In Only ஜல்லிஸ் அயோனி சீதா சுஜாதா புத்தர் பைத்தியக்காரன் மையம் வளர்மதி

அயோனி

திடீரென்று ஒருநாள் நண்பன் ஒருத்தன் சீதையை அயோனின்னு சொல்வாங்களாமே அப்படின்னா என்ன அர்த்தம் என்று கேட்டு என்னிடம் வந்து நின்றான். எனக்கு முதலில் ஆச்சர்யம் எப்படி இவனுக்கு இந்தக் கதை தெரிந்தது என்று, அடுத்து அவன் ஏன் இதைப்பற்றி கேட்கிறான் என்ற சந்தேகம். ஏற்கனவே நண்பன் ஒரு மாதிரியானவன் என்பதால் சும்மா வாயைக் கிண்டினேன், ஏன் இதைப் பத்தி கேட்கிறாய் என்று.



யோனின்னா என்ன அர்த்தம்னு எனக்குத் தெரியும், உன் ப்ளாக்கையெல்லாம் படிச்சிட்டு தமிழ்ல ஒரு வார்த்தைக்கு முன்னாடி அ- போட்டா அது அந்த வார்த்தையோட எதிர்ப்பதம்னும் தெரியும்.(புனைவு - அபுனைவு உதாரணம் சொன்னான்). அப்படின்னா சீதை யோனியில்லாதவள்னு அர்த்தமான்னு கேட்க, எனக்கு சிரிப்பு வந்துவிட்டது.

நான் சொன்னேன், ஒரு விஷயத்தை எக்ஸாக்ட்டா எப்படி தப்பா சொல்றதுன்னு உன்கிட்டத்தான் கேட்கணும் போலிருக்கு. அயோனின்னு சீதையைச் சொல்வாங்கங்கிறது சரிதான். ஆனால் அதற்கு அர்த்தம் சீதை யோனியில்லாதவள் என்பதல்ல, சீதை யோனியின் வழியாய் பிறக்காதவள் என்பதுதான். ஏன் என்றால் சீதை அம்மா - அப்பா மூலமாய் கருவுற்று பிறந்தவள் இல்லை என்று சொன்னேன். என்னத்தையோ நினைத்து வந்து என்னமோ கிடைத்த விரக்தியில் நகர்ந்தான்.

நான் சிறு வயதில் இருந்தே ஏகப்பட்ட கேள்விகள் கேட்பவனாகவே இருந்து வந்திருக்கிறேன், பள்ளிக்கூடங்களிலும் சரி கல்லூரிகளிலும் சரி எனக்கு பாடம் நடத்துவது அத்தனை சுலபமானது கிடையாது. தற்சமயங்களில் வேலை செய்யும் நிறுவனத்தில் கூட ‘செஷன்’ என்று கூட்டிச்சென்றாலோ ‘டிரைய்னிங்’ கொடுத்தாலோ அதிகம் கேள்விகள் கேட்பவனாகயிருந்திருக்கிறேன். கேள்விகள் ஒரு வியாதி போல் என்னைத் தொடர்ந்து வந்துகொண்டேயிருந்திருக்கிறது. சில சமயங்களில் வெறுமனே கேட்கவேண்டுமென்பதற்காகவே கேட்கப்பட்ட கேள்விகளை கேட்காமலேயே இருந்திருக்கலாம் என்று நினைக்கும் அளவிற்கு மோசமான அனுபவங்கள் நான் கேள்விகள் கேட்டதால் நடந்திருக்கிறது.

புத்தர் நான்கு வகைகளாகக் கேள்விகளைப் பிரிக்கலாம் என்கிறார், நேரடியாக பதில் சொல்வது போல் கேட்கப்படும் கேள்விகள், விளக்கத்துடன் பதில் சொல்வது போல் கேட்கப்படும் கேள்விகள், எதிர்கேள்வி கேட்பதன் மூலம் பதில் சொல்ல கேள்விகள், பதில் சொல்லக் கூடாத கேள்விகள் என்று. உண்மைதான் கேள்விகளுக்கும் நான்கு என்ற எண்ணுக்கும் தொடர்பு உண்டு போலிருக்கிறது, எது சரி எது தவறு என்பதைப் பற்றிய உணர்வின் மேல் நியீட்ஷே எழுப்பும் கேள்விகள் கூட நான்கு தான்.

