சமீபத்தில் படிக்க நேர்ந்த ஒரு விஷயம், சிந்தனையில் இருந்து விலக மறுத்தது. கட்டபொம்மன் என்று சொல்லும் பொழுதே நினைவுக்கு வருவது சிவாஜி கணேசன் நடித்த அந்த படமும் அதன் வசனங்களும், ஆனால் சினிமாவில் வருவதெல்லாம் நிஜம் என்று நம்பும் பழக்கம் விட்டு பல ஆண்டுகள் ஆகிறது.
ஒரு சினிமாவால் வரலாற்றை எப்படியெல்லாம் திசைதிருப்ப முடியும் என்பது வியப்பளிக்கிறது. கல்கியின் பொன்னியின் செல்வன் போல், சோழகுலத்தின் வரலாற்றை தப்பும் தவறுமாக, திரித்ததைப்போல். சினிமாக்காரர்களால் திரிக்கப்பட்ட கதைகளே அதிகம், பாரதி படம் பார்த்து வருத்தப்பட்ட உண்மையான் பாரதி விசுவாசிகளை பார்த்துள்ளேன். அது போல்தான் இதுவும்.
ஆனால் பாரதியையும், கட்டபொம்மனையும், தமிழ் மக்களுக்கு அறிமுகம் செய்துவைத்தார்களேத்தவிர வேறு எதையும் செய்துவிடவில்லை இவர்கள். கல்கி சோழர்களை தமிழ் கூறும் நல்லுலகுக்கு அறிமுகம் செய்து வைத்ததைப் போல். நான் படித்த அந்த கட்டுரை உங்கள் பார்வைக்கு,
நன்றி, ஜே ராஜா முகம்மது, அவருடைய புதுக்கோட்டை மாவட்ட வரலாறு.
-------------------------
கப்பத்தொகை 16 ஆயிரத்து 550, மே 31, 1798 வரை பாக்கி இருப்பதாகவும், அத்தொகையை உடனடியாக கட்டும்படியும் மதுரை கலெக்டராக இருந்த ஜாக்ஸன், கட்டபொம்மனுக்கு எச்சரிக்கைக் கடிதம் அனுப்பி வைத்தார்.
ஆனால், குறிப்பிட்ட காலக் கெடுவுக்குள் பாக்கியை செலுத்தவில்லை கட்டபொம்மன். இதனால், பாஞ்சாலக்குறிச்சியின் மீது படையெடுக்க விரும்பினார் ஜாக்ஸன். அப்போது, ஆங்கிலேயே படை, திப்பு சுல்தானுடன் போரில் ஈடுபட்டிருந்ததால், இதற்கு உடன்படவில்லை. மாறாக கட்டப்பொம்மனை, ராமநாதபுரத்துக்கு அழைத்துப் பேசுமாறு பணித்தது.
இதன்படி தன்னை ராமநாதபுரத்தில் ஆக.18,1798ல் சந்திக்கும்படி கட்டபொம்மனுக்கு கடிதம் எழுதினார் ஜாக்சன். இந்தக் கட்டளையை அனுப்பிவிட்டு, திருநெல்வேலி பகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள, ராமநாதபுரத்தில் இருந்து புறப்பட்டார் ஜாக்சன்.
கட்டபொம்மன் தனது பரிவாரங்களுடன், ஜாக்ஸனை சந்திக்கச் சென்றார். ஆக.27, 1798ல் குற்றாலத்தை ஜாக்சன் அடைந்தபோது, கட்டப் பொம்மனும் அவரது பரிவாரங்களும் ஜாக்சனுக்காக காத்திருந்தனர். கட்டபொம்மனை அங்கு சந்திக்க மறுத்துவிட்டார் ஜாக்சன்.
பின், சொக்கம்பட்டி, சிவகிரி, ஸ்ரீவில்லிபுத்துõர் போன்ற இடங்களிலும் சந்திக்க முயன்று, தோற்று, பயணம் தொடங்கி 23 நாள் கழித்து, 400 மைல் அலைந்து, செப்.19, 1798ல் ராமநாதபுரத்தில் ஜாக்சனை சந்தித்தார் கட்டபொம்மன்.
கிஸ்தி கணக்கை சரி பார்த்தபோது, ரூ.5,000 (1080 பசோடா)மட்டுமே பாக்கி இருப்பதை கண்டுகொண்டார் ஜாக்ஸன். ஆகவே, மே 31,1798க்கும் செப். 31, 1798க்கும் இடைபட்ட மூன்று மாத காலத்தில் கட்டபொம்மன் ரூ.11 ஆயிரம் கிஸ்தி பண பாக்கியை கட்டிவிட்டதாக அறிகிறோம்.
