In Only ஜல்லிஸ்

முருகக் கடவுள் ஆணாதிக்கவாதியா?

சமீபத்தில் ஒரு படம் பார்த்துக் கொண்டிருந்தேன். நான் முன்பே ஒரு முறை நட்சத்திர வாரத்தில் சொன்னதைப் போல் நான் சினிமா பார்ப்பதில் பாரபட்சம் பார்ப்பதில்லை. இது ஏதோ ஒரு கடவுள் பார்த்த பொழுது சொல்லப்பட்ட விஷயம் தான்

முருகன் ஏன் பிரணவ ரகசியத்தை அம்மாவிடம் சொல்லாமல் அப்பா சிவனிடம் சொன்னார்?

கிர்ர்ர்ர் எனக்கு சட்டென்று தோன்றிய கேள்வி முருகனன்பர்கள் பதில் சொல்லலாம்.

Related Articles

12 comments:

  1. கேட்டது அப்பாதான? அதனாலதான். ஈன்ற பொழுதினும் தன்னுவக்கும் தன் மகனைச் சான்றோன் எனக் கேட்ட தாய். அந்த உவப்ப அம்மாவுக்குக் குடுக்கதான்..அப்பாவை மண்டி போட்டு உக்கார வெச்சு மந்திரம் சொன்னான். :) இப்பவும் முருகன் ஆணாதிக்கவாதியா? :)))))))))))

    ReplyDelete
  2. இதெல்லாம் சால்ஜாப்பு, நான் ஒத்துக்க மாட்டேன்.

    பெண்கள் கிட்ட பிரணவ மந்திரத்தைச் சொல்லக்கூடாதுன்னு நினைச்ச முருகன் ஆணாதிக்கவாதியில்லாம எப்படி ;)

    வேணும்னா அந்தக்காலத்தில் ஆணாதிக்கம் பெண்ணியம் எல்லாம் இல்லேன்னு வேணும்னா சொல்லுங்க

    ReplyDelete
  3. // மோகன்தாஸ் said...
    இதெல்லாம் சால்ஜாப்பு, நான் ஒத்துக்க மாட்டேன். //

    ரொம்ப நல்லது. அத ஒங்க விருப்பத்துக்கே விட்டுர்ரேன்.

    // பெண்கள் கிட்ட பிரணவ மந்திரத்தைச் சொல்லக்கூடாதுன்னு நினைச்ச முருகன் ஆணாதிக்கவாதியில்லாம எப்படி ;) //

    அப்படியா? பெண்கள் கிட்ட முருகன் சொல்லக்கூடாதுன்னு சொல்லீருக்காரா? அடடே! இத எனக்குச் சொல்லலையே அந்த முருகன்.

    // வேணும்னா அந்தக்காலத்தில் ஆணாதிக்கம் பெண்ணியம் எல்லாம் இல்லேன்னு வேணும்னா சொல்லுங்க //

    பதிவு அதப்பத்திப் பேசுதா என்ன? எனக்கு நீங்க வெச்சுருக்குற உள்குத்து புரியலை. எனக்குத் தெரிஞ்சதச் சொல்லியாச்சு. வர்ரேஏஏஏஏஏன். :)

    ReplyDelete
  4. அதெல்லாம் தெரியாதவங்களுக்குத்தாங்க‌ சொல்லணும். அம்மாவுக்குத்தான் ஏற்கெனவே அதுக்கு அர்த்தம் தெரியுமே

    ReplyDelete
  5. நீங்க என்ன சொல்லவர்றீங்கன்னு புரியுது. பிரணவ மந்திரத்தைப் பெண்கள் சொல்லக் கூடாதுன்னு அந்தக் காலத்துல ஒரு கட்டுப்பாடு இருந்தது தான். ஆனால் அப்பனுக்குப் பாடம் சொன்ன சுப்பையா பிரணவ மந்திரத்தை அப்பனுக்குச் சொல்லலை; அதோட பொருளைத் தான் சொன்னான். மந்திரத்தைச் சொல்லாமல் மந்திரத்தின் பொருளை ஊரெல்லாம் எந்த விதக் கட்டுப்பாடும் இல்லாமல் அந்தக் காலத்தில் சொன்னார்கள் என்பதற்கு இராமானுஜர் நாராயண மந்திரத்தின் பொருளை கோபுரம் ஏறிச் சொன்ன எடுத்துக்காட்டொன்று போதும்.

