"கருவினிலே என்னை உருவாக்கினாயே தாயே, ஆயிரம் பேர் அமர்ந்திருக்கும் சபை நடுவே நின்று பேசும் அளவிற்கு என்னை ஆளாக்கினாயே உன்னை வணங்கி என் உரையைத் தொடங்குகின்றேன்.
நினைத்த நிமிடத்திலே ஆயிரம் ஆயிரம் கவிதைகளை அள்ளித்தருவாயே தாயே, தமிழே உன்னை வணங்காமல் இருப்பேனா? உன்னைப்பாடாமல் இருப்பேனா?
காதொளிரும் குண்டலமும் கைக்கு வளையாபதியும்
மீதொளிரும் சிந்தாமணியும் மெல்லிடையில் மேகலையும் - சிலம்பாரின்பப்
போதலிர்ப்பூந்தாழினையும் பொன்முடி சூளாமணியும் - பொலியச்சூடி
நீதியொளிரும் செங்கோலாய்த் திருக்குறளைத்தாங்கும் தமிழ் நீடுவாழ்க.
தமிழுக்கு என் வணக்கம்
நெற்றிக்கண்ணை திறப்பினும் குற்றம் குற்றமே என்று நீதி வழங்க வந்துள்ள நீதிபதி அவர்களுக்கும் என் வணக்கங்களைக்கூறி என் உரையைத்தொடங்குகின்றேன்."
என்னுடைய பேச்சுப்போட்டிகளை இப்படித்தான் தொடங்குவது வழக்கம். அம்மாவும் அப்பாவும் ஆசிரியர்களாக இருந்ததில் கிடைத்த பல நல்லவிஷயங்களில் இந்த திறமையும் ஒன்று. ஒரு வாரம் தொடர்ச்சியாய் எழுதும் பொறுப்பை நட்சத்திரமாக தமிழ்மணம் என்னை தேர்ந்தெடுத்ததில் ஏற்றிருக்கிறேன். அந்த ஆயிரம் பேர்களும் நீதிபதிகளும் நீங்கள் தான், இது போட்டியில்லை என்றாலும் தவறிருந்தால் சுட்டிக்காட்ட வேண்டியவர்கள் என்பதை சொல்லவந்தேன்.
இந்த பதிவில் இரண்டு விஷயங்களை சொல்ல நினைத்திருக்கிறேன். முதலாவது என்னைப்பற்றிய சுயவிளம்பரம். இரண்டாவது என் வாழ்க்கையில் நடந்த, நான் மறக்க நினைக்கும், ஆனால் மறக்க முடியாத ஒரு நாளைப்பற்றியது. இந்த இரண்டு விஷயங்களுக்கும் ஒரு தொடர்பு இருக்கிறது அது தொடர்ந்து படித்தால் புரியும்.
இனி முதலாவது, நான் முதன் முதலில் திருவிளையாடல் தருமி வசனத்தை தனிநபர் நாடகமாக அரங்கேற்ற மேடையேறிய பொழுது நான் இரண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். இதில் ஆச்சர்யப்படுவதற்கு ஒன்றுமில்லை அம்மாவும் அப்பாவும் ஆசிரியர்களாக இருந்தால் இது சர்வ சாதாரணம். அதேபோல் அந்த நிகழ்ச்சி சுவாரஸ்யமானது கிடையாது. தினமும் காலையிலிருந்தே மனப்பாடம் செய்து வந்த வசனங்கள் ஆதலால் பிரச்சனையெதுவும் நிகழ்ந்துவிடவில்லை. நல்லபடியாக பேசி பரிசு வாங்கியிருந்தேன். ஆனால் அதே வயதில் நடந்த இன்னொரு சுவையான சம்பவம் உண்டு அது, திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியின் பொழுது நடந்தது.
இரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு முதல் இரண்டு அதிகாரம் மனப்பாடம் செய்து, அதிலிருந்து கேட்கப்படும் ஒரு முழு அதிகாரத்தைச் சொல்லவேண்டும். இதுதான் போட்டி. எனக்கு கடவுள்வாழ்த்து சொல்லவேண்டி வந்திருந்தது. முதல் ஆறு குரள்களைச் சரியாகச் சொன்ன நான் ஏழாவது தெரியாமல் சிறிது திகைத்து பின்னர் சிறிதும் கவலைப்படாமல் நடுவரிடமே ஏழாவது குரளின் ஆரம்பத்தைக்கேட்டு பின்னர் அதன் தொடர்ச்சியாக பத்தையும் முடித்தேன்.
அந்த காலத்தில் இரண்டாம் வகுப்பு படிக்கும் பொழுதே சிறிதும் மேடைப் பயமில்லாமல் நான் நடந்து கொண்டது நல்ல பெயரை சம்பாதித்து கொடுத்திருந்தது. எப்படியென்றால் அப்பொழுதிருந்த அதே நடுவர் பின்னர் நான் பத்தாவது படிக்கும் பொழுது நடந்த பேச்சுப்போட்டியில் முதல் பரிசுபெற்ற என் பெயரை அறிவித்து விட்டு இந்த நிகழ்ச்சியை மேடையில் சொல்லிப்பாராட்டினார் இப்படி.
