In சுய சொறிதல் சோழர்கள்

பாலகுமாரனும் பஞ்சவன்மாதேவியும்

பாலகுமாரன் அவர்கள் சில காலமாக ஆராய்ச்சியெல்லாம் செய்து உடையார் என்றொரு கதையெழுதி வருகிறார். அதைப்பற்றிய சில கேள்விகளுக்கு எனக்கு பதில் தெரியவில்லை.

இங்கே நான் குறிப்பிடுவதற்கு முக்கியமான காரணம், பாலா தன் முதல் பாகத்தில் கல்கியை பற்றியும், அவருடைய நாவலில் வரும் நந்தினியை பற்றியும் கூறியதை வைத்தே, புத்தகம் கையில் இல்லாத காரணத்தால், சில வருடங்களுக்கு முன் படித்ததை நினைவு கூர்ந்து சொல்கிறேன். அதாவது நந்தினியை போன்ற ஒரு கற்பனை கதாப்பாத்திரம் கதையின் போக்கை தீர்மானிப்பதை பற்றி கருத்து கூறிய பாலா தன் கதையில் அதுபோன்று நிகழாது என்று கூறினார். இந்த விஷயத்துக்கு பின்னால் வருகிறேன்.

பாலாவின் இந்த கதையில் கரூவூர்த்தேவர் போன்ற சில மந்திர தந்திரங்கள் செய்யும், பாத்திரங்களை அறிமுகப்படுத்துகிறார். கோவில் கட்டியதன் பங்கில் பெரும்பாலானவற்றை அவர்களிடமே கொடுக்கிறார். அவ்வளவு பெரிய கோவில் கட்டிய மன்னன்(கடவுளுக்கு) கடவுள் நம்பிக்கையில்லாதவனாக இருப்பான் என்று சொல்லவில்லை. ஆனால் பாலகுமாரன் கொஞ்சம் அதிகம் சொல்கிறாரோ என்று நினைக்கிறேன். இப்படிப்பட்ட மன்னர்கள்(ராசராசன், ராசேந்திரன்) கொஞ்சம் முரடர்களாகத்தான் இருந்திருப்பார்கள் என்பது என் எண்ணம். இல்லாவிட்டால் போர்க்களத்தில் சண்டை செய்ய இயலாது. இவ்வளவு பெரிய சாம்ராஜ்ஜியத்தை நிறுவியவர்கள் என்பதால் கட்டாயம் முரடர்களாக இல்லாதிருக்க முடியாது.

அவ்வளவு பெரிய மகத்தான கோவில் கட்டிய பெருமையை மன்னனுக்கு கொடுங்கள், இல்லை உதவிய மக்களுக்கு கொடுங்கள். அவர்களை பாராட்டுங்கள். இவையெல்லாம் இல்லாமல் கடவுளையும், மந்திரம் தந்திரம் செய்பவர்களையும் சிறிது உயர்வாக பாராட்டுவதாக எனக்குப்படுகிறது.

கல்கி குந்தவையையும் வந்தியத்தேவனையும் எழுதிவிட்டதால் இவர் குறிப்பிட வேண்டிய அவசியம் கூட கதையில் இல்லை, பாவம் அவரும் தான் என்ன செய்வார். பஞ்சவன்மாதேவியின் வரலாற்றை எழுதாமல், கோவிலின் உட்புற சுவற்றில் மன்னன் பதித்தவற்றை கொடுத்தவர்கள் பற்றியும், வடக்குபாடியை சாமந்தர்களின் தலைவனாக இருந்து சோழகுலத்தின் வெற்றிக்காக போராடியவர்களையும் எழுத முடியுமா என்ன?

அதுமட்டுமில்லாமல் பாலகுமாரன் சில தனிப்பட்ட காரணங்களுக்காக, தேவரடியார்களுக்கு கொஞ்சம் அதிகம் இடம் கொடுப்பதாக தெரிகிறது. பெண்கள் அந்தக் காலத்தில் இத்தனை மதிப்பு பெற்றிருந்தார்கள் ஒப்புக்கொள்கிறேன். ஆனால் ராசராசனைப் போன்ற ஒரு மன்னன் ஒரு தேவரடியாரை இவ்வளவு நம்பியிருந்தான் என்று சொல்வது ஏற்புடையதாக இல்லை. சிறிதுவிட்டால் கோவில் கட்டியதே பஞ்சவன்மாதேவிதான் என்று சொன்னாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை.

இருந்திருக்கலாம் ராசராசனின் அன்னியோன்மையாகவே இருந்திருக்கலாம். ராசேந்திரனுக்கும் அவர்களை பிடித்திருக்கலாம் பள்ளிப்படை அமைத்திருக்கலாம். அதை ஒன்றை வைத்துக் கொண்டு அந்த தேவரடியார் அவர்களை உடையாரில் கதாநாயகி போல் அமைத்திருப்பதை படிக்க மனம் வரவில்லை.

