பெங்களூர் வலைபதிவர் சந்திப்பைப் பற்றி ராம் எழுதியதுமே அங்கே போவதென்பது முடிவாகியிருந்தது. ஆசீப் அண்ணாச்சி அதற்கு ஒரு வாரம் முன்பு தமிழகம் வருவதால் சென்னைக்கு போவதாகவும் ஒரு ப்ளான் இருந்தது. ஒரு குட்டி - சந்திப்பை - செய்துவிடலாம் என்று. ப்ளான் என்ன டிக்கெட் புக்செய்து வைத்திருந்தேன், கிரிக்கெட் 'கிட்' வேறு ரெஸ்பான்ஸிபிள் ஆளிடம் கொடுத்து எல்லாம் தயாராகயிருந்தது. ஆனால் கடைசி சமயத்தில் சூழ்நிலைகள்(;-)) சரியாக அமையாததால் மிஸ்ஸாகியது. அன்றிலிருந்தே ஆசீப்பை அரித்துக் கொண்டிருந்தேன்; பெங்களூர் சந்திப்பிற்கு வருமாறு. அவர் கடைசிவரைக்குமே வருகிறாரா இல்லையா என்பதைச் சொல்லாமல் இழுத்தடித்துக் கொண்டிருந்தார்.
ராம் இடையில் ஒரு நாள் தொலைபேசி, என்னய்யா பெங்களூர் சந்திப்பென்று சொல்லியிருக்கேனே ஒரு பதிலும் இல்லையே என்று கொஞ்சம் கோபமாகவே கேட்டார். அவருக்கு நம்முடைய பெருமை தெரியாததால் அப்படி கேட்டுவிட்டார் 'சின்னப்பிள்ளை' என்று நானும் 'மன்னிச்சு' விட்டுவிட்டேன். பின்னர் அவராகவே சந்திப்பு முடிந்ததும் புரிந்துகொண்டிருப்பார் என்று திடமாகவே நம்புகிறேன். நான் வர்றேன் என்ற விஷயத்தை கடைசி சமயத்தில் கசியவிட்டதற்கே வருவதாய்ச் சொல்லியிருந்த இரண்டு 'பெண் பதிவர்கள்' வரவில்லை*. நான் அவர் பதில் பின்னூட்டமிடப்போக(அங்கு வந்துவிடப்போகும் லிங்கைப் பிடித்து என் பதிவிற்கு வந்து பதிவைப் படித்து கோபமாகி)வந்திருந்த 'பெண் பதிவர்கள்' உம் வராமல் போயிருப்பார்கள்.(;)) இப்பவவாது புரிஞ்சிக்கங்க ஓய் நாங்க எது செஞ்சாலும் அதுக்கு பின்னாடி ஒரு விஷயம் இருக்கும்.
சனிக்கிழமை காலையிலேயே ஆசீப் பெங்களூர் வந்துவிட்டார், 6.00 மணின்னு சொல்லிவிட்டு ஐந்து மணிக்கே வந்து மடிவாலாவில் உட்கார்ந்திருவரை கண்டுபிடித்து சாயா வாங்கிக் கொடுத்து "கீர போண்டாவில்" உட்கார வைத்தது தான். அப்புறம் அவர் சனிக்கிழமை இரவு சென்னைக்கு கிளம்பும் வரை ஒரே "டிராவலிங்" தான். ஓசியில் நான் பெங்களூரைச் சுற்றிக் காண்பித்ததை ஆசீப் சொல்லுவார் ;). வீட்டிற்கு வந்ததும் நான் கே டிவியில் போட்டுக்கொண்டிருந்த "வர்றார் சண்டியரில்" ஒன்றிவிட அண்ணாச்சி லாப்டாப்பில் பொய் சொல்லிக்கொண்டிருந்தார் எல்லோரிடமும். இடைப்பட்ட நேரத்தில் அண்ணாச்சி எனக்கே எனக்கென்று ஆசையுடன் வாங்கிவந்திருந்த லட்டு பாக்ஸை ஒரே ஆளாய் காலி செய்தேன். ;)
எங்க வீட்டு செல்ல ஸ்கூபி(ஓனர் வீட்டு நாய்)யிடம் சொல்லிவைத்திருந்தேன், இன்னும் கொஞ்ச நேரத்தில் உனக்கான சாப்பாடு வருமென்று; ஆனால் செந்தழல் ரவி ஏமாற்றிவிட்டார். நாய்கடிக்கு யாரோ எலுமிச்சை சாற்றை தலையில் தேய்த்து குளிக்கவேண்டும் என்று புரளி கிளப்பிவிட, தழலு ஏகப்பட்ட எலுமிச்சை பழங்களை வாங்கி வீட்டில் முடக்கிவிட்டதால் அல்சூரு ஏரியாவில் எலுமிச்சை பழங்களுக்கான கிராக்கி ஏகமாகிவிட்டிருந்தது. அவர் கொரியா போவதே 'நாய்' இனத்தை பழிதீர்க்கத்தான் என்று நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.