அகந்தை கொண்ட ஜாக்ஸன், மேற்படி சந்திப்பின் போது கட்டபொம்மனையும், அவரது அமைச்சர்களையும் மூன்று மணிநேரம் நிற்கவைத்தே விசாரணை செய்தார். சந்திப்பின் இறுதியில் ராமநாதபுரம் கோட்டையிலேயே அவர்கள் தங்கியிருக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து ஏற்பட்ட கைகலப்பில் கட்டபொம்மன் தப்பிக்கும் முயற்சியில், லெப்டினன்ட் கிளார்க் என்பவர் கொல்லப்பட்டார். கட்டபொம்மனின் அமைச்சர் சிவசுப்ரமணிய பிள்ளை கைது செய்யப்படார். கட்டபொம்மன் தப்பித்துக் கொண்டார்.
இந்த நிகழ்ச்சிக்குப் பின் கட்டபொம்மன் சென்னை கவர்னருக்கு மேல் முறையீட்டுக் கடிதம் ஒன்று அனுப்பினார்.
கவர்னருக்கு அனுப்பிய கடிதத்தில், தான் கலெக்டரின் கட்டளைக்கு மதிப்பளித்து அவரைச் சந்திக்க, பாக்கி இருந்த முழு கிஸ்தி பணத்தையும், ராமநாதபுரத்துக்கு எடுத்துச் சென்றதாகவும், அங்கு ஏற்பட்ட கை கலப்பிற்கு ஜாக்சனின் நடவடிக்கைகளே காரணம் எனவும் குறிப்பிட்டிருந்தார். (கட்டபொம்மன் படத்தில் சிவாஜி பேசும் வசனங்கள் எல்லாம் "டுபாக்கூர்'தானா?)
கடிதத்தைக் கண்ட கவர்னர் கிளைவ், தற்காலிகமாக ஜாக்ஸனை பதவி நீக்கம் செய்தும், சிவசுப்ரமணியப் பிள்ளையை விடுதலை செய்தும் ஆணை பிறப்பித்தார். அத்துடன், ராமநாதபுரம் நிகழ்ச்சிகளை குறித்து விசாரணை நடத்த வில்லியம் பிரவுன், வில்லியம் ஆரம், ஜான் காசா மேஜர் ஆகியோர் அடங்கிய ஒரு குழுவையும் நியமித்தார்.
இக்குழுவின் விசாரணையில் (டிச.15, 1798) ராமநாதபுரத்தில், கட்டபொம்மனை, ஜாக்சன் நடத்திய விதம் ஏளனத்திற்குரியது என்று தெரியவந்தது.
விசாரணைக் குழுவின் முடிவு ஏற்கப்பட்டு, பதவியில் இருந்து ஜாக்ஸன் நீக்கப்பட்டார். அவரது இடத்தில் லுசிங்டன் கலெக்டராக நியமிக்கப்பட்டார்.
கட்டபொம்முவும் உண்மையும்
பூனைக்குட்டி
Friday, February 16, 2007
பூனைக்குட்டி
Primarily a java programmer, an athiest and a film geek, who loves reading, writing and photography.
Related Articles
Subscribe to:
Post Comments
(
Atom
)
Popular Posts
-
இன்னும் படித்துக்கொண்டிருக்கும் என் அக்காவிற்கு நேற்றிரவு நாய்கள் என்னைப்பார்த்தது நக்கலடிப்பதாய்ப்பட்டது தெரியப்போவதில்லை உள்ளிருப்பது த...
-
"முரளீதரனைப்பற்றி என்ன நினைக்கிற சொரூபா?" "கள்ளனண்னா அவன், தமிழனே கிடையாது அவனும் சிங்களவன்தான்." சில காலமாகவே எனக...
-
அதாவது நான் சொல்லவந்தது என்னன்னா? இரண்டொறு வாரத்திற்கு முன்னாடி ஒளியின் வேகம் குறைக்கப்பட்டது அப்படின்னு ஒரு கட்டுரையைப்போட்டேன், அதை போடுறத...
//கல்கியின் பொன்னியின் செல்வன் போல், சோழகுலத்தின் வரலாற்றை தப்பும் தவறுமாக, திரித்ததைப்போல்.
ReplyDeletePl. explain.