கல்கி எழுதியதை எழுதமாட்டேன் என்று சொன்னால் இன்னும் எத்தனையோ விஷயங்கள் இருக்கு அதையெல்லாம் விட்டுவிட்டு, நாடி ஜோதிடம் பார்த்தார், அதனால் தான் கோவில்கட்டினார்னு சொல்றதெல்லாம் ரொம்ப ஓவர்.

கருவூர்த்தேவரை பற்றி எழுதும் போது, அவரையும் எழுத ஒரு பைத்தியக்காரன் வருவான்னு, தன்னைப்பற்றி, வஞ்சகப்புகழ்ச்சி செய்துக்குறார். அறிந்தவரையில் கருவூர்த்தேவர் கவிதை எழுதுபவர். அவர் அந்தக் காலத்தில் கவிதையில்லாம் எழுதியதாக தெரிகிறது.

ஆதித்த கரிகாலன் வீரபாண்டியனை கொல்ல சென்ற பொழுது, அவனுக்கு வழிகாட்டியவனின், நினைவை மறக்கடித்த கருவூர்த்தேவரை பற்றி எங்கு படித்தார்னு சொன்னால் நாங்களும் படிப்போமில்ல.

-----------------------------------------

முன்னம் எழுதிய பதிவு தான் இப்பொழுது மீண்டும் பதிவுலகில், பொன்னியின் செல்வன், பாலகுமாரன், உடையார் பற்றியெல்லாம் பேச்சு எழுவதால் ஒரு மீள்பதிவு.

தொடர்புடையதாய் நான் கருதும் பிற இடுகைகள்.

இரண்டாம் குலோத்துங்க சோழன் - சாளுக்கிய சோழர்கள் - கிருமி கண்ட சோழன் - தசாவதாரம் - கல்கி - பொன்னியின் செல்வன் - ரங்கராஜ நம்பி - சைவம் - வைணவம் - ஜல்லி
பயணிகள் கவனிக்கவும் - பாலகுமாரன்

Related Articles

12 comments:

  1. நீங்க பரவாயில்லை ..உடையார் நாவலை படித்து, தீவிரமா ஆராய்ச்சி செய்து..கதா பாத்திரங்களை ஒப்பீடு செய்தெல்லாம் கட்டுரை எழுதரீங்க.. நான் முதல் இரண்டு பாகம் வாங்கி வச்சதோட சரி.. படிக்கவே பிடிக்கலை.. தீவிர பாலகுமாரன் ரசிகையான எனக்கே முதல் இரண்டு அத்யாயங்களுக்கு மேல் படிக்க முடியல.. நீங்க க்ரேட் தான்

    ReplyDelete
  2. நன்றிகள் பத்மபிரியா, உங்கள் விமரிசனத்துக்கு நன்றி.

    ReplyDelete
  3. நான் பாலகுமாரனின் எழுத்தின் ரசிகனல்ல. அவருடைய புத்தகங்களை நான் விரும்பிப் படிக்கிறவன் அல்லன்.

    ஆனால் அவருடைய புருஷ வதம் என்ற கதையை மிகவும் விரும்பிப் படித்திருக்கிறேன். பாலகுமாரன் எழுதி நான் படித்த ஒரே கதை அதுதான்.

    அவருடைய எழுத்து நடை மிகவும் அருமையாக இருந்தது. கண்டிப்பாக பாராட்ட வேண்டும்.

    ஆனால் கருத்து நடை? சற்றே அதீதமான சாதீய புகழ்ச்சிகள் நிறைந்ததாயும் இருந்தது. அது ஒரு வித வெறுப்பை எனக்குள் ஏற்படுத்தியது. இப்படியொரு எழுத்து நடையில் இப்படியொரு கருத்துப் பிழையா என்று.

    காதல் பெருமகனார் படித்தேன். அதிலும் அப்படியே......ஆகவே அவருடைய எழுத்துகளை படிப்பதில்லை என்று முடிவெடுத்து இன்றும் அப்படியே செய்து வருகிறேன்.

    ReplyDelete
  4. :-) i was first amazed & interested when i heard the main theme of the story but was very much disappointed for the same reasons for which you & kovi kannan had mentioned... that balakumaran style was too much on this novel which made it very much difficult to get into it.

    ReplyDelete
  5. நான் இன்னும் உடையார் நாவல் வாசிக்கவில்லை.

    //இப்படிப்பட்ட மன்னர்கள்(ராசராசன், ராசேந்திரன்) கொஞ்சம் முரடர்களாகத்தான் இருந்திருப்பார்கள் என்பது என் எண்ணம்.//

    பாலகுமாரன் தனது "ஒரு காதல் நிவந்தம்" என்ற நாவலில் முழுக்க முழுக்க ராசேந்திர சோழனைப்பற்றி எழுதியிருப்பார். வாசித்ததுண்டா..

