூஞ்சிய தூக்கிவச்சுகிட்டு இருந்தா, நான் அவளை டிஃபண்ட் பண்ணலையாம். நான் சொன்னா நீங்க கேப்பீங்களாம். ஆனா நான் சொல்லலைன்னு சொல்லிட்டு அதுக்கு பிறகு என்கூட பேசவேயில்லை. எங்க இரண்டுபேருக்கு இடையில் சண்டை மூட்டி விடாதீங்கண்ணே. அவளே நடிக்கட்டும்." புலம்பினாள்.

"அப்பிடியா, சரி அவளே நடிக்கட்டும். ஆனால் நான் கதையை மாத்திருறேன். சீதை, திரௌபதி, இவங்களை மாதிரி பொண்ணுங்களையெல்லாம் வித்தியாசமா காட்டி, பெண்ணுங்களை தெய்வமா பாக்காதீங்க, பெண்ணா பாருங்க அதுபோறும்னு சொல்லலாம்னு நினைச்சேன். இப்ப அதை மாத்திவிட்டு சுதந்திர போராட்டத்த வித்தியாசமா காட்டப்போறேன். நீ அவக்கிட்டையும் இதைச் சொல்லிறு."

கல்லூரியில் நடந்த பேச்சுப்போட்டியில் அவள் தான் ஜெயித்தாள். அவர்கள், குமரனையும், கப்பலோட்டிய தமிழனையும் வித்தியாசமாகக் காட்டி நாடகம் போட்டோம் - பக்கத்தில் கொடி பிடிக்கிற கதாப்பாத்திரம் அகிலாவுக்கு. அவளுக்கு முதலில் கோபம்தான். பின்னர் நடித்துக் கொடுத்தாள். அவளுக்கு பேச்சுப்போட்டியில் இரண்டாம் பரிசும், நாடகத்திற்கு அவர்களுக்கு முதல் பரிசும் கிடைத்தது. அந்தச் சமயத்தில் கொஞ்சம் அவளுடம் பழக வாய்ப்புக் கிடைத்தாலும் எப்பொழுதும் சுற்றி மூன்று நான்கு பேர் நின்று கொண்டே இருந்ததால் அவ்வளவு பர்ஸனலாய் பேசி முடிந்திருக்கவில்லை அவனுக்கு.

இந்த நிகழ்ச்சிக்கு பிறகு மீண்டும் அவர்கள் சந்தித்துக் கொள்வது சிரமமானது. மோகன் புரோஜக்டிலும் அவர்கள் படிப்பிலும் கவனம் செலுத்த வேண்டிய முக்கியமான நேரம் அது. சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் இருவரும் வருவார்கள். கொஞ்ச நேரம் பேசிவிட்டுப் போய்விடுவார்கள். செமஸ்டர் பரிட்சை வந்தது, மிகவும் கஷ்டமான காலங்கள். ப்ராஜக்ட் முடியும் தருவாயில் இருந்தது. எக்ஸாமுக்குப் படிக்கவும் வேண்டும் ப்ராஜக்ட் வேலையும் செய்ய வேண்டும். எக்ஸாம் ஒருவழியாக முடிந்தது. ஒருநாள் கனிமொழியும், அகிலாவும் வந்தார்கள்.

"நாங்கள் ஊருக்குப் போகிறோம், நீங்க வரீங்களா?" என்று கேட்டாள் கனிமொழி. அகிலா முகத்தில் நான் வரமாட்டேன் என்று தெரிந்தாலும் ஒரு எதிர்பார்ப்பு இருந்தது.

"உங்களை மாதிரி வேலை வெட்டியில்லாதவனா நான், ஊர் சுத்துவதற்கு? எனக்கு ஆயிரம் வேலையிருக்கு. நீங்க போய்ட்டுவாங்க" சொன்னேன்.

"நீங்க வேலையைக் கட்டிக்கிட்டு அழுங்க, நாங்க போய்ட்டு வர்றோம்" - இருவரும் பழிப்பு வேறு காட்டிவிட்டுப் போனார்கள்.

பதினைந்து நாள் விடுமுறை, அவனுக்குக் கிடைத்த அற்புதமான வாய்ப்பு. செதுக்கிச் செதுக்கி அவனும் சார்லசும் அந்த புரோஜக்டை முடித்தார்கள். நாள்களும் முடிந்திருந்தது. நாளை கல்லூரி தொடங்கும் நாள். சார்லஸ் வேலையிருப்பதாகச் சொல்லிவிட்டு வீட்டுக்குப் போய்விட்டான். அவன் மேனுவல் டெஸ்டிங் மற்றும் சில டெஸ்டிங்க டூல் எல்லாம் வைத்து எல்லாம் ஒழுங்காப் போகுதான்னு பார்த்துக்கொண்டிருக்கும் பொழுது மணி காலை பதினொன்று இருக்கும். பசித்தது. எதாவது சாப்பிட்டுவிட்டு வரலாமேன்னு நினைத்து வெளியே கிளம்பினான். அகிலா வந்து கொண்டிருந்தாள், சுடிதார் அணிந்திருந்தாள் இப்பொழுதுகளில் முளைத்திருக்கும் மஞ்சள் ரோஜாவும் இருந்தது கண்களில் களைப்பு தெரிந்தது.

"என்னாடி ஊரெல்லாம் சுத்திட்டு வந்தாச்சா?"

"ம்ம்ம், முடிஞ்சிருச்சு, நீங்க சாப்பிட்டீங்களா?"

"அதுக்குத்தான் கிளம்பிட்டுருக்கேன்!"

"நான் நினைச்சேன், அதனாலத்தான் உங்களுக்கு சாப்பாடு வாங்கி வந்தேன், சாப்பிடுங்க. எனக்கு ரொம்பக் களைப்பா இருக்கு. சரி உங்களை பார்த்துட்டு ஹாஸ்டல் போகலாம்னு வந்தேன். ம்ஹூம் முடியலை. நான் கொஞ்ச நேரம் தூங்குறேன். சாயந்திரமா எழுப்பிவிடுங்க. என்ன?"

"சரி தூங்கு, கனிமொழி எங்க?"

"நான் வீட்டில் இருந்து நேரா இங்க வந்திட்டேன். அக்கா வீட்டுக்கு போயிருக்கு; நாளைக்கு வரும். புரோஜக்ட் முடிஞ்சிருச்சா?"

"சூப்பரா முடிஞ்சிருச்சு, பார்க்கிறியா?"

"ஆமாம் அதைவிட்டா வேற வேலையில்லை பாருங்க, உங்களைமாதிரி," சொல்லிவிட்டுப் போய் கட்டிலில் படுத்துத் தூங்கத் தொடங்கினாள்.

அவன் சாப்பிட்டுவிட்டு மீதமுள்ள டெஸ்டிங் பண்ணிக் கொண்டிருந்தான்.

"என்னங்க மணியென்ன, ரொம்ப நேரம் தூங்கிட்டேன் போலிருக்கு?"

"மணி பத்தரை" சொல்லிவிட்டுப் பேசாமல் இருந்தான்.

"என்னங்க இது, பத்தரையா நான் எப்படி ஹாஸ்டல் போறது? நான் உங்களை எழுப்பிவிடச் சொன்னேன்ல?"

"அசந்து தூங்கிட்டிருந்த, அதான் எழுப்ப மனமே வரலை..."

அகிலா அன்று இரவு ஹாஸ்டல் போகவில்லை.

(தொடரும்...)

Read More

Share Tweet Pin It +1

8 Comments

In நாட்குறிப்பு

Big Boss




அமெரிக்காவில் உட்கார்ந்து கொண்டு போரடிக்கும் காலத்தில் ஏதாவது தமிழ்ப்படம் பார்ப்பது தான் வழமை. பெரும்பாலும் வியாழக்கிழமை வெளியாகும் படங்கள், வெள்ளிக்கிழமை டிவிப்பெட்டியில் பார்த்துவிட்டு. அடுத்து வெள்ளிக்காக காத்திருப்பது வழமை. அதாவது ஒரு நாளை ஒரு மணிநேரமாவது குடும்பமாக உட்கார்ந்து பார்ப்பதற்கு ஏதாவது வேண்டும். மனைவிக்குப் பாடல்கள் எனக்கு நகைச்சுவை என தனி ரசனைக்காக தமிழில் ஏதாவது ஓடிக்கொண்டிருக்கும்.

வாராது வந்த மாமணியாய் பிக் பாஸ். கமலுக்காகத்தான் பார்க்கத் தொடங்கியது. பின்னர் ஜூலிப் புள்ளையை கொடுமை பண்ணுகிறார்களே என்று நீண்டு, ஓவியாவின் மீது காதல் கொண்டு, பின்னர் பரணிக்காய் அழுது என்று இப்பொழுது கஞ்சா கருப்பை வெளியேற்றியது கொஞ்சம் மன நிம்மதியுடன் இருக்கிறோம். எங்கள் இருவருக்கும் பரணியை ரவுண்டு கட்டுவது பிடிக்கவில்லை. ஆனால் நாங்கள் கஞ்சா கருப்பைத்தான் தூக்குவானுங்கன்னு ஊகிச்சோம்.