Reg. the news of Kattapomman, this has been approved by various Universities.
http://imohandoss.blogspot.com/2005/09/blog-post_01.html
ReplyDeleteமேற்குறிப்பிட்டது, பாலாவினுடைய தவறாயினும் படிக்க.
கல்கியைப்பற்றி குறிப்பிடும் பொழுது, சில வரலாற்று சம்பவங்களை மட்டுமே குறிப்பிட்டுள்ளார். அதுமட்டுமில்லாமல் நம்மில் பலருக்கு, ஆதித்த கரிகாலன் என்னும் ராஜராஜனின் அண்ணன், சோழ தேசத்தை ஆண்டது தெரியுமா, அவன் இளவரசன் மட்டும் கிடையாது, மன்னன் அவனுக்கு திருமணம் ஆகி ஒரு குழந்தை கூட உண்டு. பொன்னியின் செல்வன்படித்தவர்கள் இதைப் பற்றி கல்கி தவறாக கூறியுள்ளதை அறிவார்கள். சின்ன உதாரணம் மட்டுமே. நிறைய இருக்கிறது. நான் கல்கியை குறை கூறவில்லை, அவரால் முடிந்தது அவ்வளவே.
"திருவயிற்றுதித்த மதுராந்தகத்தார்" என்று கல்வெட்டின் ஒரு வரியை வைத்து மதுராந்தக சோழரின் பாத்திர படைப்பில் கதை முழுதும் வரும் மதுராந்த்தக சோழன் பாண்டிய வம்சத்தினர் என எழுதியதாக குறிப்பிட்டுள்ளார் கல்கி.
ReplyDeleteபொன்னியின் செல்வனில் சிறிய அளவில் வரலாற்று சம்பவங்களோடு பெரும் கற்பனை கலந்து எழுதியுள்ளார் கல்கி, நான் முதலில் படித்தது பொன்னியின் செல்வன், பிறகு வரலாற்று நூல்களை படித்தபோது பல இடங்களில் கல்கியின் கற்பனை வளத்தை அறிந்தேன்.
ஆதித்த கரிகாலன் பாத்திரம் கல்கியின் கற்பனைக்கு மற்றுமொரு எடுத்டுக்காட்டு'
http://kuzhali.blogspot.com/2005/07/blog-post_31.html
பொன்னியின் செல்வனை வெறும் வரலாற்று புனைக்கதை என்றளவில் தான் படிக்க வேண்டுமே தவிர அதையே வரலாறு என்று படிக்க கூடாது.
நானும் அதைத்தான் சொன்னேன் குழலி. உங்களைப்போலவோ இல்லை இன்னும் சிலரைப்போலவோ கல்கியையும் தாண்டி சோழத்தை படிப்பவர்களை பற்றிய கேள்விகள் இல்லை. கல்கி எழுதியதை வைத்து நந்தினி ஒரு உண்மையான கதாப்பாத்திரம் என நம்பும் மக்களிடன் கல்கி, தவறான ஒரு வரலாற்றை தந்துள்ளதாகவே கருதுகிறேன். அதைத்தான் நான் சொல்லவந்தவனும்.
ReplyDeleteமோகன்தாஸ்,
ReplyDeleteசினிமா தாண்டி பல செய்திகளைத் தந்துள்ளீர்கள்.
இதுபோல் எஸ்.இராமகிருஷ்ணனும் "வரல் ஆற்றின் திட்டுகள் " என்று வாஞ்சிநாதன் விசயத்தில் சொல்லப்படாத தகவல்களைச்சொல்லி இருப்பார்.
பார்க்க:
http://www.tamiloviam.com/atcharam/page.asp?ID=20&fldrID=1
மிக நல்ல ஆய்வுக் கட்டுரை. இது போல மேலும் இருந்தால் தொடர்ந்து இடுங்கள். நன்றி.
ReplyDeleteநன்றி கல்வெட்டு, குமரன் உங்களுடைய பின்னூட்டத்திற்கு.
ReplyDeleteஅறிவாலி,
ReplyDeleteபிறகு கட்டபொம்மன் எதற்கு தூக்கிலிடப்பட்டார் என்பதையும் சொல்லவேண்டியது தானே!
கல்கி புனைகதைதான் எழுதியதாக பொன்னியின் செல்வன் முடிவுரையிலேயே சொல்லி விடுகிறார். ஆனால் நீங்கள் அவர் வரலாற்றை திரித்து எழுதியதாக சொல்வது ஏன் என்று புரியவில்லை.
