Girlfriend experience பற்றி...
GFE is pseudo girl friend experience, you mother fucker. However improbable it may be, stop fucking around.
When bae corrects your Bukowski quote and if you paid for her services, you are living in a bliss.
When I asked - Did you genuinely liked anyone? Like blonde, blue eyed boy/gent.
Bae said - Yes I did fancy one guy, he was pretty good. Mostly fun and like you said blond and blue eyes. Haha.
Then I asked - if you dont mind me asking, what's pretty good here.
Bae said - I don't know how to explain this really, :D good size penis.. just the chemistry is there simply.
Hmm. Good size penis does matter! I exclaimed.
Bae then said - It's not about the penis, also chemistry very important. You will be willing trying new stuff with someone who you feel comfortable and attracted to.
But to Bae's misfortune, he didnt like her back genuinely. She said 'I don't meet my future husband like this. Really not. It's not gonna work :D unless you both are crazy. Like a drug dealer escort couple. Haha'
சித்ரா செத்ததும் கிறுக்கியது...
சைக்கோ புண்டைகள் நிறை உலகம். கவனப் புண்டை இல்லைன்னா ஓத்துவிட்டுறுவாளுகள். பீ ஃபக்கிங் கேர்புல் காய்ஸ்.
எஸ்ரா எழுதிய ஒரு எழுத்தாளனின் தற்கொலை பற்றிய பதிவுக்கு பிறகு தற்கொலை பற்றிய என் எண்ணத்தை மாற்றிக் கொண்டிருக்கிறேன். செய்து கொள்வேனா தெரியாது, but its a purest form, ஆனால் தற்கொலை பற்றி நிறைய யோசித்திருக்கிறேன். I might be wrong, I think this guy...இன்றைக்கு தற்கொலைன்னு சொன்னதும் நினைவுக்கு வரும் யுகியோ மிஷிமா பற்றி எஸ்ரா எழுதிய பத்தி நினைவுக்கு வருவது போல் நினைவு கூறப்படும் ஒரு பத்தி எழுதினால் கூடப்போதும். மனதிற்கு நெருக்கமான எழுத்து எஸ்ராவினுடையது.
Suicide is an art form.
― நான் தான்.The thought of suicide is a great consolation: by means of it one gets through many a dark night. ― ஃபெடரிக் நியீட்ஷே
I went to the worst of bars hoping to get killed but all I could do was to get drunk again. ― புக்கோவ்ஸ்கி
If I had no sense of humor, I would long ago have committed suicide. ― மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி
When you're young and healthy you can plan on Monday to commit suicide, and by Wednesday you're laughing again. ― மர்லின் மன்றோ
The trouble about jumping was that if you didn't pick the right number of storeys, you might still be alive when you hit bottom. ― சில்வியா ப்ளாத்
Killing myself was a matter of such indifference to me that I felt like waiting for a moment when it would make some difference. ― தாஸ்தாவெய்ஸ்கி
The literal meaning of life is whatever you're doing that prevents you from killing yourself. ― ஆல்பர்த் காமு
But in the end one needs more courage to live than to kill himself. ― ஆல்பர்ட் காமு
Suicide. It's something I've been thinking about. Not too seriously, but I have been thinking about it. ― ஜே ஆஷர்.
ரவி ஒரு மென்பொருளியல் வல்லுநன், அமேரிக்காவில் கடந்த நான்காண்டுகாலமாக, ஒரு தலைசிறந்த பன்நாட்டு நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறான். மிகவும் அமைதியானவன், அவ்வளவு சீக்கிரத்தில் யாருடனும் பழகிவிடமாட்டான், எல்லா விஷயங்களையும் ஆராய்ந்து முடிவு எடுப்பவன் எனவும் நட்புவட்டாரங்களில் பெயரெடுத்திருந்தான். அவன் தாய் தந்தை முடிவுசெய்து வைத்திருந்த, மீனாவை திருமணம் செய்துக்கொள்ள தமிழ்நாட்டிற்கு விடுமுறையில் வந்திருந்தான்.
மீனா மேலாண்மையியல் படித்துவிட்டு ஒரு அயல்நாட்டு நிறுவனத்தின் உள்நாட்டுக்கிளையில் வேலைசெய்து வந்தாள். அழகும் அறிவும் சேர்ந்த கொஞ்சம் சூட்டிகையான பெண், அவள் உடை உடுத்தும் விதமே, அவளை மற்றவர்களிடம் இருந்து வேறுபடுத்தி காட்டிவிடும். ஒரு சுபயோக சுபதினத்தில் அவர்கள் திருமணம் நல்லவிதமாக முடிந்திருந்தது. மீனாவை அமேரிக்காவிற்கு உடனழைத்து செல்வதற்கான எல்லா ஏற்பாடுகளும் முடிந்திருந்ததால், அவனுடைய எஞ்சியிருந்த விடுமுறையை கழிப்பதற்காகவும் தேனிலவிற்காகவும் குல்லு, மணாலி செல்ல முடிவெடுத்திருந்தான் ரவி.
இதைப்பற்றி அவன் வீட்டில் சொன்னபொழுது அனைவரும் ஆச்சர்யப்பட்டார்கள், சிலநாட்களில் தான் அமேரிக்கா போகப்போகிறார்களே பின் எதற்கு தனியாக ஒரு தேனிலவென்று. ஆனால் ரவி கொஞ்சம் பிடிவாதமாக வற்புறுத்த ஒப்புக்கொண்டனர். மீனாவிடம் தாங்கள் போகப்போகும் பயணத்தைப் பற்றி சொல்ல நினைத்தவன், அடுத்த நாள் காலையில் எழுந்ததுமே ஆரம்பித்தான்.
"மீனா, மணாலி ஒரு அற்புதமான இடம், நான் வேலை சம்மந்தமாக உலகத்தின் எல்லா நாடுகளுக்கும் பறந்திருக்கிறேன். ஆனால் மணாலி போன்ற ஒரு இடத்தை பார்த்ததேயில்லை. முதன் முதலில் டெல்லியில் வேலை பார்த்தபொழுதே நான் தீர்மானித்துவிட்டேன், தேனிலவு மணாலியில்தான் என்று, அதற்கு இன்னொரு முக்கியமான காரணமும் இருக்கிறது. அதை அப்புறம் சொல்கிறேன்." என்று கொஞ்சம் சஸ்பென்ஸ் வைத்தான்.
தன்னுடைய திட்டமிடும் உத்தியை ரவி, மணாலி பயணத்தில் அழகாகக் காட்டியிருந்தான். வீட்டில் உட்கார்ந்தபடியே, சென்னையிலிருந்து டெல்லிக்கும், பின்னர் திரும்பி வருவதற்கும் விமானத்தில் முன்பதிவு செய்தவன். அப்படியே டெல்லியிலிருந்து தனக்கு மிகவும் நெருக்கமான ரஹுமான் என்ற ஓட்டுநரையும் குவாலிஸ் வண்டியையும் பதினைந்து நாட்களுக்கு ஒப்பந்தம் செய்திருந்தான். டெல்லியிலிருந்து சண்டிகர் வழியாக, முதலில் சிம்லா செல்லவதாகவும்; பின்னர் சிம்லாவில் ஐந்து நாட்கள் தங்கிய பிறகு, அங்கிருந்து நேராய் குல்லுவிற்கு சென்று குல்லுவில் மூன்று நாட்களும், பின்னர் மணாலியில் மீத நாட்களையும் செலவழிப்பதாக திட்டம். இதில் டெல்லி, சண்டிகர், சிம்லா, குல்லு, மணாலி ஆகிய இடங்களில் தங்குவதற்கான ஹோட்டல்களையும் சென்னையிலிருந்தே முன்பதிவு செய்திருந்தான்.
