Tuesday, April 1 2025

In சிறுகதை முதலிரவு

முதலிரவு

அவள் வருவதற்குள் பார்த்து முடித்துவிடவேண்டும் என்று நினைத்துக்கொண்டே, வேகவேகமாக மின்னஞ்சல் பெட்டியை திறந்துகொண்டிருந்தான் ஷ்யாம்.  கதவு திறக்கும் சத்தம் கேட்டதாலும், இனிமேல் முடியாது என உணர்ந்ததாலும், திறந்த மடிக்கணினியை மூடும் வேலையை செய்யத் தொடங்கினான். கொலுசுச் சத்தம், அவள் நெருங்கிவருகிறாள் என்பதை உணர்த்த, திரும்பிப் பார்த்தான், அவர்கள் வீட்டில் கொலுசுச் சத்தம் கேட்பதில்லை. பெண் குழந்தை இல்லாத காரணமோ என்னமோ தெரியாது. அவன் அம்மா அணிந்திருக்கும் கொலுசு...

Read More

Share Tweet Pin It +1

32 Comments

In தொடர்கதை

உள்ளம் உடைக்கும் காதல் 4

ஞாயிற்றுக் கிழமை, காலையில் மோகன் எழுந்ததிலிருந்து சன் டிவியில் வரும் நிகழ்ச்சிகள் எல்லாம் தொடர்ச்சியாகப் பார்த்துவிட்டு நிமிர்ந்தால் மதியம் மணி ஒன்றாகியிருந்தது, தலைவருடைய தளபதி படம் வேறு போட்டிருந்தான். மோகன் அவனுடைய அப்பா, அம்மா, அக்கா எல்லோரும் உட்கார்ந்து படம் பார்த்துக் கொண்டிருக்கும் பொழுதுதான் அவனுக்கு நினைவில் வந்தது அகிலாவிடம் அவன் அன்றைக்கு லைப்பரரிக்கு வருவதாகச் சொல்லியிருந்தது. உடனே  அவசரமாக கிளம்ப நினைத்தவன், அம்மா "தம்பி, இருடா...

Read More

Share Tweet Pin It +1

7 Comments

In தொடர்கதை

உள்ளம் உடைக்கும் காதல் 3

அடுத்த நாள் காலையில் மோகன் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த பொழுது, கனிமொழியும், அகிலாவும் ஒன்றாக நடந்து வந்து கொண்ருந்தார்கள். ஆஹா இன்று கனிமொழியிடம் மாட்டிக்கொள்ளக் கூடாது என்று நினைத்தவனாய் அருகில் இருந்த ஒரு டீக்கடையில் நுழைந்தான். பெண்கள் டீக்கடையில் டீ குடிப்பதில்லை. கனிமொழி தூரத்தில் இருந்து அவனை கோபத்துடன் பார்த்தாள். ஆனால் கல்லூரிப் பேருந்தில் வந்து உட்கார்ந்ததும் மாட்டிக் கொண்டான். கனிமொழி, "சார்லஸ், நீங்க முன்னாடி...

Read More

Share Tweet Pin It +1

2 Comments

In தொடர்கதை

உள்ளம் உடைக்கும் காதல் 2

"உங்களோட நோட்ஸ் எனக்கு வேண்டும், கிடைக்குமா?". மேடையிலிருந்து இறங்கியதும் நேராக ஆயாக்கடைக்குப் போய் சாப்பாடு ஃபுல் கட்டு கட்டிவிட்டு, வகுப்பிற்கு செல்ல படியேறினான். அவன் கல்லூரி இருந்த காட்டில் சாப்பிடுவதற்கான உணவங்கள் அப்பொழுது இல்லை. அவன் கல்லூரியிலிருந்து இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் இருந்த பிரபலமான பொறியியல் கல்லூரி அருகில் கூட பெரிய உணவகங்கள் கிடையாது. கிழக்குப் பக்கம் ஐந்து கிலோமீட்டர் மேற்குப்பக்கம் பத்து கிலோமீட்டர் தள்ளித்தான் குறிப்பிடும்படியான...

Read More

Share Tweet Pin It +1

8 Comments

In தொடர்கதை

உள்ளம் உடைக்கும் காதல் 1

பளீரென்று அவள் கன்னத்தில் அறைந்து மோகன் தன் வாழ்நாளில் என்றுமே சொல்லியிராத ஒரு கெட்டவார்த்தையைச் சொல்லி அவளைத் திட்டிவிட்டு பின்னர் கோபமாய் "மரியாதையா நடந்துக்கோ, தெரிஞ்சத மட்டும் பேசு" என்று சொல்லி வேகமாக அங்கிருந்து நகர்ந்திருந்தான். அன்றைய பொழுதின் நினைவுகள்  மீண்டும் மீண்டும் வந்து அவன் கழுத்தை நெரித்து இரவு தூக்கம் வராமல் செய்யத்தொடங்கியது. கோடை விடுமுறையின் கடைசி நாட்களின் பொழுது பேச்சுப்போட்டி ஒன்றில் கலந்து கொண்ட...