ReplyDeleteஉங்கள் ஆதித்ய கரிகாலனைப் பற்றிய செய்திக்கு ஆதாரம் உண்டா? இங்கு சென்று வாசித்துக் கொள்ளவும். ஆதித்த கரிகாலனின் வாரிசு பற்றியெல்லாம் எதுவும் சொல்லவில்லை.
பொதுவாக வரலாற்று ஆசிரியர்கள் பலருக்கும் வெவ்வேறு School of thoughts இருக்கும். இப்பொழுது போன்ற ஆவண வசதிகள் பண்டைய காலங்களில் இல்லாததால் இருக்கின்ற ஆதாரங்களை வைத்து அவரவர் புரிதலின் படி மறு-ஆவண படுத்துகிறார்கள். உங்கள் கூற்றுக்கு வலு சேர்க்கும் ஆதாரங்கள் இல்லாத வகையில் நீங்கள் இன்னொருவரை 'திரித்ததாக' கூற முடியாது. கல்கி அவர்கள் அவருடைய முடிவுரையில் நந்தினி / சேந்தன் அமுதன், பூங்குழலி போன்றோர் கற்பனை பாத்திரங்கள்தான் என்பதை தெளிவாக சொல்லியிருக்கிறார். நீங்கள் பயப்படும்படி யாரும் தவறாக வழிநடத்தப் பட மாட்டார்கள் என்று நம்பலாம்.
கட்டபொம்மு பற்றிய உங்கள் செய்திகள் பற்றி கேள்விப் பட்டிருக்கிறேன். அந்த திரைப்படம் மிகை படுத்தி எடுக்கப் பட்டிருந்தது.
புதிய செய்திகள் சொல்ல வேண்டும் என்ற உங்கள் ஆர்வம் மெச்சத் தகுந்தது. ஆனால் விஷயங்களை சரி பார்க்காமல் அவசரமாக எழுதுகிறீர்களோ என்று தோன்றுகிறது. தவறாக எண்ணாதீர்கள்.
பின்னூட்டம் வெளியிட்டமைக்கு மிக்க நன்றி.
பொன்னின் செல்லன் சரித்திர புனைவுதான், அத சரித்திரமாக யாரும் எடுத்துகொண்டதாக தெரியவில்லை.
ReplyDeletei am aasath:
ReplyDelete//நன்றி, ஜே ராஜா முகம்மது, அவருடைய புதுக்கோட்டை மாவட்ட வரலாறு. //
so you had taken the only source from Roja mohamed.
If you have tell about any invention, use the source of eithersides.
For this especially read Wells and Bannerman ....
நல்ல வேடிக்கையாயிருக்கிறது ஸ்ரீதர் வெங்கட்,
ReplyDeleteவிட்டால் விக்கிபீடியாவில் சொல்லாததெல்லாம் உண்மையேயில்லை என்று சொல்லிவிடுவீர்கள் போலிருக்கு.
நான் சொன்னதற்கு ஆதாரம் உண்டும். அது The Chozala's by Neelakanda Shasthri.
வேண்டுமானால் என்னுடைய சோழர்கள் வரலாறு படித்துப்பாருங்கள்.
பட்டணத்து ராசா நீங்கள் அப்படி எடுத்துக்கொள்ளவில்லை என்பது சந்தோஷத்திற்கு உரிய செய்தி.
ReplyDeleteஆதாரம் சொன்னதற்கு நன்றி. இங்கு இரண்டு விஷயங்களை நீங்கள் கவனிக்க வேண்டும்.
ReplyDelete1) நீங்கள் சொன்னது - கல்கி திரித்தார் என்று. அதாவது நடந்த ஒரு சம்பவத்தை இல்லை என்று மறுப்பது. கற்பனையான சம்பவங்களை எழுதுவது புனைவு என்று சொல்ல வேண்டும்.
2) நீங்கள் எழுதியது ஒரு ஆவணம் என்றால் விக்கி பீடியாவும் ஒரு ஆவணம்தான். அங்கேயும் நீலகண்ட சாஸ்திரியின் நூல்தான் மூல ஆதாரமாக சுட்டப் பட்டிருக்கின்றது.
நான் சொல்ல வந்தது நீங்கள் தகவல்களை சரி பார்த்த பின்னால் அதை மேற்கோளிட்டு எழுதலாமே என்றுதான். போகிற போக்கில் சொன்ன மாதிரி இருந்தது.
