In இளையராஜா வைரமுத்து ஜெயகாந்தன்

இளையராஜாவுக்கு ஆப்பு வைத்த வைரமுத்து

''எழுத்தாளர் ஜெயகாந்தனிடம் நீங்கள் ரசிப்பது?''

''அவரது அறச் சீற்றம்.
ஒரு நாள் காலையில் என் வீட்டுத் தொலைபேசி ஒலித்தது.
'நான் ஜெயகாந்தன் பேசுகிறேன்.’
'வணக்கம்; வைரமுத்து பேசுகிறேன்.’
'என் மகள் திருமண வரவேற்புக்கு உங்கள் மண்டபம் தேவைப்படுகிறது.’
'அது உங்கள் மண்டபம்; எடுத்துக்கொள்ளுங் கள்.’

'பொன்மணி மாளிகை’ பெயரிட்டுத் திருமண அழைப்பிதழ் அச்சிட்டவர், ஓர் இசையமைப் பாளரைச் சந்தித்து அழைப்பிதழ் தந்தாராம்.
'கட்டாயம் வருகிறேன்’ என்ற உறுதிமொழி தந்து அழைப்பிதழைப் பிரித்த இசையமைப்பாளர், திருமண மண்டபத்தின் பெயரைப் பார்த்ததும் திகைத்துப்போனாராம். 'நான் அங்கு வர முடியாதே’ என்று நெளிந்தாராம்.
விசுக்கென்று எழுந்து வாசல் வரை சென்ற ஜெயகாந்தன் விறுவிறுவென்று திரும்பிவந்து, 'நீதான் திருமணத்திற்கு வரப்போவதில்லையே! உனக்கெதற்கு அழைப்பிதழ்?’ என்று அழைப் பிதழைப் பறித்துக்கொண்டு வெளியேறிவிட்டா ராம்.

இந்தச் சம்பவத்தை ஒரு நண்பரின் வாய்மொழியாக அறிந்தேன்.
கண்ணதாசன் வரியைப் பொருத்தி ஜெயகாந் தனை நினைத்துக்கொண்டேன்.
சிங்கத்தின் கால்கள் பழுதுபட்டாலும்
சீற்றம் குறைவதுண்டோ?’ ''


--------- ஆனந்த விகடன், வைரமுத்து கேள்வி - பதி.
  

நான் அந்த இசையமைப்பாளர் இளையராஜான்னு ஊகிக்கிறேன். என்ன சொல்றீங்க.

Related Articles

14 comments:

  1. you are right. athu Ilayaraja-vey thaan.

    by the by, in the same article, Vairamuthu has mentioned one actress as his cine friend.
    Do you have any idea of who is she?

    ReplyDelete
  2. ஓசில கஞ்சா அடிச்சிட்டு, ஓசி மண்டபத்துல விழா நடத்தினாலும் கர்வத்துக்கு குறைச்சலில்லை. கேட்டால் எழுத்தாளன், கவிஞன், கர்வம், கோவம் என எதையாவது அடிச்சு விட வேண்டியது!!
    மானங்கெட்டு இதைப் பகிர்ந்த கவிஞர் "பொன் மாலைப் பொழுதால்" தான் பொன்மணி மாளிகை சாத்தியமானது என்பதை எழுதும் முன் சற்றே நினைத்துப் பார்த்திருக்கலாம். சிங்கம் மட்டுமல்ல, வேறு எந்த விலங்காயினும் அடிபட்டால் வலியில் கத்தத்தான் செய்யும். அது சீற்றமாகாது...

    ReplyDelete
  3. சரி, உங்கள் கருத்தென்ன? இப்படி எவராகினும் இளைய ராஜா சொன்னதைப் போல சொன்னால் அதை எப்படி அணுகுவீர்கள்?

    ReplyDelete
  4. பெரிய ஆளுகளும் ரொம்ப தப்பு பண்ணுவாங்க போலும். மனசே நல்லா இருக்காதோ?
    நான் வைரமுத்துவை சொல்றேன். இதை வெளியே சொல்லி அதில் ஒரு பெருமையா அவருக்கு!

    shame .. shame .. puppy shame!!

    ReplyDelete
  5. ச்சே சே.. அது அனிருத் அல்லது ஹாரிஸ் ஜெயராஜா இருக்கும் :)

    ReplyDelete
  6. கட் அன்ட் பேஸ்ட் இருக்கட்டும்.

    ஜெயகாந்தன் செய்ததைப்பற்றி உங்கள் கருத்தென்ன?

    ReplyDelete
  7. அனானிமஸ்,

    நான் அது ஸ்ரீவித்யாவாக இருக்குமென்று நினைக்கிறேன்.

    மலரின் நினைவுகள்,

    இளையராஜா வைரமுத்து இல்லாமலோ வைரமுத்து இளையராஜா இல்லாமலோ இன்றிருக்கும் நிலையை அடைந்திருப்பார்கள் என்றே நினைக்கிறேன்.

    நீங்கள் ஜெயகாந்தனின் எழுத்து எதைப் படித்திருக்கிறீர்கள்?