பரணி: பயபுள்ள என்ன பண்ணான்னு தெரியலை நாடோடிகள் ஷூட்டிங்கில். ஆனா கஞ்சா கருப்பு மாதிரி ஊர் நாட்டானுங்களுக்கு எந்தக் காரணமும் இல்லாமல் இப்படி பைத்தியம் பிடிக்க வாய்ப்பு உண்டு.
கஞ்சா கருப்பு: பரணிப்பய இல்லாட்டி இந்தாள ரொம்ப நாள் வைச்சிருந்துருப்பானுங்க. ஆனா மொத்தக் கூட்டத்திலும் லூசு இந்தாளு தான். பாலா ஒரு திரைப்பட விழாவில் திட்டின பொழுது. சட்டென்று மனசுக்கு வலித்தது. ஆனா பாலா சொன்னது தான் சரி. ச்சை முட்டாப் பய.
ஆர்த்தி: இவ ஐஏஎஸ் படிக்கப்போறேன்னு விகடன்ல சொல்லியிருந்தா. ஞாபகமிருக்கு. குண்டாயிருந்து கஷ்டப்படுறாளேனு மனசுல எப்பவும் ஓடும். பொறாமைன்னா இந்த பதினைஞ்சி பேத்தில பொறாமை இவளுக்குத் தான் அதிகம். காரியக்காரி. ஆனா சக்தி கூடயெல்லாம் சண்டை போடுவதில் தெரிகிறது இவளுக்கு ஸ்ட்ராடஜி இல்லைன்னு.
ஜூலி: வாயி வாயி வாயி. என்னா வாயி. பச்சோந்தி. ஜல்லிக்கட்டு சமயத்தில் அத்தனை பெரிய இமேஜ் எல்லாம் என் மனதில் உருவாகாததால், குறையறதுக்குன்னு பெரிசா இல்லை. ஆனா ஆரம்பத்தில இவளை ஆர்த்தியும், காயத்ரியும் வம்பிழுக்க கடுப்பானது உண்மை. இவளோட பச்சோந்தித்தனம் கடுப்பையே வரவழைக்கிறது.
நமீதா: இவளைப் பத்தி மக்கள் பொதுவா என்ன நினைக்கிறாங்கன்னு கூடவா தெரியாது இவளுக்கு. ஜூலிக்கு மேக்கப்போட்டது இவ சிரிச்ச மாதிரி தான் பிக்பாஸு ஆரம்பத்தில் இவ போட்ட ஆட்டத்துக்கு மக்கள் சிரிச்சதும். வேஸ்ட். கமல்ஹாசன் அங்கிள் சரியா அசிங்கப்படுத்துனாரு, கடவுள் உங்கக் கூட பேசினா அது உங்களுக்கு பைத்தியம்னு. ஆளும் இவளும்.
சக்தி: இந்தப் பயலுக்கு என்னவோ பிரச்சனையிருக்கு, ஏன் இப்புடி மூச்சிறைக்குது இவனுக்கு? ஹை பிபி போல. இவனை ப்ரொமோட் பண்ணுவோம்னு ப்ராமிஸ் பண்ணியிருப்பானுங்க போலிருக்கு. விஜய் டிவி, தேவையில்லாம இவனை ப்ரொமோட் செய்யறானுங்க பிக் பாஸுக்குள்ளயே.
ரைஸா: இந்த மாதிரி மூளைக்கே வேலையில்லாத ஆள் கொஞ்ச காலம் பிக் பாஸில் தாக்குப் பிடிப்பாள். கஞ்சா கருப்பு வெளியே போனதுக்கெல்லாம் அழுவுற ஆள் கஷ்டம் தான்.
வையாபுரி: எனக்கென்னாமோ இந்த பிக் பாஸில் கொஞ்சம் நியாயமா நடுத்துக்குற ஆள் இந்தாளு தான்னு தோணுது. நல்ல மனுஷன். பரணி விஷயத்துல கொஞ்சம் தவறு இருக்குதுன்னாலும் அது கஞ்சா கருப்பால.
சினேகன்: இவன் சக்க மொக்க. ஃபேக். இந்த மொத்த கூட்டத்துலயும் ஃபேக் இந்தப் பய தான்.
கணேஷ்: தான் உண்டு தன் வேலை உண்டுன்னு இருக்கான். ஆளுகிட்ட தெரியும் பெண் தன்மை, அவன் லேங்க்வேஜ் இஷ்யூ இல்லையென்றே நினைக்கிறேன். நியாயமாவும் நடந்துக்குறான்.
ஆரவ்: காதல் படத்து பரத் மாதிரி, ஞெய் ஞெய்ன்னு மண்டையில அடிச்சிக்கிட்டு அலையப்போறான்னு தோணுது. நியாயமா பேசுறான், ஆர்த்திக்கு ஆப்பு வைச்சிருவான்னு தோணுது.
காயத்ரி: பொய் புழுவி. நல்லா ஆர்த்தி திருப்பிவிடுற பக்கமெல்லாம் ஆடுறா. ஆட்டக்காரி. சொல்புத்திக்காரி. டைவோர்ஸி, குழந்தை குட்டியில்லையாட்டிருக்கு. வீட்டில் என்ன வேலை, பிக் பாஸில் பெஞ்ச் தேச்சிக்கிட்டிருக்கா. இப்போதைக்கு போகமாட்டா. யாரையும் மிஸ் செய்ய மாட்டான்னு ஊகிக்கிறேன்.
அனுயா: எவனாவது அந்த சுசிலீக்ஸ் வீடியோ உன்னுதான்னு கேப்பானுங்கன்னு நினைச்சேன். ச்சை முதல்லயே வீட்டுக்கு அனுப்பிட்டானுங்க.
ஸ்ரீ: இவனுக்கு சைக்கலாஜிக்கல் பிரச்சனை என்னமோ இருக்கு. பாவமாயிருந்தது என்னமோ உண்மை.
ஓவியா: இது டார்லிங். இவளை பிக்பாஸுக்கு முன்னமே பிடிக்கும் இப்ப ரொம்பவும் பிடிக்குது. பயபுள்ள சிகரெட் அடிக்கும் போலிருக்கு. சிகரெட் எல்லாம் லக்சுரி பட்ஜெட்டில் வராதா. ஸ்ட்ராடஜியான்னு தெரியலை, ஆனா இவ நடந்து கொள்ளும் விதத்தில் ஸ்ட்ராடஜி இருக்கு என்று ஊகிக்கிறேன்.



இந்த வாரம், ஆர்த்தி ரைசா மற்றும் வையாபுரி எலிமினேஷனுக்கு நாமினே செய்யப்படுவாங்கன்னு ஊகிக்கிறேன். வையாபுரிக்குத் தான் எலிமினேஷன்.

- வாரத்திற்கு ஒன்று இப்படி எழுதப்படும்.

PS: நான் சின்னக் குழந்தையா இருக்கச்ச எனக்கு ரொம்பப் பிடிச்ச டிவி ஷோ. WWE.

Read More

Share Tweet Pin It +1

11 Comments

In Eun Gyo R.P. ராஜநாயஹம் உண்மைத் தமிழன் கே என் செந்தில் மோகனீயம்

தொடர்ச்சியற்ற எண்ணங்கள்

ராஜநாயகத்தின் பதிவுகள் படித்தால் கழிவிரக்கம் நம்மையும் தொத்திக் கொள்கிறது. உலகமே அவருக்கு எதிராக சதி செய்வதைப் போல் தோன்றுகிறது.
நான் தமிழ் சினிமாவில் படமெடுக்கும் ஒரு காலம் வந்தால், ராஜநாயகத்தை ஹீரோவாகப் போட்டு படமெடுக்கும் முடிவுற்கு வந்து கனகாலம் ஆகிறது. பாக்கியராஜ் தான் வில்லன்.
அவர் எழுதும் பதிவுகளின் கருத்து அடர்த்தி பிரமிக்க வைக்கிறது, ஆனால் அத்தனை படித்தும் இன்னும் ஹியுமிலிட்டி வரலையே என்பது தான் புரிந்துகொள்ள முடியாமல் இருக்கிறது. நேர்ப்பழக்கத்தில் வருமாகக்கூடயிருக்கும், ஆனால் எழுத்தில் வருவதில்லை.

--------------------------

Watched this movie Eun Gyo.


I hate whats so popular. South Korean movies are so popular in Tamil Cinema, they plagiarize and make extraordinarily stupid copies. I kind of restrict myself not to see South Korean movies. Its very hard, complex, compact and dense feeling, I cant explain clearly how my mind works in these matters. But what the heck let me try, I think I dont like people suggesting movies to me, and I wish I could find them on my own. Its not because I believe in destiny or something, but I believe in random things happening, as kind of the whole human experience itself is pretty much random, I suppose. Whats the chance of you becoming what you are from 15 - 300 million sperm to hit on egg? Looping through zillion of movies and coming across one beauty. For example the chance of me finding this movie and watching it, is almost zero. Why almost? if this is not Facebook and if my Tamil writing software is working this moment and if I am not crazy enough to expose myself. I could write what was the 'almost' possibility of my finding this movie. Not watching it. Though. I can only give clues, my random nostalgic search made me go to Jan Dara movie and Netflix's stupid - let me come to this later - algorithm connected Eun Gyo with Jan Dara. Now for the stupidity, its not stupid its brilliance - I understand - this is exactly what I like when I really go for a suggestion made for me. But I hate the brilliance of connecting Eun Gyo and Jan Dara, based on sexually explicit scenes. Both are brilliant novels. exceptionally told. But I guess its not suggesting Eun Gyo from Jan Dara from any of these brilliant connections, but its explicit scenes/story line.
Coming back to South Korean movies. Every now and then I kind of make an exception to that and start watching one movie then continue do the random search, before somebody again suggest me a South Korean movie. I appreciate this movie because of the content its trying to touch and the classical way its trying to do so. I read about the issues Stanley Kubrik's faced when he tried to make Lolita movie. Lolita is a literary master piece which in itself is pretty hard to make a movie of. But he had Nobakov on his side, I think the movie credit him for the screenplay - I am writing from memory I could be wrong here. I could see similar twists and turns this movie takes to avoid trouble - once again I am guessing. Once again rambled to some other thing which I didnt initially thought of writing about. This is exactly how I write in Tamil I guess, so when my thought process is so fucked up, it - and not me - exactly writes this way. So please blame the Tamil software which didnt work, and Netflix for connecting Jan Dara to this wonderfully made Eun Gyo movie, but not me for my writing style and English. Hopefully people would have left this piece much earlier. Wait a minute did I say anything good about the movie? Hopefully the reader who come to this low(haahaa ) should be understanding the irony? Or may be I shouldnt explicitly say the irony word. Putting things into the readers mind. OMG here I go again.

------------------------------------

உண்மைத்தமிழன் கேட்டதற்கு,

"எளிய நிகழ்வுகளை மெல்ல திருப்பி ஒளிக்குக் காட்டுவதனூடாக படிமமாக ஆக்கும் கலை நிகழும் கவிதைகள் அவருடையவை." - ஜெயமோகனின் இயல் விருதுகள் கட்டுரையில்..!
- இதன் விளக்கத்தை யாராவது தமிழில் மொழி பெயர்த்துச் சொல்லுங்களேன்..!

நான் சொன்ன பதில்,

met·a·phormedəˌfôr,ˈmedəˌfərnouna figure of speech in which a word or phrase is applied to an object or action to which it is not literally applicable.
"“I had fallen through a trapdoor of depression,” said Mark, who was fond of theatrical metaphors"



But I have heard, thinking in metaphor's or படிமம் is a mental issue. And they should get treatment for this problem.

Saravanan Savadamuthu those lines are exactly what happens when you take a photograph. In an indirect way you could say படிமம் as photograph. So what he is trying to say is, this poet's poem's are like photographs of the current situation he is writing about.

You should read about 'Synesthesia'. People with this problem will associate different thing with different objects/associations. As I said this is a mental issue.  Most of the poet's have this mental problem. Not treated this condition is harmful to the society. 

---------------------------------------


சூரியன் வயலினோடு கொண்ட காதல் அறிவாயா சிந்து? உலகப்புகழ் பெற்ற ஸ்ட்ராடிவேரியஸ் வயலின் பொழியும் தனித்துவமான இசை நிகழ சூரியன் செய்த வித்தை தெரியுமா? கொரேஷியாவின் மேப்பில் மரங்கள் சூரியன் ஆளுமை குறைந்த பனிப் பொழுதுகளில் குன்றிய வளர்ச்சி ஏற்படுத்திய அடர்த்தி மிகுந்த மரக்கட்டைகளால் தயாரிக்கப்பட்டதுதான். 1645 - 1750 களில் நிலவிய வெப்பநிலை காரணமாய் இக்காலத்தை சிறிய பனிக்காலம், என்று சூரிய ஒளியை ஆராயும் அறிஞர்கள் கூறுகிறார்கள். சூரிய ஒளிக்குறைப்பாட்டால் வளர்ச்சிக் குன்றிய இந்த மரங்கள், தனக்கு அடர்த்தியைக் கூட்டிக் கொண்டது. ஸ்ட்ராடிவேரியஸ் வயலின்களை ஆராய்ந்த இசை வல்லுநர்கள் இப்பொழுது கொள்ளும் முடிவு இந்த சிறிய பனிக்காலத்தில் குறைவாகவும் அடர்த்தியாகவும் வளர்ந்த மேப்பில் மரங்களில் இருந்து செய்யப்பட்டதால் தான் இந்த வயலின்களில் இருந்து வரும் இசை பிரமிப்பூட்டுவதாக இருக்கிறது. உனக்குப் புரிகிறதா சிந்து கொடுப்பது மட்டுமல்ல மறைப்பதுவும் கூட காதல் தான், வளர்வது மட்டுமல்ல வளராமல் மட்டப்படுவதும் கூட இயற்கையாகவே தேவைதான்.

