நான் மலையாளப்படம் பார்த்திருக்கவில்லை, வெள்ளிக்கிழமை ரிலீஸ் என்றதும் கால் தரையில் பரவவில்லை, முன்னாலே வாலி, அமர்க்களம், வில்லன், வரலாறு போன்ற படங்களை முதல் நாள் பார்த்திருந்தேன். காரணம் ரொம்ப சிம்பிள் கதை தெரிவதற்கு முன் பார்ப்பதில் உள்ள சுவாரசியம் பெரும்பான்மையான சமயங்களில் கதை தெரிந்த பின் பார்க்கும் பொழுது கிடைப்பதில்லை. இன்டர்நெட்டில் தேடினேன், ஞாயிற்றுக்கிழமைதான் டிக்கெட் இருந்தது வெள்ளி சனிக்கிழமைகள் ஹவுஸ் புல். சரியென்று ஞாயிறுக்கான டிக்கெட் இரண்டை புக் செய்து 5.45 க்கே கிளம்பினேன் கம்பெனியில் இருந்து; சரி கடைசி டிரை பண்ணிவிடலாம் என்று.
கம்பெனியின் அருகில் இருக்கும் INOXல் தான் முதலில் தேடினேன் படமே ரிலீஸ் இல்லையாம், அங்கிருந்து Forum வந்தால் PVRல் மேலே டிஸ்ப்ளேவில் கீரிடத்திற்கு ஹவுஸ்புல் போர்ட் ஓடிக்கொண்டிருந்தது. ஆனால் மனதைத் தவறவிடாத விக்ரமாதித்தனாக கியூவில் நின்று கவுண்டரை நெருங்கியதும், எதுவும் கேன்ஸல் ஆன டிக்கெட் இருக்கா என்று கேட்க, நான் நின்ற கியூவிற்கு டிக்கெட் தரும் நபர் இல்லையென்றதும், பக்கத்து கவுண்டர் நபர் இரண்டு டிக்கெட் இருப்பதாகச் சொன்னதும் இந்த நபர் ஒரு டிக்கெட்டாய் கொடுக்கமுடியாதென்றும் சொல்லி வீம்பு பிடிக்க. இரண்டையுமே வாங்கிக்கொண்டேன்.
மணி ஏழு இருக்கும் 10.00 மணி ஷோ, என்ன தான் இருப்பது Forum என்றாலும் எனக்கு window ஷாப்பிங்கில் நம்பிக்கையில்லாததால் கீழ் ப்ளோரில் இருந்த Relienceல் ப்ரவுஸிங்க் செய்து மூன்று மணியை கழிக்கலாம் என்று முடிவுசெய்தேன். Gmailல் லாகின் செய்து பார்த்தால் ராம் ஆன்லைனில் இருக்க "என்னய்யா ஒரு டிக்கெட் இருக்கு வர்றீரா கிரீடத்திற்கு" என்று கேட்க, நான் ரிவ்யூ எல்லாம் பார்க்காம அஜித் படம் பார்ப்பதில்லை என்று சொல்லிவிட நானும் விட்டுவிட்டேன்.
சரி படத்தைப் பற்றி, மலையாளப்படத்தை தமிழில் எடுத்திருக்கிறார்கள், மூலக்கதை லோகிததாஸ். நான் அந்தப் படத்தை பார்க்கவில்லை என்பதால் இது ஒப்பீட்டளவிலான விமர்சனமாக இருக்க முடியாது. அதுமட்டுமில்லாமல் அஜித்தின் படத்தை விமர்சனம் செய்யும் பொழுது எனக்குள்ளே ஒட்டிக்கொள்ளும் ரசிகன் tagகினால், விமர்சனத்தைப் பார்த்து படத்திற்குச் செல்பவர்கள் என் விமர்சனத்தை ஒதுக்கிவிடுங்கள்.
