In நாட்குறிப்பு

நான் பூப்பிடிக்க போன கதை

மலர்கள் என்று PIT யில் போட்டி அறிவித்ததுமே காலங்கார்த்தால போய் லால்பாஹ்வில் புகைப்படம் எடுப்போம் என்று தீர்மானித்திருந்தேன். வேலை காரணமாக இரவு நேரங்கழித்து வீட்டிற்கு வருவதாலும் வந்த பிறகும் 'குழும' மடல்களைப் படித்துக் கொண்டிருப்பதால் 1.00, 1.30 மணிக்கு தூங்கப்போவதால் காலையில் 6.00 மணிக்கு எழுவதில் தொடர்ச்சியாக பிரச்சனையிருந்தது. அலுவலகத்தில் இன்னிக்கு நீ லால்பாஹ் போனியா என்று கேட்கும் அளவிற்கு 'நானும் ரௌடி' ரேஞ்சில் ஏக பில்டப் கொடுத்துக் கொண்டிருந்தேன். அவர்களாய் அலுத்துப்போய் விட்டுவிட்டார்கள், ஏற்கனவே வயநாட் சென்றிருந்த பொழுது எடுத்திருந்த செம்பருத்தியும், மாமல்லபுரம் சென்றிருந்த பொழுது எடுத்திருந்த தாமரையும் எனக்கு வெகுவாகப் பிடித்திருந்தாலும். போட்டின்னு வந்துட்டா டெடிகேஷனா போய் படம் எடுக்கணும் என்று நினைத்திருந்ததால் சரி புதுசா எடுத்துப் போடலாம் என்று வைத்திருந்தேன்.





நாங்கள் செய்துகொண்டிருந்த ப்ரொஜக்ட் வெற்றிகரமாக UAT முடிந்து கொண்டிருந்ததால், இன்னொரு சின்ன ப்ரொஜக்ட் பார்ட்டி தருவதாகச் சொல்ல, கூட வேலை செய்யும் பெண்கள் ஒரு படம் பார்த்துவிட்டு பார்ட்டிக்குப் போகலாம் என்று வற்புறுத்த, அங்கேயும் பெண்கள் பாலிடிக்ஸ் செய்து "Jab we met" என்ற ஹிந்தி படத்தை தேர்ந்தெடுத்துத் தொலைத்தார்கள். நானும் ஃபோரம் இல்லாவிட்டால் கருடா மாலிற்குத்தான் செல்வார்கள் என்று நினைத்துக்கொண்டிருந்தேன் கேள்விப்படாத சிக்மா மாலின் Fun Cinemaவில் டிக்கெட் பதிவு செய்ய, கன்னிங்கஹாம் ரோட்டில் அந்த தியேட்டர் பரவாயில்லை என்று தான் சொல்வேன்.

ஷாஹித் கபூரும் கரீனா கபூரும் நடித்தப் படம், அப்பா இறந்துவிட அம்மா இன்னொரு நபருடன் ஓடிவிட, காதலித்த பெண் இதன் காரணங்களுக்காக விட்டுவிட்டு வேறொருவனை மணந்துகொள்ள, அம்மா ஓடிப்போனதால் கம்பெனி ஷேர்களில் இருந்த பிரச்சனைகள் பெரிதாக ஹீரோ வீட்டை விட்டு வெளியேறுவதில் தொடங்குகிறது படம். சரி பயங்கர மொக்கை படம் போலிருக்கு என்று நினைக்கும் பொழுது கரீனா கபூரின் அறிமுகம், படத்தை தாங்கி நிற்கிறார் கரீனா. பின்னர் ஹீரோவின் காரணமாக ஹீரோயின் டிரெயினில் இருந்து கீழிறங்க, டிரெயினை கோட்டை விட்டுவிட்டு பின்னர் ஹீரோயினை அவரது வீட்டுற்கு கூட்டிக்கொண்டு போகும் கட்டாயத்திற்கு உள்ளாகிறார் ஹீரோ. வீட்டிற்குச் சென்றதும் ஹீரோயின் தனக்கு பார்த்திருக்கும் மணமகனை விரும்பாமல் வீட்டை விட்டு ஓடிச் செல்ல நினைக்க வரும் பிரச்சனைகள் கடைசியில் எப்படி ஹீரோவும் ஹீரோயினும் எப்படி சேர்கிறார்கள் என்பதுதான் மீதிக்கதை.

கரீனா கொஞ்சம் ஷாஹித் கபூரை விட வயதானவராகத் தெரிகிறார், ஆனாலும் கனமான கதாப்பாத்திரம் என்பதால் வேறுவழியில்லை என்று நினைத்திருக்கலாம். கொஞ்சம் சிவாஜி போல் ஓவர் ஆக்ட் போல் இருந்தாலும் ரொம்பவும் ஆட்(Odd)ஆக இல்லை என்றுதான் சொல்லவேண்டும். இந்தப் படத்திற்கு அழைத்துக் கொண்டுவந்துவிட்டார்கள் என்ற கோபத்தில் நானும் ஹிந்தி தெரியாத/புரியாத சோகத்தில் பிரபுவும் சோகக்காட்சியில் எல்லாம் கெக்கெபிக்கே என்று சிரித்து கூட வந்திருந்த இந்தப் படத்தை தேர்ந்தெடுத்தவர்கள் வம்பிழுத்துக்கொண்டிருந்தோம். படம் முடிந்து இன்ஃபேண்ட்ரி ரோட்டில் உள்ள ஓரியண்டல் ஸ்பைஸஸில் இரவு உணவு முடித்துக்கொண்டு வந்ததும் வந்த களைப்பில் உறங்கிவிட இன்றைக்கு காலங்கார்த்தாலை ஐந்து மணிக்கெல்லாம் விழிப்பு வந்துவிட்டது. சரி இன்னிக்கு தூக்கம் அவ்வளவுதான் என்று நினைத்தவனுக்கு சட்டென்று லால்பாஹ் நினைவில் வர வேகவேகமாய்க் கிளம்பிச் சென்றேன். ஆறுமணிக்கு அங்கே இருந்தேன்.

