In கவிதைகள்

சுரங்க விளையாட்டு

வீடுதோறும் வாசல்களில்
அகல் விளக்குகள் பொருத்தும்
அழகான நாட்களுள் ஒன்றில்
உன்னை முதல்முறை பார்த்தேன்
காற்றில் தள்ளாடும் சுடர்களை
இரு கைகளைக் குவித்துப் பொத்தி
காத்துக் கொண்டிருந்தாய்
உனது மஞ்சள் நிற பட்டுப் பாவாடையும்
காதுகளில் தொங்கிய லோலாக்குகளும்
சுடர் பட்டுப் பிரகாசித்தன
என் மகள் மஞ்சள் ப்ட்டில் லோலாக்கோடு
சுடர்களைக் காத்துக் கொண்டிருந்தாள்
எனது ஒளி பொருந்திய வாசல்களில்
அழகான நாட்களில்

----------------------------------------------------

ஒவ்வொரு அறையாகத்
திறந்து செல்வது எனக்குப்
பிடித்தமான விளையாட்டு
அறைகள் தோறும் வெவ்வேறு பக்கங்களில்
கதவுகள்
ஒன்றைத் திறந்து பிறிதொன்றில் நுழைந்து
வெவ்வேறு திசைகள் வழியாக
ஒருமுறை நுழைந்தால் திரும்ப வெளியேற
சில வாரங்களோ மாதங்களோ ஆகும்
களைப்படைந்தால் ஓய்வெடுக்கும்
சில அறைகளில்
உணவும் உடையும் பெண்ணும் உண்டு
அதிர்ஷ்டமிருந்தால் அவ்வறைகளுள் ஒன்ரை
இரண்டொரு நாட்களுக்கொருமுறையேனும்
அடைந்துவிடலாம்
எனது கோட்டைக்குக் கீழ்ப் பகுதியில்
இச்சுரங்க விளையாட்டு அரங்கை
என் முன்னோர்கள் நிர்மானித்தார்கள்
கிழவிகளாகிவிட்ட பெண்களையும்
காய்ந்து கருவாடாகிவிட்ட உடல்களையும்
சில அறைகளிலிருந்து அப்புறப்படுத்துவதுதான்
இன்றைக்கு என் ஆட்சியின்
ஒரே பிரச்சனை.

இந்த இரண்டு கவிதைகளும் ரமேஷ்-பிரேமின் "உப்பு" கவிதைத் தொகுப்பில் வெளியாகியிருந்த கவிதைகள்.

நன்றி ரமேஷ் பிரேம்

Related Articles

1 comments:

  1. ஆள புடிங்கப்பா கொலவெறிக் கவுஜ எழுத ஒரு கை கொறயிது

    ReplyDelete

Popular Posts