அஜித்தின் ஏப்பை சாப்பை படங்கள் போலில்லாமல், இயக்குநருக்கும் கதைக்கும் நல்ல முக்கியத்துவத்தை கொடுத்து எடுத்திருப்பதாகத்தான் பட்டது, அஜித்தின் இண்ட்ரொட்யூஷன் சாங், பைட் கனவு, மற்றும் கிளைமாக்ஸ் கதறல்(இது மலையாளத்தில் இருந்ததா தெரியாது) போன்றவற்றை தவிர்த்துப் பார்த்தால் அஜித் ஏன் இப்படிப்பட்ட ஒரு படத்தில் நடிக்க ஒப்புக்கொள்ள வேண்டும் என்ற கேள்வி எழுகிறது; எப்பொழுதென்றால் தமிழ்ச்சினிமா ஹீரோயிசங்களுடன் ஒப்பீடும் பொழுது. படத்தில் அஜித்தும் ஒருவராகயிருக்கிறார், அவர் ஹீரோவென்று சீன்களை ஆக்கிரமித்து ஹிம்ஸை செய்யவில்லை.
மென்மையானக் காதலைச் சொல்லியிருக்கிறார்கள், த்ரிஷா மாமி அழகாகப் பொருந்தியிருக்கிறார் கொஞ்சம் போல் குண்டாகி ஹிஹி அருமையாக இருக்கிறார். "யோவ் பாட்டைப் போடுங்கய்யா" என்று தியேட்டரே கதறிவிடும் வகையில் அநாவசியமான பாடல் திணிப்புகள் இல்லை(முதல் அஜித் பாடலைத் தவிர்த்து - அஜித்தும் என்ன தான் செய்வார் சொல்லுங்கள், 'எங்கடா உங்க தல' என்று கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் சொல்லாவிட்டாலும் தமிழ் சினிமாவில் இருக்க வேண்டுமில்லையா).
ராஜ்கிரண், சரண்யா, விவேக், சந்தானம் என்று ஏகப்பட்ட நடிகர் கூட்டம்.(ஒரு ஜொள்ளு விஷயம் அது யாருய்யா அஜித்தின் சின்ன தங்கையா நடிக்கிறது - மூன்றடியில் அழகாயிருக்கு பொண்ணு.) விவேக்கின் சந்தானத்தின் மூன்றாம் தர ஜோக்குகள் தனித்து தெரிகின்றன - தேவையில்லாத இடைச் சொறுகல்கள்களாக; நிச்சயமாகத் தவிர்த்திருக்கலாம்(வைரம் பாஞ்ச கட்டை எல்லாம் ரொம்ப ஓவர்) ஆனால் தியேட்டரே அதிர்கிறது என்ன சொல்ல நம் ரசனை மாறவேண்டும் என்ற ஒன்றைத் தவிர, இந்தப் படத்தை தியேட்டரில் மக்கள் பார்க்கும் பொழுது தயாரிப்பாளர் கவனிக்கிறார் என்றால், இரட்டை அர்த்த வசனங்களை தொடரச் சொல்வார் என்று தான் படுகிறது. என்னயிருந்தாலும் வியாபாரமல்லவா.
பக்கத்தில் உட்கார்ந்திருந்த நபர்கள் எல்லாம் இன்டர்வெல்லுக்காக ரொம்ப முன்னமே யோசிக்கத்தொடங்கியிருந்தாலும் எனக்கென்னமோ முதல் பாதி வேகமாகச் சென்றதாகவே பட்டது. ராஜ்கிரண் பிரம்மாதப்படுத்தியிருக்கிறார், இன்னமும் ஹீரோ ரோல் தான் செய்வேன் என்று வீம்புபிடிக்காமல் நடிக்கத்தொடங்க நல்ல கேரக்டர் ரோல்கள் கிடைக்கின்றன. படத்தில் பாதி நேரம் திரையை ஆக்கிரமித்திருக்கிறார் ஆனால் எடுபடுகிறது. அவரோட புருவத்திற்கு என்ன பிரச்சனை என்று தெரியவில்லை; இதிலும் வரைந்திருக்கிறார்கள் க்ளோசப்பில் பளீரென்று தெரிகிறது முன்பு; தவமாய் தவமிருந்துவிலும்(நான் படம் பார்க்கவில்லை - சன் டீவியில்(;)) பார்த்த காட்சிகளை வைத்து) அப்படித்தான்.