மோகனீயம் சீரியஸிற்காக எழுதியது. எங்கையாவது நுழைக்கணும். 

-----------------------------


கே என் செந்திலின் இன்டர்வியூ படித்தேன். அவர் சொல்லும் கருத்து ஒத்துக்கொள்ளக் கூடியதாகத்தான் இருக்கிறது.
இளங்கோ டிசெ, இதைப் படித்தபின் தான் இன்டர்வியூ கொடுப்பதில்லை என்று எழுதியிருந்தார் போலிருக்கிறது. இது சரியான கருத்து இல்லை.
அராத்து, சரவணன் சந்திரன், ஜி.கார்ல் மார்க்ஸ், கணேசகுமாரன், விநாயக முருகன், ஆத்மார்த்தி இவங்கல்லாம் யாரு? அராத்துங்கிற ஆளு சாரு நிவேதிதாவுக்கு தண்ணி செலவு செய்யறவர்ங்கிற அளவுல தெரியும். இவரு இப்ப புக்கெல்லாம் எழுதுறாரா என்ன?
வழக்கம் போல் சிவராமன் அண்ணன் உயிர்மைக்கு கம்பு சுத்தறார் போல. பர்ஸனலாப் பார்த்தா கேக்கணும் ஏன் அப்படின்னு, ஒரு வேளை ஹமீது திமுகங்கிறதாலயா இருக்குமோ? ஹமீது இப்ப திமுக சேர்ந்ததுக்கு அப்புறமும் உயிர்மையை இலக்கியப் பத்திரிக்கைங்கிற கேட்டகிரியில தான் வைச்சிருக்காங்களா.
போகன் வழக்கம் போல எந்தப் பக்கம் கம்பு சுத்துறாருன்னே புரியலை, கமலஹாசன் போல் எல்லார் தலையிலையும் கொட்டுறார், அதெல்லாம் கூட பரவாயில்லை படிச்சிக்கிட்டிருக்கிற நம்ம தலையிலையும் கொட்டுறார். ஆமா கே என் செந்தில் ஏன் போகனைப் பத்திப் பேசலை, போகன் எழுதுற இலக்கியம்னு நினைக்கிறதாலயா? இல்லை அராத்து அளவுக்குக் கூட பொருட்படுத்த வேண்டாம்னு நினைக்கிறதாலயா?
அரூப நெருப்பு புக்கு படிச்சே ஆகணும்னு முடிவு பண்ணிட்டேன். அமெரிக்காவுக்கு இப்பலாம் யாரு புக் வேகமா அனுப்புறா?
யாருமே லிங்க் கொடுக்காம அடிக்கிறதா நான் பர்ஸனலா நெனக்கிறதால, இதோ லிங்க்.

-----------------------------

முப்பது லைக்கு என்று வம்பிழுப்பது போகனைத்தான.
ஏங்காணுங் ஸ்பெல்லிங் மிஸ்டேக் சரிபண்ணிக் கொடுத்த புக் போட்டுக்கொடுக்குறேன்னு தான் சொல்றாரே ப்ரோ.
ஆனா அந்த முப்பது லைக் யார் போடுவது, அவங்க மேல பதிப்பாளருக்கு என்ன காண்டு???

காலச்சுவடு எ. உயிர்மை கருத்து வந்தாச்சு. எங்கப்பா இன்னும் ஜாதியைச் சொல்லி ஒன்னு வரலை. ஜெயமோகன் சாருல்லாம் வேற இதப்பத்தி இப்ப பேசியாகணும்.
இந்த பிக் பாஸ் காலத்தில இவனுங்களுக்கு இந்தப் பிரச்சனையை வைத்து நாலு புக் வித்துடலமான்னு எல்லாப்பக்கமும் கமென்ட்டா போட்டுத் தள்ளுறானுங்க. உருப்படியா ஒரு எழவும் வரலை.

கே என் செந்தில் எழுதியதில் எங்களையெல்லாம் ஏன் இலக்கியவாதி இல்லையென்று கூட சொல்லவில்லைன்னு ஒரு க்ரூப் கிளம்புது, இது வித்தியாசமான முயற்சியா இருக்கேன்.
செந்தில் நீங்க நடத்துற பத்திரிக்கையில் இதுக்காக மாசத்துக்கு ஒரு பத்தி எழுதுங்க. பாவம் புள்ளைக பொழச்சி போகட்டும்.

Read More

Share Tweet Pin It +1

0 Comments

In சிறுகதை

ரஞ்சனி

பேருந்து நிலையத்திற்கே ரஞ்சனி வருவாள் என்று நான் நிச்சயமாய் நினைக்கவில்லை, சென்னை - பெங்களூர் பேருந்தை விட்டு கீழே இறங்கியிருக்கவில்லை சில்லென்று முதுகெலும்பைத் தொட்டுச் செல்லும் பனிக்காற்றையும் “ஆட்டோ பெக்கா சார்” என்று பெட்டியைப் பிடுங்கி தன் ஆட்டோவில் அமர்த்திக் கொள்ளும் லாவகத்திலிருந்து தப்பிப்பதையும் மீறி சிகப்பு நிற சாண்ட்ரோவில் சாய்ந்து நின்று கொண்டிருந்த ரஞ்சனி கண்ணில் பட்டாள்.

கை அசைத்து என் கண்களின் கணிப்பு சரிதான் என்று உறுதிசெய்தவளிடம் இந்த மூன்று ஆண்டுகளில் பெரிதாய் மாற்றம் ஒன்றும் இல்லை. பேருந்துகளின் அத்தனை சௌகர்யமாக நான் உறங்குவதில்லை என்பதால், களைப்பாகவே இருந்தது அதுவும் பக்கத்தில் உட்கார்ந்து குறட்டை விட்ட நபருக்கு நல்ல உறக்கம். என் பொழுது பாதி ட்ரைவர் உடன் பேசுவதில் கழிந்தது, நான் சிகரெட் குடிக்க ஆரம்பித்தும் மூன்று வருடங்கள் இருக்கும். அந்த அதிகாலை வேளையிலும் குளித்திருப்பாள் என்று தோன்றியது தலை சீவி பின்னியிருந்தாள், மிருதுவான சந்தனம் ஒளிர்ந்தது அவளது நெற்றியில் அதே விகல்பமில்லாத சிரிப்பு. நான் அவளை நெருங்கும் வேளையில் காரின் முன்பக்க கதவைத் திறந்தவள் கையில் ஒரு ஸ்வெட்டரை எடுத்து திணித்தாள். என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை,

நான் பல் விளக்குவதைப் பற்றி பெரிய அபிப்ராயம் ஒன்றும் வைத்திருக்க மாட்டேன் என்று அவளுக்குத் தெரியுமாதலால், “சாயா சாப்பிடுறியா?” என்று கேட்டவாரே அருகில் வந்து ஒரு முறை அணைத்து விலகினாள். அவள் வலது மார் என் வலது மார்பில் உரசியது. அவளுடையதில் இல்லை, நானொன்றும் அவளுக்குப் புதிதில்லை அவள் மார்புகளுமே கூட ஆனால் இன்று அவள் இன்னொருவனுக்கு சொந்தமானவள். என் மனதின் ஓரத்தில் கூட அவளைப் பற்றி தவறாக நினைக்க என்னால் முடியாது ஆனால் வெறும் பனியனில் அவள் அணைப்பு பனிக்கு இதமாக எனக்குத் தேவையாக இருந்தது. நான் எங்களை யாரும் தவறாய் உணர்ந்துவிடக்கூடாதே என்று சுற்றிலும் பார்த்தேன். என்னிடம் தவறு இருந்தது, நான் மறைக்கவில்லை அவளும் உணர்ந்தேயிருக்க வேண்டும். பின் ஸ்வெட்டரை மாட்டியபடியே, பாக்கெட்டில் இருந்து ஒரு சிகரெட்டை எடுத்தவனாய்.

“Hope you dont mind” என்றவாறு பற்ற வைத்தேன், அவளுக்கு நான் அவளைப் பிரிந்தபின் என்னுடன் ஒட்டிக்கொண்ட நண்பனை அறிமுகம் செய்ய நினைத்தவனாய். என்னமோ சொல்ல வந்தவள் எதுவும் பேசவில்லை. அவள் கேட்டு நான் மறுத்தது சிகரெடி பிடிப்பது, அவளுக்கு நாங்கள் காதலித்த சமயத்தில் நான் விளையாட்டுக்காய் அவள் முன் சிகரெட் பிடித்துக் காட்டச் சொன்ன பொழுது மறுத்திருந்தேன் அம்மாவின் பெயரைச் சொல்லி. அவள் என்னிடம் அதைப் பற்றிக் கேட்டாகது உறுத்தியது என்றாலும் அது தான் ரஞ்சனி. நானே தொடர்ந்தேன். 

“ஏம்பா நீ வந்த, நானே ஆட்டோ பிடிச்சு வந்திருப்பேனே? வீட்டில் எல்லாரும் சௌக்கியம் தான”

அதுவரை கண்களைப் பார்க்காமல் எங்கேயோ பார்த்துக் கொண்டு பேசியவள் சட்டென்று கண்களை உறுத்துப் பார்த்தாள்.

“இந்த ஊரில் ஆட்டோகாரங்க நல்லவங்க தான் இல்லைன்னு சொல்லலை காலங்கார்த்தால ஏகத்துக்குப் பொய் சொல்லுவாங்க... இங்க சாப்பிடறதுன்னாலும் சரி இல்லை வீட்டிற்குப் போய் பார்த்துக்கலாம்னாலும் எனக்குப் பிரச்சனையிலை!” சற்று நிறுத்தியவள் நான் அங்கே டீ சாப்பிடுவதில் பெரிதாய் விருப்பம் காட்டாததால் கதவைத் திறந்து உள்ளே உட்கார்ந்தவாரே, “வீட்டில் எல்லாரும் சௌக்கியம்.” என்றாள்.

நானும் முன்பக்க கதவைத் திறந்து உட்கார்ந்தேன், மிருதுவான சந்தன வாசம் தாக்கியது. அலுங்காமல் காரைத் துவக்கியவள் சடுதியில் கியரை மாற்றி பசுமை நகருக்குள் நகர்த்தத் தொடங்க அவளுடைய லாவகம் ஏற்படுத்திய ஆச்சர்யம் சட்டென்று முகத்தில் படர்வதைச் சமாளிக்க வேண்டி முகத்தை எதிர்ப்பக்கம் திருப்பியிருப்பேன். குபீரென்ற சிரிப்பில் அதிர்ந்து அவளைத் திரும்பி பார்த்தேன்.