என்னிடம் ஆசிரியர் வீட்டுப்பிள்ளைகளுக்கே உரிய சில விஷயங்கள் கொஞ்சம் அதிகமாக இருந்தது. அது நான் பிடித்த முயலுக்கு மூன்றே கால்கள் என்று வாதாடும் குணம். பாலகுமாரன் ஒரு முறை சொல்லியிருந்ததாக ஞாபகம், டீச்சருங்களுக்கு எந்த பிரச்சனையையும் தங்களால் தீர்த்துவிடமுடியுமென்ற நம்பிக்கையிருக்கும் என்றும் அது தான் ஆசிரியர்களின் பெரிய பிரச்சனையென்றும். வீட்டில் இருவருமே ஆசிரியர்களாகயிருந்ததால் அந்த பிரச்சனை எனக்கும் இருந்தது.
எந்த விஷயமாயிருந்தாலும் மூக்கை நுழைக்கிறதும் அந்த பிரச்சனைக்கு தீர்வு சொல்றேன் பேர்வழின்னு பேசுறதும். இதெல்லாம் ஆரம்பக்காலத்தில் அப்பொழுதெல்லாம் என்னைச்சுற்றி மக்கள்கூட்டம் இருந்துக்கிட்டேயிருக்கும். ஏற்கனவே எனக்கு எட்டுக்கட்டையில், குரல். நான் சாதாரணமாப் பேசினாலே ஊருக்கெல்லாம் கேக்கும், அப்படியொரு குரல். சின்ன வயதில் பேசியவர்களின் பெயர்களை கிளாஸ் லீடர் எழுதினால் முதல் பேர் நம்மோடதாத்தான் இருக்கும். பிராக்கெட்டில் அவி(அடங்கவில்லை) மிமிஅவி(மிகமிக அடங்கவில்லை) இப்படி மிமி அதிகரித்துக்கொண்டேபோகும் அளவிற்கு பேசுவேன் நான்.
ஆனால் இதன் காரணங்களாலெல்லாம் எனக்கு நிச்சயமாகக் கெட்ட பெயர் கிடைத்ததில்லை, ஆனால் நிறைய நல்ல பெயர் எடுத்திருந்தேன். அதுவரை பள்ளிகளுக்கிடையேயான போட்டிகளில் மட்டும் பரிசு பெற்று வந்த நான் பதினொன்றாம் வகுப்பு படிக்கும் பொழுதுன்னு நினைக்கிறேன்; திருச்சியில் மாவட்ட அளவிலான பேச்சுப்போட்டியில் முதலிடம் வாங்கியிருந்தேன். அதிலிருந்து ஒருஅடி உசரமாத்தான் நடந்து வந்தேன். அப்புறமென்ன இரண்டுவருஷத்துக்கு போற இடங்களில் எல்லாம் ஏதாவது ஒரு பரிசு.
பேச்சுப்போட்டிக்கென்று சில சூட்சமங்கள் உண்டு. தலைப்பை பற்றித்தான் பேச வேண்டுமென்பது கிடையாது. சில பொதுவான விஷயங்களை எல்லா இடங்களிலுமே பேசலாம். எப்படியென்றால் முன்பு கூறியது போல் முன்னுரை பாட்டு எல்லாம் முடிஞ்சு தலைப்புக்கு வர்றதுக்கு ஒரு நிமிஷம் ஆகிவிடும். பின்னாடி முடிவுரைக்கு ஒரு நிமிஷம். மீதியிருக்கும் மூணு நிமிஷத்தில் தலைப்புக்கு இரண்டு நிமிஷம், மற்ற பொதுவான விஷயங்கள் ஒரு நிமிஷம். இவ்வளவு தான் பேச்சுப்போட்டி. அந்த இரண்டு நிமிட தலைப்பு விஷயம் மட்டும் தான் பெரும்பாலும் போட்டிகளில் மாறும். மற்றபடிக்கு எல்லாம் ஒரே விஷயம் தான் பேசப்படும்.
கூட்டத்தில் ஒரு மூலையைப்பார்த்து பேசாமல் இடையில் குழம்பி நிற்காமல், 'சீ' என்று சொல்லாமல் தடுமாறாமல் கணீரென்று பேசினால் போதும் பரிசை வாங்கிவிடலாம்.
"காந்தி சிலையின் கீழ் சாராயக்கடை
மனு கொடுத்ததும் தூக்கப்பட்டது"
என்று சொல்லிவிட்டு சற்று நிறுத்தி மக்களைப்பார்க்க வேண்டும், பின்னர் அதே குரலில்,
"காந்தி சிலையின் கீழ் சாரயக்கடை
மனு கொடுத்ததும் தூக்கப்பட்டது"
சற்று நிறுத்தி
"தூக்கப்பட்டது காந்தி சிலை"
இவ்வளவுதான் விஷயம். ஒரேஅப்லாஸ் தான்.(இதை ஆரம்பித்து வைப்பதற்கென்று சில ஆட்களை கூட்டிப்போகவேண்டும்.) தமிழ்முரசு போல் நச்சென்று பேசினீர்களேயானால் பரிசு உங்களுக்கே.