You run ahead? Are you doing it as a shepherd? Or as an exception? A third case would be the fugitive.

Are you genuine? Or merely an actor? A representative? Or that which is represented? In the end, perhaps, you are merely a copy of an actor.

Are you one who looks on? Or one who lends a hand? Or one who looks away and walks off.

Do you want to walk along? Or walk ahead? Or walk by yourself? One must know what one wants and that one wants.


Questions of Conscienceவில் நியீட்ஷே கொடுக்கும் நான்கு கேள்விகளுக்குமான பதில் ஒவ்வொரு தனிமனிதனும் தனக்குத் தானே கேட்டுக் கொண்டு விடையளிக்க வேண்டிய அளவிற்கு முக்கியமானவை. நியீட்ஷேவைப் பற்றி நினைத்தால் சட்டென்று நினைவுக்கு வருவது ’வளர்மதி’ தான்.

 ஒருமுறை பைத்தியக்காரன், வளர்மதி ஒரு நாள் முழுவதும் சாப்பிடாமல் இருந்ததையும் அதற்கு காரணம் நியீட்ஷே தான் என்று சொன்னதையும் நான் நிச்சயம் விளையாட்டாய் எடுத்துக் கொள்ளவில்லை தான். ‘ஒரு கேள்வி’ என்னை ஆட்டிப் படைத்திருக்கிறது, அது எந்தக் கேள்வி என்பது அல்ல இங்கே பிரச்சனை கேள்வியால் மனிதனை ஆட்டிப் படைக்க முடியாமா என்பது, அப்படியென்றால் முடியுமென்பது தான் பதிலாய் இருக்க முடியும்.

வளர்மதி, நியீட்ஷேவைப் படித்துவிட்டு நியீட்ஷே கேட்ட ஒரு கேள்வியால் அப்படி பாதிக்கப்பட்டதால் சாப்பிடாமல் கொள்ளாமல் அதைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்ததாக சொன்ன நினைவு உண்டு. எந்தக் கேள்வியென்று அத்தனை சுலபத்தில் நினைவிற்கு வரவில்லை என்றாலும் ‘மையமாக’ இப்படி இருந்தது. இதே உடல், இதே அறிவு, இதே நண்பர்கள், இதே பகைவர்கள், இதே வாழ்க்கை உங்களுக்கு இன்னொரு முறை வாய்க்கும் என்றால் வாழத் தயாரா என்பது தான் அந்தக் கேள்வி. வெண்ணைவெட்டியாய் இதற்கான பதிலை எதையும் யோசிக்காமல் ஆம் என்று சொல்ல வேண்டாம். இந்தக் கேள்வி எழுப்பும் அதிர்வு நிச்சயம் இல்லை என்று சொல்லவைக்கும். யாருக்கும் பதில் சொல்லவேண்டும் என்று இல்லாமல் உங்களுக்குச் சொல்லிக் கொள்ள முயலுங்கள். என் பதில் இல்லை என்பதை நான் அப்பொழுதே வளர்மதியிடம் சொன்னேன்.

அப்படியென்றால் நாம் வாழ்ந்து கொண்டிருப்பது என்ன?

‘மையம்’ என்றதும் சுஜாதா மையமாக வந்து என் கியூப்பிக்கில் மேல் கால் மேல் கால்போட்டு உட்கார்ந்து கொண்டு வளைந்த முதுகுடன் சிரிக்கிறார். நான் விரும்பிப் படித்த கேள்வி பதில்கள் சுஜாதாவினுடையவை, அந்துமணியில் இருந்து தான் இது தொடங்கியது. பின்னர் மதன், அரசு என்று பலவாறு தொடர்ந்து இன்றும் இணையப்பக்கங்களில் எழுதும் லக்கிலுக் வரை தொடர்ச்சியாய் கேள்வி பதில் படிக்கிறேன். ஜெயகாந்தன் பதில்கள் மட்டும் சட்டென்று ஒரு எரிச்சலை உண்டாக்கும் இவரிடம் போய் கேள்வி கேட்கிறாங்க பாருங்க என்று, ஒரு வேளை அவர் எதிர்பார்ப்பது கூட அதுவாகத்தான் இருக்கும்.