மற்றபடி யாரும் பொன்னியின் செல்வனை வரலாற்று புத்தகமாக கருதவில்லை என்பதுதான் உண்மை.
i am aasath:
ReplyDelete//Major John Bannerman writes to the Madras Government, 17 October, 1799, thus: 'it may not be amiss here to observe that the manner and behaviour of the Poligar during the whole time of his being before those who were assembled yesterday at the examination, which took place were undaunted and supercilious. He frequently eyed the Etiapore Poligar (Poligar of Ettayapuram), who had been so active in attempting to secure his person, and the poligar of Shevighergy with an appearance of indignant contempt and when he went out to be executed, he walked with a firm and daring air and cast looks of sullen contempt on the poligars to his right and left as he passed. It was reported to me that in his way to the place of execution he expressed some anxiety for his brother (Kumaraswamy Nayak) alone: and said, when he reached the foot of the Tree on which he was hanged, that he then regretted having left his fort, in the defence of which it would have been better for him to have died'. (Major John Bannerman, 17 October 1799, letter to Madras Government, R. C , Vol 98, pp: 2877-2884"//
ஸ்ரீதர், கற்பனையான விஷயங்களை கற்பனைக் கதாப்பாத்திரங்களைக் கொண்டு செய்தால் அது சரி. மற்றபடிக்கு ராஜராஜரும், ஆதித்தகரிகாலனும், மதுராந்தகரும் கற்பனை கதாப்பாத்திரங்கள் அல்லர்.
ReplyDeleteபுரிந்துகொள்ளுங்கள்.
அவர்கள் மீது கதை புனையும் பொழுது ஆதாரங்களை மீறுவது தவறுதான் அதைத்தான் கல்கி செய்தார். பாலகுமாரன் செய்கிறார்.
இது திரித்தல் தான். ஆனால் எனக்கு கல்கியையும் சரி பாலகுமாரனையும் பிடிக்கும் ஏனென்றால் ஏதோ இந்த அளவிற்காகவாவது சோழர்களை மக்களிடம் கொண்டு சேர்த்தார்களே என்று தான்.
//2) நீங்கள் எழுதியது ஒரு ஆவணம் என்றால் விக்கி பீடியாவும் ஒரு ஆவணம்தான். அங்கேயும் நீலகண்ட சாஸ்திரியின் நூல்தான் மூல ஆதாரமாக சுட்டப் பட்டிருக்கின்றது. //
ReplyDeleteஅங்கே அந்தப் பத்தியை எழுதியவர்களுக்கு ஆதித்த கரிகாலன் மீது காதல் இல்லாமல் இருந்திருக்கலாம் மேலும் அவனுடைய பெயர் வம்ச வரலாற்றில் இருந்ததாலேயே பத்தி எழுதும் படி நேர்ந்திருக்கலாம். உண்மை தெரியாது எனக்கு.
ஆனால் நான் சோழர்கள் புத்தகம் வாங்கியதே ஆதித்த கரிகாலன் பற்றி தெரிந்து கொள்ளத்தான்.
//புதிய செய்திகள் சொல்ல வேண்டும் என்ற உங்கள் ஆர்வம் மெச்சத் தகுந்தது. ஆனால் விஷயங்களை சரி பார்க்காமல் அவசரமாக எழுதுகிறீர்களோ என்று தோன்றுகிறது. தவறாக எண்ணாதீர்கள். //
நீங்கள் அவசரப்பட்டு இந்த வார்த்தையைச் சொன்னது. நீங்கள் தேடிப் பார்த்திருக்க வேண்டும் இல்லையெனில் சாதாரணமாகக் கேட்டிருக்க வேண்டு அது இல்லாமல் விஷயங்கள் சரி பார்க்காமல் எழுதுகிறீர்களோ என்று சொல்வது எப்படி சரியாகும் என்று தெரியவில்லை.
இதை வெறும் வறட்டு வாதமாக வளர்த்த வேண்டும் என்பது எனது அவா இல்லை. தவறாக நினைக்க வேண்டாம்.
ReplyDeleteஒரு புனைவு கதையில் வரும் கதா பாத்திரங்களில் புனைவுகள் இருக்கத்தான் இருக்கும். காஞ்சி பொன் மாளிகையில் ஆதித்த கரிகாலர் தனது மாமன் திருக்கோவிலூர் மலையமானுடன் நடத்தும் வீராவேச உரையாடலுக்கு என்ன ஆதாரம் தர முடியும்? அதற்காக ஆதித்த கரிகாலன் ஒரு போர் வெறியன் என்று கல்கி திரித்து விட்டார் எனறா சொல்ல முடியும்? அப்படியே சொன்னாலும் அதற்கு ஏதாவது ஆதாரத்தோடு சொல்லலாமே என்றுதான் எனக்கு தோன்றியது.
