In

எவன்டா அது ரங்கராஜ் பாண்டே

அமெரிக்கா வந்ததும் இழந்ததில் முக்கியமானது தமிழ் நாட்டு அரசியல் நிகழ்வுகள். தட்ஸ்தமிழும் கூகுள் ப்ளஸுமே எனக்கு தமிழ்நாட்டு அரசியலுக்கான சோர்ஸ்கள்.

அங்குமிங்கும் எப்பொழுதாவது இந்தப்பெயர் அடிபட்டு வந்தது தான் என்றாலும், பாண்டே என்று சர்நேம் இருப்பவன் என்ன பெரிதாய் தமிழகத்தைப் பற்றித் தெரிந்துவைத்திருக்கப்போகிறான். தந்தி டிவியெல்லாம் ஒரு டிவியா என்ற கருத்தில் முக்கியத்துவம் அளிக்கவில்லை. வீட்டில் யப்டீவி வழியாய் தந்திடிவியும் உண்டும்.

எவன்டா அது ரங்கராஜ் பாண்டே என்று கேட்க வைத்தது, திக தலைவர் கி. வீரமணி சார்ந்த பேட்டியின் பொழுதுதான். இப்பொழுதுகளில் இது அத்தனை சரியா என்று நினைவில் இல்லை, அண்ணன் சீமான் பேட்டியாகக்கூட இருக்கமுடியும். நான் முதன் முதலில் பான்டேவைப் பார்த்தது.


 


 
இன்னமும் கூட அவருடைய எல்லா பேட்டிகளையும் பார்க்கவில்லை என்றாலும், சுபவீ உடனான அவருடைய பேட்டி எனக்குப் பிடித்திருந்தது, அதே போல் சீமானுடனான பேட்டியும். பொதுவாய் நெஞ்சை நக்கும் பேட்டிகளுக்கு மத்தியில் இப்படியான கேள்விகளைக் கேட்கக்கூடிய நபராய் இவர் உருவாகியிருக்கிறார் என்பதும் கூட பெரிய விஷயமே. இதில் அவருடைய வரலாறு சொன்னார், தினமலர்னு அப்ப சொன்னாரா நினைவில் இல்லை, ஆனால் நான் இவர் தினமலரில் தான் வேலை பார்க்கத் தொடங்கியிருந்தார் என்று படித்த ஞாபகம். சுகாவின் அப்பா நெல்லை கண்ணன் சொல்லியிருந்த நினைவு, தன்னிடம் பேசி எப்படியும் ஒரு பத்தி வாங்கிவிடுவார் என.


ஸ்டாலின் உடன் ஒரு பேட்டி பார்த்தேன். மிகவும் மொக்கையாக உரையாடுபவராக இருக்கிறார் ஸ்டாலின், அண்ணன் சீமானுடைய பேட்டிகளைப் பார்த்தால் தெரியும் தன் கருத்துக்களைத் தெளிவாக நல்ல தமிழில் வைக்கும் ஆளுமை படைத்தவராகயிருக்கிறார் சீமான். ஸ்டாலினுக்கு இன்னும் இது கைகூடவில்லை, கைகூடுமென்ற நம்பிக்கையுமில்லை. பான்டேவிற்கு அழகு தமிழ் கைகூடியிருக்கிறது. ஸ்டாலினிடம் தமிழ் இல்லையே தவிர நேர்மை இருப்பதாகவே இன்னமும் படுகிறது :) விட்ட குறை தொட்ட குறை என்று நினைக்கிறேன்.

இந்துத்வ சாயல் கொண்ட கேள்விகளையே கேட்கிறார் என்றாலும், கேட்கவேண்டிய கேள்விகளை தவறாமல் கேட்கிறார் என்றே நினைக்கிறேன்(நான் பார்த்த இன்டர்வியூக்கள் குறைவு).  இன்றைய தமிழ் தொலைக்காட்சியில் சமீபத்தில் நான் கண்டறிந்த(ஆமாம் காந்தி செத்தே போய்விட்டார்) ஒரு நல்ல ஆளுமை பான்டேவினுடையது, கஷ்டம் என்றாலும் அவர் இந்துத்வ கனெக்‌ஷன்களை விட்டொழித்தால் இன்னமும் உயரிய இடத்திற்குச் சென்றடவைவார். சன்டிவி கால ரஃபி பெர்னார்ட் பார்த்தது போல் இருந்தது, தன் குரு இவர்கள் அல்ல என்று பான்டே தெளிவாகவே சொன்னாலும் நம்பமுடியவில்லை தான்.

உங்களுப்பிடித்த பான்டேவின் சிறந்த பேட்டிகளை எனக்கு பின்னூட்டத்தில் சொல்லுங்களேன். அப்படியே பான்டே தவறிழைத்ததாக கருதும் பேட்டிகளையும்.

Related Articles

0 comments:

Post a Comment

Popular Posts