அவன் தன்னுடைய திட்டத்தை மீனாவிடம் விவரிக்க அவளுக்கு வியப்பாய் இருந்தது. பயணத்தின் ஒவ்வொரு பகுதியையும், தாங்கள் தங்கப்போகும், சாப்பிடப்போகும் இடங்களைக் கூட திட்டமிட்ட தன் கணவனின் சாமர்த்தியத்தை பார்த்து பிரமித்துப்போனாள்.
"ஏங்க முன்னாடி நீங்க எதுவும் டிராவல் ஏஜென்ஸியில் வேலை செய்தீங்களா?" என்று கேட்ட அவளின் நகைச்சுவை உணர்வை ரசித்தவனாய்,
"இல்லை முன்பே இதேபோல் ஒரு டிரிப் போயிருக்கேன், அதுவுமில்லாம இருக்கவே இருக்கு லோன்லி பிளானட் புத்தகம். அதன் மூலம் தேவைப்படும் மற்ற விவரங்களும் கிடைத்தது. அப்புறம் இன்னொன்னு நான் ஏற்பாடு பண்ணியிருக்கேன்ல, ரஹுமான் அற்புதமான டிரைவர், வாழ்க்கையில என்னை ஆச்சர்யப்படுத்தின பல விஷயங்களில், அவனும் அவனுடைய குவாலிஸம் ஒன்று. ரஹுமான் சொன்னா குவாலிஸ் கேட்கும்னு நினைக்கிறமாதிரி வண்டி ஓட்டுவான். ஒரு விஷயம் மணாலிலேர்ந்து கொஞ்ச தூரம் போனால் ரோதங் பாஸ் அப்பிடின்னு ஒரு இடம்இருக்கு. ரொம்ப பிரம்மாண்டமா இருக்கும் அதன் அழகு. நம்ப பயணத்தில பார்க்கப்போற ரொம்ப முக்கியமான இடங்களில் இதுவும் ஒன்னு. அப்புறம் அந்தப் பனியும் குளிரும் நமக்கு ஒத்துக்கிச்சின்னா லே வரைக்கும் கூட்டிட்டி போறேன்னு சொல்லியிருக்கான் அவன். சொர்கத்தை நேரில் பார்க்கிறமாதிரி இருக்கும் லே. கொஞ்சம் தீவிரவாத பிரச்சனை இருக்குதுதான்னாலும் நாம போகாட்டி வேறயாரு போவாங்க. உனக்கொன்னும் பயமில்லையே?"
அவன் பேசுவதையே ஆர்வமாய்ப் பார்த்துக்கொண்டிருந்தாள் மீனா, இவனுக்குத்தான் எவ்வளவு ஆர்வம் இந்தப் பயணத்தில். அவன் கண்கள் இந்த பயணத்திட்டத்தை சொல்றப்போ எவ்வளவு பிரகாசமா மாறுது என்றவாறு நினைத்துக் கொண்டிருந்தவளை அவன் கேட்ட கேள்வி திசை திருப்ப,
"என்ன கேட்டீங்க?"
நோடிக்கொறு முறை மாறும் அவளின் முகத்தின் உணர்ச்சிகளை ரசித்தவனாய்,
"என்ன அதுக்குள்ள கற்பனையா? இல்லை, லேவில் கொஞ்சம் தீவிரவாதிகளைப்பத்தி பயமிருக்கு அதான் உனக்கு பயமாயிருக்கான்னு கேட்டேன்."
சிறிது யோசித்த மீனா, "உண்மையை சொல்லணும்னா கொஞ்சம் பயமாத்தான் இருக்கு. ஆனா நீங்க தான் என்ன சொன்னாலும் விடமாட்டீங்க போலிருக்கே?" சொல்லிவிட்டு சிரித்தாள்.
"ஏய் அப்படியெல்லாம் கிடையாது, உனக்கு பயமாயிருந்தா போகவேணாம். இது ஒரு அடிஷினல் பிளான் தான் நம்மளோட முக்கியமான பிளான் மணாலிதான். நேரமிருந்து, உனக்கும் மனமுமிருந்தால் போலாம்."
அவன் இப்படி சொன்னாலும் மீனாவிற்கு அவன் மிகவும் ஆர்வமாய் இருந்ததாய்ப்பட்டது. போகாவிட்டால் கொஞ்சம் வருத்தப்படுபவனாயும்.
"இங்கப்பாருங்க நான் சும்மா உங்களை சீண்டினேன். உங்களை மாதிரியே எனக்கும் இந்தியா மேல நிறைய பற்றிருக்கு. நாமெல்லாம் போகாமயிருக்குறதாலத்தான் தீவிரவாதிகள் பிரச்சனை பண்றாங்க. நாம நிச்சயமாப் போலாம்."
ஒருவழியாக இப்படி அவர்கள் மணாலி பயணம் தொடங்கியது. விமானத்தின் மூலம் டெல்லி வந்திறங்கியவர்களை, விமான நிலையத்திலேயே வந்து வரவேற்றான் ரஹுமான். உத்திரபிரதேசத்தை சேர்ந்த அவன் நெடுநெடுவென ஆறடி உயரமாய் கொஞ்சம் ஒல்லியாய் இருந்தான். ரவியும் ரஹுமானும் இந்தியில் உரையாடுவதைக் கேட்டுக் கொண்டிருந்த மீனாவிற்கு ஒன்றுமே புரியவில்லை, இடையிடையில் லடுக்கி, லடுக்கின்னு அவர்கள் பேசுவது மட்டும்தான் விளங்கியது அவளுக்கு. பார்த்தவுடனேயே அவளுக்கு வணக்கம் சொன்னான். விமானநிலையத்திலிருந்து நேராய் கனாட்பிளேஸ் வந்தவர்கள், அவர்கள் முன்பதிவு செய்திருந்த ஹோட்டலுக்கு சென்று குளித்து உடைமாற்றிவிட்டு, சாப்பிடுவதற்கு நேராய் சரவணபவனிற்கு சென்றார்கள்.
"என்னங்க நீங்க சொல்லவேயில்லை, நம்ம சரவணபவன் இங்கிருக்குன்னு." மீனா குழந்தைத்தனமாய் கேட்க, சரவணபவனைப் பார்த்தும் அவளிடம் தெரிந்த மகிழ்ச்சி, ரவியையும் சந்தோஷப்படுத்தியது.
"மீனா, இங்க ரெண்டு சரவணபவன் இருக்கு. நானிருந்தப்பயெல்லாம் கம்பெனி பார்ட்டி கொண்டாட இங்கத்தான் வருவோம். நார்த் இண்டியன்ஸ்க்கு இந்தச் சாப்பாடு ரொம்பப் பிடிக்கும்."
பிறகு, இரண்டு சௌத்இண்டியன் தாழி ஆர்டர்செய்து சாப்பிட்டுவிட்டு வெளியில் வர, அங்கே மல்லிகைப்பூ விற்றுக்கொண்டிருந்த நபர். மீனா புடவை கட்டியிருந்ததால் அவளிடமும் நீட்டினார். ஆசையாய் ரவியிடம் கேட்டு வாங்கி வைத்துக்கொண்டாள் மீனா. அப்பொழுதான் அவனுக்கு மெதுவாய் அலமேலுவின் ஞாபகம் வந்தது. அவளுக்கு மல்லிகைப்பூவென்றாலே பிடிக்காது என்று நினைத்தவன். தன்னைத் தானே கடிந்து கொண்டான் அலமேலுவைப்பற்றி மீனாவிடம் சொல்லாததை நினைத்து, பின்னர் சொல்லிக்கொள்ளலாம் என நினைத்து மறந்தும் போனான்.
அங்கிருந்து நேராய் ஹோட்டலுக்கு திரும்பியவர்கள், இரவுப்பொழுதை அங்கேயே கழித்துவிட்டு விடியற்காலையிலேயே சண்டிகருக்கு கிளம்பினர். வழியில் தான் அவளுக்கு புதிதாய் சந்தேகம் வந்தது.