எனக்கு கல்கி என்னவெல்லாம் ஆராய்ச்சி செய்தார் என்று தெரியாது. ஆனால் அவர் பற்பல ஆதாரங்களை முடிவுரையில் தருகிறார். அதே போல் நீங்களும் என்ன ஆராய்ச்சிய் செய்தீர்கள் என்று தெரியாது. நீங்கள் ஒரு வரியில் இன்னொருவரின் ஆக்கபூர்வமான உழைப்பை 'திரித்தல்' என்று சொல்லி விடுகிறீர்கள்.
உங்களின் கருத்து மேல் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் அதை சொல்கிற முறை ஏனோ ஒரு அவசரத்தில் குறையாக கூறுகின்றதே தவிர வேறு எதுவும் சொல்லவில்லை.
பின்னர் வருகிறேன்.
அவ்வளவுதான்!
//ஆனால் நான் சோழர்கள் புத்தகம் வாங்கியதே ஆதித்த கரிகாலன் பற்றி தெரிந்து கொள்ளத்தான்.
ReplyDelete//
மிகவும் நன்று. நான் முன்பே சொன்னது போல உங்கள் ஆர்வம் மிகவும் மெச்சத் தகுந்ததே.
//விஷயங்கள் சரி பார்க்காமல் எழுதுகிறீர்களோ என்று சொல்வது எப்படி சரியாகும் என்று தெரியவில்லை. //
நான் தேடிப் பார்த்துவிட்டுத் தான் பின்னூட்டம் இட்டேன்.
//கல்கி எழுதியதை வைத்து நந்தினி ஒரு உண்மையான கதாப்பாத்திரம் என நம்பும் மக்களிடன் கல்கி, தவறான ஒரு வரலாற்றை தந்துள்ளதாகவே கருதுகிறேன்.//
நான் முதலில் பொன்னியின் செல்வன் படித்த பொழுது எனது வயது எட்டு. இன்னும் நன்றாக ஞாபகம் இருக்க்கிறது கல்கியின் முடிவுரையில் அவர் நந்தினி ஒரு 'கற்பனை' பாத்திரம் என்று சொன்னது. அதனால்தான் அப்படி சொல்ல நேர்ந்தது. மற்றபடி உங்கள் கருத்தை நீங்கள் சொல்கிறீர்கள். அதை நான் உள்வாங்கி கொள்ள முயல்கிறேன். அவ்வளவே!
உங்களின் விளக்கங்களுக்கு மிகவும் நன்றி!
உங்களின் வரலாற்று ஆர்வம் வரவேற்க தக்கதே எனினும் கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலையும் செவாலியரின் நடிப்பினையும் காணும் கண்ணோட்டம் மேலோட்டமாக தோன்றுகிறது.நாவலும் நடிப்பும் தமிழில் முத்திரை பதித்தவை.இரண்டிலும் உண்மைக் கதை ஏன் தேடுகிறீர்கள்.நாவலின் நடையும் அசராமல் படிக்க வைக்கும் யுக்தியுமே அதன் சிறப்பு.கல்கியின் கால கட்டத்துக்குள் கிடைத்த ஆதாரங்களுடனே கதை புனைவு செய்துள்ளார்.தமிழில் ஒரு வரலாற்று நாவலை மர்ம நாவலுக்கு இணையாகக் கொண்டு போனது கல்கியின் வெற்றி எனக் கொள்ள வெண்டும்.அடுத்து கட்டபொம்மு குறுநில மன்னன் அல்ல கொள்ளைக்காரன் என்று கூட தமிழ்வாணன் புத்தகம் போட்டார்.இப்பொழுது புதிய ஆதாரங்களுடன் நீங்கள் மேடைக்கு வருகிறீர்கள்.உங்கள் ஆதாரப்படியே பார்த்தாலும் மூன்று மணி நேரம் நிற்க வைத்தே விசாரணை என்பதிலேயே போர்க்குணம் வெடிக்கிறது.அதிலேயே கட்டபொம்மனின் கதைக் களமும் அமைந்துள்ளதாக கருதுகிறேன்.கட்டபொம்மன் கதை ம.பொ.சி வசனம் ஜாவர் சீதாராமன் என்று ஞாபகம்.அதற்கு மெருகேற்றி உணர்ச்சி ஊட்டியது மட்டுமே ஒரிஜனல் சிவாஜியின் வேலை.பொன்னியின் செல்வனும்,சிவாஜியின் நடிப்பும் தமிழில் நிரந்தர முத்திரைகளாகி விட்டன.இனி அவற்றை மாற்ற இயலாது.வரலாற்று உண்மைகளைத் தேடுங்கள்.தேடுகின்ற உண்மைகளை வலுவான எழுத்துக்களோடு பதித்தீர்கள் என்றால் அனைவருக்கும் பயன்படும்.நன்றி.வணக்கம்.