9.30 க்கெல்லாம் ரெடியாகி நாங்கள் கிளம்பிக்கொண்டிருந்தோம், பெரிசா லால் பா(ஹ்)வில் இருப்பதைப் போல் சீனைக் கிளப்பிய தழல், நாங்கள் போய்ச் சேர்ந்து "லால் பா(ஹ்) காதலர்கள்", அவர்கள் ஏன் லால் பாஹ் வருகிறார்கள், பிறகு போலீஸ்காரர்களின் கைகளில் இருந்த லத்தி யாரிடம் என்ன விதமாய் எப்படி பேசும் என்றும், இப்படியெல்லாம் பொது இடங்களில் தவறு செய்வது இந்தியக் கலாச்சாரத்தை பாதிக்கும் என்று நான் சொல்ல, காதலர்களுக்கா வாதாடிக்கொண்டிருந்தார் ஆசிப். இப்படி நாங்களாக நேரத்தை கழுத்தைப் பிடித்து தள்ளிக்கொண்டிருக்க 'லேட்டாக' வந்தார் தழல்.
வந்ததும் வராதுமாக தன்னுடைய 'எக்ஸ்ரே' கண்களால் சிறிது தூரத்தில் த்ரோ பால் விளையாடிக்கொண்டிருந்த எட்டு பெண்கள் கண்ணில் பட. அவருக்கு நாங்கள் உட்கார்ந்திருந்த பெஞ்சில் 'சீட்டு' உட்கார மாட்டேன் என்றுவிட்டது. அந்த மூவரில் இந்தச் செயலை எதிர்த்தது "ஆணீய 'வியா'தி" நான் தான்; ஆனாலும் ஆசிப் விட்ட அலும்பு எழுத்திற்கெல்லாம் அப்பாற்பட்டது.(அண்ணாச்சி உங்களுக்கு வாக்கு கொடுத்தாப்லவே என்ன விஷயம் எல்லாம் நீங்களும் தழலும் பேசினீங்கன்னு எழுதலை போதுமா).
பின்னர் ராம் ரவிக்கு தொலைபேச, இருவரும்(ஆசிப் மற்றும் ரவி) மனமேயில்லாமல்(அதுவரை த்ரோ பால் விளையாடிக்கொண்டிருந்தவர்கள்; பின்னர் களைத்துப் போய் "படம் பேர்" நடிச்சிக் காண்பித்து கண்டுபிடிக்கும் விளையாட்டு விளையாடிக் கொண்டிருந்தார்கள்.) இருவரையும் தள்ளிக் கொண்டு வருவதே பெரும்பாடாய்ப் போய்விட்டது, தூரத்திலிருந்தே பார்த்தே 'ராமை' அடையாளம் கண்டுகொண்டு(போட்டோவில் பார்த்திருக்கிறேன்) நான் அவர் தானே ராம் என்று சொல்ல, ஏற்கனவே 'ராமை' நேரில் பார்த்திருந்தும் இல்லையென்று சொன்னார் ரவி.(ராம் அங்கில்லை என்றால் திரும்பவும் 'விளையாட்டை' பார்க்கலாமென்று தான்.) ஆனால் ராம்; ரவியை அடையாளம் கண்டுகொண்டதால் இவர்கள் விளையாட்டு ஒரு முடிவிற்கு வந்தது.