இதை நான் புரிந்து கொண்டதிலிருந்து பரிசு வாங்காமல் விட்ட போட்டிகள் மிகக்குறைவே. அப்படி பரிசு கொடுக்கப்படாவிட்டால் மேடையேறி ஏனென்றும் கேட்டிருக்கிறேன். பெரும்பாலும் அப்படிப்பட்ட நிலையில் பெண்களுக்கு பரிசளிக்க வேண்டியே நிராகரிக்கப்படும்; பட்டிருக்கிறேன். இதனாலெல்லாம் எங்கள் வீட்டில் என்னைப்பற்றி பெருமைப்பட்டார்களோ இல்லையோ சிறுமைப்படவில்லை. ஏன் பெருமையைப்பற்றியும் சந்தேகமாகச்சொல்கிறேன் என்றால். என் அக்கா சில பல ஸ்டேட் மெடல்களை என் அப்பாவின் வழியில் விளையாட்டுத்துறையில் வாங்கியிருந்தார்கள். ஸ்டேட் வாங்கின அக்காவை விட உள்ளூர் டிஸ்டிரிக்ட்ஸ் வாங்கிய நான் எங்கே அளும்புவிடமுடியும் அதனால்தான்.
சிறுமையைப்பத்தி சொன்னேன் இல்லையா அதுவும் நடந்தது, அது தான் நான் சொல்லவந்த இரண்டாவது விஷயம். இப்படியாக நான் தலையை தூக்கமுடியாமல் தூக்கிக்கொண்டு திரிந்தநாட்களில் நடந்த சம்பவம் இன்னமும் மனதில் நீக்கமற நிறைந்திருக்கிறது. இது ஒரு கதை போல் இருக்கலாம் ஆனால் உண்மை.
பன்னிரெண்டாம் வகுப்பு படித்து வந்த சமயம், என் வகுப்பில் படித்து வந்த ஒரு நண்பன் தன்னுடன் டியூசன் படிக்கும் ஒரு பெண்ணை காதலித்தான். அவன் பெயர் தன்ராஜ்னு வச்சுப்போமே, அந்தப்பொண்ணோட பேரு தங்கம்(வச்சுப்போமே). நான் அந்த பெண்ணை நேரில் பார்த்ததில்லை இன்று வரை.
அந்த இரண்டு பேரும் படிக்கும் டியூசனில் படிக்கும் இன்னொரு பையன் ஹரன்,(அப்படின்னு வச்சுப்போமே) அவனும் அந்த பொண்ணு தங்கத்தை விரும்பினான் போலிருக்கு. இது எனக்கு தன்ராஜ் சொன்னது. ஹரனையும் எனக்குத் தெரியும் கொஞ்சம் நல்ல பழக்கம் கூட. ஒன்னா பேச்சுப்போட்டிக்கு தயார்செய்து ஒன்றாக சென்று பேசியிருக்கிறோம். அவனும் பேச்சுபோட்டியில் கலந்து கொள்பவன். இவனுங்க இரண்டு பேரும் லவ் பண்ணுறது அந்த பொண்ணுக்கு நிச்சயமாத் தெரியாது.
நானும் தன்ராஜும் கொஞ்சம் க்ளோஸ் ப்ரண்ட்ஸ்(அதாவது ஹரனைவிட தன்ராஜ் க்ளோஸ்). அவன் இந்த விஷயத்தை என்கிட்ட சொல்லி புலம்புவான். அதாவது ஹரன் நல்லா படிக்கிற பையன். நம்மாலு கொஞ்சம் அப்படி இப்படி. அவன் அவளுக்கு சொல்லித்தரேன் பேர்வழின்னு ரொம்ப நேரம் பேசுறான்னு சொல்லி ஒரே புலம்பல். அப்புறம் நான் கொஞ்சம் டிராயிங் எல்லாம் வரைஞ்சுத்தந்து, ஆர்ட்டிஸ்ட் மாதிரியெல்லாம் படம் காட்டினது வேற மேட்டர்.
அப்பவே நான் டைப்பிங், மற்றும் ஷார்ட் ஹாண்ட் படித்துவந்தேன். எல்லாம் நான் இப்பொழுது பார்க்கும் வேலைக்காகத்தான். அப்படி ஒரு நாள் தன்ராஜின் ஹரனைப்பற்றிய ஏகப்புலம்பலைக் கேட்டுவிட்டு; டைப்பிங் கிளாஸ் சென்று ஒரு மணி நேரம் தட்டோதட்டென்று ASDFGF தட்டிவிட்டு வரும்வழியில், ஹரனை கிரிக்கெட் விளையாடும் கிரௌண்டில் பார்த்தேன்.