"ஆமாம் இவன் நைட்டெல்லாம் எங்கத் தங்கயிருந்தான். எங்க சாப்பிட்டான்?"
மீனா ரஹுமானைத்தான் கேட்டாள்,
"அவனுக்கு நாம தங்கின ஹோட்டல்லயே ரூம் கொடுப்பாங்க, அந்த மாதிரி ரூம் எல்லா ஹோட்டல்லயுமேயிருக்கும். அதுபோல சாப்பாடும் கொடுப்பாங்கன்னு நினைக்கிறேன்." சொன்னவனிடம் மீனா,
"நேத்திக்கு லடுக்கி லடுக்கின்னு அவன் உங்ககிட்ட பேசிக்கிட்டிருந்தானே. என்னப்பத்தியா பேசினான்?"
"இல்லம்மா உன்னப்பத்தியில்லை, அது வேற ஒரு பொண்ணைப்பத்தி. உன்கிட்ட அதப்பத்தி ஏற்கனவே பேசணும்னு நினைத்தேன். இன்னிக்கு சிம்லா போனதும் சொல்றேன்." சொல்லிவிட்டு ஒரு சிகரெட்டை எடுத்து பற்றவைத்தான் ரவி.
சிகரெட் பிடிப்பதைப்பற்றி மீனாவிடம் முதலிரவிலேயே சொல்லியிருந்தான். அதுமட்டுமில்லாமல் சில மாதங்கள் அவகாசமும் கேட்டிருந்தான் அதை நிறுத்துவதற்கு. ஆனால் மீனா அப்பொழுது அதைப்பற்றி கவலைப்படவில்லை அவன் எந்தப் பொண்ணைப்பற்றி சொல்லப்போகிறான் என்றே யோசித்துக் கொண்டிருந்தாள்.
அன்று மாலை சிம்லா வந்ததிலிருந்தே மீனா கொஞ்சம் சோபையிழந்ததைப் போலிருந்தாள். முதலில் ரவியும் குளிர் மீனாவிற்கு ஒத்துவரவில்லையென்றே நினைத்தான். பின்னர்தான் அவள் தான் சொல்வதாய்ச் சொன்ன பெண்ணைப்பற்றி நினைத்தே இப்படியிருக்கிறாள் எனத்தெரிந்து கொண்டான். அவர்கள் தங்கியிருந்த ஹோட்டலுக்கு அருகிலிருந்த மாலுக்கு சென்று சுற்றிப்பார்த்துவிட்டு, இரவு அங்கேயே உணவருந்திவிட்டு ஹோட்டலுக்கு திரும்பினர். அவளுடைய நிறத்திற்கு அவள் அணிந்திருந்த கருஞ்சிவப்பு நிற ஸ்வெட்டர் வெகு பொருத்தமாய் இருப்பதாய்ப்பட்டது ரவிக்கு.
"ஏய் இன்னிக்கு காலையிலேர்ந்தே நீ சரியாயில்லை. உடம்புக்கு எதுவும் பண்ணுதா?" என்று கேட்ட ரவிக்கு, இல்லையென்ற தலையசைத்தல் மட்டுமே பதிலாய்க் கிடைத்தது. பின்னர் சிறிது நேரத்தில்,
"நீங்க ஒரு பொண்ணைப்பற்றி சொல்றதா சொல்லியிருந்தீங்க?" மீனா கேட்க ரவிக்கு கொஞ்சம் ஆச்சர்யமாய் இருந்தது. அவன் மீனாவை கொஞ்சம் வித்தியாசமாய் நினைத்திருந்தான். ஆனால் இந்தப் பெண்களுக்குத்தான் எவ்வளவு பொறாமை இந்த விஷயத்தில் என நினைத்துக்கொண்டவனாய்
"ஆமாம் மறந்துட்டேன் மீனா, நான் டெல்லியில் வேலைப் பார்த்துக் கொண்டிருந்த பொழுது அலமேலு அப்பிடின்னு ஒரு பொண்ணை காதலிச்சேன், அவளும் தான். நாங்க ரெண்டுபேரும் ஒரே கம்பெனியில் தான் வேலைப் பார்த்துவந்தோம். அப்படி ஒரு சமயத்தில் தான் நானும் அவளும் இங்கே இதே மாதிரி ஒரு டிரிப் வந்தோம். இப்ப நாம தங்கியிருக்கிற இதே ஹோட்டலில் தான் தங்கினோம்.
அவள் ஒன்னும் அவ்வளவு அழகாயிருப்பான்னு சொல்லமுடியாதுன்னாலும் பரவாயில்லாம இருப்பா. எப்பவும் எங்களுக்குள்ள ஒரு டிஸ்டென்ஸ் இருக்கும். ஆனா அந்த குறிப்பிட்ட பயணத்தில் அந்த இடைவெளி கொஞ்சம் கொஞ்சமா குறைஞ்சு ஒரு நாள் நாங்க தப்பு பண்ணிட்டோம்." ரவி சொல்லிவிட்டு நிறுத்த,
மீனா அங்கே நடப்பதை நம்பமுடியாமல் பார்த்துக்கொண்டிருந்தாள்.
"ஆனால் எங்களுக்குள்ள கருத்துவேறுபாடு வந்து கொஞ்ச நாள்லயே பிரிஞ்சிட்டோம். அவளுக்கும் வேற ஒரு இடத்தில கல்யாணம் ஆய்டுச்சு. இன்னமும் எப்பவாவது மெய்ல் அனுப்புவா எப்படியிருக்கேன்னு கேட்டு அவ்வளவுதான். மற்றபடிக்கு நேர்ல பார்த்து ஆறேழு வருஷம் ஆயிருச்சு."
கேட்டுக்கொண்டிருந்த மீனா ரொம்பநேரம் எதுவும் சொல்லவில்லை, ரவியும் அதைப்பற்றி மேலும் எதுவும் பேசாமல் கண்மூடிப்படுத்திருந்தான். சிறிது நேரம் கழித்து, பின்னர் மீனா அவனை எழுப்ப எழுந்தவன்,
"நீங்க உண்மையை சொன்னதுக்கு நன்றி, நானும் உங்கக்கிட்ட ஒன்னு சொல்லணும். நான் சொல்லவேண்டாம்னுதான் நினைச்சேன். நீங்க என்கிட்ட உண்மையாயிருக்கிறதப்போல நானும் உண்மையாய் இருக்கணும்னுபடுது அதான்..."
சிறிது நிறுத்தியவள்,
"அப்ப எனக்கு பதினெட்டு வயசிருக்கும். நான் காலேஜில் படிச்சிக்கிட்டிருந்தேன் எனக்கு ஒரு ப்ரெண்ட் ராஜேஷ்னு, நல்லா படிக்கிற பையன். எனக்கு படிப்பு விஷயங்களில் இருக்கும் சந்தேகங்களை அவன்தான் தீர்த்துவைப்பான். நாங்க காதலிக்கல்லாம் இல்லை, ஆனா ஒரு நாள், நான் அவன் வீட்டில் சந்தேகம் கேட்கப்போனப்ப தப்பு நடந்திருச்சு. இரண்டுபேரும் தெரிஞ்சுத்தான் பண்ணினோம். அதற்குபிறகு அப்படி நடந்ததேயில்லை.
