வேட்ட வேந்தனும் வெஞ்சினத் தினனே;
கடவன கழிப்புஇவள் தந்தையும் செய்யான்;
ஒளிறுமுகத்து ஏந்திய வீங்குதொடி மருப்பின்
களிறும் கடிமரம் சேரா; சேர்ந்த
ஒளிறுவேல் மறவரும் வாய்மூழ்த் தனரே;
இயவரும் அறியாப் பல்லியம் கறங்க,
அன்னோ, பெரும்பே துற்றன்று, இவ் வருங்கடி மூதூர்;
அறன்இலன் மன்ற தானே-விறன்மலை
வேங்கை வெற்பின் விரிந்த கோங்கின்
முகைவனப்பு ஏந்திய முற்றா இளமுலைத்
தகைவளர்த்து எடுத்த நகையடு,
பகைவளர்த்து இருந்த இப் பண்புஇல் தாயே.
336. பண்பில் தாயே!
பாடியவர்: பரணர்
திணை: காஞ்சி துறை: பாற் பாற் காஞ்சி
இதுதான் நான் குறிப்பிட்ட புறநானூற்றுப் பாடல் - இதற்கு சுஜாதா கொடுத்த நவீன கவிதை கீழே(சுஜாதா யாரு புறநானூற்றுக்கு உரை எழுத - அவர் எழுதியதில் அங்கே தப்பு இங்கே தப்பு - என்கிற புலவர்களுக்கு பதில் சொல்ல நான் கிடையாது ஆள் நான் வரலை அந்த விளையாட்டுக்கு.)
பெண் கேட்ட அரசன் கோபக்காரன்
பெண்ணின் தந்தையோ பொறுப்பற்றவன்
யானைகள் கடிமரத்தில் அமையாமல் சீறுகின்றன
வீரர்கள் கோபத்தில் இருக்கிறார்கள்
ஊரே கலக்கத்தில் இருக்கிறது
வேங்கைமலைக் கோங்கின் அரும்பு போன்ற
சிறிய முலைகளைக் கொண்ட
இந்தப் பெண்ணால்
பகை வளர்கிறது
தாய்க்குத் தெரியவில்லையே!
அகநானூறுக்கான அறிமுகம் போல் இல்லாமல் புறநானூற்றுக்கான அறிமுகம் இப்படி செய்யப்படுவதில் எனக்கும் மனம் கஷ்டமாகத்தான் இருக்கிறது. எந்த விஷயத்திலும் நம்ம டச் இருக்கணும் இல்லையா? இளையராஜா தேவாரத்துக்கு இசையமைச்சப்ப, மெட்டுக்கு தகுந்த பாட்டை தேர்ந்தெடுத்தார் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அதைப் போல் நான் இந்தப் பாடலைத் தேர்ந்தெடுத்திருக்கிறேன் என்று வேண்டுமானால் வைத்துக்கொள்ளலாம். நாளைக்கு ஒரு நாள் - "அக்கா! அக்கா! என்றாய் அக்கா வந்து கொடுக்க சுக்கா மிளகா சுதந்திரம்" என்று சொன்ன ஆணாதிக்கவாதி பாரதிதாசன் புகழளவிற்கு இல்லாவிட்டாலும் நானும் கொஞ்சம் ஈயம் அடித்தேன் என்று தமிழ்கூறும் நல்லுலகம் சொல்லவேண்டுமல்லவா?
அழகான பெண்கள் ஆபத்தானவர்கள்
பூனைக்குட்டி
Monday, January 18, 2016
பூனைக்குட்டி
Primarily a java programmer, an athiest and a film geek, who loves reading, writing and photography.
Related Articles
Subscribe to:
Post Comments
(
Atom
)
Popular Posts
-
வாங்க என்ன வெளியிலேயே நின்னுட்டீங்க, உள்ள வாங்க என்னடா இந்த வீடு கூட அமைதியா இருக்கேன்னு பார்க்கிறீங்களா? ம்ஹும் என்ன செய்றது அப்படியாய்...
-
இங்க இப்படி ஒரு ஐட்டம் இருக்கிறதென்பதே மறந்து போயிருந்தது. காந்தாரா படமல்ல பொன்னியின் செல்வன் படம் தான் என்னை ப்ளாக் பக்கம் திருப்பியது, ஆனா...
-
On a serene Saturday evening, I slowly emerged from the embrace of slumber, rousing from my afternoon repose. Gradually, my senses rekindled...
சொ. செ. சூ வா (உள்ளும் புறமும் கேட்கிறேன்:-))))))))))))))) (ஸ்மைலி!)
ReplyDelete//இதுதான் நான் குறிப்பிட்ட...
இது என்னா கான்டெக்ஸ்ட்ல?
ஆமா, விளக்கெண்ணெய் உங்க ஊர்ல ஸ்டாக் இல்லையாம், நீங்க ஒரு ஆளா வாங்கித் தீந்துடுச்சாம்?
நான் பித்தளை என்று தமிள் கூறும் நல்லுலகம் சொல்லி விடக் கூடாதே என்று...
பதிவு சூப்பர்.
ReplyDeleteஅப்புறமா படிச்சிட்டு வந்து பின்னூட்டம் போடறேன்
மேலே அழகான பெண்கள் ஆபத்தானவர்கள் - என்று புறநானூற்றில் நான் குறிப்பிட்ட பாடல் என்கிற கான்டெக்ஸ்ட் வரும் கெக்கேபிக்குணி.
ReplyDeleteகிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்க்ய!
ReplyDeleteஅழகான பெண்கள் ஆபத்தானவர்கள்தான் ஒப்புக்கொள்கிறேன்...
ReplyDeleteஇதில் ஆபத்து என்பது பல வகைப்படும்,பல பொருள்படும்...
மற்றப்படி இந்த ஜல்லிக்கு நான் வரலை...;)
மங்களூர் சிவா said...
ReplyDelete\\
பதிவு சூப்பர்.
அப்புறமா படிச்சிட்டு வந்து பின்னூட்டம் போடறேன்
\\
ஏன் சிவா மாமா எஸ்ஸாகிட்ட கருத்து சொல்லு பரவால்ல...:)