“தாஸ் நீ இன்னும் மாறவேயில்லை, அப்ரிஷேட் மேன். நான் நல்லா டிரைவ் செய்றேன்னு ஒத்துக்கோ அதுவும் இல்லாட்டா அந்த ஆச்சர்யத்தையாவது வெளிப்படுத்தேன் என்ன குறைஞ்சிடும்.”

அவளுடைய சிரிப்பில் நானும் கலந்து கொண்டேன். அவள் அப்படிச் சிரிப்பதைப் பார்த்து வெகுகாலம் ஆகிவிட்டிருந்தது. கடைசியாய் நாங்கள் சந்தித்த பொழுதுகளில் அவளிடம் ஒரு மென்சோகம் நிரம்பிய புன்னகை மட்டுமே வெளிப்படும். வெளியில் முகம் திருப்பினேன் இன்னும் விடியவில்லை, பனிபோல் படிந்திருந்த புகை மூட்டத்தைக் கிழித்துக் கொண்டு அநாயாசமாய் கார் பெங்களூர்ச் சாலைகளில் பறந்தது. பாடகர்கள் தங்களுடைய மூச்சுக்காற்று மைக்கில் கேட்டுவிடக்கூடாதென்று நொடிப்பொழுதில் மைக்கை அகற்றி மூச்சுவிடும் லாவகம் அவள் ரிவ்யூ மிரர் பார்ப்பதில் இருந்தது.

மூன்றாண்டுகளுக்கு முன் எத்தனை தடவை கெஞ்சியிருப்பேன் வண்டி ஓட்டக் கற்றுக்கொள் என்று, தலைகீழாய் நின்று மாட்டேன் என்று அடம்பிடித்தவள் இன்று என்ன பிரம்மாதமாய் வண்டி ஓட்டுகிறாள் என்று நினைத்தவனுக்கு பழசெல்லாம் நினைவில் வந்தது.

“தாஸ் உங்க வீட்டில் ஜாதி பார்த்துத்தான் சமைக்க விடுவாங்கன்னு முன்னமே தெரியும்னா நீ என்னைக் காதலிச்சிருக்கவே கூடாது! இப்ப வந்து அம்மாவையும் விட்டுத்தரமுடியாது உன்னையும் விட்டுத்தரமுடியாதுங்கிறது குழந்தைத்தனமாயிருக்கு.

நீ எதாவது ஒரு முடிவெடுத்தே ஆகணும் நான் உங்க அம்மாவை கழட்டி விடச் சொல்லலை, எல்லா அம்மாவும் கல்யாணத்துக்கு அப்புறம் சரியாய்டுவாங்க அப்படியில்லாட்டி நான் எவ்வளவு முடியுமோ அவ்வளவு படிஞ்சுப் போயாவது சரி செய்றேன்...” அவளுடைய அத்தனை புலம்பல்களுக்குப் பிறகும் என்னால் முடிவெடுக்க முடியாததால் “தாஸ் உன்னைய நான் தப்பா சொல்லலை! என்னால் உனக்காக காத்திருக்க முடியும் ஆனால் இது காத்திருந்து கைகூடுற விஷயமா தெரியலை. நீ உன் வழியப் பார்த்துக்கோ நான் என் வழியப் பார்த்துக்குறேன்.” சொல்லிவிட்டுப் பிரிந்தவளை இன்று தான் மீண்டும் சந்திக்கிறேன்.

“இடைல பெங்களூர் வந்திருந்தியா தாஸ்” அந்தக் கேள்விக்கான என்னை மீண்டும் திருப்பியது ஆனால் பதில் அவளுக்குத் தெரியும் என்பதால் நான் சொல்லவில்லை. அவளும் எதிர்பார்த்திருக்க மாட்டாள் தான். என்னுடைய சிந்தனையைக் கலைக்க முயற்சித்திருக்க வேண்டும்.

“ஆனா நான் சென்னை வந்திருந்தேன் சில சமயம்.”

நான் முறைக்க,

“யூ நோ ஒன்திங் வி காட் டிவோர்ஸ்ட்.”

என்னால் அவள் சொன்ன வார்த்தைகளை நம்ப முடியவில்லை. அவளுடைய திருமண வாழ்க்கைக்கு என்னால் எந்த விதத்திலும் பாதிப்பு வந்துவிடக்கூடாதென்று தான் மூன்றாண்டுகளாக அவளைச் சந்திக்காமல் என்னை நானே கொலை செய்து கொண்டு வாழ்ந்து வந்தேன்.

“என்ன சொல்ற நீ?”

“தாஸ் இந்த விஷயத்தை வீட்டுக்குப் போய் பேசலாமா?” என்று அவள் தள்ளிப்போட என் மனதில் ஏகப்பட்ட கேள்விகள். ரஞ்சனியைப் போன்ற ஒரு பெண்ணை விரும்பாத நபர் கூட இருக்கமுடியுமா? ஒருவேளை நாங்கள் காதலித்தது தெரிந்திருக்குமா? இப்படி ஏகப்பட்ட கேள்விகளால் நான் அலைமோதிக் கொண்டிருந்ததால் எப்பொழுது காரைவிட்டு இறங்கினேன் எப்பொழுது வீட்டிற்கு வந்தேன் என்பதே தெரியாமல் அவைகள் நடந்திருந்தன.

“இப்ப கேளு உனக்கு என்ன கேக்கணுமோ அதையெல்லாம்!”

என்னால் அதற்குப் பிறகும் கேள்வி எதையும் கேட்கமுடியவில்லை.

“அவருக்கு இன்னொரு லவ் அஃப்யர் இருந்தது. என்கிட்ட அவர் அதைச் சொன்னதும் எனக்கென்னமோ உன் ஞாபகம் தான் வந்துச்சு. என்னால எதையுமே மறுக்க முடியலை. அம்மா அப்பாவுக்காகத்தான் கட்டிக்கிட்டேன் ஆனாலும் என்னால் முடியலைன்னு அழற புருஷன் கிட்ட என்ன சொல்லமுடியும் சொல்லு நான் டைவோர்ஸ்க்கு ஏற்பாடு பண்ணுங்கன்னு சொல்லிட்டேன்.” நிறுத்திவிட்டு என்னையே பார்த்தாள்.

ரஞ்சனியின் இந்த நிலைக்கு நான் காரணம் இல்லை என்ற உணர்வே சந்தோஷத்தைத் தருவதாய் இருந்தது. என் உள்ளத்தைப் படித்தவளைப் போல்,

“நம்ம இரண்டு பேரு விஷயம் அவருக்குத் தெரியாது...” அவளும் மென்மையாய் சிரித்துக் கொண்டே சொன்னாள். “அப்படியிப்படின்னு இரண்டு வருஷம் ஓடிருச்சு... அதெல்லாம் சரி நீ ஏன் கல்யாணமே பண்ணிக்கலை?”

என்ன சொல்வேன் நான் நீதான் காரணம் என்றா? அது அவளுக்குத் தெரியாத ஒன்றா என்ன? கேள்விகளுக்கான பதில் அதனுடைய தேவையை நிறைவேற்ற முடியாதெனும் பொழுது பதில்களின் தேவையே கூட தேவையில்லாததுதான். நான் பதிலொன்றும் சொல்லாமல் அவளையே பார்த்துக்கொண்டிருந்தேன்.

"நீ கல்யாணம் பண்ணிக்காததுக்கு நான் தான் காரணம்னு சொல்லமாட்டேன்னு நினைக்கிறேன்..." சொல்லிவிட்டு சிரித்தாள்.

"உன்னை எப்படிச் சொல்வேன் தப்பெல்லாம் நான் பண்ணினது இல்லையா? தைரியம் இல்லாம கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு சொன்னது நான்தானே?" அவளுக்கு பதிலாகச் சொல்லாமல் குற்றத்தை ஒப்புக்கொண்டு தண்டனையை குறைக்கும் மனப்பான்மைதான் இருந்தது என்னிடம்.

"சரி என்ன சாப்புட்ற?" பேச்சை மாற்ற விரும்பியிருக்கவேண்டும் அவள், நான் நேராய் விஷயத்திற்குள் குதித்தேன்.

"நாம கல்யாணம் பண்ணிப்போமா?" என்று கேட்டேன்.

அவளிடம் அந்தக் கேள்வி பெரிய ஆச்சர்யம் எதையும் ஏற்படுத்தவில்லை, சொல்லப்போனால் என்னைப் பற்றி நன்றாகத் தெரிந்தவள் என்பதால் அப்படி ஒரு கேள்வியை என்னிடம் இருந்து அவள் எதிர்பார்த்திருக்கத்தான் வேண்டும். அவள் டைவர்ஸ் ஆன விஷயத்தை காரில் சொன்னதில் இருந்து நான் எனக்குள்ளேயே கேள்விகள் கேட்டு பதில்கள் சொல்லிக்கொண்டிருந்தது அவளுக்கு ஒருவாறு ஊகத்தில் தெரிந்திருக்கும். இன்னும் சொல்லப்போனால் அவளுக்கு நான் பெங்களூர் வரப்போவதை சொன்னதில் இருந்தே ஒருவாறு இந்தக் கேள்விக்கான பதிலைப்பற்றி அவள் யோசித்துக் கொண்டிருந்திருக்க வேண்டும்.

அவளை நாங்கள் காதலித்த பொழுதே என் பெற்றோர்களை எதிர்த்து கல்யாணம் செய்துகொண்டிருந்தால் அவள் கஷ்டப்படுவாள் என்றுதான் நான் வருத்தப்பட்டேனே தவிர அவளைக் கல்யாணம் செய்வதைப் பற்றிய வேறு எண்ணங்கள் இல்லை என்று அவளுக்குத் தெரியுமாயிருக்கும்.

சிரித்துக்கொண்டிருந்தவள் நிமிர்ந்து பார்த்தாள்,

"ம்ம்ம் இப்ப தைரியம் வந்திடுச்சு போலிருக்கு! ஆனால் எனக்கு இப்ப கல்யாணங்கிற ஃபார்மேட்டில் விருப்பம் போயிருச்சு, அம்மா அப்பாவுக்காக செஞ்சிக்கிட்ட கல்யாணமும் இப்படி பாதியில் நின்னுட்டதால் அவங்களும் அதுக்கு மேல கம்பள் பண்ணல, கை நிறைய சம்பாதிக்கிறேன், வீடு வாங்கியிருக்கேன், கார் வாங்கியிருக்கேன் வாழ்க்கை அதுபாட்டுக்குப் போய்க்கிட்டிருக்கு. மாசத்துக்கு ஒருவாரம் அம்மா அப்பா ரெண்டுபேரும் இங்க வந்து இருந்துட்டுப் போறாங்க, அம்மாவோட சர்வீஸ் முடிஞ்சதும் இரண்டுபேரும் என்கூடவே வந்து இருந்துடுறேன்னு சொல்லியிருக்காங்க.