அவன் இப்ப பெங்களூரில் வேலை பார்க்கிறான். இன்னமும் ஒரு நல்ல நண்பன், நான் முதலிரவன்னிக்கே இதைப்பத்தி சொல்லணும்னு நினைச்சேன். ஆனா உங்களைப்பத்தி கொஞ்சம் தெரிஞ்சிக்கிட்டு சொல்லலாம்னுதான் அன்னிக்கு சொல்லலை. அது நடந்து எட்டு வருஷம் ஆச்சு. இன்னிக்கு வரைக்கும் வேறெந்த தப்பும் பண்ணியதில்லை, இதையெல்லாம் நான் ஏன் உங்கக்கிட்ட சொல்றேன்னா, உங்களுக்கும் அந்த சூழ்நிலை புரியும்ணுதான். அந்த விஷயத்தை நான் மறந்து ரொம்ப நாள் ஆச்சு, நீங்க என்னை நிச்சயம் பண்ணின அன்னிக்குத்தான் திரும்பவும் நினைவிற்கு வந்து உறுத்தத்தொடங்கியது.
இப்ப நான் சொல்லிட்டேன், இனிமேல் தீர்மானிக்க வேண்டியது நீங்கத்தான்."
உண்மையில் ரவியால் அவள் சொல்வதை நம்பமுடியவில்லை, ஒரு சிகரெட்டை பற்ற வைத்துக்கொண்டு பால்கனிக்கு வந்தான். அவள் தான் சொன்ன பெண்ணைப்பற்றி சந்தேகப்பட்டதால் தான் ஒரு அழகான ஊடலுக்காக வேண்டி அவன் அப்படியொரு அலமேலு கதையை அவளிடம் சொல்லியிருந்தான். ரவிக்கு எப்பொழுதுமே அவனிடம் இருக்கும் கதைசொல்லியைப் பற்றிய ஒரு கர்வம் இருக்கும். எப்பொழுதுமே சீரியஸாய் இருப்பதால் அவன் சிலசமயம் அவனுடைய கற்பனைகளை கதையாய் சொல்லும் பொழுது எல்லோருமே நம்பிவிடுவார்கள்.
ஆனால் அவன் இன்று அலமேலுவைப்பற்றி சொன்னது அத்தனையும் கற்பனைகிடையாது. அலமேலு உண்மை, அந்த பயணம் உண்மை, அந்த நிகழ்ச்சியும் உண்மை, ஆனால் உண்மையான அலமேலுவின் காதலன், அவன் கிடையாது அவர்களுடன் வேலைசெய்யும் இன்னொருவன் பிரபாகரன். அந்த சம்பவம் அத்தனையும் உண்மை ஆனால் நடந்தது அலமேலுவுக்கும் பிரபாகரனுக்கும் இடையில். அதற்கு பிறகு கொஞ்சம் சோர்ந்திருந்த அவர்களை சமாதானப்படுத்தியது ரவிதான். இன்னமும் அவன் சொன்ன அந்த வார்த்தைகள் ஞாபகம் இருக்கிறது. ரவி அலமேலுவை தங்கச்சின்னு தான் கூப்பிடுவான். அதைப்போலவே அலமேலுவும் அண்ணா அண்ணான்னு உயிரையே விடுவாள்.
அவர்களுக்குள் இருந்த இனக்கவர்ச்சியில் அன்று தவறு நடந்துவிட்டதால், அவர்களை சமாதானப்படுத்தி அந்தப் பயணத்தை தொடர்ந்து நடத்த உதவியவன் ரவிதான். அதன் பிறகு அந்தப் பயணத்தில் அவர்களுக்குள் இருந்த நெருக்கத்தைப் பார்த்ததாலேயே அவனுடைய தேனிலவை இங்கே நடத்த தீர்மானித்திருந்தான். பின்னர் அவர்களுக்குள் கருத்துவேறுபாடு ஏற்பட்டு பிரிந்து இருவரும் தனித்தனியே கல்யாணம் செய்துகொண்டார்கள். அலமேலுவின் திருமணத்தை அண்ணனாக முன்னின்று நடத்தித் தந்தவனே அவன்தான். அவனால் அலமேலுவை தவறாக நினைக்கவே முடியவில்லை. இன்றைக்கு அவளுக்கு இரண்டு குழந்தைகள் அற்புதமான குடும்பம் என்று அழகாய் வாழ்ந்து வருகிறாள். இன்னமும் அவனிடம் அந்த நிகழ்ச்சிகளைச் சொல்லி அவள் சிரிப்பதுண்டு; அவனும்தான்.
அதனால் மீனா சொன்னதைப் பற்றி யோசிக்க எதுவும் இருப்பதாக படவில்லை ரவிக்கு. அதற்கு அவன் சில ஆண்டுகளாய் பழகிவந்த அமேரிக்க சூழ்நிலையும் காரணமாயிருந்தது. உண்மையில் அவள் செய்தது ஒரு பெரிய தவறாக அவனுக்கு படவில்லை, ஏதோ சின்னவயசு தவறு நடந்துவிட்டது என்றே நினைத்தான். ஆனால் தான் அலமேலுவைப்பற்றி மீனாவிடம் சொன்னது பொய் என் சொல்லலாமா வேண்டாமா என்பதைத்தான் வெகுநேரம் யோசித்துக்கொண்டிருந்தான். அவன் அப்படி சொல்லிவிட்டால், மீனா அவளைப்பற்றி கில்டியாக நினைக்கலாம். தன் கணவனும் தவறுசெய்துவிட்டான் தானும் செய்திருக்கிறோம் சரியாய்ப்போய்விட்டது என்று நினைத்துக் கொண்டிருப்பவளிடம் தான் போய் உண்மையைச் சொன்னால் தவறாய்ப்போய்விடும் எனப் பயந்தான்.
பின்னர் அவள் தன்னைப்பற்றி இன்னும் நன்றாக புரிந்துகொண்ட பின்னர் மெதுவாகச் சொல்லிக்கொள்ளலாம் என்று முடிவுசெய்தவனுக்கு, அப்பொழுதுதான் தான் பால்கனிக்கு வந்து இரண்டுமணிநேரத்திற்கு மேல் ஆகியிருந்த விஷயமே உணர்வில் வந்தது. பாவம் மீனா பயந்துவிடப்போகிறாளென நினைத்தவனாக காலணி அணிய கீழே பார்த்தவனின் கண்களில், இரண்டு மூன்று பாக்கெட் சிகரெட் பட்ஸ் பட்டது, முதலில் இந்த சனியனை ஒழிச்சுக்கட்டணும்னு நினைத்தவனாய் மீனாவை சமாதானம் செய்ய உள்ளே சென்றான்.
In Sci-fic சிறுகதை சினிமா சினிமா விமர்சனம்
தனித்தீவு - Science Fiction
Posted on Sunday, April 12, 2020
இருபத்திரண்டாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் நடந்த அணுஆயுதப்போரால் அழிந்த போன மனித சமுதாயத்தின் கடைசி சிலரில் ரவிவர்மனும் ஒருவன். பூமியின் பெரும்பாலான பகுதிகள் அழிந்துபோயும், சில பகுதிகள் உயிர்வாழமுடியாத அளவிற்கு கதிர்வீச்சு கொண்டதாகவும் இருந்ததால், அவன் தற்பொழுது சோதனைக்கூடத்தில் சக மனிதஜீவராசிகளின் மீதிகளுடன் வாழ்ந்துவருகிறான். சோதனைக்கூடம் அறிவியல் விஞ்ஞானிகளால் போர் நடந்தபொழுது உருவாக்கப்பட்டது, கதிர்வீச்சு தாக்கமுடியாதபடி கட்டப்பட்டது. இந்த சோதனைக்கூடத்தைப் போல் கதிர்வீச்சால் பாதிக்கப்படாத இடம் பூமியில் இருக்கும் ஒரே ஒரு தீவுமட்டுமே.