    //தேவரடியார்களுக்கு கொஞ்சம் அதிகம் இடம் கொடுப்பதாக தெரிகிறது.//

    அதில் முழுக்கவே அவர்களின் ராஜ்ஜியம்தான். இறுதியில் திருவாரூரில் உள்ள கல்வெட்டை காட்டி முடித்திருப்பார்.

    ReplyDelete
  6. யாத்ரீகன்,

    பாலகுமாரன் பற்றி நான் எழுதிய - பயணிகள் கவனிக்கவும் - புத்தக விமர்சனத்தில் சில வரிகள் எழுதியிருந்தேன்.

    அதையும் படித்துப் பாருங்கள். லிங்க் மேலே பதிவிலெயே கொடுத்திருக்கிறேன்.

    கோவி.கண்ணனின் நீங்கள் சொல்லும் பதிவு படித்ததில்லை.

    ReplyDelete
  7. சென்ஷி,

    நீங்கள் சொன்ன புத்தகம் படித்ததில்லை.

    உங்களுக்கும் யாத்ரீகனுக்கு சொன்னதுதான். அந்தப் பதிவைப் படித்துப் பாருங்கள். :)

    ReplyDelete
  8. மோகன்தாஸ், பாலகுமாரன் ராமநாராயனனா மாறி கிட்டதட்ட 6,7 வருசம் ஆச்சு. எல்லா கதையிலும் குறி சொல்லும் ஒரு கேரக்டராச்சும் வராம இருப்பதில்லை.
    அந்த குறி சொல்லும் கொடுமை தாங்காம அந்த பக்கம் அண்டுவதே இல்லை.

    ReplyDelete
  9. "வார்த்தைச் சித்தர்". உடையார் மட்டும் முதல்ல படிக்கலாம்னு இருந்தேன் (பொ.செ. மேல இருந்த ஆர்வத்தினால), உங்க விமர்சனம் படித்த பிறகு கான்சல்டு. ஒரு கருத்தை அமைச்சு கற்பனை கோட்டையா கதை எழுதினா வாசகருக்கு நல்லா இருக்கும். முந்தைய வரியை விட இந்த வரி நல்லா எழுதுவேன் பாருன்னு எழுதினா, வாசகர் என்ன செய்யறது? அவர் எழுதியது அவர் "வடித்து வைத்திருக்கிற பெண் வாசக வட்ட"த்துக்காக மட்டும் என்பதும் என் சொந்த கருத்து. "இரும்பு குதிரை"ன்னு ரெண்டு அத்தியாயம் படித்திருப்பேன். வேறு (நினைவில் நில்லாத தலைப்புக்கள்) நாவல் ஒன்றிரண்டும் படித்திருக்கிறேன். இனிமே இல்லை. ஆண் பெண் இருபாலாரும் அவர் நாவல்களை விரும்பிப் படிப்பதாகச் சொன்னவர்கள் இருக்கிறார்கள். ஆனால், இன்னும் அவர் படைப்புக்களை விரும்பிப் படிக்கிறேன்னு (என்னிடம்) சொன்னவர்கள் அந்த படைப்புக்களைத் தாண்டி வேறு படித்ததில்லை...

    இது வரைக்கும் இந்த பின்னூட்டம் எழுதி விட்டு உங்கள் "பயணிகள் கவனிக்க" பதிவும் பின்னூட்டங்களும் படிச்சேன். ஜமாலன் சார் சொன்னது //பெண்கள் குறித்த ஒருவகை obsession தான் பாலாவின் எழுத்துக்கள்// தான் இந்த எழுத்தாளரின் எழுத்துக்களைப் படித்தால் முகத்திலடிக்கிற விஷயம்.

    ReplyDelete
  10. //"விஷ்ணுபுரம்" போன்ற நாவல்கள் வரலாற்று உண்மை நிலைகளை சொல்ல முற்படும் இந் நேரத்தில் இதுபோன்ற கதைகளை பொய்யென்று அறிந்து தெளிதல் வேண்டும்//

    எந்த வரலாற்று உண்மை இது?!! :(

    ReplyDelete
  11. நந்து,

    அப்படியா, இப்பல்லாம் நான் பாலா நாவல் படிக்கிறதில்லை.

    பயணமாயிருந்தாலும் நவீன நாவல்கள் எடுத்துக்கொண்டு வருவேன்னு உங்களுக்குத் தெரியுமாயிருக்கும். நீங்களும் 'இருள்வ மௌத்திகம்' படிச்சீங்க இல்லையா?

    ReplyDelete
  12. அனானிமஸ்,

    அதற்கு நான் பதில் சொல்லவேண்டுமா? இல்லை கலாநிதி சொல்லணுமா?

    ReplyDelete

Popular Posts