    இப்ப அந்தக் கட்டுப்பாடு எல்லாம் இல்லை. எல்லோரும் பிரணவ மந்திரமும் காயத்ரி மந்திரமும் எல்லா மந்திரமும் உபதேசம் வாங்கிக்கிறாங்க. சொல்றாங்க. காலம் மாறும் போது கட்டுப்பாடுகளும் மாறும்; மாறவேண்டும்; மாறிக்கொண்டிருக்கிறது.

    ReplyDelete
  6. குமரன் அய்யா சொல்வதை பாருங்க..

    கடவுளுக்கே கட்டுப்பாடு தேவையா இருக்கு...ஹும்...

    ReplyDelete
  7. சிவனில் பாதி பார்வதி. அப்போ யாரிடம் சொன்னால் என்ன? எல்லாம் ஒன்று தான். ('சரி! ஏன் பார்வதியிடம் கேட்டிருக்க கூடாது' என்று குதர்க்கமாக கேட்கப்படாது. அப்படி கேட்டாலும் இந்த பதிவு வந்திருக்கும்:))

    ReplyDelete
  8. ஏன் ஒன்னுக்கு ரெண்டு மனைவிங்க இருக்கும்போது அதெல்லாம் விட்டுட்டு அப்பங்கிட்டே ரகசியத்த சொல்லி இப்ப உங்ககிட்ட மாட்டிக்கிட்டு முழிக்கிறார்னு தெரியல,

    முருகனுக்கு தான் வெளிச்சம் :-)

    ReplyDelete
  9. அடடா, பையன் என்னமா யோசிக்கிறான்:-)

    ReplyDelete
  10. உஷா இந்தக் கேள்வியெல்லாம் பெண்ணியவாதியான உங்களைப் போன்றவர்கள் கேட்க வேண்டியது.

    நான் கேக்குறனேன்னு சந்தோஷப்படுங்க அதைவிட்டுட்டு பையனோட யோசிப்புத்திறமையை குத்திக்காட்ட கூடாது ;)

    ReplyDelete
  11. செந்தழல் இரவி ஐயா. தவறாகப் புரிந்து கொண்டீர்கள். 'அந்தக் காலத்துல மனிதர்களுக்கு ஒரு கட்டுப்பாடு' என்று நான் சொல்லியிருந்தால் நீங்கள் இப்படி தவறான புரிதலை மேற்கொண்டிருக்க மாட்டீர்கள். மனிதர்களுக்கு என்று சொல்லாமல் விட்டது என் தவறு தான்.

    மனிதர்களுக்கு இருந்த கட்டுப்பாட்டை பதிவர் முருகனுக்கு ஏற்றிக் கூறி இந்தத் தலைப்பில் எழுதியிருக்கிறார். அந்த மனித்க் கட்டுப்பாட்டின் படி பார்த்தாலும் அது சரியில்லை என்பது என் வாதம். முருகன் சொன்னது பொருளைத் தான். அதனால் மனிதக் கட்டுப்பாட்டின் படி அதனை ஆணுக்கும் சொல்லலாம்; பெண்ணுக்கும் சொல்லலாம்.

    குறை காண்பதென்றால் காண்பதற்கு எத்தனையோ உண்டு. அவன் நின்றான் என்றால் அங்கே ஏன் அவன் உட்காரவில்லை; சரிசமமாக உட்காரக் கூடாது என்பதற்காகத் தான் - abc வெறியன் என்னலாம். அவன் உட்கார்ந்தான் என்றால் அங்கே ஏன் அவன் படுக்கவில்லை/நிற்கவில்லை; xyz காரணமாகத் தான் என்று சொல்லிக் கொண்டே போகலாம். இல்லையா? :-)

    ReplyDelete
  12. //மந்திரத்தின் பொருளை ஊரெல்லாம் எந்த விதக் கட்டுப்பாடும் இல்லாமல் அந்தக் காலத்தில் சொன்னார்கள் என்பதற்கு இராமானுஜர் நாராயண மந்திரத்தின் பொருளை கோபுரம் ஏறிச் சொன்ன எடுத்துக்காட்டொன்று போதும்.//

    குமரன் எனக்கே இதில் மாற்றுக் கருத்து உண்டு ஆனால் பிரச்சனை என்னவென்றால் 100% சரியாக கருப்பொருள் தெரியாது. அதனால் தான் அடக்கிக்கொண்டிருக்கிறேன்.

    அதே போன்ற ஒரு கேள்வியை ரவி கேட்டதால் தான் அனுமதித்தேன்.

    ReplyDelete

Popular Posts