Read More

Share Tweet Pin It +1

3 Comments

In சினிமா சினிமா விமர்சனம்

ரெக்க ரெமோ மற்றும் தேவி

தமிழ்ப்படங்களப் பத்தில் தமிழில் நாலு வரி எழுதி எத்தன நாளாகுது. தலைப்பின் வரிசை தரவரிசை இல்லை, நான் பார்த்த வரிசை. நான் அப்படியேப் போறேன். ரெக்க படம் ஆடியோ ரிலீஸில் விஜய் சேதுபதி சொன்ன மாதிரி, அவர் மனசாட்சி கேட்ட கேள்விக்கான பதில் இந்தப் படத்தில் நடிக்கக்கூடாதுங்கிறது தான். ஆனா இந்த மாதிரி அப்பப்ப ஒரு கல்லு உட்டுத்தான் ஆகணும் இல்லாட்டி முடியாது. இந்த முற கல்லு...

Read More

Share Tweet Pin It +1

0 Comments

In அரசியல் ஏழாம் அறிவு பதிவுலகம்

பதிவுலக அரசியல் - வெளிப்படையான அலசல்

இப்படி ஒரு பதிவை எழுதிவிட வேண்டும் என்ற ஆசை எனக்கு ஒரு வருடமாகவே உண்டு. நானும் எனக்கு அரசியல் சம்மந்தம் இல்லை என்று எத்தனை முறை சொன்னாலும் கேட்காமல் இணைய அரசியலில் என்னையும் எப்பொழுது சம்மந்தப்படுத்தும் ஒரு குரூப் உண்டு. இப்பொழுது எனக்குத் தெரிந்த இணைய அரசியலைப் பற்றி எழுதுகிறேன். இதுதான் அந்தப் பதுவு கொஞ்சம் வித்தியாசமாகயிருக்கிறதா - பின்ன தமிழ்ல எழுதிப்போட்டா ஆட்டோ அனுப்பிட மாட்டாங்க,...

Read More

Share Tweet Pin It +1

8 Comments

In Only ஜல்லிஸ் அயோனி சீதா சுஜாதா புத்தர் பைத்தியக்காரன் மையம் வளர்மதி

அயோனி

திடீரென்று ஒருநாள் நண்பன் ஒருத்தன் சீதையை அயோனின்னு சொல்வாங்களாமே அப்படின்னா என்ன அர்த்தம் என்று கேட்டு என்னிடம் வந்து நின்றான். எனக்கு முதலில் ஆச்சர்யம் எப்படி இவனுக்கு இந்தக் கதை தெரிந்தது என்று, அடுத்து அவன் ஏன் இதைப்பற்றி கேட்கிறான் என்ற சந்தேகம். ஏற்கனவே நண்பன் ஒரு மாதிரியானவன் என்பதால் சும்மா வாயைக் கிண்டினேன், ஏன் இதைப் பத்தி கேட்கிறாய் என்று. யோனின்னா என்ன அர்த்தம்னு எனக்குத்...

Read More

Share Tweet Pin It +1

15 Comments

In

எவன்டா அது ரங்கராஜ் பாண்டே

அமெரிக்கா வந்ததும் இழந்ததில் முக்கியமானது தமிழ் நாட்டு அரசியல் நிகழ்வுகள். தட்ஸ்தமிழும் கூகுள் ப்ளஸுமே எனக்கு தமிழ்நாட்டு அரசியலுக்கான சோர்ஸ்கள். அங்குமிங்கும் எப்பொழுதாவது இந்தப்பெயர் அடிபட்டு வந்தது தான் என்றாலும், பாண்டே என்று சர்நேம் இருப்பவன் என்ன பெரிதாய் தமிழகத்தைப் பற்றித் தெரிந்துவைத்திருக்கப்போகிறான். தந்தி டிவியெல்லாம் ஒரு டிவியா என்ற கருத்தில் முக்கியத்துவம் அளிக்கவில்லை. வீட்டில் யப்டீவி வழியாய் தந்திடிவியும் உண்டும். எவன்டா அது ரங்கராஜ் பாண்டே...

Read More

Share Tweet Pin It +1

0 Comments

In பயணம்

குடுமியான்மலை - ஒரு சிற்ப அற்புதம்

சித்தன்னவாசலைப் பார்க்கவேண்டும் என்ற ஆசை வந்ததற்கும் காதலர் தின 'என்ன விலை அழகே' பாடலுக்கும் நிச்சயம் தொடர்பிருக்கவேண்டும் என்றே நினைக்கிறேன், காதல் அதுவும் முதற்காதல் தந்த மிகச்சில நினைவுப்பொருட்களின் ஒன்று காதலர் தினம் படப்பாடல்களின் பொழுது இளகும் நினைவுகள். அப்பாவிடம் சித்தன்னவாசலுக்குப் போகவேண்டும் காருக்கு சொல்லிவிடுங்கள் என்றதும் காருக்குச் சொன்னாரா இல்லையோ அங்க வர்ற பொண்ணுங்களை ஃபோட்டோ எடுக்கக்கூடாது என்று சொன்னதுதான் முதலில். அப்பா சொல்லித்தான் தெரியவந்தது...

Read More

Share Tweet Pin It +1

15 Comments

Popular Posts