படத்தின் உற்சாகமான நேரத்தில் கூட அஜித்தின் முகத்தில் ஒரு மென்சோகம் இளையோடுகிறது; திரும்பவும் குண்டடிச்சிட்டாரோ லைட்டா தொப்பையிருக்கிற மாதிரி தெரியுது. அவருடைய கதாப்பாத்திரத்தை சரியாகச் செய்திருக்கிறார். ஃபைட் சீக்வென்ஸ் நல்லாயிருக்கு கொஞ்சம் போல் எதார்த்தமாய் அடிக்கப் பயன்படுத்தும் விஷயங்களும் சண்டையும்; அஜித் நன்றாகச் செய்திருக்கிறார். த்ரிஷா மாமி நல்லாவேயிருக்கிறார் ரொம்ப நாட்களுக்குப் பிறகு அவருடைய ஒரு படத்தை தியேட்டரில் பார்க்கிறேன்; சாமி பார்த்தேன் என்று நினைக்கிறேன் கடைசியாக. எங்கம்மா போனீங்க தெலுங்கிற்கா.
டப் டப் டப் என்று துப்பாக்கியால் ஆயிரம் பேரை, சென்னையின் ஒட்டு மொத்த ரௌடிகளை கொலைச் செய்யும் இந்தக் காலத்தில் ஒரு நபரை கொலை செய்வதைப் பற்றியும் அதனால் ஏற்படும் பாதிப்புக்களையும் இப்படி சொல்வது தமிழ் சினிமாவில் எடுபடுமா? தங்கச்சியைக் கற்பழிக்காமல் அம்மாவையோ அப்பாவாவையோ சுட்டுப்போடாமல் வில்லன் லேசாய் அடிப்பட்டதாய் காண்பிப்பதும் எடுபடுமா. அஜித் இந்த மலையாள வாசனையுள்ள டைரக்டர்களையும் அஸிஸ்டெண்ட் டைரக்டர்களையும் கொஞ்சம் நாளைக்கு பக்கத்தில் விடாதீர்கள் ;-).
எனக்கு உண்மையிலேயே கன்ஃப்யூஸ்டா இருக்கு தமிழ் மக்களுக்கு இந்தப் படம் பிடிக்குமா என்று, கதாநாயகியுடன் கதாநாயகன் சேர்வதில்லை, படத்தின் ஆரம்பத்தில் இருந்து ஹீரோ கஷ்டப்பட்டு செய்யும் விஷயங்கள் அனைத்தும் தோல்வியில் முடிவது. அதாவது அவரது இன்ஸ்பெக்டராகும் கனவு. பெரிய கனவுப் பாடலொன்றும் கிடையாது; வரும் கனவுப்பாடலிலும் அடிக்கடி நிகழ்காலத்தில் நடப்பது காண்பிக்கப்படுகிறது.(பக்கத்தில் உட்கார்ந்திருந்த ரசிகர் ஒருவர் இந்தப் பாடலில் சில காட்சிகள் வரும் த்ரிஷாவின் மார்புப் பகுதியில் வரைந்திருக்கும் டாட்டுவை பார்த்து அதை பார்க்காத நண்பர்களுக்கும் சொல்லிக் கொண்டிருந்தார். அங்க எப்படி வரைந்திருப்பான் என்ற கேள்வியும் தொக்கி வைத்தார்.)