அதென்னமோ தனியா கொஞ்சநாள் வாழ்ந்துட்டதால திரும்பவும் இன்னொருத்தங்க கண்ட்ரோலில் இருக்க மனசுக்குப் பிடிக்கலை. உன்கூட இருந்தா நீ என்னை கண்ட்ரோல் பண்ணுவேன்னு சொல்லலை ஆனால் அப்படி நடந்தா சரிவராதுன்னு நினைக்கிறேன், நீ காதலிச்ச கல்யாணம் பண்ணிக்கணும்னு நினைச்ச பொண்ணு கிடையாது நான் இப்ப. உன்னைய நினைச்சாலும் பாவமாத்தான் இருக்குன்னாலும் அதுக்காக கல்யாணம் செய்துக்க மனசு வரலை, வேணும்னா சொல்லு இங்க பெங்களூரில் அழகான நல்ல படிச்ச பொண்ணாப்பார்த்து உனக்கு நானே தேடித்தர்றேன்." சொல்ல நான் மெல்ல எனக்குள்ளேயே நொறுங்கத் தொடங்கியிருந்தேன், ஆனால் எனக்கான தண்டனை அது என்று நினைத்தவனாய்.

"ஏன் நான் மட்டும் கல்யாணம் பண்ணிக்கணும் சொல்லு ஒரு பொண்ணு நீ கல்யாணம் பண்ணிக்காம இருப்பேன்னு சொல்றப்ப ஏன் நான் இருக்கக்கூடாது. என்னை மட்டும் ஏன் கல்யாணம் பண்ணிக்கச்சொல்லி நீ கம்பள் பண்ணுற! நானும் இப்ப இருக்கிற மாதிரியே தனியா இருந்துடலாம்னு நினைக்கிறேன்.

நாம எப்பவும் போல நல்ல நண்பர்களாயிருப்போம் எப்பவாவது உன்மனசு மாறிச்சின்னா நான் உன்னைக் கல்யாணம் பண்ணிக்கத் தயாராயிருப்பேங்கிறத மட்டும் நினைவில் வைச்சிக்கோ..."

நான் அவளைத் திருமணம் செய்யாமல் நிராகரித்ததால் அவள் இப்படிச் செய்யவில்லை என்பது எனக்கு நிச்சயமாகத் தெரியும். வெகுகாலம் அவளுடன் ஒன்றாக இருந்து பழகியவன் என்பதால் என்னால் அவளை நிச்சயமாகப் புரிந்துகொள்ள முடிந்தது. காலம் எல்லாவற்றிற்கும் தீர்வையும் மருந்தையும் கொண்டது எனவே காலத்தின் மீது பாரத்தைப் போட்டுவிட்டு நான் பெங்களூர் வந்த வேலையைச் செய்யப் பயணித்தேன் பாரதியின் இந்தக் கவிதையை மனதில் நினைத்தபடியே,

நெஞ்சுக்கு நீதியும் தோளுக்கு வாளும்
நிறைந்த சுடர்மணிப் பூண்.
பஞ்சுக்கு நேர்பல துன்பங்களாம்
இவள் பார்வைக்கு நேர் பெருந்தீ
வஞ்சனையின்றிப் பகையின்றிச் சூதின்றி
வையக மாந்த ரெல்லாம்
தஞ்சமென் றேயுரைப்ப்பீர் அவள் பேர்
சக்தி ஓம், சக்தி ஓம், சக்தி ஓம்

- இந்தக் கதை அமீரக ஆண்டு விழா மலரில் வெளிவந்தது. நன்றி ஆசிப் மீரான்.

Read More

Share Tweet Pin It +1

6 Comments

In சினிமா

Spider-Man: Homecoming

I lost an electron” “Are you positive? டீஷர்ட்டில் இரண்டு கார்பன் மாலிக்யூல்கள் பேசிக்கொள்வதாக வரும் ஒரு வசனம் சட்டென்று கவனத்தைக் கவர்ந்தது. கிரிஸ்டோபர் நோலனின் பேட்மேன் சீரில்ஸ் ரீபூட் போல் ஸ்பைடர் மேன் (படத்திற்கு) ஒரு புது சட்டை, ஆனால் நன்றாக பொருந்தியிருக்கிறது.



Toby Maguireன் Spider Man சீரிஸ் ரிலீஸ் ஆகும் பொழுது நான் இளைஞன், இன்னும் அந்த சீரிஸ் நன்றாக மனதில் இருக்கிறது. அதைவிட பல மடங்கு நல்ல படம் என்றே நினைக்கிறேன். நல்ல ஒரு ஆரம்பம் கிடைத்திருக்கிறது, அடுத்தப் படம் The Dark Knight அளவிற்கு வரவேண்டும். வரும் என்றே ஊகிக்கிறேன்.

என் மனதின் வயது இன்னும் பதின்மத்தில் இருப்பதாக நினைத்திருப்பதால், இந்தப் படத்தை ரசிக்க முடிந்திருக்கிறது. இளமை வழியும் படத்தில் ஷார்ப் ஹியூமர் நினைத்து நினைத்து இப்பொழுது இதை எழுதிக் கொண்டிருக்கும் நேரத்திலும் புன்னகைக்க முடிகிறது.

பழைய சீரிஸ் போலயில்லாமல் ஸ்பைடர் மேன் தடுமாறுவது, கற்றுக்கொள்வது இதில் நிறைய நேரம் செலவழிவது மிகவும் வேண்டியதாக ஸ்பைடமேன் தன்னை உணர்ந்து கொள்வதாக வரும் காட்சிகள் உணர்ச்சிப் பூர்வமாக இருக்கிறது. படத்தின் அந்த சர்ப்ரைஸ், ஊகிக்க முடிந்தது. கருப்புப் பெண் என்ற பொழுதிலும், ஆனால் ரொம்ப முன்னால் இல்லை, ஹீரோ கார் கதவைத் திறந்து வெளியில் வரும் பொழுது ஊகித்தேன். அதே போல் ஊகிக்க முடிந்தது க்ளைமேக்ஸ், ஐயர்ன் மேன் காட்சி. நகைச்சுவை ஊகிக்காதது. ஐயர்ன் மேன் உடையதும் அன்ட்டி மே உடையதும்.

மை கஸின் வின்னி புகழ், இன்னும் பக்கத்தில் சொல்லணும்னா க்ரேஸி ஸ்டுபிட் லவ் புகழ் மரிஸ்ஸா டொமேய் பற்றிச் சொல்லாட்டா காக்கா கண்ணைக் குத்திடும். ஆன்ட்டி அழகு. ஸ்பைடர் மேனுக்கு ஆன்ட்டி. நம்ம வயசுக்கு ஏத்தப் பொண்ணுதான். நிறைய காட்சிகள்னு கிடையாது ஆனால் க்ளைமேக்ஸ் கரைச்சல். ‘வாட் த...’ முடியும் படம் ஒரு சினிமா geekகளுக்கானது. அதில் நான் ஒருத்தன் என்றே ஊகிக்கிறேன்.


 

Read More

Share Tweet Pin It +1

0 Comments

In தொடர்கதை

உள்ளம் உடைக்கும் காதல் 7

குளித்துவிட்டு வந்து பார்த்தால், அவன் லேப்டாப்பை மடியில் வைத்து என்னமோ பார்த்துக் கொண்டிருந்தாள். அதுவரை சுத்த சைவம் அந்த லாப்டாப். சொல்லப்போனால் அதுவரை அவன் அக்காவைக் கூட தொடவிட்டதில்லை, ஆனால் வாழ்க்கையில் சில விஷயங்களை நாம் நினைப்பதைப் போல் நடப்பதில்லை, இரண்டு மாதங்களுக்கு முன்னர் அவன் இவளைச் சந்தித்த நாளில், சத்தியமாய் நினைக்கவில்லை, ஒரு நாள் இவள் அவன் ரூமில் தனியாக அவன் லாப்டாப்பை மடியில் வைத்து பார்த்துக் கொண்டிப்பாள் என்று.

"என்னங்க இது, ஒரு கேம் கூட இல்லை, வெறும் சாப்டுவேரா இருக்கு" விரக்தியாகக் கேட்டாள்

"நான் விளையாட கம்ப்யூட்டர் வாங்கவில்லைன்னு நினைக்கிறேன், சரி சிலபஸ் இருக்கா. நாம வரிசையா பார்ப்போமா."

சொல்லப்போனால் அடுத்த ஐந்து மணிநேரம் அவளுக்கு சி லேங்குவேஜ் பற்றி அவள் தேர்வுக்கு தேவைப்படும் எல்லாமும் சொல்லிக் கொடுத்திருந்தான், அவளும் சும்மா சொல்லக்கூடாது ரொம்ப ஆர்வமாய் கற்றுக் கொண்டிருந்தாள். பாடங்கள் ஏற்கனவே நடத்தப்பட்டுவிட்டதும் அது மட்டுமல்லாமல் அவளுமாய் படிக்கத் துவங்கியிருந்ததும் அவள் புரிந்து கொண்ட வேகத்திலேயும் கேட்ட கேள்விகளிலும் அது தெரிந்தது. எங்கெல்லாம் உதாரணம் காட்ட முடியுமே அங்கெல்லாம் லேப்டாப்பில் உதாரணங்கள் எழுதிக்காட்டினான். அவனைப் பொறுத்தவரை கணிணி சம்பந்தப்பட்ட எந்தப் படிப்பும் ப்ராக்டிகலாக இருந்தால் தான் சுவைக்கும். கடைசியில் அவள் முகம் சுருங்குவது போல் இருந்தது உடனே,

"என்னா போர் அடிக்குதா?" அவள் ஆர்வம் மங்கி கண்கள் அலைபாய்ந்த பொழுது கேட்டான்.

"போர் எல்லாம் அடிக்கலை, பசிக்குது. நான் காலையில் இருந்து சாப்பிடலை சரி இங்க வந்தா உங்ககூட சாப்பிடலாம்னு பார்த்தா, எனக்கு சாப்பாடு போடாம சி சொல்லித்தந்து கொன்னுறுவீங்க போலிருக்கு, நல்லா சொன்னாரு வள்ளுவர், செவிக்குணவில்லாத பொழுது சிறிது வயிற்றுக்கும் ஈய்யப்படும்னு. உங்கக்கூட வந்தா வயிற்றுக்கு உணவு கிடையாது போலிருக்கு, வெறும் செவிக்கு மட்டும் தானோ?" சிரித்தாள்.

"ஏய் சொல்லலாம்ல, சாரிம்மா! நானும் இன்னும் சாப்பிடலை. பசிக்கவேயில்லை, சரி உட்கார்ந்திரு, ஏதாவது சாப்பிட வாங்கிட்டு வர்றேன்." அவளை அங்கேயே உட்கார வைத்துவிட்டு அருகில் இருந்த கடையொன்றில் சாப்பாடு வாங்கிவந்தான். பொறுமையாக குறைந்த அளவே சாப்பிட்டாள், அவள் சாப்பிடுவதற்கும் அவள் உடல் எடைக்குமான கேள்வி இதனால் இல்லாமல் போனது.