    ReplyDelete
  8. குலசேகரன்,

    என் கருத்து, இளையராஜா பற்றிய இக்கருத்துக்கள் பதிவு செய்யப்படுவது முக்கியமென்கிறேன். இசையைத் தவிர்த்த அவரது ஆளுமை வெளிவரவேண்டும்.

    எல்லோருக்குள்ளும் பொறாமை, கோபம், குரோதம் எல்லாம் இருக்கும்.

    இளையராஜா இன்றடைந்து வரும் கடவுள் போன்ற கருத்தாக்கத்திற்கு இது முக்கியம் என்று படுகிறது எனக்கு.

    ReplyDelete
  9. தருமி,

    எல்லோருக்கும் இருப்பது தான்.

    இதன் புள்ளி இது. இளையராஜா ஜெயகாந்தனை ஆராதிக்கிறவர், அதையும் மீறி அவர் மகள் திருமணத்திற்கு செல்ல முடியாத புள்ளி தான் எனக்கு முக்கியம்.

    என்னைத் திருத்திக்கொள்ள இதை உபயோகிக்கணும்.

    அனானி,

    நல்லவேளை தமிழ்நாட்டோட நிறுத்தினீங்களே!

    ReplyDelete
  10. ஜெயகாந்தனும் சரி இளைய ராஜாவும் சரி தேவையில்லாத வீம்பு பிடித்தவர்கள். பொன்மணி மருத்துவமனை தான் அருகில் உள்ளது; அங்கு சென்றால் தான் பிழைக்கமுடியும் என்றால் ராஜா மட்டுமில்ல மந்திரி சேவகன் எல்லாம் போவார்கள்; அதே மாதிரி தான் ஜெயகந்தனும்...இளையாராஜா கிட்ட தளி போற காரியம் ஆகனும் என்றால்...முடிஞ்சா வாங்க கல்யாந்திர்க்கு என்றிருப்பார்.

    இந்த வீம்பு கர்வம் ஆணவம் எல்லாம் ஒரு அளவிற்குத் தான்! தனக்கு வந்தா ...

    ReplyDelete
  11. நண்பர்களுக்குள் விட்டுக் கொடுத்து போவதும் புரிந்துக் கொள்வதும் நன்று.

    சிங்கம் அசிங்கம் என்பதெல்லாம் சும்மா

    ReplyDelete
  12. Loosu jeyakanthan....who the hell he thinks he is? NO salutation like 'vanakkam' while talking over the phone?
    or could have said vanakkam at least after saying 'naan jeyakantha pesukiren'. does not have manners. what an idiot.

    'grabbing the invitation back' is very childish & silly. you can't expect everyone to come. your job is to invite. that's it. coming or not coming is at guests' disposal. guests are at the liberty to make decision (to go / not to go) depending on their situation.

    This is NOT 'vidyagarvam', it is MANDAGARVAM or simply mental case. grow up jeyakanthan.

    ReplyDelete
  13. I am not bothered abt the 2 characters involved in the episode: the musician and the writer. Am concerned abt ur way of looking at it. Although it comes out in the title u gave, yet I wanted to ascertain it. Hence my qn to u repeatedly. U have expressed it.

    There r kinds of values. One is social values. Inviting guests for marriage of ur children is a time honored custom and an important social value. Marriage is a social function. The giver of invitations shd b humble and polite. He shd feel honored if the guest accepts it. But it so happens that sometimes other person may not accept it for his own reasons with which the giver has no business to interfere or feel emotive. Rather, he shd accept the rejection gracefully and return. U have disregarded these sentiments and used this episode to know the depth of depravity of a person and flaunted it in a indecent title. Uncalled for and out of context.

    U wd rather have seen it as a serious case of fall in standards of social values committed by no less a person than the man who is a Tamil writer.

    No one, let alone a writer who comes closely to culture construct of a society, enjoys the freedome to travesty social values.

    ReplyDelete
  14. //நீங்கள் ஜெயகாந்தனின் எழுத்து எதைப் படித்திருக்கிறீர்கள்?//

    பாரிசுக்குப் போ, ஓ அமெரிக்கா, ஒரு மனிதனும் சில எருமை மாடுகளும், பாவம் இவள் ஓர் பாப்பாத்தி, சுந்தர காண்டம் போன்ற ஜெயகாந்தனின் படைப்புகளை பள்ளிக் காலங்களில் இருந்தே எனக்கு பரிச்சயம்.
    சேலம் மத்திய நூலகத்தில் நான் எட்டாம் வகுப்பு படிக்கும் போதே உறுப்பினர் அட்டை வாங்கியவன்.
    என்னைப் பொறுத்தவரை கருணாநிதியின் எழுத்துக்களை எப்படி ஊடகங்கள் ஊதிப் பெரிது படுத்துகின்றனவோ அதைப் போல் தான் ஜெயகாந்தனின் விசுவாசிகளும் செய்கிறார்கள். ஆனால் வாசித்தால் தான் தெரியும் அவை தண்டனை என.

    ReplyDelete

Popular Posts