பின்னர் ஒருவழியாய், செல்லா, தீபா அவரது கணவர், பிரியா, ராம் பின்னர் கடேசியாக நம்ம ராசா வர, எங்கே உட்கார்வது என்று கேள்வி எழுப்பப்பட டீபால்டாக 'ரவி' முன்பு பிகர்கள் த்ரோ பால் விளையாடிக் கொண்டிருந்த இடத்தைச் சொன்னார். ஆனால் மற்றவர்களுக்குத்தான் ஒன்றும் தெரியாதே தெரியாமல் வர; அந்த பிகர்கள் அதற்குள் அந்த ஆட்டமும் புளித்துப்போய் வெளியேறியிருந்தார்கள் மனமுடைந்து போனார் ரவி. அப்படியிப்படி என்று ஒரு இடத்தில் உட்கார்ந்தோம், நீங்க யாரும் First Knight படம் பார்த்திருக்கிறீர்களா, அதில் ஸீன் கானரி அவரது படைத்தளபதிகளுடன்(?) உட்காருவாரே அதுமாதிரி ஒரு இடத்தில் உட்கார்ந்தோம்.(எங்க கற்பனை கொஞ்சம் பெரிசா இருக்கும் கண்டுக்கிடாதீங்க). இதிலெல்லாம் அனானிமஸ்கள் மிஸ்ஸாகி விட்டார்கள்.
சிறிது நேரத்தில் ஐயப்பன் அவரது குடும்பத்துடன் வர, அதற்கு சிறிது நேரத்தில் இம்சை அரசி என்று சொல்லப்படுபவரும்(;)) ஜி-யும் வந்தார்கள்(இந்த ஜி தான் என்னுடைய - ஒரு காதல் கதையை - மரத்தடியில் படிச்சிட்டு அதுமாதிரி ஒரு கதை எழுதணும்னு வலைபதிவிற்கு வந்தேன்னு சொன்னார் - என் நெஞ்சில் பாலை வார்த்தவர். (இனிமே யாராவது சொல்லுவீங்க அப்படி ;-)) கரெக்டா ப்ராக்கெட் க்ளோஸ் பண்ணியிருக்கேனா?). அவர்கள் வந்ததும் ஒரு சிறு அறிமுகம் எல்லோரும் அவரவர்களைப் பற்றி சொல்லி முடித்ததும். ராம் தன்னுடைய லாப்-டாப்பைப் பற்றி என்னமோ(;)) சொல்லி ஓப்பன் செய்துவைத்தார். டெஸ்க்டாப்பில் முருகன் படம்; அது எல்லாம் சரி டெஸ்க்டாப்பில் முருகன் படம் வைச்சிருக்கும் பச்சை புள்ளையின் பர்ஸனல் லாப்டாப்பிற்கு பாஸ்வேர்ட் ப்ரொடெக்ஷன் வேற(ஈஸ்வரோ ரக்ஷத்). இடைப்பட்ட நேரத்தில் எல்லாம் யாரோ ஒரு பெண் பெயரைச் சொல்லி ராமை ஓட்டிக்கொண்டிருந்தார்கள், ஜி - இம்சை அரசி - ஐயப்பன், பேசிக்கொண்டிருந்ததை வைத்து ராமின் லவ் மேட்டர் எதையோ தான் பேசிக்கொண்டிருந்தார்கள் என்று தெரியவந்தது. (என்னையையா மிரட்டுறீரு - இதெப்படி இருக்கு - ;) ஆனால் பேசிக்கொண்டிருந்த பெயர் நினைவில் வரமறுக்கிறது - ரொம்பவும் முக்கியமாகத் தேவைப்படுபவர்களுக்கு யோசித்து சொல்லப்படும் - மெயில் அனுப்பலாம்)
பின்னர் போட்டோ எடுப்பது எப்படி என்ற செல்லா-ஐயப்பன் செஷன் தொடங்கியது. இது ஆரம்பித்த சிறிது நேரத்தில் சுபமுகா வந்திருந்தார். 48,000 RS, SLR ஒன்றை குறிவைத்திருக்கும் எனக்கு ரொம்பவும் இன்ஃபர்மேட்டிவ்வா இருந்தது அந்தப் பதிவு முழுவதுமே. அப்பர்ச்சர், ஷட்டர் ஸ்பீடு, லைட்டிங் அது இது என்றெல்லாம் எல்லா விவரங்களையும் சாதாரண மக்களுக்கும் புரியும் வகையில் சொல்லியது உபயோகமாயிருந்தது. உடன் உடன் படமெடுத்து அதை லாப்டாப்பில் போட்டுக் காண்பித்து எது எப்படி ஏன் இப்படி என்று விளக்கியது பயனுள்ளதாக இருந்தது.