நாங்கள் சாப்பிட்டு முடித்ததும், "சரி நான் வரலையின்னா, எப்ப சாப்பிடுவீங்க?"

"சில சமயம் சாப்பிடவேமாட்டேன், இராத்திரி எல்லாத்தையும் சேர்த்து ஒன்னா சாப்பிடுவேன். சரி படிப்போமா?"

"இல்ல தலைக்கு மேல ஒரே ப்ளென்சரா போய்க்கிட்டிருக்கு, வேற எதாச்சும் பேசுவோமே?"

"எதைப்பத்தி?"

"ஏன் வாழ்க்கையில 'சி'யையும், கம்ப்யூட்டரையும் தவிர வேறு ஒன்றும் இல்லையா?"

"சரி எதைப்பத்தி பேசலாம் நீயே சொல்லு?" சிரித்தபடியே கேட்டான்.

"வாழ்க்கையைப் பத்தி..." தெளிவாகச் சொன்னாள்.

"உனக்கு இன்னும் அந்த அளவுக்கு வயது வரலைன்னு நான் நினைக்கிறேன்." சீண்டினான்.

"இங்கப்பாருங்க, நான் ஒன்னும் சின்னப் பொண்ணு கிடையாது. வயசாகலையே தவிர எனக்கும் சில விஷயங்கள் தெரியும், எங்கம்மா இறந்தப்ப எனக்கு மூணுவயசு, அப்புறம் நானும் அப்பாவும் தான். நான் சமைக்க ஆரம்பிச்சப்ப வயசு எட்டு, அப்பாவை பார்க்க கஷ்டமா இருக்கும், ஆனா அவரு எனக்காகத்தான் வாழ்கிறார். அவருகிட்ட நான் இன்னிக்கு போய் நான் இப்பிடி மோகன்னு ஒரு பையனை காதலிக்கிறேன்னு சொன்னால். சத்தம் போடமாட்டார், உட்கார்ந்து யோசிப்பார். நான் செலக்ட் பண்ணியிருக்கேன்னா தப்பாயிருக்காதுன்னு நினைப்பார். உங்களைப் பத்தி விசாரிப்பார். பிடிச்சிருந்தா நிச்சயம் கல்யாணம் பண்ணிவைப்பார். எனக்கும் எங்கப்பாவுக்கும் ஈகோ பிராப்பளம் கிடையாது; நான் நல்ல பையனையே பார்த்திருந்தாலும், அவருக்கு தெரியாம பண்ணிட்டேன்னு எகிறி குதிக்க. உங்களமாதிரியே அவரும் ஒரு நல்ல மனிதர்."

"சரி உங்கப்பா நல்ல மனிதராகவே இருக்கட்டும், நான் நல்ல பையன்னு நீ எப்படி கணக்கு போடலாம். நான் பெண்ணுங்க கூட பேசறதில்லை என்பதால் நல்ல பையனாதான் இருப்பேன்னு நினைக்கிறியா?" அவன் கண்களில் விளையாட்டுத்தனம் அவளுக்கும் தெரிந்திருக்கும்.

கேட்டதும் சிரித்தாள் பிறகு,

"தனியா ஒரு ரூம், தன்னைக் காதலிக்கும் பதினெட்டு வயது, சுமாரான அழகுள்ள ஒரு பொண்ணு, ஆனா உங்களால ஐந்து மணிநேரம் வேறு எதையும் பத்தி யோசிக்காம, உங்க பார்வை கூட மாறாம, சி சொல்லித்தர முடியும்னா நீங்க நல்ல பையன்தான். அது மட்டுமில்லாம நீங்க சிகரெட் குடிக்க மாட்டீங்க, தண்ணியடிக்க மாட்டீங்க, இதுவே போதும். நான் இரண்டு வருஷம் பொறுத்துக்கூட என் காதலைச் சொல்லியிருப்பேன். ஆனா ஒன்னுமே தெரியாத இந்தப் புள்ளையை வேறு யாராவது, எதையாவது காட்டி மயக்கிட்டா, அதனாலத்தான் நான் அவ்வளவு சீக்கிரம் சொன்னது. நீங்கத்தான் இப்படி, உங்கக்கா எமகாதகி, நான் நினைச்சதை எவ்வளவு அழகா சொன்னாங்க தெரியுமா, 'இங்கப்பாரு அவன் உன்னை குழந்தைம்பான்; ஆனா அவன்தான் குழந்தை, கம்ப்யூட்டரையும், பேச்சுப்போட்டியையும் தவிர வேறு ஒன்னும் தெரியாது. உன்னைப் பார்த்தால் அவனுக்கு ஏத்த பெண்ணா இருக்கு, நான் அம்மாகிட்ட பேசுறேன். ஆண்டவன் தான் எங்க அப்பாகிட்ட பேசணும். அவனை பத்திரமா பார்த்துக்கோ' னு சொன்னாங்க அன்னிக்கே. நான் வேறு எதாவது சொல்லணுமா இதைப்பத்தி."

அவள் சொன்னதைப் பற்றி சிறிது நேரம் யோசித்திருப்பான், அவன் அக்கா அப்படிச் சொல்லியிருக்கக் கூடியவள் தான். அகிலாவை அவளுக்குப் பிடிக்கும் என்று அவனுக்குத் தெரிந்துதானிருந்தது ஆனால் இத்தனை தூரம் பிடித்திருக்கும் என்று நினைத்திருக்கவில்லை. அகிலாவைப் பற்றி அத்தனை தூரம் அவனுக்குத் தனிப்பட்ட முறையில் தெரியாததால் அவளுடைய முதிர்ச்சி தெரியாதது, அவனை அவ்வளவு சீக்கிரம் காதலிக்கத் தொடங்கியதால் அவன் அவளை வெறும் விடலையாகவே பார்த்தேன். ஆனால் அவள் அதற்குப் பின்னால் இருந்த காரணங்களை அடுக்கிய பொழுது அகிலா அப்படிச் செய்தது நியாயமாகவே பட்டதவனுக்கு. அவளைப் பற்றி இன்னமும் நிறைய தெரிந்து கொள்ள ஆசைப்பட்டான்.

"சரி முதல் நாள் நான் உன்னை அடிச்சப்ப நீ என்ன நினைச்ச?"

"உங்களுக்கு ஒன்னு தெரியுமா, பேச்சுப்போட்டியில் நீங்க ஆரம்பிச்ச தமிழ் வாழ்த்துப் பாட்டு, முடிச்சப்ப சொன்ன சிலவரிகள்னு எல்லாமே நான் வழக்கமா சொல்றது. எனக்கு ஆச்சர்யமாயிருந்தது, இதுல கூட ஒருத்தரோட ஒற்றுமையிருக்குமான்னு, ஆனா உங்களைப்பத்தி அன்னிக்கு சொன்னதுல கோபமாவீங்கன்னு நினைக்கலை. பேச்சுப்போட்டியில பேசுறவங்க பெரும்பாலும் இந்த மாதிரி எதிர்ப்புக்களைச் சந்திச்சிருப்பாங்க. ஒரு வேளை நான் - ஒரு பெண்ணு - உங்களை இப்படி சொன்னது தான் பிரச்சனைன்னு நினைச்சேன் அவ்வளவுதான்."

அவன் பேச்சை மாற்ற விரும்பினான், "சரி கனிமொழி இங்க வரவேண்டியது தானே, வேறு எதும் பிரச்சனையா?"

"அதெல்லாம் ஒன்னுமில்லை, நான்தான் வரவேண்டாம்னு சொன்னேன். அக்காவுக்கு கோபம், உங்ககிட்ட தனியா பேசணும்னு தான் முக்கியமா வந்தேன் பேசிட்டேன். உங்களுக்கு ஒன்னும் கோபம் இல்லையே?"

"கோபமெல்லாம் ஒன்னுமில்லை, வந்தவுடனேயே இதை நீ சொல்லியிருக்கலாம், அவளுக்கும் சேர்த்து சி சொல்லித் தந்திருப்பேன். அவளுக்குச் சொந்தமா இல்லைன்னா நீ என்னை நெருங்கியிருக்கவே முடியாது. அதுதான் உண்மை." அவன் நேர்மையாகச் சொன்னான்.

"நல்லாவே தெரியும். இதுதான் ஃபர்ஸ்ட் அண்டு லாஸ்ட், எனக்கு அக்கா முன்னாடி உங்ககிட்ட இப்பிடிப் பர்ஸனலாய்ப் பேசமுடியாது அதான். மத்தபடி அவங்களை தவிர்க்கணும்னுங்கிறது என்னோட எண்ணம் கிடையாது." அவள் கண்களில் உண்மை இருந்தது.

சிறிது நேரம் இருவரும் ஒன்றையும் பேசாமல் வெறுமனே பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவளுடைய தெளிவும் முதிர்ச்சியும் இயல்பான அழகும் அவளை நோக்கி அவனை இழுக்கவே செய்தன. அத்தனை தைரியமாய் அவளால் அவன் முன்னால் தனியாக இருக்க முடிந்தது ஆச்சர்யத்தைக் கிளப்பியது அவளை வம்பிழுக்க நினைத்தவனாய்.

"அது இருக்கட்டும், நான் படிச்ச காதல் கதைகளில் எல்லாம் முத்தம் இல்லாத கதையே கிடையாது. நீயோ காதல்ங்கற, காதலிங்கிற, ஆனா அந்த விஷயத்தை பத்தி சத்தமே இல்லை?"

"சரி ரூட் மாறுது, நானே நல்ல புள்ளையை கிளப்பி விட்டுட்டேன் போலிருக்கு, நான் கிளம்புறேன்." அவள் அழகாய்ச் சிரித்தாள்.

"இங்கப்பாருங்க இங்கே கிளம்பி வரும் பொழுது நான் இன்றைக்குப் பொழுது இப்படித்தான் போகும் என்று கற்பனை செய்திருக்கவில்லை என்னதான் நல்லவராயிருந்தாலும் 18 வயதுப் பெண்ணொருத்தி பக்கத்தில் இருந்தால் சபலம் கிளம்பும் என்று நினைத்தேன். நானே கூட உங்களிடம் 'நீங்க என்னை எதுவும் செய்யலை' என்று சொல்லாமல் இருந்திருந்தால் இந்த முத்தம் பற்றிய பேச்சைக் கூட நீங்க கிளப்பியிருக்க மாட்டீங்கன்னு எனக்குத் தெரியும். நானாய்க் காதலித்து நானாய்ச் சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொண்டு தனியாய் வந்து உங்களைச் சீண்டினேன். சொல்லப்போனால் முத்தமென்ன நீங்க கேட்டால் கொடுக்காமல் மறைத்து எடுத்துச் செல்ல என்னிடம் எதுவுமே இல்லை. புரிஞ்சிக்கோங்க, ஆனால் வேண்டாம் ப்ளீஸ் இன்றைக்கு ஒரு அற்புதமான நாள் என்னைப் பொறுத்தவரை அப்படியே இருந்துட்டுப் போகட்டும் தப்பா நினைக்காதீங்க. முத்தம் அதை மாத்திடும்னு நினைக்கலை ஆனால் வேண்டாமே." கெஞ்சினாள்.