சோதனைக்கூடத்திலிருந்து அந்த தீவிற்கு செல்வதற்கு ஒரேயொரு சிறியவானூர்தி தான் அந்த சோதனைக்கூடத்தின் விஞ்ஞானிகளிடம் இருந்தது. அவர்களும் என்ன தான் செய்வார்கள். இந்த மிச்ச மீதிகளை வைத்து ஒரு சந்நதியை உருவாக்கும் முயற்சியை ஒரு ஆராய்ச்சியாக அந்த தீவில் செய்துகொண்டிருந்தார்கள். அந்த வானவூர்தியும் மிகச்சிறியது. ஊர்தியின் விமானிதவிர ஒரேயொரு நபர்மட்டுமே செல்லக்கூடியது. ஒவ்வொரு முறை சோதனைக்கூடத்திலிருந்து தீவிற்கு சென்று ஒரு மனிதனை விட்டுவிட்டு திரும்பவும் சோதனைக்கூடத்திற்கு வருவதற்குள் ஊர்தி பலத்த சேதத்திற்கு உள்ளாகிவிடும். அதைச்சரிசெய்து அடுத்த பயணத்திற்கு தயார் செய்ய பல மாதங்கள் பிடிக்கிறது சிலசமயம் வருடங்கள் கூட.
இப்படி சோதனைக்கூடத்திலிருந்து தீவிற்கு செல்லும் மனிதனை தேர்ந்தெடுக்க ஒருவகையான குலுக்கல் முறை அந்த விஞ்ஞானிகளால் கடைபிடிக்கப்படுகிறது. அந்த குலுக்கலில் வென்ற ஒருவர்மட்டும் தீவிற்கு செல்லலாம். ஆனால் அந்த குலுக்கலும் ஊர்தி சரிசெய்யப்பட்டதும் தான் நடத்தப்படும். இந்த முறை நடந்த குலுக்கலில் கூட அவனுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. அதிலிருந்தே ரவிவர்மனுக்கு வாழ்க்கையில் ஈடுபாடு குறைவதாகப்பட்டது. தீவிற்கு போவதற்கும் அங்கு வாழ்வதற்கும் அதிக மனதிடமும் உடல்திடமும் வேண்டுமாதலால், அவர்களுக்கான உணவும் உடற்பயிற்சியும் கட்டாயமானது அதே சமயம் ஆசைக்காக சாப்பிட முடியாமல் கட்டளைக்காக சாப்பிடவேண்டிய கட்டாயம் வேறு.
ஆனால் அவன் மனம் ஒப்புக்கொள்ளாவிட்டாலும் தற்போதைய அவனுடைய மனத்தளர்விற்கு ஒரு பெண்ணும் காரணம் அவள் பெயர் உஷா. அவனுக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் செல்லிற்கு அருகில் உள்ள செல்லைச் சேர்ந்தவள். அணுஆயுதப் போரின் விளைவால் அவர்களுடைய பழங்கால வாழ்க்கை நினைவில் இல்லை. அவனுக்கு இதற்கு முன்பு திருமணம் ஆகியிருந்ததா குழந்தைகள் இருந்தார்களா என்பதைப்பற்றிய ஒருவிவரமும் அவன் அறியவில்லை. ஆனால் சில மாதங்களாகவே உஷாவைப்பார்த்தால் அவள் அவனுடைய மனைவியைப் போல் இருக்கிறாள் என்பதைப் போன்ற ஒரு எண்ணம் அவன் மனதில் ஏற்படத்தொடங்கியிருந்தது.
உஷாவும் ரவிவர்மனிடம் நன்றாய்ப் பழகுவாள், விஞ்ஞானிகளின் கட்டளைப்படி அங்கு சோதனைக்கூடத்தில் வாழும் வரை எந்தவிதமான விஷயத்திலும் கவனம் செலுத்தாமல் தீவிற்கு செல்வதும் அங்கு சென்ற பிறகு மனித சமுதாயத்தை பெருக்குவதுமே அவனுக்கும் கொள்கையாயிருந்தது. சில வருடங்களாக இப்படி உணர்ந்ததில்லை, உஷாவிடம் அவன் பல மாற்றங்களை சில மாதங்களாக கவனிக்கத்தொடங்கியிருந்தான் அது தந்த பாதிப்பில் தான் கொள்கை காற்றில் பறக்கத்தொடங்கியிருந்தது. அது தந்த பயம்தான் அவன் வாழ்க்கையை சோர்வாக்கிக் கொண்டிருந்தது. அதாவது தான் குலுக்கலில் வென்று தீவற்கு சென்றுவிட்டாலோ இல்லை உஷா தீவிற்கு முதலில் சென்றுவிட்டாலோ என்ன செய்வது என்பதைப்பற்றி சிந்தித்தவனாய் மனதைக் குழப்பிக்கொண்டிருந்தான். உஷாவிற்கும் ஒருவாறு ரவிவர்மனின் நோக்கம் தெரிந்துதானிருந்தது, அவளுக்கும் இது விருப்பமே ஆனால் விஞ்ஞானிகளை மீறி இதில் இறங்குவதற்கு அவள் மனம் ஒப்பவில்லை. சில நாட்களாக இதைப்பற்றி உஷாவிடமும் பேச்சுக்கொடுத்துக் கொண்டிருந்தான்.
“உஷா, நேத்திக்கு செல்க்ட் ஆன ஆண்ட்ரூவைப் பார்த்து பேசினியா?”
“ம்ம்ம் பேசினேன், அதிர்ஷ்டக்காரன் அவனுக்கு என்னைவிட ஐந்து வயது குறைவு தெரியுமா?” அவளுடைய பேச்சில் வருத்தம் தெரிந்தது.
“உஷா நீ தீவிற்கு போய்ட்டா என்ன மறந்துடமாட்டீயே” ரவிவர்மனுக்கே தான் கேட்ட இந்தக்கேள்வி ஆச்சர்யத்தையளித்தது. அதைவிட உஷாவிற்கு,
“என்னங்க இப்புடி கேட்டுட்டீங்க, நாம ரெண்டு பேரும் எவ்வளவு நாளா பழகிக்கிட்டிருக்கோம் உங்களைப்போய் மறப்பேனா?”
அவள் சொன்னாலும் நிஜம் அவனை யோசிக்கத்தான் வைத்தது. அவள் தீவிற்கு முதலில் சென்றால் சில மாதங்களிலிலோ, வருடங்களிலோ தானும் அங்கு செல்ல நேரலாம், இல்லை அங்கே தீவற்கே போகாமல் பல ஆண்டுகள் இங்கேயே கழிந்துபோகம்படியும் நேரலாம். அவனுக்கு ராமசாமித்தாத்தாவைப் பற்றித்தான் தெரியுமே அந்தப் பெரியவருக்கு 65 வயதாகிறது. இன்னும் குலுக்கலில் தேர்வு செய்யப்படாமலே இருக்கிறார். அதைப்போலவே நானும் இங்கேயே இருக்கவேண்டிய சூழ்நிலை நேர்ந்தால்? அவனுக்கு நிச்சயமாய் ஒன்று தெரியும் விஞ்ஞானிகள் எக்காரணம் கொண்டும் குலுக்கலில் தேர்வுசெய்யப்படாமல் தீவிற்கு அனுப்பமாட்டார்கள். பின்னர் வந்த இரண்டொறு நாட்களஇல் அவன் உஷாவிடமிருந்து விலகியிருக்க விரும்பினாலும் உஷாவாக வந்து பேச்சுக்கொடுத்தாள்.
சோதனைக்கூடத்திலே அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது இந்த தடவை நிகழ்ந்த தீவிற்கான பயணம். அதிகமாக கதிர்வீச்சிற்கு பாதிக்கப்படாமல் திரும்பிவந்ததால் இரண்டே நாட்களில் அடுத்த குலுக்கல் நடைபெற்றது, எல்லோருக்கும் மகிழ்ச்சி தரும் விதமாக இந்ததடவை ராமசாமித்தாத்தா தேர்வு செய்யப்பட்டார், அங்கிருந்த அத்துனை நபருக்கும் சந்தோஷமே தாத்தா தேர்வுசெய்யப்பட்டதில் அதைவிட சந்தோஷம் ஊர்தி கதிர்வீச்சில் பாதிக்கப்படாமல் திரும்பிவந்ததால் இது தொடர்ந்தால் இங்கிருக்கும் அனைவருமே சில வருடங்களில் தீவிற்கு சென்றுவிடமுடியும்.