கேள்வி என்றதும் நினைவிற்கு வரும் இன்னொரு நபர் ’தெரிதா’. அவர் எழுப்பும் ‘must not structure have a genesis, and must not the origin, the point of genesis, be already structured, in order to be the genesis of something?’ இந்தக் கேள்வி உள்ளிட்டு அவருடைய எழுத்து கேள்விகளால் நிரம்பியதாக இருக்கிறது.

Interviewக்களால் நிரப்பப்பட்ட சாஃப்ட்வேர் வாழ்க்கையில் நான் கேள்விக்கான பதில் சொல்வதை ஒரு விளையாட்டாக விளையாடத் தொடங்கியிருந்தேன் ஒரு சமயத்தில், interviewer உடன் சதுரங்கம் விளையாடும் தந்திரத்துடனும் லாவகத்துடனும் கேள்வி பதில்கள் தங்கள் அடுத்த நகர்வை முந்தைய நகர்வை வைத்தே ஆடும் விளையாட்டு போல், என் பதிலின் மூலம் எனக்கான கேள்விகளை அவர்கள் வாயில் புகுத்தி ஆடும் இந்த விளையாட்டு எனக்கு தொடர்ச்சியாக வெற்றியையே பெற்றுத்தந்தது.

கேள்விகள் தொடர்ச்சியாக இருந்து கொண்டு தான் இருக்கின்றன, எதைப் பற்றியாவதும். தொடர்ச்சியாக கேள்வியாகவே இருந்த கேள்விகளுக்கான பதில் கிடைக்கும் தருணம் விளக்கிவிடமுடியாததாய் இருக்கிறது. பதிவுலகில் முகமூடியில் உலாவரும் இன்னொரு ‘க்ரூப்’ இட்லிவடை தன் முகமூடியை கழட்டி எறிய திட்டமிட்டிருப்பதாகத் தெரிந்ததும் அந்த உணர்வுதான் வந்தது. முகமூடிகளை அலட்சியப்படுத்திவிட்டு நகர்ந்துவிடுவதுதான் இணையத்தில் மனநிம்மதியுடன் வாழ வழி என்று தெரிந்தாலும், எலி எப்பொழுதும் புலியாவதில்லை என்று தீர்ப்பு வைத்த திருமுகத்தைப் பார்க்க ஆசையாகத்தான் இருக்கிறது. என்னவென்றாலும் இட்லிவடை கேள்வி பதில் இல்லாமல் தான் ‘சுழற்றிக்’ கொண்டு நிற்கும் என்று தெரிவதால், Ignorance is a bliss.

Related Articles

15 comments:

  1. //சீதை அம்மா - அப்பா மூலமாய் கருவுற்று பிறந்தவள் இல்லை என்று சொன்னேன்//
    இதைப்பற்றி கேள்வி பட்டதில்லையே. கொஞ்சம் விளக்கமாக சொல்ல முடியுமா?

    ReplyDelete
    Replies
    1. சீதை பூமியின் மகள், ஜனக மகாராஜா ஏறு இலுப்பை செய்யும் பொழுது அகப்பட்ட பெட்டியில் இருந்தால்

      Delete
  2. //இதே உடல், இதே அறிவு, இதே நண்பர்கள், இதே பகைவர்கள், இதே வாழ்க்கை உங்களுக்கு இன்னொரு முறை வாய்க்கும் என்றால் வாழத் தயாரா//

    உடனடியாக ஆம் என்றுதான் தோண்றியது. வெண்னைவெட்டியாக விருப்பமில்லாததால் அரை மணி நேரம் யோசித்தேன்.

    கண்டிப்பாக ஆம், தயார்

    இப்படி நான் சொல்வது கூட உங்களின் கடைசி வாக்கியம் எனக்கு வாய்க்கபட்டதனாலாக இருக்கலாம்.

    //Ignorance is a bliss.//

    வெற்று வாதத்திற்கு உங்களிடம் இப்படி சொல்கிறேன் என்று நம்பமாட்டீர்கள் என நம்புகிறேன்.

    :))

    ReplyDelete
  3. அட இந்த இட்லிவடை மேட்டர் இன்னும் முடியலையா தாசு? உங்கூருக்காரர்தானே அவர், ஏன் தேசிகனைக் கேட்டாக் கூடக் காமிப்பாரே!