இடையிலேயே பலூன் மாமா என்ற கல்வெட்டு வந்துவிட்டாலும் புகைப்பட விஷயத்தில் கலந்துகொள்ளாமல் வெளியில் இருந்து ஆதரவு கொடுத்துவந்தார்.
பின்னர் அங்கிருந்து ஆசிரமத்திற்கு வந்து சேர்ந்தோம், இன்னமும் கொஞ்சம் வாங்க வேண்டியிருந்ததால் ஜி, ராம், ஐயப்பன் சென்றிருக்க நான், பலூன்மாமா, ஆசிப், இம்சை(இனி இந்தப் பெயரால் இவர் இந்தப் பதிவில் குறிப்பிடப்படுவார்) மற்றும் பிரியா ஆகியோர் மட்டும் தான் முதலில் இருந்தோம். மொத்தம் அறுபது குழந்தைகள் இருந்தார்கள், நேரத்தை வீணாக்கவேண்டாம் என்று பலூன் மாமா தொடங்கியதுமே. குழந்தைகளின் முகங்களில் தொடங்கிய புன்னகை கடைசிவரைக்கும் நீடித்திருந்தது. சொல்லப்போனால் அந்த உற்சாகம் பற்றிக் கொள்ள நாங்களும் ஏகப்பட உற்சாகத்தில் இருந்தோம். முதலில் பலூன்மாமா மட்டுமே தொப்பி செய்துகொண்டிருந்தார். பின்னர் அது அப்படியே இம்சை, ப்ரியா, நான், ஆசீப் எல்லோராலும் பலூன்மாமாவால் கற்பிக்கப்பட்டு செய்து தரப்பட்டது.
எனக்கும் ப்ரியாவிற்கும் பலூன்களை யார் அதிகம் உடைப்பது என்று போட்டி இருந்ததைப் போன்று உடைத்து நொறுக்கினோம். நான் அதிகமாக உடைத்தேன் என்பதைப் போன்ற ஒரு மாயத்தை ப்ரியா உருவாக்கினார் ஆனால் அதிகம் உடைத்தது அவர்தான் என்பதை இந்தப் பதிவின் மூலம் 'பதிவு' செய்கிறேன். சொல்லப்போனால் இம்சையும் ப்ரியாவும் நன்றாகவே தொப்பி, கத்தி செய்தார்கள். என்னை பர்ஸனலாக அறிந்தவர்களுக்குத் தெரிந்திருக்கும் எனக்கு இதுபோன்ற விஷயங்களில் ஆர்வம் அதிகம் இல்லாதது. ஆனால் இந்தச் சந்திப்பு அந்த வரையறையை மாற்றியிருக்கிறது என்றால் அது 100% உண்மை. பின்னர் குழந்தைகளுக்கு ஓவியப்போட்டி நடத்தி பரிசளித்தார்கள் ராமும் மற்ற வெளியில் சென்று மீண்டு வந்தவர்களும். பின்னர் குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கி மகிழ்ச்சிகரமாக நிறைவு செய்யப்பட்டது.
இந்த அற்புதமான ஒரு வாய்ப்பை வழங்கிய ராமிற்கும் ஐயப்பனுக்கும் தனிப்பட்ட முறையில் நன்றிகள். நீண்ட நாட்களுக்குப் பிறகு கற்பனைக் கோடுகளைச் சுருக்கி மகிழ்ச்சியாக இருந்தேன். பின்னர் அருகில் இருந்த சாந்தி-சாகரில் சாப்பாட்டை முடித்துக் கொண்டு கிளம்பினோம்.
PS: எதுவும் விட்டுப்போயிருப்பதைப் போல் தோன்றினால் பின்னூட்டத்தில் எழுதுகிறேன்.