ReplyDeleteமிக நல்ல தகவல் மோகன்..இன்றைய சூழலில் வரலாற்றின் திரிபுகளை அடையாளம் கண்டுணர்வது அத்யாவசியமாகிறது...
ReplyDeleteஜாவா லாம் முடிஞ்சதா ..இனிமே உங்களையும் ஜாவா பாவலர் னு அழைக்கலாமா :)
ஸ்ரீதர் வெங்கட் சொல்வது மெத்தச் சரி.
ReplyDeleteமோகன் தாஸ்,வரலாற்றுச் செய்திகளை பதியும் உங்கள் ஆர்வம் மெச்சத் தகுந்தது.உங்கள் பதிவில் நீங்கள் குறிப்பிடும் முக்கிய இரண்டு செய்திகள்:
1.கல்கி பொ.செல்வனில் வரலாற்றை திரித்துவிட்டார்.சதாசிவ பண்டாரத்தாரின் சோழர் வரலாற்றில் கல்கி எழுதியதெல்லாம் இல்லை...
உண்மை:கல்கி தெளிவாகவே சொல்லி விட்டார்,பொ.செ,முடிவுரையில்.எந்தெந்த பாத்திரங்கள் கற்பனைப் பாத்திரங்கள்(பூங்குழலி,சேந்தன் அமுதன்,ஆழ்வார்க்கடியான்,நந்தினி)என்று.இன்னும் சின்னப் பழுவேட்டரையர் கூட கற்பனைப் பாத்திரம் என்ற ஒரு கூறு உண்டு.பழுவேட்டரையர் சகோதரர் இருந்திருக்கிறார்கள்,ஆனால் ராஜராஜன் காலத்திலேயே இரு சகோதரர்கள் இருந்தார்களா என்பது ஆய்வுக்குரிய ஒன்று.கல்கியின் வெற்றி சாதனை முக்கிய சம்பவங்களில் 'கை' வைக்காமல்,கதையை விறுவிறுப்பு குன்றாமல் கொண்டு சென்றது.(பொ.செ.ஆரம்பமானவுடன் 35000 இருந்த கல்கி இதழ் விற்பனை 72000 ஆயிற்றாம்-கல்கி நினைவலைகள்-பகீரதன்).ஒரு சரித்திரக் கதையை,பெருமளவு ஆபாசக் குப்பைகளையோ,குருட்டுக் கற்பனைகளையோ சேர்க்காமல் கொண்டு சென்றது ஒரு நிச்சய சாதனை.
2.கட்டபொம்மு ஒரு கொள்ளைக்காரன்,அவனை பெரும் வீரனாகவும் தியாகியாவும் சித்தரித்துபடம் எடுத்து விட்டார்கள்.
உண்மை:ஆங்கிலேயர் இந்தியாவில் பல பகுதிகளில் எவ்விதம் தமது ஆளுகைக்குள் கோண்டு வந்தார்கள் என்பது ஒரு மேலாண்மை தத்துவ ஆராய்ச்சிக்கண் கொண்டு பார்க்க வேண்டிய ஒன்று.அவர்கள் எந்த இந்தியப் பகுதியையும் ஆரம்பத்தில் தமது படைகளைக் கொண்டு மிரட்டிக் கைப் பற்றி விட வில்லை;அது வெளிப்படையாக செய்ய இயலாத ஒன்றும் கூட.வியாபார ஸ்தலங்களை ஆங்காங்கே நிறுவினார்கள்;ஏதேனும் இரு ராஜ்ஜியங்களுக்குள்(அப்போது இந்தியாவில் 550 இராஜ்ஜியங்கள் இருந்தன) பிணக்கு வரும் போது மத்தியஸ்தம் அல்லது ஒரு சாரர் உதவியாக பிரச்னைகளுக்குள் நுழைவார்கள்.அல்லது ஏதேனும் ஒரு சமஸ்தானத்திற்கு வாரிசு இல்லாதிருந்தால்,அதற்கு அருகாமை சம்ஸ்தான மன்னரை கொம்பு சீவி,ஆட்டத்தில் நுழைவது;பின்னர் படை உதவிக்கு,பாதுகாப்புக்கு பிரதியாக வருடாந்திர கப்பம் அல்லது நிலப்பகுதிகளை வளைப்பது.இதுதான் அவர்கள் முறை.