    ReplyDelete
  4. மோகன். சீதைக்கு அயோனி என்று பெயர் இல்லை. அயோனிஜா/அயோனிஜை என்று பெயர். பொருள் என்னவோ நீங்கள் சொன்னது தான். அவளுக்குப் பெயர் வெறும் அயோனி என்று இருந்திருந்தால் உங்கள் நண்பர் கேட்ட/சொன்ன பொருள் தான் சரி. அந்தப் பெயரைக் கேட்டு விட்டு அவர் நினைத்துக் கொண்டு வந்ததில் தவறில்லை. :-)

    ReplyDelete
  5. சுல்தான்,

    இராமாயணக் ‘கதையின்’ படி, சீதை யோனி வழியாய் பிறந்தவள் இல்லை. பூமியைப் பிளந்து கொண்டு தோன்றியவள்.

    ReplyDelete
  6. நந்து,

    அந்தக் கேள்விக்கான பதில் எனக்கு நீங்கள் சொல்ல வேண்டியதில்லை என்பதைத் தவிர்த்து இப்போதைக்கு எதுவும் சொல்வதற்கில்லை.

    புரிந்து கொள்வீர்கள் என்றே எண்ணுகிறேன்.

    ReplyDelete
  7. காசி,

    இட்லிவடை பதிவுகள், மிக மோசமான அரசியலை வைத்து விளையாடப்படும் ஒரு பதிவு. எனக்கு அதை யார் எழுதிகிறார்கள் என்று அறிந்து கொள்ளும் அரிப்பு, நான் குறிப்பிட்ட அந்தப் பதிவில் தொடங்கி அந்தப் பதிவிலேயே முடிகிறது.

    இப்ப கொஞ்ச சொறிஞ்சு வேற கொண்டாயிற்று இன்னும் கொஞ்ச நாளுக்கு தாங்கும்.

    பாஸ்டன் பாலாவைத் தவிர்த்து வேறு எவருடனும் நான் இதைப் பற்றி பேசியதில்லை.(யார் இட்லிவடை என்று! அவரிடம் கேட்டது நீங்கள் தானா இட்லிவடை என்று.)

    ReplyDelete
  8. குமரன்,

    நான் இதை கதைகளைத் தவிர்த்தும் சில இடங்களில் படித்திருக்கிறேன். எஸ்.ரா ‘அயோனி’ பற்றி எழுதியிருக்கிறார்.

    அயோனிஜா/ஜை என்பது சமஸ்கிருத பெயர்ப்பாக இருக்கலாம். அதை ‘அயோனி’ என்றே தமிழில் எழுதுவார்களாயிருக்கும்.

    அதுசரி உங்களுக்கு ‘மய்யம்’த்தின் அரசியல் தெரியுமா?

    ReplyDelete
  9. //அதுசரி உங்களுக்கு ‘மய்யம்’த்தின் அரசியல் தெரியுமா?//

    தெரியாது. அப்படியென்றால் என்ன?

    ReplyDelete
  10. மோஹன்,
    //அயோனிஜா/ஜை என்பது சமஸ்கிருத பெயர்ப்பாக இருக்கலாம். அதை ‘அயோனி’ என்றே தமிழில் எழுதுவார்களாயிருக்கும்.//

    ஹி.. ஹி அது என்ன ஜை மட்டும் சமஸ்கிருதம்... யோனி என்ற சொல்லே சமஸ்கிருதம் தானே.

    ஜன்யம் என்றால் பிறப்பது, அனுஜன்யன் என்றால் உடன்பிறப்பு திமூகவினர் எல்லாம் அனுஜன்யன்களே! அனுஜன்யன் என்று லக்ஸ்மணனை சொல்வார்கள்.
    பெண்பாலுக்கு அனுஜா , அதே போல அயோனிஜா என்பதே சரி தமிழில் ஜா மட்டும் வட மொழி என்ரு யாரோ புண்ணியவான் தூக்கி இருக்கலாம். ஜன்யத்தை தமிழில் தன்யம் என்று சொல்லக்கேட்டிருக்குறேன் ராகங்களில் தன்ய ராகம் என அடுத்த நிலை ராகத்தை சொல்வார்கள்.

    சீதா என்பதும் காரணப்பெயரே, சீதா = furrow ஏர் உழும் போது ஏற்படும் பள்ளம். ஜனகன் தங்ககலப்பைக்கொண்டு ஏர் உழும்போது பள்ளத்தில் இருந்து பிறந்த பெண் குழந்தை. எனவே தான் அயோனிஜை!

