ஆ வருது வருது, புகை வருது வருது. அண்ணாச்சி என்னமோ இந்தப் போட்டியில் ஆஸ்திரேலியாவிற்கு பிரச்சனை வருமென்று சொன்னார். எனக்கென்னமோ ஒரு பாதி முடிந்த பின்னர் அப்படித் தோன்றவில்லை. ஆஸ்திரேலியாவின் வெற்றி தொடரும் என்று தான் நினைக்கிறேன். கடைசியாக ஆஸ்திரேலியா எப்பொழுது உலகக்கோப்பைக் கோப்பையில் தோற்றது தெரியுமா, இரண்டு உலகக்கோப்பைக்கு முன்னர் அதாவது. போன உலகக்கோப்பைக்கு முந்தைய உலகக்கோப்பையில்(ஸ்டீவ் வா தலைமையில் ஜெயித்தது) செமி பைனல்ஸ் ஆகயிருக்குமென்று நினைக்கிறேன்(டிராவை கம்பேர் செய்வதாகயிருந்தால்.) இல்லையென்றால் அதற்கும் முன்னர் தோற்றிருக்க வேண்டும்.
எனக்கென்னமோ இந்த உலகக்கோப்பையிலும் ஒரு போட்டியிலும் தோற்கும் என்று தோன்றவில்லை.
------------------------------
மஹா மட்டமான டெலிகாஸ்டிங் செய்து கொண்டிருக்கிறார்கள் சோனி. அந்தக் கொடுமையாவது பரவாயில்லை என்றால் எக்ஸ்ட்ரா இன்னிங்க்ஸ் என்ற பெயரில் நடத்தும் ஒரு டப்பா ஷோ. மந்திரா பேடியையும் அந்தம்மா கொடுக்கும் பிரம்மாதமான நடிப்பையும் பார்க்கவேண்டாமென்றே நான் டாஸ் யார் ஜெயித்தார்கள் என்று கூட பார்க்கவில்லை. ஏழு மணி மேட்சா அப்பத்தான் உள்ள போறது. கடைசி பால் போட்டா வேற பக்கம் வந்திர்றது, இப்படியே போகுது என் உலகக் கோப்பை.
கிரிக்கெட்டைப் பற்றி ஒரு பொம்பளை பேசுவது எனக்கு பிரச்சனை கிடையாது, நானும் என் அக்காவுமே புள்ளி விவரங்களை அடுக்கி பேசுவோம். (சரி வீட்டை விட்டு வெளி நபர்களிலும் கூட இந்த மாதிரி பெண்களுடன் பேசுவதுண்டு கிரிக்கெட்டைப் பற்றி உண்மையான சுவாரசியத்துடன் பேசினால்.) இந்த ஆண்ட்டி ஒன்னுமே புரியாமல் அடித்த ஜல்லி தாங்காமல் போன உலகக்கோப்பையில் விட்டது. ஆண்ட்டி போட்டிருக்கும் டிரெஸ் கலெக்ஷனுக்காகயெல்லாம் பார்க்கிற அளவுக்கு என்னுடைய கலாரசனை இன்னும் மோசமாகவில்லை. உண்மையில் இங்கே தான் இஎஸ்பிஎன்'ஐ ரொம்பவும் மிஸ் செய்றேன்.
எதுக்காக இந்த ஜல்லியென்றால் பொதுவாகவே ஆஸ்திரேலியா மாட்ச் என்றால் ஒன்றையும் மிஸ் செய்யாமல் பார்க்கவேண்டுமென்று விரும்புவேன். இன்று ஆஸ்திரேலியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் இடையேயான மாட்சில் மழை பெய்ய வேறுவழியில்லாமல் இந்த ஆண்டியின் ஜல்லியை கேட்க வேண்டியதாயிற்று.
ரொம்ப சீரியஸாக டோனி கிரிக்கும், இயன் செப்பலும் பந்து மற்றும் மட்டையில் தேவைப்படும் தேவைப்பட்ட மாற்றங்களைப் பற்றி பேசிக்கொண்டிருக்கும் பொழுது ஆண்ட்டி தனக்கு பிடித்த கலரையெல்லாம் சொல்லிக் கொண்டிருந்தது. பிங்க் கலர் என்பது அமேரிக்க கலாச்சார அல்லது மேற்கத்திய கலாச்சார பெண்ணிய மக்களின் ஒரு டப்பா கலர். நீங்கள் இந்தக் கலரை பெண் குழந்தைகளின் மேல் திணிப்பதைப் பார்க்கலாம். சாதாரணமாக ஒரு பெண் குழந்தைக்கு இந்தக் கலர் பிடித்திருந்தால் ஓக்கே. ஆனால் பள்ளிக் கூடத்திலும், மற்ற ஏற்கனவே திணிக்கப்பட்ட குழந்தைகளாலும் இந்தக் கலர் திணிக்கப்படுகிறது.
