Wednesday, January 1 2025

In

தாரை தப்பட்டை

குப்பை கூளமே இல்லாமலாடா வைச்சிருக்கீங்க எவனாவது ஸ்லம்டாம் மில்லினியர் படம் எடுத்தா ஆரம்பிச்சிடுவானுங்க சேரியைப் படமெடுக்கிறான்னு. சேரியே இல்லாமலா வைச்சிருக்கீங்க, படமெடுத்தா என்னடா குறையும். இந்தியாமேல குத்தம் சொல்றாங்கன்னு இப்ப தமிழ்நாட்டு மேல குத்தமா? இதெல்லாம் இல்லாமலேயே இருக்கு ஊரில. ஏன் எடுக்கக்கூடாது படம், எல்லாத்தையும் பத்தி எடுக்கலாம். நான் கடவுள் எடுத்தா பிரச்சனை, தார தப்பட்டைப் பத்தி எடுத்தா பிரச்சனை. உண்மையை படமா எடுத்தா பிரச்சனையா? இந்தப்படத்தில் நான் பிரச்சனையில்லை என்று சொல்லவில்லை ஆனால் அது கலை சார்ந்த பிரச்சனை. இதைத்தாண்டியும் எடுத்திருக்கவேண்டும் என்பதைப் பற்றிய பிரச்சனை. ஆனா இதுக்கே டங்குவார அவுக்குறானுங்க. பாலா இதுக்கு மேல எடுத்துட்டாலும்.

அதான் ரஜினி முருகன், வவாசங்கம்னெல்லாம் படம் எடுக்குறானுங்களே. அதைக் கொண்டாடிட்டுப் போங்க. பாலாவைக் குத்தம் சொல்லாதீங்க. இதில மனநோயாளியாம், டிவிட்டரில் பலது பார்த்தேன். இதைப்பத்தி பேச விருப்பமில்லை.

இது டிவிட்டரில் பார்த்துக்கொண்டிருக்கும் பொழுதே எழுதியது

”அம்மணமா கூட ஆடுவேன்னு” வரு சொன்னது இளையராஜா ஒரு பிட்டுப் போட்டிருக்காரு பாரு. அதுக்காகத்தான் அந்தாள் மியூஸிக் போடக்கூடாது இந்தப்படத்துக்கு.

 ஒக்காளி சந்தோஷ் நாராயண்னுக்கு பாலா கொடுத்திருந்தா, தூக்கி நிறுத்தியிருந்துருப்பான் மனுஷன். பாலாய்ப்போன நீஎபொவ படம் போல் கொலையா கொல்றார். :(

 ஏன் பாலா குத்தவைச்சு அத்தன காலம் ஆனபின்னாடியும், ஆச மாமன் இருந்தும், கன்னியா இருக்கணும். பாலாவோட பிரச்சனைகளில் முக்கியமான ஒன்னு இது.

 Anurag Kashyap இந்தப்புள்ளியை அநாயாசமாய்க் கடக்கிறார். தமிழில் குலால் எல்லாம் செய்யவே முடியாது. அங்க தான் நிக்கிறார் அனுராக்.

 ஹீரோயினைக் குடிக்க வைத்திருக்கிறார், இன்னும் சில படத்தில் கன்னிக் கழிய வைச்சிருவார்னு நினைக்கிறேன். இளையராஜாவை ஒழிச்சா சரியாய்டும்.

 ஆனா பாலா தொடுற புள்ளியை தொடறதுக்கு கூட தமிழில் ஆள் கிடையாது. இருந்த ஒரு செல்வராகவனையும் காயடிச்சிட்டானுங்க.

 கரகாட்டக்காரன் படத்தில் ஒரிஜினல் கரகாட்ட சீன், கோவை சரளா ஒரு அறிமுகத்தில் பாவாடையைத் தூக்கிக்காட்டுற சீன் தான்.

 பாலாவுக்கு எடுக்கத்தெரியாதுன்னு இல்லை, சேது படமே மூணு ரீலு தான்னு சொன்ன உத்தமன்டா பாலா. பாவம் பார்க்கிறார். இல்லாட்டி காயடிச்சிட மாட்டீங்க??

 வரு கல்யாணத்துக்கு வரும் பேக்ரவுண்ட் சாங்க், படத்தை drag பண்ணுது. மனதில் சந்தோஷ் நாராயணன் இசை ஓடுது. யாராவது ரீமிக்ஸ் பண்ணி ரிலீஸ் பண்ணனும்.

இந்தப்படத்துக்கு எவனாவது இளையராஜாவுக்கு அவார்ட் கொடுக்கட்டும். டேய் மியூஸிக்காடா இது.

என்னுடைய பெரும் பிரச்சனை இந்தப் படத்தின் இசை. படம் ஒரு ஜானரில் போய்க்கொண்டிருக்கும் பொழுது இசை  வழுவாய் தரம் இறக்குகிறது. இந்தப்படத்தை இன்னொரு பரிமாணத்திற்கு நகர்த்தியிருக்க வேண்டிய இசை, தேம்பி நிற்கிறது. அது என்னுடைய ஒரு பிரச்சனை, ஆனால் பாலா கூட ஒப்புக்கொள்ளமாட்டார். ஆனால் அதுதான் வாஸ்தவம். வரலட்சுமி எல்லாம் வேற லெவல். இதுவரை இந்தமாதிரியான ஒரு சசிகுமாரை நான் சினிமாவில் பார்த்ததில்லை. புதுசா ஆட்களை உருவாக்குகிறார், அவர்களிடமிருந்தே. இந்த மாதிரி படமெடுப்பதற்கான “பால்ஸ்” பாலாவுக்கு மட்டும் தான் உண்டு.

Related Articles

0 comments:

Post a Comment

Popular Posts