அவன் பதில் எதுவும் சொல்லலை.

"நான் கிளம்புறேன்னு சொன்னேன், நீங்க பதில் சொல்லலைன்னா எனக்கு இதுதான் மனசிலே ஓடும். அதுனால ஏதாவது பேசுங்க."

விளையாட்டாய்த் தான் அவளிடம் முத்தம் கேட்டேன் அவளிடம் நான் மனமொன்றத் தொடங்கி நாட்களாகியிருக்காது. அவள் தருவாளா மாட்டாளா என்று நினைத்துக் கூட அப்படிக் கேட்கவில்லை. ஆனால் அவள் என்னை உயர்த்தி வைத்திருந்த இடம் கொஞ்சம் அதிகம் என்று மனதிற்குப்பட்டது.

சிரித்தபடியே, "சரி ஒழிஞ்சிப் போ. முத்தம் தான் கொடுக்கலை. ஒரு கேள்விக்குப் பதில் சொல்லிட்டுப்போ."

"தன்யனானேன் பிரபு, கேளுங்க." என்றாள் மகிழ்ச்சியுடன்.

"ஆமாம் உன் சைஸுக்கு எல்லாம் பிரா தயாரிக்கிறாங்களா. என்ன ஸைஸ் உனக்கு" என்றான், கண்களை அவர் மார் மீது ஓட்டியபடி.

அவள் முகம் சிவந்தது அப்படியொரு கேள்வியை அவள் எதிர்பார்த்திருக்கவில்லை என்று தெரிந்தது. பின்னர் நான் கேட்ட கேள்வியை உணர்ந்ததும் கொஞ்சம் முறுவளித்தாள்.

"ரொம்ப கஷ்டப்பட்டு உங்களை கெட்டவனாக்கிக்காதீங்க..." என்று சொல்லிச் சிரித்தவள் "கேட்டுட்டீங்க சொல்றேன். வயசுக்கு வந்ததில் இருந்து அம்மா இல்லாததால் பக்கத்து வீட்டு மாமியைக் கூட்டிக்கொண்டு போய் நானா தான் வாங்கியிருக்கேன். என் ஸைஸுக்கும் பிரா கிடைக்கும். ஸைஸெல்லாம் சொல்லி பிரா வாங்கிறதில்ல நான், போனால் அவங்களே உடம்ப பார்த்து எடுத்து கொடுத்துடுவாங்க. இல்லை அன்டர் பஸ்ட் சைஸ், ஓவர் பஸ்ட் சைஸ் எல்லாம் தெரியணும்னா சொல்லுங்க அளந்து பார்த்துச் சொல்றேன்." சொல்லிவிட்டு கண்களைச் சிமிட்டிக் காட்டினாள்.

"ஏய் சும்மாத்தான் கேட்டேன், போய்ட்டு வா தாயே." என்றான் இரண்டு கைகளையும் கூப்பியபடி.

"கோபமில்லையே?"

"நிச்சயமாய் இல்லை." அவளை பக்கத்திலிருந்த ஆட்டோஸ்டாண்ட் வரை சென்று வழியனுப்பி வைத்துவிட்டு வந்தான்.

அடுத்த நாள் கல்லுரிக்கு போனதும் HOD வந்து,

"மோகன் நேத்திக்கு லெக்சரர் வராததால லேப் அட்டெண்டர, பர்ஸ்ட் இயர் கிளாசுக்கு அனுப்பினேன். அங்க ஒருத்தன் ரொம்ப பருப்புமாதிரி அவங்ககிட்ட பண்ணியிருக்கான். புதுபையன் கொஞ்சம் படிச்சவன் போலிருக்கு. நான் நேரடியா தலையிட விரும்பலை. நீ கொஞ்சம் இன்னிக்கு கிளாசுக்குப் போய் அவனை தட்டிவையேன்."

அவரே சொன்னதுக்கு பிறகு போகலைன்னா எப்பிடி?

"பசங்களா, இன்னிக்கு லெக்சரர் வரலை. அதான் நான் வந்திருக்கேன். ஒரு மணிநேரம் ஜாலியா ஏதாவது பேசலாம். என்ன பேசலாம், ஏதாவது விளையாடலாம்னாலும் விளையாடலாம்."

சொல்லிமுடிந்ததும் அந்தப் பையன் தான் எழுந்தான்.

"எக்ஸ்கயூஸ் மீ, நாங்க இங்க படிக்க வந்திருக்கோம். விளையாட இல்லை, நாலு நாளா லெக்சரர் வரலை. எங்க படிப்புத்தான் வீணாகுது. நேத்திக்கு லேப் அட்டண்டர் வந்தாங்க, அதுகூட பரவாயில்லை, இன்னிக்கு ஒரு ஸீனியர் ஸ்டுடண்ட் வந்திருக்கீங்க. என்ன நடக்குதேன்னே புரியலை. நான் உங்களைத் தப்பா நினைக்கலை, இந்த ஒரு மணிநேரமும் வேஸ்ட்" சொல்லிவிட்டு அவன் உட்கார்ந்ததும். சரியா மாட்டிக்கிட்ட மகனேன்னு நினைத்துக்கொண்டவனாய், "ஐயோ, சூப்பர் தம்பி உங்க பேரு என்ன சொல்லமுடியுமா?" கேட்டான்.

"விஸ்வநாதன்..."

"விசு, எனக்கும் இதுதான் பிராப்ளம். எனக்கு விளையாடவோ, சும்மா ஜாலியா இருக்கவே பிடிக்கவே பிடிக்காது. ஃபர்ஸ்ட் இயர் பையன்கள் சீரியஸா இருக்கமாட்டாங்கன்னு தப்பா கணக்குப் போட்டுட்டேன். சொல்லுங்க இந்த ஒரு மணிநேரம் உபயோகமா போகணும்னா என்ன பண்ணலாம்."

"எது வேண்டுமானாலும் ஆனால் உபயோகமாய்!"

"சரி புரோஜக்ட் பத்தி பேசலாம், நாம படிக்கிறதே அதுக்குத்தானே," சொல்லிவிட்டு புரோஜக்ட் பத்தி எல்லாவற்றையும் சொன்னான். அப்பப்ப அவனையும் எழுப்பி ஒரு கருத்தைக் கேட்டு அவன் சரியான கருத்தே சொல்லியிருந்தாலும் இல்லையென்றும் அவனை மட்டம் தட்டியும் பேசினான். சிலசமயம் அவன் சொன்ன கருத்து எல்லோருக்குமே முரணாக இருந்ததால் மற்ற மாணவர்களிடமும் கேட்டு அவனை முட்டாளாக்கினான். முடிவில் அவன் அப்பொழுது செய்துகொண்டிருக்கும் புரோஜக்ட் பத்தி சொல்லி கையில் வைத்திருந்த லாப்டாப்பில் இருந்து எடுத்துக்காட்டுகளைக் காட்டினான்.

ஒரு மணிநேரம் முடிந்திருக்கும் அவனை எழுப்பி, "உபயோகமாக இருந்ததா?"

"ம்ம்ம், மிகவும் உபயோகமாக இருந்தது!"

"தெரியுமா, நான் இந்த ஒரு மணிநேரத்தை வேஸ்ட் பண்ணிட்டேன். இந்த நேரத்தில் புரோஜக்ட் பண்ணியிருந்தால் சம்பாதித்து இருப்பேன். பரவாயில்லை இந்தப் பையனுக்காக இல்லை. மற்ற மாணவர்களுக்காவும்தான் நான் சொன்னது. அதானால் சந்தோஷம்." சொல்லிவிட்டு வகுப்பறைக்கு வந்துவிட்டான்.

மதியம் கேன்டீனில் அவன் உட்கார்ந்திருக்கும் பொழுது அங்கு வந்தனர் அகிலாவும் கனிமொழியும்.

"அண்ணே, இன்னிக்கு ஜூனியர் ஒருத்தனை போட்டு வாங்கிட்டீங்களாமே?"

"ஆமாங்கா அவன் அழாத குறைதான். எனக்கு ஆச்சர்யம் நம்மாளுக்கு இவ்வளவு தெரியுமான்னு, சும்மா பிசிறு கிளப்பிட்டார். நேத்திக்கு அவர் கேட்டதுக்கும் அதுக்கும், இவர் பேசி முடித்ததும் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்துடலாம்னு பார்த்தேன். ஆனா உண்மையிலே நானே பயந்திட்டேன்."

"இல்லை கனி, லேப் அட்டண்டரை தப்பா பேசியிருக்கான். HOD புலம்புறார். அதான் என்னை விட்டு அடக்கச் சொன்னார்."

"அப்பிடியா, வேணும்னே பழிவாங்குனதா இது. நான் அப்பவே நினைச்சேன். என்னடா இது இப்படி நடந்துக்கிற ஆளில்லையேன்னு. இதுக்கு பின்னாடி இவ்வளவு கதையிருக்கா?" - அகிலா.

"சரி அது போகட்டும் என்னவோ குடுக்கிறேன்னு சொன்னியே, பரவாயில்லை இப்ப கொடு."

"அண்ணே என்ன இது, நான் இங்க இருக்கேன் மறந்திட்டு இரண்டு பேரும் பேசிக்கிட்டிருக்கீங்க." கனிமொழி வேண்டுமென்றே முகத்தை தூக்கிவைத்துக் கொண்டாள்.

(தொடரும்...)

Read More

Share Tweet Pin It +1

2 Comments

In சினிமா நாட்குறிப்பு

தொடர்ச்சியற்ற எண்ணங்கள்

கம்மாட்டிப்பாடம் பார்த்தேன்.

துல்க்கர் சுல்மான் தவிர்த்து படம் நன்றாகயிருந்தது. ரஞ்சித் படம் போல் இருந்தது. இன்னும் கிரிப்பாக மாற்றியிருக்கலாம். ஆனால் மசாலா கூடிவிடுமாயிருக்கும்.

மஹேஷின்ட பிரதிகாரம் படம் பஹத்திற்காகப் பார்த்தேன். மனுஷன் என்னமா நடிக்கிறான். சின்னக் கதையை மலையாளத்தானுங்க எப்படி நல்ல படமா எடுக்குறாங்கன்னு ஆச்சர்யமா இருக்கு.



---------------------------------------------

அசாதாரணமான நேரமொன்றில் நண்பனொருவன் தண்ணியடிக்கலாம் வாயேன் என்று கூப்பிட்டான். அவன் தண்ணியடிப்பதே குறைவு இதில் நான் வேற. என்ன விஷயம் என்றே புரியவில்லை. சரியென்று போயிருந்தேன்.

இரண்டு மூன்று பெக் மன்ஹாட்டன் உள்சென்ற பின் ஆரம்பித்தான். அவன் காசு கொடுத்துச் சென்ற ஒரு பெண்ணைப் போன்ற தோற்றமுள்ள ஒருத்தி அவன் கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்திருக்கிறாளாம். அவளைப் பார்க்கும் பொழுதெல்லாம் மற்ற பெண் ஞாபகம் வந்து வேலை செய்ய முடியாமல் ஆகிறதாம்.