அவனும் புன்னகைத்தவறே அருகில் வந்தவன், அவனுடன் விளையாடக் கூப்பிட்டான், பிறகுதான் கவனித்தவனாய் கையில் வைத்திருக்கும் டைப் அடித்த காகிதத்தைப்பற்றிக் கேட்டான். அந்த காலத்தில் எல்லாம் செய்யும் நல்ல காரியங்களைப்பற்றி சொல்வது கிடையாது. அதனாலும் மற்றும் அவனை நக்கல் செய்யும் எண்ணத்துடனும் வேடிக்கையாய்,
அது ஒரு காதல் கடிதம் என்று சொல்ல, அவன் ரொம்பவும் தீவிரமாய் யாருக்கென்று கேட்டான், நானும் அவனை விளையாட்டாகக் கோபப்படுத்தும் எண்ணத்துடன், தன்ராஜின் கூடப்படிக்கும் தங்கம் என்ற பெண்ணுக்கு என்று சொன்னேன். அவனும் சிரித்துக்கொண்டே சென்றுவிட்டான் நானும் அன்று விளையாண்டுவிட்டு மறந்துவிட்டேன்.
அந்த வாரம் சனிக்கிழமை காலை ஹரன் வீட்டிற்கு வந்திருந்தான், என்னவென்று கேட்டதற்கு ஒரு கிரிக்கெட் டீமிற்காக விளையாட வேண்டுமென்று சொல்ல, நானும் இது யதார்த்தமானதென்று நம்பி, கிரிக்கெட் கிட்டை எடுத்துக்கொண்டு வெளியில் வந்தேன். வந்தால் யாரோ ஒரு பையன் அங்கே நின்று கொண்டிருந்தான், நான் ஹரனிடம் அந்தப்பையன் யாரென்று கேட்க, அதுவரை பேசாமல் இருந்த அந்த பையனே நேராய்.
நான் தங்கத்தினுடைய அண்ணனென்றானே பார்க்கணும், சில விநாடிகள் பிடித்தது எனக்கு என்ன நடந்திருக்கும் என்று ஊகிக்க. அந்த பையன் பருப்பு மாதிரி நேராய 'டா' போட்டு பேசி 'அடிப்பேன்' 'உதைப்பேன்' என்று ஆரம்பிக்க, நான் நேராய் தங்கத்தின் அண்ணனுடைய சட்டையை கோத்துப்பிடித்தேன் முதலில் பின்னர், 'யாரோட ஏரியாவிற்கு வந்திருக்க தெரியுமா? அடி பின்னிருவேன் மரியாதையா நடந்துக்கோ' என்று சொல்ல அவன் பயந்திருக்க வேண்டும். அதற்கு பிறகு நியாய தர்மத்தை பேசத்தொடங்க, நான் முதலிலேயே சொல்லிவிட்டேன். 'இங்கபாருங்க. நான் இவன் கிட்ட சொன்னது சும்மா விளையாட்டுக்கு அவன் இதை பெரிசு பண்ணிட்டான்' என்று. ஆனால் அவன் அதற்கு பிறகு சொன்ன சில வார்த்தைகள் என்னை பெரிதும் பாதித்தது. அவன் தங்கையிடம் என்னைப்பற்றி விசாரிக்க, அந்த பெண். மோகன்னு ஒருத்தனைப்பத்தி கேள்விப்பட்டதேயில்லைன்னு சொல்லி அழுதுச்சாம்.
நான் அங்கேதான் உடைந்து போனேன், என்னயிருந்தாலும் ஒரு பெண்ணை இந்த விஷயத்தில் சம்மந்தப்படுத்தி விட்டேன் அது முழுக்க முழுக்க என் தவறு என்று. நான் அவனிடம் இதற்கு மன்னிப்பு கேட்க, அந்த பையன் என் தகப்பனாரிடம் பேச வேண்டும் என்று சொன்னான். அவன் பயந்திருக்கலாம், என்னை மிரட்டியதால் அவன் தங்கையை நான் எதுவும் செய்து விடுவேனென்று. நான் அவனிடம் நடந்து கொண்ட முறை அப்படி. அவன் பக்கம் நியாயம் இருக்கும் பொழுதும் நான் அவன் சட்டையை பிடித்ததில் முழு தவறு என்னுடையது.
இந்த விஷயத்தில் நான் அதிக விஷயங்களை கற்றுக்கொண்டேன். குறிப்பாக பெண்களைப்பற்றிய கருத்துக்களை பேசுவதைப்பற்றி. அந்தநாட்கள் கொஞ்சம் சோகமான நாட்கள். எங்க அம்மாவால் நம்பவே முடியவில்லை நான் இப்படி செய்திருப்பேன் என்று. ஆனால் அன்று தங்கத்தின் அண்ணனுக்கு சாதகமாகத்தான் இருவருமே பேசினார்கள். அதாவது தவறு என்பக்கம் தான் என்று. இந்த விஷயத்தால நான் கத்துக்கிட்டது நிறைய. அன்னிக்கு தப்பு யார் மேலன்னு தெரியலை, ஆண்களுக்கு பெரும்பாலும் தெரிந்திருக்கலாம், நண்பர்களுடைய காதலியைப் பற்றி சாதாரணமாய் நட்பாய் சீண்டுவது எல்லோருமே செய்வது. அதுபோன்றதொறு சீண்டலே அன்று நான் செய்தது. என் பெயரில் இருக்கும் தவறை முழுவதுமாக ஒப்புக்கொண்டாலும் சில பல வாழ்க்கை ரகசியங்களை நான் கற்றுக்கொள்ள ஆரம்பமாய் இருந்த நாள் அந்த நாள்.