    அப்புறம் என்ன மய்யம் அரசியல் ...புரியலை..கமல் நடத்தும் பத்திரிக்கை மய்யம் அதில் ஏதேனும் போகிறதா?

    ReplyDelete
  11. மோஹன்,


    //ஒரு சமயத்தில், interviewer உடன் சதுரங்கம் விளையாடும் தந்திரத்துடனும் லாவகத்துடனும் கேள்வி பதில்கள் தங்கள் அடுத்த நகர்வை முந்தைய நகர்வை வைத்தே ஆடும் விளையாட்டு போல்//

    இப்போது தான் இந்த சதுரங்கம் குறித்தான பத்தியைக்கவனித்தேன், நீங்கள் சொல்வது போல தொழில் முறை சதுரங்கம் ஆடுபவர்கள் ஆட மாட்டார்கள்.

    அடுத்த நகர்வை முந்தைய நகர்வினை ஒட்டி அமைத்தால் தோல்வி தான் கிட்டும். அதனாலே வெள்ளை காய் வைத்து ஆடுபவர்களுக்கு கொஞ்சம் சாதகம் இருக்கும், காருப்பு ஆடுபவர்கள் வெள்ளை நகர்த்தலுக்கு ஏற்ப ஆட நநேரிடும் எனவே பெரும்பாலும் தோல்வியில் முடியும்.

    இதனை தவிர்க்க கருப்பு கலர் வைத்திருப்பவர்கள் புதிய ஓபனிங் கண்டுப்பிடித்து வெள்ளைக்கு அதிர்ச்சி கொடுப்பார்கள், ஏற்கனவே அப்படி பல இருக்கு.

    உதாரணம் :ruy lopez vs scilian dragon type game.

    அதே போல தன் நகர்த்தல்...பல சமயங்களில் வெள்ளை ஒரு நகர்த்தல் செய்கிறது என்றால் அதன் லிங் அடுத்து 10 நகர்த்தலுக்கு பின்னரே வெளிப்படும். எனவே தான் சதுரங்கம் எப்போதும் மூளைக்கு வேலை வைத்துக்கொண்டே இருக்கும்.

    ReplyDelete
  12. அயோனி எஸ்.ரா உபயோகித்திருந்த ஒரு வார்த்தை. நான் உபயோகித்தேன் அதையே!

    நான் ஜையை மட்டும் சமஸ்கிருதம் என்று சொல்லவில்லை, அயோனிஜை அயோனிஜா வை சமஸ்கிருதம் என்று சொன்னேன். அதுவும் இருக்குமோ என்று.

    அதிலும் மய்யம்-திற்கும், மையத்திற்கும் மான வித்தியாசத்தை கூறினேன், தமிழ் ஆர்வலர்கள், மையத்தை மய்யம் என்று எழுதுவதை கவனிக்கலாம். அது போல் அயோனிஜையை அயோனி என்று மட்டும் கூட எழுதியிருக்கலாம் என்று சொன்னேன்.

    சதுரங்கம் பற்றி நீங்கள் சொல்வது புரிந்தது, ஆனால் நான் interviewவை ஒரு விளையாட்டைப் போல் விளையாடவதையும் அவர்களை என் trapற்குள் கொண்டுவருவதையும் பற்றிப் பேசவே உபயோகித்தேன்.

    I lost my virginity to Mohandoss என்று ஒரு கதை எழுதியிருக்கேன் படிச்சிட்டு எப்படியிருக்குன்னு சொல்லுங்க.

    ReplyDelete
  13. மோஹன்,

    //அதிலும் மய்யம்-திற்கும், மையத்திற்கும் மான வித்தியாசத்தை கூறினேன், தமிழ் ஆர்வலர்கள், மையத்தை மய்யம் என்று எழுதுவதை கவனிக்கலாம். அது போல் அயோனிஜையை அயோனி என்று மட்டும் கூட எழுதியிருக்கலாம் என்று சொன்னேன்.//

    இதற்கு எதுக்கு மய்யம் வரப்போவானேன், வவ்வால் /வெளவால் தெரியுமா என்று குமரரரிடம் கேட்டிருந்தால் பட்டென்று போட்டு உடைத்திருப்பாரே!