ஆனால் ரவிவர்மனின் மனதில் ஏற்படும் இத்தகைய மாற்றங்களை தெரிந்து கொண்டிருந்த விஞ்ஞானிகள் அவனை அழைத்துப்பேசினார்கள். பின்னர் அவனை சில மருத்துவப்பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டுமென்று கூறி சோதனைக்கூடத்தின் உட்பகுதிக்கு அழைத்துச் சென்றார்கள். இத்தனை வருடம் இங்கிருந்தாலும் அவன் அந்தப்பகுதிக்கு வந்ததேயில்லை. இரண்டொரு நாட்கள் அவன் அந்த உள்பகுதியில் தங்கியிருக்க நேர்ந்தது. அந்தச்சமயத்தில் அவன் தெரிந்துகொண்ட அவனைப்பற்றிய, அந்த சோதனைக்கூடத்தைப்பற்றிய, விஞ்ஞானிகளைப்பற்றிய, பூமியைப்பற்றிய ரகசியம் அவனுக்கு பைத்தியம் பிடிக்கச்செய்வதாயிருந்தது.
அவனுக்கு கொடுக்கப்பட்டிருந்த சக்திவாய்ந்த தூக்கமாத்திரைகள் ஒழுங்காக வேலைசெய்யாததால் விழித்துக்கொண்ட ரவிவர்மன், பக்கத்து அறைகளுக்கு சென்று பார்த்த பொழுதுதான் இதுவரை தீவிற்குச்செல்ல தேர்ந்தெடுக்கப்பட்டதாக சொல்லப்பட்ட ராமசாமித்தாத்தா மயக்கமான நிலையில் ஒரு அறையில் இருப்பதைப் பார்த்தான். அருகில் சென்று பார்த்தபொழுதுதான் அவருக்கு ஆப்ரரேஷன் செய்யப்பட்டிருப்பதும் அதன் காரணமாய் அவர் இறந்துவிட்டிருந்ததும். இப்படியாக அடுத்தடுத்த அறைகளில் தீவிற்குச்செல்ல தேரந்தெடுக்கப்பட்டதாய் சொல்லப்பட்ட அனைவரும் இறந்துபோன நிலையில் அறைகளில் இருப்பது தெரிந்தது. அவனுக்கு விவரம் புரியாவிட்டாலும் ஒன்று மட்டும் நிச்சயமாகத்தெரிந்தது, அது அங்கிருந்து யாரும் தீவிற்குச்செல்லவில்லை. ஏதோஒரு காரணத்திற்காக கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள் என்று மட்டுமே புரிந்தது. ஒன்றையும் காணாதவனாக வந்து படுக்கையில் படுத்துக்கொண்டான். அடுத்தநாள் அவனை மீண்டும் முன்பிருந்த இடத்திற்கே மாற்றினார்கள். அங்கே சென்றதும் முதல் காரியமாய் ரவிவர்மன் உஷாவிடம் தான் பார்த்ததைச் சொன்னான்.
“ரவி உண்மையைத்தான் சொல்றீங்களா? நம்பவேமுடியலை. நம்மை கொலை செய்யவேண்டிய அவசியம்தான் என்ன இந்த விஞ்ஞானிகளுக்கு. அதுதான் புரியவில்லை.” அவன் சொன்னதைக் கேட்டதும் அவள் அதிகமாய் பயந்துபோனாள்.
“அதுதான் எனக்கும் புரியவில்லை உஷா, இந்த விஷயமாக என்னால் சிந்திக்கவே முடியவில்லை.” சிறிது யோசித்தவன் “உஷா இப்படி செய்தால் என்ன? நிச்சயமாய் அந்த விஞ்ஞானிகள் அனைவருக்கும் விஷயம் தெரிந்திருக்க வேண்டும். அவர்களில் ஒருவரை மடக்கிப்பிடித்து கேட்டால் என்ன.”
உஷாவிற்கும் ரவிவர்மன் சொன்ன திட்டம் சரியாகத்தோன்றியது. இருவரும் திட்டமிட்டு, கேமிராக்கண்கள் படாத ஒரு இடத்தை தேர்ந்தெடுத்து வைத்துக்கொண்டார்கள். பின்னர் விஞ்ஞானிகளிலே கொஞ்சம் வயதான விஞ்ஞானியாய்ப் பார்த்து அந்த இடத்திற்கு சாமர்த்தியமாய் அழைத்துவந்தனர். அவர்கள் முன்பே பார்த்துவைத்த அந்த இடத்திற்கு வந்ததும் ரவி தன் வசம் இருந்த கத்தியை எடுத்து அந்த விஞ்ஞானியின் கழுத்தில் வைத்தான் பிறகு,
“இங்கப்பாருங்க இன்ன என்ன நடக்குதுன்னு மரியாதையா சொல்லீறுங்க இல்லைன்னா உங்களை நான் கொலை பண்ணீறுவேன்.” ரவிவர்மன் மிரட்ட முதலில் ஒன்றுமே தெரியாதவர் போல் நடித்த அந்த விஞ்ஞானி பின்னர் ரவிவர்மன் அவர் கழுத்தில் அந்தக் கத்தியால் மெலிதாய்க் கீறவும்.
“சொல்லீற்றேன், உங்கக்கிட்ட சொன்னமாதிரி பூமி அணுஆயுதப்போரால் அழியவில்லை, இருபத்திரண்டாம் நூற்றாண்டின் அறிவியல் வளர்ச்சியாக, குளோனிங் தொழில்நுட்பம் மிகப்பெரிய அளவில் வளர்ந்தது. அதைப் பயன்படுத்திக்கொள்ள நினைத்த உலகின் பெரும் பணக்காரர்கள் தங்களைப் போன்றே ஒரு குளோனிங் மனிதனை இந்த தொழிற்கூடத்தில் உருவாக்க எங்கள் உதவியை நாடினர். பிற்காலத்தில் அவர்களுக்கு ஏதாவது உடல் உறுப்புக்களில் பிரச்சனை வந்தால் உதாரணத்திற்கு, கிட்னியிலோ, இருதயத்திலோ, நுரையீரலிலோ, இல்லை கல்லீரலிலோ வந்தால் உங்களிடமிருந்து அதை எடுத்து அவர்ளுக்கு பொருத்தி சரிசெய்து கொள்வார்கள்.”
கொஞ்சம் இடைவெளிவிட்டு,
“இது போன்ற பணக்காரர்களின் ஜீன்களின் மாதிரி எங்களிடம் முன்பே உள்ளதால் அவர்களுக்கு இந்த வயதில் இந்த நோய் வரும் என்றுகூட முன்பே கணித்திருப்போம் பின்னர் உங்களை தீவிற்கு அனுப்புவதாய்ச் சொல்லி உங்களிடமிருந்து அறுவை சிகிச்சை செய்து அந்த உறுப்பை அவர்களுக்கு கொடுத்துவிடுவோம். இதுதான் இங்கே நடந்துவருகிறது ஒரு வகையான ஆரம்பக்கட்ட முயற்சிதான் இது. பின்காலங்களில் உங்களை உருவாக்கி வளர்த்துவரும் செலவைக் குறைத்து இந்த திட்டத்தை அனைத்து மனிதர்களுக்கும் பயன்படச்செய்யும் முயற்சியின் முதல் கட்டம்தான் இது.”