இன்னொரு பதிவிலும் இந்த சம்பவத்தை இழுக்க உத்தேசம் அதனால் விஷயத்தை மறந்துறாதீங்க ஆமாம் சொல்லிட்டேன். இதன் போன்ற காரணங்களால் தான் ஒரு முறை பத்மா அர்விந்தின் பதிவில் இன்னமும் தவறு செய்தால் எங்கள் வீட்டில் செருப்படி கிடைக்குமென்று.
அந்த காலத்தில் எல்லாம் நான் பேசுவதில் திறமையானவனாக இருந்த போதிலும் எழுதுவதில் கலந்துகொண்டதில்லை. சொல்லப்போனால் எழுதியதேயில்லை. இப்பொழுது சுத்தமாய் பேசுவதை விட்டுவிட்டேன் எழுதிக்கொண்டிருக்கிறேன். இன்னும் ஒரு வாரத்திற்கு கொஞ்சம் தீவிரமாய் எழுதவேண்டும். நட்சத்திரமாக தேர்ந்தெடுத்திருக்கிறார்களே, சுவையான தலைப்புகள் தரும் எண்ணத்துடன் விடைபெறுகிறேன். தமிழ்மணம் நிர்வாகிகளுக்கு நன்றி.
import com.thamizmanam.GroupList.*;
public class WelcomeThamizmanam {
public static void main(String args[])throws PoliDonduException {
try{
String[] thamizmanamGroup = com.thamizmanam.GroupList.createList();
int i=0;
while(thamizmanamGroup.length!=0){
System.out.println("Welcome "+thamizmanamGroup[i]);
++i;
}
}
catch(PoliDonduException pde)
{
com.thamizmanam.GroupList.thamizManamGroup().findMember("Dondu").giveAlert();
}
}
}
In சுய சொறிதல் சொந்தக் கதை நட்சத்திரம்
நட்சத்திரம் - அட நான் தான்
Posted on Monday, February 13, 2006
நட்சத்திரம் - அட நான் தான்
பூனைக்குட்டி
Monday, February 13, 2006
பூனைக்குட்டி
Primarily a java programmer, an athiest and a film geek, who loves reading, writing and photography.
Related Articles
Subscribe to:
Post Comments
(
Atom
)
Popular Posts
-
"ஏய் நில்லுடி, என்னமோ நான் பேசப்பேச பதில் சொல்லாமப் போய்க்கிட்டேயிருக்க?" இது நம்ம ஹீரோ, பேரு சுந்தர பாண்டியன் மனசுக்குள்ள பெரிய ...
-
இங்க இப்படி ஒரு ஐட்டம் இருக்கிறதென்பதே மறந்து போயிருந்தது. காந்தாரா படமல்ல பொன்னியின் செல்வன் படம் தான் என்னை ப்ளாக் பக்கம் திருப்பியது, ஆனா...
-
மதுமிதா இறந்துவிட்டாள் என்ற செய்தியை என்னால் சிறிதும் நம்பமுடியவில்லை, நான் சிறிது சிறிதாக மயக்கமாகிக் கொண்டிருப்பதை உணர முடிந்தது. o அந...
விடலைப் பருவ அனுபவங்களுடன் தொடங்கியிருக்கிறீர்கள்.
ReplyDeleteவாழ்த்துக்கள் மோகந்தாஸ்!
இந்த வார நட்சத்திரம் திரு.மோகன்தாஸ் அவர்களுக்கு எனது வாழ்த்துகள்.
ReplyDeleteஅருமையான சரித்திர பதிவு ஒன்றை சொல்லுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
அன்புடன்
பரஞ்சோதி
வழக்கம்போல் சொல்லிய விதத்தில் நல்ல ரசனை இருந்தது. குறிப்பாக அவி, மிமிஅவி - அட நம்ம ஆளா நீங்களும்?
ReplyDeleteமோகன் தாஸ் அவர்களுக்கு வாழ்த்துக்கள். இந்த வாரம் இனிய வாரம்.
-ஞானசேகர்
வாங்க மோகன்தாஸ்..
ReplyDeleteவாழ்த்துக்கள்..
அடேடே மோகன் இந்த வார நட்சத்திரமா கலக்குங்க
ReplyDelete//என்னிடம் ஆசிரியர் வீட்டுப்பிள்ளைகளுக்கே உரிய சில விஷயங்கள் கொஞ்சம் அதிகமாக இருந்தது. அது நான் பிடித்த முயலுக்கு மூன்றே கால்கள் என்று வாதாடும் குணம்.