* - பெண் பதிவர்கள் சில முக்கியமான வேறு முக்கியமான காரணங்களுக்காக வரவில்லை நான் இங்கே எழுதியிருப்பது சும்மா ஜல்லிக்காக, மனம் புண்பட்டிருந்தால் மன்னிக்கவும்.
மோகன்தாஸ் வருகை - பெண்கள் தெறித்து ஓட்டம்
பூனைக்குட்டி
Tuesday, July 17, 2007
பூனைக்குட்டி
Primarily a java programmer, an athiest and a film geek, who loves reading, writing and photography.
Related Articles
Subscribe to:
Post Comments
(
Atom
)
Popular Posts
-
ஆட்சியில் இல்லாத பொழுது மரணம் நிகழணும்னு நினைத்த பொழுது மெரினா பிரச்சனை கிடையாது. இப்ப இதுவும் சேர்ந்து. அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற...
-
The air was thick with anticipation as Sindhu broached the subject, her voice a mix of determination and vulnerability. "Imagine, just ...
-
யாரோ கைலிக்குள் கைவிடுவதைப் போலிருந்ததால் திடுக்கிட்டு விழித்துப்பார்த்தேன், ஷைலஜாதான் பெட்ஷீட்டுக்குள் என்னவோ தேடிக்கொண்டிருந்தாள். இதன் மூ...
புகைப்பட செஷன் முடிந்ததும் கொங்கு ராசாவுடன், இந்தி பற்றி கொஞ்சம் பேசிக்கொண்டிருந்தேன்.
ReplyDeleteகொங்கு ராசா போட்டாவில் இருப்பதைப் போலவே இருக்கிறார் ;). அவ்வளவாக 'கோயம்புத்தூர் வாசனை' அடிக்கலை பேச்சில். ஆனால் 'கோவை' காரங்க கிட்ட பேசுறப்ப தெரியும்னு நினைக்கிறேன்.
///பெண் பதிவர்கள் சில முக்கியமான வேறு முக்கியமான காரணங்களுக்காக வரவில்லை நான் இங்கே எழுதியிருப்பது சும்மா ஜல்லிக்காக, மனம் புண்பட்டிருந்தால் மன்னிக்கவும். ///
ReplyDeleteதேடித்தேடி வெச்சுக்கறதுல நமக்கு நிகர் நாமே தான்...!!!
மாங்காய் மேட்டர் விடுபட்டுப்போச்சு...!!!
அண்ணாச்சியின் கூலிங் க்ளாஸ் பற்றி கொஞ்சம் ஓட்டியிருக்கலாம்...
மற்றபடி நல்ல பதிவு...!!!!
//அண்ணாச்சியின் கூலிங் க்ளாஸ் பற்றி கொஞ்சம் ஓட்டியிருக்கலாம்...//
ReplyDeleteஅவருக்கு ஏற்கனவே உள்குத்தே ஏகமாயிருக்கு. விடுங்க...
//பேசிக்கொண்டிருந்த பெயர் நினைவில் வரமறுக்கிறது//
ReplyDeleteஎன்னய்யா, அண்ணி பேரு தெரியாதா! அடப் பாவமே!
///பேசிக்கொண்டிருந்த பெயர் நினைவில் வரமறுக்கிறது//
ReplyDeleteஎன்னய்யா, அண்ணி பேரு தெரியாதா! அடப் பாவமே///
ஏலேய் மோகனா,
நாங்கெல்லும் கூடிய சீக்கிரத்திலே வைக்கிறோமிடி ஆப்பு ஒனக்கு... :)
"The visionary lies to himself, the liar only to others."
ReplyDeleteTell about this man.
//அவ்வளவாக 'கோயம்புத்தூர் வாசனை' அடிக்கலை பேச்சில்.// நிறையப்பேரு சொல்லிருக்காங்க.. வூட்ல இருந்து போன் வந்தா மட்டும் ஏன் பாஷை மாறுதுன்னு :)
ReplyDeleteMohandasssss.... Grrrrrrrrrrrrr....
ReplyDeleteNaana neraya ballons odaichen...
:( ungaluku ellam manasatchiye kidaiyadhu!!!!