ஆட்சியில் இல்லாத பொழுது மரணம் நிகழணும்னு நினைத்த பொழுது மெரினா பிரச்சனை கிடையாது. இப்ப இதுவும் சேர்ந்து. அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும். RP ராஜநாயஹத்தின் இந்தப் பதிவுக்கு போட நினைத்த கமென்ட் ஒன்று. “When a big tree falls, the ground shakes” இல்லையா?கத்திரிக்கா வெண்டைக்கா பிரச்சனையா, எத்தனை க்ரவுண்ட் ஷேக் ஆகப்போகுதோ??? ...
"Its not fair" ஆரம்பித்தேன், ஜெயஸ்ரீ "நான் நினைச்சேன்..." என்று கோபப்பட்டாள், அகிலா சிரித்தாள். எங்கள் ரோல்களில் கொஞ்சம் வித்தியாசம். நான் எப்பொழுதும் அப்படியே தான் இருந்தேன், அகிலாவின் இடத்தை ஜெயஸ்ரீயும் ஜெயஸ்ரீயின் இடத்தை அகிலாவும் எடுத்துக் கொண்டார்கள், பெரும்பாலும் நான் வம்பிழுக்கும் சமயங்களில் அகிலா கோபப்படுவாள், ஜெயஸ்ரீ சிரித்துக் கொண்டிருப்பாள். இன்று வித்தியாசம். காரணம் இருந்தது. ஐரனி அந்த நாளை மீளநினைவூட்டியது. "You saw me...
கேள்வி கேட்பவர் - சார்! சமீபத்தில் மோகன்தாசு கரம்சந்த் காந்தி செத்துப் போனதப் பத்தி உங்களுக்கு இருக்கிற மனவருத்தங்களைப் பதிவு செஞ்சீங்களே! ஏன்? பதில் சொல்பவர் - காந்தி செத்துப் போனதப் பத்தி எனக்கு ஒரு ஒப்பீனியன் இருக்கில்லையா அதை என்ன செய்யறது. அதான் வைச்சேன்! கே.கே - காந்தி செத்துப் போய் 60 வருஷம் ஆய்டுச்சே அதை இப்பத்தான் வைக்கணுமா? ப.சொ - இங்கப் பாருங்க...
எனக்கு ஜெயமோகன் அறிமுகமானது அவ்வளவு நல்லவிதமாகயில்லை. தீவிர திமுக குடும்பத்தில் பிறந்தவன், பராசக்தி, மனோகரா போன்ற வசனங்களைப் பேசியே புகழ்பெற்றவன் என்ற முறையில் தனிப்பட்ட விதத்தில் எனக்கு கலைஞர் மீது பற்று உண்டு. அப்படிப்பட்டவரை ஒரு முறை விகடனில் என்று நினைக்கிறேன் ஜெயமோகன் "இலக்கியவாதி அல்ல" என்று சொல்லப்போய் பிரச்சனை ஆனதில் அறிமுகம் ஆனார். அந்த தனிப்பட்ட பேரின்(ஜெயமோகன்) மீது கோபம் உண்டு; ஏனென்றால் எனக்கு அதற்குப்...
Desperately Seeking Cleavage வோக் ஆர்ட்டிகிள் வெளியான பொழுது பரபரப்பை ஏற்படுத்தியது. அதை எழுதிய கேத்லீன் “The tits will not be out for the lads. Or for anyone else, for that matter,” என்று சொல்லியிருந்ததைப் பற்றி ஆதரவாகவும் எதிராகவும் நிறைய கட்டுரைகள் வரையப்பட்டன. அவர் அதற்கு சில காரணங்களைக் குறிப்பிட்டிருந்தார். அலிசியா விக்கந்தர் 2017 கோல்டன் க்ளோப்ஸ்ற்கு அணிந்து வந்திருந்த உடையையும், ப்ராடாவின்...
“இன்னொரு தடவை என் அனுமதியில்லாம என்னைத் தொட்டீங்கன்னா கெட்ட கோவம் வந்திரும் ஜாக்கிரதை.” கௌசல்யா சொன்னதும் எனக்கு ஆச்சர்யமே எஞ்சியது. அப்படியொன்றும் நான் மூன்றாம் ஆள் கிடையாது அவளுக்கு. இன்னும் எங்களுக்கு கல்யாணம் ஆகவில்லையே தவிர, பிறந்ததிலிருந்தே எனக்கு அவள் அவளுக்கு நான் என்பது தீர்மானமாகிவிட்டிருந்த ஒன்று. மிஞ்சி மிஞ்சிப் போனால் இன்னும் ஆறுமாதத்திலேயோ இல்லை ஒரு வருடத்திலேயே எங்கள் இருவருக்கும் கல்யாணம் முடிந்துவிடப்போகிறது. அதுமட்டுமில்லாமல், கௌசியினுடைய...
“மம்மி, உன் பையனெல்லாம் வெக்கப்படுறான் இங்கவந்துப்பாரு, ஆச்சர்யம்தான் போ?” அக்கா வேண்டுமென்றே வம்பிழுத்துக் கொண்டிருந்தாள், எங்கள் இருவருக்குமான தொடர்பும் அவள் திருமணத்திற்குப் பிறகு சில வருடங்களாக குறைந்திருந்தது. அவளுடைய கணவன் மற்றும் குழந்தைகளை பராமரிக்கும் பொறுப்பும் நான் வெளிநாட்டில் வேலை செய்துவந்ததும் அதற்கு முக்கியமான காரணங்கள். நானும் அக்காவும் சத்தமாய் பேசிக்கொண்டிருந்த நாட்களில் பக்கத்து வீட்டினர் கண் போடுவார்கள் என்று அதட்டிய அப்பா கூட இப்பொழுது வரும்...
தொடலைக் குறுந்தொடி தந்தாள் மடலொடு மாலை உழக்கும் துயர். திருக்குறள் - காமத்துப்பால், நாணுத்துறவுரைத்தல், 1135. “நேத்து அவங்க நம்ம இரண்டு பேரையும் பாத்துட்டாங்க” ஸஸ்மிதா சொல்லிக் கொண்டிருக்கும் பொழுதே வாசல் கதவின் அழைப்பு மணி தன் ரீங்காரத்தைத் தொடங்கியது. இளமாறனின் சோம்பலின் தீவிரம் தெரிந்தவள் என்பதால் சற்றும் யோசிக்காமல் போர்வையிலிருந்து தன்னை விலக்கிக் கொண்டு எழுந்து நின்றாள். இரவு படுக்கையில் விழுந்தபின் இப்பொழுதுதான் எழுந்திருக்கிறாள் என்பதால்...
Subscribe to:
Posts
(
Atom
)
Popular Posts
-
“ஒக்காளி யெந்த நாதாரிடா சொன்னான் பாளயக்கார நாயுடுன்னு ஒரு சாதியே இல்லைன்னு, ஸர்க்காரு இல்லேன்னு சொன்னா இல்லேன்னு ஆய்டுமா? கேட்டுக்கிட்டு உ...
-
I’d been grinding Visu down for days—teasing, poking—till he broke, voice tight with exasperation. “Fine, but hook me up with a girl I pick ...
-
Next morning, I cornered Visu—eyes sharp, voice low, catching him sprawled on the couch, wireless headphones still on, eyes bleary like he h...