ஆனால் கொடுமை என்னவென்றால் ஒட்டுமொத்த லால்பாஹ்விலும் ஒரே ஒரு ரோஜாப்பூதான் இருந்தது. ரோஸ் கார்டன் என்றே ஒரு இடம் உண்டு லால்பாஹ்வில் ஆனால் இது சீசன் இல்லையாமாம், பக்கத்தில் இருந்த லோட்டஸ் பாண்ட்டில் தாமரை இருக்கா என்று பார்க்கச் செல்ல இருந்த ஒன்றிரண்டு சின்ன தாமரை மொக்குகள் பக்கத்தில் கூட என் ஷூம் செல்லவில்லை என்பதால் பக்கத்தில் இருந்த வேறு சில மலர்களைச் சூட்டிங் போட்டுக்கொண்டு வந்தாகிவிட்டது. எடுத்த சில படங்கள் கீழே.











என்னோட சாய்ஸ் முதலாவதும் ஐந்தாவதும்

Related Articles

12 comments:

  1. செம்பருத்தியை சேர்த்து இருக்கலாம் :)

    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. சிவா,

    எனக்கும் செம்பருத்தி ரொம்பவும் பிடிச்சிருந்தாலும், பிடிவாதமா புதுசா எடுத்துப் போடணும் என்று போட்டேன். ;)

    நன்றிகள்

    ReplyDelete
  3. முதல் படத்தில் DOF அருமையா இருக்கு, நீலநிற பின்னனி மேலும் அழகு சேர்க்குது. வாழ்த்துக்கள்.

    ஐந்தாவது படம், போட்டியில் என்னுடைய பூவும் அதேதான்.இதை யாருடா எடுக்கப்போறாங்கன்னு நினைச்சிருந்தேன், ம்ம் எடுத்தாச்சு.

    ReplyDelete
  4. கலக்கல் தேர்வு.வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. முதலாவது போட்டோ அருமை!

    ReplyDelete
  6. எழுத்துல Too Many Ideas Syndrome என்று ஒன்றைச் சொல்வார்கள். அதைப் பார்த்து நான் கண்டுபிடித்த இன்னொன்று, Too Many Areas Syndrome. எனக்குத் தெரிந்து இதால் நிறைய பாதிக்கப்பட்டிருப்பவர்கள் நீங்களும் ஹரன் பிரசன்னாவும்தான். நீங்கள் போட்டொகிராபியிலும், அவர் சிறுகதையிலும் மட்டுமே இப்போதைக்குக் கவனம் செலுத்தினால், அத்துறைகளில் சாதிக்கலாம். சாதித்துப் பெயர் வாங்கிய பிறகு, மற்ற துறைகளை முயற்சிக்கலாம். இல்லையென்றால், டி. ராஜேந்தர் கதைதான்டே. இதைப் பிரசன்னாவுக்கும் சொல்லி அவரையும் திருத்தவும். - பி.கே. சிவகுமார்

    ReplyDelete
  7. ஒப்பாரி, அனானிமஸ், வீரசுந்தர், பிகேஎஸ் நன்றிகள்.

    ஒப்பாரி உங்கள் படங்கள் பார்த்திருக்கிறேன், ம்ம்ம் அதே பூதான். ;)

    ReplyDelete
  8. பூப்பறிப்பதை விட பூப்பிடிப்பது கடினம் போல இருக்கே!

    பூ என்றால் அது ரோசா, தாமரைத்தானா, சில காட்டுப்பூக்களும் அருமையாக இருக்கும் அந்த வயலட் கலர் பூ நல்லா இருக்கு, அது டிசம்பர் பூவா இல்லை சங்கு பூனு சொல்லும் கொடில வர பூவா?

    ஒரு முறை, ஒரு சின்ன குளம் அது நிறைய ஆகாயத்தாமரை வயலட் கலர்ல பூத்துக்குலுங்கியது பார்க்க அழகா இருந்தாலும், தண்ணீர் எல்லாம் பாழ் படுத்துகிறதே என்று ஒரு எண்ணம் ஓடியது.

    செயற்கையா வளர்க்கும் பூவை விட எங்கோ தட்டு கெட்டு தானே வளரும் பூக்கள் அதிக வசீகரம் கொண்டவை!

    ReplyDelete
  9. வவ்வால் அது சங்குப் பூ தான்.

    ம்ம்ம் உண்மைதான், ரோசாவையும் தாமரையும் விட்டால் நிறைய அழகான பூக்கள் உண்டுதான்.

    ஆனால் பெங்களூர் போன்ற இடத்தில் என் தேடல் ரோசாவிலும் தாமரையிலும் முடிந்ததைப் பற்றி என்ன சொல்ல?

    ReplyDelete
  10. போட்டிக்கு சேர்த்த முதல் படம் அருமை.
    நீலம் அழகா அமஞ்சிருக்கு.

    கடைசி படம், நல்லாயிருக்கு. ஆனா, ஓஹோன்னு இல்ல ;)

    ReplyDelete
  11. போட்டிக்கு கொடுத்து இருக்கும் முதல் படம் மிக அருமை அந்த பின்னனி கலர் செம கலக்கலாக இருக்கு!

    ReplyDelete
  12. சர்வேசன், குசும்பன் - நன்றிகள்

    ReplyDelete

Popular Posts