    ஏன் எனில் முன்னர் ஏன் வவ்வால் என்று போடுறிங்க கேட்டிருக்கார், அப்ப சொன்ன விளக்கமே இப்பவும்,

    இது பெரியார் கொண்டு வந்த எழுத்து சீர் திருத்தம், காரணம் அவர் நடத்தி வந்த பத்திரிக்கைக்கு கட்டுரைகள் கம்போஸ் செய்வதில் , கொம்பு வைத்து, வளைத்து என்று அச்சுக்கோர்ப்பதில் பிரச்சினை வந்ததது மேலும் நிறைய அச்சு எழுத்துருக்களும் தேவைப்பட்டது, ஒரு சமயம் சில கொம்பு வைத்த அச்சு எழுத்துகள் இல்லை என்பதால் இப்படி மய்யம், அவ்வையார், வவ்வால் போல எழுதி வெளியிட்டாராம், பின்னர் இதுவே நல்லா இருக்குனு தொடர பின்னர் அது பெரியார் தமிழாக்கம் என்று சொல்லப்பட்டு ,ஏதோ ஒரு உலக தமிழ் மாநாட்டின் போது குழுவெல்லாம் அமைத்து அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டார்கள். இதனை செய்தது எம்ஜிஆர் என்றே நினைக்கிறேன். கலைஞர் வழக்கம் போல அவர் காலத்தில் இதயத்தில் மட்டும் இடம் கொடுத்திருப்பாரோ?

    வ.செ.குழந்தைசாமிக்கு மயில் போட்டுப்பாருங்க சொன்னாலும் சொல்வார்!

    ReplyDelete
  14. மோஹன்,

    அயோனிஜை பற்றி சொல்வது புரிந்தது... அயோனி என்பது தமிழ் என்பது போல சொல்வதாகப்பட்டதால்.. மூல சொல்லான யோனியே தமிழல்ல என சொல்ல வந்தேன். வேறொன்றும் இல்லை.

    //சதுரங்கம் பற்றி நீங்கள் சொல்வது புரிந்தது, ஆனால் நான் interviewவை ஒரு விளையாட்டைப் போல் விளையாடவதையும் அவர்களை என் trapற்குள் கொண்டுவருவதையும் பற்றிப் பேசவே உபயோகித்தேன்.//

    உங்கள் உதாரணம் பொருந்தாது என்பதால் சொல்ல வந்தேன், நீங்க்ள உதாரணமாக தான் சொல்கிறீர்கள் என்பது தெரியுது!
    தெரியுது, எப்படி அப்படி ஆடினா வெற்றி வராதோ அப்படித்தான் நீங்க நினைப்பது போல பதில் சொல்லி கேள்வி கேட்போரை ட்ராப் பண்ணலாம் என்பதும் இக்கட்டில் நிக்கும், இது நம்மிடம் யார் கேள்விக்கேட்கிறார் என்பதை பொறுத்தே எதாவது கேணை கேட்டால் நாம பாஸ் இல்லைனா ஃபெயில் தான்.

    சிபிஐ இன்டெர்வியு ஸ்டைல் கேள்விப்பாட்டிருக்கிங்களா, முதல் முறை நம்மள லூஸ் டாக் பண்ண வைப்பார்கள் பின்னர் அடுத்த நாள் தான் நமக்கு லூஸ் மோஷன் ஆகும்! இதனை சிபிஐ சம்பந்தப்பட்ட ஒருத்தரே சொன்னார், எல்லாரும் திசை திருப்பிரா போல எடுத்ததும் பதில் சொல்வாங்க, கேட்டுக்கிட்டு நாங்களும் நம்பிட்டொம்னு காமிப்போம் , அப்புறம் போக போக கச்சேரி இருக்கும் என்றார்.

    ---------------
    கன்னித்தன்மை கதை பேரே கிளி கிளிப்பா இருக்கே, மெய்யாலுமே அப்படித்தான் இருக்குமா? இல்லைனா "பிரபல நடிகை விபச்சாரத்தில் கைது" ஹெட்லைன்ஸ்ல தினத்தந்தில போடுவான் என்னமோ ஹாட் நியுசாக்கும்னு படிச்சா அது 1000 இல் ஒருத்தியா வர துணை நடிகையா இருக்கும்.

    ஏமாத்தம " நல்ல" சீன்கள் உள்ளக்கதையா இருக்குமா? படிச்சுடுறேன்!

    ReplyDelete

Popular Posts