“நாங்கலெல்லாம் மனிதர்கள் கிடையாதா? எங்களைக் கொல்வது குற்றமாகாதா?” ரவியின் கேள்வியில் வேகம் இருந்தது.
“இல்லை, நீங்கள் குளோனிங் மனிதர்கள், இன்னும் சொல்லப்போனால் பொருட்கள். அவ்வளவே உங்களை உருவாக்கி நாங்கள் விலைக்கு விற்கிறோம். இதில் தவறொன்றுமில்லை.” அந்த விஞ்ஞானி சொல்ல ரவிக்கு ஆத்திரமாய் வந்தது.
“உங்களுக்கெல்லாம் வீடு எங்கிருக்கிறது. இங்கிருந்து எப்படி வெளியே செல்வது.” ரவி கேட்க,
ஆரம்பத்தில் பதில் சொல்லிக்கொண்டிருந்தவர் இந்தக் கேள்விக்கான பதிலைச் சொல்ல மறுக்க, ரவி அந்தக்கத்தியை சற்று ஆழமாக அவர் கழுத்தில் செலுத்துவதைப்போல் பாவனை செய்ய,
“இருக்கு, இது ஒரு ஆஸ்பிடல் மாதிரிதான், எங்களுக்கெல்லாம் வீடு தனியா இருக்கு. இங்கேர்ந்து எங்களுக்குரிய வேலை முடிந்ததும் வீட்டிற்கு போய்விடுவோம்.”
பின்னர் அந்த விஞ்ஞானியைப் பயன்படுத்தி ரவி, அந்த ஆராய்ச்சிக்கூடத்திலிருந்து வெளியேற முயன்றான். அவரை அடித்து மயக்கமாக்கிவிட்டு அவருடைய பயனாளர் அட்டையை பயன்படுத்தி, அவர் குறிப்பிட்டிருந்த வழியில் வெளியேறினான். கொஞ்சம் தவறு நேர்ந்தாலும் அவன் கண்டுபிடிக்கப்படும் நிலையிருந்தும் சாமர்த்தியமாக வெளியேறினான். வெளியில் அவனுக்கான புது உலகம் ஆச்சர்யங்களுடன் காத்திருந்தது. அந்த மருத்துவமனையில் கட்டுப்பாட்டிலிருந்து வெளியில் வந்த ரவிவர்மனுக்கு பிறகுதான் தெரியவந்தது அவன் அந்த நாட்டின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவனுடைய குளோனிங் என்பது அதனால் அவனை பேட்டியெடுக்க வந்திருந்த பத்திரிக்கையாளர்களிடம் இந்த உண்மையைச் சொல்ல, இந்த குளோனிங் பிரச்சனை அந்த நாடாளுமன்றம் வரை சென்றது. பின்னர் ஒரு அவசர சட்டம் இயற்றி இனிமேல் இதுபோன்ற குளோனிங் முறையை தற்காலிகமாக நிறுத்த உத்தரவிட்டது அந்த நாட்டு நீதிமன்றம். அதே தயாரித்து வைக்கப்பட்டிருந்த குளோனிங்க மனிதர்களையும் உடனே அவர்களுக்கான ஒரு சிறிய மாற்றத்தை கொண்டுவரச் செய்து வெளியில் விடச்சொல்லி உத்தரவிட்டது.
-------------------------------------
படிமங்கள் ஆபத்தானவை, மனதில் ஒன்றிலிருந்து ஒன்றாய் தோன்றி மறைந்து உருவாகி பதிந்துவிடாமல் இருக்கவேண்டியவை, ஒரு படிமம் உங்களை காதலில் முழுதாய்க் குப்புறத்தள்ளிவிடும் என்று எப்பொழுதோ படித்தது நினைவில் வந்தது. உமையாளின் குலுங்கிய முலைகளுக்கான படிமமாக என்னுள் படிந்துபோனது ஆண்டாள். 'மானிடவர்க்கென்று பேச்சுப்படில்' தான் அதன் முதல் புள்ளியாகயிருக்க வேண்டும், 'கொங்கை தன்னைக் கிழங்கோடும் அள்ளிப் பறித்திட்டு அவன் மார்பில் எறிந்தேன்' என்பதையும் பற்றி பல நாள் யோசித்தது தான் காரணமாயும் இருந்திருக்க வேண்டும். கற்பனையின் எல்லை அறிவியல் சொல்லும் t-10^-43 வரைமட்டும் நீளவேண்டிய அவசியம் கொண்டதல்ல, இயற்பியலின் எல்லைகளைத் தாண்டியதுதான் ஆண்டாளின் கற்பனை என்பதால், என் கற்பனையும் இயற்பியலைத் தாண்டியிருக்கலாம். இந்தத் தொல்லை கொஞ்சம் இல்லாமலிருந்தது இப்பொழுது சிந்துவால் மீண்டும் மனம் பேதலிக்கிறது, பித்து பிடிக்கிறது, உயிரொடு புலன்கள் தள்ளுறும் பித்து. இன்னமும் சென்னையில் தான் இருந்தேன், மனம் டெல்லி என்றது, குளிர்காலம் ஒரு அடியில் நடக்கும் ஆள் தெரியாத முன்காலைப் பொழுது போர்வைக்குள் தங்க ஒட்டியானம் மட்டும் அணிந்த உமையாள். அவள் ஒப்புக்கொள்ளவே முடியாத எதையோவொன்றை அவளிடம் கேட்க நினைத்து வந்து படுத்த பொழுது மட்டும் நினைவில் இருக்கிறது, அங்கிருந்து டெல்லிவந்தது புலன்களை அலைக்கழிக்கும் பித்து. நான்கு சுவர்களுக்குள் எதைக்கேட்டாலும் செய்வாள் என்று உறுதியான பிறகு சுவற்களுக்கு வெளியே மனம் யோசிக்கத் தொடங்கியது முதலில், பின்னர் அங்கிருந்து நீண்ட புள்ளி நான்கு சுவற்றுக்குள் அவள் மறுக்க என்ன விஷயமிருக்கும் என்று யோசனை செய்யத் தலைப்பட்டதும், தொடர்ந்து
மூன்றாவது நபர் என்கிற புள்ளியில் நின்றது.
அப்பாவிடம் அறம் பற்றி அப்பொழுதுதான் கேட்டிருந்தேன், அந்தக் கேள்வி என்னையும் தாக்கியது. என்ன காரணமோ என்னிடம் சிறுவயதில் இருந்து அறம் இருந்திருக்கவில்லை, அதைப் பற்றி அத்தனை யோசித்திருக்கவில்லை, அறம் என்று ஒன்று இருக்கவேமுடியாது என்ற முடிவுக்கு நான் வருவதற்கு என் புத்தக அறிவே போதுமானதாக இருந்திருக்க வேண்டும். அம்மா அப்பா, அவர்களின் ஓப்பன் மேரேஜ், அங்கிருந்து தொடங்கிய ஒன்று தான் என்னை அறமற்றவனாக்கியிருக்க வேண்டும். அறமென்று ஒன்று இருக்கமுடியாதென்றாலும், வாழ்க்கை முழுவதும் 'Its not fair' என்று சொல்லியபடியே இருந்திருக்கிறேன். உலக சினிமா, உலக இலக்கியம் என்னில் அறத்தை தான் விதைத்திருக்கவேண்டும் சொல்லித்தந்திருக்க வேண்டும் ஆனால் அங்கிருந்து விலகி என் போக்கிற்கு அறத்தை வளைத்தபடியிருந்தேன். உமையாள் எனக்கு கொஞ்சம் அறம் கற்பித்தாள் என்றாலும், அந்த அறமே விநோதமானது தானே. தொடர்ச்சியாய் சிந்துவை விலக்கமுடிந்திருந்தது அப்படிப்பட்ட அறம் சார்ந்த காரணங்களுக்காகத்தான். சிந்துவின் இளமை தான் முதல் பிரச்சனை என்றாலும் அவள் உமையாளின் மகள் என்பதுதான் முக்கியமான காரணம். அங்கிருந்து ஜனனி நோக்கி விலகியது எதனால் என்று ஊகிக்க முடியவில்லை, ஆனால் ஜனனி நிகழாமல் போயிருக்கமுடியும், எத்தனைக் கணக்குகளை கூட்டிக்கழித்துப் போட்டாலும் ஜனனி நிகழ்ந்தது ஒரு நம்பமுடியாத நிகழ்தகவு. சிந்து என்னைத் தொடர்ச்சியாக மாரல் கேம்பஸில் இருந்து விலகச் செய்தபடியிருந்தாள், நான் தொலைத்திருந்த, தொலைத்ததாய் நினைத்திருந்த இளமை மீதான மயக்கம் ஒரு மாயை என்று உணரச் செய்திருந்தாள். தேர்ச்சி, முழுமை என்பதில் நான் கொண்டிருந்த கவர்ச்சியையும் இல்லாமல் செய்தபடியிருந்தாள், அவளிடம் இருந்த அமெச்சூர்தனத்தில் நான் விழுந்திருக்க வேண்டிய அவசியம் எனக்குப் புரியவேயில்லை.