//
அதே அதே
/எந்த விஷயமாயிருந்தாலும் மூக்கை நுழைக்கிறதும் அந்த பிரச்சனைக்கு தீர்வு சொல்றேன் பேர்வழின்னு பேசுறதும். இதெல்லாம் ஆரம்பக்காலத்தில் அப்பொழுதெல்லாம் என்னைச்சுற்றி மக்கள்கூட்டம் இருந்துக்கிட்டேயிருக்கும். ஏற்கனவே எனக்கு எட்டுக்கட்டையில், குரல். நான் சாதாரணமாப் பேசினாலே ஊருக்கெல்லாம் கேக்கும், அப்படியொரு குரல். சின்ன வயதில் பேசியவர்களின் பெயர்களை கிளாஸ் லீடர் எழுதினால் முதல் பேர் நம்மோடதாத்தான் இருக்கும். பிராக்கெட்டில் அவி(அடங்கவில்லை) மிமிஅவி(மிகமிக அடங்கவில்லை) இப்படி மிமி அதிகரித்துக்கொண்டேபோகும் அளவிற்கு பேசுவேன் நான்.
//
ஹி ஹி அங்கேயுமா?
//import com.thamizmanam.GroupList.*;
public class WelcomeThamizmanam {
public static void main(String args[])throws PoliDonduException {
try{
String[] thamizmanamGroup = com.thamizmanam.GroupList.createList();
for(int i=0;i
System.out.println("Welcome "+thamizmanamGroup[i]);
}
}
catch(PoliDonduException pde)
{
com.thamizmanam.GroupList.thamizManamGroup().findMember("Dondu").giveAlert();
}
}
}
//
அடப்பாவி
//
அந்த காலத்தில் எல்லாம் நான் பேசுவதில் திறமையானவனாக இருந்த போதிலும் எழுதுவதில் கலந்துகொண்டதில்லை
//
நானும் தான் ஆனால் எழுதி எழுதி பாதுகாத்து வந்தேன், போட்டிகளில் கலந்து கொள்ளாமல்...
வாங்க மோகன்தாஸ், உங்கள் முதல் இடுகையே வரவிருக்கும் விருந்திற்கு கட்டியம் கூறுகிறது. வாழ்த்துக்கள்
ReplyDeleteவாய்யா தாஸு, நட்சத்திரமானதுக்கு வாழ்த்துக்கள்!
ReplyDeleteவல்லினம், மெல்லினம், இடையினம் தகராறு, எழுத்துருவால வந்ததா? குறளை, உங்குரலாக்கிட்டீரு!
அப்பறம் பேச்சிப்போட்டிகள், கவிதை பாடற 'Timing' டெக்னிக்யை எங்க சீனியர் ராமநாதங்கிட்ட நிறைய கத்துகிட்டுருந்திருக்கேன், பழைய நினப்பு தான், மீண்டும் வாழ்த்துக்கள்!
தொடர்ந்து வந்து படிக்கிறேன், அருமையான காதல் ரசம் சொட்ட ஒரு கதை குடுய்யா, சம்பங்கள்ள கூடு கட்டமா, பேச்சுகள்ல வந்து போற வாஞ்சையான 'பாவா' சொற்டொர் போட்டு, என்ன!
வாழ்த்துக்கள் மோகன்தாஸ்..
ReplyDeleteஆசிரியர் வீட்டுப்பிள்ளைகளுக்கே உரிய சில விஷயங்கள் ...நான் பிடித்த முயலுக்கு மூன்றே கால்கள் என்று வாதாடும் குணம். // அப்டிங்களா..இல்லவே இல்லைங்க..நிஜமாவே நான் பிடிச்சதுக்குக் மூணு காலுங்கதான் இருந்திச்சு.
ReplyDeleteசரி...இதெல்லாமா இப்படி போட்டு உடைக்கிறது; நானும்- குழலி மாதிரி - மாட்டிக்கிறேனே..
வாழ்த்துக்கள்
வின்மீன் வாரத்தில் சிறப்பாக ஒளிர வாழ்த்துக்கள்! நுட்பத்தோடு... காதலையும் வரலாற்றையும் தொடுவீர்கள் என்று நினைக்கிறேன்..
ReplyDelete:-)
ம்ம்ம் .... எடுத்தவுடனே சர்ன்னு ஸ்பீடு எடுத்தாச்சு , பார்க்கலாம் கடைரிவரை இப்படியே இருக்கான்னு :-))
ReplyDeleteவாழ்த்துக்கள் மோகன் தாஸ்
ReplyDeleteஇந்த வார நட்சத்திரத்துக்கு என் வாழ்த்துக்கள்
ReplyDeleteஅன்புடன்
கீத
வாழ்த்துக்களுக்கு நன்றி சிபி. விடலைப்பருவ அனுபவங்கள் இல்லாத ஆட்கள் மிகக்குறைவு.