படத்தில் ஆரம்பப் காட்சிகள் சென்று கொண்டிருக்கும் பொழுது தியேட்டரில் ஒருமுறை சப்தம் போடாமல்(அல்லது வராமல்) மௌனமாகச் சென்றது ஏன் சொல்கிறேன் என்றால் இடைவேளைக்குப் பிறகு அஜித் சிறையில் இருக்கும் ஒரு காட்சியில் வசனமும் இல்லை பேக்ரவுண்ட் மியூஸிக்கும் இல்லாமல் மௌனமாக இருக்க அதே டாட்டு பார்ட்டி திரும்பவும் விசிலடித்தார் சவுண்ட் விடுமாறு; அவருக்கு தெரிந்துதான் இருந்தது படத்தின் அந்த காட்சி அப்படி என்று; அந்தக் காட்சி முடிந்தது "ஆமாண்டா ஆர்ட் படம் எடுத்திருக்கிறான்" என்று சொன்னதை இந்தப் படத்தின் விமர்சனமாக எடுத்துக்கொள்ளலாமா தெரியவில்லை.
பெரும்பான்மையான காட்சிகளில் இயக்குநர் மலையாளத்தின் இயல்பு போய்விடக்கூடாதென்றும் அதே சமயத்தில் தமிழ் சினிமா பார்ப்பவர்களின் மேல் மலையாள வாசனையை தூவிவிடக்கூடாதென்று கஷ்டப்பட்டிருப்பது பிரகாசமாத் தெரிகிறது. ஆனால் அதில் எவ்வளவு வெற்றி பெற்றிருக்கிறார் என்பது டைரக்ட்லி ப்ரப்போஷனல் டு இந்தப் படத்தின் வெற்றி.
என்னைப் பொறுத்தவரை ஒரு நல்ல படம் தான் அஜித்திடன் நான் எதிர்பார்த்த ஒரு மாறுதலான படத்தை அஜித் கொடுத்டிருக்கிறார் தான். ஆனால் இதை விமர்சனமாக எடுத்துக்கொண்டு இந்தப் படத்திற்குப் போகவேண்டாம்.
ஏன் குழப்பறீங்க? நல்லா இருக்கா இல்லையா
ReplyDelete//என்னைப் பொறுத்தவரை ஒரு நல்ல படம் தான் அஜித்திடன் நான் எதிர்பார்த்த ஒரு மாறுதலான படத்தை அஜித் கொடுத்டிருக்கிறார் தான்.//
ReplyDeleteஇதுதான் என் விமர்சனம். ஆனால் ஒரு அஜித் ரசிகன் என்ற முறையில் இதில் ஒன்சைட் அடித்திருக்கலாம் என்பதால் தான் வேறு விமர்சனங்களையும் பார்த்துக் கொள்ளுமாறு சொல்கிறேன்.
யோவ் தாஸு,
ReplyDeleteஎன்னைய்யா ஆச்சு உமக்கு? ஏன் இப்படி வழவழா கொழகொழன்னு?
படத்தைப் போலவே நீரும் படிக்கற எல்லாத்தையும் திருப்திப்படுத்தனுனு முடிவோட எழுதனீரா?!
இல்லை அண்ணாச்சி,
ReplyDeleteஅஜித் ஒரு நல்ல முயற்சியைச் செய்திருக்கிறார் ஏற்றுக்கொள்ளத் தக்கது தான் என்றாலும்.
படத்தில் பக்கத்தில் உட்கார்ந்திருப்பவர்களின் விமர்சனங்களும் கமென்ட்களும் கேட்டதால் இப்படி வழவழா என்று வந்துவிட்டது.
அதுமட்டுமில்லாமல் அஜித்திற்காக ஒன்சைட் அடித்திருக்கலாம் விமர்சனம் ;)
ஆர்ட் டைரக்டர் யாரு?
ReplyDelete***
தோழி ஒருத்தி ஐ எஸ் டி போட்டு சொன்னா...படத்தை தயவுசெய்து டவுன்லோடு பண்ணிக்கோ என்று!!!