தேர்ச்சியான ஒரு கலவியை நோக்கி சிந்துவை நகர்த்தவேமுடியாது, அவளால் அது இயலாது. உமையாளிடம் நான் பயின்ற சொல்லித்தந்த ஒன்றை சிந்துவிடம் பெறவோ கொடுக்கவோ முடியாது. நான் உமையாளுடனான கூடலில் முழுமையை நோக்கி நகர்வதாகத்தான் நினைத்துவந்தேன், அங்கிருந்து ஏன் சிந்துவுடனான கூடலைக்கு இசைந்தேன் என்பது என் அறிவிற்கு எட்டியதாகயில்லை, அவள் மீது காதலில்லை என்று எனக்கு நானே சொல்லிக்கொண்ட வியாக்ஞானங்களில் நம்பிக்கையில்லை, வெறுமனெ அவள் தந்தையிடன் அழைத்துச் செல்வதற்கான முயற்சி மட்டுமல்ல, எங்கிருந்தோ தொற்றிக்கொண்ட காதல் இருந்தது. எங்கிருந்து என்பதில் எனக்கு அறம் சார்ந்த பிரச்சனைகள் தோன்றியது, என் அறம் வளையத் தொடங்கியது சிந்துவில் இருந்து அல்ல, ஜனனியிடம் இருந்தும் அல்ல, என் தாய் வயதை ஒத்த உமையாளிடம் இருந்தும் கூட இல்லை. இதைப் பற்றி நிரம்ப யோசித்து யோசித்து நான் கண்டுகொண்ட புள்ளியானது சிக்மண்ட் ப்ராய்டை உதைக்கணும் என்பதில் முடிவடைந்தது.அப்பாவிடம் சிந்துவிற்காய் அவர் அறம் வளையுமா என்பதில் தொடங்கிய கேள்வி, உமையாளின் அறம் சிந்துவிற்காய் வளையுமா என்று நீண்டு. மூன்றாவது நபர் என்ற புள்ளிக்கு அவளின் அறம் தாழ்த்தி வருவாளா என்ற கேள்வி வந்தது. அறம் வளையும் என்பதை ஐன்ஸ்டைன் புவியீர்ப்புவிசையைப் பற்றி கண்டறிந்தது போல் அறிந்திருக்கிறேன், ஆனால் எவ்வள்வு வளையும் என்பது தான் கேள்வி. மகள் வயதுடைய ஒருவனுடன் தொடர்பு வைக்க வளையும் அறம், அவள் மகளை ஒரு பார்வையாளனாக இருக்கு ஒப்புமா என்று தெரியவில்லை, அதுவரையிலும் சிந்து என்னிடம் கேட்டது இதைத்தான், தன் தாயுடன் கலவிகொள்ள அவள் ஆசைப்பட்டாளா தெரியாது ஆனால் நெருக்கமாக மிக நெருக்கமாக கட்டில் வரை, இல்லையில் படுக்கையில் இருக்கணும் என்று தான் சிந்து சொல்லியபடியிருந்தாள். அறம் அத்தனை வளையுமா? தெரியாது. சிந்துவாகயில்லாமல் மூன்றாவது நபர் அவளுக்குத் தெரியாதவராக இருந்தால் வளையுமாக இருக்கும். ஜனனி ஒரு புள்ளியென்று நினைத்தேன், அவளும் ஒப்புக்கொள்வாளாயிருக்கும். அவளாய் சொல்லவில்லை என்றாலும் ஜனனி ஒரு பை செக்சுவலாகத்தான் இருக்க வேண்டும் என்று நினைத்திருந்தேன். அந்த மூன்றாவது நபர் ஒரு ஆணாக என்னை விட வலிமையானவராக இருக்க என் அறம் ஒப்புமா என்று யோசிக்கமுடியவில்லை, உமையாள் சுந்தர் பற்றித் தெரியுமென்றாலும். ஒரே கட்டிலில் மூவராக இருக்க மனம் நெகிழ்ந்திருக்க வேண்டும், மூவருக்கும். நெகிழுமா தெரியாது. ஆனால் நான் உமையாளிடம் அதைத்தான் கேட்க விரும்பினேன் சிந்துவை அழைத்துவந்து அவள் தகப்பன் வீட்டில் அறிமுகப்படித்தி திருப்பி அழைத்து வருவதற்கான பரிசாய்.
ஆச்சர்யமாய் உமையாள் வாட்சப்பில் அழைத்தாள்.
Hey, are you alright?
யாரோ கைலிக்குள் கைவிடுவதைப் போலிருந்ததால் திடுக்கிட்டு விழித்துப்பார்த்தேன், ஷைலஜாதான் பெட்ஷீட்டுக்குள் என்னவோ தேடிக்கொண்டிருந்தாள். இதன் மூலம் விடியற்காலையில் தூங்கிக் கொண்டிருந்த சுயத்தை, உணர்ச்சி நரம்புகளை மீட்டி எழுப்பிவிட்டிருந்தாள் என் அன்பு மனைவி. திருமணம் முடிந்து ஏறக்குறைய ஒரு வருடம் ஓடியிருக்கும் நிச்சயத்தார்தத்தின் பொழுது பார்த்ததற்கும் இப்போதைக்குமான வித்தியாசம் அதுவரை தெரிந்து கொண்டிருந்த நட்சத்திரங்கள் மழை மேகம் சூழ்ந்ததும் இல்லாமல் போவதைப் போல இருந்தும் இல்லாதது போலவே இருந்தாள். மழை மேகம் கலைந்த சமயத்தில் தெரிந்தது அவள் கொஞ்சம் போல் பூசினதைப் போலிருந்தது மட்டும் தான்.
Popular Posts
-
யாரோ கைலிக்குள் கைவிடுவதைப் போலிருந்ததால் திடுக்கிட்டு விழித்துப்பார்த்தேன், ஷைலஜாதான் பெட்ஷீட்டுக்குள் என்னவோ தேடிக்கொண்டிருந்தாள். இதன் மூ...
-
தலைவியைப் பிரிந்து பொருள் கொண்டுவரச் சென்ற பாலைநிலத் தலைவனை ஒத்த மனநிலையிலேயே இருந்தேன், சிந்துவின் தொல்லை கொஞ்சம் குறைந்திருந்தது, அவளுக்கு...
-
சிந்துவும் விசுவுடன் வந்தாள், அவன் வெளிக்கிளம்ப தயாராகத் தொடங்கியதும் என்ன? எங்கே? எதற்கு? என்று கேட்டு அவளும் வந்தே தீருவாள் என்று ஏறக்குறை...