ReplyDeleteநன்றி பரஞ்சோதி, சரித்திரப்பதிவு போடணும்னு தான் நினைக்கிறேன். பார்ப்போம்.
ReplyDeleteநன்றிங்க ஞானசேகர். நிறைய பேர் என்னை மாதிரி வளவளன்னு பேசுவீங்கன்னு நினைக்கிறேன்.
ReplyDeleteஜோசப் சார் உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி. தொடர்ந்து உங்கள் ஆதரவை அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
ReplyDeleteகுழலி அதனால் தான் டீச்சர் வீட்டுப்பசங்களுக்கேன்னு பொதுவா சொன்னேன். அது உண்மைதான்னும் நினைக்கிறேன்.
ReplyDeleteஎன்ன பாவம் பண்ணினேன். ப்ரொக்கிராம் கம்பைல் ஆகலையா???
மணியன் விருந்து படைக்கிறதுக்கு நான் தயார். சாப்பிட்டுட்டு நல்லாயிருந்துதான்னு சொல்லுங்க அது உங்கள் பொறுப்பு.
ReplyDelete//விடலைப்பருவ அனுபவங்கள் இல்லாத ஆட்கள் மிகக்குறைவு//
ReplyDeleteஉண்மைதான் மோகன்தாஸ்,
வெளிக்கண்ட நாதரே. எங்க எங்குரலை சொல்லியிருக்கேன் புரியலை. கொஞ்சம் விளக்கமா சொல்லுங்களேன். காதல் கதை ஒன்னு எழுதணும் சாரே. பார்ப்போம். உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி.
ReplyDeleteதெருத்தொண்டன் சதீஷ் உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி. தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.
ReplyDeleteஎன் பதிவில் வித்தை தெரியுதா, சந்தோஷம். வார முடிவில் பரிசு கிடைக்குமா என்ன அது புரியலையே.
ReplyDeleteஎன்னங்க பாரதி ரொம்ப தீவிரமான எழுத்தாளரா ஒன்னுமே புரியலை போங்க.
தருமி உண்மையை சொல்லுங்க எல்லோருமே இப்படிதானா??? மற்றபடிக்கு உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி. தொடர்ந்து ஆதரவை தாருங்கள்.
ReplyDeleteபொட்டீக்கடை, ரொம்ப நன்றிங்க. வரலாற்றை தொடப்பார்க்கிறேன். கட்டக்கடேசியாக மனமும், உடலும், நேரமும் இடம் கொடுத்தால் நிச்சயமாக செய்கிறேன்.
ReplyDeleteஉஷா ரொம்ப ஸ்பீடா தெரியுதா??? கடைசிவரைக்கும் இப்படியே இருப்பதற்கு உங்களை மாதிரி பெரிய இலக்கியவாதிங்க ஆதரவு இருந்தா போதும். :-)))
ReplyDeleteகுமரன், கீதா உங்கள் ஆதரவுக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி.
ReplyDeleteவாழ்த்துகள் மோகன்தாஸ். நட்சத்திர வாரம் மிகச் சிறப்பாக அமைய எனது வாழ்த்துகள்.
ReplyDeleteநல்ல விறுவிறுப்பான தொடக்கம். இந்தச் சுறுசுறுப்பு நிச்சயமாக வாரம் முழுதும் இருக்குமெனத் தெரிகிறது. தொடரட்டும் உற்சாகமாய்.
வாழ்த்துக்கள் நண்பரே!
ReplyDeleteவாழ்த்துக்களுக்கு நன்றிங்க ராகவன். தொடர்ந்து வந்து போய்க்கிட்டிருங்க.
ReplyDelete§Á¡¸ý¾¡Š,
ReplyDeleteƒøÄ¢ «Ê측¾ À¾¢×¸û §À¡Îí¸. ¦¸¡ïºõ ÅÃÄ¡Ú, ¦¸¡ïºõ ¸õôäð¼÷ ¦¸¡ïºõ Ò¨É× ±øÄ¡õ ±¾¢÷À¡÷츢§Èý. ( ¿£í¸ ¦ºïºÅ÷¾¡§É).
Å¡úòÐì¸û
நன்றிங்க செயகுமார். உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்.
ReplyDeleteசுரேஷ்.,
ReplyDelete//மோகன்தாஸ்,
ஜல்லி அடிக்காத பதிவுகள் போடுங்க. கொஞ்சம் வரலாறு, கொஞ்சம் கம்ப்யூட்டர் கொஞ்சம் புனைவு எல்லாம் எதிர்பார்க்கிறேன். ( நீங்க செஞ்சவர்தானே).
வாழ்த்துக்கள் //
இப்பவே சொல்லிட்டேன் நான் ஒரு ஆளைப்பத்தி ஜல்லியடிக்கத்தான் செய்வேன் காத்திருங்க. மற்றபடிக்கு கம்ப்யூட்டர் புனைவெல்லாம் வரிசையில் இருக்கு பார்க்கலாம்.
உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிங்க.