Mohan, I am confused. kadaisiyila ennathaan solla varRIngka?
ReplyDeleteif you like ajith, be bold to say, I like ajith and so I like this film. Forget others' comments on that.
Look at me, I dont like Ajith, now itself I will say, the movie is bore though I have not seen it. :)) Thats the spirit man.
விமர்சனம்னு எழுதவந்துட்டா நல்லா தைரியமா எழுதுங்க. வழக்கமான தமிழ் படம் போல இல்லைனு தெரியுது. இணைப்பு படங்கள் அருமை
ReplyDeleteஉங்கள் விமர்சனத்தை விமர்சனம் செய்தால் : ஜல்லி.
ReplyDelete:)))
என்னை கூப்பிட்டிருந்தால் நான் வந்திருப்பேனே...!!
//அஜித் இந்த மலையாள வாசனையுள்ள டைரக்டர்களையும் அஸிஸ்டெண்ட் டைரக்டர்களையும் கொஞ்சம் நாளைக்கு பக்கத்தில் விடாதீர்கள்//
ReplyDeleteஇதுதான் உண்மையான விமர்சனம்.
நான் முதலில் மலையாளத்திலும், பிறகு தமிழிலும் பார்த்தேன். தேறுவது கஷ்டம்தான்.
படத்தோட ஸ்டில்ஸ் அப்புறம் ஒரு பாடல் காட்சி இதெல்லாம் டிவி ல பாக்கும்போது ஜி படம் மாதிரி யே இருந்தது..பாவம் அஜித் :(
ReplyDeleteமோகன்,
ReplyDeleteபடம் எப்பிடியிருக்கு....??? இந்த பதிவு மாதிரி வழவழ கொழ கொழ'தானா?? :)
பொதுவாகவே..அஜித்தின் படங்களை உன்னிப்பாக கவனிப்பேன்... ஏன்னா.. நடுவில விஜய்க்கு ஏதவது மெஸ்செஜ் வரும்...இந்த படத்தில் அப்படி எதுவும் இல்லை...அது போல ஒரு டாப் ஸ்டார் படத்தில் இருக்கும் பல தொந்துரவுகள் இதில் இல்லை... அதை எதிர்ப்பார்க்கும் ரசிகர்களுக்கு இதில் ஏமாற்றமே மிஞ்சும்,,,
ReplyDeleteபொட்டிக்கடை,
ReplyDeleteஇல்லை படம் தியேட்டரில் சென்று பார்க்கக்கூடிய அளவில் தான் இருக்கிறது.
டவுன்லோட் செய்து பார்ப்பது உங்கள் விருப்பம். ;)
ஹரன்,
ReplyDeleteஎழுதிய முறையில் கொஞ்சம் அப்படி வந்துவிட்டதைப் போல் தோன்றுகிறது.
படம் நன்றாகத்தான் இருந்தது. நான் அஜித் ஃபேன் என்பதால் மட்டுமல்ல ;)
vathilai murali, ரவி, சிவா, அய்யனார், ராம், TBCD நன்றிகள்.
ReplyDeleteபக்கத்தில் உட்கார்ந்திருந்த ரசிகர் ஒருவர் இந்தப் பாடலில் சில காட்சிகள் வரும் த்ரிஷாவின் மார்புப் பகுதியில் வரைந்திருக்கும் டாட்டுவை பார்த்து அதை பார்க்காத நண்பர்களுக்கும் சொல்லிக் கொண்டிருந்தார்.//
ReplyDeleteநீங்களும் சொல்லியாச்சா
தாஸ், விமர்சனத்தை விட கீழே இருக்கும் படங்கள் சூப்பராயிருக்கு.. ஹி ஹி...
ReplyDeleteஇந்த சேவையை நீங்கள் தொடர்ந்து வழங்க வேண்டும் என புனேவாசிகள் சார்பாக கேட்டுக் கொள்கிறேன் :-))