பஃபல்லா விங்க்ஸ் சாப்பிட்டுக் கொண்டிருந்த நான் அடைந்த கடுப்பைச் சொல்லி மாளாது. அவனுடைய ஷூவுக்குள் கால் நுழைத்துப் பார்த்தேன். கொஞ்சம் சங்கடமாகத்தான் இருந்தது.

நான் சொன்னேன், உனக்குன்னு வருது பார் பிரச்சனைகள் சொல்லிவிட்டு அந்தப் புதிதாய்ச் சேர்ந்த பெண்ணிடம் வழக்கத்தை விடவும் இயல்பாய் பழகு என்று. அதுமட்டும் தான் ஒரே வழி, அவளை தவிர்க்க நினைத்தால் இப்படித்தான் லோல்படவேண்டியிருக்கும் என்றேன்.

பேசிப்பார்க்கணும் இப்ப எப்படியிருக்கான்னு.

-----------------------------------

இந்த முறை இந்தியா சென்று வந்ததில் இருந்து மகனிடம் எப்பொழுதும் ஓடிக்கொண்டிருக்கும் ஒரு உரையாடல் மரணம் பற்றியது. மனைவியின் தாத்தா உடல் நலக்குறைவினால் இறந்து போனார், அவருக்கு வயது 92 இருக்கும். உடல்நலமில்லாமல் இருந்து இறந்ததைப் பார்த்த என் மகனுக்கு அதன் காரணம் சொல்லப்பட வேண்டி வந்திருக்கிறது. வயதானால் மனிதர்கள் இறப்பார்கள் என்று எவ்வளவு முடியுமோ அவ்வளவு ரேஷனலாக அவனுக்கு விளக்கியுள்ளனர். மகனுக்கு வயது ஐந்து.

பின்னர் அமெரிக்கா வந்ததில் இருந்து எப்பொழுதெல்லாம் மரணம் பற்றிய காட்சி சினிமாவில் வருகிறதோ அப்பொழுதெல்லாம் இறந்தவருக்கு வயது என்ன என்று கேட்கத் தொடங்கி பின்னால் பின்னலான கேள்விகள். தொடர்ச்சியாக சாவைப் பற்றி மாதம் முழுவதும் பேசிக்கொண்டேயிருந்தோம், அதற்கேற்றார் போல் நாங்கள் பார்த்த படங்களிலும் ஏதோ ஒரு காட்சியில் மரணம் நிகழ்ந்து கொண்டேயிருந்தது.

மக்க கலங்குதப்பா பாடலை ஒருநாள் மகனுக்கு அறிமுகப்படுத்த அவனுடைய ஃபேவரை பாடலானது, பாட்டைப் போட்டுவிட்டு மகனும் மகளும் ஆடுவதை பார்த்துக் கொண்டியேயிருக்கலாம். ஆனால் பிரச்சனை அதுவல்ல. மகனுக்கு அது இறப்பிற்காக பாடுகிறார்கள் என்கிற உண்மை தெரியும். நேற்று ஆப்பிள் பிடுங்கப் போகிறேன் பேர்வழி என்று கிளம்பிய நாங்கள் திரும்பி வரும் வழியில், எங்கிருந்து யோசனை வந்தததோ. அம்மா நீ 92 வயதில் சாகும் பொழுது நான் மக்க கலங்குதப்பா பாட்டைப் போட்டு செலிபிரேட் செய்யறேன்னு என்று ஆரம்பித்தான்.

சாவைப் பற்றிப் பேசுவது என் குடும்பத்தில் பெரிய விஷயம் இல்லை என்பதால் என் மனைவி, நன்னு அது யுவன் அங்கிள் மியூசிக் பண்ணின பாட்டு நீயே மியூஸிக் டைரக்டர் ஆகி ஒரு பாட்டுப் போடணும் என்றதும் என்ன புரிந்ததோ அப்படியே ஆகட்டும் என்று பதில் வேறு. 92 வயதில் என்றால் நானும் மக்க கலங்குதப்பா பாடலைப் போட்டு செலிபிரேட் செய்ய வேண்டியது தான். 

------------------------------------

கமல்ங்கிற ஆள் எவ்வளவு பெரிய நடிகர்ங்கிறதுக்கு ஒரு சின்ன துளி. கிரேசி மோகனுடன் அவர் செய்திருந்த கமல் ஹாஸ்யம் வீடியோவில் இருந்தது.

அவருடைய ஆர் சி சக்தி நடிப்புத்துணுக்கு ஒன்று போதும், அதை உணர. ஒரு செகண்ட்ல எமோட் பண்ண முடிகிறது கமலால்.

கிரேசி மோகனின் உதவாத சில காமடியைப் பொறுத்துக் கொண்டால் ஒரு நல்ல வீடியோ. 



------------------------------------

சில பாடல்கள்

வெளியில் மழை பெய்து கொண்டிருந்தது, நான் பதினொன்று அல்லது பன்னிரெண்டு படித்துக் கொண்டு இருந்திருப்பேன். பேச்சுப் போட்டிக்காக சென்ற இடம். BHEL முத்தமிழ்மன்றம். "காற்றில் எந்தன் கீதம்” பாடலை ஒரு பெண் பாடினாள். மழையா குரலை அவளா நினைவில்லை அவளை பிடித்திருந்தது. அதற்குப் பின் அவளைப் பார்த்ததில்லை.

கல்லூரியில் படிக்கும் பொழுது முபாரக் என்றொரு சீனியர். ராகிங் விஷயத்தில் சண்டை வந்து பின்னர் கிரிக்கெட் விளையாடி ஒன்றாகி பின்னர் வேறொரு பிரச்சனையில் - அவர் ஜூனியர் பெண்ணொன்றை லவ் செய்தார், அதே பெண்ணை சைட் அடித்த சக மாணவன் ஒரு வனால் - சண்டை போட்டு என்று லவ்-ஹேட் ரிலேஷன்ஷிப். ”வெள்ளைப் புறா ஒன்று” பாடலை அவர் கல்லூரிக்காகவும் என்எஸ்எஸ்ற்காகவும் அவர் பாடக் கேட்டிருக்கிறேன். பிரமாதம். இப்பொழுது என்ன செய்கிறார் என்று தெரியாது.

கிராமம் ஒன்றிற்கு வருமாறு நண்பன் அழைத்தான், அவனது சொந்த ஊர் அது, துறையூர் பக்கம் சின்ன கிராமம். நான் எந்தக் கிராமத்திலும் அதற்கு முன் மொத்தமாய் நான்கு நாட்களுக்கு மேல் இருந்ததில்லை. அரிசி மரத்தில் காய்க்கும் வகையறா நான். சத்திரத்தில் இருந்து துறையூருக்கும் துறையூரில் இருந்து கிராமத்துக்கும் என்று இரண்டு பேருந்து. முதலாவது பற்றி ஞாபகம் இல்லை. இரண்டாவதில் நண்பன் அந்தப் பேருந்து ஓட்டுநரின் நண்பன் என்பதால் ஓட்டுநருக்கு அருகில் உட்கார்ந்திருந்தோம். அழகி வந்தது எந்த வருடம்னு தெரியாது. ஆனால் “ஒளியிலே தெரிவது தேவதையா” பாட்டு, பஸ்ஸின் வெளிச்சம் மட்டும் நாலு புறத்திலும். அம்மாவாசை என்று நினைக்கிறேன். படம் வந்து சிலகாலம் ஆகியிருக்கலாம். நான் அப்பொழுது தான் முதன் முதலில் அந்தப் பாட்டைக் கேட்டேன்.

நான் என் வாழ்நாளின் முதல் வேலையை டெல்லியில் பார்த்துவந்தேன். ஆங்கிலமும் வராது இந்தியும் வராது ஆனால் தனியாளாய் டெல்லியில் சமாளித்து வந்தேன். நான் பஸ்ஸில் வேலைக்குச் சென்றுவந்த ஒரு இடம் டெல்லி தான். காலை முனிர்காவிலிருந்து கனாட் ப்ளேஸ் இரவு வாபஸ். அப்படிப்பட்ட ஒரு இரவில் தான் “அல்லா கி பந்தே” பாடலை முதன் முதலில் கேட்டேன். இன்றும் அந்தப் பாடலைக் கேட்டால் ரெட் லைன் பஸ்ஸில் இரவுப் பொழுதொன்றில் கனாட் ப்ளேஸில் இருந்து முனிர்கா திரும்பி வரும் ஞாபகம் பளீரென்று வருகிறது.

புனே ஒரு அழகான நகரம், நான் தாளேவாடாவில் தங்கியிருந்தேன். MIDCயில் வேலை நான் புனே சிட்டிக்கே ஒன்றரை வருடத்தில் மூன்று நான்கு முறைக்கு மேல் சென்றதில்லை. முதல் முறை சொந்தமாக நானே வீடெடுத்துத் தங்கியிருந்தேன். அங்கே ஹோட்டல்களில்(ரெஸ்டாரன்டுகளில்) எப்பொழுது ஓடும் பாடல் "ஆஷிக் பனாயா ஆப்னே” ஹிமேஷ் ராஷ்மியாவின் பாடல். புனே சென்றிருக்காவிட்டால் எனக்கு ஹிமேஷை பிடிக்காமல் இருந்திருந்திருக்கும். புனேவாசிகளுக்கோ நார்த் இன்டியன்களுக்கு இதனால் ஹிமேஷைப் பிடிக்கும் என்று சொல்லவில்லை, ஆனால் என் வரையில் ஹிமேஷின் மேல் புனா பூச்சொன்று உண்டு எப்பொழுதும். நிமிடத்தில் புனே செல்ல நான் பயணிக்கும் ஊர்தியின் பெயர் ஹிமேஷ் ராஷ்மியா.

ராப் பாடலொன்றை முதன் முதலில் என் நண்பர் எனக்குப் போட்டுக் காட்டிய பொழுதும் நான் புனேவில் தான் இருந்தேன். 50 சென்ட் பாடலென்று நினைவு. கடித்துத் துப்புவதைப் போலிருந்த ஒன்றை என்னால் ரசிக்க என கேட்கக் கூட முடியவில்லை ஆனால் நண்பர் கேரளாக்காரர் நடுத்தர உயரம் கண்ணாடி அணிந்து நீங்கள் சினிமாவில் பார்க்கும் ஏமாளி அத்திம்பேர் மாதிரியிருப்பார். ரேப் சைகைகளுடன் அவர் பாடிய பொழுது விசித்திரமாகயிருந்தது. நிச்சயமாக அவர் தான் எனக்கு எமினெம் பாடல்களை .எம்பி3யாகக் கொடுத்தவர். நான் ‘mocking bird' பாடலை அங்கு தான் முதன் முதலில் கேட்டேன். இன்று எனக்கு மகள் உண்டு. 'Now I'm sittin' in this empty house, Just reminiscing, looking at your baby pictures, It just trips me out" வரிகள் என் மகளுக்காக என்றில்லை மகனுக்கும் கூடத்தான். 

Read More

Share Tweet Pin It +1

0 Comments

Popular Posts