வாழ்த்துகள் மோஹன்தாஸ்,
ReplyDeletesci-fi யும் உண்டுதானே?
அப்புறம் பதிவோட கடசியில என்னவோ எழுதிருக்கீங்களே.. என்னது அது?
இராமநாதன் வாங்க, வாங்க. நல்லாயிருக்கீங்களா? ஒரு சைன்ஸ் பிக்ஷன் கதை போடலாமுன்னு நினைச்சிருக்கேன் பார்க்கலாம் இராமநாதன்.
ReplyDeleteசுத்தமா நேரமே கிடைக்கலை, ப்ரொஜெக்ட் அப்படி, இன்டெர்னெட் கிடையாது, கேமிரா மொபைல் கிடையாது. கூகுள் கூட பண்ணமுடியாது.
கூகுள் இல்லாம எப்படி ப்ரொக்ராம் பண்றதுன்னு முழிச்சிக்கிட்டிருக்கேன்.
கீழே இருப்பது தமிழ்மணத்தின் அத்துனை நபர்களுக்கும் தனித்தனியே வணக்கம் சொல்லும் ப்ரொக்கிராம். சொல்லுமான்னு கேட்டா :-).
அன்பு மோகந்தாஸ்,
ReplyDeleteகனிந்த வணக்கம். உங்களை உங்கள் எழுத்துக்கள் பேச வைக்கும்!
ஆசிரியர்களின் பிள்ளைகள் இப்படி ஏதாவது
ஒரு விசயத்தில் சந்தர்ப்ப வசத்தால் மாட்டிக்
கொள்வது எல்லா ஊர்களிலும் நடக்கிறதா என்ன..?
'நட்சத்திர' பதிவுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள், அன்பரே!
அன்புடன்,
எல்.ஏ.வாசுதேவன்,
மலேசியா.
மோகன் தாஸ்,
ReplyDeleteநட்சத்திர வாரத்திற்கு வாழ்த்துகள்.
அன்புடன்
சுந்தர்.
நான் நினைக்கிறேன், ஆசிரியர் பிள்ளைகள்னு ப்ளாக் உலகத்தில் தனியா ஒரு செட்டு சேக்கலாம்னு நிறையபேர் தேருவாங்க போலிருக்கு. ஆசிரியர் பிள்ளைகள், தாங்களே ஆசிரியர்களாக இருக்கும் :-) துளசிம்மா போன்றவர்கள். அப்படின்னு ஒரு பெரிய பட்டாளமே சேரும்னு நினைக்கிறேன். நன்றிங்க எல் ஏ வாசுதேவன். உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்.
ReplyDeleteசுந்தர் வாங்க வாங்க. நல்லாயிருக்கீங்களா? எல்லாரையும் பார்த்து ரொம்ப நாளாச்சு.
ReplyDeleteஅட போங்க பாரதி. நானே நாளைக்கு யாரை விட்டு மாடரேஷன் பண்ணச் சொல்றதுன்னு பார்த்துக்கிட்டிருக்கேன். நீங்க வேற ஸ்டாண்டிங் ஓயேஷன் அது இதுன்னு சும்மா கதை கிளப்பிவிடுறீங்க.
ReplyDeleteசாதாரண இரண்டு வரி பாராட்டுக்களே அதிகங்க தலைவர். மற்றபடிக்கு நாளைக்கான பதிவுகளை, 11.30 பின்னிரவில் வேக வேகமாக தட்டசிக்கொண்டு மாடரேஷன் பண்ணிக்கொண்டிருக்கும். ஒரு அபாக்கிய ப்ரோக்கிராமர். :-)
பேச்சுப்போட்டியிலே பேசறது மாதிரியே ஆரம்பிச்சுட்டீங்க.
ReplyDeleteஎழுத்துப் போட்டியிலேயும் கலக்குங்க.
:-)))
//மிமிஅவி(மிகமிக அடங்கவில்லை) //
ReplyDeleteஇந்த குரூப் தான் தமிழ்மணத்துக்கு எழுத வருவாங்க... .கவலைப்படாதீங்க
வாங்க வந்து கலக்குங்க
naanum vaathiyar pillai than..any new political party in the offing?
ReplyDelete//ஆசிரியர் வீட்டுப்பிள்ளைகளுக்கே உரிய சில விஷயங்கள் ...நான் பிடித்த முயலுக்கு மூன்றே கால்கள் என்று வாதாடும் குணம். //
ReplyDeleteஅப்படியா? என் மனைவியிடம் கேட்டுச் சொல்கிறேன்.
நட்சத்திர வாழ்த்துக்கள்!
பச்சோந்தி, கலக்கிடலாம் ஒன்னும் பிரச்சனைகிடையாது.
ReplyDeleteமுத்து, :-) தொடங்கலாம்னுதான் நானும் நினைக்கிறேன். நிறையபேர் இருக்காங்க போலிருக்கே.
ReplyDeleteஜோ உங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி. கேட்டுச் சொல்லுங்கள் காத்திருக்கிறேன்.
ReplyDelete