தற்சமயம் பெண்களுக்கென்று உருவாகி(பெண் பதிவர்கள் பதிவுகளில் இதன் லிங்கை கட்டாயமாகப் பார்க்கலாம்) ஒரு கலெக்ஷன் எக்ஸெம்மல் பைல் கூட இந்த பிங்க் நிறத்தில் இருந்ததைப் பார்த்து ஒரு புன்முறுவல் என் முகத்தில் படர்ந்தது.
ஆனால் மந்திரா ஆண்ட்டி சொன்ன/சொல்லும் விஷயங்களை அங்குள்ள பெருந்தலைகள் கவனிப்பதில்லை என்பது வேறுவிஷயம்.(Bunch of MCP's ;-))
ஹைடனின் அற்புதமான ஆட்டம் பார்க்க கண்கொள்ளாக் காட்சி, முதல் சுற்றைப் போலில்லாமல் அளவில் பெரிய மைதானங்கள், ரொம்ப ஸ்லோவான அவுட்பிச். பந்து பேட்டிற்கே வர மாட்டேன் என்கிறது. ஆனாலும் அற்புதமான ஆட்டம், ஆஸ்திரேலியாவின் பேட்ஸ்மேன்கள் தங்கள் வேலையை செய்துவிட்டார்கள். எனக்கென்னமோ மேற்கிந்தியத் தீவுகள் இருநூறு சொச்சம் தான் அடிப்பார்கள் என்று படுகிறது பார்க்கலாம்.
-----------------------------
இதையெல்லாம் சொல்லிக் காண்பிக்கணும்னு இல்லைன்னாலும் நான் சொன்னது தான் நடந்திருக்கு இல்லையா? இருநூத்தி சம்திங்கிற்கு வெஸ்ட் இண்டீஸ் அவுட் ஆயாச்சு. இன்னுமொறு 100 ரன்கள் வித்தியாசத்தில் வின்.
எனக்கென்னவோ இதுவும் ஒரு ஒன்சைட்டட் வேர்ல்ட் கப்பாகத்தான் இருக்குமென்று நினைக்கிறேன்.
In Only ஜல்லிஸ் உலகக்கோப்பை கிரிக்கெட்
காதில் வரும் புகையைப் பற்றிய ஜல்லிகள்
Posted on Thursday, March 29, 2007
காதில் வரும் புகையைப் பற்றிய ஜல்லிகள்
பூனைக்குட்டி
Thursday, March 29, 2007

பூனைக்குட்டி
Primarily a java programmer, an athiest and a film geek, who loves reading, writing and photography.
Subscribe to:
Post Comments
(
Atom
)
Popular Posts
-
Next morning, I cornered Visu—eyes sharp, voice low, catching him sprawled on the couch, wireless headphones still on, eyes bleary like he h...
-
I’d been grinding Visu down for days—teasing, poking—till he broke, voice tight with exasperation. “Fine, but hook me up with a girl I pick ...
-
It was Saturday morning, early 2010, head still thumping from last night’s tequila flood, but I couldn’t stay away—back at Visu’s room like ...
நேற்றிரவு துபையில் இருவருக்கு காதிலிருந்து வந்த புகையால் மேகமாக மாறி இன்று துபையில் தூரல் மழை. புகை விட்டவர்களுக்கு நன்றி.
ReplyDeleteநண்பா, மஞ்சப்படை வெல்லும். துபையில் அடை மழை பெய்யும்.
ஹாஹா, இதெல்லாம் புரியாம சும்மா ஆஸ்திரேலியா தோற்கும் அது இதுன்னு பேசுவாறு அவரு.
ReplyDeleteகேட்டா துபாயில் மழை பெய்யணும்னு தான் அப்படின் பேசினேன்னு சொன்னாலும் சொல்வார். கேட்டுப்பாருங்க.
;)
வெற்று பந்தாவிற்கொன்றும் குறைச்சலில்லை ஆஸி எதிர்ப்பாளர்களிடம்.
ReplyDeletefinal முடியும் வரை துபையில் மழை வரும் என வானிலை எச்சரிக்கை அறிவிக்கிறது.
எப்படியோ மழை பெய்தால் சரிதான்.
நீங்கள் போட்டிருக்கும் பாரதியின் படம் அற்புதம்..
ReplyDeleteசொல்வதற்கு மன்னிக்கவும்.
நான் எப்பொழுதுமே ஆஸ்திரேலியாவிற்கு எதிராக விளையாடும் அணியையே ஆதரிப்பவன்.
//ஒரு கலெக்ஷன் எக்ஸெம்மல் பைல் கூட இந்த பிங்க் நிறத்தில் இருந்ததைப் பார்த்து ஒரு புன்முறுவல் என் முகத்தில் படர்ந்தது. //
ReplyDeleteஸ்மைலி கிடையாது!!!!!!!! [only exclamation points.. but then maybe i use exclamation points haphazardly!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!]