கட்டபொம்மு விடயத்திலும் இதுதான் நடந்திருக்க வேண்டும்;இந்த தலையீட்டை பாஞ்சாலங்குறிச்சி பாளையக் காரர்கள் அனுமதிக்கவில்லை.
கட்டபொம்மன் முரண்டு பிடிக்கிறான் என்ற நிலையில் அவனை எவ்வளவுசீக்கிரம் ஒழிக்கிறார்களோ அவ்வளவு சீக்கிரம் அவர்களின் agenda பழுதுபடாமல் நடக்கும்.ஆங்கிலேயருக்கு ஆப்படிக்கத்தான்,ஒரு யுத்த தந்திரமாக,அவர்கள் ஆதிக்கத்தில் இருந்த பாளையத்தின் நெற்களஞ்சியங்களுக்கு நெருப்பு வைத்தழிக்கிறான் கட்டபொம்மு.இதை சாக்காகக் கொண்டு,அவன் கொள்ளையடிக்கிறான்,நான் நீதி செய்கிறேன் பேர்வழி என்றுதான் அவன் மீது குற்றம் சுமத்தப்பட்டது.
இதை எடுத்துக் காட்டத்தான் வீ.பா.க.பொ.படத்திலும் ஒரு கட்டத்தில் தளவாயின் கொள்ளைச் சம்பவத்தை கடிந்து கொள்ளும் கட்டபொம்மு'உங்கள் செயல்,எதிர்காலச் சமூகம் என்னை கொள்ளையன் என்று பழி சொல்ல வழி வகுத்துவிட்டது' என்று ஒரு வசனத்தில் வேதனைப் படுவதாகக் காட்டுவார்கள்...
விடுதலைப் போரில் தமிழகம்-ஒரு தொகுதிகளாக ம.பொ.சி எழுதிய நூலைப் படித்துப் பாருங்கள் !!!!
நட்டு, அய்யனார், அறிவன் நன்றிகள்.
ReplyDeleteஇந்தப் பதிவை கீழேர்ந்து மேல் கொண்டு வந்துவிட்டார்கள் போலிருக்கிறது. 2005ல் எழுதியது.
அறிவன் - பொன்னியின் செல்வன் பற்றி முன்னமே நிறைய இடத்தில் எழுதியிருக்கிறேன். இன்னமும் எழுதுவேன் தமிழ் மக்களுக்கு சோழர்களை அறிமுகப்படுத்தியதில் பெரும்பங்கு கல்கிக்கு உண்டு.
இன்றுவரை பார்க்கும் நண்பர்களை எல்லாம் பொன்னியின் செல்வன் படிக்க வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன். பொன்னியின் செல்வன்னா என்னா அப்படின்னு கேட்கக்கூடிய தமிழில் படித்த மக்கள் நிறைய இருக்கத்தான் செய்கிறார்கள்.
பொன்னியின் செல்வனின் வெற்றியைப் பற்றிய கேள்விகள் கிடையாது. ஆனால் இன்றைய மக்களிடம் பொன்னியின் செல்வனைக்கூட எடுத்துச் செல்ல வேண்டிய கட்டாயம் நமக்கு இருக்கிறது.
------------------------
கல்கி கற்பனைக் கதாப்பாத்திரங்களைப் பற்றி சொன்னது முடிவுரையிலா என்று சரியாகத் தெரியாது ஆனால் நானே கூட படித்த நினைவு உண்டு, அதாவது நந்தினி, ஆழ்வார்க்கடியான் போன்றோரெல்லாம் கற்பனைக் கதாப்பாத்திரங்கள் என... ஆனால் முன்னுரையாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
உங்களுக்காக இணையத்தில் கிடைக்கும் முடிவுரை கல்கி கடைசி வரை நந்தினியைப் பற்றி தொங்கிக் கொண்டிருப்பதாக நான் சொல்லவில்லை ஆனால் முடிவுரையில் அதைப் பார்க்கலாம்.
முன்னுரையாக இருந்தால் அதைத் தேடிப்பார்த்து பதிவேற்றுகிறேன். இல்லாவிட்டால் மக்கள் அதைப் பற்றிய விவரம் தரலாம்...